07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 27, 2010

வலைச்சரம் - முதல் நாள் - திங்கள்

வணக்கம் சீனா சார்!

நல்லாருக்கீங்களா?

ஒரு வாரத்திற்கு, நண்பர்களுடன் நண்பர்களாக அமர்ந்து கொண்டு பேசுவதற்கு இவ்வளவு பெரிய வீட்டை ஒதுக்கி தந்ததற்கு ரொம்ப நன்றி சார்!
"முதல் நாள் உங்களைப் பற்றியும், உங்கள் தளம்/இடுகை பற்றியும் பேசிக் கொள்ளலாம்" என சொன்னீர்கள்தான். 'இங்கு' ஒரு பட்டனை அமுக்கினா அங்கு போய் விழுந்திரலாம். அப்புறம் எதுக்கு சார் அங்குள்ளதை இங்கு பேச?
பத்திரிக்கை வச்சதும் ரொம்ப சந்தோசமாய் இருதது சார். போலவே, சற்று குழப்பமும். சந்தோசம் - "அட நம்மையும் சீனா சார் கூப்பிடுறாரே" என்பது. குழப்பம் - "யாரைப் பேச, யாரை விட?"

மாப்ள மதார் சிக்கந்தர் குடும்பம் மாதிரி ஆகிப் போச்சு சார், நம்ம குடும்பமும். மதார் சிக்கந்தருக்கு கூடப் பிறந்த அண்ணன் தம்பிகள் பத்து பேர். இவனையும் சேர்த்து பதினொன்னு. "மாப்ள, ஒரு கிரிக்கெட் டீமே வீட்ல இருக்கீகளேடா" என்போம். திருமணத்திற்கு அழைப்பு வைக்கிற எல்லா நண்பர்களும் அனேகமாக சொல்வதுண்டு, "மாப்ள பத்திரிக்கை உனக்கு மட்டும்தான், குடும்பத்திற்கு இல்லை. மறு உலை வைக்க வச்சுராத மாப்ள" என்று. மாப்பிள்ளை சிரிப்பான். மாப்பிள்ளைகள் பேசி, மாப்பிள்ளைக்கு ஒரு போதும் வலிச்சதில்லை. அப்படி வலிச்சா அவன் மாப்பிள்ளையா?

போலவே, அப்பா, சித்தப்பா, சித்தப்சு, மாமா, மாம்சு, அண்ணா, அண்ணே, பங்காளி, பங்கு, என்ற குய்யோ முறையோ குடும்பஸ்தன் சார் நான். ஒரு குரல் விட்டால், குரல் குரல் குரல்... என எக்கோ வரும் குடும்பஸ்தன்.

ஒண்ணு செய்யலாம் சார்,

படிக்கிற காலத்தில், தலையணையை நெட்டு வாக்கில் உடம்பு சைசில் வச்சு, பொத்தினாப்ல போர்த்தி, சுவர் ஏறிக் குதிச்சு, செகன்ட் சோ பார்க்கப் போறது போல வாரேன். குடும்பத்திற்கு தெரியாமால் பார்த்துக்கிறது உங்க பொறுப்பு.

தீர்மானத்திற்கு வந்துரலாம் சார்!

இந்த ஒரு வாரம் நான் இதைத்தான் செய்யப் போறேன். நண்பர் சரவணன் ஊரில் இருந்து வரும் போது, மணிஜீ வாங்கித் தந்த முறுக்கு சீடைகளுடன், நம் பதிவ நண்பர்களின் முதல் குழந்தைகளை கூட்டி வந்தார். முதல் மூன்று நாள் அக்குழந்தைகளை கையில் எடுக்கிறேன். பிறகு நாலு நாள். தினம் ஏழு பேர் என இருபத்தி ஒருவர் பற்றி பேசலாம் என்பதாக அபிப்ராயம்.

இவ்வளவும் குடும்பத்திற்கு தெரிய வேணாம் சார். குய்யோ முறையோ என்ற என் குடும்பத்திற்கு. மதார் மாப்பிள்ளைக்கு சொல்றதுதான் சார் உங்களுக்கும்.

மறு உலை வைக்க வச்சுறாதீங்க சீனா சார்.

மீண்டும் நன்றி சார்!


51 comments:

 1. பதிவுலக பாரதி ரஜாவான என் அன்பு சித்தப்பா...பா.ரா வாங்க....உங்களின் மந்திர மயக்கும் எழுத்து நடையால் எங்களையெல்லாம் கட்டி இழுத்துச் செல்க......

  ஆரம்பமே....அட்டகாசம்....உங்க கூடவே சேந்து உக்காந்து கேக்குறோம் சித்தப்பா உங்களின் அறிமுகங்களை.....

  ReplyDelete
 2. இந்த ஒரு வாரம் நான் இதைத்தான் செய்யப் போறேன். நண்பர் சரவணன் ஊரில் இருந்து வரும் போது, மணிஜீ வாங்கித் தந்த முறுக்கு சீடைகளுடன், நம் பதிவ நண்பர்களின் முதல் குழந்தைகளை கூட்டி வந்தார். முதல் மூன்று நாள் அக்குழந்தைகளை கையில் எடுக்கிறேன். பிறகு நாலு நாள். தினம் ஏழு பேர் என இருபத்தி ஒருவர் பற்றி பேசலாம் என்பதாக அபிப்ராயம்.

  ...... இந்த தீர்மானம் புதுசாகவும் இருக்குது - நல்லாவும் இருக்குது..... நிச்சயம் கலக்கல் வாரம்தான்!

  ReplyDelete
 3. @@@ dheva//
  பதிவுலக பாரதி ரஜாவான என் அன்பு சித்தப்பா...பா.ரா வாங்க....உங்களின் மந்திர மயக்கும் எழுத்து நடையால் எங்களையெல்லாம் கட்டி இழுத்துச் செல்க......//

  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

  ReplyDelete
 4. மறு உலை வச்சே ஆகணும். விடுவோமா நாங்க. ( இப்பவே இடம் பிடிச்சாச்சு)

  பா.ரா அண்ணா யாரையும் பாராமல் விட்டா தெய்வகுத்தமாயிடும் சொல்லிப்புட்டேன் ஆமா.

  வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. வாழ்த்துகள் மக்கா.

  கலக்குங்க.

  மணிஜீ வாங்கிக் கொடுத்த அல்வாவை மறந்துட்டீங்களே?

  ReplyDelete
 6. வாங்க மாம்ஸ். இனிமே இப்படித்தான் உங்கள் கூப்பிடபோறேன். சந்தோசமா இருக்கு உங்கள் இங்க பாக்கறதுக்கு. மயக்கிபோடுங்க எல்லாத்தயும்.

  ReplyDelete
 7. வலை உலகின் மிகச் சிறந்த பதிவர்கள் அமர்ந்த ஆசிரியர் ஆசனத்தில் இப்போது
  பா.ரா வும்

  சந்தோஷம் மக்கா

  விமர்சனமும் அறிமுகங்களும் ..

  புது ருசி சிக்கந்தர் குடும்பத்தில் இருந்து

  ReplyDelete
 8. ம்ஹூம். மறு உலை தப்பாது பா.ரா.:)). என்ன, நெஞ்சுக்குழியில உசிர் துடிக்க, காதில் இதய ஒலி எதிரொலிக்க, களைச்சாலும் சந்தோஷமா ஸ்டேடியத்தை சுத்தி வர களைப்பான மகிழ்ச்சிதான். ஆனாலும் கைதட்டுறவங்களுக்கு சந்தோஷம்தானே:).

  ReplyDelete
 9. வாங்க பா.ரா வாங்க !

  கலக்குங்க ! அறிமுகங்கள் தொடரட்டும் ! நல்வாழ்த்துகள் பா.ரா
  நட்புடன் சீனா = லேபிள் போடுங்க ! தமிழ் மணத்துல இணையுங்க !

  சரியா

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. பதிவர்களை உறவு முறை சொல்லி அழைக்கும் உங்கள் பழக்கம் ரொம்ப அழகு. இந்த வாரம் தங்களுடையது . காத்திருக்கிறோம் வாழ்த்துக்கள் தம்பி

  ReplyDelete
 12. அப்படி வலிச்சா அவன் மாப்பிள்ளையா?

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் பா ரா.

  ReplyDelete
 14. தங்களின் நடையும் எழுத்தும் கவர்கின்றன என்பது யாவரும் அறிந்த விஷயம் ஆனால் பதிவுலக பாரதிராஜா என ஒரு விமர்சனம் மனதை சந்தோஷப்படுத்தியது தங்களின் ஆரம்பம் போலவே

  நன்றி ஜேகே

  ReplyDelete
 15. வாழ்த்துகள் பா.ரா அண்ணே!

  அன்புடன்,
  -ரவிச்சந்திரன்

  ReplyDelete
 16. வணக்கம் சார் .. வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 17. வாங்கப்பா....
  வீட்டுக்குள்ள அப்பா நுழைஞ்சா வீடே அமைதியாகிடும்..

  ஆனா இந்த அப்பா நுழைஞ்ச உடனே வீடே கலை கட்டுது..

  கோவில்ல கொடி கட்டியாச்சி...இனிமே திருவிழா முடியற வரை கொண்டாட்டம்தான்.

  ReplyDelete
 18. அப்பா அல்வா வாங்கிட்டு வந்தா வீட்ல இருக்கற கடைகுட்டிக்கி நாக்கிலயாவது ஈஷி விடுவாங்க இல்ல?

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. சரி சரி ராஜாங்கத்தை ஆரம்பிச்சாச்சா!ஆவலோடு இருக்கிறோம்.

  ReplyDelete
 21. வலைச்சர வாழ்த்துகள்!

  ReplyDelete
 22. வாழ்த்துகள் மக்கா.

  கலக்குங்க.

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் பாரா சார்...

  ReplyDelete
 24. ராஜாங்கம் ஆரம்பமாகிறதா அண்ணா... இனி ஒருவாரத்துக்கு நாங்கலாம் தேன் குடிச்ச நரிதான் :-))))

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. கலக்குங்க பங்கு

  விஜய்

  ReplyDelete
 26. கலக்குங்க பங்கு

  விஜய்

  ReplyDelete
 27. மக்கா அன்பும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள் பா.ராஜாராம்.

  ReplyDelete
 29. ஸ்டார்ட் ம்யூஜிக்.... :)

  ReplyDelete
 30. வாழ்த்துக்கள் பா.ரா. சார்

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள் பா.ரா. உங்கள் எழுத்துக்களுக்காக அழையா விருந்தாளியாக கூட கலந்துக்கலாம்.

  ReplyDelete
 32. பாரா அண்ணே.. கலக்குங்க கலக்குங்க..

  ReplyDelete
 33. Vazhththukkal PARA.

  Thodarungal.

  thodarattum ungal Kalakkal

  ReplyDelete
 34. வாழ்த்துகள் பா.ரா.

  ReplyDelete
 35. அன்பும் வாழ்த்துகளும் மக்கா. கலக்கல் வாரம்தான்!

  ReplyDelete
 36. வணக்கம் ஆசிரியரே... காத்திருக்கிறேன்....

  ReplyDelete
 37. வாங்க வாங்க வாழ்த்துகள்

  ReplyDelete
 38. பா.ரா அண்ணாச்சி வருக! வருக! இந்த வாரம் உங்கள் வாரம்! வலைச்சரத்தின் சிகரம். அசத்துங்க!

  ReplyDelete
 39. வாழ்த்துக்கள் பா ரா!

  ReplyDelete
 40. ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

  தனித்தனியாக கை பற்ற இயலவில்லை. கிடைக்கிற நேரத்திற்குள் நாளைக்கான ஆயத்தங்கள் செய்ய வேண்டிய நிலை...

  மிகுந்த அன்பும் நன்றியும் மக்களே!

  ReplyDelete
 41. அண்ணா வாரம் அசத்தலாய்த் தொடங்கியிருக்கு.சின்னவளின் பிந்திய வாழ்த்து அண்ணா.
  வாங்கிக் கொள்ளுங்கோ !

  ReplyDelete
 42. மிக்க மகிழ்வு பா.ரா.

  ReplyDelete
 43. கலக்குங்க.

  வாழ்த்து(க்)கள்.

  உங்களைப்பார்க்கணுமுன்னு ஒருத்தர் துடியாத் துடிச்சாராம்.

  சந்திச்சீங்களா?

  ReplyDelete
 44. ச்சே எவ்ளோ லேட்டா வந்திருக்கேன்... மகாப்பா, என் கிறுக்கல்களை நல்லா இருக்குன்னு ஏன் சொன்னிங்கன்னு இப்ப புரியுது...

  இதுக்கு :-)) போடனுமா?
  :-(( இப்படி போடனுமா? தெரியலையே?


  :-))))))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது