07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 5, 2010

சமுதாய சிந்தனை மற்றும் சுவாரசியமான பதிவுகள் - ரோஸ்விக்

வணக்கம் நண்பர்களே!

எல்லோரும் நல்லா இருக்கீங்களா? அறிமுகங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது?

நமது பதிவுலகில், நல்லெண்ணங்களை விதைக்கும் வகையிலும், சமுதாயம் பற்றிய சிந்தனையை தூண்டும் வகையிலும் கட்டுரை, கவிதை எழுதும் பதிவர்கள் சிலரை அறிமுகப்படுத்தலாம் என இருக்கின்றேன். பலர் இந்த வகையில் எழுதி வந்தாலும், அனைவரையும் அறிமுகப்படுத்த எனது நேரம் போதவில்லை என்ற ஒரே காரணத்தினால் சிலரை மட்டும் அறிமுகப்படுத்துகிறேன்.

சிலரது வித்தியாசமான சிந்தனைகளுக்காகவும், பதிவுலகை வேறுபட்ட கோணத்தில் அணுகுவதற்காகவும், இங்கு அவர்களையும் அறிமுகப்படுத்துகிறேன்.

தமிழ் உதயம் - பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி இருக்கிறார். வாழ்வின் அன்றாட நிகழ்வுகளையும் அலசுபவர்.

நடைவண்டி - இவர் கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய அனுபவம் உள்ள சிந்தனையாளர். இவரது பதிவுகளில் சமுதாயத்தின் மீதான அக்கறையும், தவறு நடக்கும் இடங்களில் இவரது கோபமும் வெளிப்படையாகவே தெரியும்.

ஆத்மா - ரெட்டைவால்’ஸ் / விக்னேஸ்வரன் எனும் அன்பு நண்பர் எழுதுகிறார். நிறைய வாசிப்பவர், பத்திரிக்கை அனுபவமிக்கவர். இவரின் கவிதைகள் எளிய நடையில் நாசூக்காக் சமுதாயத்தை சாடுபவர்.

சாமக்கோடாங்கி... - பிரகாஷ் எனும் நண்பர் எழுதிகிறார். இயற்கை ஆர்வலர், சிறுவயதிலே சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட, என் பார்வையில் இவர் ஒரு சமூகப்போராளி. இவர் பதிவுகள் ஒன்றுகூட என் வாசிப்பில் இருந்து தப்புவதில்லை.

உளறுவாயன் - இவர் உளறியே ஆகவேண்டும். அப்போது தான் நமக்கு நிறைய விஷயங்கள் அறியக்கிடைக்கும். உலகில் அனுசரிக்கப்படும் சிறப்பு தினங்கள், தலைவர்கள் பற்றிய செய்திகளையும், தமது சமுதாய நல்லெண்ண கட்டுரைகளுடன் கலந்து தருவார்.

கருப்பு வெள்ளை - பழம்பெரும் பதிவர். இவரது கவிதைகளை வாசித்துப் பாருங்கள். வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் தெளிந்த நீரோடை போல மிகத்தெளிவாக இருக்கும். அனைவரும் வாசிக்க வேண்டிய தளம். தவறவிடாதீர்கள்.

தமிழ் சோலை - இத்தளம் பல்சுவைக் கலவையாக இருக்கிறது. நல்ல பயனுள்ள தகவல்களும் இங்கு கிடைக்கிறது.

இன்று - இது பலகாலமாக இயங்கிவரும் தளம். பலரால் இயக்கப்பட்டுவரும் தளம். நிறைய அற்புதமான கட்டுரைகள் இங்கு எழுதப்பட்டிருக்கிறது. நம் சமுதாயம் பற்றிய கட்டுரைகள் மிகச்சிறப்பானவை.

விஜய் மகேந்திரன் - இவர் ஒரு எழுத்தாளர். சிறுகதை, பல புத்தகங்கள் அறிமுகம் என கலந்து கொடுத்திருக்கிறார்.

கட்டுமானத்துறை - நண்பர் வடுவூர் குமாரின் வலைத்தளம் இது. இவர் தனது கட்டுமானத்துறை சம்பந்தப்பட்ட பல தொழில்நுட்ப தகவல்களையும், வீடு வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் மிக அருமையாக நமக்கு விவரிக்கிறார்.

சு டு த ண் ணி - இணையங்கள் குறித்தும், வான்வழி போக்குவரத்துகள் குறித்தும் அருமையாக விளக்குகிறார். நிறைய தெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்ப விஷயங்கள் ஏராளம். கண்டிப்பாக வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மேலிருப்பான் - நண்பர் பத்மஹரி ஜப்பானில் இருந்து எழுதி வருகிறார். கடல்வாழ் உயிரினங்கள், அதிசய உயிரிகள், மனிதனின் வாழ்க்கை முறைகள், விநோதங்கள் குறித்தும் தனது நகைச்சுவை நடையில் எழுதியிருக்கிறார். படித்து பயன்பெறுங்கள்.

கோகுலத்தில் சூரியன் - வெங்கட் எனும் நண்பர் பல சுவாரசியங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். இவரது ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் வரும் கேள்வி-பதில், இன்று ஒரு தகவல் மிக அருமை.

அலசல் - அண்ணன் சேவியர் எழுதுகிறார். பன்முகம் கொண்டவர். பத்திரிக்கையாளர். எழுத்தாளர். எண்ணிலடங்கா சுவாரசியமான இடுகைகள். தவறாமல் இன்றே போய் படியுங்கள். நான் ரசிக்கும் தளங்களில் இதுவும் ஒன்று.

தேவியர் இல்லம் திருப்பூர் - இலங்கை நிகழ்வுகள், விடுதலைப்புலிகள், இந்தியாவின் அரசியல் என பல வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

முகிலன் கவிதைகள் - இவரின் கவிதைகள் அனைத்தும் புரியும்படியும், செய்திகளுடனும் உள்ளன. இவரின் தாண்டவக்கோனே கவிதையையும் வாசித்துப்பாருங்கள். அருமை.

மௌனராகங்கள் - தோழி ஜெஸ்வந்தி எழுதி வரும் இந்த தளம் பல கலவையான இடுகைகளைக் கொண்டது. இயற்கை, சமூகம் என பல பார்வைகளில் பதிவிடுகிறார் இந்த பாவை.

நிஜாம் பக்கம் பல்சுவை பக்கம் - நண்பர் நிஜாம் சிந்தனைப்பகுதிகள், நகைச்சுவை, சுவாரசியமான நற்சிந்தனை கதைகள் என கலந்து கலக்குகிறார்.

Warrior - நண்பர் தேவா, வாழ்வியல் நிகழ்வுகளையும், சமூக அவலங்களையும் சிந்தித்து எழுதுகிறார். குறுகிய காலத்தில் நிறைய பதிவுகளையும் எழுதுகிறார்.

எங்கே செல்லும் இந்த பாதை ..... - நண்பர் கே.ஆர்.பி. செந்தில் எழுதும் பயோடேட்டா மிக சுவாரசியமானது. இது மட்டுமில்லாமல் கவிதை மற்றும், அவரது அனுபவங்களை எழுதி கலக்குகிறார்.

வசந்தகால பறவை - நண்பர் சிவமஞ்சுநாதன் எழுதும் இந்த வலைத்தளத்தில் காதல் கவிதைகள் கசிந்துருகும். இவர் தனது இடுகைகளை எந்த திரட்டியிலும் ஏனோ இணைப்பதில்லை. சுவாரசியமானவர்.

சத்ரியன் - காதல் இளவரசன். இவரது கவிதைகளை வாசித்துப்பாருங்கள். மிகச்சில வரிகளில் காதலை உருக்கமாக வெளிப்படுத்துகிறார்.

வினையூக்கி - நண்பர் செல்வக்குமார் பல காலமாக எழுதி வருகிறார். நிறைய சிறுகதைகளும், சுவீடனில் படிக்க வழிகாட்டுதலையும் எழுதியிருக்கிறார். வாசித்து பயன்பெறுங்கள்.

மதுரை சரவணன் - கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் நமது சமூகத்தில் எற்படவேண்டிய மாற்றங்களையும் தனது பார்வையில் எடுத்து முன் வைக்கிறார்.

சாமிகளா இந்த வகையில எழுதுறது நிறைய பேரு... அவங்க எல்லாரையும் அறிமுகப்படுத்தனும்னா எனக்கு ரெண்டு நாள் லீவு வேணும். எங்க டேமேஜர் குடுக்கமாட்டாரு... இங்க உங்க பேரு இல்லையின்னு சண்டைக்கு வந்துராதீக. நிறைய பேரு வாசிக்கிற தளங்களையும் நான் பெரும்பாலும் தவிர்த்திருக்கிறேன்.


மீண்டும் நாளை வித்தியாசமான பட்டியலுடன் சந்திக்கிறேன்!!!

35 comments:

  1. ரோஸ்விக்,

    மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையேயும், ஏற்றுக்கொண்ட பணியினைச் சிறப்பாக செய்து வருகின்றீர்கள்.

    வாழ்த்துகள்.

    அதென்ன சாமி? ”சத்ரியன் - காதல் இளவரசன்” .

    இத்தனை நாளா இது தெரியாம போச்சே எனக்கு!

    ReplyDelete
  2. சத்திரியன்!! தன் அருமை தான் அறியார்!!

    ReplyDelete
  3. நன்றி ரோஸ்விக்.
    தாங்கள் சுட்டிக் காட்டியுள்ள, ஏனைய தளங்களை, நான் அறியாத தளங்களை வாசித்து கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  4. அறிமுகங்களுக்கு நன்றி.

    //சத்ரியன் காதல் இளவரசன்//

    ரைட்டு.

    ReplyDelete
  5. சுவையான அறிமுகங்களுக்கு- நன்றி!
    என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு
    நன்றி, ரோஸ்விக்!

    ReplyDelete
  6. மிக்க நன்றி ரோஸ்விக் ...
    பதிவர் சந்திப்புக்கு சென்றுவிட்டு இப்போதுதான் வந்து உங்கள் பதிவை பார்த்தேன்.

    ReplyDelete
  7. ரோஸ்விக் நன்றீ. வாழ்த்துக்கள் பணிச்சுமைகளுக்கு நடுவிலும் பணியினை சிறப்பாக செய்து வருவதற்கு.

    ReplyDelete
  8. ரோஸ்விக் நன்றீ. வாழ்த்துக்கள் பணிச்சுமைகளுக்கு நடுவிலும் பணியினை சிறப்பாக செய்து வருவதற்கு.

    ReplyDelete
  9. Thank you for the indrop Boss! Aamma neenga...kalayar kovilaa?

    ReplyDelete
  10. நன்றி சத்ரியன். உங்க திறமை உங்களுக்கு தெரியாது ராசா... ஊருக்குள்ள அப்படித்தான் பேசிக்கிறாங்க... ;-)

    ReplyDelete
  11. நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா). (மெரீனா சாண்ட்ஸ்-ல போட்டோ எடுத்தா எங்களுக்கு காசு கொடுக்கணும் தெரியுமா?? ஒழுங்கா செட்டில் பண்ணிடுங்க.. :-) )

    ReplyDelete
  12. நன்றி தேவா சார். (என்ன சத்ரியன் கவிதைக்கு ஒரு கவிதை எழுதுறீங்க?? )

    ReplyDelete
  13. நன்றி தமிழ் உதயம்.
    தொடர்ந்து சிறப்பா நற்சிந்தனை தரும் பதிவுகளா எழுதுங்க. வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. எப்போ அறிமுகப்படுத்தினதுக்கு எப்போ வந்து நன்றி சொல்லுது பாருங்க... குசும்பு புடிச்ச ஆளுயா...
    நன்றி பட்டாபட்டி.

    ReplyDelete
  15. நன்றி சரவணக்குமார். நீங்க சொன்ன சரிதான்... :-)

    ReplyDelete
  16. நன்றி NIZAMUDEEN.
    உங்கள் தளத்தில் பல இடுகைகள் சுவாரஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
  17. நன்றி கே.ஆர்.பி.செந்தில்
    பதிவர் சந்திப்பு எங்க நடந்தது அண்ணே...? தகவல்கள் தெரியாம ரொம்ப பின்தங்கி போய் இருக்கேனே! :-)

    ReplyDelete
  18. நன்றி மதுரை சரவணன்
    அண்ணே கண்ணாடிய போட்டுக்கிட்டு ஜம்முன்னு நிக்கிறீங்க... உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்னு நினைச்சேன். உங்க தளத்துல வந்து சொல்றேன். :-)

    ReplyDelete
  19. பதிவர் சந்திப்பு எங்க நடந்தது அண்ணே...?

    இன்று மாலை சென்னை மெரினாவில் நடந்தது.

    ReplyDelete
  20. நன்றி dheva. ஆமாங்க...

    ReplyDelete
  21. நன்றி ஜெய்லானி... அண்ணே இப்புடி வந்து சிரிச்சிட்டு போறதுக்கு என்னைய நாலு அடி அடிச்சிட்டு போங்கண்ணே! :-)))

    ReplyDelete
  22. யோவ்..ரோஸு...அங்க உன்னை அடிக்கடி காணோமேன்னு பார்த்தா...இங்கன உக்காந்து எடிட்டர் வேலை பாத்துட்டு இருக்கியா...!

    Thanks for Remembering & introducing Aathma...
    எனக்கே அவனை அடிக்கடி மறந்து போகும்! ஹி ஹி ஹி...

    ReplyDelete
  23. நன்றி ரெட்டைவால்'ஸ். ஆத்மாவை மறந்துராதீங்க... தொடர்ந்து எழுதுங்க. :-)

    ReplyDelete
  24. அறிமுகத்துக்கு மிக்க நன்றி ரோஸ்விக்!

    ReplyDelete
  25. @@@@@ரெட்டைவால்'ஸ் said...
    Thanks for Remembering & introducing Aathma...
    எனக்கே அவனை அடிக்கடி மறந்து போகும்! ஹி ஹி ஹி...//

    Haa.Haa...Yep...!

    Thanks for introducing Aathma...!

    -A big fan of Aathma...! :)

    ReplyDelete
  26. நன்றி வினையூக்கி

    நன்றி பத்மஹரி.

    நன்றி Veliyoorkaran. அட இந்த பீசு இன்னும் பதிவுலகத்துல தான் இருக்கா... சாமி எப்போ அடுத்த இடுகை போடுற?? வெயிட்ட்ட்டிங்ங்ங்குகுகு....

    ReplyDelete
  27. அன்பின் ரோஸ்விக்

    அருமையான் அறிமுகங்கள் - சமுதாய சிந்தனை - இத்தனை பதிவர்களை தேடிப் பிடித்து அறிமுகப்படுத்தியமௌ நன்று ரோஸ்விக்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  28. நன்றி venkat.

    நன்றி சீனா ஐயா.

    ReplyDelete
  29. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு
    நன்றி, ரோஸ்விக்!வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. I need the Contact details of Vaduvur Kumar .Pl help me .I am subramanyam ,editor of Buildersline magazine.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது