பதிவுகள் குறித்த பதிவுகள்.
துறைசார்ந்த இடுகைகள் என்று பேசுகையில், நான் இருக்கும் மென்பொருள்துறையைச் சேர்ந்த சில இடுகைகளை இங்கே உங்களுக்கு அறிமுகமாக வைக்கிறேன். இவற்றில் சில ஏற்கனவே நமக்குத் தெரிந்தவை. ஏற்கனவே நாம் பயன்படுத்தியவையும் உண்டு. இருப்பினும் என் கவனத்துக்கு வந்தவை இங்கே.
ப்ளாக் உதவி பக்கங்களில் உதவிக் குழுவினர் அவ்வப்போது வரும் மடல்களுக்கும், தனிமடலில் கேட்பவர்களுக்கும் உதவி செய்து கொண்டிருக்கும் போது, சயந்தன் புதிதாக வலை நுட்பம் வகுப்புகள் தொடங்கியுள்ளார்.
லேபிள் இடுதல், ட்ராப்டவுன் மெனு, மற்ற பதிவுகளுக்கு லிங்க் கொடுத்தல், தனி ஒலிப்பதிவு பெட்டி.. என்று பட்டையைக் கிளப்பும் பட்டியல். கேள்வி கேட்க ஆளில்லாமல் தனியே அடித்து ஆடுகிறார். முடிந்தால் நல்லா, நாலு கேள்வி கேட்டு முடுக்கிவிட வேண்டும்
அடுத்து ப்ளாக்கர் பற்றி எழுதுபவர்களில் குறிப்பிடத் தகுந்தவர், ரவிசங்கர். தமிழ்மணத்திற்கு நுட்ப ஆலோசனைகள் நாற்பதில் நிறுத்தியதில் முன்னணி வகித்தவர் என்ற முறையில், தற்போது எல்லாருக்கும் தெரிந்த வலைபதிவு இவருடைய கணிமை. வலைபதிவதைப் பற்றிய கலைச்சொல்லாக்கம், இணையத்திற்கான அடிப்படை மென்பொருட்கள், தளங்கள், HTML நிரலிகள் எழுத ஒரு சின்ன பயிற்சி என்று இணையத்திற்கு புதிதாக வருபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பக்கம் இது.
சமீபத்தைய மறுமொழிகளைத் திரட்டுவது பற்றிய இவரது சமீபத்தைய பதிவு புளோக்கர் கணக்கு வைத்திருக்கும் எல்லாருக்கும் உதவியாக இருக்கும்.
அமைதியாக, இதே போன்ற பிளாக்கர் தொடர்பான உதவிகளைச் செய்துவரும் மற்றொருவர், தீபா. முறையாக தமிழ் பயின்றிறாத தீபா ஆங்கிலம் கலந்த தமிழில் புளோக்கரில் செய்யக் கூடிய நுட்ப மேம்பாடுகள் குறித்து விதவிதமாக எழுதுகிறார். அதிலும் புது பிளாக்கர் இவருடைய சிறப்பான விசயமாக இருக்கிறது. தமிழ் வலைப்பதிவுகளில் தற்காலிகமாக ஓய்விலிருக்கும் ரமணியின் மூன்று பத்தி வார்ப்புரு பார்த்து தீபா உருவாக்கிய புது வார்ப்புரு இங்கே உங்கள் உபயோகத்திற்கு..
யாஹுவின் சிரிப்பான்களைப் பதிவில் தெரியவைக்கும் இவரது நிரலியைத் தற்போது தமிழ்வலைப்பதிவில் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். இந்த நிரலியின் மூலம் எல்லா இடுகைகளும் சிரித்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருக்கின்றன :)
தீபாவிடமிருந்து நாம் நுட்பம் கற்கும் வேளையில், தமிழ்ப்பதிவுகளிலிருந்து இன்னும் கொஞ்சம் நல்ல தமிழ் கற்றுக் கொண்டால் நமக்குப் படிக்கச் சுலபமாக இருக்கும் :D
புது பிளாக்கர் பற்றிய, அடுத்த குறிப்பிடத் தகுந்த இடுகை ஜெகத்துடையது. புது ப்ளாக்கரில் பழைய பின்னூட்டங்களை ஜிலேபித் தமிழிலிருந்து நம் யூனித்தமிழிலேயே பார்க்க கோபியுடன் சேர்ந்து ஜெகத் செய்த உதவி இப்போது பல இடங்களிலும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்மணப் பட்டியுடனேயே, ஜெகத்தின் இந்த நிரலியையும் உள்ளிடுவது இப்போது வழக்கமாகிவிட்டது. இது மட்டுமே அல்லாமல், கொஞ்சம் தேடிப் பிடித்து மாற்றம் செய்ய முடிந்தவர்களுக்கு, அவரவர் பதிவில் தமிழிலேயே நாளும் நேரமும் காட்ட இந்தப் பதிவின் நிரலி உதவி செய்கிறது.
பழைய புளாக்கரின் பழைய தமிழாகக் நிரலியை விடவும் இந்த நிரலி இன்னும் அதி நேர்த்தியாக வேலை செய்கிறதென்றால் மிகையில்லை..
இப்போதைக்குப் புது ப்ளாக்கர் பற்றிய தொழில்நுட்பப் பதிவுகள் எண்ணிக்கையில் குறைவு தான் என்றாலும் மேலும் மேலும் பிளாக்கர் குறித்த நுட்பப் பதிவுகள் இங்கு அவசியமாக இருக்கின்றன. முந்தைய பதிவு, அடுத்த பதிவு போன்றவற்றைக் குறிக்கும் சொற்களுக்கான மாற்றங்களைச் சுலபமாக்குவது, புதுப் ப்ளாக்கருக்கேற்ற வார்ப்புருக்கள் இன்னும் சிலவற்றை அதிகரிப்பது, கணினி நுட்பம் தெரியாதவர்களும் இவற்றில் சில நிரலிகளைப் பயன்படுத்த வழி செய்வது, வகைமேகங்கள், விரிபட்டி (widebar - பக்கங்களில் இல்லாமல் பதிவு தொடங்குமுன் இடுகைப் பகுதிக்கும், பக்கப் பட்டிகளுக்கும் பொதுவாக விரிந்த பட்டி) இணைப்பது போன்ற பலவிசயங்கள் தமிழில் இல்லாமலே இருக்கிறது. இவற்றிற்கும் கணித்தமிழில் இடுகைகள் அதிகரிக்க வேண்டும்.
சயந்தன், தீபா, ஜெகத் போல, இன்னும் பலர் தத்தம் புது ப்ளாக்கர் அனுபவத்தை எழுத எழுத, இந்த விதமான பதிவுகள் இங்கும் பெருகும்.
|
|
இத்தையும் கொஞ்சம் கண்டுக்கோங்க...
ReplyDeletehttp://kuzhali.blogspot.com/2007/03/blog-post.html
//தனியே அடித்து ஆடுகிறார்.//
ReplyDeleteஒரு சில பின்னூட்டக் கயமைகளை செய்திருப்பேன். அதற்காக முழுப் பழியையும் என்னில் போடக்கூடாது.. ப்ளீஸ் ஏற்றுக்கொள்ளுங்க.. உண்மையாகவே வேறு ஆட்களும் அங்கை வந்திருந்தாங்க.. ;(
என்னது ? என்னது வரவேயில்லை ! :(
ReplyDeleteபுது ப்ளாக்கர் - குறிசொற்கள், குறிசொற்களின் பட்டியல் அமைத்தல் !
என்னை பத்தி நல்ல-நல்ல விஷ்யமெல்லாம் சொல்லியிருக்கீங்க..பெருமையா இருக்கு..:)
ReplyDelete///////////////////
தமிழ்ப்பதிவுகளிலிருந்து இன்னும் கொஞ்சம் நல்ல தமிழ் கற்றுக் கொண்டால் நமக்குப் படிக்கச் சுலபமாக இருக்கும்
////////////////////
தமிழில் எழுத ஆரம்பிச்சதே.. நல்லா. தமிழ் எழுத கத்துக்க்த்தான்..(நிறைய [மோதிர] விரலால குட்டுகூட வாங்கியிருக்கேன்)..:D...
என்னோட தமிங்கிளிஷால் இன்னமும் உங்க எல்லாரெயும் கஷ்டபடுத்தத்தான் போறேன்...பறவாயில்லையா...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, பொன்ஸ். ஆனா, இதுக்காக எல்லாம் தமிழ் வலைப்பதிவர் அகராதியில இருந்து பொ.க.ச entryய தூக்க முடியாது :)
ReplyDeleteபொன்ஸக்கா!! நானும் ஆட்டைல இருக்கேன்! கண்டுகோங்க!!
ReplyDeleteகுழலி,
ReplyDeleteஉங்க கருவிப்பட்டை சேர்ப்பான் பார்த்தேன்.. ரொம்ப நல்ல முயற்சி.. இன்னும் இது போல் நிறைய செய்யுங்க..
சயந்தன்,
அதுக்கு அப்படி பொருள் இல்லை.. நாங்க நாலு அஞ்சு பேர் சேர்ந்து பிளாக் உதவின்னு துவங்கி ஒண்ணும் செய்யலை. நீங்க, தனியா ஒரு வகுப்பு ஆரம்பிச்சி நடத்திகிட்டிருக்கீங்கன்னு..
கோவி,
ஒரு பதிவெல்லாம்.. ஹி ஹி..சாரி...
தீபா,
தமிங்கிலீஸ் பரவாயில்லை. அவ்வப்போது ஒரேடியா ஆங்கிலத்துக்குப் போயிடறீங்க.. அதைக் குறைச்சிகிட்டாலே தமிழுக்கு வந்துடுவீங்க சீக்கிரமே :)
ரவிசங்கர்,
பொ.க.சவில் நீங்களும் இருக்கீங்களா! அடக் கடவுளே!! :)
அபி அப்பா,
கண்டுக்குவோம் :)
இந்தப்பதிவு அருமையான தகவல்களை அள்ளித்தந்து கொண்டே பயணிக்கிறது.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.