அனந்து பொறுப்பினை ஸ்டீபனிடம் கொடுக்கிறார்
➦➠ by:
* அறிமுகம்
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் அனந்து - தான் ஏற்ற பொறுப்பினை பொறுப்பாக நிறைவேற்றி - மனநிறைவுடன் விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு - இருபத்தோறு பதிவர்களையும் அவர்களது ஐம்பது பதிவுகளையும், தன்னுடைய இருபது பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
நண்பர் அனந்துவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் நண்பர் ஸ்டீபன்.
இவர் நாடோடி என்ற புனைப்பெயரில் நாடோடியின் பார்வையில் என்ற வலைத் தளத்தில் எழுதி வருகிறார். பணியின் பொருட்டு பல நகரங்கள், நாடுகள் சுற்றி வருகிறார். எங்கும் நிலையாக இருப்பதில்லை. தற்போது சவுதியில் அல்கோபரில் வசிக்கிறார். இப்பொழுது நாடோடி என்ற புனைப்பெயரின் காரணம் புரிந்திருக்குமே ! தமிழின் மீது தீராக் காதல் கொண்ட காரணத்தினால் தமிழில் எழுதுவதற்காக வலைத்தளம் துவங்கினார். துவங்கிய ஆண்டில் தொடர்ச்சியாக எழுதிய இவர் கடந்த இரு ஆண்டுகளாக பணிச்சுமை காரணமாகவும் முக்கியமாக வாழ்வில் துணைவியினைக் கைபிடித்ததின் காரணமாகவும் - கடமைகள் அதிகரித்ததின் காரணமாக எழுதுவது குறைந்திருக்கிறது.
வலைச் சரத்தில் எழுதுவதன் மூலம் - இனிமேல் தொடர்ந்து எழுதுவார் என எதிர்பார்க்கிறோம்.
நண்பர் ஸ்டீபனை வாழ்த்தி வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் அனந்து
நல்வாழ்த்துகள் ஸ்டீபன்
நட்புடன் சீனா
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteசோதனை மறுமொழி
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியர் பணியை சிறப்பாக முடித்த அனந்து அவர்களுக்கும், நாளை முதல் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும் ஸ்டீபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி...(TM 1)
தோழர்கள் ஆனந்து, ஸ்டீபன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னை அறிமுகப் படுத்தி எழுத அழைத்த சீனா அய்யாவிற்கு நன்றி.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete//வலைச்சரம் ஆசிரியர் பணியை சிறப்பாக முடித்த அனந்து அவர்களுக்கும், நாளை முதல் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும் ஸ்டீபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி...(TM 1)//
ஆனந்து அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும்...
வாழ்த்துக்கு ரெம்ப நன்றி தனபாலன்.
@Ayesha Farook said...
ReplyDelete//தோழர்கள் ஆனந்து, ஸ்டீபன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
ரெம்ப நன்றி சகோ!..
வலைச்சரம் ஆசிரியர் பணியை சிறப்பாக முடித்த அனந்து அவர்களுக்கும், நாளை முதல் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும் ஸ்டீபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDelete