என்னை வியப்பிற்குள்ளாக்கிய சில தமிழ்மணப் பதிவுகள்!
=========================================================
என்னை வியப்பிற்குள்ளாக்கிய சில தமிழ்மணப் பதிவுகள்!
பகுதி - 1
ஒன்றைப் படித்தவுடன் அந்தப் படைப்பு, படிப்பவனை
'அட!" என்று சொல்ல வைக்க வேண்டும்.அதுதான்
சிறந்த படைப்பு. அது எதைப் பற்றியதாக வேண்டு
மானாலும் இருக்கலாம். ஆனால் படிப்பவனை அது
சென்றடைய வேண்டும்
படைப்பின் அளவுகோல் அதுதான்!.
அதன் விளைவாகப் படித்தவன் மனதிலும் அந்தப்
படைப்பாளி தங்கி விடுவான். தங்கிவிடுவான் என்பது
மட்டுமல்ல நிரந்தரமாகக் குடியேறிவிடுவான்
நான் முதலில் சிறந்த வாசகன்.
எழுத வந்ததெல்லாம் விபத்து!
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகப் படித்து
வருகிறேன்.
கனமான புததகங்கள் முதல் (முன்பு) மளிகைச்
சாமான்கள் கட்டிவரும் காகிதம்வரை அச்சடிக்கப்
பெற்ற எதையும் வாசித்து மகிழ்வது என் பழக்கம்.
பல படைப்பாளிகளை அவர்களது மாஸ்டர் ஃபீஸ்
என்னும் படைப்புக்களைக் கொண்டுதான் நான் என்
மனதில் அமர்த்தி வைத்திருக்கிறேன்
பாலகுமாரன் என்றால் 'பச்சை வயல் மனது'
என்ற அவருடைய குறு நாவலும்,
சுஜாதா என்றால், 'காகிதச் சங்கிலிகள்" என்ற
அவருடைய குறு நாவலும்,
அனுராதா ரமணன் என்றால் அவருடைய
'பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா' என்ற
குறு நாவலும்,
Jeffery Archer என்றால் "Twist in the tale" என்ற
அவருடைய சிறுகதைத் தொகுப்பும்தான் என் மனதில்
முன்வந்து நிற்கும்.
அதற்குப் பிறகுதான் அவர்கள் என்
மனக்கண்ணில் தெரிவார்கள்
அதுபோல தமிழ்மணத்தில் நான் வந்த குறுகிய
காலத்திற்குள் (15 மாதங்களாகின்றன) ஒரு 100 பதிவுகளுக்கு
மேல் ஒருவிதமான சந்தோசமான மனத்தாக்கத்துடன்
என் மனதில் தங்கிவிட்டன1
அவைகள் சும்மா தங்கவில்லை - பதிவருடைய பெயருடன்
சேர்ந்தே தங்கிவிட்டன!.
கைப்புள்ள என்றால் எனக்கு "பஸ் பயணங்களில்"
என்ற அவருடைய பதிவுடன்தான் நினைவிற்கு வருவார்.
அதுபோல வெட்டிப்பயல் என்றால் எனக்கு அவர் பதிந்த
கர்ணனும் - கண்ணனும் என்ற பதிவுடன்தான் அவர் என்
நினைவிற்கு வருவார். செல்வன் எண்றால் கம்யூனிசமும்
கண்ணனும் என்ற பதிவுடன்தான் அவர் என் நினைவிற்கு
வருவார்
இப்படி ஒவ்வொருவரையும் சொல்லிக்கொண்டே போகலாம்!
ஒவ்வொரு பதிவிலும் ஒரு சிறப்பு உள்ளது
அவைகள் என்னை 'அட' என்று வியக்க வைத்திருக்கின்றன
எல்லாப் பதிவுகளையும் குறிப்பிட எனக்கு ஆசை!
இடம், நேரம், பதிவின் நீளம், உங்களுடைய
பொறுமை என்று பலவற்றையும் மனதில் அசைபோட்டு
ஒரு முடிவிற்கு வந்தேன்.
அவ்வளவு பதிவுகளையும் இந்கே குறிப்பிட்டுச் சுட்டி தருவது
என்பது அசாத்திய வேலை! ஆகவே கிடைக்கும் சில
பதிவுகளை மட்டும் இங்கே தரவுள்ளேன்
சிலவற்றை இந்த முதல் பகுதியிலும், மீதமுள்ளவற்றை
அடுத்த 2ம் பகுதியிலும் தருகிறேன்.
அவைகளில் பல நீங்கள் படித்ததாகவும் இருக்கலாம்
அதனால் என்ன? மீண்டும் ஒரு முறை படித்து மகிழுங்கள்!
இந்தப் பதிவைப் Book Mark செய்து வைத்துக் கொண்டு
நேரம் இருக்கும் போது படித்து இன்புற வேண்டுகிறேன்
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
-------------------------------------------------------
1. பஸ் பயணங்களில்
பதிவர் பெயர்: கைப்புள்ள
2. கம்யூனிசமும் கண்ணன் கோவிலும்
பதிவர் பெயர்: செல்வன்
3. ஒளவையின் அகவல்
பதிவர்:பெயர்: கண்ணபிரான் ரவிசங்கர்
4. கற்பக மரம் = தமிழ்மணம்
பதிவர் பெயர்: குமரன்
5. கண்ணன் - கர்ணன்
பதிவர் பெயர்: வெட்டிப்பயல்
6. வாங்க 3க்கு போலாம்
பதிவர் பெயர்: லக்கி லுக்
7. பாட்டுப் பிடிக்கும் வேலை
பதிவர் பெயர். வடுவூர்.எஸ்.குமார்
8. வலைப்பதிவர்களுக்கு பட்டமளிப்பு விழா
பதிவர் பெயர்: வரவனையான்
9. விவேக சிந்தாமணி - பாடல் எண் 69
பதிவர் பெயர்: ஞானவெட்டியான்
10. வாத்தியாரின் வீட்டுப்பாடம்
பதிவர் பெயர்: துளசி கோபால் (அக்கா)
அக்கா என்பது ஒரு மரியாதைக்காக
அல்லது என் துண்டைக் காப்பபற்றிக்கொள்ள
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொளலாம் !:-)))
11. ஏற்றம் தரும் யோகா கலை!
பதிவர் பெயர்: செந்தழல் ரவி
12. சாதிகள் இருக்குதடி பாப்பா
பதிவர் பெயர்: வி.எஸ்.கே
13. இலங்கையில் ரயில்வேயின் ஆட்சி
பதிவர் பெயர்: ஸ்ரீதரன் கனக்ஸ்
14. பா.க.ச.வில் சேர்வது எப்படி?
பதிவர் பெயர்: ஜெயசங்கர்.நா.
(இந்தப் பதிவில் பின்னூட்டங்களும் கலக்கலாக
இருக்கும்)
15. சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
பதிவர் பெயர்: விடாது கருப்பு
16. விக்கிபீடியா கூட்டுழைப்பு
பதிவர் பெயர். மு.மயூரன்
17. யார் பேச்சை யார் கேட்கிறார்கள்?
பதிவர் பெயர்: வல்லி சிம்ஹன்
18. பீர்பல் கதைகள்
பதிவர் பெயர்: ஹரிஹரன்
19. ஆறிப்போகுமுன் ஒரு ஆறு பதிவு
பதிவர் பெயர்: இலவசக்கொத்தனார்
20. இன்னிசை வேந்தர்
பதிவர் பெயர்: யோகன் பாரிஸ்
21. ஆன்மிகம் ஆனந்தமானது
பதிவர் பெயர்: கால்கரி சிவா
22. ரெளத்திரம் கொள்
பதிவர் பெயர்: வற்றாயிருப்பு சுந்தர்
23. கழுகு மலை
பதிவர் பெயர்: ஜி.ராகவன்
24. யாருக்காக எழுதுகிறோம்?
பதிவர் பெயர்: ஆசிப் மீரான்
25. கொச்சின் விட்டகுறை - தொட்டகுறை
பதிவர் பெயர் - கானா பிரபா
26. பழனி மலையாண்டி தரிசனம்
பதிவர் பெயர்: கார்மேக ராஜா
27. தராவி குடிசைப் பகுதியா?
பதிவர் பெயர்: எஸ்.பாலபாரதி
-----------------------------------------------------------------
( மீதமுள்ளவைகள் அடுத்த பதிவில்)
அன்புடன்.
SP.VR.சுப்பையா,
இந்த வார ஆசிரியர்,
வலைச் சரம் - தமிழ் - இணைய இதழ்
------------------------------------------------------------------
|
|
நன்றி ஆசானே!
ReplyDeleteஜோசியம், புதிர்கள் என்று பல சிறப்பான பதிவுகளை நீங்கள் எழுதியிருந்தாலும் உங்கள் தமிழ்வாணன் பற்றிய பழைய பதிவு ஒன்று இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது வாத்தியாரய்யா
ReplyDeleteநல்ல தேர்வு சுப்பைய்யா சார்.....படிக்க விட்டுபோனவையை படித்து கொண்டு இருக்கிரேன்!! நன்றி!
ReplyDeleteஅண்ணா!
ReplyDeleteகிள்ளிப் பார்த்தேன். என்பதிவுமா?? ;தமிழ் மணத்தில் இலையான் கலைக்கும் பதிவு; ஆடிக் கொன்று
ஆவணிக் கொன்று போடுபவனல்லா?? நான்!!
நன்றி
வாத்தியார் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்.
ReplyDeleteதுண்டு பத்திரமா இருக்குல்லே? :-))))
உங்க ( இதே)ரவிவர்மாவை இந்தமுறை
நானும் வாங்கி வந்துருக்கேன்.
/// VSK said..நன்றி ஆசானே! ////
ReplyDeleteகிரிகெட்ல முதல் விக்கெட் மாதிரி முதல் பின்னூட்டம்
எதிர்பார்ப்புக்களைக் கொண்டது!
உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்த்தவுடன்
இப்போ என் இதயம் லப் - டப்' பின்னு சீராக ஒலிக்கிறது!:-)))
///செல்வன் said..ஜோசியம், புதிர்கள் என்று பல சிறப்பான பதிவுகளை
ReplyDeleteநீங்கள் எழுதியிருந்தாலும் உங்கள் தமிழ்வாணன் பற்றிய பழைய
பதிவு ஒன்று இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது வாத்தியாரய்யா///
ஆகா, அதை நீங்கள் நினைவில் வைத்துள்ளது நெகிழ்ச்சியாக
உள்ளது!
சரி, அது போன்று இன்னொன்றையும் விரைவில் எழுதிவிடுகிறேன் செல்வன்!
///Radha Sriram said...
ReplyDeleteநல்ல தேர்வு சுப்பைய்யா சார்.....படிக்க விட்டுபோனவையை
படித்து கொண்டு இருக்கிரேன்!! நன்றி!///
அதற்காகத்தானே, மிகுந்த சிரமப்பட்டு சுட்டிகளைத் தேடிக்
கொடுத்திருக்கிறேன். படித்து மகிழுங்கள்!
////யோகன் பாரிஸ்(Johan-Paris) said.
ReplyDeleteஅண்ணா!
கிள்ளிப் பார்த்தேன். என்பதிவுமா?? ;
தமிழ் மணத்தில் இலையான் கலைக்கும் பதிவு; ஆடிக் கொன்று
ஆவணிக் கொன்று போடுபவனல்லா?? நான்!!
நன்றி////
ஆடிக்கொன்று போட்டாலும்
பாடிப் பரவசம் ஆகும்படி
போட்டிருக்கின்றீர்கள்
நண்பரே!
/////துளசி கோபால் said...
ReplyDeleteவாத்தியார் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்.
துண்டு பத்திரமா இருக்குல்லே? :-))))
உங்க ( இதே)ரவிவர்மாவை இந்தமுறை
நானும் வாங்கி வந்துருக்கேன்.///
இதற்குமுன்பு நான் ஒரு முறை பதிவிட்டிருந்த
வேறு ஒரு ரவிவர்மா படத்தையும் நீங்கள்தான்
ரசித்துப் பின்னூட்டம் இட்டிருந்தீர்கள்!
நன்றி சகோதரி!
ஆமாம், நினைவு படுத்தினீர்கள்!
தட்டச்சு வேலையிலும் துண்டை மறக்காமல்
கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டிருக்கின்றேன்
அது இருப்பதால்தான் ஒரு தெம்போடு எழுத முடிகிறது!
பத்திரிக்கை ஆசிரியர் என்றால் ஒரு கெட் அப் வேண்டாமா?:-)))
பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஒரு நல்ல ஆசிரியர் என்று தாங்களைப் பற்றிக் கேள்விப்பட்டபோது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. பின்னர் தங்களின் ஜோதிடப் பதிவுகளை நான் படித்து வியந்து இருக்கிறேன். வானியலை நான் படித்து இருந்தாலும் ஜாதகம், ஜோதிடம் போன்றவற்றில் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. மற்றபடி நீங்களும் இளைனர்களோடு இளைஞராக இருந்து நகைச்சுவையுடன் பதிந்த பல பதிவுகள் என் மனதைக் கவர்ந்தன. அனைத்து பதிவுகளுமே நல்ல பதிவுகள்தான் எனும்போது எந்த பதிவைச் சிறந்ததாக நான் இங்கே குறிப்பிடுவது!
ReplyDeleteவணக்கம் ஐயா
ReplyDeleteவலையுலகில் பல எழுத்தாற்றல் மிக்க பதிவர்கள் மத்தியில் என் பதிவையும் வாசித்துப் பரிந்துரைத்தமைக்கு மிக்க நன்றிகள்.
எந்தப் பதிவு எல்லாம் போட்டு இருக்கீங்க அப்படின்னு ஒரு ஆர்வத்தில் பார்க்க வந்தால் என் பதிவையும் போட்டு அதிர்ச்சி குடுத்துட்டீங்களே!
ReplyDeleteநன்றி வாத்தியாரே!
இது அடுத்த (பக்கத்து) வகுப்பில் எடுக்கும் பாடம் எனவே எட்டிப் பார்த்துச் செல்கிறேன்.
ReplyDelete:)
///// விடாதுகருப்பு said... பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஒரு நல்ல ஆசிரியர் என்று தாங்களைப் பற்றிக் கேள்விப்பட்டபோது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. பின்னர் தங்களின் ஜோதிடப் பதிவுகளை நான் படித்து வியந்து இருக்கிறேன். வானியலை நான் படித்து இருந்தாலும் ஜாதகம், ஜோதிடம் போன்றவற்றில் எனக்கு முழு நம்பிக்கை இல்லை. மற்றபடி நீங்களும் இளைனர்களோடு இளைஞராக இருந்து நகைச்சுவையுடன் பதிந்த பல பதிவுகள் என் மனதைக் கவர்ந்தன. அனைத்து பதிவுகளுமே நல்ல பதிவுகள்தான் எனும்போது எந்த பதிவைச் சிறந்ததாக நான் இங்கே குறிப்பிடுவது! ////
ReplyDeleteஅடடே வாருங்கள் மிஸ்டர் கருப்பு, உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!
இளைஞர்களோடு இளைஞனாக் இருக்கிறேன் என்று நீங்கள் சொல்லியதற்கு
தனியாக ஒரு நன்றி!
தமிழ்மணத்தில் எழுதுபவ்ர்களிலும் சரி, படிக்க உள்ளே வரும் வாசகர்களிலும் சரி
81% இளைஞர்கள் - அவர்கள் ஆதர்வு அவசியம் தேவை - அதை நன்றாக
உணர்ந்துதான் நான் செயல்படுகிறேன்!
//// கானா பிரபா said... வலையுலகில் பல எழுத்தாற்றல் மிக்க
ReplyDeleteபதிவர்கள் மத்தியில் என் பதிவையும் வாசித்துப் பரிந்துரைத்தமைக்கு
மிக்க நன்றிகள்.///
விருட்சம் ஆரம்பத்தில் விதையில் இருந்துதான் பிறக்கிறது என்பார்கள்
நீங்கள் இப்போது செடியாக இருக்கின்றீர்கள்!
விருட்சமாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை நண்பரே!
//// இலவசக்கொத்தனார் said...எந்தப் பதிவு எல்லாம் போட்டு இருக்கீங்க
ReplyDeleteஅப்படின்னு ஒரு ஆர்வத்தில் பார்க்க வந்தால் என் பதிவையும்
போட்டு அதிர்ச்சி குடுத்துட்டீங்களே! நன்றி வாத்தியாரே!///
வெறும் அதிர்ச்சின்னு சொல்லாம இன்ப அதிர்ச்சின்னு
சொல்லுங்க!
நானும் இலவசம்தான். ஒருவாரத்திற்கு இலவசஆசிரியர்:-)))
///// கோவி.கண்ணன் said... இது அடுத்த (பக்கத்து) வகுப்பில்
ReplyDeleteஎடுக்கும் பாடம் எனவே எட்டிப் பார்த்துச் செல்கிறேன்.////
மிகவும் நல்ல காரியம்! இன்னும் ஒரு மூன்று நாட்கள்தான்
அப்படியே செய்யுங்கள்!
நானும் உங்கள் ரகளைகளையெல்லாம்
மறந்து அல்லது துறந்து நிம்மதியாக பத்திரிக்கை ஆசிரியர்
பணியைச் செய்வேன்!:-))))
நன்றி கண்ணன்!
வாத்தியார் வேலை எவ்வளவு கஷ்டம் என்பது இந்த பதிவை பார்த்து தெரிந்துகொண்டேன்.
ReplyDeleteதமிழ்மணத்தின் 25% வேலை உங்கள் கை மூலம் சேர்த்து வைத்து இப்போது கொடுத்துள்ளீர்கள்.
நன்றி ஐயா.
//வெறும் அதிர்ச்சின்னு சொல்லாம இன்ப அதிர்ச்சின்னு
ReplyDeleteசொல்லுங்க!//
எனக்கு மட்டுமா அதிர்ச்சின்னு சொன்னேன், எனக்கு வேணா இன்ப அதிர்ச்சியா இருக்கலாம். மத்தவங்களுக்கு..... ஹிஹி
//மிகவும் நல்ல காரியம்! இன்னும் ஒரு மூன்று நாட்கள்தான்
ReplyDeleteஅப்படியே செய்யுங்கள்!//
ஐயா,
மூணு நாள் ரொம்ப அதிகம், மத்த மாணவர்கள் மத்தியில் என் மதிப்பு குறையும். மறுபரீசீலனை பண்ண வாய்புக்கிடையாதா ?
என்னைப் போல புதிதாய் வந்தவர்களுக்கு இந்த பதிவுகள்/பதிவர்கள் ஒரு நல்ல அறிமுகம்.
ReplyDeleteமிக்க நன்றி!
//// வடுவூர் குமார் said...வாத்தியார் வேலை எவ்வளவு கஷ்டம்
ReplyDeleteஎன்பது இந்த பதிவை பார்த்து தெரிந்துகொண்டேன்.
தமிழ்மணத்தின் 25% வேலை உங்கள் கை மூலம் சேர்த்து
வைத்து இப்போது கொடுத்துள்ளீர்கள்.
நன்றி ஐயா.///
அதெல்லாம் ஒன்றும் கஷ்டம் இல்லை குமார்!
கஷ்டம் என்று நினைத்தால் எதுவுமே கஷ்டம்தான்!
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று
நினைத்துச் செயல்படும்போது எல்லாமே சுலபம்தான்!
ஒரு மனத்திருப்தி கிடைக்கும் பாருங்கள் - அதற்கு ஈடு இணை
எதுவுமே இல்லை!
///// இலவசக்கொத்தனார் said.
ReplyDelete//வெறும் அதிர்ச்சின்னு சொல்லாம இன்ப அதிர்ச்சின்னு
சொல்லுங்க!//
எனக்கு மட்டுமா அதிர்ச்சின்னு சொன்னேன், எனக்கு வேணா
இன்ப அதிர்ச்சியா இருக்கலாம். மத்தவங்களுக்கு..... ஹிஹி///
உங்களின் பிரபலம் உங்களுக்குத் தெரியாது!
தமிழ்மணத்திலேயே பதிவுகளைப் படித்து அதிகமாகப்
பின்னூட்டம் இடும் மூன்று அன்பர்களுடைய
பெயர்களில் உங்கள் பெயரும் ஒன்று!
(மற்ற இரண்டு பேர்கள் யாரென்று உங்களால்
ஊகிக்க முடியுமா? )
///கோவி.கண்ணன் said...
ReplyDelete//மிகவும் நல்ல காரியம்! இன்னும் ஒரு மூன்று நாட்கள்தான்
அப்படியே செய்யுங்கள்!//
ஐயா,
மூணு நாள் ரொம்ப அதிகம், மத்த மாணவர்கள் மத்தியில் என்
மதிப்பு குறையும். மறுபரீசீலனை பண்ண வாய்புக்கிடையாதா ?///
அடடா, என்ன சீரியசாக எடுத்துக் கொண்டு விட்டீர்களா?
அது சும்மா விளையாட்டிற்காக எழுதியது! சிரிப்புக் கோடுகள்
போட்டிருக்கின்றேனா - பார்க்கவில்லையா?
கண்ணதாசனுக்கும் கண்ணன் வேண்டும்! அவருடைய
ரசிகன் நான் - எனக்கும் ஒரு கண்ணன் வேண்டும்
(அந்த மாயக்கண்ணன் வருவதற்குக் கொடுப்பினை இல்லை!)
ஆகவே...ஹி.ஹி..!:-)))
/// தென்றல் said...
ReplyDeleteஎன்னைப் போல புதிதாய் வந்தவர்களுக்கு இந்த பதிவுகள்/பதிவர்கள் ஒரு நல்ல அறிமுகம்.
மிக்க நன்றி! ////
ஆகா, சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் மிஸ்டர் தென்றல்!
நன்றி!
ஐயா,
ReplyDeleteவியப்பாக இருக்கிறது உங்க வகுப்பு அறையில் கூட நீங்க இவ்வளவு ஆக்டீவாக இல்லை. நாங்கெலெல்லாம் தேர்வு எழுதிட்டு வாத்தியார் மதிப்பெண்ணுக்கு காத்திருப்போம். இங்கே வலைச்சரத்தில் அவ்வப்போது திருத்தி கையில் கொடுத்துடுறிங்க !
பாராட்டுக்கள் :) :) :)
அன்பு சுப்பையா,
ReplyDeleteஎன்னையும் வலைப்பதிவராகக் கணக்கில் சேர்த்துக்கொண்டமைக்கு நன்றி.
:-)))
ReplyDeleteஞாபகசக்தி அதிகம் சார் உங்களுக்கு...
பின்னூட்டமிடும் அன்பர்களுக்கு, இப்பொழுதே 32ஐ நெருங்கிவிட்டது பின்னூட்டங்கள்.
ReplyDeleteஎல்லை என்ன 40 ஆ?
இன்னும் 8 பேரகளுக்கு இடம் ஒதுக்கிவிட்டு நான் மறைந்து நிற்கிறேன்.
கடைசியாக் பின்னூடமிட்ட மூவருக்கும், வரவிருக்கும் அன்பர்களுக்கும்
அடுத்த பதிவில் பதில் நான் சொல்கிறேன்
பொருத்தருள்கவும்!
Thanks.
ReplyDeleteRavi
//// ஞானவெட்டியான் said...அன்பு சுப்பையா,
ReplyDeleteஎன்னையும் வலைப்பதிவராகக் கணக்கில் சேர்த்துக்
கொண்டமைக்கு நன்றி.///
அடடே, உங்களை வலைப் பதிவராகக் கணக்கில்
கொள்ளவில்லை அய்யா! அதற்கும் மேலே வலைஞானியாகக்
கொண்டுள்ளோம் அய்யா!
இசைக்கு இளையராஜா
வலைக்கு ஞானராஜா(ஞான வெட்டியான்)
//// லக்கிலுக் said... :-)))
ReplyDeleteஞாபகசக்தி அதிகம் சார் உங்களுக்கு...////
நன்றி நண்பரே!
ஞாபக சக்தி மட்டும் தான் இருக்கிரது!
லக்கும் இல்லை லுக்கும் இல்லையே!:-)))
ஆசிரியரின் கவனம் கவர்ந்த பதிவுகளில் அடியேனுக்கும் இடம் தந்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஇப்படி விளம்பரம் தந்து ஊக்கம் தருவதற்கு நன்றிகள் மீண்டும்!
வணக்கம் சுப வீர சுப்பையா ஐயா, வாழ்த்துக்களும் நன்றிகளும்.
ReplyDeleteநன்றி அய்யா!
ReplyDeleteவெகு நாள் கழித்து ஒரு ஆசிரியரின் பாராட்டு கிடைத்துள்ளது.
1
ReplyDelete///////////Hariharan # 03985177737685368452 said...
ஆசிரியரின் கவனம் கவர்ந்த பதிவுகளில் அடியேனுக்கும் இடம் தந்தமைக்கு மிக்க நன்றி!
இப்படி விளம்பரம் தந்து ஊக்கம் தருவதற்கு நன்றிகள் மீண்டும்!/////////////
உங்களைப் போன்ற இளைஞர்களின் பதிவுகள்தான் உண்மையில்
எனக்கு ஊக்கம் தருகின்றன!
நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!
------------------------
2
///// Kanags said...
வணக்கம் சுப வீர சுப்பையா ஐயா, வாழ்த்துக்களும் நன்றிகளும்.///
கனகு அண்ணா, உங்களுடைய நட்சத்திர வாரத்தில் பதிந்த
அத்தனை பதிவுகளுமே சிறப்பானவைதான்.
ஒரே ஒரு பதிவைத்தான் குறிப்பிட வேண்டுமென்ற
சூழ்நிலையில், இந்தப் பதிவைக் குறிப்பிட்டேன்
------------------------
3
///// கார்மேகராஜா said... நன்றி அய்யா!
வெகு நாள் கழித்து ஒரு ஆசிரியரின் பாராட்டு கிடைத்துள்ளது./////
நன்றாக எழுதுகிறீர்கள் கார்மேகராஜா!
தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!
---------------------
இதில் "பஸ் பயணங்களில்" (கைப்புள்ள), "வாங்க 3க்கு போலாம்" (லக்கியார்), "பீர்பல் கதைகள்" (ஹரிஹரன்) ஆகியவற்றை நானும் மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன்.
ReplyDeleteசந்தடி சாக்குல "பா.க.ச.வில் சேர்வது எப்படி?" (wethepeople) என்ற கலக்கல் பதிவையும் சேர்த்துட்டீங்களே.. சூப்பர் போங்க :-)
பா.க.ச.
அமெரிக்கா கிளை :-)
நல்ல தொகுப்பு. தெரியாதவற்றை படித்து கொண்டு இருக்கிறேன்.
ReplyDeleteநம்ம பதிவுகளையும் கொஞ்சம் கண்டுக்கோங்க...
சேதுக்கரசி said... இதில் "பஸ் பயணங்களில்" (கைப்புள்ள), "வாங்க 3க்கு போலாம்" (லக்கியார்), "பீர்பல் கதைகள்" (ஹரிஹரன்) ஆகியவற்றை நானும் மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன்.
ReplyDeleteசந்தடி சாக்குல "பா.க.ச.வில் சேர்வது எப்படி?" (wethepeople) என்ற
கலக்கல் பதிவையும் சேர்த்துட்டீங்களே.. சூப்பர் போங்க :-)
பா.க.ச.அமெரிக்கா கிளை :-)////
முதலில் 14 நாட்கள் கழித்துப் பின்னூட்டம் போட்டதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
ஊறுகாயும், அப்பளமும் முழு உண்வாகாது. ஆனால் அவையின்றி உணவும்
முழுமை பெறாது! அதுபோல கலக்கல் பதிவுகளும் தமிழ் அரங்கத்திற்குத் தேவை!
அதானால்தான் அதையும் சேர்த்தேன் அரசியாரே!
/////// மாறன் said...
ReplyDeleteநல்ல தொகுப்பு. தெரியாதவற்றை படித்து கொண்டு இருக்கிறேன்.
நம்ம பதிவுகளையும் கொஞ்சம் கண்டுக்கோங்க/////
50 என்கிற அளவுகோல் வைத்திருந்ததால் அதற்குமேல் பல பதிவுகளைக் குறிப்பிட முடியவில்லை!
இன்னொரு வாய்ப்புக் கிடைக்கும்போது. செய்ய இருக்கிறேன் நண்பரே!..