07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 20, 2010

ஞாயிற்றுக்கிழமை எலி நாடுதிரும்பல்

{அட்மின், கேம்ஸ், அட்டை, கரச்சான்,எலி ஆகிய ஐவர் குழு புதையல் எடுக்க கிளம்புகிறது}

பிலிகிரி கேம்ஸ்: எலி சீக்கிரம் வா கிளம்பனும்
எலி: இருங்க மலையேறுற ட்ராக் சூட் எடுத்துக்கிறேன்.
பிலிகிரி கேம்ஸ்: எலி நாம்ம புதையல் எடுக்க காட்டுக்குள்ள போகலை. நேர பிரவுசிங் சென்டர் போயி பாஸ்வேர்ட் கண்டுபிடுச்சு புதையலை டவுன்லோட் செய்யப்போறோம் அவளவுதான்.
எலி: ஓ அப்படியா! ஓகே 
பிலிகிரி கேம்ஸ்: அப்புறம்  முக்கியமான விஷயம் நாம புதையல் எடுக்கப் போறவிஷயம் சாவிக் கட்டைக்குத் தெரியக் கூடாது. புதையல் நம்ம கைக்கு வந்தபின்னாடி அத வச்சே இந்த சாவிக்கட்டைகிட்ட இருந்து விடுதலை வாங்கணும்.
அட்டை:சரி அந்த க்ளுவை பிரிச்சுப் படிங்க 
எலி: ம் மோதல் கேள்வி பொங்கல் வைக்கும் பானை உடைந்தால் பதிவர்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள்?
எ) உடைந்த பானையை செலோடேப் போட்டு ஒட்டி பொங்கல் வைப்போம்
பி) பானை உடைந்ததற்குக் காரணம் அரசு தான் என்று அறிக்கைவிட்டுவிட்டு வேலை செய்யாமல் நிவாரண நிதிக்காக காத்திருப்போம் 
சி) பொங்கல் வைப்பதை நிறுத்திவிட்டு கேசரி செய்வோம்
டி) பானை உடைந்த அனுபவம் என்று பதிவேழுதுவோம்  ஆளுக்கு ஒரு பக்கம் போய் தேடுங்க 

"நான் தேடுன வரைக்கும் பதில் கிடைக்கல ஆனால் திருடன் மண்டை உடைக்கிற மாதிரி ஒரு பதிவு கிடைச்சுருக்கு "
"இங்க பாருங்க பொங்கல் மாதிரி ஒருத்தர் பின்னூட்டத்திலே படையல் வச்சுருக்காரு சபாஸ். "
"என்னப்பாருங்க பொங்கல் போனா என்ன இதோ பாட்டி வடை இருக்கே ஏதோ திங்க கிடைச்சதேனு போங்கப்பா!"
"எனக்கென்னமோ அறிக்கை விடுறதுதான் சரின்னு படுத்து காரணம் நம்ம பதிவர்கள் எல்லாம் பெரிய அரசியல்வாதிகள்ப்பா"
"யாராவது பானை உடைஞ்சா தண்ணிக் கொட்டும்னு யோசிச்சேங்களா? தண்ணியப் பத்தி பார்த்தபின்னாடி தான் தெரிஞ்சுச்சு"
எலி: சரி கடைசிய பதிலென்ன?  ஒன்னு செய்வோம் பாயிண்டரம்மாவுக்கு போன் பண்ணி கேட்போம்....  
//பாயிண்டரம்மா: எனக்குத் தெரிஞ்சு பொங்கல் வைப்பதை நிறுத்திவிட்டு சுடுதண்ணி வைக்கலாம்.  //
எலி: ம் பதில் ஆப்சன் இல்லையே! பதில் ஒரே கஷ்டமா இருக்கே பேசாம இதையே ஒரு பதிவாப் போடலாமா? 
அட்டை:கண்டுபிடுச்சுட்டேன் பதில் 'டி' ...[எண்டர்].
கரச்சான்:ம் அதான் கரெக்ட் அடுத்த கேள்விய படிங்க 
எலி: தமிழில் மொத்தம் எத்தனைப் பதிவர்கள் உள்ளனர்?
எ)ரெண்டு
பி)இருநூறு
சி)இரண்டாயிரம்
டி) தெரியாது.
"நான் இப்பவே சொல்லிட்டேன் நான் கணக்கில வீக்கு. இந்த மாதிரி நல்ல பதிவு முப்பது வருஷத்துக்கு முன்னாடி வந்திருந்தா நான் படிச்சிருப்பேன்."
"எனக்குத் தெரிஞ்சு ஒரு பதிவர் இந்தாங்க இவரும் பதிவர்தான் "
"இவர் சொல்றமாதிரி இத்தனை தினம் இருக்கு ஆனால் பதிவருக்குனு தனியா தினம் இருக்கா? அப்புறம் எப்படி கண்டுபிடிக்கிறது."
எலி: எனக்கென்னமோ இது கஷ்டமா கேள்வியாத்தெரியுது அதனால சாட்டிங் செய்து கண்ட்ரோல் சார்கிட்ட கேட்போம். ....  **சார் இந்த கேள்விக்குப் பதிலை ஒரு யூஸ் அன் த்ரோ மெயிலில் அனுப்புங்க சார் ***
அட்டை:மெயில்ல அவருக்குத் தெரியாதுன்னு அனுப்பியிருக்கார் அப்ப தெரியாதுதான் பதில் .[எண்டர்]...ம்
கரச்சான்: அதான் கரெட் சபாஸ் அடுத்த கேள்வி,

பிலிகிரி கேம்ஸ்: கடைசி கேள்வி சரியா பதில் சொன்னா புதையல் இல்லாடி எல்லாம் போச்சு
எலி: பதில்களற்ற அடங்காத கௌரவ இலக்கியம் எது?
"எப்பா கேள்விக்கு களு எதுவும் கிடையாதா! அப்ப முடியாதுடா சாமி. மரண கேள்விடா "
"ம் தேடுங்க இதுக்கு பதில் கிடைச்சாத்தான் புதையல் விடாதீங்க.."
"ம் இலக்கியம் பத்தி இவரு அழகா சொல்லிருக்காரு இதா இருக்குமோ"
"இங்க பாருங்க பதில்களற்ற மடல் பத்தி நிறைவா இவர் சொல்லிருக்கார் இதையும் படிங்க "
"அடங்காத கவிதைய இவர் சொல்லிட்டாரு இதையும் படிங்க "
"கௌரவம் பற்றி புட்டு புட்டு வச்சுட்டாரு நம்ம பதிவர் இதையும் படிங்க "
எலி: ஏங்க பதில் இந்த நாலுல தான் இருக்கும். யோசிங்க ...
அட்டை:எனக்கென்னமோ இதுவாத்தான் இருக்கும் [எண்டர்]..
"ஐயையோ.. கம்ப்யூட்டரே எரர் ஆயிருச்சே! புதையல் போச்சா!"
"அட்டை புதையலை கோட்டை விட்ட "
"டேய் எதடா பதிலாக் கொடுத்த?  "
அட்டை: நான் ... நான் ..இலக்கியம் அப்படிங்கிறதால இந்த சோப்பு டப்பாவ கவிதைனு நினைச்சு கொடுத்தேன் அதான் டோட்டலா போச்சு!
"போடா  இவனே புதையல் எடுக்க வந்த நமக்கு டப்பாக் கூட மிஞ்சலையே!  இனி இந்த சாவிக் கட்டைய எப்படி மிரட்டுறது! போச்சு எல்லாம் போச்சு! அந்த பேப்பர்ல வேற ஏதாவது எழுதியிருக்கா?"
"ம்.. இந்த கடிதத்தின் அஞ்சல் செலவு பராம்பரிப்பு  http://tamilpoint.blogspot.com இந்த தளத்திற்கு வந்தால் இலவசமாக படிக்கலாம்."
"ச்சே! எதுக்கெல்லாம் விளம்பரம் கொடுக்கிறதுன்னு வெவஸ்தையே இல்லை. கட்டையால அடிப்பேன். "
"நான் கடைசியில செத்து பிழைச்சவன்டானு இவரப் போல பதிவு போடணும்னு நினைச்சேன் ஆனா செத்து தொலைஞ்சவனா ஆக்கிட்டேயே!"
"நான் இவர் சொல்ற டிப்ஸ் படி பிரபல பதிவராக ஆசைப்பட்டேனே இனி என்ன செய்ய? சாவிக் கட்டையோட கொடுமையிலேயே போக வேண்டியதுதான்."
"இது போல வித்தியாசமா நிறைய பாட்டை வச்சு கதை எழுத ஆசைப்பட்டேனே இப்ப என்ன செய்ய?"
"இந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்க ஆளில்லையா? இது போல ஒரு ஹீரோ இனி பிறந்து வருவானா?"

[[[க்ளைமேக்ஸ்சில் மழை எதிர் பார்த்து வராததால் மழைய பத்தி எல்லாரும் இங்க படிச்சுக்கோங்க - இப்படிக்கு கலை இயக்குநர்]]]

சாவிக் கட்டை: என்ன மேன் பார்க்குறீங்க! ஹீரோ வருவான்னு பாத்தா இந்த ஜீரோ கோட்டை சாவிக் கட்டை வந்துட்டான்னு பார்க்கிறீங்களா! 
கவலைப் படாதீங்க சாவிக் கட்டை திருந்திட்டான். நான் உங்களுக்கு முன்னாடியே எங்க ஆட்களை வச்சு புதையலையும் எடுத்துட்டேன்.
"எடுத்தாச்சா!"
சாவிக் கட்டை: ஆமா, அந்த புதையல்குள்ள பஸ்ட் ஸ்டாண்டர்ட்லயிருந்து ப்ளஸ் டு வரையுள்ள தமிழ் புக்கு இருந்துச்சு .
திரைக்கை:ஆமா நானும் அவரும் எழுத்துக் கூட்டி படிச்சு தமிழ் கத்துகிட்டோம். அதைப் படிச்சதும் உங்க பதிவுகள் மேல இருந்த வெறுப்பு போயி பொறுப்பு வந்திருச்சு. படிச்சுப் பார்த்ததில உங்க பதிவெல்லாம் டாப்பு 

திரைக்கை: இதைப் போல புதுப் பதிவர்களின் பதிவு இங்கிலீஸ்லையும் தமிழையும் இருப்பதால் ஈசியா படிச்சுட்டோம்.
திரைக்கை:அப்படியே தப்பு விட்டாலும் இந்த பதிவைப் படிச்சு திருத்திக்கிட்டோம். 
சாவிக் கட்டை:எல்லாத்துக்கும் காரணம் நம்ம எலிதான். எலிகிட்டையே கேளுங்க. நாங்க உங்க ஒப்பந்தங்களைஎல்லாம் எடுத்துட்டு வந்து தந்திருறோம். நல்ல நல்ல பதிவுகளெல்லாம் போடுங்க. நாங்களும் பதிவு எழுதுறோம். இப்போதைக்கு போயிட்டு வாறோம் [இருவரும் சென்று விடுகிறார்கள்.]
XXXXXXXXXXXXXXXXXXXXXXXX   
"எலி, நீ என்ன பண்ண? "
எலி: நீங்க என்னை பதிவு போட சொன்னீங்களே அதனால சந்தையிலிருந்து ஸ்கூல் புக்க வாங்கி காபி பேஸ்ட் பண்ணலாம்னு வாங்கிகிட்டு வரவழியில சாவிக் கட்டை ஆட்கள் என்னை மறிக்க, நான் அதான் புதையல் என்று உரைக்க, அதை அவர்கள் பறிக்க, நான் ரசிக்க வீட்டுக்கு வந்திட்டேன். கடைசியா  அந்த புத்தகம் உண்மையிலே அவர்களுக்கு ஒரு புதையல்தான். உண்மையான புதையலை விட உண்மையான மனிதர்கள் விலை மதிப்பற்றவர்கள் அது இங்க நடந்திருச்சு. அதனால இனி எல்லாருக்கும் மகிழ்ச்சி.
பிலிகிரி கேம்ஸ்: இந்தாங்க உங்களுக்குச் சேர வேண்டிய பேனா!  
எலி:ரொம்ப நன்றி! நானும் கிளம்புறேன்! அடிக்கடி இந்த ஊருக்கு வாறேன்.
.
"பேனாவ எடுத்துட்டு பேப்பர விட்டுட்டுப் போறேங்களே"
எலி:பேப்பர் உங்களுக்கு

பிடித்திருந்தால் ஆதரிக்க http://www.tamilish.com/story/281716/
எடிட்டர் கார்னர்:


திங்கட்கிழமை நடந்ததைப் படிக்க இங்கே
செவ்வாய்க்கிழமை நடந்ததைப் படிக்க
இங்கே
புதன்கிழமை நடந்ததைப் படிக்க
இங்கே
வியாழக்கிழமை நடந்ததைப் படிக்க
இங்கே
விளம்பர இடைவேளை
இங்கே
சனிக்கிழமை நடந்ததைப் படிக்க
இங்கே

இந்த கதையும் கதாப்பாத்திரங்களும் கற்பனையே இணைப்புச் சுட்டிகள் தவிர.

அந்த பிளாக்கர் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில, ப்ளாக்ஸ்பாட் காம்ப்ளெக்ஸ் கடைசி ஏரியா நம்மளோடது தான் 

http://neechalkaran.blogspot.com
http://ethirneechal.blogspot.com
ரெண்டாம் நம்பர் கூகிள் பஸ்ல ஏறி இந்த முகவரிய யார்கிட கேட்டாலும் சொல்லிருவாங்க மறக்காம வாங்க, வலைச் சரத்திலிருந்து விடை பெறுகிறேன்.
-நன்றியுடன் நீச்சல்காரன்

8 comments:

  1. அட நம்ம சுடுதண்ணி இவ்வள்வு பேமசா...ஹி..ஹி..

    ReplyDelete
  2. நல்ல பதிவு இருங்க மத்தவங்களையும் படிச்சிட்டு வரேன்..

    ReplyDelete
  3. தன் வேட்டையை முடித்துக் கொண்டு எலி நீச்சலடிக்க கிளம்பிவிட்டது..

    ReplyDelete
  4. நல்ல இருக்கு .. நிறைய பதிவர்களை தெரிந்து கொண்டோம்

    ReplyDelete
  5. நல்லா அறிமுகப் படுத்தி எழுதி இருந்தீங்க..... பாராட்டுக்கள்!

    அறிமுகங்கள் அனைவருக்கும், வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. புதுமை + உழைப்பு = நீச்சல்காரன் அவர்களின் வலைச்சரம் வாரம். :)

    மன்னிக்கவும். முழுமையாக தொடரமுடியவில்லை.

    வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
  7. ஜெய்லானி,
    கே.ஆர்.பி.செந்தில்,
    LK,
    Chitra,
    【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌,
    கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  8. Superraa eluthareenga.. :-))

    அறிமுகங்கள் அனைவருக்கும், வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது