" கதை எழுதுவதற்கு மூன்று முக்கிய விதிகள் இருக்கின்றன் ஆனால் துரதிஷ்டவசமாக அந்த மூன்று விதிகளை அறிந்தவர்கள் யாரும் கிடையாது ! " என்றார் சாமர்செட் மாம் !
கதையோ, கட்டுரையோ, கவிதையோ எதுவாகினும் நூறுசதவிகித கற்பனை என்று ஒன்றும் கிடையாது ! ஒரு படைப்பில் கடுகளவாவது எழுதுபவரின் உண்மை அனுபவமோ, அவர் வாசித்தவற்றின் தாக்கமோ, அவரைப் பாதித்த மனிதர்களோ அல்லது அவர்களைப் பாதித்த சம்பவமோ கலந்ததுதான் எழுத்துப் படைப்பு.
விஞ்ஞானப் புதினங்கள்கூட இதற்கு விதிவிலக்காக முடியாது. இன்னும் நூறு ஆண்டுகளில் நடக்கப் போவதை சிந்திக்கும்போது கூட இன்றைக்கு நாம் கொண்டிருக்கும் விஞ்ஞான வசதியின் தொடர்பாகவோ அல்லது அதன் அடுத்த நிகழ்வாகவோதான் சிந்திக்க முடியும் ! நாம் அறிந்த ஒன்றுடன் எதையும் ஒப்பிட்டு யோசிப்பது மூளையின் அடிப்படைகளில் ஒன்று.
ஒரு எழுத்தின் வெற்றி எழுத்தாளன் தன் அனுபவங்களையும் கற்பனையையும் கலக்கும் விகிதத்தில்தான் உள்ளது !
மற்றப்படி வர்ணனைகள், சொல்லாடல் எல்லாம் " சித்திரமும் கைப்பழக்கம்... " தான் !
ஆக, சாமர்செட் மாம் சொன்னது சரிதான் !
பொதுவாக வலைதளம் நடத்துபவர்களை வலைபதிவர்கள் என்றே குறிப்பிடுகிறோம். இது சரிதானா எனத் தெரியவில்லை !... பதிவது என்றால் ஏற்கனவே எழுத்தில் உள்ள ஒன்றை அச்சேற்றுவது. தட்டச்சுச் செய்து இணையத்தில் ஏற்றுவதால் பதிவர் என்று சொல்லலாம் என்றாலும் வலை படைப்பாளி என்பதே சரி எனப் படுகிறது...
இணையத்தின் மாபெரும் புரட்சி என்றால் அது அறிவு சார்ந்த தகவல்கள் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்கும் வாய்ப்பு கிட்டியதோடு, சமூக அந்தஸ்து, கல்வித்தகுதி என்ற ஏட்டு மதிப்பீடுகளையெல்லாம் புறந்தள்ளி, அதே கடைக்கோடி மனிதனும் தன் அறிதலை உலகின் யாருடனும் பகிர்ந்துகொள்ளமுடியும் என்பதுதான் !
ஒரு பத்து வருடங்களுக்கு முன்புகூட ஒருவரது எழுத்துப் படைப்புப் பத்திரிக்கையில் வந்தால்தான் உண்டு என்ற நிலை இருந்தது.
" பிரசுரத்துக்கான தகுதியிருப்பின் நிச்சயம் தேர்வாகும் " என்பது பொதுவிதி என்றாலும் பத்திரிக்கை குழுமங்களிலும் அரசியலும் பாராபட்சமும் உண்டு என்பது அதில் உழன்றவர்களுக்குத் தெரியும் ! ஒரு பத்திரிக்கையின் ஆசிரியரை சுற்றி ஒரு குழுவும், ஆஸ்த்தான எழுத்தாளர்களும் உண்டு. புதிதாய் நுழைபவர் இந்தப் பத்திரிக்கை பத்மவியூகத்தை உடைப்பது அவ்வளவு சுலபமல்ல ! ஒரு எழுத்தாளரின் முதல் கதையை நிராகரித்த பத்திரிக்கை அவர் பிரபலமான பிறகு அதே கதையை அனுப்பியபோது பிரசுரித்த சம்பவங்களெல்லாம் உண்டு !
இன்று இணையத்தின் வசதியால் நமது எந்தப் படைப்பையும் நாமே பிரசுரிக்கலாம் என்ற நிலையில் வலையில் எழுதுபவரின் பொறுப்பும் அதிகமாகிறது. யாரும் எதையும் உள்ளிடலாம் எனும்போது எழுதுவது எதையும் ஜாக்கிரதையாக எழுத வேண்டும் என்ற சுயதணிக்கையும் அவசியமாகிறது !
" கனவில் கண்டதாகப் பொய் சொல்லக்கூடாது " என்பார்கள்...
காரணம், கனவு என்பது இரண்டாவது நபரால் அறிய முடியாத அந்தரங்கம். அதில் பொய்யை கலப்பது தன்னையே ஏமாற்றிக்கொளவதாகும் !
அதே நிலைதான் வலை எழுதுபவர்களுக்கு ! ஏதோ ஒரு காரணத்துக்காக " தெரிந்தே " பொய்யான, ஆதரமற்ற தகவல்களைத் தருவதும், மற்றவர் படைப்புகளைத் தன் பெயருக்கு கீழே பிரதி எடுப்பதும் தன்னையே ஏமாற்றிகொள்ளும் செயல்.
மேலும் பதிந்த செய்தி அந்த நொடியே நம்மால் கட்டுப்படுத்த முடியாத, மீன்டும் பெற முடியாத நிலையை எட்டிவிடும் இணைய மாயத்தில், ஒருவர் பற்றிய அவதூறு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அந்த அவதூறு நம்மைப் பற்றியது என்றால் எப்படி நடத்துக்கொள்வோம் என்பதை உணர்ந்தாலே இணையம் பற்றிய பயமும் தெளிவும் ஒருசேர பிறந்துவிடும் !
சிந்திக்க...
பாரீசை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் பத்து வயது மகனுடன் காரில் சென்றுக்கொண்டிருந்தேன்...
அந்தச் சாலையில் அனுமதிக்கப்பட்ட உச்சபட்ச வேகமான, மணிக்கு நூற்றியிருபது கிலோமீட்டரில் நான் கார் ஓட்டிகொண்டிருக்க, மகன் பக்கத்து இருக்கையில் விடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.
ஒரு திருப்பத்தில் கார் ஒன்று எந்த முன்னறிவிப்பும் இன்றி அதிவேகமாய், எங்கள் காரை உரசுவதுபோல முந்தி செல்ல, கோபத்தில் கத்தினேன் நான் !
" அப்பா ! அந்த ஆள் ஒரு நொடிக்குள் நம்மைத் தாண்டி போய்விட்டார் இல்லையா ?... "
என் வசவு மழை நின்ற பிறகு ( ரொம்பக் கெட்ட வார்த்தையெல்லாம் இல்லீங்க ! ) விளையாடுவதை நிறுத்தாமலேயே கேட்டான் என் மகன்.
" ஏன் கோபமாகக் கத்தினாய் ? "
" அவன் எப்படி ஓட்டிகொண்டு போனான் என்று பார்த்தாய் தானே ?!... "
மீன்டும் சிடுசிடுத்தேன் !
" அந்த ஆள் ஒரு நொடியில் நம்மைதாண்டி மறைந்துவிட்டார்... இரண்டு காரின் கண்ணாடிகளும் மூடப்பட்ட நிலையில் யார் காதில் விழும் என இப்படிக் கத்தினாய் ? "
இத்தனைக்கும் வீடியோ கேமிலிருந்து முகம் திருப்பவில்லை அவன் !
ரெளத்திரம் பழகு பதிவுக்கு வித்தாய் அமைந்த சம்பவம் இது !
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என முழங்கி இணையத்தில் தமிழ்டயரி எழுதும், வயதாலும் தமிழ் அனுபவத்தாலும் மூத்த இராய. செல்லப்பா அவர்களின் எழுத்துச் சிறப்பு !
பதிவுகள்மன்றம், வேர்களைத்தேடி, தமிழ்க்காற்று ஆகிய முனைவர் இரா.குணசீலன் அவர்களின் மூன்று வலைப்பூக்களும் செந்தமிழின் நறுமணம் பரப்பும் செம்மொழிப்பூக்கள்
வழிப்போக்கனது உலகத்தில் பயணிக்க விரும்புபவர்கள் அங்கு நீண்ட நேரம் தங்குவதற்குத் தகுந்த நேரத்தில் செல்லுங்கள்... ஆழமான கருத்துடன் கூடிய அழகு எழுத்தினை அவசரமாயக் கடந்துவிட முடியாது... கூடாது !
" எங்குச் சென்றாலும் நமது மெட்ராஸ் மாதிரி வருமா? " என்ற சிலாகிப்புடன், மெட்ராஸ்தமிழனாய் எழுதும் நண்பர் குரு... சக மனிதர்களைப் படிப்பது ஒரு கலையென்றால் அப்படிப் படித்த அனுபவங்களை எழுத்தில் வடிப்பது கற்க இன்னும் சிரமமான கலை ! இரண்டினையும் மிக நேர்த்தியாய்ச் செய்பவர் ! வலைப்பூ வயதில் மூத்தவர் ! இவரது படைப்புகள் கடந்த காலத்தின் எந்தத் தருணத்தையும் நமக்காக மீட்டெடுக்கும் காலயந்திரங்கள் !
பாலமகியின்பக்கங்களின் சிறப்பை அந்தப் பக்கங்களில் காணக்கிடைக்கும் "முச்சு நின்றால் மட்டும் மரணமில்லை, சில அன்பான இதயங்களின் பேச்சு நின்றால் கூட மரணம் தான். " என்றவரிகளே சொல்லிவிடும் !
கதை, கவிதை, படித்தது, பிடித்தது என எழுத்து ஊஞ்சல் கட்டும் கலையரசி, திருநள்ளாறு, நாகூர், வேளாங்கன்னி என மும்மத நகரங்களுக்கும் பாலமாய் விளங்கும் எங்கள் காரைமாநகரின் எழுத்தரசி !
பல்சுவைபக்கம் பதியும் நிஜாமின் வலைப்பக்கங்களில் பல சுவையும் இருப்பது உண்மை ! இவர் " அரசு பதில்களையே " குழப்பியவர் என்பதால் கேள்விகள் கேட்காதிருத்தல் நலம் !!!
" சிரிங்க, சிரிங்க, சிரிச்சிக்கிட்டே இருங்க " என்னும் தமிழ் வலைப்பூவின் ஸ்மைலி சிம்பள் நம்பள் ஜோக்காளி பகவான் ஜீ !
புதியகாற்று எனப் பெயரிட்டிருந்தாலும் இளையராஜாவின் இசை தன் மூச்சுக்காற்று எனும் அளவுக்கு இளையராஜாவின் முரட்டு பக்தர் சார்லஸ் !
என் ரசணை எனத் தன் ரசணைகள் பற்றிய வரைவாக வலைப்பூவில் ரசிக்கும் கவிதைகள் படைக்கும் தர்மலிங்கம் ராஜகோபலன்...
" வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன் " என்ற தலைப்புடன், நினைத்துபார்க்கிறேன் எனத் தன் நினைவோட்டங்களை எழுத்தாய் பதியும் வெ.நடனசபாபதி அவர்கள்...
அர்த்தமுள்ள பார்வையில் ஆழமான கருத்துடன் அழகு பதிவுகளிடும் அமுதவன் அவர்கள்...
நல்வரவு என அகமும் முகமும் மலர வரவேற்று தன் எழுத்துப்படைப்புகளைப் பரிமாறும் ரூபன் !
கலகங்கள் செய்பவன் என்ற பயமுறுத்தலோடு எழுதும் நாரதன்... இவரது கலகங்களும் நன்மையில் முடிபவையே !
இளம் நிலவின் இதமான குளிராய் கவிதை படைக்கும் இளையநிலா இளமதி !
கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் அனைத்தையும் சிறப்பாகப் பதியும், தமிழ் பத்திரிக்கைகளில் எழுதும் வளரும் இளம் எழுத்தாளர் சகோதரி பவித்ரா நந்தகுமார்...
கதையும் கவிதையுமாய்க் கதம்ப வலை நடத்தும் கவிமனம் கொண்ட அருணா செல்வம்.
என் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே! என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே! என அறிவித்து அழகுதமிழில் இயற்கை ரகசியங்கள் விளக்கும் கீதமஞ்சரி !
சிறந்த மனிதர்கள் தொடங்கிச் சினிமா வரை எதையும் சமூகச் சிந்தனையுடன் சுவைபடக் கூறும் தென்றல்... கீதா எம்மின் தளம்.
தலைப்பில் கூறியதை போலவே இந்தத் தனிமரம் நமக்குப் பரிமாறக் காத்திருக்கும் கனிகளில் அறுசுவையும் உண்டு !
ஹுஸைனம்மாவின் டிரெங்க் பெட்டியில், மிட்டலின் "இரும்புகை" பிரான்ஸ் அரசாங்காத்தின் கோப நெருப்பில் உருகியது முதல் மல்லைய்யாவின் முதலீடுகள் அவர் மேனி தங்க நகையாய் மாறியது வரை அனைத்துச் செய்திகளும் சுவாரஸ்யம் !
இலக்கியம் தொடங்கிக் கதை, கவிதை, கட்டுரை, சமூகச் சீர்த்திருத்தம், நகைச்சுவை என எதைத் தேடினாலும் யாழ்பாவாணனின் எழுத்துகளில் கிடைக்கும் !
தொடருவோம்...
பட உதவி : GOOGLE
இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.