பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா
நேற்று டாஸ் போட்டு ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு. இன்னைக்கு பேட்டிங் அதுவும் பவர் ப்ளேவோட. பேட்ஸ்மேன், பெளலர், ஆல்ரவுண்டர் என இருப்பதை போல வலை உலகில் ஒவ்வொருவரும் ஒரு வகையில் திறமையாக பதிவிடுகின்றனர். இதில் சமூகபார்வை, கவிதை, கதைகள், திரைவிமர்சனம், அனுபவ பதிவுகள், நகைச்சுவை, பொது என எட்டு வகையில் வரிசைபடுத்தி ஒவ்வொரு திறமைக்கும் ஒரு பதிவராக தினமும் குறைந்தபட்சம் 8 பதிவுகளை/பதிவர்களை களம் இறக்குகிறேன்...
சூரியகாந்தி (சமூகப்பார்வை):
சமூகத்தில் திருநங்கைகளை பார்க்கும் பார்வை இன்றுவரை மாறவில்லை என வருத்தப்படுகிறார் ஸ்மைல் பக்கம் வித்யா. இவருடைய பதிவுகளில் சமூகத்தின் மேல் கோபம் அதிகமாகவே காணமுடிகிறது.
(கவிதை) ரோஜாக்கள்:
தாய்வீடு: பிறந்து வளர்ந்த வீட்டிற்கே
விருந்தாளியாய் சென்றாள்.
உரிமையிழந்தவளாய்!
இப்படி இரு வரிகளில் கவிதைகள் எழுதி பதிவிடுகிறார் சங்கீதா. இவருடைய சங்கதியில் சதமடிக்க போகும் இவர் சில பழைய பாடல்களின் வரிகளையும் பதிவிடுகிறார்.
தாமரை (சிரிப்பு):
நான் பாராசூட்ல போய் அவஸ்த்தைபட்டது போல் என் பேர் கொண்ட இவரும் ஸ்கூபா டைவிங் போய் காமெடி பீசாகி இருக்கார். ஊரை சுத்துறதுல முதல் ஆளா இருப்பார் போல இந்த சுற்றுலா விரும்பி.வாடா மல்லிகை (திரைப்படங்கள்):
பல பதிவுலக சக்கரவர்த்திகள் திரைப்படங்களை பற்றிய விமர்சனங்களை வழங்கினாலும் ஆங்காங்கே குறுநீல மன்னர்களும் இந்த ஏரியாவில் கோலோச்சிதான் வருகிறார்கள்.குறிப்பாக பதிவுலகில் பாபு ஆங்கில திரில்லர் படவிமர்சனங்களை அதன் விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாமல் தருகிறார். இவர் பரிந்துரைக்கும் பதிவுகளை பார்த்தால் கண்டிப்பாய் அந்த படங்களை பார்க்க தூண்டுகிறது.
(கதை சொல்லும்) காந்தள்:
நம்ம மனம்+ எஸ் கே நல்ல படங்களை டிசைன் பண்ணுவாருன்னு தெரியும் ஆனா அவர் நல்லா கதையும் எழுதுவாருன்னு உங்களுக்கு தெரியுமா? அவருடைய மற்றோரு வலைப்பூ “எதுவும் நடக்கலாம்”ல் இந்த வித்தியாசமான கதையை படிச்சே ஆகணும்(அனுபவ) அல்லி:
கஸ்டமர் கேர் - இந்த வார்த்தையை கேட்டாலே பலருக்கு எரிச்சல்தான் வரும். ஆனால், கால் சென்டரில் வேலை செய்பவர்களுக்கு இருக்கும் சாதக பாதகங்கள், அது செயல்படும் முறை என பல தகவல்களை தன் அனுபவத்தின் மூலம் பகிர்ந்து கொள்கிறார் எல் கே. அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது தெரிந்துகொள்ள!(பல்சுவை) பாரிஜாதம்:
எமெர்ஜன்சி, மிசா - பற்றிய வரலாற்று தொடரை எழுதி வருகிறார் (நெடுநாளாய் எழுதாத) குறிஞ்சி:
பட்டனத்துக்கு வந்த பட்டிக்காட்டான் தன் அனுபவங்களை நகைச்சுவையுடன் வழங்கிவந்தார். ஒவ்வொரு பதிவுக்கும் குறைந்தபட்சம் 100 கமெண்டுகளை பெற்று வந்த இவர் சில நாளாக எழுதுவதில்லை. @ ஜெய், உங்கள் சேவை வலையுலகத்துக்கு தேவை (கும்மி அடிக்க ஒரு கை குறையுதுப்பா)சரி, இவங்க பேட்டிங் திறமை எப்படினு நீங்க அவங்க கிரெளண்டுக்கே போய் பார்த்துட்டு வாங்க....
கடைசியாக,
ஒரு டவுட்டு: Black & White டிவில கலர் படம் தெரியாது ., அதே மாதிரி கலர் டிவிலயும் Black & White படம் தெரியக்கூடாதுல..! ஏன் தெரியுது ..? - கேட்டது செல்வா
அதிரடி தொடரும்....