07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 13, 2010

ஒரு வாரம் ஓடி போச்சு ..... ஜுஜுபி!

"ஏழாம் நாள் நிறைவு வணக்கம், சித்ரா."
"ஆறு படி ஏறி, மேல வந்துட்டேன்.... ஹையா...... வணக்கம்,  தம்பட்டம் தாயம்மா."
"ஏதோ சிங்க நடை போட்டு சிகரத்தின் மேல ஏறி வந்த மாதிரி பேசுறீங்க...."
""மின்னல்" வெட்டு பேச்சு ,  வேணாம் தாயம்மா."

"சரி. சரி.   முக்கியமான ஒரு கேள்வி.  பதிவுலக அரசியலுக்கு எப்போ வரப் போறீங்க?"
"சங்கர், சலீம், சைமன்" மற்றும் "சிகப்பு மனிதன்" அனைவரும்  நட்புடன் சேர்ந்து உலவும் இடம் இது என்று கருதுகிறேன்."
"வாரேன் என்கிறீர்களா? வரல என்கிறீர்களா?"
"ஹா,....... ஹா....... ஹா...... ஹா..... தாயம்மா,   என்னை வச்சு காமெடி கீமெடி  பண்றியா?  இந்தா, "பஜ்ஜி" சாப்பிடு."

"நன்றி.  உங்களையும்  பதிவுலகில் ஒரு  பொறுப்பான ஆளு என்று நினைத்து, வலைச்சர ஆபீஸ் வேலையை ஒரு வாரமா உங்களிடம் கொடுத்து இருக்காங்களே?"
" இந்த வாய்ப்பை தந்த திரு.சீனா அய்யா அவர்களுக்கு  நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். அவர் வைத்த நம்பிக்கையை சொதப்பாமல் செய்து முடித்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்."

 "நெல்லை  பக்கம் உள்ள   பலரை அறிமுகப்படுத்துவீங்க என்று நினைத்தேன் சித்ரா"
"நம்மூரு மக்கா,  இதையெல்லாம் எதிர் பார்க்க மாட்டாங்க. புரிஞ்சுப்பாங்க. மேலும் நான் ஊரு வாரியா அறிமுகப்படுத்துறேன் என்று உங்க கிட்ட சொல்லவே இல்லையே."

"இன்னும் எத்தனையோ இடுகைகளை பற்றி சொல்லி இருக்கலாம். எத்தனை பேரு "நச்னு" எழுதுறாங்க. தெரியுமா?"
"தாயம்மா,  நான் மட்டுமே அறிமுகப் பணியில் இல்லை.  அடுத்து அடுத்து வாரங்களில் வருபவர்களும் அறிமுகம் செய்வார்கள்.  அது மற்றவர்களுக்கும் தெரியும். புரியும்."

"இல்ல  சித்ரா, உங்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி, எத்தனை பேர் பின்னூட்டம் போடுறாங்க.....ஓட்டு போடுறாங்க......... அவர்களையாவது.....?"
"  'இது அன்பால் சேர்ந்த கூட்டம்.  சிண்டு முடிய பாக்காதே...."

" சரி வேண்டாம்,  உங்களுக்கு ஆரம்பத்தில்  இருந்தே "பின்னூட்ட டானிக்" தரும்  'முத்துச்சரம்' ராமலக்ஷ்மி அக்கா, மற்றும்  உங்களுக்கு முதல் விருது  கொடுத்த ஜலீலா அக்கா ,  கூட மறந்துட்டீங்களே.
"மறந்தேன் என்று யார் சொன்னா?  தாயம்மா,  இன்று முழுதும் உன் பேச்சு முறையே சரியில்லை.
இந்த கடைசி நாள் அன்று,  ஏன்  இந்த "நீலாம்பரித்தனம்?"

"அது வந்து ...... சித்ரா...... ரஜினி படத்துல,  பொதுவா கிளைமாக்ஸ்ல  ஒரு சூப்பர் fight ஒண்ணு இருக்கும்.  இங்கேயும், இன்றோட முடியுதே......  அதான் ........ fight சீன் வர,   situation "சிங்-சாங்" போடலாம்னு..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி..."

" சண்டை வரட்டும் என்று  "தீ" மாதிரி "பத்த வைக்கிறியா"  தாயம்மா?"   இதுக்கு மேல இப்படி   பேசுனே ...... சீவிடுவேன் சீவி!"
"சித்ரா. மன்னித்து விடுங்கள்.  இனி, "ஆயிரம் ஜென்மங்கள்"க்கும் இந்த தப்பை செய்யமாட்டேன்.   என்னை மன்னிச்சிட்டீங்க  என்னும் விதமாக,  இன்றைய ஸ்பெஷல்: ஆறு இடுகைகள்,  தர கேட்டுக் கொள்கிறேன்."

 "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி சார் பேனர் வழங்கும் : டிவி ப்ரோக்ராம் "கழுகு" :
http://aaranyanivasrramamurthy.blogspot.com/2010/04/blog-post_13.html

SUFFIX Shafi in and as ,  ரூல்ஸ் அஜீஸ்மென்ட்டில் "அவர்கள்":
http://shafiblogshere.blogspot.com/2010/05/blog-post.html

அதீத கனவுகளுடன் V.Radhakrishnan Sir  வழங்கும், "தாய் வீடு":
http://www.greatestdreams.com/2010/06/blog-post_04.html

சஞ்சய் காந்தி  தயாரிப்பில்: மாணவ வாழ்க்கை போகிற போக்கில்  ஆடப்படும் "சதுரங்கம்":
http://www.blog.sanjaigandhi.com/2009/09/blog-post_21.html

அன்புத்தோழனின் இயற்கையின் அருட்கொடைகளை காக்கும் "தர்மதுரை":
http://anbutholan.blogspot.com/2010/03/original-pls.html

ஆன்லைன் பிரபலத்துக்கு,  "அவர்" செல்வகுமாரின்  அறிவுரை "முத்து":
http://selvaspeaking.blogspot.com/2010/06/blog-post.html

"மிக்க நன்றி, சித்ரா.   வாழ்த்துக்கள்!  வணக்கம்!"
"நன்றி, தாயம்மா.   வேறு பதிவு  "டீ கடையை" கவனிப்பது, இதுதான் முதல் முறை.
குறை இருந்தால், என்னிடம் சொல்லுங்கள்.   நிறை இருந்தால், எல்லோரிடமும் சொல்லுங்கள்."

எனக்கு "பேச்சுத்" திறன் கொடுத்து,  வாய்ப்பும் கொடுத்து ஆசிர்வதித்த  இறைவனுக்கே, எல்லா புகழும்!
வணக்கம்."

61 comments:

  1. எல்லாப்புகழும் சித்ராவுக்கே.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இந்த வாரம் வலைச்சரம் சரவெடிங்க சித்ரா

    ReplyDelete
  3. ஒரு வாரம் ஒடினதே தெரியாம போச்சு. கலக்கிட்டீங்க.

    ReplyDelete
  4. கலக்கல் வாரம்

    ReplyDelete
  5. றமேஸ்-Ramesh said...

    எல்லாப்புகழும் சித்ராவுக்கே.... வாழ்த்துக்கள்


    ...... எல்லாப் புகழும் இறைவனுக்கே! :-)

    ReplyDelete
  6. சின்ன அம்மிணி said...

    இந்த வாரம் வலைச்சரம் சரவெடிங்க சித்ரா


    ...... சும்மா அதிருதுல...... :-)

    ReplyDelete
  7. இராமசாமி கண்ணண் said...

    ஒரு வாரம் ஒடினதே தெரியாம போச்சு. கலக்கிட்டீங்க.


    ..... Thank you very much, இராமசாமி!

    ReplyDelete
  8. Karthick Chidambaram said...

    கலக்கல் வாரம்

    ..... thank you very much.

    ReplyDelete
  9. ஜெஸ்வந்தி said...

    Superb.


    .... Thank you very much. :-)

    ReplyDelete
  10. சிறப்பாகவே முடித்து விட்டீர்கள்...வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. நல்லா இருக்கு

    ReplyDelete
  12. அன்பின் சித்ரா

    வாரம் ஓடினதே தெரியவில்லை - பறந்துடுச்சு - சூப்பர் வாரம் - அருமை

    இன்னிக்கு இவங்க வூட்டுக்குப் போயிப் பாக்கறேன் - வரட்டா

    நல்வாழ்த்துகள் சித்ரா
    நட்புடன் சீனா

    ReplyDelete
  13. ஸ்ரீராம். said...

    சிறப்பாகவே முடித்து விட்டீர்கள்...வாழ்த்துக்கள்..

    .... Thank you, Sriram!

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. LK said...

    நல்லா இருக்கு


    .... Thanks.

    ReplyDelete
  16. cheena (சீனா) said...

    அன்பின் சித்ரா

    வாரம் ஓடினதே தெரியவில்லை - பறந்துடுச்சு - சூப்பர் வாரம் - அருமை

    இன்னிக்கு இவங்க வூட்டுக்குப் போயிப் பாக்கறேன் - வரட்டா

    நல்வாழ்த்துகள் சித்ரா
    நட்புடன் சீனா


    ...... எனக்கு கொடுத்த இந்த வாய்ப்புக்காக, ரொம்ப நன்றிங்க .... :-)
    I had lot of fun!

    ReplyDelete
  17. சூப்பர் ஸ்டார் படத்தலைப்புகளை வைத்து சூப்பர் அறிமுகங்கள் கொடுத்துவிட்டீர்கள்...வாழ்த்துக்கள்..

    சங்கர்..சலீம்...சைமன் ..மெசஜ் அருமை...அவசியமான ஒன்று...

    ReplyDelete
  18. பத்மநாபன் said...

    சூப்பர் ஸ்டார் படத்தலைப்புகளை வைத்து சூப்பர் அறிமுகங்கள் கொடுத்துவிட்டீர்கள்...வாழ்த்துக்கள்..

    சங்கர்..சலீம்...சைமன் ..மெசஜ் அருமை...அவசியமான ஒன்று...


    ......ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  19. வாரம் போன வேகத்திலே வேகமாக நல்ல பகிர்வுகள் சகோதரி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. நீச்சல்காரன் said...

    வாரம் போன வேகத்திலே வேகமாக நல்ல பகிர்வுகள் சகோதரி. வாழ்த்துக்கள்

    .... Thank you very very much. :-)

    ReplyDelete
  21. கலக்கிட்டீங்க ஒரு வாரம்

    ReplyDelete
  22. தாயம்மாவை மன்னிச்சிட்டீங்க என்பது தந்திருக்கும் அருமையான பட்டியலில் இருந்தே தெரிகிறது:)! அவசியம் பார்க்கிறேன்.

    நிறைவான வாரம்.

    வாழ்த்துக்கள் சித்ரா.

    ReplyDelete
  23. T.V.ராதாகிருஷ்ணன் said...

    கலக்கிட்டீங்க ஒரு வாரம்


    ..... Super hit!!! :-)

    ReplyDelete
  24. ராமலக்ஷ்மி said...

    தாயம்மாவை மன்னிச்சிட்டீங்க என்பது தந்திருக்கும் அருமையான பட்டியலில் இருந்தே தெரிகிறது:)! அவசியம் பார்க்கிறேன்.

    நிறைவான வாரம்.

    வாழ்த்துக்கள் சித்ரா.


    ....... அக்கா, ரொம்ப நன்றிங்க...... நான் பதிவு எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து , நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete
  25. இந்த ஒருவாரம் உங்க கழுகுப் பார்வைல கர்ஜனையாய் நிறைய நண்பர்களை அறிமுகப்படுத்தி ஒரு ஆடு புலி ஆட்டம் ஆடிட்டீங்க. அந்த அருணாசலம் உங்களுக்கு சிவப்பு சூரியனாய் இருந்து ஆசிர்வதிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. தேர்ந்த அறிமுகங்கள்.. வாரம் முழுதும் நிறைய படித்து நிறைய அலசி..
    மிகுந்த ஆர்வம் எடுத்துக் கொண்ட உங்கள் சிரத்தை பாராட்டுக்குரியது

    ReplyDelete
  27. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    இந்த ஒருவாரம் உங்க கழுகுப் பார்வைல கர்ஜனையாய் நிறைய நண்பர்களை அறிமுகப்படுத்தி ஒரு ஆடு புலி ஆட்டம் ஆடிட்டீங்க. அந்த அருணாசலம் உங்களுக்கு சிவப்பு சூரியனாய் இருந்து ஆசிர்வதிக்க வாழ்த்துக்கள்

    ...... அருமையான வாழ்த்து, இது...... பொதுவாக உங்கள் மனசு தங்கம் ... :-)

    ReplyDelete
  28. கே.ஆர்.பி.செந்தில் said...

    தேர்ந்த அறிமுகங்கள்.. வாரம் முழுதும் நிறைய படித்து நிறைய அலசி..
    மிகுந்த ஆர்வம் எடுத்துக் கொண்ட உங்கள் சிரத்தை பாராட்டுக்குரியது


    ....... கடந்த வாரம் முழுவதும் வாசித்த அருமையான பதிவுகளில், எதை கோர்ப்பது - எதை விடுப்பது என்று தெரியவில்லை. அனைத்தும் முத்துக்கள். :-)

    ReplyDelete
  29. தின‌மும் ஒரு இடுகை.... க‌ல‌க்கிட்டீங்க‌.. நிறைவான‌ அறிமுக‌ங்க‌ள். வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  30. நாடோடி said...

    தின‌மும் ஒரு இடுகை.... க‌ல‌க்கிட்டீங்க‌.. நிறைவான‌ அறிமுக‌ங்க‌ள். வாழ்த்துக்க‌ள்.


    .... Thank you very much! :-)

    ReplyDelete
  31. காளி, பில்லா, ரங்கா, எஜமான் இவங்க எல்லாம் கோபமா இருக்காங்க. அவங்க பேரை சொல்லாததுக்கு.

    ReplyDelete
  32. இவ்வாரம் முழுதும் பதிவர்களை சுவாரஸ்யமாக தொகுத்து அறிமுகப்படுத்தி விட்டீர்கள், மனமகிழ்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. "இன்னும் எத்தனையோ இடுகைகளை பற்றி சொல்லி இருக்கலாம். எத்தனை பேரு "நச்னு" எழுதுறாங்க. தெரியுமா?"
    "தாயம்மா, நான் மட்டுமே அறிமுகப் பணியில் இல்லை. அடுத்து அடுத்து வாரங்களில் வருபவர்களும் அறிமுகம் செய்வார்கள். அது மற்றவர்களுக்கும் தெரியும். புரியும்." //

    7 நாளில் எல்லோரையும் சொல்ல முடியாதுதான்!

    ReplyDelete
  34. என்னை மாதிரிப் புதுமுகங்களை விட்டுட்டீங்களே!!

    ReplyDelete
  35. ஒரு வாரம் ஓடினதே தெரியல ..அசத்திட்டீங்க....

    ReplyDelete
  36. கலக்கிட்டீங்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  37. அதிரடியாக முடிந்தேவிட்டது ஒரு வாரம்


    சும்மா அதிருச்சி போங்க :)

    ReplyDelete
  38. உய்.....உய்....உய்....!!
    ஹய்யா..இனி ஜாலி!!!!
    தப்பிச்சோம்!!ஹஹ் ..ஹா..
    கொஞ்சம் பொறு!
    ...
    என்னாது "கொஞ்சம் வெட்டிப்பேச்சு"ல அடுத்த
    பதிவு ரெடியா??
    ம்மேஏஏ.....!!

    சும்மாங்க !!! உண்மையிலேயே.. எல்லாமே சூப்பருங்க!! :)

    ReplyDelete
  39. எனக்கு இந்த வலைச்சரம் பற்றி தெரியாது சித்ரா உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்,இனி தான் எல்லாம் பார்க்க வேண்டும்.நல்ல அறிமுகம்.

    ReplyDelete
  40. இந்த வார வலைச்சரம் சும்மா 'தீ'ப்பொறி பறந்துச்சுங்க :-))

    ReplyDelete
  41. தமிழ் உதயம் said...

    காளி, பில்லா, ரங்கா, எஜமான் இவங்க எல்லாம் கோபமா இருக்காங்க. அவங்க பேரை சொல்லாததுக்கு.


    ...... சாரே, படம் முடிஞ்சிருச்சு சாரே.....! :-)

    ReplyDelete
  42. SUFFIX said...

    இவ்வாரம் முழுதும் பதிவர்களை சுவாரஸ்யமாக தொகுத்து அறிமுகப்படுத்தி விட்டீர்கள், மனமகிழ்ந்த வாழ்த்துக்கள்.

    ....Thank you very very much.

    ReplyDelete
  43. தேவன் மாயம் said...

    "இன்னும் எத்தனையோ இடுகைகளை பற்றி சொல்லி இருக்கலாம். எத்தனை பேரு "நச்னு" எழுதுறாங்க. தெரியுமா?"
    "தாயம்மா, நான் மட்டுமே அறிமுகப் பணியில் இல்லை. அடுத்து அடுத்து வாரங்களில் வருபவர்களும் அறிமுகம் செய்வார்கள். அது மற்றவர்களுக்கும் தெரியும். புரியும்." //

    7 நாளில் எல்லோரையும் சொல்ல முடியாதுதான்!


    ...... True.... :-)

    ReplyDelete
  44. தேவன் மாயம் said...

    என்னை மாதிரிப் புதுமுகங்களை விட்டுட்டீங்களே!!


    ...... நீங்க "எவர்க்ரீன் ஸ்டார்" என்று சொன்னாங்களே......!

    ReplyDelete
  45. ஜெய்லானி said...

    ஒரு வாரம் ஓடினதே தெரியல ..அசத்திட்டீங்க....

    Thank you very much.

    ReplyDelete
  46. அஹமது இர்ஷாத் said...

    கலக்கிட்டீங்க வாழ்த்துக்கள்..

    ...Thank you very much.

    ReplyDelete
  47. நட்புடன் ஜமால் said...

    அதிரடியாக முடிந்தேவிட்டது ஒரு வாரம்


    சும்மா அதிருச்சி போங்க :)


    ....Thank you, Jamal.

    ReplyDelete
  48. அண்ணாமலை..!! said...

    உய்.....உய்....உய்....!!
    ஹய்யா..இனி ஜாலி!!!!
    தப்பிச்சோம்!!ஹஹ் ..ஹா..
    கொஞ்சம் பொறு!
    ...
    என்னாது "கொஞ்சம் வெட்டிப்பேச்சு"ல அடுத்த
    பதிவு ரெடியா??
    ம்மேஏஏ.....!!

    சும்மாங்க !!! உண்மையிலேயே.. எல்லாமே சூப்பருங்க!! :)


    ..........அசராம (க)அடிப்போம்ல.....

    ReplyDelete
  49. asiya omar said...

    எனக்கு இந்த வலைச்சரம் பற்றி தெரியாது சித்ரா உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்,இனி தான் எல்லாம் பார்க்க வேண்டும்.நல்ல அறிமுகம்.

    ...... Thank you. :-)

    ReplyDelete
  50. அமைதிச்சாரல் said...

    இந்த வார வலைச்சரம் சும்மா 'தீ'ப்பொறி பறந்துச்சுங்க :-))

    .... ha,ha,ha,ha,ha ..... Thank you.

    ReplyDelete
  51. கலக்கல் சித்ரா, அதிரடி சித்ரா, நகைச்சுவை சித்ரா, முனிமா ராக்க்கமா மாதிரி தாயம்மாவா/

    நன்றி

    ReplyDelete
  52. சூப்பர்ர்ர் சித்ரா!! இந்த வாரம் முழுவதும் கலக்கிட்டீங்க...

    ReplyDelete
  53. அடடா ஒருவாரம் முடிஞ்சிருச்சா.. சே..சே.. வாழ்த்துக்கள் சித்ரா.

    ReplyDelete
  54. Jaleela Kamal said...

    கலக்கல் சித்ரா, அதிரடி சித்ரா, நகைச்சுவை சித்ரா, முனிமா ராக்க்கமா மாதிரி தாயம்மாவா/

    நன்றி

    ..... Thank you, akka!
    Thayammaa also thanks you. :-)

    ReplyDelete
  55. Mrs.Menagasathia said...

    சூப்பர்ர்ர் சித்ரா!! இந்த வாரம் முழுவதும் கலக்கிட்டீங்க...

    ...... Thank you very much.

    ReplyDelete
  56. Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    அடடா ஒருவாரம் முடிஞ்சிருச்சா.. சே..சே.. வாழ்த்துக்கள் சித்ரா.


    ...... ஆமாம், "படம்" முடிஞ்சிருச்சு! :-)

    ReplyDelete
  57. ஒரு வாரம் போனதே தெரியவில்லை..!

    ரொம்ப அழகா தொகுத்து சொன்னிங்க..!!

    உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  58. அட நானுமா? :)

    ரொம்ப ரொம்ப நன்றி ஆபிசர்.. :)

    ReplyDelete
  59. எல்லாப் புகழும் தங்களுக்கே வழங்கி விட்டதாகக் கடவுள் வந்து கனவில் சொன்னார்.
    அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள் பல!!

    அன்புடன் ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  60. அட... எந்த வேலை குடுத்தாலும் சரியா செய்து முடிப்பதன் பின்னணியில் உள்ள சீக்ரட் எனக்கும் சொல்லி குடுங்க சிஸ்டர் :-)... இந்த வரிசைல நானுமா?!?!? ரொம்ப சந்தோசமா இருக்கு... அதுவும் அந்த டைட்டில்... பிரமாதம்.... நன்றிகளுடன் "தர்மதுரை" ;-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது