இலக்கியத் தமிழ்
அறிவுக்கு மொழி தடையல்ல!
மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை!
என்ற எண்ணம் கொண்ட நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேர்களைத்தேடி என்னும் வலைப்பதிவின் வழியாக “தமிழியற் சிந்தனைகள்,சங்க இலக்கியம், இணையத்தமிழ்நுட்பங்கள், சிந்தனைகள்“ தொடர்பாகத் தங்களுடன் உறவாடி வருகிறேன்.
திரட்டி இணையத்தின் இந்த வார நட்சத்திரம்
தமிழ் மணத்தின் இந்த வார நட்சத்திரம்
தமிழ் மணத்தின் 2009 ஆம் ஆண்டு பெற்ற விருது
என சில நினைவில் நிற்கும் பெருமிதங்கள் உண்டு என்றாலும் இவை எல்லாவற்றுக்கும் நண்பர்களின் மேலான கருத்துரைகளே துணையாக நின்றது. என்னைப் போலவே உலகம் அறியவேண்டிய பதிவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களை அறிமுகம் செய்யும் அரிய வாய்ப்பு கிடைத்ததற்காகவே மீண்டும் ஒருமுறை பெருமிதம் கொள்கிறேன்.
எனது வலையுலக வரலாற்றில் இன்று ஒரு தனித்துவமான நாளாகும். ஆம் வலைச்சரம் என்னும் கடலில் முத்துக்குளிக்க எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
முதல் நாளான இன்று இலக்கிய வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய எண்ணுகிறேன்.
இலக்கியம் பற்றி பல வலைப்பதிவர்களும் எழுதினாலும், கல்விப்புலம் சார்ந்த வலைப்பதிவர்களை அறிமுகம் செய்வது எனது நோக்கமாகும்.
இயல், இசை, நாடகம் மட்டும் தமிழ்மொழிக்குப் போதாது இணையத்தமிழ் என்ற நான்காம் தமிழும் வேண்டும் என்றநோக்கில் தமிழ்புலம் சார்ந்த பலரும் இன்று இணையப்பரப்புக்குப் படையெடுத்துவருகின்றனர்.
(கல்விப்புலம் சார்ந்த வலைப்பதிவர்களுக்காக ஒரு சிந்தனையை முன்வைக்கிறேன்.
தங்கள் சுயவிவரக்குறிப்பில் உதவிப்பேராசிரியர், பேராசிரியர் என தங்கள் விருப்பத்திற்கேற்ப பணிவிவரத்தைக் குறிப்பிட்டுள்ளீர்கள். மாறாக தங்கள் பணிவிவரத்தை “விரிவுரையாளர்“ என்று குறிப்பிட்டால் அதன் இணைப்பில் பல விரிவுரையாளர்களும் கூடமுடியும் எனக் கருதுகிறேன்)
தமிழ் படித்தோருக்குத் தன் அலைபேசியைக் கூட பயன்படுத்தத்தெரியாது என்ற பழமைவாதத்தைப் புறந்தள்ளி புதுமை படைக்கவந்துள்ள தமிழ்த்துறை சார்ந்த விரிவுரையாளர்களின் தளங்களை இன்று அறிமுகம் செய்ய இருக்கிறேன். இவர்களுள் சிலர் வலையுலகம் நன்கறிந்தவர்களாவர். சிலர் நீண்டகாலமாக எழுதிவந்தாலும் சரியாக அடையாளம் காணப்படாதவர்களாவர். நெடுங்காலமாகவே இவர்களைப் போன்ற வலைப்பதிவர்களை உலகறியச்செய்யவேண்டும் என்ற எனக்குள் இருந்த ஆவலை நிறைவுசெய்யும் விதமாக வலைச்சரத்தில் ஆசிரியப்பணியாற்றும் வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இனி பதிவர்களின் அறிமுகம்...
1. தமிழாய்வு என்னும் வலைப்பக்கத்தில் ஆயிரக்கணக்கான தமிழாய்வுத் தலைப்புகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் முனைவர் சே.செந்தமிழ்ப்பாவை அவர்கள். இவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவரது பணி முன்செய்த தலைப்புகளிலேயே மீண்டும் மீண்டும் ஆய்வுசெய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிப்பதாகவுள்ளது.
2. பேராசிரியர் எம்.ஏ.சுசீலா இவர் ஓய்வு பெற்ற தமிழ்ப்பேராசிரியர் ஆவார். இலக்கியங்களின் வழி சமூகத்தைத் தேடும் இவரது அயராத பணி பாராட்டுதலுக்குரியது. இவரது எழுத்துக்களுக்குத் தக்கதொரு சான்று - சங்கக் காதல் (குறுந்தொகை) என்னும் இடுகையாகும்.
3.முனைவர்.மு.இளங்கோவன் தமிழ் வலையுலகம் நன்கறிந்த தமிழ் ஆய்வாளர் ஆவார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இணையத்தமிழ் குறித்த பயிலரங்கம் நடத்திப் புகழ்பெற்றவராக இவர் விளங்குகிறார். இவரது வலைப்பதிவில் தமிழறிஞர்கள் பற்றிய பல்வேறு செய்திகளைச் சான்றுகளுடன் தமிழுலகம் பயன்பெறத் தந்துள்ளார். சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றிய இவரது கட்டுரை சிறப்புக்குரியதாக விளங்குகிறது.
4. முனைவர்.பெருமாள் முருகன் அவர்கள் நாமக்கல் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நாட்டுப்புறவியல்த் துறையில் புகழ்பெற்ற் இவரது கட்டுரைகளுள் சிம்கார்டுக்குத் தமிழ்ச்சொல் என்ன? என்னும் கட்டுரை பெரிதும் பேசப்பட்டதாக அமைகிறது.
5.முனைவர்.நா.இளங்கோவன் அவர்கள் தமிழ் இணைப் பேராசிரியராகப் புதுச்சேரி பட்ட மேற்படிப்பு மையத்தில் பணியாற்றி வருகிறார். “சித்தர் சிவவாக்கியர்“ என்னும் கட்டுரை இவரது எழுத்துக்குச் சிறந்த சான்றாகத் விளங்குகிறது.
6. முனைவர்.ஆ.மணி அவர்கள் செந்தமிழுக்கு ஒரு மலர் மாலை தொடுத்திருக்கிறார். புதுவையில் உள்ள ஒரு கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். தமிழாய்வின் நூலகமாக இவரது வலைப்பதிவு காட்சியளிக்கிறது. “தொல்காப்பிய ஆய்வு” குறித்த இவரது கட்டுரை இவரது ஆய்வுத்திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
7.முனைவர்.ப.சரவணன் அவர்கள் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் இதழியலிலும், இக்கால இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவராவார். தொடர்ந்து வலையுலகில் உலவிவரும் இவர்தம் எழுத்துக்கு “படைப்புச்செம்மல் ச. மெய்யப்பனார் “என்னும் கட்டுரை தக்கதொரு அடையாளமாகத் திகழ்கிறது.
8.நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவர்கள் தமிழ் வலையுலகம் நன்கறிந்த பதிவர் ஆவார். இவர் தம் வலையில் சமூகம், சினிமா, நகைச்சுவை உள்ளிட்ட பல தளங்களில் எழுதிவருகிறார்.இவரது படைப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை . “வேற்றுக்கிரகவாசிகள்“
9. முனைவர்.இரத்தினபுகழேந்தி அவர்கள் நாட்டுப்புறவியல் தொடர்பாகப் பல கட்டுரைகள் எழுதிவருகிறார். “மண்கவுச்சி“ என்று தன் வலைப்பதிவின் பெயரையே மண்வாசனையோடு வைத்திருக்கிறார். இவரது கட்டுரைகளுள் “சுயசிந்தனையை வளர்க்கும் படைப்பாற்றல் கல்வி“ என்னும் கட்டுரை குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
10. முனைவர்.துரை.மணிகண்டன் அவர்கள் இணையத்தமிழ் குறித்த பயிலரங்கங்களைப் பல கல்விநிறுவனங்களிலும் நடத்தி தமிழ்ப்பணியாற்றி வருகிறார். இவர் பெரம்பலூரில் பாரதிதாசன் உறுப்புக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியா குறித்த இவரது கட்டுரை நல்லதொரு விழிப்புணர்வளிப்பதாக இருக்கிறது
11.முனைவர்.சே.கல்பனா அவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவரையாளராகப் பணியாற்றிவருகிறார். சங்கஇலக்கியம் தொடர்பாகத் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதிவருகிறார். இவரது தமிழ்ப்பணியின் அடையாளமாக “சங்க இலக்கிய ஊர்ப்பெயர்கள்“ என்னும் இடுகை அமைகிறது.
12.நண்பர் எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் அவர்கள் தன் வலைப்பதிவுக்கு “செழுங்காரிகை“ என தமிழ்ச்சுவையோடு தலைப்பு வைத்துள்ளார். இவரது பதிவுகளுள் - ஏக்கப் பெருமூச்சின் எழுத்துவடிவம் என்னும் கவிதை இவர் பெயர் சொல்லும் படைப்பாகத் திகழ்கிறது.
13.முனைவர்.அ.ராமசாமி அவர்கள் பேராசிரியராக, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். “நான் அறிந்த மனிதர்களும் எனக்குத் தெரிந்த கதைகளும்” என்னும் கட்டுரை இவரது ஆற்றலுக்குச் சான்றாக அமைகிறது.
14. முனைவர் இரா. ருக்மணி அவர்கள் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழுக்கு வணக்கம் செலுத்துவதாக இவரது வலைப்பதிவுக்கு “வணக்கம் தமிழ்” என்று பெயரிட்டுள்ளார். சங்கஇலக்கியம் தொடர்பாக பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவரது இலக்கியப்பணியில் “முல்லைப் பாட்டு மூலமும் எளிய உரையும்“ தனிச்சிறப்புடையதாகத் திகழ்கிறது.
15.• அன்பு நண்பர் ஸ்ரீ அவர்கள் தம் பதிவில் சிறுகதை, கவிதை, நகைச்சுவை போன்ற பல செய்திகளைப் பகிர்ந்து வருகிறார். “சிறுகதைப் போட்டிகளில் வெல்ல“ இவர் சொல்லும் யோசனையைக் கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன்!
16. நண்பர் “மதுரை சரவணன்“ அவர்கள் தங்களால் நன்கு அறியப்பட்டவர். இவரது படைப்புகளுள் “கல்வி கண் திறந்த காமராசர்“ என்னும் இடுகை கல்வி குறித்த இவரது ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது.
மேற்கண்ட வலைப்பதிவர்களுள் பலர் உங்களால் நன்கு அறியப்பட்டவர்களாவர். இவர்கள் தளங்களுக்குச் சென்று பார்வையிட்டு நீங்கள் அளிக்கும் மறுமொழி அவர்களை மேலும் ஆர்வமுடம் செயல்படச் செய்வதாக அமையும்.
இன்னும் சில அறிமுகப் பதிவர்கள்.
இவர்கள் இப்போதுதான் வலையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கும் தங்கள் மேலான ஆலோசனைகளைச் சொல்லுங்களேன்.
17. முனைவர்.ஆர்.சுதமதி அவர்கள் காரைக்குடி அழகப்பா அரசுக் கலைக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தன் தமிழார்வத்தை அடுத்த இணையத்தில் வெளிப்படுத்தவேண்டும் என்ற ஆவலில் இணையவுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இவரத வலைப்பதிவின் பெயர் “சங்கநாதம்“ இவர்களை வரவேற்று வாழ்த்துவோம்.
18.முனைவர்.ஏ.சின்னத்துரை அவர்கள் அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழின் மீதும் இணையத்தின் மீதும் அளவற்ற காதல் கொண்டவராவார். நாட்டுப்புறவியல்த் துறையில் நாட்டம் கொண்ட இவரது வலைப்பதிவுக்கு “தமிழ் அருவி“ என்று பெயரிட்டுள்ளார். இவருக்கு தங்கள் மேலான கருத்துரைகளை அளித்து அவரை மேலும் எழுதச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
அன்பு நண்பர்களே இணையத்தில் நானறிந்தவரை கல்விப்புலம் சார்ந்த தமிழ் வலைப்பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன். இன்னும் பலர் என் பார்வைக்குப் படாமலோ, நானறிந்து சரியான சுயவிவரங்களை நிறைவு செய்யாதவர்களாகவோ இருக்கலாம். அந்த நண்பர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டால் பெரிதும் மகிழ்வேன்.
|
|
அருமையான ஆரம்பம். சிறப்பான பகிர்வு.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
நன்றி ராமலெட்சுமி.
ReplyDeleteவலைச்சரத்தின் இந்த வார ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் அன்புக்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துகள்! நண்பரே
ReplyDeleteநன்றி ஜமால்.
ReplyDeleteஅருமையான இலக்கிய வலைப்பதிவுகள் அறிமுகம்.
ReplyDeleteதொடருங்கள் நண்பா...
வாழ்த்துக்கள்.
தமிழருவி எனச் சொல்லலாம் ஒரே வார்த்தையில்..கார்த்திகை பாண்டியன் ஸ்ரீ சரவணன் இவர்கள் அறிந்த பதிவர்கள் மற்றவர்களையும் இனி தொடர்வோம் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் ... நன்றி
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteஎன்ன கன்றாவி இது ?
அன்பின் குணா, இலக்கியத் தமிழ் அருமையான அறிமுகங்களைக் கொண்ட நல்லதொரு இடுகை. அனவைரின் வலைப்பூக்களுக்கும் சென்று பார்க்கிறேன். நல்வாழ்த்துகள் குணா - நட்புடன் சீனா
ReplyDeleteஇதனை இதனால இவணமுடிக்கும்
ReplyDeleteஎன்றாய்ந்(து)
அதனை அவன்கண் விடல்
என்ற குறளுக்கேற்ப
வலைச் சரம் உங்களை தேர்வு
செய்தது சரியானதே
தங்கள் பணி சிறக்க என்
வாழ்த்துக்கள் நன்றி
புலவர் சா இராமாநுசம்
நன்றி குமார்.
ReplyDeleteநன்றி தமிழரசி.
ReplyDeleteநன்றி இராஜா
ReplyDeleteதங்கள் அழைப்புக்கும் அன்புக்கும் நன்றிகள் சீனா ஐயா.
ReplyDeleteதங்கள் கருத்துரைக்கு நன்றிகள் இராமானுசம் ஐயா.
ReplyDeleteநன்றி ஐயா.
ReplyDeleteமாப்ள உங்க தமிழ் தாகம் புரிகிறது... நெறைய படிச்ச புள்ளைங்க போல...என்னப்போல மாக்கனுக்கு புரியறதுக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசிறப்பான பகிர்வு.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
தன்னை உணர்ந்தவன் ஞானி.
ReplyDelete(விக்கியுலகம்) நண்பா நீங்க இப்ப ஞானி! ஆகிட்டீங்க!
தங்கள் வருகைக்கு நன்றி இராஜேஸ்வரி.
ReplyDeleteஎன்னை போன்ற புதியவர்கள் படிப்பதற்க்கு ஏற்ற விதமாக அருமையான அறிமுகங்கள்.நன்றி குணசீலன் சார்.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteமுனைவர் அவர்களே...அருமையான தொடக்கம்... வாழ்த்துக்கள்.
ReplyDeleteதமிழ்வாசியில் இன்று:அட்ராசக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி - பாகம்-1 (250 வது பதிவாக)
நல்ல அறிமுகங்கள் பல தளங்களை அறியமுடிந்தது.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்.உயரிய பணி.
ReplyDeleteநன்றி வானம்பாடி ஐயா.
ReplyDeleteதங்கள் கருத்துரைக்கு நன்றி ராம்வி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திகழ்
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்வாசி.
ReplyDeleteநன்றி நீச்சல்காரன்.
ReplyDeleteதங்கள் கருத்துரைக்கு நன்றி சண்முகவேல்.
ReplyDeleteஅருமையான சிறப்பான ஆரம்பம். அறிமுகம் ஆன அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகப்படுத்தியவருக்கு நன்றிகள்.
thanks sir...
ReplyDeleteஅப்பாடா....எத்தனை பெரியவர்களின் அறிமுகம்.நன்றி குணா !
ReplyDeleteதங்களின் முயற்சி வெல்லட்டும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிந்தைக்கு விருந்தளித்த சிறப்பான பகிர்வு.வலைத்தளத்தில் இந்தவார ஆசிரியராக நற் பணியைத் தொடவிருக்கும் தங்களுக்கு எனது
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்.சிறப்பாக தங்கள் பணி தொடரட்டும்........
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கோபால கிருஷ்ணன் ஐயா.
ReplyDeleteமகிழ்ச்சி மதுரை சரவணன்.
ReplyDeleteதொடர்க தங்கள் தமிழ்ப்பணி.
நன்றி ஹேமா
ReplyDeleteநல்ல துவக்கம் ....! வாழ்த்துக்கள்...!
ReplyDeleteமுனைவர் இரா.குணசீலன் வணக்கம்.
ReplyDeleteநல்ல கருத்துக்களை வெளியிடும் வலைப்பூக்களைத் தொகுத்துள்ளீர்கள்.
இதற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
நான் 16 -7-11 அன்று மதுரையில் நடந்த தொடுவானம் நிகழ்ச்சியில் உங்கள் வலைப்பூவினைப் பார்வையாளர்களுக்குக் காட்டி விளக்கினேன்.
அன்புடன்
முனைவர துரை.மணிகண்டன்.
நன்றி தங்கதுரை
ReplyDeleteநன்றி முனைவரே.
ReplyDeleteதங்களைப் போன்ற தமிழாய்வாளர்களின் பணி போற்றுதலுக்குரியது.
தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி.
கவியின் கவிகளுக்க நன்றி.
ReplyDeleteநன்றி அம்பாளடியாள்.
ReplyDeleteஅருமையான இலக்கிய வலைப்பதிவுகள்
ReplyDeleteநன்றி இராதாகிருஷ்ணன்
ReplyDeleteபாராட்டச் சொற்கள் கிடைக்கவில்லை!
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பிரதாப்.
ReplyDeleteபல அருமையான வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தியிருப்பதற்கு நன்றிகள்.
ReplyDelete