07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 27, 2010

ஒரு சாந்தமான ஞாயிறுக்கிழமையில்......!

ஊனாய், உயிராய், ஜீனாய், ரத்தமாய், திசுக்களாய்,குணாதிசயத்தை நிர்ணயிக்கும் குரோமோசோம்களாய், எம்முள் விரவியிருக்கும் எம் மூதாதையர்களுக்கும், நித்தம் சுவாசிக்கும் பிராணின் மூலம் எம்மின் மூளை செல்களின் நினைவுப்பகுதியை செவ்வனே இயக்கி அங்கிருக்கும் செல்களுக்கு உயிரூட்டி நல்ல நினைவுகளை கிளர்ந்தெழச் செய்யும் எம்மைச் சுற்றியிருக்கும் பிரணனுக்கும், தொடருந்து வந்து என்னை பின்னூட்டமென்னும் நெருப்பின் மூலம் ஊக்குவித்த என்னை ஆதரிக்கும் தம்பிகள், நண்பர்கள் தோழிகள் அனைவருக்கும் இந்த ஞாயிற்றுக் கிழமையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனித்து, மறைந்து, மறைந்து, ஜனித்து என்று ஒரு இடைவிடாத ஒரு ஆட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஜனிப்பும் மறைதலின் மாறுவேசம். வாழ்வியல் நெறி போலவே...கடந்த ஞாயிறென்று ஜனித்து... வளர்ந்து... இந்த ஞாயிறு வலைச்சரத்தின் ஆசிரியர் பணியை நிறைவு செய்யும் போது...வாழ்க்கையின் ஒரு சிறு முன்னோட்டம் போலத்தான் எனக்குப் படுகிறது. எல்லா பயணங்களும் ஆர்ப்பட்டமாகத்தான் தொடங்கும்...கூச்சலிலும் மகிழ்ச்சியிலும் ஒரு அழகும் சந்தோசமும் இருக்கும் . காணும் இலக்கின், காட்சியின் சந்தோசத்தை விட... பயணத்தின் போது ஏற்படும் ஒரு மகிழ்ச்சி அதிகமாய் நெஞ்சு நிறைத்திருக்கும். இலக்கு நோக்கிய பயணத்தில்தான் மகிழ்ச்சி.....!

ஆர்ப்பாட்டமாய் தொடங்கிய வலைச்சர கடந்த ஞாயிறு....இன்று...மனதிலொரு அமைதியையும் நிதானத்தையும், பொறுமையையும் கொடுத்து இருக்கிறது. ஏன்? என்ன வென்று சொல்லத்தெரியவில்லை. என்னுடைய வலைப்பக்கத்தில் கூட 75 கட்டுரைகளிலும் எதோ சொல்லத்தான் முயன்றிருக்கிறேன்...இதுவரை சொல்ல நினைத்தது வெளியே வரவில்லை....அது வரும் வரை...எழுத்தும் தொடரும் என்று நினைக்கிறேன்.....! சரி....சரி..சுயபுராணாம் நிறுத்து...அறிமுகங்கள் எங்கே என்றுதானே கேட்கிறீர்கள்....இதோ.....

நான் 9 ஆம் வகுப்பு படிக்கிறேன் என்று அறிமுகம் செய்து கொண்டு நேற்று தனது இரண்டாவது இடுகையை வெளியிட்டிருக்கும் தம்பி யார் வேண்டுமானாலும் உதவட்டும் இவருக்கு, ஏதோ எழுதட்டும் ஆனல் ஒரு 13 அல்லது 14 வயதில் எழுத வந்திருக்கும் சிறுவனைப்
பாராட்டமல் இருக்க முடியாது.

நேற்றுதான் வலைப்பூ தொடங்கினார் இவர் முதல் கட்டுரைதான் எழுதியிருக்கிறார் ஆனால் எழுத்தின் வீச்சில் ஏதோ சாதிக்கப் போகிறார் என்பது மட்டும் எனக்கு பிடிபட்டது. நீங்கள் வேண்டுமானால் போய்பாருங்கள் இவர் ஏதேதோ பேசுவார் உங்களிடம் சுவாரஸ்யமாக.....

இவர் டாகுமெண்ட்ரி படம் எடுக்கும் இயக்குனர் அல்ல...! ஜனரஞ்சகமான ஒரு இயக்குனர்...ஆமாம் சென்டிமென்ட் இருக்கும், ஆக்ரோச சண்டை இருக்கும், காமெடி இருக்கும்..இதுதான் வரும் என்று கணிக்க முடியாத அளவிற்கு வாசிப்பாளனை சந்தோசப்படுத்த நினைக்கும் ஒரு கமர்சியல் பதிவர்தான் சுகுமார்ஜி.

காகித ஓடத்தில்
நம்மை பயணிக்கச் செய்யும் இவரின் கவிதைகளும் கட்டுரைகளும் நமக்குள் ஒரு ஏக்கத்தை வரவழைத்து விடுகின்றன. சப்தமின்றி நமக்குள் பிரளயத்தினை உண்ணு பன்ணக்கூடிய சக்தி மிகுந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரார்.
இவரின் வார்தைகளில் இருந்து பாயும் மின்சாரத்தை சந்தோசமாய் அனுமதித்து அனுபவியுங்கள்!

அரசியல் மற்றும் சமூக பார்வைகளை தம்மிடத்தே கொண்டுள்ள எரிதழல் , இயன்றவரை நடு நிலையான ஒரு நோக்கினை கொண்டிருக்கிறது. சுற்றி நடக்கும் அநீதிகளை தனது வார்த்தை நெருப்பின் மூலம் எரித்து விடய முயல்வது வாசித்துக் கொண்டிரும் போதே புலப்படும்.

யாரப்பா அங்கே...? இளைஞன் என்பதற்கு தவறான ஒரு வயது மதிப்பீடு வைத்திருப்பது...திருத்திக் கொள்ளுங்கள் அது வயது சம்பந்தமானது அல்ல மனது சம்பந்தமானது. சாமியின் மன அலைகள் உங்கல் அனைவருக்கும் ஊடுருவிச் செல்லட்டும். வாழ்க்கையின் அற்புதத்தை, சந்தோசத்தை எப்படி எல்லாம் நிறைவாய் வாழலாம் என்ற பாடத்தை கவனமாய் கற்றுத்தரும்.

ஈழத்திலிருந்து நிறைய தம்பிகள் அற்புதமாய் கவிதை சமைக்கிறார்கள். என்ன தம்பி எங்கே போய்ட்டு வந்தீங்கன்னு கேட்ட... இப்போதான் அண்ணா நைட் கிரிக்கெட் மேட்ச் விளையாடிட்டு வந்தேன் என்று சொல்லிக்கொண்டே...அற்புத கவிதைகளும் கட்டுரைகளும் சமைக்கிறார்க்ள். சந்தேகம் இருந்தால் இந்த தெருப்பாடகனிடம்
கேட்டுப்பாருங்கள்.

சூரியனின் வலைவாசலுக்கு
போனேன் அவர் புதிதாக எழுதிய ஒரு காதல் கவிதையை படித்தவுடன்....மீண்டும் ஒரு முறை பதின்மத்துக்குள் போகமாட்டோமா என்ற ஏக்கத்தில் வெகு நேரம் அமர்ந்திருந்தேன். அப்படி ஒரு இளமை துள்லல். வாசித்து விட்டு நீங்கள் காதலிக்கத் தொடங்குங்கள்...திருமணமானவராய் இருந்தால் மனைவியை..மற்றவர்கள்..உங்கள் இஷ்டப்படி.....

எல்லாம் சரிங்க.... சூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுகள பாத்திருகீங்களா...? இவரின் படைப்பு முழுதும் உற்சாகம் கொப்பளிக்கும்....எப்பவுமே சந்தோசமாவே இருக்கிற ஒரு வாகையான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர். சீரியஸ் மேட்டரா இருந்தாலும்.....ஜாலியா சொல்லிட்டு போய்கிட்டே இருக்காருங்க....டெஸ்ட் பண்ணிப்பாருங்களேன்...ஹா..ஹா..ஹா எனர்ஜி பூஸ்டர்...இவர்!


இன்றைய அறிமுகங்களோடு எனது ஒரு வார ஆசிரியர் பணி நிறைவுக்கு வருகிறது. எனது பசிக்கு ஏற்ற இரையை வலைச்சரம் மூலம் திரு. சீனா ஐயா அவர்கள் கொடுத்தார்கள் அதே நேரத்தில் என் தந்தை ஸ்தானத்திலிருக்கும் திரு. சீனா ஐயாவை வலைச்சரமும் கொடுத்தது. எனவே இரண்டு பக்கமும் மகிழ்ச்சி.

திறமைசாலிகள் ஒவ்வொரு நொடியிலும் பிறந்து கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு வரையும் ஒவ்வொரு விதமான தனித்திறமைகளுடன் பிரபஞ்சம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. கடந்த ஏழு நாட்களிலும் எனக்கு கிடைத்த அனுபவம் என்னை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறது.

ஆக்ரோச பசியோடு வேட்டையாடுமாம் சிங்கம்...தன் இரையை அடைந்தவுடன் பசி தீர்ந்தவுடன்..சாந்த சொரூபியாய்..ஒரு தியான நிலையில் அமர்ந்து விடுமாம். அதற்குப் பிறகு எவ்வளவு பெரிய இரை வந்தாலும் சீண்டிப்பார்க்காதாம். அமைதியாய் தான் உண்ட இரையின் மயக்கத்தில் ஆனந்ததில் இருக்குமாம்....மீண்டும் பசி வந்தால் ஆக்ரோச வேட்டையை தொடங்குமாம். நான் இப்போது ஆனந்த மயக்கத்தில் இருக்கிறேன்.....இப்போது பசிக்க வில்லை...ஆனால் மீண்டும் பசி வருவது இயற்கையின் நியதி.....

எனக்கு ஒரு வாரம் என்ற ஒரு பந்தினை வீசினார்கள்.... நானும் மட்டையைச் சுழற்றி விட்டேன்...பந்து மட்டையில் பட்டது உறுதி, எனது ஆக்ரோசமும் உறுதி...ஆனால் அது சிக்ஸரா..பவுண்டரியா என்று தெரியாது அந்தக் கவலையும் எனக்கு இல்லை... ஆனால் ஆடியகளமும்... நோக்கமும்..என்னை நிறைவாக்கியுள்ளது..!


மீண்டும் அனைவருக்கும் நன்றி கூறி...பணிவான நமஸ்காரங்களோடு.....விடைபெறுகிறேன்....!


அப்போ வர்ட்டா....!

23 comments:

  1. அறிமுகங்கள் அனைத்தும் அற்புதம் ..

    எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்...!!

    கலக்குங்க அண்ணா

    ReplyDelete
  2. புதிய பதிவர்களுக்கு தேவா அண்ணன் அதரவு எப்போதும் இருக்கிறது.....

    ReplyDelete
  3. வாரம் முழுதும் உங்கள் வேலைப்பளுவிற்கு இடையில் மிக நீண்ட அறிமுகம் ..

    எல்லோர் சார்பாகவும் என் நன்றியும் .. பாராட்டும்..

    ReplyDelete
  4. அருமையான வாரமாக இருந்துச்சு.

    இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  5. Thanks to cheenaa sir given chance to dhevan.thanks for cheenaa sir again release dhevan because we want to read aathmaavin payanam.cheenaa sir wonderful job.-shysian

    ReplyDelete
  6. நேற்று ஆசிரியர் பதவியேற்றது போல இருந்தது.அதற்குள் ஒருவாரம் ஓடிவிட்டதா? உங்கள் உழைப்பின் அருமை அனைவரும் அறிய உங்களுக்கு வாய்ப்பு கொடுத்த இணையத்தாருக்கும்,கடின உழைப்பினால் அனைவருடைய இதயத்திலும் இடம் பிடித்த உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இது போன்ற இன்னும் பல பதவிகள் உங்களை தேடிவரும் வரட்டும் என்ற வாழ்த்துகளுடன் விடைபெறுகிறேன் நானும்...நன்றி

    ReplyDelete
  7. எனக்கு ஒரு வாரம் என்ற ஒரு பந்தினை வீசினார்கள்.... நானும் மட்டையைச் சுழற்றி விட்டேன்...பந்து மட்டையில் பட்டது உறுதி, எனது ஆக்ரோசமும் உறுதி...ஆனால் அது சிக்ஸரா..பவுண்டரியா என்று தெரியாது அந்தக் கவலையும் எனக்கு இல்லை... ஆனால் ஆடியகளமும்... நோக்கமும்..என்னை நிறைவாக்கியுள்ளது//

    இதில் என்ன சந்தேகம் நீங்கள் ஆறு பந்தில் ஆறு six அடித்து உள்ளிர்கள்

    ReplyDelete
  8. உண்மையாகவே அருமையான ரசனையான இடுகைகளை தந்த வாரம்

    ReplyDelete
  9. வித்தியாசமா கதைகளூடவே விதம் விதமா அறிமுக படலம் .ஒரு வாரம் போனதே தெரியல பாஸ். கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  10. அறிமுகம் அருமை. நம் நண்பர்கள் அருண் மற்றும் வெங்கட்டை அறிமுகப் படித்தியதற்க்கு நன்றி அண்ணா.

    ReplyDelete
  11. எனக்கு ஒரு வாரம் என்ற ஒரு பந்தினை வீசினார்கள்.... நானும் மட்டையைச் சுழற்றி விட்டேன்...பந்து மட்டையில் பட்டது உறுதி, எனது ஆக்ரோசமும் உறுதி...ஆனால் அது சிக்ஸரா..பவுண்டரியா என்று தெரியாது அந்தக் கவலையும் எனக்கு இல்லை... ஆனால் ஆடியகளமும்... நோக்கமும்..என்னை நிறைவாக்கியுள்ளது..!


    ....... பதிவுலக சச்சின் மாதிரினு சொல்லணுமா? ஹா,ஹா,ஹா,ஹா,.... பின்னி பெடல் எடுத்துட்டீங்க!

    ReplyDelete
  12. மிக சிறப்பான/ நிறைவான வாரம் தேவா!

    உங்களுக்கும் சீனா சாருக்கும் நன்றி!

    ReplyDelete
  13. அன்பின் தேவா

    அருமை அருமை - கடைசி நாளன்று பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்தது நன்று - நல்ல முறையில் சென்ற இடுகை இது.

    நல்வாழ்த்துகள் தேவா
    நட்புடன் சீனா

    ReplyDelete
  14. புதியவர்களை அறிமுகம்(என்னையும் அறிமுகம்) செய்தற்கு வாழ்த்துகளும் நன்றியும்.

    " இதில் என்ன சந்தேகம் நீங்கள் ஆறு பந்தில் ஆறு six அடித்து உள்ளிர்கள் "

    அது ஆறு சிக்சர் இல்லங்க, அண்ணே ஒரு சிக்சர் அடிச்சா அந்த பந்து ஆறு பந்த மாறி ஆறு சிக்சர் ஆகிடும். அதனால அண்ணே அடிச்சது 36 சிக்சரு.

    ReplyDelete
  15. சூரியனுக்கே டார்ச் அடிக்கிற
    பயக நாம தான்..
    ஹி., ஹி.., ஹி...!!

    அருமையான அறிமுகம்..

    என்ன பாஸ் பண்றது..?
    தமாஷா சொல்றதை சீரியஸா
    எடுத்துக்கறதை விட
    சீரியஸா சொல்றதை தமாஷா
    எடுத்துக்கறது Better இல்லையா..!!

    அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. எங்கள் தேவா அண்ணாவுக்கு இன்னும் ஒரு வாரம் கொடுக்கலாமே சீனா அவர்களே, அவ்வளவு அழகான எழுத்துநடையில் பிரமாத படுத்தி இருக்கிறார் தேவா அண்ணா, இருந்தாலும் எனக்கு சின்னதா சந்தோசம் என்ன அப்டினா அண்ணா இனி அவரோட வலைதளத்துல ஒழுங்கா, தொடர்ச்சியா பதிவா போடுவாரு இனிமேலே..ரொம்ப சந்தோசமா இருக்கேன்...வாங்க சீக்கிரம் உங்க வலைதளத்துக்கு அண்ணா ....நான் ரொம்ப மிஸ் பண்றேன் உங்க வலைதளத்துல....எப்பவும் போல இன்னைக்கும் அசத்தி இருகீங்க ,
    //எங்கள் தேவா அண்ணாவுக்கு இன்னும் ஒரு வாரம் கொடுக்கலாமே சீனா அவர்களே, அவ்வளவு அழகான எழுத்துநடையில் பிரமாத படுத்தி இருக்கிறார் தேவா அண்ணா, இருந்தாலும் எனக்கு சின்னதா சந்தோசம் என்ன அப்டினா அண்ணா இனி அவரோட வலைதளத்துல ஒழுங்கா, தொடர்ச்சியா பதிவா போடுவாரு இனிமேலே..ரொம்ப சந்தோசமா இருக்கேன்...வாங்க சீக்கிரம் உங்க வலைதளத்துக்கு அண்ணா ....நான் ரொம்ப மிஸ் பண்றேன் உங்க வலைதளத்துல.... //

    அருமையா இருக்கு அண்ணா, நீங்க கலக்குங்க அண்ணா

    ReplyDelete
  17. ஒருவாரம் ஒடிருச்சா அதுக்குள்ள. நன்றின்னா. எத்தனை அற்புதமான அறிமுகங்கள். அனைத்து அறிமுகங்களும் சூப்பர்.
    நல்லா ரெஸ்ட் எடுங்க.

    ReplyDelete
  18. உங்கள் பணியை நிறைவாய் முடித்ததற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்...!!
    அற்புதமான அறிமுகங்கள்

    ReplyDelete
  20. மாம்சு....கைகுடுங்க... நல்லபடியா சீனா அய்யாவின் வேண்டுகோளை நிறைவேத்திட்டீங்க... இந்த வார அறிமுகம் அருமை... :))

    ReplyDelete
  21. பின்னூட்டமிட்டு ஆதரவு தெரிவித்த அத்துனை பேருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  22. மறைவில் இருந்த இந்த சூரிய வலைவாசலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தேவாவிற்கும் வலைச்சரத்திற்கும் நன்றி.

    இளமை துள்ளலோடும் உங்கள் ஆதரவோடும் தொடர்ந்து எழுதுறேங்க

    ReplyDelete
  23. "தேவாவின் வ‌லைச்ச‌ர‌ வார‌ம்" ப‌ல அரிய‌, எளிய‌ த‌ல‌ங்க‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தி அம‌ர்க‌ள‌ப்ப‌டுத்தி இருக்கிற‌து. இது தேவாவின்(க‌ழுகின்)ப‌ர‌(ற)ந்த தேட‌லின் வீரியத்திற்கான‌ சான்று, சீனா சாருக்கு சிற‌ப்பான வாழ்த்துக்க‌ள்,இத்த‌கையோரை தேடி இன‌ங்க‌ண்டு வாய்ப்ப‌ளித்து, சிறப்பித்து, வ‌லைதள‌த்தை வ‌ள‌மாக்கும் சேவைக்காய்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது