07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 7, 2011

சில கவிகளும், சில கவிதைகளும்..!!


வணக்கம் அன்பு நெஞ்சங்களே..! நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகு உங்களை வலைச்சரத்தின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி..


நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்! பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா! என்று மீண்டும் ஒரு முறை பாரதியின் கருத்தை அழுத்தந்திருத்தமாய் பதிக்கிறார் தன் வலையில்...

 யார் அவர்.. உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஷைலஜா அவர்கள் தான்.. ஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிப்பதாக கூறுகிறார்.

இவரின் மழலை உலகம் மகத்தானது! உண்மையிலேயே மகத்தானது. கருத்தாழம் மிக்கதோடு கவிதையும் கூடவே இலவச இணைப்பாக இந்த பதிவில்.

வித்தியாசமான வேடிக்கை மிகுந்த சிறுகதை மெய்மறந்த காதல்

உள் மனதில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறுது அகமும் புறமும் 

காதல் கொண்ட மனதை கனகச்சிதமாய் படம்பிடித்துக் காட்டுகிறது காதலியின் கடிதம் கவிதை...!

ஒவ்வொரு பதிவும் ஒப்புயர்வற்றதாய் இருக்கிறது.

 *****
ஆன்மீகம், பக்தி

ஊனை உருக்க, உள்ளொளி பெருக்க
நாவை அடக்க நமச்சிவாய மெனும்
நற்கதிதரும் மந்திரமே என்னுள் ஒலிக்கவே 
கோவே! குருவே!! குணமில்லா அருவே!!! 
தேவே! திருவே!! திரிலோக கருவே!!! 
தேனே! தீதில்லாஅமுத ஊணே!! 

என்று நம்மையெல்லாம் உருக வைக்கிறது தமிழ்விரும்பியின் அன்னைத்தமிழ் 

ஆன்மிக விரும்பிகளுக்கு அற்புதமான தளம்.. சிவனைப் பற்றி சிலாகிக்கிறது இந்த பதிவு...
ஆன்மீகம் மட்டுமா அழகு காதலையும் இவர்விடவில்லை.. காதலின் ஏக்கத்தில் காதலனின் கவிதை வரிகள் இது..
 *******
 கவிதை என்றாலே காதல் தான்.. காதல் என்றாலே கவிதை தான்.. இரண்டிற்குமான தொடர்பு என்றுமே விலகியதில்லை.. அந்த வகையில் இவரை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.. 
தபூ சங்கர்.. தன்னிச்சையாக கவிதை எழுதி கல்நெஞ்சிலும் காதல் வர வைப்பவர்..காதலின் உணர்வுகளை ஒரு சில வார்த்தைகளில் கவிதையாக்குவதில் வல்லவர்..
தேவதைகளின் தேவதை  என்கிறவர், சட்டென எனக்கு இரண்டு காதலிகள் என்று அதிர்ச்சி அளிக்கிறார்.  உன் பேச்சு கா.. என்று சொல்லி காதலில் முடிக்கிறார்.. இந்த கவிதையில்..

பதினாறு கவிதை நூல்களின் ஆசிரியன்.. பரவசமூட்டும் கவிதைகள்.. இளைஞர்களுக்கு மட்டுமல்ல வலைஞர்களும் விரும்பிப்படிப்பவைதான் இவரது கவிதைகள்..

 *******



பச்சை வர்ணம் போர்த்த தோகை
பாதி சேலை அணிந்த பூவை..
இச்சை வர்ணம் பூசும் பாவை
இமை வருடும் குளிர்ந்த சோலை

என்று மலையரசின் எழிலை கூறி மயங்க வைக்கிறார்.

எழிலார்ந்த மலையின் அழகை மாய்ப்பது மனிதர்களே என்பதை

தேவதையை தெய்வத்தை
வானவளை வனப்பேச்சியை
அவளை அவளாய் வாழவிடுங்கள்
மழையும் மலையும் நமை உய்விக்க.

என்று சுட்டிக்காட்டி வேண்டுகோளும் விடுக்கிறார்.

இவரது கொள்ளை கவிதை மனதை கொள்ளைகொள்கிறது.
யதார்த்தம் தொனிக்கிறது.

சின்ன சின்ன சிகப்பு ரோஜாக்கள் நம்மையும் குழந்தையாக்கிவிடுகிறது.. ஒவ்வொரு வரியையும் ரசித்து படிக்க எளிய வரிகைகளை காயாண்டு இருக்கிறார். எதுகை, மோனையுடன் கவிதை மனதை அள்ளிச் செல்கிறது.

இவரது ஊடல்மழை உண்மையிலேயே வித்தியாசமான கற்பனையாக இருக்கிறது. 


வலையெங்கும் கவிதைப் பூக்களை அள்ளி வீசியிருக்கிறார். அதிலிருந்து ஒரு சில பூக்களை மட்டும் இங்கே தொடுத்திருக்கிறேன்.


*****

இதய பூக்கள்


கவிக்குவியல் கொட்டிக்கிறது இந்த இதயபூக்களில்..


அதிகாலை சூரியனே நட்சத்திர போர்வையை மடித்து வை என்று சூரியனுக்கே கட்டளை இடுகிறார் இவரது கவிதை மாதிரியில் 


பசியின் அளவீடுகளை மூனு ரெண்டு ஒன்று கவிதையில் காட்டியிருக்கிறார்.


இன்னும் நிறைய இருக்கிறது இதயப்பூக்களில் வாசித்துத்தான் பாருங்களேன்..


****
நன்றி நண்பர்களே!!! மற்றுமொரு அறிமுகத்தில் சந்திப்போம்.


13 comments:

  1. கவி அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பகிர்ந்த தங்கம்பழநிக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கவியியற்றும் கவிகளின்
    அறிமுகங்கள் அனைவரும் பதிவுலகில்
    தனக்கென்று தனியிடம் பிடித்து
    கோலேச்சி இருப்பவர்கள்.
    நான் விரும்பி செல்லும் தளத்தை கொண்டவர்களும் கூட....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள்... வாழ்த்துகள் நண்பரே...

    ReplyDelete
  4. நன்றி தங்கம்.. என்னுடைய இன்னொரு வலைப்பதிவயும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு..:)

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அறிமுக கவிஞர்களை வாழ்த்தி பெருமையடைகிறேன்...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. அறிமுகங்கள் அழகுற அமைந்துள்ளன.

    ReplyDelete
  8. கவிப்பூக்கள் அறிமுகம் அருமை.

    ReplyDelete
  9. அருமை நண்பா ..

    ReplyDelete
  10. நல்ல அறிமுகங்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அருமையான அறிமுகங்கள்... நேரம் கிடைக்கும் பொழுது அனைத்து புது முகங்களையும் சென்று கவனிக்கிறேன்

    ReplyDelete
  12. 'உவப்பத் தலைக்கூடி' உயர்தமிழ்
    உன்னத படைப்பென்று போற்றவே
    முல்லைச் சரமேனவே முத்தான
    முழுமுதற் பொருளெனவே - சந்தனப்
    பதிவென சான்றுகள் பகர்ந்தே
    வலைச்சரம் வகையாய்ப் பூத்ததே!
    கவிதைத் தேனுண்ண கருவண்டாய்
    கணநேரம் நில்லாமல் கலியோடு விரைகின்றேன்.

    அன்னைத் தமிழை அறிமுகப் படுத்திய அருமை சகோதரர்கள் உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்.
    அன்புடன்,
    தமிழ் விரும்பி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது