ஐம்பது வயதைத் தாண்டிய இளம் பதிவர்கள் - ரோஸ்விக்
➦➠ by:
ரோஸ்விக்
வாங்க வலையுலக வாசகப் பெருமக்களே!
இன்று இவ்வாரத்தில் நான் வலைச்சர ஆசிரியராக பதிவிடும் கடைசி நாள்... (யாருண்ணே அது... "அப்பாட ஒரு வழியா முடிஞ்சது"-ன்னு கொட்டாவி விடுறது?? ). இந்த அரிய வாய்ப்பை நல்கிய சீனா ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
லதானந்த் பக்கம் போயிருக்கீங்களா நீங்க?? தவற விட்டுறாதீங்க. லதானந் அங்கிளோட உவமை கதைகளும், அனுபவப் பகிர்வுகளும் கொங்கு தமிழ்ல... அடேங்கப்பா. குசும்புள்ள ரசனையான ஆளுங்க. மீசைக்கார அங்கிள்... ரோஷமும் பாசமும் ரொம்ப இருக்கும். அனுபவிச்சுப்பாருங்க.
அசைபோடுவது................... - சீனா ஐயா. இவரைப்பற்றி அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. பதிவுலகம் சார்பாக ஆக்கப்பூர்வமான சில நிகழ்ச்சிகள் நடத்துவதில் முன் நிற்பவர். அவர் இந்த தளங்களில் தனது அனுபவங்களையும், தாம் கேட்டு பயன்பெற்ற சொற்பொழிவு சாராம்சங்களையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
75 வயதான இளைஞர், ஓய்வுபெற்ற அறிஞர் ஐயா கந்தசாமியின் சாமியின் மனஅலைகள் படிங்க. நிறைய கதைகள் எல்லாம் சொல்லுவாரு. நமக்கு தாத்தா பாட்டி இல்லாத குறைய தீர்த்து வைக்கிற மசக்கவுண்டன் இவரு... ;-)
மேலும் வாசிக்க...

நம்ம வீடுகள்-லையும் சரி, ஊர்கள்-லையும் சரி பெரியவங்க தங்களோட அனுபவங்களைப் பகிர்ந்துக்கிறது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அவர்களது அனுபவங்கள், பல சமயங்கள்ல நமக்கு பாடமாகவும் அமையும். நம்ம ஈடுபாட்டோட எழுதுகிற, வாசிக்கிற இந்த வலைத்தளங்களிலும் சில பெரியவங்க இருக்காங்க. அவங்களோட பதிவுகளைப் பத்தி தான் நாம இன்னைக்கு பார்க்கப்போறோம்.
வலைத்தளங்களில் எழுதுவதற்கு வயதோ, தாம் சார்ந்த துறைகளோ ஒரு தடையே இல்லையென்று நிரூபித்தவர்கள். நாம் இன்பமாக வசிக்க பெரியவர்கள் நமது பக்கத்தில் இருக்கவேண்டும். நாம் இன்பமாய் வாசிக்க இவர்களது பக்கங்களும் நமக்கு கிடைக்க வேண்டும். இவர்கள் அனைவரும் வாழ்வில் 50 வருடத்திற்கு மேல் அனுபவமுள்ள இளைஞர்கள்.
தருமி - இவரை பழம்பெரும் பதிவர் என்றே சொல்லலாம். கடந்த ஐந்து வருடங்களாகப் பதிவுகளை எழுதிவருகிறார். இவரது பதிவுகளை வாசித்துப் பாருங்கள். சிந்திக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. ஐயாவின் கட்டுரை ஒன்று சிங்கை மணற்கேணி குழுமத்தினர் நடத்திய கட்டுரைப் போட்டிகளில் முதலிடம் பெற்றது.
தமிழா...தமிழா.. - எனும் தனது வலைத்தளத்தில் ஐயா ராதாகிருஷ்ணன் அவர்கள், நகைச்சுவையாகவும், வாழ்வியல் நிகழ்வுகளையும் எழுதிவருகிறார். வலையுலகில் அனைவருக்கும் மதிப்பிற்குரிய நண்பராகவும் இருந்து வருகிறார். படித்து மகிழுங்கள்.
பாமரன் பக்கங்கள்... - வானம்பாடிகள் பாலா அண்ணே வலைத்தளத்தைப் பத்தி சொல்லவே வேணாம். மனுஷன் காதல் கவிதையானாலும், கேரக்டர் பற்றி விவரித்தலானாலும் கலக்குவார். இவருடைய நறுக்குன்னு நாலு வார்த்தைக்கும், கேரக்டர்கள் குறித்த பதிவுகளுக்கும் நான் தீவிர ரசிகன். எங்கதான் இந்த வித்தையெல்லாம் கத்துகிட்டு வந்தாரோ!!! :-)
லதானந்த் பக்கம் போயிருக்கீங்களா நீங்க?? தவற விட்டுறாதீங்க. லதானந் அங்கிளோட உவமை கதைகளும், அனுபவப் பகிர்வுகளும் கொங்கு தமிழ்ல... அடேங்கப்பா. குசும்புள்ள ரசனையான ஆளுங்க. மீசைக்கார அங்கிள்... ரோஷமும் பாசமும் ரொம்ப இருக்கும். அனுபவிச்சுப்பாருங்க.
அசைபோடுவது................... - சீனா ஐயா. இவரைப்பற்றி அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. பதிவுலகம் சார்பாக ஆக்கப்பூர்வமான சில நிகழ்ச்சிகள் நடத்துவதில் முன் நிற்பவர். அவர் இந்த தளங்களில் தனது அனுபவங்களையும், தாம் கேட்டு பயன்பெற்ற சொற்பொழிவு சாராம்சங்களையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
75 வயதான இளைஞர், ஓய்வுபெற்ற அறிஞர் ஐயா கந்தசாமியின் சாமியின் மனஅலைகள் படிங்க. நிறைய கதைகள் எல்லாம் சொல்லுவாரு. நமக்கு தாத்தா பாட்டி இல்லாத குறைய தீர்த்து வைக்கிற மசக்கவுண்டன் இவரு... ;-)
முத்துச்சிதறல் - மனோ சாமிநாதன் அம்மையார் எழுதுறாங்க. நிறைய முத்துக்கள் அங்கு கிடைக்கும். வீட்டுக்குறிப்புகள், மருத்துவக்குறிப்புகள்-னு கலந்துகட்டி அடிக்கிறாங்க... அருமையா இருக்கும்.
தாராபுரத்தான் - அப்படிங்கிற பேர்ல எழுதுறது நம்ம பொன். பழனிச்சாமி ஐயா. இவரு சின்னப்புள்ளையில கேட்ட கதை, இவருக்கு பொண்ணு பார்த்த கதை... இன்னும் பலப்பல சுவாரஸ்யங்கள். இவர் இயற்கை ஆர்வலரும் கூட. போயி படிச்சுப்பாருங்க இந்த சூறாவளியும் பலமா இருக்கும். :-)
எப்படித்தான் தினமும் இடுகை போடுறாங்களோ... அப்பப்பா கண்ணை கட்டுது சாமி... :-)
என்ன அப்படி பாக்குறீங்க...?? என்னடா இவன் எப்படா முடிப்பான்னா?? பொறுங்க பொறுங்க முடிச்சிட்டேன். கவலையே படாதீங்க. நான் இந்த வாரம் முழுவதும் அறிமுகப்படுத்தின வலைத்தளங்களை படிச்சுப் பாருங்க... எல்லாமே நீங்கள் ரசிக்கும்படியா இருக்கும்னு நான் நம்புகிறேன்.
தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் என்னை ஊக்கப்படுத்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி. இங்கு எழுத என்னை அழைத்து பெருமைபடுத்திய சீனா ஐயாவுக்கு மீண்டும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.