வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Thursday, December 31, 2009
பசி தூண்டும் ருசி...
Wednesday, December 30, 2009
கவித்துவ அகமுகங்கள்...
எழுத்துல இதுக்கிணையா ஒன்ன சொல்லணும்னா கவிதையத்தான் சொல்ல முடியும். முக்கி, முனகி, யோசிச்சி, சொறிஞ்செல்லாம் இல்லாம மூச்சு மாதிரி அதுவா வரத எழுத்தாக்குற வித்தகர்கள் சிலர பார்ப்பமா?
ஒரு நா இந்த மனுசன் கவிதை கூப்டுச்சு. வலை மனை பேரே அன்புடன் புகாரி. மனுசன் சுவாசிக்கிறதே கவிதையில போல. அதும் காதல் கவிதை. இவரு வலைப்பூக்கு போய்ட்டு வந்துற முடியாது. பளிச் பளிச்சுன்னு பூத்துட்டே இருக்கும். பாருங்க ஒன்னு ரெண்டு. அப்புறம் இங்கனக்குள்ளயேதான் கெடப்பீங்க.
பசு மாடு இருக்கே கடவுள் படைப்புல ஆகச் சிறந்தது அது. வைக்கோல தேச்சி குளுப்பாட்டி, மஞ்சள் குங்குமம் வெச்சி, மினு மினுன்னு இளம் வெயில்ல நிக்கிறப்ப பக்கத்துல இருந்து பார்த்திருக்கீங்களா? களைச்சி உழைச்சி வந்து அம்மா மடியில முகமழுந்த்த மூச்சு இழுத்திருக்கீங்களா? உயிர்ல உறைக்கும் அந்த வாசனை. சித்தப்பு, மகாப்பா, பா.ரா. இப்புடி எந்த பேர்ல கூப்டாலும் மக்காங்கர சொல்லுல அந்த நேசத்தையும் எழுத்துல தெரியிற அந்த வாசத்தையும் என்ன சொல்ல. பசு மாதிரி மனசு, தானே இவர் கவிதை தேடி அடையுதா இல்லையா?
வானவில் சூரியன் மாதிரி, நட்சத்திரம் மாதிரி எப்பவுமே இருக்கறதில்ல. ஆனா இருக்கிறப்ப என்ன வேலைன்னாலும் விட்டுட்டு அதுல சொக்காத மனுசப்பய உண்டுமா? வலையுலக வானவில் நவாஸூதீன். அவர் எழுத்தின் பதத்துக்கு இந்த ஒரு சோறு போதாதா?
சுஜாதா கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லுன்னு எழுதினார். ஒரு கவிதை சொல்லுன்னா அது சொல்லும் சூர்யாகண்ணன்னு. கணினில ஒரு பிரச்சனைன்னா சூர்யாகண்ணன்ல தேடினா வழியிருக்கும்னு எல்லாருக்கும் தெரியும். இவருக்குள்ள இருக்கிற கவிஞரை துறுத்தல் ஒண்ணில பாருங்களேன்.
கரிசல்காரன்: அதேதான்! கி.ரா.வ தந்த கோவில்பட்டிக்காரரு. புதுசா எழுத வந்திருக்கார்னா நம்ப முடியல. வலைப்பூக்கு புதுசு. கவிதையா, கட்டுரையா எதுன்னாலும் படிச்சிட்டு பின்னூட்டம் போட்டுட்டு கிளம்பறப்ப புகுந்த வீட்டுக்கு போற பொண்ணு மாதிரி மனச அங்க விட்டுத்தான் வரவேண்டியிருக்கு.
அகல்விளக்கு ராஜா: வேலைப் பளு காரணமா அதிகம் எழுத முடியறதில்ல போல. எழுதின வரைக்கும் அட போட வைக்கும் எழுத்து. முயற்சி இருக்கு. திறமை இருக்கு. நல்லா வரும் இந்த புள்ள.
செ.சரவணக்குமார்: செ.சரவணக்குமார் பக்கங்கள் என்ற வலைப்பூவுக்குச் சொந்தக்காரர். பல எழுத்தாளர்களின் அறிமுகத்தை பார்க்கலாம் இவர் பக்கத்தில். என் ராசா கி.ராவை அறிமுகம் செய்த அழகுக் கட்டுரை இதோ.
Tuesday, December 29, 2009
அட..மற்றும் அடடே..
மேல் வேட்டிய மடிச்சி களுத்த சுத்தி போட்டா பந்தாவா அங்கவஸ்திரம், தோள்ள போட்டா நாட்டாமை, இடுப்புல கட்டினா மருவாதி, தலையில சுத்தினா வேலைன்னு ஒரு துண்ட வெச்சே பில்டப்பு குடுக்கறவன் தமிளந்தானண்ணே. அதும் டருக்கி டவல்ல தலப்பா கட்டத் தெரிஞ்சவிய்ங்க நம்மாளுதான? என்ன நான் சொல்லுறது.
தோ! இந்த சிங்கம் களமிறங்கிருச்சேய்னு உசுப்பேத்துற வேலையெல்லாம் வேணாம். வலைச்சரங்கரது ஒரு லைப்ரரி மாதிரி. வலையுலகத்துக்கு புதுசா வந்தவங்கள அறிமுகப் படுத்தறது மட்டுமே நம்ம வேலையில்ல. நாம தேடி கண்டெடுத்த முத்துக்கள இங்க பாருங்கப்பா. இங்க கொட்டி கெடக்கு. படிச்சி பழகு. எழுதி பழகுன்னு காட்டணுமா இல்லையா?
நமக்கு பாருங்கண்ணே கட்டம் சரியா இருந்திருக்கு. பின்ன என்னண்ணே தமிழே தேடி வந்து தட்டி குடுத்துச்சு. பழமை பேசலாம் வாடான்னு வழிகாட்டிச்சி. மண்ண மறக்காம நல்ல தமிழ் எழுத, தமிழ்ச் சுரங்கத்துல தங்கம் தேடி எடுக்கன்னு தம்பி 500 பேழைக்கு மேல சேர்த்து வச்சிருக்கு. ஏண்ணே! மனசு ஓய்ஞ்சிருக்கறப்ப சின்னபய புள்ளைல பண்ண சேட்ட கவனம் வந்த்திச்சின்னு வைங்க, களுத கவலையெல்லாம் கெடாசிட்டு சித்த நேரம் எங்கயோ போயிருவம்லண்ணே! அந்த நனவச் சொன்ன அழகு இருக்கே. நினைச்சாலே தேனுண்ணே. படிக்காதவங்க படிங்க. பளார்னு அர டவுசருக்கு மாறி, டயர தட்டிகிட்டு பழமை கூடவும் பேச்சி கூடவும் ஊர சுத்தி வராட்டி ஏன்னு கேளுங்க.
நம்ம வீட்ல இருக்குற விசுக்கான கூப்டு, ஏ தம்பி இங்கவாடா, திருக்குறள் படிப்போம்னு சொல்லி பாருங்க. வகுத்த வலிக்குதுன்னு சீனு போடும். செல்ல கூப்டு கைல குடுத்து, ஏப்பு, இதில ஒரு திருக்குறள் அனுப்பணும்டான்னு சொல்லி பாருங்க, வெடுக்குன்னு பறிச்சிகிட்டு பர பரன்னு பட்டன தட்டுவான்ல. இந்த டெக்கினுக்குல சங்கப்பாட்டு சொல்ற அழகரு, நர்சிம். எத படிச்சாலும் இப்புடி எழுதமாட்டமான்னு ஏங்க வைக்கிற எழுத்துண்ணே, என்ன சொல்றீங்க?
"எனக்கு எழுத பிடிக்காது. பள்ளியில், தினம் தோறும் ஹோம் வொர்க் செய்யாமல், அடி வாங்கும் கும்பலில் நானும் ஒருவன்.ஆனா இப்ப பல பேரு ப்ளாக் எழுதுவதால், நமக்கும் ஒரு ஆசை." இப்புடியுமா டரியலா ஒரு முதல் இடுகை போடுவாங்க? சின்ன வயசு விக்கிரமாதித்தன் கதையில காதல் சொல்ல முடியும்னு இங்கதான் படிச்சேன். எழுத்துல ஒரு ஆசிரியரோட கண்ணியம் தெரியணுமா, மாற்றுக் கருத்தை பக்குவமா சொல்லத் தெரியணுமா இவரைப் படிக்கணும். அது சரின்னு பேர்ல எழுதுனாலும் எது சரியோ அதுதான் சரின்னு சொல்லுற பக்குவம் படிக்க இவரைப் படிச்சே ஆகணும்ணே.
எந்த பந்த போட்டாலும் விளாசுவேன்னு விளாசிட்டு வீசுனேன், மட்டையில பட்டு சிக்சராயிடிச்சின்னு சொன்னா எப்படி இருக்கும். பிதற்றல்கள்னு சொன்னா மட்டும் அப்படி இருக்குமா என்ன. முகிலனின் பிதற்றல்கள் அப்படித்தான். இவரோட க்ரைம் தொடர்கதையை படிச்சிப் பாருங்க. சுஜாதாவோ, பெரிமேசனோ மனசுக்கு புடிச்ச எழுத்தாளர் கவனம் வருவாரு. எந்த இடுகை சொடக்கினாலும் அங்க முகிலன் அப்பா இருப்பாரு.
க.பாலாசி: என் சமகால பதிவர். கொங்குநாட்டு குசும்பு மொத்தத்தையும் காண்ட்ராக்ட் எடுத்துட்டாருண்ணே. 25வயசுல 75 வயது பெருசு மாதிரி உலகத்த பார்க்குற பார்வை எங்க படிச்ச பாலாசி. சொல்லிக் கொடேன்! பதிவுலகத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டி பரிசுன்னு ஒரு மெடல் படம் குடுக்குறோமே. அந்த ஒரு நிகழ்வை இவ்வளவு நேர்த்தியா எங்கனயாச்சும் படிச்சிங்களா சொல்லுங்க!
புதுசா எழுத வந்து 'அட' போட வச்ச ரெண்டு மூணு பேர சொல்லியாகணும்.
பிரபாகர்: வாழ்க்கை வாழ்வதற்கே என்ற வலைப்பூ தொடங்கி மிகக் குறைந்த காலத்தில் நூற்றுக்கும் அதிகமான இடுகைகள், கவிதைகள்னு அசத்தினவரு . அண்ணன் டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டதாக சரித்திரமில்லை. ஒரு கிராமத்து வாலிபனின் அலப்பறைகளை படிப்பவர் சிரிக்காமல் இருக்க முடியாது.
பாலவாசகன்:மருத்துவக் கல்லூரி மாணவன். யாழ்ப்பாணத் தமிழில் உணர்வு சொல்லக் கற்றவர். சிறகுகள் என்ற வலைப்பூவில எழுதுறாருண்ணே. படிக்கையிலயே அந்த மண் வாசனை, கடல் காற்று, அழகு தமிழ் மனச அள்ளிக்கிட்டு போயிருதுண்ணே. சிரிப்போடு வலியும் சொல்லத் தெரிஞ்சவருண்ணே. இதப் படிச்சி பாருங்கண்ணே. மனசு எங்கிட்டோ ஒரு பக்கம் பிச்சி கொண்டு போயிட்டா மாதிரி வலிக்கும்.
சித்ரா: கொஞ்சம் வெட்டி பேச்சுன்னு ஒரு வலைப்பூ வச்சிருக்காய்ங்க. எண்ட்ரீயே அசத்தலா ஆரம்பிச்சி அசத்துறவங்க. ஒருக்கா பாருங்க உங்களுக்கே புரியும்.
சரிண்ணே! பொழப்பப் பார்க்கலாம் வாங்க. நாளை சந்திப்போம்.
Sunday, December 27, 2009
தத்தித் தவழ்ந்து முத்தாய்...
அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிழ்த்த நறுங்கனியே!... பெருஞ்சித்திரனார்.
தத்தித் தவழ்ந்து
தள்ளாடி நடந்து
முத்தாய் முதல் வார்த்தை
சொல்லுங்கால் துள்ளுமனம்
தானும் ஒரு தேனீயாய் அன்பர் சீனா அய்யா அவர்கள் ஒவ்வொரு வலைப்பூவாய் அமர்ந்து தேனுண்டு பாராட்டித் தேர்ந்தெடுத்து வலைச்சரத்தில் பூக்கோர்க்க அழைக்கையில் ஒவ்வொரு பதிவரும் தன் எழுத்துக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக கருதுவதில் வியப்பில்லையல்லவா?
பதிவுலகில் தடம் பதித்து பத்து மாதங்களில் பாமரனாய், பாலாவாய் தற்போது வானம்பாடிகளாய்ச் சிறகடிக்கும் எனக்கு இப்பெரிய அங்கீகாரமளித்த சீனாவின் அன்பு பாலாவும், என் எழுத்தைச் சிலாகித்து, என்பால் அன்போடு பாலாண்ணனாய், தந்தையாய், நண்பனாய், சிலர் ஆசானுமாய் என்னை அழைக்கையில் கண் பனிக்கிறது.
தயங்கித் தயங்கி நான்கு வரி கிறுக்கித் தாயிடம் நீட்டும் குழந்தையிடம் மனம் நோகாமல் உச்சி முகர்பவள் தாய். தலை கோதி, தவறு சுட்டி, ஊக்கமளித்து சில நேரம் குட்டி ஒரு சிறுபுன்னகையுடன், ம்ம் என்னும் நேரம் ஆசானுமாய் ஆகிறாள். அந்த என் தாயுமானவளுக்கு என் அங்கீகாரம் சமர்ப்பணம்.
பதிவுலகம் நுழைந்த போது, என் மன அழுத்தத்தின் வடிகாலாய் பாமரன் பக்கங்கள்... என்ற வலைப்பூ தொடங்கி எழுதத் தொடங்கிய போது ஈழத்துச் சொந்தங்களின் துயரமே தினசரி வலியாகிப் போனது. செய்திகள் தேடித் தேடி அழுது, சிரித்து, துடித்த போது என்னையறியாமல் சிறுவயதில், பத்திரிகை படிப்பவர்கள் தலைப்பு படித்தவுடன் பளிச்சென்று கூறும் கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கம் நறுக்குன்னு நாலு வார்த்தையாய் தொடரானது.
வெகு விரைவிலேயே எனக்கொரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்து இந்த ஒரு தலைப்பிலேயே நூறு இடுகைகளைப் படைத்திட ஊக்கமானது மட்டுமின்றி, இப்போதும் ஏன் இதைத் தொடர்வதில்லை எனச் சிலர் சிலாகிக்கும் அளவுக்கு தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
இடையிடையே கவிதை என முயல்கையில் காசி ஆனந்தனின் கவிதையோடு ஒப்பிட்டு தம்பி பழமைபேசி நறுக்கவி பாலாண்ணே என்றழைத்தபோதும், வலைச்சரத்தில் பலமுறை சுட்டப்பட்ட போதும் இதையும் தாண்டி எழுத முயற்சிக்க ஊக்கமானது.
என் படைப்புக்கள் எல்லாமே என் குழந்தைகள்தாம் எனினும், சான்றோனெனக் கேட்ட தாயாய்ச் சிலிர்க்க வைத்த சிலவற்றைச் சுட்ட விழைகிறேன்.
1.ஈழப் போரின் உச்சத்தில் கேட்பாரற்று தனியே கையில் கட்டுடன் கண்ணால் துளைத்த இந்த குழந்தையிடம் பாவ மன்னிப்பு கேட்ட என் கவிதை.
2.பதிவர் கூடலில் வடிவேலு என்ற என் தொடர் இடுகை
3.யூத்ஃபுல் விகடனிலும் வெளியான என் கதை பசி
4.விதிகள் என்ற பெயரில் நீதி மறுக்கப்படும் அலுவலக நடைமுறை அவலம் குறித்த என் வருத்தத்தின் வெளிப்பாடு.
5.ஒரு காதல் முயக்கம்
சுய அறிமுகம் போதுமே! நாளை சந்திப்போம் நண்பர்களே.
நன்றி ஊர்சுற்றி - நல்வாழ்த்துகள் பாமரன்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
கடந்த ஒரு வார காலமாக நண்பர் ஊர்சுற்றி ஆசிரியப் பொறுப்பேற்று மூன்று இடுகைகள் இட்டு ஏறத்தாழ பதினைந்து மறுமொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புகிறோம்.
28ம் நாள் துவங்கும் வாரத்திற்கு அருமை நண்பர் "வானம்பாடிகள் " - பாமரன் பக்கங்கள் என்னும் பதிவினில் எழுதுபவர் ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார். இவர் இந்த ஆண்டில் பிப்ரவரி 16ம் நாள் முதல் தான் இடுகை இட ஆரம்பித்துள்ளார். இன்று வரை ஏறத்தாழ முன்னூற்று நாலு இடுகைகள் - கிட்டத்தட்ட தினம் ஒன்று வீதம் இட்டுள்ளார். 185 பதிவர்கள் பின் தொடருகிறார்கள். 52 வயதான இவர் நக்கல், நகைச்சுவை , அனுபவம் என்ற பிரிவுகளில் அளவில் இடுகை இடுகிறார்.
புத்தாண்டில் திறமையை வெளிப்படுத்த வரும் அருமை நண்பர் பாமரனை - வானம்பாடிகளை வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் வானம்பாடி
நட்புடன் சீனா
வலைச்சரத்தில் ஊர்சுற்றி - வலைச்சரம் 2009 தொகுப்பு (கூகிள் கோப்பு)
தகுந்த முன்னறிவிப்புடனேயே நான் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க அழைக்கப்பட்டிருந்தாலும், அதிகமான பதிவுகளை அறிமுகப்படுத்த இயலவில்லை. இதற்குக் கடைசி இரண்டு வாரங்களில் 'வலை'ப்பக்கம் சரியான நேரம் ஒதுக்கமுடியாமை ஒரு காரணம். இன்னொன்று, நான் புதிய பதிவர்களை சரியாக அடையாளம் காணாததும் ஆகும்.
உளவியல் ரீதியாகப் பார்த்தால், எதையும் முழுமையாகச் செய்ய வேண்டும் என்பது எனது தீராத அவா. அதாவது இதுவரை அறிமுகப்படுத்தப்படாத பதிவுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பது. ஆனால் அதை எப்படிச் செய்வது என்பதிலுள்ள குழப்பமும் தடங்கலுக்குக் காரணம்.
இந்த சமயத்தில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட இடுகைகளின் தொகுப்பு ஒன்று இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என எண்ணினேன். அதுவும் இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்கக் கூடிய கோப்பின் வடிவில் இருந்தால்?! நேற்றுதான் முழுமையடைந்த...
'வலைச்சரம் 2009 தொகுப்பு' - இதோ உங்களுக்காக.
http://tinyurl.com/yj4gf9a
ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகளை முடிந்தவரைக்கும் தவிர்த்தால் 'வலைச்சரத்தின்' நோக்கம் இன்னும் முழுமையடையும் என நினைக்கிறேன்.
வலைச்சரத்தில் ஊர்சுற்றி - கூகிள் ரீடரின் மாயவித்தை
1. என் இணைய நண்பர்களுக்காக - ஸ்ரீ
இவர் தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு மற்றும் ஊர் சுற்றிய அனுபவங்களைப் புகைப்படங்களுடன் பதிவிடுவதில் கில்லாடி. தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி இவர் எடுத்திருக்கும், பார்க்கவேண்டிய பல இடங்களின் புகைப்படங்கள் இவரது பதிவில் விரவிக்கிடக்கின்றன. உதாரணம் மலைக்கோயில் - திண்டுக்கல். கிரிக்கெட் பிரியர்.
2.மெய் சொல்லப் போறேன் - Kiruthikan Kumarasamy
எழுத்தோடு உணர்வை வடித்தெடுக்கும் இவரது வார்த்தைகள். பல விசயங்களில் தன் கருத்துக்களைத் தெளிவாக முன்வைக்கிறார். வேட்டைக்காரனோடு தொடர்புடைய இந்த இடுகையைப் படித்துப் பாருங்கள். வேட்டைக்காரனும் சில வலிகளும்.
Wednesday, December 23, 2009
வலைச்சரத்தில் ஊர்சுற்றி - என் குலம் என அழைக்கும் பதிவர்கள்
நான் செல்லமாக இவரை ஹாலிபாலா என்றே அழைக்கிறேன். ஹாலிவுட் படங்களையும் அவை தொடர்பான தொழில்நுட்பங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துகொண்டிருக்கிறார். 'பிக்சார்' நிறுவனம் தொடர்பாக இவர் 18-க்கு அதிகமான இடுகைகளை இட்டுள்ளார். அதில் முதலாவது 'The Pixar Story (2007)'. இப்போது சினிமாவின் அடுத்த அவதாரமான 'அவதார்' பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்.
இதயத் திருடி அவள் என்ற ஓர் இடுகையின் மூலம் எனக்கு அறிமுகமானது என நினைக்கிறேன். TFT இப்படியான புதிர் மூலம் பிறந்ததேதி கண்டுபிடிக்க ஒரு வழியைக் கூறியவர். இப்போது 'மின்மினி தேசம்' என்று ஒரு தொடர் எழுதுகிறார்.
கணேஷ் ஏற்கெனவே வலைச்சரத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரது 'அடாவடி பொண்ணும் அப்பாவி பையனும்' என்கிற தொடர்கதைக்காக மீண்டும் ஒருமுறை இங்கே. எப்போதாவது நேரம் கிடைக்கும்போது கணிணிமுன் அமர்ந்ததும் அனிச்சையாய் விரல்கள் தட்டும் முகவரி, இவரது வலைப்பூவினது. கதையோடு எனக்கு அந்த அளவிற்கு ஒரு ஈடுபாடு வந்துவிட்டது.
Tuesday, December 22, 2009
வலைச்சரமும் ஊர்சுற்றியும் - அறிமுகம்
சென்னைக்கு வந்த மறுவருடம் - 2007 முழுவதும் சென்னையின் பல பகுதிகளில் ஊர்சுற்றுவதைத் தவிர வேறு எந்தக் குறிக்கோளும் இன்றி அலைந்து திரிந்தேன். சென்னையின் மீதான எனது பிரமிப்பு இன்னும் அடங்கியபாடில்லை. எனது அந்த அலைச்சல்கள் நண்பர்களிடம் பெற்றுத்தந்த காரணப்பெயர்தான் 'ஊர்சுற்றி'.
எனது வலைப்பூக்கள்:
ஊர்சுற்றி மற்றும் அறிவியல்பூ.
ஊர்சுற்றி - ஏதோ அவ்வப்போது எனக்குத் தோன்றும் விசயங்களை, நிகழ்ச்சிகளை, அனுபவங்களை இங்கு எழுதுகிறேன்.
வலையுலகிற்கு நுழைந்தது:
கூகிளாண்டவர்தான் காரணம். அதன் முழு விபரம் இங்கே - ஊர்சுற்றி வலையுலகம் சுற்ற வந்த கதை.
நான் அதிகம் ரசித்த எனது இடுகைகள்:
- காதலின் முதல் SMS என்ற இடுகை, இயல்பாக அமைந்துவிட்ட ஒரு கதை.
- அப்போதே ஆசிரியராக மாறி வகுப்பெடுத்த இடுகைதான் வலை பதிவர்கள் பிழையின்றி எழுத - சந்திப் பிழைகள் ஓர் அறிமுகம் என்ற இடுகை.
- 'நாங்களும் தொழில்நுட்பமெல்லாம் பேசுவோம்ல' - பெவிகானை உங்கள் வலைப்பூவிற்கு இணைப்பது எப்படி? என்று சொல்லித்தந்தேன். குரோம் மற்றும் சஃபாரி உலாவிகளுக்கு இந்த இடுகையையும் படியுங்கள்.
- முதல்முறையாக பின்னூட்ட மட்டுறுத்துதல் செய்ய வைத்த இடுகை நடிகர் விஜய் மீது நடத்தப்படும் மின்-வன்முறைகள்.
- 'அறிவியல்பூ' வில் ஆன்டி மேட்டரும்(!) ஏஞ்சல்ஸ் அண்டு டெமான்ஸும் அறிவியலும்
Monday, December 21, 2009
வழி அனுப்புதலும் வரவேற்றலும்
கடந்த ஒரு வார காலமாக நண்பர் தண்டோரா பல இடுகைகள் இட்டு - பல பதிவர்களை அறிமுகப் படுத்தி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார். அவரை வலைச்சரத்தின் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
21ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க நண்பர் ஊர்சுற்றி வருகிறார். இவர் ஊர்சுற்றி என்னும் வலைப்பூவினில் எழுதி வருகிறார். சென்னையில் பொறியியல் துறையில் இருக்கிறார். கிரிக்கெட்டிற்கு மயங்காமல், மழலைச் சிரிப்பிற்கு மயங்க மறுக்காமல், எதையாவது சாதித்து விட வேண்டும் என்ற தேடலில் பயணங்களைத் தேடி அலைகிறார்.
நண்பரை வருக வருக - ஏற்ற பணியினை நிறைவாக நிறைவேற்றுக என வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் ஊர் சுற்றி
நட்புடன் சீனா
Sunday, December 20, 2009
நன்றி வணக்கம்
Friday, December 18, 2009
வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்
- அவசரம் (1)
- உயிரழிவு (2)
- கர்ப்பிணி மருத்துவம் (5)
- பரசிட்டமோல் (2)
- பாலியல் (1)
- பாலியல் அறிவு (1)
- மருத்துவ வீடியோ(2)
- மருத்துவம் (33)
- ரத்த இழப்புக்கள்
Thursday, December 17, 2009
வலைச்சரத்தில் நான்காம் நாள்
உலகம் அடங்கிப்போய் நடுநிசியில் இதைக் கேட்டுப்பாருங்கள்.முதலில் வரும் இசைத் தீற்றல்கள் சிலிர்க்க வைக்கும்.கேட்கும் போது நாமும் தியானத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு.பாட்டில் ஒரு அமைதி/ஏக்கம் கவ்விக்கொண்டிருக்கும்..
Wednesday, December 16, 2009
வலைச்சரத்தில் மூன்றாம் நாள்
Tuesday, December 15, 2009
வலைச்சரத்தில் இரண்டாம் நாள்
அசோகமித்திரன்(1)அறிமுகம்(14)ஆத்மநாம்(4)எஸ்.ராமகிருஷ்ணன்
புகைப்படங்கள்(2)புதுமைப்பித்தன்(16)மகாகவி பாரதியார்(1)மனுஷ்யபுத்திரன்(1)மௌனி(12) லா.ச. ராமாமிருதம்(3)லா.ச.ரா(3)வ.வே.சு ஐயர்(2)
நாகர்கோவிலை சேர்ந்த நண்பர் ராம்பிரசாத். மெளனி என்ற பெயரில் இணையத்தில் எழுதிவருகிறார்.அரசியல், லஞ்சஎதிர்ப்பு போன்றவற்றை எழுதினாலும், அழியாச்சுடர்கள் என்ற தலைப்பில் ஜாம்பவான்களின் எழுத்துக்களை வலையேற்றி இருக்கிறார். அவரின் இந்த முயற்சியை பாராட்டுவோம். நீங்களூம் வாசித்து பரவசம் அடையுங்கள்.
சமையல் குறிப்புகள், காதல் சார்ந்த கவிதைகள், சிறுகதைகள் என்று இல்லாமல் ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் மிகவும் துணிச்சலான தளம். நிச்சயம் முற்போக்கானவிஷயங்கள். மகளிர் மட்டும் என்றில்லை. அனைவரும் ரசிக்கும்படி எழுதியிருக்கிறார் இந்த புதுமைப்பெண். ஆணாதிக்கத்துக்கு ஆப்பு வைக்கும் “ஆப்பரசி”
மற்றொரு தோழியின் வலைத்தளம்.
“கவிதை உலகம் கொஞ்சும்” என்று கவி பாட தூண்டுகிறது இவரது தளம். சிக்கலில்லாத மொழி நடை. அமைதியான நதியில் நீந்தும் அன்னமாய் பயணிக்கிறது வார்த்தைகள். வாழ்த்துக்கள் தோழி.
பார்ப்பதற்கு மதுரை ரூரல் டிஎஸ்பி போன்ற தோற்றம். பைபாசில் நின்று லாரி மடக்கினால் கேள்வி கேட்காமல் மாமூல் மழை பெய்யும். இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு உள்ள அருமையான மனிதர். கவிதைகளும், கட்டுரைகளும் எழுதுகிறார். அரசியல் எள்ளலும் உண்டு. சமூக அக்கறையும் நிறையவே. செர்ரீ போல் சுவை மிக்க நண்பர்.
கையில் பிரம்பு உண்டு. அதுவும் கவிதை எழுதுமா என்று 20 ஆம் தேதி ஈரோட்டில் வைத்து கேட்க உத்தேசம். வாழ்த்துக்கள் ஈசானந்தா.
Monday, December 14, 2009
வலைச்சரத்தில் முதல்நாள்
Sunday, December 13, 2009
வழி அனுப்புதலும் வரவேற்றலும்
ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பினை ஏற்ற அருமை நண்பர் "பிரியமுடன் வசந்த்" தனது பொறுப்பினை, அருமையான முறையில், மிக அழகாக, படங்களுடன், பல நல்ல பதிவர்களை பல தலைப்புகளில் வரிசைப்படுத்தி, அறிமுகம் செய்து அவர்களீன் பல நல்ல இடுகைகளை சுட்டி கொடுத்தும், விளக்கம் அளித்தும், நிறைவேற்றி, நம்மிடமிருந்து மிக மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
அவருக்கு வலைச்சரத்தின் சார்பில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி வழி அனுப்புவதில் மிகப் பெருமை அடைகிறேன்.
அடுத்து 14ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு நண்பர் தண்டோரா பொறுப்பேற்க வருகிறார்.
தண்டோரா அவர்களின் பெயர் "மணிகண்டன்". திருமணமாகி ஒரே ஒரு மகள். சென்னையில் வசிக்கிறார். சொந்த ஊர் தஞ்சாவூர். ஒரு அறியப்பட்ட விளம்பரப்பட இயக்குனர். குறும்படங்களும் இயக்கியுள்ளார். அதில் குடியின் விளைவை மூன்றே நிமிடங்களில் முகத்தில் அறையும் "சியர்ஸ்" எனும் குறும்படம் மிகவும் குறிப்பிடத்தக்கது. தற்போது "வருகை" எனும் குறும்படம் எடுத்து வருகிறார். மேலும் கவிதை எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே. நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும் அப்படியே கவிதையாக மாற்றும் வல்லமை படைத்தவர். அரசியலில் தீராத ஆர்வமுடையவர். அரசியல் குறித்த சூடானவிமர்சனங்கள், வயிற்றை வலிக்க செய்யும் நகைச்சுவையென பின்னிப் பெடலெடுப்பார்.
அவரை வலைச்சரத்தின் சார்பினி்ல் வருக வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.
நட்புடன் சீனா
பொட்டிய கட்டிக்கிறேன்...
இதுவரைக்கும் நான் எழுதிய இடுகைகளிலே வலைச்சரத்தில எழுதுனதுதான் என்னோட வலையுலக வாழ்க்கையில மறக்க முடியாத ஒண்ணா மாறிப்போச்சு..
நானே என்னோட வலைப்பூவில் எழுதிய இடுகைகளை ஒரு பத்து நாள் கழிச்சு திரும்ப வாசிக்கும்போது எனக்கே ரொம்ப ஒருமாதிரியா அருவறுப்பா இருக்கும்.ஆனால் இந்த வலைச்சரத்தில் எழுதிய 6ம் என்னோட மனசுக்கு திருப்தியா இருக்கு.அடிக்கடி நானே ஓபன் பண்ணி படிச்சுப்பாத்து ரசிச்சுக்கிறேன்.குட் பிளாக்ஸ்ல கூட வந்துருக்கு அந்த அளவுக்கு என்னோட இடுகைகள் ரசனையா வந்ததுக்கு நீங்கள் அனைவரும் காரணம். இந்த ஒருவார காலமும் தவறாமல் வந்து ஊக்கமும் ஆதரவும் அளித்த என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு அடுத்து வரும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த அருமையான வாய்ப்பை எனக்கு அளித்த எம்மண்ணின் சொந்தம் சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்து கொண்டு உங்களிடமிருந்து விடைபெற்றுகொள்வது உங்கள் ப்ரியத்துடன்..வசந்த்..
Thursday, December 10, 2009
மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டும்..!
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.
மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி!
************************************************************************************* |
************************************************************************************
***************************************************************************** |
********************************************************** |
************************************************************************************
நன்றி நட்பூக்களே மீண்டும் நாளை சந்திப்போம் ப்ரியமுடன்....வசந்த் |