வியாழக்கிழமை எலிக்கு விருந்து
➦➠ by:
நீச்சல்காரன்
எலி: ஏம்பா! இந்த சாவிக் கட்டை சண்டைக்கு வருவான்ல நான் ரொம்ப நேரமா? மாறுவேசத்தில இந்த டின்னுக்குள்ள ஒளிஞ்சு தூங்கிகிட்டுயிருக்கேன் .
அட்டை: டேய் எலி உன்னை யாருடா மாறுவேஷம் போடச்சொன்னது?
எலி: பின்ன அவன் பாட்டுக்கு சண்டைக்கு வந்து சைடு கேப்ல என்ன மர்டர் பண்ணிட்டன்னா!
அட்டை: சரி போட்டதுதான் போட்ட நல்ல போட்டிருக்கலாம்ல இப்பதான் நீ பாக்கிறதுக்கு நெஜ எலி மாதிரியிருக்க சரி இந்த டின்னை தூக்கையிலக் கூட தெரியலையா?
எலி: என்ன சொல்றீங்க?
அட்டை: இப்ப இந்த டின்னு வரிஅச்சு நகர்ல இருக்கு. நமக்குத் தெரியாம இந்த சாவிக் கட்டை ஆட்கள் வரிஅச்சு நகரில நீ செய்தது போல போலி கமெண்டுகள் போட்டு திட்டிவிட்டாங்க. அந்த கோவத்தில நம்ம ரெண்டு பேரையும் கடத்திட்டு வந்துட்டாங்க.
எலி: அப்ப இவுங்க ஊர்ல ஒரு ஹீரோயின் இருக்கும்ல?
அட்டை: டேய் ஆரம்பிச்சுடையா? நானே இவிங்க என்ன பண்ணபோறாங்களோனு பயந்துகிட்டுயிருக்கேன் நீவேற!
.
.
.
அட்டை: டேய் எலி துங்கதடா அதோ வரான் பாரு. அவன்தான் இந்த ஊரோட தலைவர் அட்மின்
அட்மின்: எங்கவூர் வழக்கப்படி உங்களை சைபர் கிரைமிக்கு படையல் போடபோறோம் அதுக்கு முன்னாடி உங்கவூர் தியேட்டர்ல என்ன படம் ஓடுதுன்னு கேட்கிறது எங்க வழக்கம். ம். சொல்லுங்க
எலி: சமிபத்தில தி கராத்தே கிட் (தி குங்க்பூ கிட்) னு ஒரு நல்ல படம் வந்திருக்குன்னு எங்கவூர் காரவுங்க சொல்றாங்க. இதுல பில்டப்பு வசனம் இல்லாததால உங்களுக்கும் புரியும்
அட்மின்:ம்..நல்லயிருக்கு ஆனா எங்களுக்கு பில்டப்பும் தெரியும் வேற படம் பத்தியும் சொல்லுங்க
எலி: இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் அப்படின்னு ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சூப்பர் படம் வந்திருக்குன்னு அண்ணன் சொன்னாரு.பார்க்க வேண்டிய படம். வாசிக்க வேண்டிய பதிவு.
அட்மின்:ம்..நல்லயிருக்கு ஆனா எங்களுக்கு பில்டப்பும் தெரியும் வேற படம் பத்தியும் சொல்லுங்க
எலி: இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் அப்படின்னு ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சூப்பர் படம் வந்திருக்குன்னு அண்ணன் சொன்னாரு.பார்க்க வேண்டிய படம். வாசிக்க வேண்டிய பதிவு.
அட்மின்:சரி, உங்க ஊர்ல சிங்கம் சிங்கிளா வராதா?
எலி: சிங்கம்- இங்க பாருங்க இதுதான் சின்கிலாகவும் வரும் பஸ்டாகவும் வரும்
எலி: சிங்கம்- இங்க பாருங்க இதுதான் சின்கிலாகவும் வரும் பஸ்டாகவும் வரும்
அட்மின்: அட உங்க படங்களெல்லாம் கமேர்ஷியலாவே....
எலி: அப்படியே இங்க பாருங்க சென்ஷிபிலாகவும் விமர்சனம் எழுதுவோம்ல
அட்மின்: உங்க ஊர்ல நடிகர்கள் தமாஷ்எல்லாம் வராதா?
அட்மின்:ஹி ஹி. நீங்க பாட்டெல்லாம் கேட்பேங்களா?
எலி: அப்புறம், பாட்டில்லாம வண்டியோடாது சார். நான் ரசித்த பாடல்கள் : டாப் 5 நீங்களும் கேட்டுப் பாருங்க நல்லாயிருக்கும் கட்டாயம் கேளுங்க
அட்மின்:எலி உங்களைப் பத்தி தப்பா நினைச்சுட்டேன் இவ்வளவு கலை ஞானம் உள்ள நீங்க இதை பண்ணியிருக்க மாட்டேங்க. எல்லாத்துக்கும் காரணம் அந்த சாவிக் கட்டையாத்தான் இருக்கும். அப்புறம் உங்க குரு யாரு?
எலி: ம்... சீனா ஐயா தான்
அட்மின்:அவர் பேர காப்பாத்திட்டப்பா!
{அடுத்து வரிஅச்சு ஊர்ல நடக்கிற விருந்தில் எலி மற்றும் அவரது நண்பரும் கலந்து கொள்கிறார்கள்.}
அட்மின்: எங்களைப் பத்தியாரு நினைக்கிறா? கவர்மெண்டோட வெப் டெவலப்பரெல்லாம் என்ன பதிவுல எந்த டூலும் சேர்க்க முடியாத படி செஞ்சுட்டாங்களே. யாரும் ஒட்டு போடா முடியாதே
எலி: அப்ப உங்க ஊர்ல யாரும் பதிவு எழுத மாட்டாங்களா?
அட்மின்: அது எப்படி சொல்லமுடியும் தொலைந்த இரவுகள்னு ஒருத்தர் அழகா படக்கவிதைஎல்லாம் எழுதுறாரே
எலி: அட உங்க ஊர்லக்கூட அற்புதமாயிருக்கு அடுத்து,
அட்மின்: அடுத்து இவரைப் பாருங்கஎல்லாக் கவிதையும் எளிமைய அழகாயிருக்கும். இவரைப்பற்றி உங்களுக்கேத் தெரியும் போயி படிச்சுப் பாருங்க சொக்கிப் போயிருவீங்க
எலி: உங்க ஊருக்கு மக்கள் ஆதரவு எப்படியிருக்கும்?
அட்மின்: இங்க பாருங்க ஒரு சகோதரி கமெண்ட வச்சே ஆராயச்சிஎல்லாம் பண்றாங்க
எலி: அட இவுங்க நிறைய டிப்ஸும் சொல்றாங்க.
அட்மின்: இன்னொருத்தர் எல்லா விஷயமும் எழுதுவாரும் கட்டாயம் போய் படிங்க
ஆனா பாருங்க இன்னும் நிறைப் பேரு இருக்காங்க ஆனா வெளியேத் தெரியமாட்டிக்கிறாங்க
எலி: அந்த சாவிக் கட்டைய ஒழிச்சாத்தான் நாம சுதந்திரமா பதிவெழுத முடியும் நீங்க என்ன சொல்றீங்க?
அட்மின்: சரி நாங்களும் உங்களுக்கு உதவியா இருக்கோம் ஆனால் முடியுமா?
எலி: என்ன இப்படி கேட்டுப்புடேங்க அப்ப நீங்க உடனே இங்க போய் படிச்சுட்டுவாங்க.
அட்மின்: நீங்க சொல்றது உண்மையிலே உட்வேகமாயிருக்கு. சரி பேசிக்கிட்டே இருந்த எப்படி? நல்ல சாப்பிடுங்க அதோ முருங்கைக்காய் கூட்டு.
எலி: நாங்கெல்லாம் முருங்கைகாயை இப்படியும் பயன்படுத்துவோமே.
அட்மின்: ஹி ஹி ..தோசை சாப்பிடுறீங்களா?
எலி: எனக்கு இந்த சகோதரி சொன்னமாதிரிதான் தோசை வேண்டும்
அட்மின்: செஞ்சுட்டாப் போச்சு.அதான் தெளிவாயிருக்கே.
எலி: அப்படியே ஒரு மூளை முட்டைப் பொரியல் பார்சல் வீட்டுல போய் சாப்பிட்டுகிறேன்.
அட்மின்: சரி அதையும் சூப்பரா சமச்சுருவோம். அப்புறம் ஊருக்குப் போகையில கண்ட கண்ட இடத்தில வாங்கி எதையும் சாப்பிடாதீங்க எதற்கும் இதை ரெண்டு தொடவ படிச்சுக்கோங்க
எலி: உங்க உதவிய மறக்க மாட்டேங்க. உங்க வடிவில மனிதம் மிளிர்கிறதுங்க
சரி, அட்மின் ஐயா, உங்க மகளையாவது கண்ணுல காட்டுவீங்களா?
அட்மின்: அய்யா சாமி மொத நீங்க உங்க ஊருக்கு போங்க மத்ததை கடுதாசி போடுறேன். இந்தாங்க ஒரு அன்பளிப்பு ஒரு புத்தகம்.
எலி: இதுல என்ன இருக்கு?
அட்மின்: அதை தெளிவா இந்த அம்மணி சொல்லிட்டாங்க அப்படியே மறக்காம படிங்க.
ஊருக்கு போனது அவர் எழுதிய கடுதாசி என்ன?
தொடரும்..
|
|
again nice intros
ReplyDeleteபார்க்க வேண்டிய பதிவர்கள்
ReplyDeleteஅறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
அறிமுகம் செய்யும் விதம், புதுமையாக ஆக இருக்குதுங்க.... :-)
ReplyDeleteNice introductions Neechal.. Thanks
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். வாழ்த்துகள் நீச்சல்காரன் சார்.
ReplyDeleteஅன்பின் நீச்சல்காரன்
ReplyDeleteஅறிமுகங்களைச் சென்று படிக்கிறேன்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்கள் அசத்தல் ..
ReplyDelete