கலக்கல் புதனில் வலைச்சர அவை கூடியது....!
ஃப்ளாஸ் பேக்:
தனியா பிளாக் வச்சி என்னவேன்னா நீ செய்யலாம்யா...ஒரு வாரம்...ஒரே வாரம் வலைச்சரத்துக்கு ஆசிரியரா இருந்து பாரு.....பதிவர்களையும் பதிவுகளயும் அறிமுகப்படுத்து....அப்போ தெரியும் இந்த ஆசிரியர் பதவி ஒரு முள் படுக்கை...இது உன்னால முடியாதுன்னு..... சொன்ன(சும்மா காமெடிக்கு தாங்க சொல்றேன்...! முழு சுதந்திரமும் ஆதரவும் கொடுக்கிறவர் ஐயாதான்) சீனா ஐயாவிடம் சபதம் போட்டு பில்டப் எல்லாம் கொடுத்து வலைச்சரத்துக்குள்ள வந்தாச்சு....... ! நைட் புல்லா தூங்காம டீரீம் அடிச்சதுல கிடைச்சதுதான் இந்த தீம்.........
வாங்க தீம் குள்ள போவோமா....
ராஜாதி ராஜா ராஜ மார்த்தாண்ட.." யோவ் யாருய்யா பில்டப் எல்லாம்... அது எல்லாம் ஒண்ணும் வேணாம்"
"....மன்னர் மருதுபாண்டி...வாழ்க..வாழ்க" அட எங்கயா போனீங்க எல்லாம் கூட்டத்த கண்ரோல் பண்ணுங்கப்பா...
ம்ம்ம்ம்...வலைச்சர அவை கூடட்டும்.......யாரங்கே...ஓ...காவாலாளி கபாலியா..ஏய்யா...எங்கய்ய அந்த அமைச்சர் புலிப்பாண்டி....? ....இதோ வந்து விட்டேன் மன்னா...கத்திக்கொண்டே ஓடிவருகிறார் நமது புலிப்பாண்டி.
ம்ம்ம்ம்ம் மன்னன் நான் வந்துவிட்டேன்.. நீ...தாமதமா? ஏய்யா லேட்டு....? மெதுவாய் சொன்னார் நம்ம பு.பா(புலிப்பாண்டி) இதுதான் மன்னா நடந்தது....! அட என்னய்யா நடந்தது...? ......மன்னா இதுதான் நடந்தது....!யோவ் பு.பா...என் பொறுமையை காலையிலேயே சோதிக்கிறாயா....தெளிவாகச் சொல்கிறாயா..இல்லை.....
இதுதாங்க நடந்துச்சு...பாலாசி எழுதியிருக்கிறாரே மன்னா அது நடந்துச்சு....! ஓ அப்படி விவரமா சொல்லிய்யா மட மந்திரி.
சரி... மாதம் மும்மாரி பொழிகிறதா...? ....பொழிகிறது மன்னா....ஈரோடு பக்கம் நல்லாவே பொழிகிறது.....! அது என்னய்ய ஈரோடு பக்கம் மட்டும்...ஸ்பெசல்....! மன்னா....ஈரோடு கதிரின் கோடியில் இருவர் படியுங்கள் தெளிவாக புரியும்..! மட மந்திரி நான் ஏற்கெனவே படித்துவிட்டேனய்யா..சரி..அதில் பிரதி எடுத்து... நாடு முழுவதும் பின்பற்றச் சொல்லி கெடுபிடி உத்தரவிடு....! .....சரி மன்னா !
ம்ம்ம் வேறு ஏதாவது செய்திகள் அமைச்சரே..!
நிறைய செய்திகள் இருக்கிறது மன்னா...வெள்ளையர் தேசத்தில் வசிக்கும் நமது நாட்டு பெண்ணொருத்தி வெட்டிப்பேச்சு என்று தலைப்பிட்டுக் கொண்டு... மிகச்சிறந்த கருத்துக்கள் கூறுவதாக நமது ஒற்றன் பாணன் கூறியுள்ளான் மன்னா...
அட...அப்படிய.. சிறப்பாய் ஏதாவது ஒன்று கூறும்....
இருக்கிறது மன்னா... நல்லது, கெட்டது தெரியுமா? என்று நம்மையே கேள்வி கேட்டு வாழ்வியல் சூத்திரங்களை சொல்வதாகக் கேள்வி......!
ஹா.. ஹா....ஹா...பலே...பலே...பலே....அமைச்சரே....இன்னும் கூறும்...வேறு...
பலாப்பழத்தில் பட்டறை நடத்திக் கொண்டிருக்கும் சங்கர் என்ற நமது தேச குடிமகன்...யாரும் சாமியாரக போகக்கூடாது என்றே...ம்ருதுளா என்று ஒரு கதை படைத்திருக்கிறார்!
நல்ல கருத்தய்யா... நானும் படித்திருக்கிறேன்....!
மன்னா... இப்போது எல்லாம் சிறு பிள்ளைகளை வேலைக்கு வைப்பது நமது தேசத்தில் குறைந்துள்ளது....குறிப்பாய் இந்த பட்டாசு தொழிற்சாலையில் நடக்கும் செய்திகளை கொலைகாரர்களாய் நாம் .. என்ற தலைப்பில் LK என்பவர் கவிதை வடிவில் சொல்லியிருக்கிறார்....அதற்கு பிறகு எல்லோருக்குமே பயம் மன்னா....!
சபாஸ்....இப்படி மக்களுக்குள்ளேயே விழிப்புணர்வூட்டிக் கொள்ளும் நிகழ்வுகள் நிறைய நிகழ வேண்டும்...ஆமாம் அமைச்சரே....இந்த திருநங்கையர் பற்றி விழுப்புணர்வூட்டச் சொல்லியிருந்தேனே...அது சம்பந்தமாக ஏதாவது.....
இருக்கிறது மன்னா... விஜய் என்றொரு தம்பி....நானும் உங்களை மாதிரி தானுங்க ...... என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்...அட்டகாசமான விழிப்புணர்வை அந்தக் கட்டுரை கொடுத்துள்ளது மன்னா..மேலும் விவசாயிகளுக்காக செளந்தர் என்ற தம்பி உழவனின் எதிர் காலம் கேள்விக்குறியா?? என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும் விவசாயிகள் மத்தியில் கடும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது... மன்னா...!
சரி... அமைச்சரே.. பசி வயிற்றைக்கிள்ளுகிறது... நான் உணவருந்திவிட்டு வருகிறேன்.... நீயும் உணவருந்தி விட்டு வாரும்... நான் எப்போது வருகிறேனோ அப்போது எல்லாம் அவை டக் டக் என்று கூடட்டும்..சரியா.....! அப்புறம் ஒரு விசயம்... இப்போது எல்லாம் உணவருந்தும் முன் நமது சமையலாரர் மணியண்ணா? உணவருந்தி விட்டாரா என்று கேட்டுவிட்டுதான் சாப்பிடுகிறேன்... எல்லாம் நம்ம பாமரன் கொடுத்த அறிவுதான்....ஹா...ஹா...ஹா...!
(அவை தற்காலிகமாக கலைகிறது)
"
"
"
சில மணி நேரங்களுக்குப் பிறகு...
ஓ.. உணவு இடைவேளைக்குச் சென்று திரும்பும் நேரத்தில் கட்டையை சாய்த்துக் கொண்டு என்னய்யா எல்லோரும் உறக்கம்...
அவை கூடட்டும்..அட...அவை கூடட்டும்...அட பாவிங்களா....எந்திரிங்கடா....!
விழித்துக் கொண்ட அனைவரும்...மன்னர் மருது..பா... என்று ஆரம்பிக்க...ஏய்... நிறுத்துங்கள் உங்கள் பில்டப்புகளை! மந்திரியாரே...மாதம் மும்மாரி பொழிகிறதா...? மந்திரி பு.பா தலையைச் சொறிந்த படி...மனதுக்குள் அடங்கொய்யால ஒரு நாளைக்கு எத்தன தடவ கேப்ப...என்று நினைத்தவராய்..மன்னா மார்னிங்லேயே அப்டேட் பண்ணிட்டேனே பாஸ் என்று பாதி தூக்கத்தில் உளறினார்.
யோவ்...பு.பா.. நீ நகரு... எங்கே நமது கவிஞர் கடலை முத்து....? வந்தேன் மன்னா கேட்டு முடிக்கும் முன் வந்து நின்றார் கடலை...! யோவ் கடலை அரசவை இணையத்தில் எழுத பதிவர் பட்டியல் கேட்டேனே என்ன ஆச்சு.... ?
அது..ரெடி மன்னா...
இதைக் கொஞ்சம் படி மன்னா..
ம்ம்ம் நீயே கூறும் வாசிப்பு திறன் அதிகமிருந்தால் உம்மை எதற்கு வேலைக்கு வைக்கிறேன். நீ படி.... நான் கேட்கிறேன்....சரியா.... ஆணையிட்டார் மருது பாண்டி....கவிஞர் கடலை தொடங்கினார்....
கவிதை...அதுவும் செந்தமிழில் கவிதை தொகுக்க நேசமித்திரன் என்றொரு கவியை கண்டுபிடித்துளேன். தமிழில் விளையாடவும் தமிழோடு விளையாடவும் நன்கறிந்த புலவர் இவர்.
ஹா...ஹா...ஹா...பலே...பலே...சில காதல் கவிதைகள் சொல்லுமய்யா.. அந்தபுரத்தில் நுழைந்தால் ஒரே ஏச்சும் பேச்சுமாயிருகிறது ரசனை இல்லை என்று குறை. மனப்பாடம் செய்தாவது போய் அசத்துகிறேன்.
மன்னா.... பனித்துளி சங்கர் என்றொருவரை காதல் கவிதைகள் சொல்லவே அழைத்துள்ளேன்.... ! பாருங்கள் இனி அந்தபுரமே கதிஎன்று இருக்கப்போகிறீர்கள்
ஹி....ஹி....ஹி.....இருக்கட்டுமய்யா.... வேறு ஏதேனும்......
மன்னா அகல்விளக்கு என்ற பெயரில் எழுதி வருகிறார் ராஜா என்று ஒருவர்....சீனாவில் மஞ்சள் ஆற்றங்கரையில் நடந்த கொடூரத்தின் அவலத்தை கவிதைகளில் கொண்டு வந்துள்ளார்... இவரும் நமது கவி செய்யும் கொட்டாரத்தில் இருப்பார் மன்னா.
நல்லது....... நல்லது...சரி நாளை விடிவதற்குள் அரசவை இணையத்தில் எல்லாம் வந்தேற வேண்டும்....வலையேற்றம் செய்வதில் ஏதாவது பிரச்சினை என்றால் நமது ஆஸ்தான கணினி புலி சூர்யா கண்ணனிடம் ஆலோசனைகள் கேட்டுக்கொள்ளும்!
சரி நீர் செல்லும்....! கடலை முத்து சென்று அமர...மந்திரி பு.பா எழுகிறார்.
யோவ் பு.பா..ரொம்ப டயர்டா இருக்குய்யா.... நான் சென்று அந்தப்புரத்தில் ஓய்வெடுத்துக்கொள்கிறேன் அட பாவி மனுசா..இப்பதானே வந்த...அதுக்குள்ளயா டயர்டு?....மன்னராச்சே...)
யோவ் மந்திரி நான் டயர்டு என்கிறேன்... என்ன யோசனை...? ஆமா தொடர் எழுதுவதற்கு ஒருத்தரை கேட்டிருந்தேனே....
ஹே...ஹே...ஹே...மன்னா இதுதானே வேணாம்கிறது..... நீங்கள் கிளம்புகள் மன்னா...இல்லை என்றால் இங்கேயே தொடரும் போட்டு விடுவீர்கள்.......!
மன்னர் மருது பாண்டி வாழ்க..வாழ்க.....! (அட நிறுத்தங்கப்பு...முன்னால வாழ்கன்னு சொல்லவேண்டியது பின்னால ஆப்பு அடிக்க வேண்டியது....எமக்குத்தெரியாத அரசியலா.....)
பின் குறிப்பு: மனதில் தாக்கங்கள் ஏற்படுத்தும் பதிவுகளை வகையிட்டுள்ளேன்!
அப்போ நான் வர்ட்டா.....!
|
|
அசத்தல்னா. நல்ல அறிமுகங்கள். தொடருங்கள்.
ReplyDeleteஅட !! நன்றி தேவா
ReplyDeleteகலக்குங்க!
நல்ல அறிமுகங்கள்
ிறைய செய்திகள் இருக்கிறது மன்னா...வெள்ளையர் தேசத்தில் வசிக்கும் நமது நாட்டு பெண்ணொருத்தி வெட்டிப்பேச்சு என்று தலைப்பிட்டுக் கொண்டு... மிகச்சிறந்த கருத்துக்கள் கூறுவதாக நமது ஒற்றன் பாணன் கூறியுள்ளான் மன்னா...
ReplyDelete....... எம் பேச்சை ஒட்டு கேட்கும் மன்னா...... உமக்காக குறும் ஓலைகளில் எம் பேச்சை அனுப்பி இருக்கிறோம்.....
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....
அறிமுகப்படுத்தும் விதம், நல்லா இருக்குது தேவா.... பாராட்டுக்கள்!
என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
nalla pagivu
ReplyDelete-moorthi
அருமை அருமை . வாசித்த பதிவுகளாயிருந்தாலும் அறிமுகங்கள் அருமை
ReplyDeleteநன்றி நண்பரே . இன்றைக்கும் நல்ல அறிமுகம்கள் தலைவர போல நல்ல கலக்குங்க தேவா
ReplyDeleteஅன்பின் தேவா
ReplyDeleteஇன்று புதுமை - கலக்கல் - அறிமுகங்கள் அருமை - அததனையும் முத்துகள். தெரிந்தது தான் எனினும் இப்வ்விடுகைகள் படிக்க விட்டுப் போனதாக இருக்கலாம். செல்கிறேன் - படிக்கிறேன் - ரசிக்கிறேன் - வருகிறேன்
நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா
மிக்க நன்றி தேவா :)
ReplyDeleteமிக்க நன்றி தேவா :)
ReplyDeleteஹா..சிரிப்புடன் சொன்ன விதம் அழகு..
ReplyDeleteநீங்கள் கலக்குங்கோ தேவா அண்ணா. நன்றி அண்ணா
ReplyDeleteஒரு வித்தியாசமான தொகுப்புக்களை கொடுத்துக்கொண்டிருக்கும் தேவாவுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅண்ணா ரொம்ப நன்றி இந்த கத்துக்குட்டியையும் அறிமுக படுத்தியதற்கு...அனைவரையும் அறிமுக படுத்த நீங்கள் பூ கோர்க்கிற மாதிரி எழுத்துக்களை கோர்த்து மணக்க செய்து இருக்குறீங்க அண்ணா ...நிஜமா உங்களுக்கு நிறையா திறமை இருக்கு, அவற்றை ஒன்னு ஒண்ணா தூள் பறக்க செய்யுங்க ...நாங்க வாழ்த்திக்கிட்டே இருக்கோம் ....நீங்க கலக்குங்க அண்ணா
ReplyDeleteஅண்ணே அறிமுகம் நல்லாருக்கு.
ReplyDeleteநீங்க எப்பவுமே கலக்குறீங்க அண்ணா ...! சும்மா அதிருற மாதிரி எழுதுங்க ... வர்ட்டா ...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள். தொடரட்டும் உங்கள் ஆசிரியர் சேவை.
ReplyDeleteமிக்க நன்றிங்க தேவரே.... மன்னரும் அமைச்சருமா சேர்ந்து இந்த புதனை கலக்கியிருக்கீங்க...நல்ல அறிமுகங்கள்...
ReplyDeleteஅருமை அருமை கலக்குங்க!
ReplyDeleteநன்றி நண்பரே
அருமையான அறிமுகம் முதல்வன் ஸ்டைல்-ல யாருக்கும் மெமோ கொடுக்க மாட்டீங்களே .
ReplyDeleteநல்லா அறிமுகம் கொடுத்திருக்கீங்க தேவா.
ReplyDeleteமாம்சு... இன்னா நடக்குது இங்கே...... வலைச்சரத்துக்குள்ள வநத்ா ஆளுக்காளு பட்டத்து ராஜாவாகிடறீங்க.... ஓகே... ஓகே...
ReplyDeleteஒரு புனைவுகதை எழுதலாம்னு இருக்கே மாம்ஸ் கதை பேரு கூட... சொறி...ன்னு ஆரம்பிக்கும்.
எழுதவா வேண்டாமா? மாம்ஸ்..... :)))
நன்றி தேவா:)
ReplyDeleteoru comment pottaaleh meendum meendum padikkira
ReplyDeletealpam naangal, neengal seythirukkum workout in worth
therigirathu but ungalai poruthavarai ithu oru saatharanamaana
chewingum saapidrah velah endru ganikka mudigirathu
"mannaaa idam maariyathu vaarthai parimaatram mattumalla
nam natpu kanigalumthaan"ha ha ha
புதுமையான முறையில் அறிமுகங்கள் அனைத்தும் அசத்தல் . என்னையும் காதல் கவிதை எழுத அழைத்து இருக்கிறீர்கள் நன்றி ! தொடரட்டும் உங்களின் வெற்றிப் பயணம் .
ReplyDeleteகாவியப் புதன் அருமை ... பதிவர்களுக்கும்.. தேவாவுக்கும் பாராட்டுக்கள் ....
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க தேவா..! உங்களுக்கு பிடிச்சிருக்க பதிவு எல்லாமே சூப்பர்-ஆ இருக்கு :)
ReplyDelete