Thursday, February 28, 2013

அதிரடி வியாழனின் மிரட்டலடி பதிவர்கள்...!


வியாழனின் அதிரடி பதிவர்களையும் சந்திப்போம் வாருங்கள்....

மெட்ராஸ் பவன் சிவகுமார், என் இனிய நண்பன், கலாயிப்பதில் வல்லவர்  என் மீது மிகுந்த மரியாதை கொண்டவர், இவரும் என்னை எப்படியாவது சென்னை வரவைத்துவிட வேண்டும் என்று மிகவும் வருந்தி அழைப்பது உண்டு, எனக்குதான் நேரம் சமயம் சரியாக அமையவில்லை, போனில் இவரோடு பேசினால் என் போன் பேலன்ஸ் அவுட்டாகிவிடும் அளவுக்கு நான்ஸ்டாப்பாக பேசுவார், அவர் அம்மாவும் இவரைப் போலவே மிகவும் அன்புள்ளவர்கள், நான் போனில் அவர்களிடம் பேசியது என் பாக்கியம்...!

இவரது எழுத்துகள் அதிகமதிகம் சினிமா பற்றிதான் இருக்கும் இருந்தாலும், மதுவுக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக தனது சொந்த அனுபவங்களை எழுதி வந்தார் மிகவும் உருக்கமான பதிவுகள் அவை, அதனால் ஒரு மனிதனாவது மனம் திருந்தி இருந்தால் அந்த புண்ணியம் சிவகுமாருக்குதான்,  படித்துதான் பாருங்களேன் அவர் பதிவுகளை...!

http://www.madrasbhavan.com/2013/02/blog-post_10.html
-------------------------------------------------------------------
நண்பன் செங்கோவி, சொற்களை தொலைக்க வந்தேன், சொல்லற சும்மா இருக்க என்று பதிவு எழுதி இருக்கிறார், இவர் பதிவுகளில் இலக்கியங்கள் ஆங்காங்கே வந்து எட்டிப்பார்த்தாலும், எளிமையாக எழுதுவதில் கில்லாடி, அது அரசியலாகட்டும், விமர்சனமாகட்டும், தப்பு செய்தவன் யாரா இருந்தாலும் இவரிடம் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என்பது பதிவுலக நியதி...!

http://sengovi.blogspot.com/2013/02/blog-post_11.html
-------------------------------------------------------------------
பிரபாகரனின் தத்துபித்துவங்கள் என்னும் தலைப்பில் எழுதி வரும் தம்பி பிரபாகரன், ஆளை போட்டோவில் பார்த்தால் எதோ அந்நியன் கெட்டப்பில் இருந்தாலும் ரொம்ப ரொம்ப சாப்ட்டான ஆளுன்னு சொல்லலாம், ஆனால் எழுத்தில் அதிரடி தூள் பறக்கும்...

பயணங்கள் தொடர், சுற்றுலாக்கள் போனதின் பதிவுகள், அங்கேயுள்ள அழகும், அநியாயங்களையும் அட்டகாசமாக சுட்டி காட்டுபவர், சினிமா விமர்சனங்களும் அடிக்கடி எழுதுகிறார், அது என்னவோ எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் மண்டை காஞ்சாலும் போயி பார்த்து விடுவது இவரின் இயல்புன்னு நினைக்கிறேன், ஒரு அந்தமான் பிரயாணம் பற்றி எழுதி இருக்கார் போயி படிங்க பார்ப்போம்...!
------------------------------------------------------------------
கோகுல் மனதில் கோகுல், தோன்றதை எழுதுவோம், பிடிக்கிறதை படிப்போம் என்றும்,  சொன்னா தெரியுற அளவுக்கு பிரபலம் கிடையாது தெரிஞ்சவங்களுக்கு கோகுல் தெரியாதவங்களுக்கும் கோகுல் என்று பதிவுகள் எழுதுகிறார், படிக்கும் மாணவர்கள் விரும்பிதான் படிகளில் தொங்குகிரார்களா என்று பொங்கி இருக்கிறார் வாங்க பிடியுங்க படியுங்க...!
----------------------------------------------------------------
சத்தியமா எனக்கு ஆணி புடுங்க தெரியாது பாஸ், என சரண்டர் ஆகி அஞ்சாசிங்கம்னு போரையும் வச்சிகிட்டு பொங்கி பாய்ந்து வரும் நண்பன் செலவின் ஆனந்த்...நேரில் நாங்கள் பார்த்திராவிட்டாலும்,போனில் நாங்கள் பேசாவிட்டாலும் எங்கள் அலைவரிசைகள் எப்போதும் ஒருப்போலவே செயல்படுவது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே இருக்கும்...!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடந்த [[காதலர்கள்]] ஒரு கொடுமையை, உண்மை சம்பவத்தை கண்டு பொங்கி எழும்பியதை சொல்லி இருக்கார் படியுங்கள் சென்னை காதலர்கள் உஷாரடையுங்கள்...!
இந்த மிருகத்தை என்ன செய்யலாம்----உண்மை சம்பவம் http://anjaasingam.blogspot.com/2011/05/blog-post_18.html
-------------------------------------------------------------------
நான் ஒரு எழுத்தாளனும் அல்ல, கவிஞனும் அல்ல, மொழி ஆர்வலனும் அல்ல ஆனால் நேர்மையாக வாழத்துடிக்கும் ஒரு கிராமத்தான் என்று மம்பட்டி தூக்கி கிளம்பி இருக்கிறார் நண்பன் சதீஷ்...

சங்கவி என்ற பெயரில் அருமையாக எழுதி கலக்கி வருகிறார், அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் மசாலாபோல இவர் பதிவுகள் முக்காலும் பல்சுவைகளின் களஞ்சியமாகவே இருக்கும், இடையிடையே கவிதைகள் எழுதி அசத்துவார், பெண்களின் அழகை மிகவும் ரசிப்பவர் என்பது அவர் எழுத்துகளிலும், கவிதைகளிளும் நன்றாகவே புலப்படும், பேஸ்புக்கிலும் கலக்கி வருகிறார்...!
-----------------------------------------------------------------
என்ன ஆண்கள் மட்டும்தான் அதிரடி பண்ணுவாய்ங்களா ஏன் நாங்க பண்ண மாட்டோமான்னு கலத்தில் குதித்து நிற்பது எங்கள் தங்கச்சி ராஜி, காணாமல் போன கனவுகள் என்று பதிவுகள் எழுதிட்டு இருக்காங்க, அன்பான, கோபக்கார தங்கச்சியும் பாசக்கார தங்கச்சியும் எனக்கு இவங்க...!

பலவிதமான காமெடி பதிவுகள் கவிதைகள் நாட்டு நடப்பு என்று கலந்து கட்டி கட்டு சோறாக தருகிறார்கள், வாங்க நீங்களும் போயி சற்று ருசித்துப் பாருங்கள்...!

பழத்தை சொல்லுங்க உங்களைப் பற்றி ஒன்று சொல்லுறேன்'ன்னு புதுசா ஒரு ஜோதிடம் சொல்றாங்க.
http://rajiyinkanavugal.blogspot.com/2012/03/blog-post_21.html
----------------------------------------------------------------
மதுரைத்தமிழன், "அவர்கள் உண்மைகள்" என்ற தலைப்பில் பதிவுகள் எழுதி வருகிறார்...!

வீட்டுக்கதவை திறக்காமலே உங்கள் வீட்டுக்குள் நுழையும் ஆபத்து என்று பதிவு எழுதி நம்மை உஷார் படுத்துகிறார், வாங்க என்னான்னு அதையும் தெரிந்து கொள்வோம்...!
-----------------------------------------------------------------
வரலாற்று சுவடுகள் என்ற தலைப்பில் பதிவுகள் எழுதும் நண்பர் இவர், பஹ்ரைனில்தான் இருக்கிறார் இருப்பினும் நாங்கள் சந்திக்க இயலவில்லை, எங்கே இருக்கிறார் என்றும் இப்போது தெரியவில்லை...!

இவர் வரலாற்று பதிவுகளை நமக்கு சொல்லித்தருகிறார், உலகின் முதல் பல்கலைகழகம் தக்சசீலா அழிந்துபோன வரலாறு, உலகத்திலேயே முதன் முதலாக ராக்கெட்டை கண்டுபிடித்தது திப்பு சுல்தான்தான் என்று நாமறியாத பல விஷயங்களை சொல்கிறார், வாருங்க அவரையும் போயி பார்த்துருவோம்...!

---------------------------------------------------------------

நண்பரும் வாத்தியுமான ராஜா, என் ராஜபாட்டை என்னும் தலைப்பில் பதிவுகள் எழுதி வருகிறார், திருநெல்வேலியில் ஆபிசரின் வீட்டு விஷேசத்திற்கு இவர் வந்தபோது இவரோடு நெருக்கமாக அளவளாவ முடிந்தது, மிகவும் அமைதியானவராக இருக்கிறார் அதே வேளையில் கிண்டல் பண்ணினால் மவுனமாக சிரிக்க வைப்பார்.

எழுத்து என்று வந்துவிட்டால், எழுத்து தப்பாக போனாலும் பரவாயில்லை என்று போட்டு கும்மி எடுத்து விடுவார், சினிமா தகவல்கள், நமக்கு பிரயோசனமான சில தகவல்களை நமக்கு சேர் செய்தும் காட்டும் பதிவர்...!

வாங்க அங்கே போயும் நாலு அப்பு அப்பிட்டு வருவோம் நம்ம வாத்தியை.


அறிமுகங்கள் வருவார்கள் அருவாள் சகிதம்...

Wednesday, February 27, 2013

புதனின் நட்சத்திரப் பதிவர்கள் இவர்கள்...!

திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால், வலையுலகின் சூப்பர் ஸ்டார் அண்ணன் சிபி செந்தில்குமார்"தான், ஈரோடு சென்னிமலை'காரர், சினிமா விமர்சனத்தில் இவரைப் பார்த்து நடுங்குகிற டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மிகவும் குறைவு, தமிழ் திரைப்படங்களில் இப்போதெல்லாம் இணையதளங்களுக்கு நன்றி என்று டைட்டில் போடக் காரணமானவராக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

டுவிட்டரில் கலக்கி வருகிறார், இவருக்கு அறிமுகம் தேவையில்லை என்றாலும் வலைசரத்தில் புதியதாக வருபவர்களுக்காக அறிமுகப்படுத்துகிறேன், என் நண்பன், ஒருமையில்தான் இவரை நான் அழைப்பது உண்டு அதற்கு எனக்கு முழு உரிமையும் கொடுத்தவர், இவரின் ஜோக் எழுத்துகள் நம்மையும் சிரிக்க சிந்திக்க வைக்கும், பிரபல பத்திரிகைகளில் எழுத்தாளராகவும் இருந்தார் இவர்...!

எப்போது நான் மும்பையில் இருந்து ஈரோடு வழியாக ரயிலில் வந்தாலும் அன்பாக என்னை சந்திக்க ரயில்நிலையம் வந்துவிடும் பாசமுள்ள அண்ணன்...!

http://www.adrasaka.com/2013/02/blog-post_8648.html விஸ்பரூபம் சினிமா விமர்சனம்.
-------------------------------------------------------

விக்கியின் அகடவிகடங்கள் விக்கி அண்ணன், கோபக்காரன், பாசக்காரன், சிறுகுழந்தை மனசுக்காரன், உள்குத்து ராஜா எளிதில் உணர்சி வசப்பட்டாலும் உடனே அமைதியாகி  ரோசிக்க தொடங்குவார்...!

இவர் பதிவுகளில் சிரிப்பும், கோபமும், ஏக்கங்களும் மனதின் வலிகளும், வியட்நாம் சரித்திரங்களும், தரித்திரங்களும், அமெரிக்காவின் இன்னொரு முகத்தையும் காட்டுவதாக இருக்கும், என்னைப்போல நாடோடி வாழ்க்கை வாழும் நண்பன், வாழ்கையில் பல வலிகளை கண்டவனும் கொண்டவனும், ஆதலால் இவரின் எழுத்துகளில் அதன் தாக்கம் அதிகம் இருக்கும்...!
மனதோடு மட்டும்" கவுசல்யா, விஜயன் நடுவில் நம்ம விக்கி, ஆபீசர் சங்கரலிங்கம். நெல்லையில் எங்களை விக்கி பார்க்க வந்தபோது எடுத்த படம்.
http://vikkiulagaam.blogspot.com/2011/09/blog-post_23.html
-------------------------------------------------------
கே ஆர் விஜயன், நினைவில் நின்றவை என்னும் தலைப்பில் பதிவுகள் எழுதி வருகிறார், இவர் எழுத்துகள் எங்கள் கன்னியாகுமரி ஆட்களுக்கே உண்டான கேலிகள் கலந்து வாசிக்க இன்பமாக இருக்கும்.

நிறைய எழுதுவதில்லை, எப்பவாவது மனம் வந்தால் உடனே ஒரு போஸ்ட் ரெடி பண்ணி பதிவிடுவார், பேஸ்புக்கில் மற்றும் கூகுள் பிளஸ்சிலும் கலக்கி வருகிறார், என் இனிய நண்பர், எப்போ ஊர்போனாலும் இவரைப் பார்க்காமல், இவருடன் சற்றே ஊர் சுற்றாமல் வந்ததில்லை, கன்னியாகுமரி மாவட்டத்துகாரனாக நான் இருந்தாலும், எனக்கு திற்பரப்பு அருவியையும், பத்பனாபபுரம் அரண்மனையையும் சுற்ற வைத்து போட்டோ எடுத்த நண்பர்...!
திக்குவாய் பற்றி அருமையான ஒரு பதிவு மற்றும் கூகுள் பிளஸ்ஸில் அருமையான படங்கள் போட்டு வருகிறார்.
தி..க்...கு வாய்............
https://plus.google.com/102253910059165944426/posts
--------------------------------------------------------
பன்னிகுட்டி ராமசாமி, பதிவுலகின் முடிசூ[டிய]டா மன்னன், ஆயிரம் கமெண்ட்ஸ் வாங்கிய அபூர்வ சிந்தாமணி, இவரைத்தெரியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது, இவர் பதிவை படித்தவர்கள் சிரித்து உன்மத்தம் பிடித்து திரும்ப வேண்டும் என்பது பதிவுலகின் ஆச்சரியம்...!

அதைவிட இவர் பதிவில் வரும் கமெண்ட்ஸ்களை வாசித்தே வயிறு பஞ்சர் ஆகிவிடும் அளவுக்கு செமையா கலகலன்னு இருக்கும்....ம்ம்ம்ம் இவரும் பதிவுகள் எழுதுவதை அதிகபட்சமாக தவிர்த்து வருகிறார்...மறுபடியும் வந்து எங்களை சிரிக்க வைக்கவேண்டும் என்பது எங்கள் ஆவா....!
தமிழ்சினிமாவின் டாப் நடிகர்கள்-2012
--------------------------------------------------------

மின்னல்வரிகள் அண்ணன் பால கணேஷ், இவர் எழுத்துப்பக்கம் போனால் சிறுகதைகள், மற்றும் தொடர் கதைகள் என்று வலம் வருகிறார், சென்னையின் எழுத்தாளர்கள் எல்லாரையும் பார்த்து பழகி இருப்பார் என்றே நினைக்கிறேன், நம்ம சுஜாதாவை நினைவில் கொண்டு வரும் பிரபல எழுத்தாளர் இவர்...! [[படத்தில் நடுவில் இருப்பவர்]]
சினிமா - சில பய(ங்கர) டேட்டா!
-------------------------------------------------------
கூடல்பாலா, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து, மரணத்தை நெரு[க்]ங்கிவிட்டு வந்தவர், இப்போதும் அதனால் உடல் பாதிப்பில் இருந்து மருந்து சாப்பிடுகிறார்....இவர் எழுத்துக்கள் சுற்று சூழல் பாதுகாப்பும், மக்களின் பாதுகாப்பு பற்றியுமே அதிகமாக இருக்கும், இப்போதும் அணுஉலைக்கு எதிராக போராடி வருகிறார்.

என் இனிய நண்பர், இரண்டுமுறை நேரில் சந்தித்து அளவளாவி இருக்கோம்...!
வாருங்கள் நண்பர்களே பசுமை உலகம் படைப்போம்.
--------------------------------------------------------
வந்தேமாதரம் சசிகுமார், பதிவுலகில் பதிவுகளை எப்படி உபயோகிக்க வேண்டும், அதனை எப்படி அலங்காரப்படுத்தி வாசகர்களை கவரவேண்டும் என்பதோடு...பதிவர்களுக்கு தேவையான அனைத்து தொழில் நுட்பங்களையும் அழகாக தன் பதிவில் சொல்லி வருகிறார்.

பதிவர்கள் அநேகம்பேர் இவர் பதிவை படித்துதான் தன் வலைத்தளங்களை அழகு படுத்து வைத்து உள்ளார்கள்....! இவரோடு நான் போனில் பேசியதுண்டு, அண்ணே கண்டிப்பா சென்னை வாங்க அண்ணே என்று அன்பாக அழைப்பார்...!
விண்டோசில் போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மா...
--------------------------------------------------------
மனதோடு மட்டும் கவுசல்யா, பசுமை புரட்சி நடத்தும் பசுமை புரட்சி பெண், இவர்கள் எழுத்துகளும் பசுமை உலகம் பற்றியே இருக்கும், நாட்டின் மக்கள் மீது அதிக பாசமுள்ளவர், அநியாயம் கண்டு பொங்கும் பெண் சிங்கம்....!

எப்போது நான் நெல்லை போனாலும் எங்களைப் பார்க்க குழந்தையைப்போல பாசமாக குடும்பமாக ஓடோடி வருவார், அவர் கணவர் ஜோதிராஜிம் என் நெருங்கிய நண்பர்கள் லிஸ்டில் இருக்கிறார்...இவர்கள் அன்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும்...!
http://www.kousalyaraj.com/2013/02/blog-post_6.html
---------------------------------------------------------
"செல்ல நாய்க்குட்டி" தலைப்பில் பதிவிடும் சகோதரி ரூபினோ, என்னங்க நாய்குட்டின்னு பேர் வச்சிருக்கீங்கன்னு கேட்டால் லேசாக சிரித்துவிட்டு சொல்வார், நாய்க்குட்டிகள் நன்றி உள்ளதும் பாசமாக நம்மை சுற்றியும் வருகிறதல்லவா அதான் அந்தப் பெயர் என்பார்.

திடீரென கவிதைகள் எழுதுவார், விமர்சனங்களை மலர்ந்த முகத்துடன் ஏற்கிறேன் என் பதிவுகள் மேன்மை பெற என்று எழுதி வருகிறார், இவரையும் நான் நெல்லை போகும் போது பார்க்காமல் திரும்பியதில்லை...!

விக்கி நெல்லை வந்தபோதும் இவர்களும் கவுசல்யாவும்  வந்து மினி பதிவர் சந்திப்பு நடத்தினோம்...!

தெய்வீகக் கனவுகளும் , பூர்வ ஜென்ம நினைவுகளும்[[கருப்பாக இருப்பது அவரின் லிங்க்'தான்]]
-----------------------------------------------------------
வெங்கட் நாகராஜ், தலைநகர் டெல்லி போகாதவர்கள் இவர் பதிவை, பயணத்தொடரை வாசித்தாலே போதும், நாமே நேரில் போய் வந்த திருப்தி இருக்கும்....இவரின் பயணத்தொடர்களை விடாமல் நான் வாசித்தது உண்டு...!

நேரம் கிடைக்குமெனில், ஆபீசரையும் விஜயனையும் கையில் பிடித்து கொண்டு வெங்கட் தலைமையில் டெல்லியை ஒரு கலக்கு கலக்கும் எண்ணமும் எனக்கு உண்டு...!
தலை நகரிலிருந்து... பகுதி 2
-----------------------------------------------------------
மனசாட்சி கோவை முத்தரசு, செம காமடி பேர்வழி, பதிவுலகில் என்ன ஆனாலும் உடனே எனக்கு போன் பண்ணி என்ன மக்கா இப்பிடியெல்லாம் நடக்குது என்று கேட்டு...போனிலேயே நாங்க அரட்டை அடிப்பது உண்டு, இவர் பதிவுகள் சிரிப்பாகவும், சிலவேளை சிந்திக்க கூடியதாகவும் இருக்கும்...! பேஸ்புக்லையும் கலக்குகிறார்...! பெண்களின் கூந்தலுக்கு மணமுண்டா என்னும் கேள்வியோடு வருகிறார் பாருங்கள்.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டோ? - சில யோசனைகள்


பயணம் தொடரும்......

Tuesday, February 26, 2013

மனதிற்கும் வாசிப்புக்கும் நிறைவைத் தரும் அய்யாக்களின் செவ்வாய் இன்று...!

கோமதி நடராஜன், ஹா ஹா ஹாஸ்யம் என்ற பெயரில் நல்ல நல்ல நகைச்சுவை தொகுப்புகளை அவரது பதிவுகளில் பதித்து வருகிறார். சிரிப்பு மன ஆரோக்கியத்துக்கு மருந்து, மன ஆரோக்கியம் இருந்தால், உடல் ஆரோக்கியம் தானே வரும் என்று தொடங்கி கிச்சு கிச்சு மூட்டுகிறார் படிச்சு பாருங்கள். மணிமேகலை பதிப்பகத்தில் இவரது புத்தகங்களும் வெளி வந்துள்ளது என்பது இன்னும் கூடுதல் சிறப்பு...! காமெடியை மிகவும் ரசிக்கும் அக்கா...!


நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு
[[அய்யாக்கள்னு சொல்லிட்டு என்னய்யா கோமதி அக்காவை அறிமுகப்படுத்திறியேன்ன்னு கேக்காதீக, அக்காவுக்கும் என் மனசுல அய்யாக்களுக்கு உள்ள மரியாதை எப்பவும் உண்டு...!]]


புலவர் சா ராமாநுசம் அய்யா அவர்கள், கவிதைகளில் சாடல், கோபம், வெறுப்பு, காதல், அன்பு என முப்பரிமாணங்களிலும் கவிதைகள் இயற்றி அசத்தி வருகிறார். ரசித்து படித்து மகிழ்வேன்...!



காதல் கிறுக்கர்கள் பெருகிவிட்டார்-இளம் கன்னியர் பலரும் கருகிவிட்டார்!

அய்யா ரமணி அவர்கள், அவரும் கவிதைகளில் "தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்து போல" பலவிதமாக கலந்து கலக்குகிறார், எனக்கு அவரை குரு  என்றே அழைப்பது மிகவும் பிடிக்கும். தீதும் நன்றும் பிறர் தரா வரா என்று எழுதி வருகிறார்...!

சலிப்பில் விளையும் விழிப்பு

ரத்னவேல் அய்யா அவர்கள், இவரை இரண்டுமுறை சந்தித்தும் சரியாக அளவளாத சந்தர்ப்பமாக அமைந்தது மனசுக்கு இன்னும் கஷ்டமாகவே இருக்கிறது, இவர் ஒரு சமூக ஆர்வலர் மட்டுமில்லை விலங்குகள் பறவைகள் மீது அதிக பாசம் உள்ளவர், மற்றும் நமக்கு மிகவும் பிரயோசனமுள்ள பதிவுகளை ஷேர் செய்து நமக்கு காட்டுவதில் அளவில்லாத ஆர்வம் கொண்டவர். பேஸ்புக்கிலும் கலக்கி வருகிறார்...!
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவுப் பழக்கங்கள் http://rathnavel-natarajan.blogspot.com/2012/04/blog-post_30.html

சென்னை பித்தன், நான் பேச நினைப்பதெல்லாம் என்ற தலைப்பில் எழுதி, இப்போது எழுதுவதை விட்டுவிட்டார், இவர் மீண்டும் பதிவுலகில் கலக்கவேண்டும் என்பது எனது ஆசை, இவரை தல என்றே பாசமாக அழைப்பேன், அதற்க்கு பிறகுதான் எல்லாரும் இவரை பதிவுலக அஜித்தாக கொண்டாடி, கொண்டாடுகிறார்கள், இவர் எழுத்துகள் பாமரனுக்கும் புரியும்படியாக இருக்கும், சிரிப்பு எழுதினால் அன்று முழுவதும் வயிறு நிறைய சிரிக்க வைப்பதில் கில்லாடி...!
இழந்த சொர்க்கங்கள்! மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!!

கக்கு மாணிக்கம், பகிர்தலும் நன்றே, பொன் மாலை பொழுது என்ற தலைப்பில் எழுதி வருகிறார், நாட்டு நடப்புகளையும், மக்களின் அறியாமைகள், அரசியல்வாதிகள், டெக்னிகல் விஷயங்கள் பற்றி எழுதி வருகிறார், என்னை மிகவும் கலாயிக்கும் உரிமை பெற்றவர்களில் இவரும் ஒருவர்...!
இனி எவருக்கும் வேண்டாம் பாரத ரத்னா....

உணவு உலகம் சங்கரலிங்கம், சாப்பிடும், வாங்கும் உணவு பொருட்கள் தரமானதுதானா..? தரமில்லாததை எப்படி கண்டுபிடிப்பது என்பதை நமக்கு விளக்கி சொல்வதோடு, தரமில்லாத உணவு பொருட்களை விற்போர் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுத்து உள்ளே தூக்கிப்போடும் நெல்லை மாநகராட்சி ஆபீசர் இவர்.

தமிழக தென் மண்டலத்தில் [[நெல்லை பதிவர் சந்திப்பு]] முதன் முதலாக பதிவர்கள் சந்திப்பு நடத்தி அசத்தியவர், பதிவர்கள் மீது மிகவும் பாசம் கொண்டவர், இவர் அருகில் இருந்தால் பயமே இருக்காது, தாயின் அருகில் இருப்பது போன்றே எனக்கு தோன்றும், அம்புட்டு அன்பு கொண்டவர், ஊர் போனால் இவரை சந்திக்காமல் நான் திரும்புவதே கிடையாது, நான் போகலைன்னா ரயில்வே [[மும்பை போகும் போது]] ஸ்டேசனுகே சிற்றுண்டி கொண்டு வர செய்து கொடுத்துவிட்டுதான் செல்வார்.

ஆபிசருக்கும் அண்ணன் கக்கு மாணிக்கத்துக்கும் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அய்யாக்களின் மரியாதை எப்பவுமே உண்டு, இருந்தாலும் அவர்களை எங்கள் நண்பர்கள் வட்டத்தில் கொண்டுவந்து கலாயிப்பது ஜாலி என்று அவர்களை கடத்திவிட்டோம் [[ஹி ஹி]] நண்பர்கள் அதிரடிக்குள்...!

http://www.unavuulagam.in/2011/06/blog-post_13.html
பதினெட்டு பட்டியும் நெல்லையில் கூடிய நாள்......நிறைய பதிவர்களின் லிங்க் இங்கே இருக்கிறது போயி பார்த்துக்கொள்ளுங்கள்.

சீனா அய்யா, இவரைப்பற்றி நான் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை உங்களுக்கு நல்லாவே தெரியும், அய்யாவின் சேவையும், பொறுமையும் என்னை வியக்க செய்யும் விஷயங்கள், நெல்லை பதிவர் சந்திப்பில் அய்யாவை சந்தித்தாலும் நிறைய பேசமுடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு நெஞ்சில்...!

படரும் அறிமுகங்கள் இனியும்.....











Monday, February 25, 2013

பச்சபுள்ள கையில அருவாளை தூக்கி கொடுத்துட்டாயிங்கய்யா...!

வலைசரம் ஆசிரியராக என்னையும் ஊக்கப்படுத்தி எழுத வைத்த சீனா அய்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், இது பலத்தரப்பட்ட ஜாம்பவான்களும் ஜாம்பவாட்டிகளும் பொறுப்பு வகித்த ஒரு பொறுப்பாகும், எனவே மரியாதை கலந்த பயம் மனதில் இருந்தபடியால் சற்றே எட்டிநின்று பார்த்து விட்டு பலமுறை ஓடிவிடுவது வழக்கம்.
ஆனாலும் என்னையும் சீனா அய்யா விடாமல் தேடிப்பிடித்து உங்கள் நடுவில், லைம் லைட்டில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார், நன்றிகள் அய்யா....!

என்னைப்பற்றி வலையுலகில் சிலருக்கு தெரிந்திருந்தாலும், தெரியாதவர்களுக்கு பாமரனாகிய என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில் சற்று மனதுக்கு பெருமையே...!

எனது குடும்ப பூர்வீகம் விருதுநகர் மாவட்டம், முப்பாட்டனுக்கும் அப்பாட்டன் அதுக்கும் முப்பாட்டனுக்கும் அப்பாட்டனும் வந்து குடியேறியது கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுளம் என்னும் ஊரில், அம்மா திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளத்தை [[கூடங்குளம் அருகில்]] சேர்ந்தவர், என் மனைவி அதே திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகில் அலங்காரப்பேரியை சேர்ந்தவர்.

நான் செட்டில் ஆகியிருப்பது மும்பை என்னும் யுத்தபூமியில், வேலை செய்வது வளைகுடா நாட்டில் ஒன்றான பஹ்ரைனில், எனக்கு இரண்டு குழந்தை செல்வங்கள் உண்டு.

அன்பு, பாசம், நேசம், அழுகை, வருத்தம், ஏமாற்றங்கள், கோபங்கள், வெறுப்புகள், காதல்[கள்...!] அதனால் ஏற்ப்பட்ட உயிரிழப்பு, நட்புகள்........ இவைகள் யாவும் நான் அனுபவித்ததும், என்னை சுற்றி நடந்தவைகளையும்தான் நான் அதிகமாக என் வலைத்தளங்களில் எழுதி வருகிறேன்.

எல்லாவற்றிற்க்கும் மேலாக என்னை சுற்றி நடக்கும் நடந்த சிரிப்பு காமெடி சம்பவங்களையுமே கூடுதலாக எழுதவேண்டும் என்று நினைப்பேன்.

பதிவை வாசிக்க வருபவர்களுக்கு ஒரு மருந்தாக ஒரு ரிலாக்ஸாக இருக்கவேண்டும் என்றே முயற்சிப்பதும், சிலவேளைகளில் நாட்டு நடப்பைப்பார்த்து பொங்குவதும் உண்டு...

பதிவுலகம் எனக்கு அநேக நட்புகளையும், உயிர் நண்[பி]பர்களை தந்திருக்கிறது என்பதை எந்த மகா சபையிலும் நின்று உரக்க சொல்லமுடியும் என்னால்...!

அதேப்போல புத்தகப்பிரியனாக இருந்த என்னை எழுதவைத்து, வலையுலக நண்பர்கள் வாரி அணைத்தும் சேர்த்தும் கொண்டார்கள் நட்பால்...!

அப்படியே பல வலையுலக ஜாம்பவான்கள், ஜாம்பவாட்டிகளையும் சந்திக்கவும், அலைபேசியிலும், சாட்டிங்கிலும் நலம் சுகம் விசாரிக்கவும் செய்ததும் இதே பதிவுலகம்தான்.

எல்லார் பற்றியும் வொவ்வொரு நாளும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நன்றி வணக்கம் உங்கள் எல்லார் ஆதரவிற்கும் அன்புக்கும்....!

வலைச்சரம் நிர்வாகிகள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...நன்றிகள்....

அப்படியே எனது மூன்று பதிவுகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி, நாளையில் இருந்து எனக்கு பிடித்தவர்களையும், உங்களுக்கும் பிடிக்கும் வண்ணம் பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன் நன்றி வணக்கம்...!
[[பச்சபுள்ள கையில அருவாளை தூக்கி கொடுத்துட்டாயிங்கப்பா]]

Sunday, February 24, 2013

தமிழ் இளங்கோ நாஞ்சில் மனோவிடம் பொறுப்பினை ஒப்படைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - தி தமிழ் இளங்கோ தான் ஏற்ற பொறுப்பினை முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடம் இருந்து விடை பெறுகிறார். 

என்னைப்பற்றி, கவிதைகளுக்கு வரவேற்பு, வாழ்க்கை என்றால் என்ன, கூகிளூக்கு நன்றி, கருத்துரைகள், வலைப்பதிவு ஒரு கலை, நாள் என்ன செய்யும் என பல்வேறு தலைப்புகளில் ஏழு பதிவுகள் இட்டு நூறு பதிவர்களையும் அவர்களது நூற்றிப் பதினெட்டு  பதிவுகளையும் அறிமுகப் படுத்தி ஏறத்தாழ முன்னூற்று ஐம்பத்தெட்டு  மறுமொழிகள் பெற்றிருக்கிறார். 

அறிமுகங்கள் அத்தனையும் அருமை - தேடிப்பிடித்து அறிமுகப் படுத்தி இருக்கிறார். 

தி தமிழ் இளங்கோவினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க நாஞ்சில் மனோ அன்புடன் இசைந்துள்ளார். 


இவரது  பூர்வீகம் விருதுநகர் மாவட்டம், முன்னோர்கள் முற்காலத்தில் வந்து குடியேறியது கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம் என்னும் ஊரில், அம்மா திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளத்தைச் கூடங்குளம் அருகில் சேர்ந்தவர்,  மனைவி அதே திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகில் அலங்காரப்பேரியை சேர்ந்தவர்.

இவர் செட்டில் ஆகியிருப்பது மும்பையில், வேலை செய்வது வளைகுடா நாட்டில் ஒன்றான பஹ்ரைனில், இவருக்கு  இரண்டு குழந்தைச் செல்வங்கள் உண்டு.

அன்பு, பாசம், நேசம், அழுகை, வருத்தம், ஏமாற்றங்கள், கோபங்கள், வெறுப்புகள், காதல்[கள்...!] அதனால் ஏற்ப்பட்ட உயிரிழப்பு, நட்புகள்........ சிரிப்புகள் இவைகள் யாவும் இவர் அனுபவித்ததும், இவரைச் சுற்றி நடந்தவைகளையும்தான் இவர் அதிகமாக இவரது  வலைத்தளங்களில் எழுதி வருகிறார்..

நாஞ்சில் மனோவினை வருக வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் தமிழ் இளங்கோ

நல்வாழ்த்துகள் நாஞ்சில் மனோ 

நட்புடன் சீனா 

7. வலைச்சரம் ஏழாம் நாள்: நாள் என் செய்யும்?



இறைவனால் படைக்கப்பட்ட எல்லா நாளுமே நல்ல நாள்தான். இது நல்லநாள் இது கெட்டநாள் என்று எதை வைத்துச் சொல்வது? ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பார்ப்போடு விடிகிறது. நாளும் ஒரு அனுபவத்தோடு முடிகிறது.


நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
                        - குமரகுருபரர் (கந்தர் அலங்காரம்)

வலைப்பதிவு என்பது தனி உலகம். தொடர் ஓட்டம் ( Relay Race)  போல. எழுதிக் கொண்டே இருப்பவர்கள் ஒரு கால கட்டத்தில் நின்று விடுகிறார்கள். புதிதாக வருவர்கள் தொடர்கிறார்கள். இருந்தாலும் பதிவுக் கோப்பை வழிந்தபடியேதான் இருக்கிறது. தீருவதில்லை. எல்லா பதிவர்களையும் இங்கு என்னால் காட்ட இயலவில்லை. ஒவ்வொரு பதிவரைப் பற்றியும் ஒரு பதிவு போடலாம். ஆனால் அதற்கான நேரமும் இடமும் போதாது.

அண்மையில் தமிழ் மணம்  தமிழ் வலைப்பதிவுகளின் தர வரிசை (Traffic Rank) முழுப் பட்டியல் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ள முதல் நூறு பதிவுகளுக்கு மட்டும் அவற்றின் இணையதள முகவரிகளை இணைத்து ஒரே பதிவில் தொகுத்தேன். (நன்றி: தமிழ்மணம்) http://tthamizhelango.blogspot.com/2013/01/1-100-traffic-rank-2012.html அதில் 100 பதிவர்களை காணலாம்.

கடந்த ஒருவார காலம் வலைச்சரத்தில் என்னை உற்சாகப்படுத்திய, எனது பதிவுகளை விமர்சனம் செய்த அனைவருக்கும் நன்றி! மீண்டும் சந்திப்போம்!
இன்றைய  எனது அறிமுக வலைப்பதிவுகள்:

பதிவின் பெயர்: எஸ்.ராமகிருஷ்ணன்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. நான் படித்த அவரது ஒரு கட்டுரையை மட்டும் இங்கு சொல்ல வந்தேன்.

வாசிப்பு ஆசை அதிகம் உள்ளதால் நிறைய புத்தகங்களையும் வீட்டில் சேர்த்து வைக்கிறோம். நமக்குப் பின் இந்த புத்தகங்கள் கதி? நமது பிள்ளைகள் என்ன செய்யப் போகிறார்கள்? இதற்கு விடையாக இவரது இந்த பதிவு.

// புத்தகங்களைச் சேர்த்து வைப்பதால் ஒரு பயனுமில்லை, வீட்டில் உள்ள அலமாரி தான் அடைந்து போகிறது அதனால் படித்தவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று வீட்டோர் சொல்கிறார்கள், தூக்கி எறிய மனமில்லை, ஆனால் வைத்துக் கொள்ளவும் இடமில்லை , இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது,//


பதிவின் பெயர் : துளசிதளம்

வீடு திரும்பல் மோகன் குமார்அவர்கள் துளசி-கோபால் அவர்களின் மணிவிழா சிறப்பு பதிவு  ஒன்றை  எழுதி இருந்தார்கள். அப்போது இவரது வலைத்தளம் சென்று படித்தேன். எனது கருத்துரைகள் எழுதியதில்லை.
மூத்த பதிவரின் மணிவிழா நிகழச்சியை அவரே (துளசி கோபால் அவர்களே) சொல்கிறார். பல பதிவர்களின் மகிழ்ச்சியை இங்கே காணலாம்.
பதிவின் பெயர் : SIVAPARKAVI 

சினிமா விமர்சனம் தொடங்கி பல பொது கட்டுரைகளைத் தந்துள்ளார். எனது பதிவு ஒன்றிற்கு இவர் தந்த கருத்துரை இது...

// கம்பெனி சீக்ரெட்ஸ்ன்னா…. இந்த பதிவுலகில் பெற்ற அனுபவங்களின் தொகுப்புதான் இந்தப் பதிவு // என்று தொடங்கி பதிவு உலகில் தனது அனுபவங்களைச் சொல்கிறார்.

பதிவின் பெயர் : கரிசக்காடு
http://udhayasankarwriter.blogspot.in  ( உதயசங்கர் )
இவர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். சிந்தனையாளர். தான் சார்ந்த மண்ணைச் சார்ந்து தனது பதிவின் பெயரை வைத்துள்ளார். .நா.சு.வும் சி...வும்
என்ற கட்டுரையில் க.நா.சுவின் இலக்கியப் பணி பற்றி பேசுகிறார்.

பதிவின் பெயர் : தமிழன் வீதி
http://tamilanveethi.blogspot.in ( தோழன் மபா )

மகேஷ் பாபு பத்மனாபன் என்ற தோழன் மபா அவர்கள்.  விளம்பர உலகம்!  மற்றும் கவிதை வீதி என்ற வலைப் பதிவுகளிலும் படைப்புகள் வருகின்றன.

மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் குத்தாலம் மற்றும்  மாதிரிமங்கலம் தாண்டினால்   வரும் திருவாலங்காடு இவரது ஊர். அந்த ஊரைப் பற்றி ஒரு பதிவு.


பதிவின் பெயர் : முனைவர் நா.இளங்கோ -மலையருவி

முனைவர் N.இளங்கோ. புதுவை தமிழ்ப் பேராசிரியர் இவர். தனது பதிவுகளில் தமிழ் இலக்கியம், புதுச்சேரி, மானிடவியல் என்று பல தலைப்புகளில் எழுதியுள்ளார். நாட்டுப்புறவியல் என்ற தலைப்பில் அவர் அளித்த ஆய்வுக் கட்டுரை....


பதிவின் பெயர் : இணையக் குயில்
http://duraidaniel.blogspot.in ( துரை டேனியல்)

தன்னைப் பற்றி “புதுமையை விரும்புபவன் பழமையை விட்டுவிடாதவன். ஏதோ மாறுதலுக்காக அல்ல உண்மையான மாற்றங்களுக்காக சிந்திப்பவன்என்று சொல்லிக் கொள்ளும் இவர் இந்த பதிவில் பழமையையும் புதுமையையும் இணைத்து சிந்தித்து  எழுதிய சில குறிப்புகள்.
http://duraidaniel.blogspot.in/2012/10/blog-post_28.html




பதிவின் பெயர்: நினைவில் சில...கனவுகள்!
http://semmalai.blogspot.com  ( செம்மலை ஆகாஷ்)

இளம் பதிவரான இவர் சமையல்,அனுபவம்,தொழில் நுட்பம் என்று எழுதி வருகிறார். அவர் எழுதிய ஒரு பதிவு கீழே
 
 


http://kumarimainthan.blogspot.in  ( குமரிமைந்தன் )

நான் வலைப் பதிவுகளை படிக்க ஆரம்பித்த காலத்தில் இவரது உணர்ச்சிபூர்வமான கட்டுரைகளைப் படித்து இருக்கிறேன். குமரி மைந்தன் என்பவர் 1984 இல் பொதுப்பணித் துறையில் இளநிலைப் பொறியாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.(See Profile) 2005 முதல் வலைப்பதிவாளர். இப்போது அவருக்கு நிச்சயம் வயது எண்பதை நெருங்கியிருக்கும். முதுமையின் காரணமாக இவர் இப்போது  2009 இற்குப் பிறகு அதிகம் எழுதவில்லை என்று நினைக்கிறேன்  மேலும் குமரிக் கண்ட அரசியல் என்ற வலைப்பூவும் இவருடையதே ஆகும்.

நமது நாடு முன்னேற முடியாமல் போனதற்கு காரணம்வருமான வரி விதிப்புமுறையே காரணம் என்பதனை  வெற்றிடம் http://kumarimainthan.blogspot.in/2009/07/blog-post_05.html என்ற பதிவில் தெளிவாகக் காட்டுகிறார்.

குமரி மைந்தன் படைப்புகள் பலவும் ஆராய்ச்சி கண்ணோட்டத்தில் அமைந்தவை. குமரிக் கண்ட ஆய்வுகள், மதுரையை எரித்தது யார்?, ஓங்கலை(சுனாமி) போன்ற தலைப்புகளில் அவர் எழுதியவற்றைச் சொல்லலாம்.

பதிவின் பெயர் : ஸ்கூல் பையன்

பதிவின் முகப்பில்பேரு போட்டோ எல்லாம் பார்த்து என்னை சின்னப்பையன்னு நினைச்சிராதீங்க. இது எங்கப்பாவோட blogஎன்று ஒரு சிறிய அறிமுகம். பதிவுகளைவிட மற்றவர்கள் பதிவில் இவரது கருத்துரைகளை மட்டுமே காணமுடிகிறது. எனவே அண்மையில் இவர் எழுதிய ஸ்டார் ஹோடல் ஒன்றில் சாப்பிட்ட அனுபத்தினைஹோட்டல் - பார்க் ஷெரட்டன் ஹோட்டல்ஸ் & டவர்ஸ், சென்னைஎன்ற பதிவினையே இங்கு தெரிவு செய்கிறேன்.


இந்த பதிவர் தனக்கு இருக்கும் திறமைக்கு இன்னும் எழுதலாம். வாருங்கள்! வரவேற்கிறோம்1



பதிவின் பெயர் : Dondus dos and donts
http://dondu.blogspot.in (டோண்டு ராகவன் )

அண்மையில் மறைந்த வலைப்பதிவர் டோண்டு ராகவன் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் தனக்கு வந்த புற்றுநோய் பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளார். இதில் நோயின் தன்மை தெரிந்தும் தெளிவாக இருந்த அவரது மனவுறுதியைக் காணலாம்.
புற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்
http://dondu.blogspot.in/2012/10/blog-post.html

அந்த பதிவில் எனது கருத்துரையை எழுதி இருந்தேன்.சென்ற ஆண்டு திரைப் படம் - பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS) என்று ஒரு பதிவு எழுதினேன். அப்போது அவர் எனது பதிவில் எழுதிய கருத்துரை:

dondu(#11168674346665545885) said... இப்படம் பற்றி நான் இட்ட பதிவைப் பார்க்க: http://dondu.blogspot.in/2010/09/blog-post_898.html அன்புட்ன், டோண்டு ராகவன்  3 October 2012 15:34

அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி!