வலையுலக சகாக்கள் (வலைச்சரம் ஆறாம் நாள்)
➦➠ by:
அஹமது இர்ஷாத்
வண்டி வண்டிய கட்டுரை எழுதினாலும் வந்ததுக்கு அடையாளமா ஒரு ஸ்மைலி போட்டு எஸ்கேப் ஆகிறதுல்ல செம கில்லாடி இந்த இமா ஆனா இந்த படங்களுக்காகவே இவங்கள விட்றலாம்..
ஹேமாவின் கவிதைகள் எல்லோருக்கும் பிடிக்கின்ற வகையில் இருக்கும். மனதில் பட்டதை கருத்தாக பின்னூட்டமிடும் இடுபவர்களில் இவருக்கே முதலிடம்.
இயல்பான எழுத்துக்கு சொந்தக்காரர் இந்த ஸாதிகாஹசனா இவரின் இந்த பதிவப் படிச்சிட்டு சிரிக்காம இருக்கமுடியாது..
இவங்களா சொல்லாம ஒரு பதிவா ம்ஹீஹிம் சான்சே இல்ல..வலையூலக தாயம்மா சித்(ரொம்ப நீளமான பெயர்)இந்தம்மணி உதிக்கிற தத்துவங்களை படிக்காதவங்க படிச்சிருங்க..
அப்புறம் நம்ம சகா ஸ்டீபன் நாடோடியா எல்லோருடைய பதிவையும் படிச்சிட்டு கட்டாயமா பின்னூட்டத்தில் ஊட்டம் கொடுக்கக்கூடிய நண்பர் இவருடைய கற்பனைக்குதிரையை பாருங்க..
நம்ம அண்ணன் நைஜிரியா ராகவன் இவருடைய பல பதிவுகள் ரொம்ப சுவராஸ்யமா இருக்கும் என்னமோ இப்ப பதிவு எழுதுறதே இல்ல,புதியவர்களுக்கு வழிகாட்டியா இருக்க உங்க பதிவுகள் அவசியம்'னு இந்த வலைச்சரம் மூலமா அண்ணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
கே.ஆர்.பி செந்தில் இவரின் ஃபுரோஃபைல் போட்டோ சே'வ எனக்கு ரொம்ப பிடிக்கும் அதே போல் இவரின் பதிவுகளும்..பயோடேட்டா இவர மாதிரி யாரும் போட முடியாது..
ரொம்ப ரசனையான பதிவர் பத்மா அதே போல் இவரின் பதிவுகளும் அனுபவிச்சு படிக்கலாம் இவரின் கவிதையே இவரைச் சொல்லும் காகிதஓடம் என்னாப் பேரு.
நம்ம தேனக்கா ரொம்ப பிஸி ஆனா வலைத்தளத்தின் பேரைப் பாருங்க சும்மா ரொம்பத்தான் குசும்பு வலைத்தளத்தின் பெயர்தான் சும்மா ஆனா எழுதுற கவிதை,கட்டுரையெல்லாம் பார்த்தா யம்மா'ன்னு சொல்லத்தோன்றும்.அற்புதமான எழுத்துக்குசொந்தக்காரர்..
நீரோடையில் இவரது கவிதைகள் துள்ளிக்குதித்து விளையாடுகிறது. இவரது கவிதைகளில் வரிகள் உண்மையை சொல்லும்.. எனக்கு ரொம்ப பிடித்த இந்தக் கவி வலிகள்..
இவங்க வார்த்தைகளில் கோர்க்கிற முத்துச்சரம் அருமையா இருக்கும்..கதை,கவிதை,புகைப்ப டங்களில் கலக்குறாங்க..ஆ.விகடனில் வந்த இவரின் கவிதை அருமை..
ஹீசைனம்மா இவங்களை பற்றி சொல்லவே வேண்டியதில்லை..மிகத்திறமையா ன எழுத்துக்கள் இவரிடமிருந்து எதிர்ப்பார்க்கலாம். பின்னூட்டங்களில் நிறை,குறையை எந்த தயக்கமும் இல்லாமல் பட்டென்று சொல்லும் சுபாவம் உடையவர்..இவரின் டிரங்குப் பெட்டியில் சுவராஸ்யத்துக்கு குறைவிருக்காது..
புரோஃபைல் போட்டோவிலயே இவரின் குசும்பு தெரியும்... எண்ண அலைகள் சுனாமியா மாறி அடித்த கட்டுரைகள் இவரிடம் நிறைய இருக்கிறது..படு சுவராஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர்.
நம்ம ஆருயிர் சகா சீமான்கனி கதை கட்டுரைகளில் தொடர்பதிவு எழுதுவதற்கே நமக்கு நாக்கு தள்ளிடும் ஆனா இவரு ஒரு படி மேலே போய் கவிதைகள்'ல தொடரா எழுதிக்கிட்டு இருக்கவரு ரொம்ப திறமைசாலி..டிவி'ய பார்த்துட்டு அந்த நிகழ்ச்சிமேல வந்த கோபத்த பாருங்க..
|
|
KRP anna kku vaazhthukkal
ReplyDeletegood introductions irshad
ReplyDeleteமீண்டும் நல்ல அறிமுகங்கள்!
ReplyDeleteமிக்க நன்றி தம்பி...
ReplyDeleteதெரிந்த பதிவர்கள்தான் இருந்தாலும் அறிமுகம் அருமை :-)
ReplyDeleteநன்றி இர்ஷாத் திறமையானவர்களோடு என்னையும் சேர்த்துக்கொண்டதுக்கு !
ReplyDeleteநன்றி இர்ஷாத்.. :))
ReplyDeleteமிக்க நன்றி இர்ஷாத்:)!
ReplyDeleteஇதற்குள் ஆறாவது நாள் வந்துவிட்டதா?அறிமுகங்களில் தெரிந்த முகங்களும் இன்னும் பல தெரியா முகங்களும் தந்து அட்டகாசமாக பவனி வரீங்க தம்பி.
ReplyDeleteellam therintha mugama irunthalum ungal arimugam arumai.
ReplyDeleteஅழகிய அறிமுகங்கள்.கூடவே என் வலைப்பூவினையும் அறிமுகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி இர்ஷாத்.வலைச்சர ஆசிரியர் பணியை செவ்வன நிறைவேற்றி வருவதற்கும் பாராட்டுக்கள்.
ReplyDeleteபல அறிமுகங்கள் அழகான சுவாரசியப்படுத்தி எழுதியிருக்கீங்க!
ReplyDeleteஇர்ஷாத்தா கொக்கா? :))
அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteirshad Rocks:) super.
ReplyDeleteநல்லதொரு தொகுப்பு!
ReplyDeleteஅருமையான வர்ணனைகள்!!
பாராட்டுக்கள் இர்ஷாத்!!!
மிக்க நன்றி இர்ஷாத்.
ReplyDeleteகவிஜாம்பவான்களுக்கிடையிலும் திறமை மிகுந்தவர்களுக்கிடையிலும் நானுமா! ரொம்ப சந்தோசம். வலைச்சரத்திற்க்கும் தாங்களுக்கும் மிக்க நன்றி..
இன்று நிறைய அறிமுகங்கள்...நிறையத் தெரிந்தவர்கள்.
ReplyDeleteஹேமாவின் சேமித்த கணங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
ராமலக்ஷ்மியின் புகைப் படங்களின் தெளிவு, துல்லியம் ஸ்பெஷல். பழைய திண்ணை வீடுகள் பற்றிய பதிவை மறக்க முடியாது.
ஹுசைனம்மா ட்ரங்குப் பெட்டியைத் திறந்தால் சுவாரஸ்யமான எழுத்துகள் ஓடிவரும்..
நன்றி இர்ஷாத்..
இமா அவர்களின் வலைப்பூவை முதன்முதலாக அறிகிறேன்... அறிமுகத்துக்கு நன்றி...
ReplyDeleteதேனக்கா, ஹேமாக்கா,பத்மா இவர்களுடைய கவிதைகளுக்கு நான் தீவிர ரசிகன்!! :)
இர்ஷாத், லீவு முடிந்து இன்றுதான் வலைப்பக்கம் வருகிறேன். உங்க ஆசிரியப் பணியும் முடியப்போகுதுபோல!! வாழ்த்துகள்.
ReplyDelete//பின்னூட்டங்களில் நிறை,குறையை எந்த தயக்கமும் இல்லாமல் பட்டென்று சொல்லும் சுபாவம் உடையவர்//
ஹி..ஹி.. நிறைய குட்டு வாங்கிருக்கீங்களோ?? என்ன செய்ய, கள்ளங்கபடில்லா மனசு எனக்கு!! ;-))))
நன்றி இர்ஷாத். ஸ்ரீராம் சார் உங்களுக்கும் நன்றி.
Dear Irshad,
ReplyDeletethanks for introducing me here!
:))
எல்லோருமே நல்லவங்க தான்.. நீங்களும் தான்!! ஹி..ஹி..
ReplyDeleteIRSHATH IPPO THAAN PAKIREN NANDRI NANDRI
ReplyDelete