வலைச்சரம் வாசிப்போர்க்கு ஒரு நற்செய்தி ( நற்செய்தியா இல்லையா என்பதை நாங்க சொல்றோம் நீமேலசொல்லு ) இந்தவாரம் அகலிகன் வாரம். வலைச்சரத்தில் இந்தவாரம் முழுதும் என்னை கவர்ந்த, பாதித்த,மயக்கிய என பல கமாக்களை போட்டுகிட்டே போகலாம் அப்படியான தளங்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கபோகிறேன்.( யாரோ உனக்கெதுக்கு இந்த வேலைன்னு கேக்கறாப்போல தெரியுது அவங்களை அப்புறமாகவனிச்சுக்கிறேன் ) இந்த வாய்ப்பை எனக்களித்த அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகள். தொடர்ந்து வாசிப்பவர்களுக்கும் வாசிக்காம தப்பிக்கபார்ப்பவர்களுக்கும் நன்றிகள்.
வாழ்க்கை அலை புரண்டுகொண்டே செல்கிறது. இதில் சிக்கி மூச்சு திணறுபவர்களும், அலையின் வேகத்தோடுஅடித்துச்செல்லப்பட்டவர்களும்,அதையும் மீறி அதன் உச்சியில் நின்று சாகசம் செய்பவர்களும் இருக்கத்தான்செய்கிறார்கள். மூச்சு திணறியவர்கள் மெல்ல ஆசுவாசப்படுத்திக்கொண்டு அடுத்த முயற்சியைதொடர்கின்றனர். உச்சியில் நடனமாடியவர்கள் கால் இடறி தலைகுப்புற விழவும்செய்கின்றனர். அடித்துசெல்லப்பட்டவர்களைப்பற்றி நாம் அறியாவிட்டாலும் அவர்களும் எகேனும் கரை ஒதுங்கித்தான் இருப்பார்கள் என நம்புவோம்.
மூச்சு திணறினாலும், ஆட்டம் கவிழ்ந்தாலும், அடித்துச்சென்றாலும் மீண்டும் மீண்டும் முயற்சிக்க காரணம் தனித்தன்மையையும் அடையாளத்தையும் பெறவேண்டித்தான்.
விவரம் தெரியத்தொடங்கியதுமே நமக்கு மற்றவரின் கவனிப்பும் பாராட்டும் தேவைப்படுகிறது. குழந்தையின் அழுகையும் சிரிப்பும்கூட தன்னை கவனிக்கவேண்டும் என்பதற்காகத்தான். நல்ல உடைகள் அணிவதும்,அலங்காரங்கள் செய்துகொள்வதும், கத்திபேசுவதும், கவிதை கிறுக்குவதும் என பலவும்கூட மற்றவர்கள் நம்மை கவனிக்கவேண்டும் என்பதற்கான முயற்சிகள்தான்.
சமூக வலைத்தளங்கள் அத்தகைய கவன ஈர்ப்புக்கான வெளிப்பாட்டுத்தளமாக உள்ளன என்றால் மிகையில்லை. வலைத்தளங்களில் இயங்குபவர்கள் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் யாராலோ கவனிக்கப்படத்தான்செய்கிறார்கள் அதுவே அவர்களை தொடர்ந்து இயங்கச்செய்கிறது.
ஒவ்வொரு மலரும் அது அதற்கான அழகோடும் மணத்தோடும் பூத்துக்கொண்டிருக்கின்றன. அவை எவையும் தன்னைதான் உலக அழகி என்றும் நறுமணத்தின் நாயகி என்றும் எப்போழுதுமே நினைத்துக்கொள்வதில்லை, பிரகடனப்படுத்துக்கொள்வதுமில்லை மல்லிகையின் வாசம்தான் பெருபாலானவர்களுக்கு பிடித்ததாய் உள்ளதால் கனகாம்பரமோ அல்லது காட்டு பூவோ தன் வாசத்தை மல்லிகைக்கு மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. ஒரு பூவிற்கு வாசம் அழகு, ஒரு பூவிற்கு தோற்றம் அழகு இவற்றை தேவைக்கேற்ற அளவுகளில் எடுத்து மொத்தமாய் சரமாக்கிக்கொண்டால் அதன் மணமும் அழகும் கூடுகிறது.
தமிழில் இயங்கிவரும் வலைத்தளங்களூம் அப்படித்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தன்மை கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் அவர் அவருக்கான பார்வையை அவர் அவர் கோணத்தில் எழுதிவருகின்றனர். இது வாசிப்பவர்களின் பார்வையை மேலும் விசாலமாக்குகி றது.
சமகாலத்தில் வலைத்தளங்கள் ஒட்டு மொத்த தமிழர்களின் வாசிப்பை அதி கரித்திருக்கிறது என்பதில் யாரு க்கும் சந்தேகம் இருக்கமுடியாது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என நாம் நினைத்துக்கொண்டிருக்கு ம் பத்திரிக்கைத்துறையும், ஊடகத்துறையும் செய்ய தவறும், அல்லது தயங்கும் வேலையை பல வளைத்தளங் கள் துணிவோடும், சிரத்தையோடும் செய்துவருகின்றன என்பதே அதற்கு காரணம்.
தொடக்கத்தில் இவை தங்களுக்குள் குழு அமைத்துக்கொண்டு மாற்றுக்கருத்து கொண்டவர்களுடன் வரட்டு கும்மிஅடித்துக்கொண்டிருந்தது. வாசகர்களும் இந்த அரசியலில் சிக்கி அவதிப்பட்டனர். காலப்போக்கில் இது ஒரு கருத்துபரிமாற்ற களம்தான் என்பதில் தெளிந்தனர். (நான் வலைத்தளங்களை அப்படித்தான் பார்க்கிறேன்.)
இனி என்னைபற்றி :
பள்ளி காலங்களிலும், கல்லூரி காலங்களிலும் பேச்சுபோட்டிகள், பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகளை தொகுப்பதுஎன பலவற்றில் ஆர்வமுடன் கலந்துகொண்டதுண்டு. (பார்வையாளனாகத்தானே?ன்னு யாரோ கேட்கறீங்கபரவாயில்ல காதுல விழாதமாதிரியே இருந்துடறேன்.) சிறுவயது முதலே ஓவியத்தின்மேல் ஆர்வம் இருந்ததனால்(பார்க்க அழகா இருக்கும் ஓவியங்களை பார்த்து வரைய முயற்சிப்பதுதானே ஆர்வம் என்பது? ) அதன் அடுத்தபரிமாணமான புகைப்படத்துறையை தெர்ந்தெடுத்து இன்றுவரை அதில் பயணிக்கிறேன். என் தொழில் சார்ந்த படைப்புக்களை காண இங்கே சொடுக்கவும் http:// sjdigitalphotography.blogspot. in/search/label/Children பல தலைப்புகளின்கீழ் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன நிதானமாக கண்டுமகிழுங்கள்.
2011 ஜனவரியில் அகலி(கை)கன் என்ற வலைத்தளம் தொடங்கி இன்றுவரை தொடர்கிறேன். மிகக்குறைவாகத்தான்எழுதி இருக்கிறேன் என்றாலும் கவிதைகள் பல நிறைவாய் இருப்பதாய் நண்பர்கள் சொல்கிறார்கள். ( அவங்கசொல்லமாட்டேங்கறாங்க அதான் அவங்க சொன்னதா நானே சொல்லிக்கிறேன். ) இல்லையா? ஆமாவா? என்பதைபடித்துப்பார்த்து நீங்களே சொல்லுங்கள்.
மற்றபடி வலைத்தளங்கள் அறிமுகம் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் நாளை தொடங்கும்