07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 19, 2012

நாடோடியின் பார்வையில்_பல்சுவைப் பதிவுகள்


வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,

எனது நண்பனுக்குச் சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணமானப் புதிதில் சின்ன மாமியார் வீட்டில் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். இவன் தனது மனைவியைக் காலையிலேயே டூவீலரில் சென்று அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு, இவன் மட்டும் அவசரமாக வெளியில் கொஞ்சம் வேலையிருப்பதால் அங்குத் தங்காமல் மதியம் உணவுக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டான். இவனுக்கு நாய் என்றாலே ஏக பொருத்தம். எந்தச் சாதுவான நாயும் இவனைப் பார்த்தால் வாலை உயர்த்திக் குரைக்கத் தொடங்கிவிடும், எனவே நாயை மட்டும் ஒருவர் வீட்டில் பார்த்து விட்டால் அந்த வீட்டுக்குத் தனியாகப் போக மாட்டன். இவன் விருந்துக்குப் போயிருந்த வீட்டில் ராஜபாளையம் நாய் ஒன்று இருந்திருக்கிறது. காலையில் இவன் சென்ற போது இவன் கண்ணில் அது மாட்டவில்லை அல்லது அது கண்ணில் இவன் மாட்டவில்லை.

வெளியில் உள்ள வேலை எல்லாம் முடிவதற்கு மதியம் ஆகிவிட்டது. மாமியார் வீட்டுக் கறி விருந்துச் சாப்பாடு நினைவுக்கு வரவே நேராக‌ சாப்பாட்டுக்கு, கரெக்டா மாமியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வண்டியை "கேட்" டுக்கு வெளியில் நிறுத்திவிட்டு, நடந்து "கேட்டை" திறக்க சென்றால் பெரிய அதிர்ச்சி, ஒரு பக்கம் ராஜபாளையம் நாய்க் கம்பீரமாக நிற்கிறது, இன்னொரு பக்கத்தில் தோட்டத்தில் சின்ன மாமியார் வாழையிலை வெட்டிக்கொண்டு இருக்கிறார். இவனுக்கு இருந்த பசியே மறந்துப் போச்சு. இவனை நாய்ப் பார்த்தவுடனே அது நறுக்கிய வலையும் முறுக்கத் தொடங்கிற்று. மறுபக்கத்தில் இருந்த மாமியார் "சும்மா வாங்க, சோபி ஒண்ணும் செய்யாது" என்று இவனைப் பார்த்தார். இவனுக்கோ அடிவயிறுக் கலங்க ஆரம்பிச்சுட்டுது. "ஆமா!! நாய் உங்களை ஒண்ணும் செய்யாது, எல்லாம் எனக்குத் தான்" என்று மனசுக்குள் நினைத்து விட்டு, "மாமி நீங்க கொஞ்சம் அது பக்கத்துல வந்து பிடிச்சுக்குங்க, நான் வந்துடுறேன்" என்று சொன்னான்.

சின்ன மாமியார் வந்து நாயைப் பிடிப்பதற்குள், வீட்டின் உள்ளிருந்து வெளியில் வந்த சின்ன மாமனார் "என்ன மாப்ள இந்த நாய்க்குப் போய் இப்படிப் பயப்படுறீங்கனு" இவனுடைய ஆண்மைக்குச் சவால் விட இவனும் "சடோர்னு" கேட்டைத் திறந்து வீட்டை நோக்கி நடக்க, முறுக்கிய வாலுடன் சோபியும் பாய, "ஆஆஆனுனு" நண்பனின் அலறல்.

நாய்ப் பாய்ந்த வேகத்தில் அதன் பல் எதுவும் படவில்லை, நகம் தான் கீறி விட்டுருந்தது.

அப்புறம் என்ன?. பக்கத்து வீட்டில் உள்ள‌ ஒவ்வொருவரும் விசாரிக்க வந்துட்டாங்க.

"நம்ம சோபி, ஊர்ல‌ இதுவரைக்கும் யாரையும் கடிச்சதே கிடையாதுனு" பெருசு ஒண்ணு ஆரம்பிக்க, ஆமா அக்கா "புதுசா வந்த மாப்பிளையையாக் கடிக்கனுமுனு" இன்னொரு பெருசு ஆரம்பிக்க, நண்பனுக்கு "ஆமா இது ரெம்ப முக்கியம்" என்று தனக்குள்ளேயே கடிந்து கொண்டான்.

நாயின் பல்லுப் படல என்றாலும், "கறி ஏதும் சாப்பிட வேண்டாம், வெறும் ரசம் மட்டும் சாப்பிடுங்கனு" பக்கத்துவீட்டுக் காரர் சொல்ல, "விருந்துக்கு வந்த இடத்துல இப்படி ஆகிப் போச்சேனு" இன்னொருவர் ஆரம்பிக்க, நண்பன் கடுப்பாகிவிட்டான்.

எப்படியோ எல்லோரையும் ஒருவழியா சமாதானப் படுத்திவிட்டு, ரசம் வைத்துச் சாப்பிட்டு விட்டு, மனைவியை வண்டியில் ஏற்றி, வீட்டுக்குக் கிளம்பினால், போகும் வழியில் எல்லோரும் இவனை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள், இது போதாதுனு வழியில் மூணு இடத்தில் வண்டியை நிப்பாட்டி "நாய் கடிச்சாமே, எங்கக் கடிச்சினு" விசாரிப்பு வேற.

"என்ன கொடுமையிதுனு" தலையில அடிச்சுட்டு வந்திருக்கிறான்.

நான் எழுதிய ஆறு பதிவுகளுமே ரெம்பச் சீரியஸா எழுதியது போன்ற ஓர் உணர்வு எனக்கு. என்னைப் புதுசாப் படிக்கும் அனைவரும் ரெம்பச் சீரியஸான பதிவர் என்று நினைத்து விடக் கூடாது என்பதால் தான் இந்தக் காமெடிப் பதிவு. எனக்கும் புதுசாக் கல்யாணம் ஆனதால், எனக்கு நடந்ததைத் தான் எவனுக்கோ நடந்தது போல இங்க வந்து கத விடுறானு நினச்சுடக் கூடாது..... :)

இன்று காமெடி, செய்திகள், அனுபவம், தொழிற்நுட்பம் என்று பல்சுவைப் பதிவுகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: இரவின் புன்னகை

"தன்னம்பிக்கையின் இடம் இது" என்ற இந்த பதிவில் சிறுசிறு துணுக்குகள் கதைகள் மூலம் தன்னம்பிக்கையை பற்றி அருமையாக விளக்கியிருக்கிறார்.

தன்னம்பிக்கையின் இடம் இது

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: கலாகுமரன்

வாய் வீரர்களாக இல்லாமல், செயல் வீரர்களாகவும் இருக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்லும் கதை. ஆனால் இப்போது வெறும் வாய் வீரர்களே அதிகம் என்பதுடன் கதை முடிகிறது.

வேதம் நீ ... [ ஒரு பக்க கதை ]

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: அருண்

நீயுட்டனின் மூன்று விதிகளையும் இதவிட சுவரஸ்யமாகவும், எளிதாக புரியும் படியும் சொல்லிவிட முடியாது, நீங்களும் போய் படிங்க.

நியூட்டனின் இயக்க விதிகள்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: விருச்சிகன்

இந்தியாவின் வல்லரசு கனவு பற்றி, இவருடைய பார்வையில் எழுதியிருக்கிறார். நீங்களும் போய் படிங்க.

வல்லரசுனா என்ன? நாம எப்போ வல்லரசு ஆவோம்?

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: thamilselvi

விண்முகில் என்ற வலைத்தலத்தில் இவர் எழுதியிருக்கும் அனுபவ பதிவில், அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு காதல் தம்பதியினரை பற்றி எழுதியிருக்கிறார். நீங்களும் இங்க போய் படிங்க.

காதலுடன் காதல் மனம் - 1

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: Uzhavan Raja

"உழவன்" என்ற வ்லைத்தளத்தில் குடும்ப அட்டை வாங்குவது பற்றிய தகவலை அறிய‌ தகவல் அறியும் சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்று தெளிவாக நமக்கு அறிய தருகிறார்.

குடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

நான் எழுதிய ஒரு அனுபவ காமெடி பதிவையும் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

ச‌ப்பாத்தி தோசையாக‌ மாறிய‌க் க‌தை..

குறிப்பு: இன்று அறிமுக படுத்திய வலைத்தளங்கள் நண்பர்கள் சிலருக்கு அறிமுகமானவையாக இருக்கலாம். புதியவர்களுக்காக நான் தொகுத்துள்ளேன். எனக்கு ஒரு வாரம் வாய்ப்பு கொடுத்த சீனா அய்யா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி, மேலும் இந்த ஒரு வாரமும் தொடர்ச்சியாக வந்து கருத்துரை வழ்ங்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

நல்வாழ்த்துக்களுடன்,
நாடோடி.

13 comments:

  1. நல்ல அறிமுகங்கள் (thamilselvi-விண்முகில்... புதிய அறிமுகம்)

    சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு வாழ்த்துக்கள்... பல புதிய அறிமுகங்கள்... நன்றி...

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...(TM 1)

    ReplyDelete
  2. ஸ்டீபன் தாங்கள் நண்பரின் விருந்து அனுபவம் படித்து சிரித்து விட்டேன் புது மாப்பிள்ளை என்றாலே இது போல் அனுபவங்கள் நிறைய உண்டு

    இன்று அறிமுகமான பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் தங்களுக்கும் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. நிறைய புதியவர்களை அறிமுகம் செய்கிரீர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆமா இப்பவும் நாய் பயம் இருக்கா????????

    ReplyDelete
  4. பாந்தமான பார்வையில்_பல்சுவைப் பதிவுகள்
    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. சிறப்பான அறிமுகங்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
    http://thalirssb.blogspot.in/2012/08/1.html

    ReplyDelete
  6. பதிவர்கள் அறிமுகம், கருத்துக்கள் பலவிதம்... ஒவ்வொன்றும் தனி ராகம்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ரமலான் சிறப்பு கவிதை படிக்க உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்!

    ReplyDelete
  7. நாடோடி நண்பனுக்கும், என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய நாடோடி நண்பனுக்கும் எனது மட்டற்ற நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் என் வலையுலக பயணத்தை ஆரம்பித்த பின் சில நாள்களிலே வலைச்சரத்தை அறிந்து கொண்டேன். அப்படி ஆரம்பித்த பிறகு தினமும் வலைச்சரத்தைப் பார்வை இடுவேன், எங்கேனும் நமது பதிவும் அறிமுகப் படுத்தப்பட்டு இருக்கிறதா என்று பார்ப்பேன். அப்பொழுதெல்லாம் ஏமாற்றம் தான் மிஞ்சும், இன்று நான் தற்ச்செயலாக தங்கள் அறிமுகம் செய்தியைப் பார்த்தபிறகு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் நண்பா.

    எனது நண்பர்களான எத்தனம், சிகரம் பாரதி, வரிக்குதிரை, பாலாஜி பதிவுகள் தொடர்ந்து வலைச்சரத்தில் தொடர்ந்து அறிமுகமான போது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது, அப்போது எனது தளம் இன்னும் அறிமுகப் படுத்தப் படவில்லை என சிறு வருத்தமும் இருந்தது, தற்போது எனக்கு தங்கள் அறிமுகம் மிகுந்த மகிழ்ச்சியையும், இன்னும் ஊக்கத்தையும் அளித்துள்ளது நண்பா. மிகுந்த மட்டற்ற மகிழ்ச்சி.

    தங்கள் அறிமுகம் எனக்கு புது வாசகர்களையும், புது தெம்பையும் அளித்துள்ளது நண்பா. மிக்க நன்றி...

    ReplyDelete
  8. எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் வலைச்சரம் தான் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....நண்பா..

    நான் எழுதிய பதிவுகளான மரணத்திற்குப் பின் ஓர் அலசல்
    http://iravinpunnagai.blogspot.in/2012/07/blog-post_18.html
    மரணத்திற்குப் பின் மறுபிறப்பா?
    http://iravinpunnagai.blogspot.in/2012/07/blog-post_26.html
    அசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்
    http://iravinpunnagai.blogspot.in/2012/08/blog-post.html

    போன்ற பதிவுகை எதிர்பார்த்தேன், ஆனால் எதிர்பார்க்காத அந்த தன்னம்பிக்கைப் பதிவிற்கு அங்கீகாரம் கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete
  9. பல்சுவை பதிவர்களில் அறிமுக படுத்தியதற்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  10. பல்சுவை பதிவுகளின் எனது பதிவையும் அறிமுகம் செய்த நண்பர் நாடோடி அவர்களுக்கு எனது நன்றி.

    அதிலும் வலைசரம் மூலமாக எனது கதைக்கும் ஒரு அங்கீகாரத்தை "நாடோடி-ஸ்டீபன்" கொடுத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்வை தருகிறது.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  12. என் பதிவினை அறிமுகம் செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது