வலைச்சரம் - இரண்டாம் நாள் - செவ்வாய்
நீர்க்கோல வாழ்வை நச்சி-ஒரு அனுபவம்
நினைத்தது போல் ஒரு கவிதையை எழுதி முடிக்கிற சந்தோசத்தை விட, ஒரு கவிதையின் வாசிப்பில் நினைத்து பார்க்க முடியாத சந்தோசம் கிடைக்கிறது. அந்த சந்தோசத்தை, அனுபவத்தை அப்படியே பகிர முடிஞ்சதில்லை. சரி, நீங்களே சொல்லுங்களேன்..எப்படி பகிரலாம் சந்தோசத்தை? சட்டென ஒரு தேக்க நிலை, தலை சொறிவு நேர்கிறதா? இதே பிரச்சினைதான் எனக்கும்.
கவிதையில் என்னால் இதுவரை குறை கண்டு பிடிக்க முடிந்ததில்லை. அதாவது குறை என்று சொல்ல தெரிந்ததில்லை. "ஆம்புள்ள அத்தான் ஆவர்களுக்கு" என்று வருகிற லதாவின் கடிதத்தை, அன்புள்ள அத்தான் அவர்களுக்கு என்று ஆட்டோ மேட்டிக்காக கன்வர்ட் செய்து கொள்ள முடிகிறது. மனசு கொண்டு பார்த்தால் அ-னா, ஆவன்னா ஆகிறது. ஆவன்னா அ-னா ஆகிறது. இதை நீங்கள் என் பலம் என்றால், அதை நான் என் பலஹீனம் என்கிறேன். இதை நீங்கள் என் பலஹீனம் என்றால் வேண்டும் என்றே கூட அதுவே என் பலம் என்பேன்.
இப்ப நீங்களும் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். இவனால், கவிதைகளுக்கு விமர்சனம் பண்ண முடியாது / தெரியாது என. இதுவே எனக்கும் வேணும். இந்த என் குறை அல்லது நிறை ரொம்ப சந்தோசமானது எப்ப தெரியுமா?
நேசன் தளத்தில், அண்ணன்/கவிஞர் ராஜசுந்தரராஜன் இப்படி உடைக்கிறார், "ஒரு கவிஞன் ஒரு நாளும் விமர்சகன் ஆக முடியாது. ஆகி விட்டால் அவனுக்கு கவிதையை பற்றி ஒரு இழவும் தெரியாது என்பதே சத்தியம். ஆனதினால், அதில் வரும் வார்த்தைகளை கொண்டல்லால் விளக்குவதற்கு வேறு வழி ஒன்னும் இல்லை" என்றதை வாசித்த போது, "என்னைப் பெத்தாரு" என்று அண்ணனை மானசீகமாக இரு கன்னம் வழித்து சொட சொட வென சொடக்கிக் கொண்டேன்.
அண்ணனை சொடக்கிக் கொண்டது போலவே, 'நீர்க்கோல வாழ்வை நச்சி' வாசித்து நிறையும் போது தங்கை லாவண்யாவின் கன்னங்களையும் அதே மானசீகமாக வழித்து சொடிக்கிக் கொண்டேன்.
அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் தனித்தனி சொடுக்கா இருக்கு?
இவ்வளவுதான் இத்தொகுப்பு குறித்த என் பார்வை, விமர்சனம், அனுபவம்.
ஆதர்சர்களில் ஒருவரான கலாப்ரியா,"அன்பு, ப்ரியம், சிநேகம், ஆகியவற்றுடன், அவை போன்றவற்றுடனும், அவற்றைப் போற்றுகின்றவற்றுடனும் தீராத உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒருவரின் நல்ல கவிதைகள் பலவற்றை உள்ளடக்கியிருக்கிறது லாவண்யாவின் இந்த தொகுப்பு. அதனால்தான் அது ஒவ்வொரு வாசகனுடனும் இயைபான கவித்துவத்துடன் எளிதாக ஒரு உரையாடலை நிகழ்த்தி விடுகிறது" என்று தொடங்கி தருகிறார்.
"எழுதுவதற்கான சூழலை வாய்க்க செய்து, மறு அன்னையாய் என்னை கவனித்துக் கொள்ளும் கணவர் மனோகரன், அன்பான அம்மா மனோன்மணி, பாசத்திற்குரிய வனிதா அக்கா, எனது பிரியங்களை உணர்த்த முடியாமல் போய்விட்ட அப்பா சுந்தரராஜன், என் நினைவில் வாழும் சித்ரா அக்கா, ஆகியோருக்கு துளி கண்ணீருடன் கலந்த அன்பு" என்று நூலாசிரியரும் கசியும் போது (purpose-ஆகவே இங்கு தங்கையை விலக்குகிறேன்) பின்வரும் கவிதைகளின் அடர்த்தி தொடங்க தொடங்குகிறது.
இனி, இவரின் இரண்டு கவிதைகள்...
***
என்னிடமிருந்து
நீ பறித்தெறிந்த வெட்கத்தை
திரைச்சீலை சூடிக்கொண்டது
விரலில் தொடங்கி விரல்வரை
முடித்திருந்த முத்தங்கள்
உயிரோடு முடிந்திருந்தது.
பாதியில் நீ முணுமுணுத்த
பாடலொன்று மீண்டும் மீண்டும்
எனக்கானதாகிப் போனது.
மிகப் பிடித்த மலரொன்றின் மணம் போல
உன் பாரம் என் மனதை
கொள்ளையடித்துக் கொண்டிருந்தது.
உன் மூச்சை உள் வாங்கி
ஒரு மோன நிலையில்
நான் இறந்திருந்தேன்.
மறுபடி நான் கண் விழ்த்தபோது
உன் பெயரை மட்டும்
உச்சரித்துக் கொண்டிருந்ததாகவும்
விழியில் வழிந்திருந்த துளி நீரை
நீயே துடைத்து விட்டதாகவும்
"ஏன் அழுதாய் என்றாய்?"
திரைச்சீலையிடமிருந்து வெட்கத்தை
மீண்டும் அள்ளியெடுத்துக் கொண்டு
"அழுதேனா என்ன?" என்றேன் சிரித்தபடி.
***
எதிர்பாராத நேரத்தில்
விசிலடிக்கும் குக்கருக்கும்
எதிர் பார்த்தே ஆனாலும்
கண் அயரும் ஒரு கணத்தில்
கூவும் இரயிலுக்கும்
குளியல் அறையில்
திடுமெனக் குதித்து
அகால ஒலியெழுப்பும்
குழாய் நீர்களுக்கும்
பண்டிகை தினத்தில்
எதிர்பாராத தருணங்களில்
வெடிக்கும் பேரொலிக்கும்
தினம் தினம் பயணித்தும்
வாகன முந்துதலில்
திடீரென நிறுத்தப்படும்
வாகன அதிர்வுகளுக்கும்
எத்தனை முறை பயந்தாலும்
பயம் மட்டும் பழுகுவதில்லை.
***
இக்கவிதை நூல் குறித்தான மிக சிறப்பான விமர்சனத்தை நந்தினி, லாவண்யாவின் தளத்தில் வைத்திருக்கிறார்கள். அதை வாசித்த போது எனையறியாது பொங்கி, பொங்கி வந்தது...அது, இங்கு.
இதே போல், நண்பர் நிலாரசிகனின், இத்தொகுப்பிற்கான நேர்மையான விமர்சனம் இது.
சரி மக்கா, நாளை பார்க்கலாம்...
***
|
|
ரொம்ப நல்ல அறிமுகம் மாம்ஸ்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்ல கவிதைகள் இரண்டும்...
ReplyDeleteஉரைநடையும் கவித்துவமா இருக்கு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அண்ணா.
கவிதைகளும் அறிமுகங்களும் அருமை. பாராட்டுக்கள்!
ReplyDeleteஅறிமுகங்களும் , கவிதைகளும் அருமை .
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் பணி மிகவும் சிறப்பாக அமைய என் வாழ்த்து நண்பரே !
சக கவிஞரைப் போற்றியுள்ள விதம் மிக அருமை பா.ரா அண்ணா.
ReplyDeleteதொடருங்கள்.
//என்னை பெத்தாரு.....//
ReplyDelete:))
உங்களால்தான் இப்படி மனம் திறந்து அழைக்கவும் அழைக்க வைக்கவும் கூடும் பா.ரா
சிறப்பான திறப்பை கொடுத்திருக்கிறீர்கள்
கொண்டாடிக் கொண்டாடிக் கோபுரத்துல ஏத்துறீங்க எழுத்தையும் எழுதுனவரையும்.:)
ReplyDeleteகொடுத்து வைத்தவர்கள் உங்கள் பாராட்டைப் பெற்றவர்கள் அண்ணா !விரும்பிப் படிக்கும் தெரிந்த அறிமுகங்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகவிதைகளை அள்ளிப் பருகினேன்...இன்னும் தாகம் அடங்கவில்லை...
ReplyDeleteஅன்பின் பா.ரா
ReplyDeleteஅருமை அருமை - இடுகை அருமை - ரசிக்கும் விதமும் விமர்சிக்கும் விதமும் அருமை. பழகப் பழகப் பழகி விடும் நிகழ்வுகளில் பயம் இல்லையே ஏன் --- நல்ல கற்பனையில் விளைந்த சிந்தனை
நன்று நன்று
நல்வாழ்த்துகள் பா.ரா
நட்புடன் சீனா
:))
ReplyDeleteவழக்கம் போலவே..
அருமை.
ReplyDeleteதொடருங்கள்! :))
Good collections
ReplyDeleteநல்ல அறிமுகம் பா.ரா.
ReplyDeletenallaarimugam
ReplyDeleteசித்தப்பா.....
ReplyDeleteஅருமையான அறிமுகம் என்று கூறி எண்ணத்தை எழுத்தாக்கும் போது முழுதாய் எண்ணியதின் வீச்சு வந்து விழ மறுக்கிறது.....
//ஒரு கவிஞன் ஒரு நாளும் விமர்சகன் ஆக முடியாது. ஆகி விட்டால் அவனுக்கு கவிதையை பற்றி ஒரு இழவும் தெரியாது என்பதே சத்தியம். ஆனதினால், அதில் வரும் வார்த்தைகளை கொண்டல்லால் விளக்குவதற்கு வேறு வழி ஒன்னும் இல்லை" என்றதை வாசித்த போது, "என்னைப் பெத்தாரு" என்று அண்ணனை மானசீகமாக இரு கன்னம் வழித்து சொட சொட வென சொடக்கிக் கொண்டேன்.//
வார்த்தைகளுக்குள் விழுந்து தொலைந்து போய்...கவிதையாகவே மாறி நிற்கும் தருணத்தில்...எதைப் பிரிக்க.... எதை விமர்சிக்க....
வட்டார வழக்கில் பாசத்தை அப்படியே வார்த்தைக்களுக்குள் கொண்டு வரும் " என்ன பெத்தாரு"
உங்களுக்கு சொடுக்குகிறேன் சித்தப்பா...." என்ன பெத்தாரு " அட்டகாசமான உயிரின் நுனி தொடக்கூடிய அறிமுகங்கள்....! முதல் நாளே மூர்ச்சையாகிப் போனேன் சித்தப்பு!
ஹேமா said...
ReplyDeleteகொடுத்து வைத்தவர்கள் உங்கள் பாராட்டைப் பெற்றவர்கள் அண்ணா.
சத்தியமான வார்த்தைகள்.
அற்புதமான அறிமுகம்.. ரசித்துரசித்துப்படிக்கலாம்... இட்டுக்காட்டியவர்கள் இன்னும் ஒருபடிமேல்... நன்றிங்க..
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்..
ReplyDeleteஅருமையான இரண்டு கவிதைகள்
ReplyDeleteபடைத்தவருக்கு வாழ்த்துக்கள்
நன்றி
எனக்கென்னவோ,
ReplyDelete"ஆம்புள்ள அத்தான் ஆவர்களுக்கு" என்று வருகிற லதாவின் கடிதவரிகளின் இளங்காலை காட்டுப்பூ வாசம், 'அன்புள்ள அத்தான் அவர்களுக்கு' என்று ஆட்டோ மேட்டிக்காக கன்வர்ட் செய்தபின், பழகிப்போன, பாண்டிபஜார் பூக்கடை வாசமாய் மறி விட்டதாய்!!
அருமையான கவிதையும் அசத்தலான அறிமுகமும் என்னை திக்குமுக்காட வைக்கிறது. அசத்துறீங்க அண்ணே.. கவிதை மிக அருமை.
ReplyDeleteரொம்ப அழாகான அறிமுகம் மாமா
ReplyDeleteநன்றி.
வாழ்த்துக்கள் பாராசார்... ஒரு போன் பண்ண சொன்ன பண்ணமாட்டேங்கறிங்க... ரொம்ப பிசியோ? இல்லை யாரும் உங்களிடம் சொல்லவில்லையா?.. இது எனது எண் 9840229629 போன் செய்யுங்கள்..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் சித்தப்ஸ்
ReplyDelete(யாருன்னே தெரியாது பாரு ;))
அருமை!!
ReplyDeleteகலக்குங்க பங்க்ஸ்
ReplyDeleteவிஜய்
பூங்கொத்து!
ReplyDeleteபூங்கொத்துடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பா. ரா!
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.
கவிதைகளும், அதை நீங்கள் பார்த்தவிதமும், விமர்சனமும் அருமை
ReplyDeleteம்ம்ம் அருமை அசத்துங்க ....
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா
இரண்டாம் நாள் வாழ்த்துகளும்.. பிறந்தநாள் வாழ்த்தும்
ReplyDeleteஅன்புடன்
ஆ.ஞானசேகரன்
நல்ல கவிதை பகிர்வுகள்...பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteகவிஞர்.பாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...
ReplyDeleteஅருமையான கவிதைகள்.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteகலக்கல் அண்ணாச்சி....
ReplyDeletekavithai arumai. pakirvukku nanri.
ReplyDeleteenakku pidiththathu.
//நேரமற்ற நேரங்களில்
நினைவுகள் அறுந்தறுந்து
நினைப்பாகக் கிடக்கிறேனே..//
நினைவிருக்கா உனக்கு என்னை..
நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றியும் அன்பும்!
ReplyDelete