6.அமுதம் வற்றாத அன்னை
➦➠ by:
கிளியனூர் இஸ்மத்
பல்வேறு கலாச்சாரங்கள் உலகநாடுகளில் அவ்வபோது தலைத் தூக்கினாலும் அம்மா என்கிற அந்தஸ்ததும் பாசமும் பெருகிவரும் கலாச்சாரங்களால் வெற்றிக் கொள்ளமுடியாதவை என்கிறார் ஹிசாம்.
பத்துமாதம் சுமந்து
பெற்றெடுத்த அன்னையை
நெஞ்சம் கொள்ளளவு நேசிக்க
என்நெஞ்சத்தில்
இடம் போதவில்லையே
இறைவா!
என்று பிரார்தித்தவனாய்…
தாயைப் பற்றி பலரும் தங்களின் பாச எண்ணங்களை பதிவுகளில் பதித்திருக்கிறார்கள். அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வலைச்சரத்தில் ஆறாம் நாளில் அடிவைக்கிறேன்.
சம்பாதிப்பதற்காக வேண்டி தாயையும் தாய்நாட்டையும் பிரிந்து வேலைப்பார்ப்பவர்களுக்கு மத்தியில் தாயைவிட எனக்கு வேலை முக்கியமல்ல என்று உதறிய நல்உள்ளத்தின் உண்மைக்கதைதான் தாயிற் சிறந்ததோர் வேலையுமில்லை.
இம்சை அரசி தனது 100வது பதிவில் என் அம்மாவிடம் முதல் சம்பளத்தில் முதல்முதலாய் உங்களுக்குத்தான் வாங்கினேன் என்று தரும்போது அந்த முகத்தில் வரும் சந்தோசத்தைப் பார்க்க காலமெல்லாம் கம்மல் வாங்கவும் நான் தயாரானது யாருக்குத் தெரியப்போகிறது என்கிறார்.
காய்ச்சலில் நெற்றித் தொடும்போதும்
மழையில் நனைந்து தலைதுவட்டும் போதும்
தோல்விகளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த
ஆளில்லாத போதும்
நினைவுகளில் நிழலாடுகிறது அம்மாவின் அன்புக்கை…
ராஜவம்சத்தில்
நிலாரசிகனின் பாசக்கவிதை இது.
அம்மா என்றால் அன்புமட்டும்தானா? அதையும் தாண்டி யோகிராமானந்த குரு தனது அனுபவக் கவிதையை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.
ஒருமுறை நமது முன்னால் ஜனாதிபதி மரியாதைக்குரிய அப்துல்கலாம் அவர்கள் ஆஸ்தெர்லியா நாட்டுக்கு பயணம் சென்றிருந்தார். மாணவ மாணவிகள் நமது ஜனாதிபதியிடம் கேள்விகள் கேட்னர். அதில் ஒரு மாணவி அப்துல்கலாம் அவர்களிடம் நீங்கள் பிறந்த ஊர் எது என்று கேள்வி கேட்டார் அதற்கு அப்துல்கலாம் சொன்ன பதில் சொர்க்கம் என்று!
இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத மாணவி திகைப்புடன் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு இந்திய வரைப்படத்தை காண்பித்து இது எங்களின் தேசத்தாய் இதில் எனது பிறந்த ஊர் வரைப்படத்தில் கீழே இராமேஸ்வரம் இருப்பதினால் தேசத்தாயின் காலடியில் எனது ஊர் இருக்கிறது தாயின் காலடியில்தானே சொர்க்கம் இருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.
தாயின் காலடியில்தான் சுவர்க்கமிருக்கிறது என்று அருமை நபிகள் நாயகம் (ஸல் அலை) அவர்கள் கூறினார்கள்.அந்த காலடிகளை கலங்கப்படுத்திய கால்களின் நிலையை இந்தச் சிறுகதை விளக்குகிறது
அன்னையின் அன்பைப் பற்றி எவ்வளவு உதாரணங்கள் சொன்னாலும் அது முடிவில்லாதது இவர் கவிதையில் தாய்யன்பை இப்படி எல்லாம் ஒப்பிடுகிறார்.
தாயின் வயிற்றில் கருதோன்றிய சிலவாரங்களிலேயே கருவின் மூளையில் நியுரான்களின் உற்பத்தி ஆரம்பமாகி விடுகிறது. அதனால்தான் என்னவோ இன்றைய மருத்துவ உலகம் குழந்தை வயிற்றில் இருக்கும் போழுதே ஆக்கப்பூர்வமான சில பல செயல்களை கருவுற்ற தாய்மார்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது. குழந்தை பிறந்து உலகின் முதல் சுவாசத்தை ஆரம்பித்த உடனேயே நமது கடமைகளும் ஆரம்பமாகிவிடுகிறது என்று சகோதரி ஸாதிகா அறிவான சந்ததிகளை உருவாக்க ஆலோசனை வழங்குகிறார்.
ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு ஒரு தாய் எப்படி எல்லாம் கஸ்டப்படுகிறாள் என்பதை அம்மான்னா சும்மாவா? அபிஅப்பா எழுதுகிறார்.
என் ஒவ்வொரு அணுவிலும்
கலந்த என்னுயிர் அன்னையே
எப்படி மறப்பேன்
ஒரு நொடியிலும் நின்னையே!
எனக்கு தேவையில்லை தனியொரு தினம்.! என்கிறார்.

குழந்தைகள் நன்கு படிப்பதற்கும் நல்ல பண்புகளுடன் விளங்குவதற்கும் தாயே முக்கியக் காரணம். ஆவளின் அதி கவனமும் கவனிப்பும் இல்லையேல் குழந்தைகள் சிறப்புறவளர மாட்டார்கள்.என்று தன்னம்பிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.
அந்தளவு தாயுடைய பொருப்பும் கவனமும் தன் பிள்ளையின் மீது சதா இருந்துக்கொண்டே இருக்கிறது ஒரு தாய் தனது பிள்ளையை அன்னை என்ற ஸ்தானத்தில் வளர்க்கும் பொருப்பைவிட இந்த உலகில் எந்த ஒரு பதிவியும் உயர்ந்தது அல்ல.
இப்படி எண்ணெற்ற பதிவுகளை தாயைப்பற்றி உள்ளத்திலும் எண்ணத்திலும் எழுத்திலும் எழுதுகிறார்கள் தங்களின் தாய்மேல் வைத்திருக்கும் அன்பை செயலில் காண்பித்தால் முதியோர் இல்லங்களின் தேவை தேவையற்றதாக ஆகிவிடும்.
மீண்டும் நாளை நன்றி.

|
|
அன்பின் இஸ்மத், அருமை அன்னையின் பெருமைகளைப் பேசும் பல்வேறு இடுகைகளைச் சுட்டிக் காட்டியது அருமை - நல்வாழ்த்துகள் இஸ்மத் - நட்புடன் சீனா
ReplyDeleteஉங்களுக்கு பின்னால் இந்த வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பில் வரப் போகின்றவர்களுக்கும் எடுத்துக் கொள்ள வேண்டிய விசயங்களாகவும் உங்கள் அக்கறை வெளிப்படுகின்றது. நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅழகிய தலைப்பிட்டு அருமையான அறிமுகம்.கூடவே என் வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி சகோதரரே!
ReplyDeleteவித்தியாசமான தொகுப்பு. நன்றி.
ReplyDeleteஇஸ்மத் அண்ணன்...@
ReplyDeleteஇப்போதான் பார்த்தேன் அண்ணா.. நீங்கள்தான் வலைச்சர ஆசிரியர்னு....! ஒண்ணு விடாம முதல்ல இருந்து படிச்சேன்....
எல்லாமெ அருமையான அறிமுகங்கள்...! தாமதமாக வந்ததற்கு மன்னியுங்கள்...!
வாழ்த்துக்கள் அண்ணா!
அழகான நிறைவான பதிவு.
ReplyDeleteவிதவிதமான தேர்தெடுப்புகளில் உங்கள் பன்முக பரிமாணம் பளிச்சிடுகின்றது. என் வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்காக நன்றி!
ReplyDeleteஅழகான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்
முத்துக்களை ஒத்த அறிமுகங்கள், அருமை!
ReplyDeleteநன்றி அண்ணன்!
ஐயா சீனா,
ReplyDeleteஜோதிஜி,
சகோதரி ஸாதிகா,
கலாநேசன்,
தேவா,(தாமதமாக வந்ததினால் என்ன ...அதான் வந்துட்டீங்களே நன்றி தேவா)
ராஜாகமால்,
ஓ.நூருல் அமீன்,
அன்பரசன்,
நிஜாமுதீன்
உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி