07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 30, 2010

வலைச்சரம் - நான்காம் நாள் - வியாழன்

மதனும் ஆட்காட்டி விரலும்

மதன்,

நாங்க அஞ்சுபேர் மதன். நான் நடுவில். ரெண்டு அக்காக்கள், ரெண்டு தங்கைகள். ("போச்சுடா.. ஆரம்பிச்சிட்டார்யா, வெண்ரு" வென.. மணிஜி, d.r. அசோக் மாதிரி ஆட்கள் செறுமிக் காட்டுவார்கள்...காதில் வாங்க வேணாம். சரியா?) நாங்க அஞ்சு பேரும் கையில் உள்ள விரல்கள் போல என எடுங்களேன்.

நான் நடு விரல். கட்டையும், ஆட்காட்டியும் அக்காக்கள். மோதிரமும், சுண்டும் தங்கைகள். அதாவது மற்றவர்களை விட நான் உசரம். இப்படித்தான் ரொம்ப நாளாக நினைச்சுக்கிட்டு இருந்தேன். இதற்கு ஆப்பு வைத்தாள் புனிதாக்கா. ரெண்டாவது அக்கா (ஆட்காட்டி).

இருவருக்கும் நடந்த சண்டையில் நான் சிலேட்டை வச்சு மண்டையில் போட்டுட்டேன். ரத்தம் வரும் என்றெல்லாம் அப்போ தெரியாது மதன். காப்பித்தூள், சீனி என என்னென்னவோ அணை போட்டு பார்த்தாள் அம்மா. ஜம்பம் பலிக்கலை. தையல் போட வேண்டியதாகிப் போனது.

அப்பா வந்ததும் 'முள் கிரீடம்' தரித்த இயேசுவை பார்த்து விட்டார். " சேந்தியில் இருந்த வாளியை இழுத்திருக்கா, மண்டையில் விழுந்திருச்சு" என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அக்கா (ஆட்காட்டி) கட்டுச்சோற்றை அவிழ்த்து விட்டாள். சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்த அப்பா, நிதானத்திற்கு வந்தார்.

"வாடா" வென கை பிடித்து அழைத்துப் போனார். நடு ஹாலில் அமரச்செய்தார்(சம்மணம் கூட்டி). சகோதரிகளையும் அழைத்தார். "கையை கட்ரா" என்றார். நானும் விவேகானந்தர் சைசுக்கு கட்டி வைத்தேன். ஒரு சாதனத்தை எடுத்து அக்காவிடம் கொடுத்தார். (சாதனமா?.. தென்ன ஓலையின் நடுவுல குச்சி இருக்கும்ல பாசு... எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து கட்டி வச்சுருப்பாங்களே...அட, வீடு கூட கூட்டுவாங்களே...(ஹி..ஹி..இப்பவும் பெயர் சொல்ல கூச்சம்தான் மதன்)

"நச்சுன்னு நடு மண்டையில் போடு" என்றார்.

அக்கா அழத் தொடங்கிவிட்டாள். மற்ற சகோதரிகளும்! ஏன்...அம்மாவும் கூட! "நீ போடலைன்னா நான் போடுவேன்" என்றார். அக்கா பொத்தினாப்பில் போட்டாள். "இதுவா நச்சு?" என்றவர், "சத்தம் எனக்கு கேட்கணும்" என்றார். ஏழெட்டு அடி அக்கா அடித்துப் பார்த்தாள். அப்பாவிற்கு திருப்தியாகல போல. சாதனத்தை வாங்கிய அப்பா, போட்டார் ஒரு போடு.

சித்தம் கலங்கிப்போனது.

"நாலு புள்ளைகளும் எனக்கு எப்படியோ, அப்படித்தான் நீயும்" என்றார். அன்று தொட்டு இன்று வரையில் விரல்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் மதன். எந்த விரல் நான் என? (சித்தம் கலங்கியதால் கூட இருக்கலாம்).

அப்படி, ரியாத்திற்கு பயணமான ஒரு நாளில், காரில்... சும்மா அசால்ட்டா, உங்க 'உறங்கி விழித்த வார்த்தைகளை' கையில் எடுத்தேன். பயணத்தில் இருப்பது, கூட வந்த பிலிப்பினோ நண்பர்கள், முன்பு பார்த்த ரோடு, பாலை, ஒட்டகங்கள், பெட்ரோல் பல்க், இப்படி எல்லாமே out of focus ஆக தொடங்கியது.
அக்காவும், அப்பாவும் அடித்தது போல் அடித்துக் கொண்டே வந்தீர்கள். அதே சாதனம். அதே அடி.

ஒரு கவிதையில் இருந்து மற்றொரு கவிதைக்கு தாவ இயலவில்லை. மூணரை அல்லது நாலுமணி நேரம் ஆகும் கோபாரில் இருந்து ரியாத்திற்கு. தொகுப்பும், அதிர்வும் முடிஞ்ச பாடில்லை. ரியாத்தில் இறங்கியதும், அழை பேசியில் உங்கள் குரல் கேட்டதும் தான் ( அந்த நேரத்தில் அவ்வளவு தேவையாக இருந்தது உங்கள் குரல்) உதறல் சமனுக்கு வந்தது. முதல் தொகுப்பாயா இது உமக்கு?

hats off madhan!

***

சரி, இனி தொகுப்பிற்கு வரலாம்.

"அன்றாடங்கள் பரிசளிக்கும் கோபம், பரிதாபம், இயலாமை, ஆற்றாமை, இன்ன பிற போன்றவைகளக் கொட்டி வைக்க கவிதைகளை விட தோதான இடம், பாதுகாப்பான இடம் வேறேதும் இருக்க முடியுமா?" என்கிற உங்கள் 'என்னுரை' கேள்வி ரொம்ப பிடிச்சிருந்தது.

"மனதின் அழுக்குகளையும் கருங்கசடுகளையும் போகிற போக்கில் தெறித்து விட்டுச் செல்லும் பாங்குடன் சில கவிதைகளும், அன்றாட சுக துக்கங்களின் பிதுங்கலோடு வெளிப்படும் சில கவிதைகளும், இந்த தொகுப்பில் என்னை கவர்கின்றன." என்றும், இன்னும் அழுத்தமாகவும், ஊடுருவும் திறனோடும் கவிதைகளை அணுகி இருந்த வா. மணிகண்டனின் முன்னுரை பார்த்து ஒரு மாதிரியான கிடு, கிடு எனக்கு.

இனி, இவரின் மூன்று கவிதைகள் ("என்னடா இவருக்கு மட்டும் மூணு?" என்று கேட்கலாம் லா & வி! போகட்டும்...கடைக்குட்டி! means, கடைசி புத்தகப் பார்வை...)

***

குறிப் பிறழ்வும் குப்புற படுத்தலும்

அவசரமாய் பகுடர் அப்பி
உதட்டில் இழுக்கியிருக்கும்
அடர் சிவப்பு கன்றாவி தொட்டெடுத்து
நெடுஞ்சாலை முற்சந்தின் மங்கல் இருட்டில்
தொழிலுக்கு முதல் போடுகிறார்கள்
ஒரு ஆறேழு திருநங்கைகள்.

பிறழ்ந்த குறியால்
நிகழ்ந்த குற்றத்தை
கழுவ வழியில்லாக்
கேடு அவர்களுக்கு.

சமூகம் செத்தால் சாகட்டும்.

பெற்றவர்களும் புறந்தள்ளிய வலி
குப்புற படுத்தெந்திருப்பதை விட
அதிகமில்லை.

***

இன்று காலை காற்றடித்ததே பார்த்தீர்களா ?


வெயிலில்லாத இன்று காலையில்
நான் காற்றடித்ததை பார்த்தேன்.

ஓடி வந்து கட்டிக் கொண்ட
குழந்தையை ஒத்து
மெதுவாய் துவங்கி
ஆவர்த்தன வேகமெடுத்து
ஆச்சரியம் சுரந்தூரியது எனக்குள்

உங்களுக்கு தெரியாது...

எத்தனை ஆண்டுகளுக்குப் பின்
இன்று காற்றடித்தது என்று
அதுவும் அத்தனை இதமாக
அத்தனை மிருதுவாக
சுற்றியிருத்த செடி கொடி மரங்களின்
காற்றுக்கு ஆடும் தன்மை
எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது.

அவைகளும் சந்தொஷித்தன
காற்றைக் கண்டு
எப்படி வளர்ந்து விட்டது
தெரியுமா அது
இத்துனூண்டில் பார்த்தது

அப்படியே பாவாடையைப்
பரப்பிக் கொண்டு வந்து
இருப்பது இல்லாதது
என்று எல்லாவற்றையும்
அள்ளிக் கொண்டு போனது.

காற்றை நோக்கிய
இன்று காலைய புன்னைகதான்
என்னுடைய மிக அழகானதாக
இருக்கக் கூடும்.

அதுசரி...
நான் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன்.

நீங்கள் காற்றை பார்த்தீர்களா?

***

பாடம்

சொட்டிச் சொட்டி
வீணாகாமல் இருக்க
நீர்க் குழாயின் கைப்பிடியை
இறுக்கி இறுக்கி
மூடி வைத்ததிலோ என்னவோ
திடீரென ஓர் நாள்
மரை தளர்ந்து விட்டது.

குழாயை மூடுகையில்தான் புரிகிறது
எந்தப் புள்ளியில்
இறுக்குதல் நிறுத்தப்பட்டிருந்தால்
நீரும் ஒழுகாது
மரையும் மழுங்காது
என்பது.

***

ஆயிற்று. இன்னும் கைவசம் காந்தியின் கூர்தலறம் பாக்கி. இன்னும் வாசிக்கலை என்பதால் பகிர இயலாது. வாசித்ததும் பகிரலாம்.

"நம்மாளுங்களும் அச்சில் பார்க்கட்டும் அவர்கள் எழுத்தை" என நினைத்த, முனைந்த, நண்பர்/பதிவர்/பதிப்பகர் வாசு (எ) அகநாழிகை பொன். வாசுதேவன் அவர்களுக்கு மிகுந்த நன்றியும் அன்பும் மக்கா!

பதிவ நண்பர்களான நர்சிம், கேபிள்ஜி, பரிசல் தொகுப்புகள் நண்பர் சரவணனிடம் இருக்கிறது. அவர் வாசித்து, கைவசம் வந்ததும் பகிர விருப்பம். பார்க்கலாம். எல்லாம் கூடி வரட்டும்.

சரி மக்கா, நாளை பார்க்கலாம்...

***

27 comments:

  1. மாம்ஸ் இன்னிகும் வந்தாச்சு முதல் ஆளா. நல்ல இருக்கு பதிவு இன்னிக்கும்

    ReplyDelete
  2. மூன்று கவிதைகளும் என்னவோ செய்யுது மனச.

    ReplyDelete
  3. அன்றாடங்கள் பரிசளிக்கும் கோபம், பரிதாபம், இயலாமை, ஆற்றாமை, இன்ன பிற போன்றவைகளக் கொட்டி வைக்க கவிதைகளை விட தோதான இடம், பாதுகாப்பான இடம் வேறேதும் இருக்க முடியுமா?

    உண்மைதான். அருமை பா.ரா

    ReplyDelete
  4. கவிதைகள் - உணர்வுகளின் வடிகால்..... ம்ம்ம்ம்..... அருமை.

    ReplyDelete
  5. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

    பகிர்ந்த மூன்று கவிதைகளுமே அருமை.

    நர்சிம், கேபிள், பரிசல் எல்லோரும் வெயிட்டிங். இந்த வாரம் கோபர் வரும்போது உங்களிடம் சேர்த்துவிடுகிறேன் அவர்களை.

    நல்ல பகிர்வுக்கு நன்றி மக்கா.

    ReplyDelete
  6. பா.ரா அணணே,

    கதை சொல்லி அறிமுகப்படுத்திய விதம் அருமை.

    முதல் கவிதை உலுக்கி விட்டது!

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  7. அன்பின் பா.ரா. வெறும் வாய் வார்த்தைக்கு சொல்லவில்லை. இந்தத் தொகுப்பிற்காகக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு உங்களிடமிருந்துதான் வந்தது. இந்தப் பதிவு அதற்கு இன்னுமொரு சாட்சி.

    என் வயதுக்கு குருவி தலைப் பலாக்காயாக உணர்கிறேன் இந்தக் கணத்தை. உங்கள் வார்த்தைகள் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளன. நன்றி என்பது வெறும் சொல்லாகத்தான் படுகிறது!

    ReplyDelete
  8. கதை கேட்க வந்திருந்தேன்.நீங்கள் பாடம் படித்த கதை மனதில் நிற்கிறது. அறிமுகங்கள் அசத்தல் ராஜாராம்.தொடருங்கள்

    ReplyDelete
  9. ஆ.,
    முதல் கவிதை...
    துணுக்குற்றது மனம்.

    ReplyDelete
  10. மறுபடியும் ஒரு பயணத்தில் கடந்த காலத்திற்கு இழுத்து சென்று விட்டீர்கள்.

    வாரியலடி வாங்குறதுல என்னா சுகம்.

    புத்தக விமர்சனம் அருமை.

    ReplyDelete
  11. பார்த்து...சீனா அய்யா உங்களையே நிரந்தர ஆசிரியராக்கிவிடப்போகிறார்...

    சொல்லிய விதம் அற்புதம் பா.ரா.

    ReplyDelete
  12. கதை சொல்லி!கவிதை தொகுப்பை அறிமுகப்படுத்திய விதம் ரொம்ப அழகா இருக்கு மாமா.

    ReplyDelete
  13. விளக்குமாறால் அடி வாங்கியதைக் கூட
    இவ்வளவு கவித்துவமாக சொல்ல நீங்கதான் மக்கா சரி :))))

    தகுதி உள்ள அறிமுகம் இது
    மிக முக்கியமானது முதல் கவிதை
    இதைப் பற்றிப் பேசிய என் கவிதை
    ‘பின்ன உடலின் ஸ்கலிதங்கள் ‘ நினைவுக்கு வருகிறது மதன்

    வாழ்த்துகள் நண்ப!

    ReplyDelete
  14. அழகான கவிதைகளோடு அண்ணாவின் அடியும் சேர்த்து ரசனையாவே இருக்கு.அழகா ரசிச்சு உங்களுக்குத் தந்த பணியைச் செய்றீங்க அண்ணா.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. இன்னைக்கும் அபாரம். முதல் கவிதையில் மிச்ச தூக்கம் போச்சு.கண்டிப்பா மறு உலை வேணும் சாமி:))

    ReplyDelete
  16. அன்பின் பாரா

    படிசுட்டேன் - மறுபடி படிச்சுட்டேன் - ஆனா இப்ப மறு மொழி இல்ல - திரும்பத்திரும்பப் படிக்கணூம் - கொஞ்ச நேரம் வேணும் - மறு மொழி போட - மனசு அப்படியே கலங்கிப் போய் இருக்கு - வரேன் கொஞ்ச நேரம் க்ழிச்சு - சரியா

    ReplyDelete
  17. கேள்வி கேட்ப‌த‌ற்கு முன்ன‌மே ம‌ன‌சை ப‌டிச்ச‌து போல‌ நீங்க‌ளே சொல்ல‌றீங்க‌.(3 க‌விதை ப‌த்தி சொல்றேன்) ஆள்காட்டி க‌தை ரொம்ப‌ ந‌ல்லா இருந்த‌து.

    ReplyDelete
  18. பகிர்ந்த மூன்று கவிதைகளுமே ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  19. உங்கள் கதை,
    கவிதைகள், அதற்கான அறிமுகம் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  20. //குறிப் பிறழ்வும் குப்புற படுத்தலும்

    அவசரமாய் பகுடர் அப்பி
    உதட்டில் இழுக்கியிருக்கும்
    அடர் சிவப்பு கன்றாவி தொட்டெடுத்து
    நெடுஞ்சாலை முற்சந்தின் மங்கல் இருட்டில்
    தொழிலுக்கு முதல் போடுகிறார்கள்
    ஒரு ஆறேழு திருநங்கைகள்.

    பிறழ்ந்த குறியால்
    நிகழ்ந்த குற்றத்தை
    கழுவ வழியில்லாக்
    கேடு அவர்களுக்கு.

    சமூகம் செத்தால் சாகட்டும்.

    பெற்றவர்களும் புறந்தள்ளிய வலி
    குப்புற படுத்தெந்திருப்பதை விட
    அதிகமில்லை.//

    மதனுக்கும்,
    பாரா உங்கள்
    விசால மனசுக்கும்.
    இந்த விமர்சனத்துக்கும்,
    ரெட் சல்யூட்.

    ReplyDelete
  21. ஒரு மாலைப் பொழுதில் அருகிலமர்ந்து படித்தவைகளை பகிர்ந்து சிலாகித்த மாதிரி ஒரு உணர்வு. :)

    ReplyDelete
  22. நல்ல கவிதைகள் மற்றும் அறிமுகம்

    நன்றி சார்

    ReplyDelete
  23. பா.ரா, அருமையாய், வ‌லைச்ச‌ர‌த்தை,
    ந‌ல்ல‌ மேடையாக்கி ஒளிவ‌ட்ட‌ங்க‌ளை பாய்ச்சி
    ஒதுங்கி, ம‌றைவில்,தெலைவில் இருக்கும்
    திற‌மையான, அரிய‌ ஆக்க‌ங்க‌ளை
    அறிமுக‌ப்ப‌டுத்தி ப‌திவுல‌கை மேலும்
    ஆழ‌, அக‌ல‌ப்ப்டுத்தி விட்டீர்க‌ள்.
    உரியோரை உய‌ர்த்தும் அற்புத‌ ம‌ன‌சு.
    ந‌ம்ப‌ரால் விளிக்க‌ப்படுவ‌ரின் பாடு பற்றிய‌
    எள்ள‌லில் ச‌முதாய‌ச் சாய‌ம் வெளுக்க‌ப்ப‌ட்ட‌து.

    ReplyDelete
  24. அற்புதம்ங்க... பகிர்வுக்காக தேர்ந்தெடுத்த கவிதைகளும்....

    ReplyDelete
  25. நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்!

    ReplyDelete
  26. அன்பின் பா.ரா

    அருமையான துவக்கம் - அறிமுகம் - விமர்சனம்

    அழை பேசி ( அலை பேசியை விட நன்றாக இருக்கிறது இச்சொல் ) அழைத்தது.

    அக்காவின் கையால் மென்மையாகவும் அப்பாவின் கையால் வலிமையாகவும் அடி வாங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் பா.ரா. இருவருமே தங்களின் அன்பினை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தி உள்ளனர்.

    புத்தக மதிப்புரை - என்னுரை, முன்னுரைகளை ரசித்த விதம் - அத்தனையும் அருமை.

    நல்வாழ்த்துகள் பா.ரா
    நட்புடன் சீனா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது