Thursday, July 31, 2014

தோட்ட உலாவிற்கு வருக வருக!

வலைச்சர வாசகர்களுக்கு வணக்கங்கள்!

அனைவரும் நலமா? தோட்டமும் நூலகமும் அமைப்பது எங்கள் கனவு என்று நேற்று நூல்கள் வாங்கும் முன் படித்துப் பார்க்க நூல் அறிமுகத்தளங்கள் பற்றி எழுதியிருந்தேன். இன்று வீட்டுத் தோட்டம் பற்றி தகவல் தரும் தளங்கள் பற்றிப் பார்ப்போமா?

தோட்டம் என்கிற பெயரிலேயே எழுதும் சிவா, எப்படி இருந்த இடத்தை தன் வீட்டுத் தோட்டமாக மாற்றி இருக்கிறார் என்று பாருங்கள். தோட்டம் அமைப்பதற்கான தகவல்களை இங்கு மற்றும் இங்கு தந்திருக்கிறார். மாடித் தோடம் அமைப்பது பற்றிய தன் அனுபவத்தை இங்கு மற்றும் இங்கு பகிர்ந்து இருக்கிறார். அவரின் வீட்டில் விளைந்த தர்பூசணியைப் பாருங்கள்!

நான்கு பெண்கள் தளத்தில் மருத்துவம், பொருளாதாரம், சினிமா என்று வித விதமான தகவல்கள் கிடைக்கும். அவர்கள் தோட்டம் பற்றியும் எழுதியிருக்கிறார்கள் ‍- பொன்னாங்கண்ணி கீரை வளர்ப்பு, தண்டுக்கீரை வளர்ப்பு, மிளகாய்ச் செடி வளர்ப்பு. உரம் எப்படி தயாரிப்பது என்ற தகவலும் இருக்கிறது.

Home garden tamil என்கிற தளத்தில் ஐந்து பதிவுகள் தான் இருக்கின்றன. ஆனால் ஐந்திலும் வீட்டுத்தோட்டத்திற்கான உபயோகமான தகவல்கள் இருக்கின்றன. வீட்டில் சின்னதாக ஒரு தோட்டம் போட யோசனை, வீட்டு காய்கறி தோட்டம், விதைத்தல் மற்றும் நடவு செய்தல் மற்றும் வீட்டு மூலிகைத் தோட்டம் படித்துப் பாருங்களேன்!

கனவு இல்லம் எனும் தளத்தில் வெந்தய கீரை வளர்ப்பது, கோதுமை புல் வளர்ப்பது பற்றிய தகவல்கள் இருக்கின்றன. அவர்களின் காய்கறித் தோட்டத்தையும், பூந்தோட்டத்தையும் பார்த்து மகிழலாம்.

மகி சமைப்பது எப்படி என்று மட்டும் எழுதுவதில்லை. சமைப்பதற்கு தேவையான காய்கறிகள் விளைப்பது பற்றியும் எழுதுகிறார்கள். குடை மிளகாய், மணம் வீசும் சாதிமல்லி, ஸ்ட்ராபெர்ரி, தொட்டியில் வளர்ந்த காரட்,தொட்டித் தோட்ட அறுவடை போன்ற பதிவுகள் நமது தோட்ட ஆசைக்கு உரம் போடுகின்றன.

இது ப்லாக் இல்லை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதளம். தோட்டம் அமைப்பதற்கான தகவல் இருப்பதால் அதையும் இங்கு தந்திருக்கிறேன்.

தங்களின் தோட்டம் நல்ல முறையில் செழித்து வளர வாழ்த்துகள்! நாளை மீண்டும் சந்திப்போம்!

Wednesday, July 30, 2014

புத்தக அறிமுகங்கள்

வலைச்சர வாசகர்களுக்கு அன்பு வணக்கங்கள்!

எங்கள் வீட்டில் தோட்டமும் நூலகமும் அமைக்க வேண்டும் என்பது எங்கள் வருங்கால கனவு. நூலகம் அமைக்க ஒன்று இரண்டாக நூல்களைச் சேர்க்க ஆரம்பித்து இருக்கிறோம். நூல்களை வாங்கும் முன்பு யாராவது படித்தவர்கள் அந்த நூலைப் பற்றி எழுதியிருக்கிறார்களா என்று பார்ப்பது எங்கள் வழக்கம். படித்த புத்தகங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் சில தளங்கள் உங்கள் பார்வைக்கு :

தளத்தின் பெயரே புத்தகம் தான். கிமு.கிபி, வெயில் மற்றும் மழை, பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள், நடந்து செல்லும் நீரூற்று, அடியாள், தூங்காமல் தூங்கி போன்ற கட்டுரைகள் நூல்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

புத்தக விமர்சங்கள் என்ற தளத்தில் சரியாக முடிவெடுக்க, வேலை விதிகள், மெட்ராஸ்‍-சென்னை, என் ஜன்னலுக்கு வெளியே, ராமகியன் போன்ற புத்தக விமர்சனக் கட்டுரைகள் என்னை மிகவும் கவர்ந்தன. இரண்டு வருடங்களாக தளம் புதுப்பிக்கப் படவில்லை. தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

புத்தக அலமாரி எனும் தளத்தை கேவசமணி எழுதி வருகிறார். அவரின் தளத்தில் புத்தக விமர்சனங்கள் மட்டுமில்லாது சில சிறுகதைகளும் வாசிக்கக் கிடைக்கின்றன. நிமித்தம், யாமம், அப்பாவின் துப்பாக்கி, எட்டுத் திக்கும் மதயானை, ஒரு புளியமரத்தின் கதை போன்றவற்றை படித்துப் பாருங்கள். அவர் தளத்தை வாசித்தவுடன்  உங்கள் வாங்க வேண்டிய புத்தக லிஸ்ட்  கண்டிப்பாக மாறும்.

தமிழ் பேப்பர் எனும் இணைய இதழில்  வெளியாகியுள்ள வேல ராம்மூர்த்தி கதைகள், சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள், சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு, காவல் கோட்டம், துருவ நட்சத்திரம் பற்றிய கட்டுரைகள் அந்தப் புத்தகங்களுக்கான‌ நல்ல அறிமுகம்.

ஆம்னிபஸ் தளம் சில வருடங்களாக நாங்கள் வாசித்து வரும் தளம்.  எழுத்தாளர் பெயரில் க்ளிக் செய்தால் அவர்களின் புத்தக விமர்சனம் வருவது போல் வடிவமைப்பு உள்ள அவர்கள் மெனு எனக்கு மிகவும் பிடிக்கும். சிறுவர்கள் கதை மேல் ஆர்வமுள்ள எனக்கு அவர்களின் தேக்கடி ராஜாவைப் பற்றிய அறிமுகம் கவர்ந்தது எனச் சொல்லத் தேவையில்லை. கண் பேசும் வார்த்தைகள், அம்மா வந்தாள், பாரதியார் சரித்திரம் போன்ற புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது அவர்கள் அறிமுகங்கள் தான். யாமம் பற்றி இன்னொரு கட்டுரை. ஒரே புத்தகத்திற்கு இரு வேறு கருத்துளைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு.  நாம் முன்பே படித்திருக்கும் புத்தகத்திற்கு என்ன மாதிரி அறிமுகம் கிடைத்திருக்கிறது என்று ஆர்வம் பொங்க தியாக பூமி படித்தேன்.

கடந்த ஜனவரியில் ஆரம்பித்த வாசகர் தளத்தில்,  கர்ணனின் கவசம், குற்றப்பரம்பரை - பேரன்பும் பெருங்கோபமும், கோபல்ல கிராமம்- இனிமையான மனிதர்களின் இருப்பிடம், சுபாவின் விறு விறு த்ரில்லர்கள், ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகனுக்கு ஒரு வாசகனின் கடிதம், தூப்புக்காரி என்று பலவித வடிவங்களில் நூல் அறிமுகங்கள் இருக்கின்றன. 

என்ன நண்பர்களே, அறிமுகமான இடுகைகள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? நாளை மீண்டும் சந்திப்போம்.  


Tuesday, July 29, 2014

கதை கேளு கதை கேளு!

வலைச்சர வாசகர்களுக்கு அன்பு வணக்கம்!

குழந்தைகளுக்குக் கதைகள் என்றால் கொள்ளைப் பிரியம். நல்லொழுக்க‌ங்களையும் கருத்துகளையும் அவர்களுக்குப் பிடித்த கதைகள் மூலம் கூறினால் விருப்பமாக எளிதாக பிடித்துக் கொள்வர்.

எனக்கு மிகவும் பிடித்த குழந்தைகளுக்குக்  கதை சொல்லும் தளங்கள் சில உங்கள் பார்வைக்கு.

பகைமை உணர்வை மறக்கச் சொல்லும் கதை, நல்ல குணத்திற்கான கதை, வீண் பழி போடுவதை தடுக்கும் கதை, ஓட்டைப் பானை கதை, மனம் தளரக் கூடாது என பல கதைகள் தமிழ் அறிவு கதைகள் எனும் தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

ஆத்திச்சூடியை கதைகள் மூலம் கற்றுக் கொடுத்தால் நன்றாக இருக்கும் தானே? தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தன் தளத்தில் அறம் செய்ய விரும்பு, ஐயமிட்டு உண், ஊக்கமது கைவிடேல்உடையது விளம்பேல்ஈவது விலக்கேல் என ஆத்திச்சூடி கதைகள் எழுதியுள்ளார். படித்துப் பாருங்களேன்!

தமிழ் சிறுகதை என்கிற தளத்தை வாசித்து இருக்கிறீர்களா? குழந்தைகள் கதைகள் நிறைய இருக்கின்றன. தோட்டக்காரனும் குரங்கும், தெனாலிராமனும் திருடர்களும், ராஜாவும் முட்டாள் குரங்கும், புகழ் போதை, பாகுபாடு பார்க்கக் கூடாது போன்ற கதைகளை படித்துப் பாருங்கள். கதைக்குத் தகுந்த படங்களும் கண்களைக் கவர்கின்றன.

குட்டிக் கதைத் தொகுப்பு என்னும் இந்தப் பக்கத்தில் பல கதைகள் இருக்கின்றன.

பாட்டி சொல்லும் கதை தளத்தில் நீதிக்கதைகள் அருமையாக இருக்கும். முயற்சி திருவினையாக்கும், ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு, துஷ்டரைக் கண்டால் தூர விலகு, காலத்தினால் செய்த நன்றி, உண்மை நண்பன் போன்றவை எனக்கு மிகவும் பிடித்தவை.

என்ன நண்பர்களே, தங்கள் வீட்டிலுள்ள குழந்தகளுக்குக் கதை சொல்ல இடுகைகளைப் படிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?

மீண்டும் நாளை சந்திப்போம். வணக்கம்! நன்றி!

Monday, July 28, 2014

வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்!

என்னை வலைச்சர ஆசிரியராக தேர்வு செய்த திரு.சீனா ஐயாவிற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலைச்சரப் பதிவர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வீட்டுப் பொறுப்பு மற்றும் அலுவலக வேலை சிறிது காலம், வீட்டுப் பொறுப்பு மட்டும் சிறிது காலம் என்று மாற்றி மாற்றி வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்ளும் அதிர்ஷ்டப் பெண் நான். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். என் முதல் குழந்தைக்கு இரண்டு வயதான பொழுது விளையாட்டுகள் மூலம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். அவள் பெயரில் தளத்தை ஆரம்பித்து அவ்விளையாட்டுகளை, அவளைப் பற்றி எழுத ஆரம்பித்தேன்.  அதுவே பூந்தளிர். கடந்த ஆறு ஆண்டுகளாக எழுதி வருகிறேன். நானூறு இடுகைகள் எழுதியிருக்கிறேன்.

எனக்குப் பிடித்த இடுகைகள் சில உங்கள் பார்வைக்கு:

அறிவியல் கற்றுக் கொள்ள‌ நாங்கள் செய்த சோதனைகள்

2‍‍D இல் ஒரு 3D

சூரிய ஒளியில் பிரெட் டோஸ்ட் (Solar oven)

வீட்டில் எரிமலை செய்வது எப்படி?

இலையில் த‌ண்ணீர் செல்லுமா?

மழை எப்ப‌டி பெய்கிறது?

எங்களின் கணித விளையாட்டுகள்:

விரல்களிலேயே அபாக்கஸ்

ப‌ய‌ண‌த்திற்கு ஏற்ற‌ கணித‌ விளையாட்டுக்க‌ள்

சோழியை எடு, வெற்றியை அள்ளு

நூறின் மதிப்பு

பெரிய சிறிய எண் கண்டுபிடித்தல்

மாண்டிசோரி  விளையாட்டுகள்

பருப்பை வைத்து ஒரு விளையாட்டு

எங்கள் சமையல் அறையிலிருந்து

இரண்டு வயது குழந்தைகளுக்கான விளையாட்டுகள்

ஆங்கிலம் கற்றுக் கொள்ள விளையாண்ட‌ விளையாட்டுகள்

வார்த்தை விளையாட்டு

நான் எழுதிய புத்தகம்

வாசிக்கப் பழக்க‌

கடந்த ஆறு மாதங்களாக ஆங்கிலத்திலும் எழுதுகிறேன். அந்தத் தளத்தின் முகவரி. 98 பதிவுகள் எழுதியுள்ளேன்.

எனக்கு மிகவும் பிடித்த சில இடுகைகள் : எந்த ஒரு பொருளும் இல்லாமல் குழந்தையுடன் விளையாட, பெரிய்ய்ய பென்சில் மற்றும் சுற்று சூழலுக்குக் கேடில்லாத ஒரு வானவேடிக்கை.

என் பதிவுகள் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் நாளை சந்திப்போம்.


Sunday, July 27, 2014

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன்  முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர்  இனியா.    - இவரது  வலைத்தளம்   : kaviyakavi.blogspot.com - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,   ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 
இவர் புதுமையாக ,ஏற்கனவே பிரபலமான பல பதிவர்களை அவர்களது பெயர்களையும் அவரகளது சிறப்பினையும் மட்டுமே குறிப்பிட்டு அறிமுகப் படுத்தி இருக்கிறார். இவர்களது பதிவுகளை அறிமுகப் படுத்த வில்லை.

இவர் வலைச்சர விதி முறைகளின் படியும் சில பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். சுய அறிமுகமும் உண்டு - முதல் பதிவில் அவரது பதிவுகளில் இருந்து சிறந்த - மற்றவர்களால் விரும்பக்கூடிய பதிவுகள் பலவற்றை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களும் பதிவுகளூம் மட்டுமே கீழ்க்கண்ட புள்ளி விபரங்களில் வருகின்றன. பிரபலமான பதிவர்கள் கீழ்க்கண்ட புள்ளி விபரங்களீல் வரவில்லை.

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 062
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 087
பெற்ற மறுமொழிகள்                            : 384
வருகை தந்தவர்கள்                              : 1864
பெற்ற தமிழ் மண வாக்குகள்             : 049

இனியா பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

இனியாவினை   -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   தியானா ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் 


இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர்.. இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முழுவதும் மதுரையில் படித்தவர்தான். தியாகராசர் பொறியியல் கல்லூரியிலிருந்து வளாகத் தேர்வு மூலம் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பெற்று பெங்களூர் சென்றார்..

இவருக்கு  இரண்டு பெண் குழந்தைகள். முதல் குழந்தை பிறந்தவுடன், அவளுக்காக மூன்று ஆண்டுகள் விடுப்பு எடுத்து மீண்டும் வேலையில் சேர்ந்தார்.. தற்பொழுது இரண்டரை வயதாகும், இரண்டாவது குழந்தைக்காக மீண்டும் விடுப்பில் இருக்கிறார். கூடிய விரைவில் வேலையில் சேர உள்ளார்.

இவரது  முதல் குழந்தையைப் பற்றி, அவள் விளையாட்டுகளைப் பதிவு செய்யவே இவரது தளத்தை அவள் பெயரில் ஆரம்பித்தார்.. குழந்தைகளுடன் நேரம் செலவளிப்பதே இவரது பொழுது போக்கு. தற்பொழுது அமெரிக்காவில் வசிக்கிறார்.

இவரது தளத்தின் பெயர்  பூந்தளிர் 

இவரது தளத்தின் முகவரி :: http://dheekshu.blogspot.com.

 இவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி  அடைகிறோம். 
நல்வாழ்த்துகள் தியானா
நல்வாழ்த்துகள் காவிய கவி : இனியா 
நட்புடன் சீனா 




தேட்டம் நல்கும் வீட்டுத் தோட்டம்

தேட்டம் நல்கும் வீட்டுத் தோட்டம்
வாட்டம் அற்ற காய் கறிகள்
ஊட்டம் மிகுந்த உணவு வகைகள்
கூட்டம் அலைச்சல் செலவு இல்லை
நாட்டம் கொள்ள நலியும் தொல்லை-இதை
நோட்டம் விட்டால் கொள்ளும் நினைவில்

இன்று நாம் மணப்பாறை செல்கிறோம் அல்லவா பாண்டியன் திருமணத்திற்கு அங்கு போய் இறங்கியதும் நாம் சிறிது தூரம் வயல் வெளிப்பக்கமாக பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தோம் . ரூபன் அம்மா நாங்க இங்க வந்தது அவருக்கு தெரியாதில்ல. ஆமா அவருக்கு தெரியாது  நீங்க யாரும் சொல்லிடாதீங்கப்பா அவர் என்னமோ உண்மையானவன் தான் அதற்காக நாம சொன்னால் நாங்க கூட்டமா இங்க நிக்கிறத கேட்டா வயித்தெரிச்சல் படுவாரில்ல, தானும் கலந்து கொள்ளவில்லை என்று  இப்ப தானே வந்து போனவர் அப்ப வரமுடியாதில்ல அதனால தான் சொல்றேன் சொல்லாதீங்க சரியா .ரூபன் இன்னும் கொஞ்சபேரை பார்த்திருக்கலாம்.நாள் போதாதே. யாரை எல்லாம் பார்க்கணும் அம்மா , Dr B Jambulingam,  வை.கோபாலகிருஷ்ணன், வெங்கட் நாகராஜ்
உஷா அன்பரசு, cheena (சீனா) ஐயா முக்கியமா, நேரடியாக அவ்வளவு பழக்கம் இல்லன்னாலும் இவர்களை பின்னூட்டத்தில் சந்திப்பேனே .அதனால தான்  பார்க்க விருந்தேன். இன்னும் பலர் இருகிறார்களே .ம்...ம்...ம்.. இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்தால் போச்சு இல்லையா .

அதற்கிடையில் திடீரெனப் திரும்பி பர்த்தோம்  வரம்பு வழியாக யாரோ ஓடி வருவது தெரிகிறது. பார்த்தால் பாண்டியன் ! புது மாப்பிள்ளை ஹீரோ ரேஞ்சில சும்மா இல்லீங்க.  \\அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு என்றல்லவா பாடிக் கொண்டு ஓடி வருகிறார்.// அவரை நல்ல ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும் பார்த்திருப்பீர்கள் இல்லையா ? இப்போ நல்ல பாடகரா காதல் மன்னன் ஆகவல்லவா பார்த்தோம். அம்முவும்  மதுவும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ளுகிறார்கள். மைதிலி அதாங்க அம்மு என்னை ஒருமாதிரி பார்த்து சொண்டை நெளிக்கிறா தானும் பாட வேண்டும் என்று தான் வேறு என்ன . சரி இந்தப் பாடலை  \\ நெஞ்சுக்குள்ள ஒன்ன  முடிஞ்சிருக்கேன் // நீங்கள் இருவரும் போய் பாடுங்கள் என்று  அனுப்பி விட்டு காமரா எடுங்க ரூபன் படம் எடுப்போம்.  பார்த்தால் ரூபனை காணவில்லை. எங்கே என்று பார்த்தால் ஒரு மரக் குத்தியின் மேல் அமர்ந்து  கற்பனையில் மிதக்கிறார் நினைவலைகள் தொடரப் போலும். நான் '"என்ன ரூபன் " இந்த  பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்ல ச்சா அந்தப் புள்ள இன்னா போட்டோ கீட்டோ பிடிக்கும் இல்ல.எப்பிடி எங்களுக்கு தோணாமப் போச்சு.  இதற்கிடையில் அலாரம் அடிக்கிறது. என்ன இது நம்ம வீட்டு அலாரம் இங்கு அடிக்கிறது. எப்பிடி அட நம்ம வீடு அலாரம் தான். பார்த்தால் அம்மா அம்மா மகள் எழுப்புகிறார். என்ன இவ்வளவும் கனவா அடடா கொஞ்ச நேரம் விட்டிருந்தால்  கல்யாணத்தையும் கண் குளிர கண்டிருக்கலாம் அனைத்து வலை யுறவுகளையும் கண்டிருக்கலாமே.ச்சா ....கடைசியில்  கல்யாணத்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே.இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமோ ? இல்லங்க உங்களுக்கு தான் போரிங் அதனால......

சரிங்க எல்லாம் வெறும்  கற்பனை தாங்க இது யாரையும் புண் படுத்துவதற்காக அல்ல என்பதை உணர்ந்தால் போதும். உண்மை தானுங்க  உங்களை சந்தித்ததில் ரொம்ப  சந்தோசமுங்க. இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  விடை பெறும் நேரம் வந்துவிட்டது. அதனால எல்லோருக்கும் பணிவான வணக்கமுங்க !

 சீனா ஐயாவுக்கும் அனைத்து வலைச்சர (தமிழ் வாசி பிரகாசுக்கும், ராஜிஅவர்களுக்கும்) குழுமத்திற்கும் என் மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்.
இப்போ சமைக்கணும் வீட்டில் எதுவும் இல்லையே இதற்குத் தான் சொல்வது வீட்டுத் தோட்டம் வைத்திருக்க வேண்டும் என்று இப்போ நான் தானே திண்டாடப் போகிறேன். அதனால் வீடுத் தோட்டம் வைக்க இவங்களை எல்லாம் ஐடியா கேட்கப் போகிறேன். உங்களுக்கும் தேவைப்படும் பாருங்கள் இதோ .....  
இந்த இமா பொண்னும் நிறைய ஐடியா வச்சிருக்குங்க கைவசம் சமையல், தோட்டம் என்று எக்கச்சக்கமா, கேட்கலாம் தான் பார்ப்போம். அறுசுவையும் நானும் என் வீட்டுத் தோட்டத்தில்
வீட்டுத்தோட்டம்
 1    திருமதி சித்திரா சுந்தர் அவர்கள் தனது பொழுது போக்கு பக்கங்கள் என்னும் வலைப்பூவில் பலவகைப்பட்ட பதிவுகள் உள்ளது அதிலும் வீட்டுத்தோட்டம பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளார் வாருங்கள் சென்று வருவோம் சுழர்ச்சி முறையில் கொத்து மல்லி செடிவளர்ப்பது பற்றி சொல்லியுள்ளார்   chitrasundars.blogspot.com

2.  குப்பை வண்டி தளத்தில் வீட்டுத்தோட்டம் செய்ய இடப்பிரச்சினை என்றால் எப்படி எல்லாம் செய்யலாம் என்பதை இப் பதிவின் வழி சொல்லியுள்ளார் பாருங்கள்.தொங்கும் தோட்டம் முறை http://kuppavandi.blogspot.com/2014/04/blog-post_727.html

3.        இப்படிக்கு இளங்கோ என்னும் வலைப்பூவில் எழுதிவரும் நண்பர் செவ்வாழைஎப்படி வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கும் விதம் பற்றி சொல்லியுள்ளர் பாருங்கள்  ippadikkuelango.com

4.   மூன்றாம் கோணம் என்னும் வலைப்பூவில்

வீட்டுத்தோட்டத்தில்-சிவா என்ற தலைப்பில் சொல்லியுள்ள விடயத்தை பாருங்கள். http://moonramkonam.com/en-veetu-thotaththil-1-siva/





6.   சொல்வனம் என்னும் வலைப்பூவில் மாடியில் ஒரு வீட்டுத்தோட்டம் என்னும் தலைப்பில் எழுதியுள்ள பதிவை http://solvanam.com/?p=28976 இரசிக்க வாருங்கள்


7.   வேளான் அரங்கம் என்னும் வலைப்பூவில் மிக அருமையாக நல்ல கருத்துக்களை சொல்லியுள்ளார் என்னவென்றால்/velanarangam.wordpress.com



8.         வாங்க பறிக்கலாம் என்ற தலைப்பில் முத்துச்சரம் என்னும் வலைப்பூவில் எழுதிவரும் ராமலக்ஷ்மி அவர்கள் அடை மழையிலும் குடை மிளகாய் எல்லாம் போட்டிருக்கார் என்றால் பாருங்களேன். அழகிய படங்களை பகிர்ந்துள்ளார் வாருங்கள் இரசிக்கலாம்  tamilamudam.blogspot.com





விடை பெறும் நேரம் நெருங்கி விட்டது என்னுடன் பயணித்த அனைவருக்கும் தொடர்ந்து ஆதரவு நல்கி உற்சாகப் படுத்தியவர்கள் அனைவருக்கும். என் மனமார்ந்த நன்றிகள். வலையுலக நண்பர்கள் அனைவருக்கும்  மேலும் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன். வணக்கம் ! நன்றி ! நன்றி ! நன்றி !
 
ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை 
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே

ஒரு நாள் சிநேகம் செய்தலும் கூட பெரியவர்களுடைய சிநேகமனது பூமி பிளந்து போகும் படி மரத்தின் வேர் ஊன்றுவது போல் நிலைத்து நிற்கும்.

Saturday, July 26, 2014

மழலை மொழிகள் மகத்தான செல்வம்

மழலை மொழிகள் மகத்தான செல்வம்
வாழ பழக்கு வருங்காலம் அவர்க்கு
ஊக்கம் உறுதியும் ஊட்டிடு உவக்க-அவர்
ஆக்கமும் நோக்கமும் அறிவும் சிறக்க
 

நன்றாக இருந்தது அம்முக்குட்டியின் சமையல். ரசித்து ருசித்து சாப்பிட்டோமா கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டோம். அதனால் கொஞ்சம் அசதியாக இருந்தது.எல்லோரும் அமைதியாக இருந்தோம். ரூபன் என்னம்மா யோசனை சொல்லுங்கள் என்றார் இல்ல நான் வெளிக்கிடும் போது வீட்டுக்காரர் உடம்பை பாத்துக்கோ சுகர் சேர்த்துக்காத என்று சொன்னாரு ஆனால் இங்கு பார்த்தால் அம்முவின் அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை. அவர் ஒரே குலாப்ஜமன், பால் பாயசம், லட்டு என்று ஏகப்பட்ட சுவீட் தந்தாரா ஒரு சுத்து பெருத்திட்டன் இல்ல வீட்டுக்கு போக வீட்டுக் காரங்க என்ன உண்டு இலன்னு பண்ணிடுவாங்களே என்று பயமா இருக்கையா. அது தான் யோசனை வேறு ஒன்றும் இல்லை. எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோமா. மகிழ் நிறை கதை சொல்லுங்கள் ஆன்ரி என்று நச்சரித்தார்கள். இன்று வீட்டிலேயே இருப்போம் என்று முடிவு. எனவே ரூபனும் சகோ மதுவும் கூட சரி சொல்லுங்கள் நாங்களும் கேட்கிறோம் என்றார்கள்  சரி என்று நானும் சொல்லத் துவங்கினேன்.

பேராசிரியர் நியூக்லிட் என்பவர் தன் பேராசிரியர் நண்பர்களுடன் எகிப்து நாட்டிலுள்ள பிரமிட்டுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் ஒரு பேராசிரிய நண்பர் " நியூக்லிட் ," இந்த பிரமிடின்  உயரத்தை நீங்கள் டேப்பை வைத்து அளந்து சொல்லிவிட முடியுமா ?"என்று கேட்டார்.
பிரமிட் அடிப்பகுதி அகலமாகவும் , போகப் போக குறுகலாகவும் உள்ள அமைப்பு. அதில் டேப்பை தொங்க விட்டு அளக்க முடியாது. "ஏனப்பா! எறிவிடலாமெனப் பார்க்கிறாயா?"என்று கிண்டல் செய்தார் ஒருவர்

"இரப்பா ! யோசிக்கட்டும் என்றார் ஒருவர். நியுக்லிட் எதுவும் பேசாமல் டேப்பை எடுத்து பிரமிட்டின் நிழலை அளந்து குறித்தார். தான் நிழலையும், உயரத்தையும் வைத்துக் கணக்கிட்டவர், இத்தனை நீள நிழலுக்கு இத்தனை உயரம் இருக்கும் என்று துல்லியமாக கணக்கிட்டுச் சொன்னார். நியுக்லிட் சொன்னது பிரமிட்டின் சரியான உயரம் என்பதை அறிந்த நண்பர்கள் அவரது புத்திக்கூர்மையைக் கண்டு பிரமித்தார்கள்.

"வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத் தனையது உயர்வு."

நீர்பூக்களின் தண்டின் நீளம் அவை தண்ணீரில் நிற்கும் அளவே இருக்கும். நீர் உயர உயர தண்டும் உயரும். மனிதருக்கும் ஊக்கத்தின் அளவே உயர்ச்சியும் இருக்கும். முடியாது என்று எதுவுமே இல்லை என்று முயன்றார் நியுக்லிட். வெற்றியும் புகழும் பெற்றார்.
எப்படி கதை என்றேன். எலோரும் ம்...ம்.. நன்றாகவே உள்ளது என்றார்கள்.
மகிழ் நிறை ரொம்ப சந்தோஷப் பட்டார்கள்.

சரி tea டைம் என்றேன் பின்னர் நானே போட்டுக் கொடுத்தேன். உடனே எல்லோரும் wow காப்பியே இப்படி என்றால் நிச்சயம் சமையலும் நன்றாகவே இருக்கும். எனவே  டின்னர் நீங்கள் தான் என்று சொல்லிவிட்டார்கள். வேறு வழி இல்லாமல் சரி என்று நானும் தலையாட்டி விட்டு, பேசிக்கொண்டு இருந்தோம். நான்  என் அம்முவை கேட்டேன் எப்படி மாணவர்களை சமாளிக்கிறீர்கள் உலகம் போகிற போக்கில் கொஞ்சம் பயமாகவே உள்ளது. குழந்தைகளை  எப்படியெல்லாம் வளர்க்கவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோருக்கும் கனவுகள் இருக்கும். ஆனால் எப்படி என்று புரியாமல் இருப்பார்கள் அல்லவா நீங்கள் ஆசிரியர்களாக இருப்பதால் கொஞ்சம் சொல்லுங்களேன் என்றேன்.
உடனே காத்திருந்தது போலவே மதுவும் மைதிலியும் மாறி மாறி சொன்னார்கள் இதோ நீங்களும் கேட்டுப்பாருங்களேன்  உங்களுக்கும் இவை மிகவும் உதவும்.
கதை தொடரும் 
சரி உறவுகளே மீண்டும் நாளை சந்திப்போம். விடை பெறும் நேரம் நெருங்கி  விட்டது.
கதை எப்படி முடியும் guess பண்ணுங்க பார்க்கலாம் நட்புகளா.




1       மகிழம்பூச்சரம் என்னும் வலைப்பூவில் எழுதிவரும் சகோதரி சாகம்பரி அவர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி மிக அருமையாக கூறிள்ளார் வாருங்கள் சென்று பார்ப்போம் குழந்தைகளும் ஊட்டச்சத்துப் பானமும் பாகம்-  mahizhampoosaram.blogspot.com

2        4 பெண்கள் என்னும் தளத்தில் குழந்தை வளர்ப்பு பற்றி ஒவ்வொரு விடயங்களையும் துல்லியமாக மிக மிக அருமையாக கூறியுள்ளர்கள்  சென்று பாருங்கள். fourladiesforum.com


3        மாணவர்களின் பார்வையிலிருந்து... 
எப்படி இருக்க வேண்டும் நல்ல ஆசிரியர்... 
மெல்லிய புன்னகை இருக்க வேண்டும். 
சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களை கலவரப்படுத்தும். என்கிறார் ரோஜா பூந்தோட்டம் எஸ் பாரத்   bharathbharathi.blogspot.com  நிறைய விடயங்கள் சொல்கிறார் கேட்டுத் தான் பாருங்களேன். 

4       ‘குழந்தை வளர்ப்பு’ பகுப்புக்கான தொகுப்பு
தூக்கமின்மை பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் தான் என்கிறார். பெற்றோர்களே குழந்தைகள் தூங்கவில்லை எனில் சினப்படாதீர்கள். நிதானமாகக் காரணத்தைக் கண்டறிய முயலுங்கள் அதை நிவர்த்தி செய்யுங்கள் என்கிறார். Dr M K Muruganandan மேலும் என்ன சொல்கிறார் சென்று பாருங்கள். தூக்கத்தைத் தொலைத்த குழந்தைகளுடன்

5          சிறுவர்களை வழி நடத்த  நற்கருத்துக்கள் உள்ள தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடிய நீதிக்கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும். தவறுகளை ஆரம்பத்திலேயே முளையிலேயே கிள்ளி விடவேண்டும் என்கிறார்  பாபு நடேசன்.சென்று தான் பாருங்களேன்.   தவறு சிறுசா இருக்க திருந்திக்கோ | தமிழ் அறிவு கதைகள்  http://tamilarivukadhaikal.blogspot.ca

6       நாளைய சமுதாயம் நலமாக வாழ மனிதநேயத்தை கட்டிக் காக்க, ஆரோக்கியமாக வாழ, நற்குணங்கள் கொண்டு  , விவேகமும் வெற்றியும் பெற குழந்தைகள் எப்படி வளர வேண்டும் வளர்க்கப் பட வேண்டும் என்று விலாவாரியாக எடுத்துரைக்கிறார் சம்பத்குமார் 
நிச்சயம் ஒவ்வொரு பேரன்ட்சும் தெரிந்து கொள்ள வேண்டியவை. சென்று பாருங்கள் நட்புகளா. குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1 தமிழ்பேரன்ட்ஸ் http://www.tamilparents.com எனும் தளத்தில்

7        ஆதித்தன் வலைக்குடிலில்  ஓவியம், சிறுவர் பாடல்கள், குழந்தை பாடல்கள், பொ து அறிவுச்  செய்திகள்,சிரிப்பு துணுக்குகள் என பல விடயங்களை அள்ளித் தருகிறார். இச்சிறுவனுக்குத் தான் எத்தனை ஆர்வம் எத்தனை பற்று தமிழில். அவரை நாம் ஊக்கப் படுத்த வேண்டாமா இதோ சென்று பாருங்கள்    க. ஆதித்தன்  http://kuttivall.blogspot.ca/ பொம்மையம்மா பொம்மை..! - குழந்தைப் பாடல்

8      நான் சந்திக்கும் பிரச்சனை, சாதாரண ஒன்று தான். ஆனால் அதை பற்றி எழுதும் தைரியம் எனக்கு இல்லை.. ஆக அதை விவரிக்கும் விதமாக, படங்கள் 
சிலவற்றை கோர்வையாக சேர்த்து எனது கவலையை எடுத்துரைத்துள்ளேன்.. இதை படிக்கும் உங்களுக்கு எனது பிரச்சனைக்கான தீர்வு தெரிந்திருந்தால், பெரிதுள்ளம் கொண்டு அதை பின்னூட்டத்தில் தெரியபடுத்தி, என்னையும் எனது எதிர்காலத்தையும் காக்குமாறு 
வேண்டிக் கொள்கிறேன் என்கிறார் அப்படி என்ன தான் பிரச்சனை போய் தான் பார்ப்போமே அறைகூவல் விடும்      இல. விக்னேஷ்  ஐ காப்பாற்றலாமா  என்று பார்ப்போம் வாருங்கள் ..http://indianreflects.blogspot.com/

9       காற்றும் வீச மறுத்ததால் மரங்களும் மரித்ததாம் இதனால் வயல் வெளிக்கு ஒரு மணம் வாழை மரத்திற்கு ஒரு மணம் என்கிறார் ஜெ.பாண்டியன்  பாலைவனமாகும் உலகு என்கிறார்  தூக்கிவாரிப் போடுகிறது நமக்கு என்ன தான் சொல்லுகிறார். இரவைக் கூட இரவல் வாங்க வேண்டுமோ என்று ஆதங்கப் படுகிறார். /சென்று தான் பாருங்களேன் ஒரு முறை. 

10       குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை உரியநேரத்தில் போட்டால் நோய் வரு முன் தடுக்கலாம் என்பதை விளக்கும் இப் பதிவு இதோ  குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை......... http://kiruukkal.blogspot.com

Friday, July 25, 2014

நாவூறும் அறுசுவையில் நூறுவகை நோய்தீரும

  

நாவூறும் அறுசுவையில்நூறுவகை நோய்தீரும் 
ஆறும் நூறும்
அலுக்காமல் வாழும்
நகை- சுவை சேர்ந்தாலே
சுகம் காணும் வாழ்வு   
நீரும்மோரும் உண்டால்  
நிழல் தரும் மேனி  
நீள நடந்தாலும்
நீளும் ஆயுள்



ஆலய தரிசனம் முடிந்து வரும் வழியில் அம்முக்குட்டியும் மதுவும் நன்றாக தூங்கி விட்டார்கள்.  நன்றாக களைத்து விட்டார்கள் அல்லவா பாவம். மகிழ் நிறை என்னுடன் பேசிக்கொண்டே விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
ரூபன் யன்னலினூடாக வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறார். மகிழ் அம்முவின் பாக்கை திறந்து மேக்அப் இருந்த பக்கத்தில் கண் மை எடுத்து அம்முவின் முகத்தில் மீசை வரைந்து விட்டார்கள். இதை பரர்த்த ரூபன் விழுந்து விழுந்து சிரிக்க மது எழும்பி விட்டார். ஏன் சிரிக்கிறோம் என்று தெரியாமல் என்ன சிரிப்பு என்கிறார் தூக்கக் கலக்கத்துடன். மகிழ் மெதுவாக கையை காட்ட. மதுவுக்கு ரொம்பக் கோபம் வந்து விட்டது. நீங்கள் எப்படி என் மைதிலிக்கு மீசை வைக்கலாம் என்றார். பாவம் மகிழ் கொஞ்சம் தள்ளி  பயந்து போய் இருந்தார் இன் நிலையில் காட்டிக் கொடுக்க முடியுமா. இந்த அமளியில் அம்முவும் விழித்து கொண்டே என்னம்மா பஞ்சாயத்து என்று அலுப்புடன் முனங்கினார். மகிழ் ஓடிவந்து அம்மாவிடம் தஞ்சம் புகுந்து கொண்டார். மதுவும் கண்ணாடியில் உன் முகத்தை பார் அப்போ தெரியும் என்கிறார். மகிழ் பாக்கில் இருந்த கண்ணாடியை காண்பித்தார். எதிர்பார்க்கவே இல்லை அம்மு விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டார். அப்பாடா இப்ப தான் நெஞ்சுக்க தண்ணி வந்திச்சு. இனி  வேறு எங்கும் போக  முடியாது எனவே வீட்டிற்கு செல்லலாம் என்றோம்.
போகும் வழியில் ரூபன் பேச்சுக் கொடுத்து கொண்டே வந்தார் மதுவிடம் எப்படி வலை தளம் எல்லாம் எப்படி போகிறது ம்.... போகிறது எல்லோரும் நன்றாகவே எழுதுகிறார்கள் இல்ல அதிலும் இந்த saamaaniyan saam. சாமானியன் இல்லைங்க எழுதின பதிவு பார்த்தீர்களா சூப்பருங்க நிச்சயம் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியது ரெளத்திரம் பழகு !  இல்லையா? கோபத்தை பற்றி விலாவாரியாக எழுதியுள்ளார் நிச்சயம் எல்லோரும் பார்க்க வேண்டியதொன்று ம்...ம்...  அதோட பாருங்க வை.கோபாலகிருஷ்ணன்  இவர் சிறு கதை எல்லாம் நிறைய எழுதி அசத்துகிறார் இல்ல, புத்தகங்களும் அதிகமாக வெளியிட்டுள்ளார்,அடிகடி விமர்சனப்போட்டி கூட வைக்கிறார் இல்லையா ம்..... அப்பிடியா ரூபன் எனக்கு அவ்வளவு  பழக்கம் இல்ல ஆனா பின்னூட்டத்தில சந்திச்சு இருக்கிறன்.அது சரி  இவர் வருண்  இருக்கிறார் இல்ல அவர் என்னடான்னா நம்மளை ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று சொல்லிட்டு என்னை ஏன் பிளாக் பண்ணின? நீ என்ன பெரிய இவனா?  இப்பிடி வேற கேட்கிறார் இது நியாயமா? முதல்ல இவர் ரிலாக்ஸ் பண்ணவேன்டாமா?  தனக்கொரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயமா? இதுக்கு என்ன செய்யலாம் ரூபன்  என்கிறார் மது . ரூபன் இவர்தான் KILLERGEE Devakottai இருக்காரே 300 வருடதத்துக்கு முன்னமே... மே வாழ்ந்திருக்க வேண்டியவராம் என்று வருத்தப் படுகிறார் தெரியுமா. இப்ப ஏன் பிறந்தேன் என்று கோபம் வேற அது மட்டுமா  தாலி.  ஏன் பவுனில போடவேணும் என்று கொதிக்கிறார். எப்பிடி இவரை சமாதனப் படுத்திறது என்று தெரியலை மது என்கிறார் ரூபன். எனக்கு கவலையாய் போய்விட்டது அப்படியா சொல்கிறார் மது ம்...ம்... பொண்ணுகளா கொஞ்சம் உஷாரா இருங்க இவர் ஒரு பொட்டுத்தங்கம் கூட வாங்கித் தருவார் போல தெரியல. அம்மு  இப்பிடிப்போனா இவர் \\குமரிப் பொண்ணின் இதயத்தில் குடியிருக்க நான் வரலாமா குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும் /////என்று கெஞ்சப் போகிறார்.   பாருங்க.  ஹா ஹா  ......சரி சரி பேசியது போதும் இறங்குங்கள் வீடு வந்து விட்டது.

 பின்னர் நல்ல தூக்கம்  . .அனைவரும்  தூங்கி எழும்பியதும் லஞ்சுக்கு என்ன செய்யலாம் என்று அம்மு மண்டையை குழப்பிக் கொண்டு இருந்தார் . எனக்கு மைதிலி கையால தான் சாப்பாடு வேண்டும் என்றேன். எனக்கு சமையல் வராது என்கிறார். எவ்வளவு ஆசையாக வந்தால் இப்படியா சொல்வீர்கள் என்று கோபித்துக் கொண்டேன். இல்லை அப்படி செய்வேனா இதோ ஒரு நொடியில் என்கிறார் என் அம்மு

.


பின்னர் தெரிந்தவர்களிடம் கேட்டு 2 மணித்தியாலம் தாங்க இவ்வளவும் சமைத்து வைத்திருக்கிறாங்க. பார்த்தால் பலவகை ஐட்டம். நான் அசந்தே போய்ட்டேன். என்ன சமைச்சிருக்கிறாங்க என்று நீங்களே பாருங்க இதோ நீங்களும் வேணுமின்னா சமைத்து பாருங்கள்.
  கதை தொடரும்
அறுசுவைத்தளங்கள்

1.    சகோதரன் சுரேஸ்குமார் என்பவர் அறுசுவை பற்றி எழுதியுள்ளார் ஒவ்வொரு பதிவையும் படிக்கும் போது நாவூறும் வண்ணம் ரசனையோடு சொல்கிறார். அது மட்டுமா தன்னுடைய பயணஅனுபவங்களையும் கடல்பயணங்கள் என்ற தலைப்பில் தனது வலைப்பூவில் எழுதிவருகிறார் இதோ அவர் எழுதிய பதிவு. நம்நாட்டு பர்கர், kadalpayanangal.com
பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளார்.... நீங்களும் செய்து பார்க்கலாம்.


2.    தனது சொந்தப்பெயரில்ஆர்.உமையாள்.காயத்ரி பல சுவைப்பட்ட தனது அனுபங்களை மிக அருமையாக பகிர்ந்து வருகிறார் அதிலும் மிக எளிமையான முறையில் மாவடு
ஊறுகாய் தயாரிக்கும் முறை பற்றி சொல்லியுள்ளார் பாருங்கள் நீங்களும் செய்து பார்க்கலாம் இதோ முகவரி.umayalgayathri.blogspot.com


3      .சமையலில் ரொம்ப கில்லாடியாக இருப்பாங்க போல. என்னமா சமைக்கிறாங்க  கீதா வோட ப்ளாக் தான்.என் சமையல் அறையில் அம்மாடி எவ்வளவு அழகழகான  ரெசிபிஸ்! உலகத்துலயே ரொம்ப கொடுத்துவச்சவங்க கீதாவோட குடும்பத்தினர்தான்னு தோன்றுகிறது .அவரின் சமையல்தான் இவை சென்று தான் பாருங்களேன். geethaachalrecipe.blogspot.in


4.           அடுத்ததாக  சித்திரா அவர்களின் சமையல் பக்கம் செல்வோம் விதவிதமான சமையல்களின் தொகுப்பு உள்ளது அவற்றில் ஒன்றுதான் முருங்கை தொக்கு
என்ற தலைப்பில் எழுதி சமைத்தும் காட்டியுள்ளார் வாருங்கள் போகலாம். karaikudisamayal.blogspot.com


5       .அடுத்து மனோ சாமிநாதன் சகோதரியின் முத்துச்சிதறல் தளத்துக்குசெல்வோம்மாயின் வருகிற தீபாவளிக்கு செய்யக்கூடிய பலகாரங்கள் பற்றியும் ஏனைய சமையல் குறிப்பகளையும் பகிர்ந்துள்ளார் அதில் ஒன்றுதான் முள்ளங்கி  இரசம் http:///2013/01/blog-post_28.htmபற்றி மிக அருமையாக சொல்லியுள்ளார் வாருங்கள் சென்று வருவோம். 


6          அடுத்து பார்க்க இருப்பது கோவை2தில்லி என்னும் வலைப்பூ பற்றிதான் இங்கே

குடமிளகாய் சாதம் எப்படி தயார்செய்யவேண்டும் என்பதையும் தேவையான பொருட்கள் பற்றியும் சொல்லியுள்ளார் பாருங்கள். kovai2delhi.blogspot.com


7.   காணாமல் போன கனவுகள் என்னும் வலைப்பூவில் எழுதி வரும் சகோதரி ராஜி அவர்கள் மாங்காய்ச்சாதம் செய்யும் முறை பற்றி நன்றாக சொல்லியுள்ளார் சென்று  பார்ப்போம் வாருங்கள். rajiyinkanavugal.blogspot.com


8.        .மணித்துளி என்னும் தளத்தில் எழுதி வரும் ஆசியா ஊமர் (Asiya omarஅவர்களுடைய தளத்தில் சில சமையல் டிப்ஸோ.டிப்ஸ் தந்துள்ளார் வாருங்கள் உங்களுக்கும் பயன் படும் குறிப்பாக இருக்கும்.  asiya-omar.blogspot.com


 9          இவர்  Mohamed ali எக்கச் சக்கமான  சமையல் டிப்ஸ் வைத்திருக்கிறார்.அருமையான சமையல் டிப்ஸ்! இதோ உங்களுக்காக! --- வீட்டுக்குறிப்புக்கள், சமையல் மட்டுமல்ல உடலுக்கு தேவையான, வாழ்கைக்கு தேவையான நிறைய தகவல்கள் தருகிறார். சென்று பார்த்து பயனடையுங்கள்.

10.          sashiga kitchen என்னும் வலைப்பூவில் எழுதிவரும் மேனகாஅவர்களின் தளத்தில் கடப்பா செய்யும் முறை பற்றி மிக அருமையாக சொல்லிள்ளார் வாருங்கள் சென்று வருவோம். sashiga.blogspot.com


11       உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன, அவைகளின் வகைகள் யாவை என்று உணர்ந்து நாம் சாப்பிடுவதில்லை. வயிறு நிறைந்து பசி தீரவேண்டும் என்பதே சாப்பிடுபவரின் குறிக்கோளாக இருக்கிறது என்கிறார் பழனி.கந்தசாமி விபரங்களை அறிய இதோ அத்தியாவசிய உணவு பகுப்புகளும் அவற்றிலுள்ள உண்மைகளு... swamysmusings.blogspot.com

நன்றாக சமைத்து சாப்பிட்டு விட்டு தூங்கிட்டு தென்பாக  வாங்கப்பா பிறகு இங்க வந்து தூங்காம.  மீண்டும் நாளை சிந்திப்போம்.  சந்திப்போம் புதிய தலைப்புடன். bye

Thursday, July 24, 2014

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

 


ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
பாவங்கள் தீர்க்கும் பணிகளில் ஒன்று 
கோலம் போடுதல் குமரிக்கு நன்று
குனிதல் உடலுக்கு நலம் தரும் ஒன்று



அப்பாடா ஒரு மாதிரி பயணம் நல்ல மாதிரி முடிந்தது .என்ன ரூபன்  வெய்யில் இப்பிடி கொளுத்துது இந்தியாவில. எப்பிடி சமாளிக்கப் போகிறோம். ஆமா நாம இப்ப இங்க வந்தது DD க்கு தெரியுமோ? இல்லம்மா சொல்லல அப்போ யாரு உதவுவா. வந்தது   தான் வந்தோம் ட்ரை பண்ணி எல்லோரையும் பார்த்து விட்டு போகலாம் இல்ல சரி .அப்போ DD க்கு கோல் பண்ணுங்க அவர் தான் சரியான ஆளு அவருக்கு தான் எல்லோரையும் தெரியும் அத்துடன் மனசாட்சி உள்ளவர் இல்ல சும்மா சொல்லக் கூடாது நல்ல மனிதர் தான்  என்ன ரூபன்.   ஆமா இப்போ இங்க யாரை எல்லாம் பார்க்கலாம் சொல்லுங்கள்.

இல்லம்மா முதல்ல நாங்க உங்க அம்மு வீட்டிற்கு போகலாம் சரியா. அட அது தாங்க நம்ம (அந்த இங்கிலீஷ் டீச்சர் தாங்க அவங்க மிச்சம் பார்த்துக் கொள்ளுவாங்க இல்ல.அதுவும் நல்ல ஐடியா தான் ok  அவுங்க முகவரி இருக்குதா ரூபன் ஆமாம்மா அதெல்லாம் என்கிட்ட இருக்கு. எப்பிடி ரூபன் எப்பிடியோ இருக்கும்மா வாங்க . சரி சரி நமக்கென்ன வந்துது காரியம் முடிஞ்சா சரிதானே  என்று முணுமுணுத்துக்கொண்டேன்.  வழியில ரக்சி ஒன்றில் ஏறி மைதிலி வீட்டிற்கு சென்றோம்.

அங்கு போனதுமே பெல்லை அடித்தோம் விடியற்காலை அல்லவா  குளித்து முடித்து இளநீல நிற சுரிதார் அணிந்து நெற்றியில் சிறிய பொட்டும் வைத்து ரம்யமாக வந்து கணீர் என்ற குரலில்  யாரு வேணும் யாரை தேடுகிறீர்கள் என்கிறார். அப்புறம் ரூபனை பார்த்து எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறது என்கிறார். எங்க  பார்த்தேன்.  இதற்கிடையில் அங்கு வந்த   Mathu அவர் தாங்க( நல்ல ஒரு  ஆசிரியர். நல்ல ஒரு வழி காட்டியும்கூட எனக்கும் தான் அவர் படைப்புகள் ஒவ்வொன்றும் சமூக நலன் மிகுந்திருக்கும்.)அவர்  ரூபன்  எப்படி நீங்க இங்க என்கிறார். மைதிலி அசந்து தான் போனார். நான் பேசாமல் கொஞ்சம் தள்ளி பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரூபன் அப்போ  இது யார் சொல்லுங்க பார்ப்போம். ம்....ம்... தெரியலியே. இவங்க தான் உங்க செல்லம் Iniya .
உண்மையாகவா. அப்பிடியா என்று என்னை கட்டிக்கொண்டார். எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அம்முக்கு கையும் ஓடல காலும் ஓடல என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். எங்களை இரு என்று கூட சொல்லத் தோணலைன்னா பாருங்களேன். அப்புறம் மது தான் எங்களை இருக்கச் சொன்னார் அப்புறம் வெகு நேரம் பேசிட்டே இருந்தோம். மகிழ் நிறை வந்து ஒட்டிக் கொண்டாங்க ரொம்ப சமத்து அம்மா மாதிரியே. சரின்னு அம்மு காபி போட போய்ட்டாங்க சுகர் கம்மியா என்றேன். சரின்னுநொடியில் போட்டு  தந்தாங்க அய்ய குடிச்சா சகிக்கல பார்த்தா புள்ள பதற்றத்தில சர்க்கரைக்கு பதிலா  உப்பு, அதுவும் கம்மி என்று சொன்னதனாலே தப்பிச்சேன். நான் மறுக்கலையே, உப்பிட்டவரை  உள்ளளவும் நினை என்பதற் கிணங்க தன்னை நினைக்கணும் என்று தானோ என்று மட மட வென்று குடித்துவிட்டேன்.  ரூபனை பார்த்தா ஆப்பிழுத்த குரங்கு போல முழிக்கிறாரு நான் முழுசி பார்த்த பார்வையில அப்பிடியே மடக் கென்று  குடிச்சிட்டார். நானோ முகத்தில கொஞ்சமும் காட்டிக்கவே இல்லையே அம்முவுக்கு தெரியவே தெரியாதே அதனால நீங்களும் சொல்லி அம்முவ சங்கடப் படுத்தாதீங்க சரியா.

சரி யார் யாரை எல்லாம் பார்க்கலாம் அம்மு இங்க எல்லோரும் கல்யாணத்திற்கு வந்தால் சுலபம் அனைவரையும் பார்த்து விடலாம் இல்லையா? அப்போ அம்மு  நா.முத்துநிலவன்   நிலவன் அண்ணா வருவாரு அப்பிடியா தலலைப்பே இல்லாமல் போய் பட்டிமன்றத்தில அசத்துவாரில்ல கட்டாயம் அவரை பார்க்கணும். அவரோட பட்டிமன்றமும் பார்க்கணும் என்று ரொம்ப நாளா எனக்கு ஆசை. அப்புறம் பெரிய அறிஞர்களை எல்லாம் அறிமுகப் படுத்துவார் இல்ல   சகோதரர் கரந்தை ஜெயக்குமார்   வருவாரு.wow ம்..ம்..அப்புறம் Ramani S  ஐயா வருவாரு அப்பிடியா அவர் தான் எதை எடுத்தாலும் பார்த்தாலும் கவிதையாய் ம்,... ம் ....பின்னிடுவாரே அடேங்கப்பா. அப்ப... தமிழ் துளிர் விட  தமிழை கத்துதருவாரே ‘தளிர்’ சுரேஷ், அவரு,    அட நம்ம  சுப்பு தாத்தா  என்னமா பாடுகிறார் மெட்டுப் போட்டு, வருவாரில்ல சொல்ல முடியாது. வந்தாலும் வரலாம் .அடடா சுப்பு தாத்தா வை பார்க்கணுமே நேர்ல பார்த்து நன்றி சொல்லியே ஆகணும்.  அப்புறம்  தோழிகள்  கலை ,தேன்மதுரத்தமிழ் கிரேஸ்,, angelin கீத மஞ்சரி , Geetha M, , உஷா, இராஜராஜேஸ்வரி  இவங்களுக்கெல்லாம் வரமுடியுமா என்ன கால் பண்ணி  பார்க்கலாமா?அட நம்ம கலை, அது தாங்க நம்ம கருவாச்சி ம்...ம்...ம்..அந்த பொண்ணு தெரிஞ்சா நிச்சயமா பேசிக்கொண்டே பொடி நடையா வந்தாலும்  வந்திடுமில்ல. சகோதரர் பால கணேஷ் இருக்கார் இல்ல அவர் ஒரு பதிவு பார்த்தால் நூறு பதிவு பார்த்த மாதிரிங்க . ஏன்னா   அத்தி பூத்தாற்போல் தான் அவர் வரவிருக்கும். அதை தாங்க சொன்னேன். ஆனால் மொறுமொறு மிக்சர் நல்லா பண்ணுவாருங்கபோகும் போது கொஞ்சம் வாங்கிட்டு போகலாம் என்ன அம்மு வழியில கொறிச்சுக் கொண்டு போகலாம் இல்ல, அப்புறம் டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று நகைசுவை , விடுகதை எல்லாம் போட்டு அடிக்கடி  அசத்துவாரில்ல  அவர் வருவாரா அம்மு. ம்..ம்.. வரக்கூடும். வேறு யாரு ...... ம் ..ம்...ஆமா அந்த எழுத்து ஆர்வமும் ஆற்றலும் நிறைந்தவர் ஒவ்வொரு நாளும் பதிவு போடுவாரே ஆ......அவர் தாங்க சகோ விமலன் சிட்டுக்குருவி  அவரு சொல்லமுடியாது வந்தாலும் வரலாம். மா சகோதரர்   Thulasidharan V Thillaiakathu, அதுவும் தெரியலை, அட அவர் அகத்தை அமைதிபடுத்த எத்தனை விடயங்களை அலசுவார் அப்பப்பா.இப்ப பொம்பளையா பிறக்கக்கூடாது என்று வேற சொல்கிறார் தூக்கிவாரிப் போட்டுட்டுதுப்பா என்னன்னு போய் பார்க்கணும் அவசியம். அப்புறம்சகோ  துரை செல்வராஜூ இல்லையா , அவர் ஆன்மீகத்தை பற்றியும் ஆண்டவனை பற்றியும் மட்டும் தான் பேசுவாருங்க அங்க போனால் கோவிலுக்கு போன மாதிரி திருப்தியா மனம் அமைதியாயிடுமுங்க, அவரையும் பார்க்க முடியாதில்ல, குவெய்த் இல்ல அவரு ம்..ம்...ஆமா   இமயத்தலைவன்    இவர் ஓ...ஓ. அவர் USA யில அல்லவா அப்பிடியா?அப்போ பார்க்க முடியாது ...ம்ம்..ம்... அவரோட தளத்துக்கு வேண்டாம் விடுங்க அதையேன் பேசுவான். அம்மு என்ன  என்ன சொல்லுங்க இ...ல்..ல அ..ங்..க   போ...னா அங்க போனா அலறியடிச்சிட்டு ஓடியாந்திடுவேன் இல்ல. ஏன் அ...து....வா அங்க ஆ.வி..க...ள் நட..மா..ட்டம் அதிகமா இருக்கில்ல அது தான். ஆனால் நீங்க ரொம்ப தைரிய சாலிகள் நீங்க போகலாம். ஆனா ஒன்னு போ..கு..ம் போது யாரையாவது துணைக்கு கூட்..டிட்...டு  போ...ங்க...ப்பா சொல்லிட்டேன்.அம்மு விழுந்து விழுந்து சிரிக்கிறா எனக்கொண்னும் பயமில்லையாக்கும் நான் தனியவே போவேனே என்கிறார்.அப்ப   இவர்கள்  இங்க இல்ல இல்லையா ம்..ம்..    ok  அம்மு ரூபனை பார்த்து அம்மாவை பார்க்க போகலையா ரூபன் எனவும் அவர் இல்ல போனா திரும்ப மலேசியா போக விடமாட்டாங்க அதனால நான் இப்போ போகல. ரூபன் போன நானும் போய் இருக்கலாம். அங்கு நாம யாழ்பாவணன் அது தாங்க சகோதரர் Jeevalingam Kasirajalingam அவரையும் பார்த்து யாப்பிலக்கணம் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொண்டு வந்திருக்கலாம் இல்ல. சரி  அடுத்த முறை வரும் போது பார்க்கலாம் ஒரு கிழமை லீவு தானே என்ன செய்வது.
 சரி சரி  ஏன் அம்மு இன்னிக்கு கொஞ்சம் கோவில்கள் பார்க்கலாமா நீங்க ப்ரீ தானே எப்பிடி நீங்க தான் சொல்லிட்டு வரலையே என்று எரிஞ்சு விளறா இப்ப லீவு தருவாங்களோ இல்லையோ சரி எதுக்கும் ட்ரை பண்ணி பார்க்கிறேன் என்று முணுமுணுப்போடு போறா ok லீவு கிடைத்தது விட்டது  என்று வந்தார். சரி நாங்க இப்ப  கோவில்கள் தரிசனம் செய்யலாம் சரியா.

அது சரி சொல்ல மறந்துட்டேங்க இவங்க எல்லாம் வலை தளத்தை கலக்கிறவங்க. பேர் போனவங்க பெயரை சொன்னாலே அதிருமில்ல!   அதான் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். பெயரை சொடுக்கினாலே அவர்கள் பூர்வீகமே தெரிஞ்சிடுமே. பார்த்து..... ரொம்ப பெரிய ஆளுங்கப்பா மோதிடாதீங்க. பக்குவமா போய் கருத்து போட்டிடுங்க சரியா..அவங்க மலையும் நான் மடுவும் அல்லவா எப்படி அவர்களை.....நான்..... அறிமுகப் படுத்தலாமா நல்லா இருக்காதில்ல அதனால் தான் இப்படி ஒரு ஏற்பாடு பிடிச்சிருக்கு இல்ல.

விரும்பினவங்க எங்களோட ஜோயன்ட் பண்ணலாம். இதோ  ஆலய தரிசனம் கண்டு களியுங்கள்.


1  என்னை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. என்னுடைய பெயர் ஜெகதீஸ்வரன். என்னுடைய துறை கணினிமென்துறை என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார் அவர் சகோதரன் என்னும் வலைப்பூவில் பலவகைப்பட்ட படைப்புக்ளை எழுதி வருகிறார் அவற்றில் ஒன்றுதா

உயிர்களின் பரிணாமத்தின் விளங்கும் தசவதாரம்


சிவநூல்கள் பற்றியும், http://lordeswaran.wordpress.com/sivabooks/


2.      பைரவர் வழிபாடு என்னும் வலைப்பூவில் எழுதிவரும் உறவு.


http://bairavarvazhibaadu.blogspot.com/ சொல்லியுள்ளார் வாருங்கள் நாமும் சென்று பயனடைவோம்.

3.       30 வருடங்களுக்கு மேலாக பலவைகைப்பட்ட படைப்புக்ளையும் பல புத்தங்களையும் எழுதிவரும்  இவர்கடமையைச் செய்:பலனை எதிர்பார்க்காதே என்கிறார் இவர் Radha Balu   -எண்ணத்தில் வண்ணங்கள் என்னும் வலைப்பூவில் தனது படைப்புக்களை படைத்து வருகிறார். அவற்றில் ஒன்று தங்களின் பார்வைக்கு இதோ



4.         அருள் என்னும் வலைப்பூவில் கணபதி.முருகன் சிவன்பற்றி சிறப்புறக் கூறியுள்ளார் வாருங்கள் சென்று பார்வையிடுவோம். http://arull.wordpress.com/2010/06/12/metaphysics/


5.         ஆன்மீகம் என்னும் வலைப்பூவில் இறைவனைஅடைய உதவும் ஐந்து மார்க்கங்கள் என்னும் தலைப்பில் சொல்லிய படிமங்களை பார்வையிட இதோ. http://aannmegam.blogspot.com/2013/11/blog-post.html


6.          திருமதி மணிராஜ் அவர்களின் வலைப்பூவில் எப்போதும் ஆலய தரினம் பற்றிதான் எழுதுகிறார்கள் அவர்களின் வலைப்பூவை முதலில் படித்து தரிசனம் பெற்றபின்தான் மற்ற வலைப்பூவுக்கு செல்வார்கள் என்று பல பின்னூட்டங்களில் நான் பார்த்தேன்.. அந்த வகையில்
ஆனந்தம் அருளும் ஆடவல்லீலேஸ்வரர் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளார்கள் வாருங்கள் சென்று வருவோம்



7.         திருமதி கோமதிஅரசு அவர்கள்  மிக சிறப்பாக திருமதி பக்கங்கள் என்னும் வலைப்பூவில் பலவகைப்பட் பதிவுகளை வாசக உள்ளங்களுக்கு தினம் தினம் எழுதிக்கொண்டு இருக்கிறார் அந்த வகையில் ஆலயங்கள் பற்றி சொல்லியுள்ளார் அவற்றில் ஒன்றுதான் ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு http://mathysblog.blogspot.com

8.          தஞ்சையம் பதி என்னும் வலைப்பூவில் எழுதிவரும் துரை செல்வராஜூ அவர்களின் எழுத்து எல்லோரையும் மகிழ்விக்கும் என்பதில் ஐயமில்லை அந்த வகையில் ஐயாவின் வலைப்பக்கம் மாங்கனித்திரு விழாபற்றி மிக அருமையாக சொல்லியுள்ளார் சென்று பாருங்கள்
http://thanjavur14.blogspot.com/2014/07/blog-post10-karaikkaal-ammaiyar.html


9.         சகோதரி ராஜி அவர்கள் கானாமல் போன கனவுகள் என் வலைப்பூவில் எழுதிவருகிறார் பலவகைப்பட்ட படைப்புக்களை எழுதியுள்ளார் அவற்றில் ஒன்றுதான் இது சென்று பாருங்களேன்.

சுவாமிமலை-புண்ணியம் தேடி ஒரு பயணம்


10        சிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு. {ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்துபாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிரவேண்டிய அறிய வேண்டிய விசயம்}சிவலிங்கம்– நீங்கள் அறிந்திடாத புதிய வரலாற்றுத் தகவல்கள்! சென்று பார்க்க இதோ   http://madipakkamsrisivavishnutemple.blogspot.ca/