கண்மணி காலனியின் கிட்டி பார்டி
➦➠ by:
shakthiprabha,
சக்திப்ரபா,
ஷக்திப்ரபா
வாழும் அருவி
இடம்: கண்மணி காலனியின் க்ளப் ஹவுஸ்
பாத்திரங்கள்: ஸ்ரீ என்கிற ஸ்ரீமதி, ஏஞ்செலா, சுஷீ, மதி, ரேஷ்மா
நேரம்: டிசம்பர் மாதத்து இதமான வெயிலுடன் கூடிய மதியபொழுது.
************
ஸ்ரீமதி நுழையும் பொழுதே உச்சகட்ட மானாட்டின் முக்கிய பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது.
ஏஞ்செலா: இந்த விடியோவை நம்ம லேடீஸ் க்ளப் மீட்லையும் பொட்டு காமிச்சுடுவோம். என்ன சொல்றீங்க.
சுஷீ: தினம் ந்யூஸ்பேபர்ல எல்லாருமே பார்த்து தெரிஞ்சுட்டு இருப்பாங்க. அதுவும் இப்பெல்லாம் இண்டெர்நெட்ல எதை பத்தி வேணுனாலும் தேடி கண்டுபுடிக்க முடியுது. நம்ம தமிழ் மக்களோட புத்திகூர்மை பத்தி கெக்கவே வேணாம்.
ஸ்ரீ: எதை பத்தி இவ்ளோ சீரியஸ் டிஸ்கஷன்?
ரேஷ்மா: கெப்ளர் 22 விஞ்ஞானிகள் புதுசா கண்டுபுடிச்சிருக்கற பூமியைப் போல ஒரு கிரகம். 600 light years தொலைவுல இருக்காமே...
ஸ்ரீ: அட அதை பத்திதான் சார்வாகன் தன்னோட blog ல பத்து நாள் முன்னமே பொட்டுடாரே. சின்னதா intro எழுதி அது தொடர்பான விடியோவையும் இணைச்சிருக்காரு. கடவுள் துகள்னு சொல்லபபடற higgs துகள்களை பற்றின ஆராய்ச்சி கூட பார்த்து படிச்சேன். அறிவியல் நாட்டம் இல்லாதவங்க கூட நாலு அஞ்சு தடவை படிச்சா புரியும். அவரோட வலைதளத்துல இந்த மாதிரி எக்கச்சக்க உபயோகமான அறிவியல் சம்மந்தபட்ட பதிவு இருக்கு.
சுஷீ: இருக்கட்டும், இருந்தலும் நம்ம லேடீஸ் மீட்ல இந்த மாதிரி டிஸ்கஷன்ஸ் இருந்தா சுவாரஸ்யமா இருக்கும். இது தொடர்பா நிறைய பேரோட எண்ணத்தை தெரிஞ்சுக்கலாம். ஆரோக்யமான விவாதமும் இருக்கும்.
மதி: எதையெல்லாமோ கண்டுபுடிச்ச மனுஷன், சாமான்ய மனுஷங்களும் ஸ்பேஸ் ட்ராவெல் பண்ற மாதிரி விஞ்ஞான வளர்ச்சில காலை வெக்கலையே. அப்படி வழி இருந்தா இங்க இருக்கற தினப்பிரச்சனைக்கும் வெலைவாசிக்கும் நிறையபேர் கெப்லர் 22 க்கு பறந்து போயிருப்போம்.
ரேஷ்மா பலமாக சிரித்தபடி: நீ மாறவே மாட்ட மதி. "தூரத்துப் பச்சை" கதை தான். அங்க போயி நம்ம பூமியே தேவலைன்னு ஒளி வேகத்துல பறந்து வந்துடபோற.
ஸ்ரீ: அப்படி என்ன பண்ணிடுச்சு பூமி உன்னை. நாம தானே அதை சரியா பராமரிக்காம அதோட உசுர வாங்குறோம். இந்த மாதிரி விலைவாசி ப்ரச்சனையெல்லாம் சந்திகாத மனுஷங்க யாரு? பெரிய் பெரிய கவிஞர்கள் புகழ் பெற்ற ஓவியர்கள், நம்ம சூப்பர் ஸ்டார் கூட சின்ன வயசுல ஏழ்மைல வாழ்ந்தவர் தான். Interesting தகவல் ஒண்ணு சமீபத்துல படிச்சேன். பாரதிதாசன் கல்யாண செலவு அதிகமாகிடும் பயந்து என்ன பண்ணினார்னு சக்திஸ்டடிசென்டர் எழுதிருந்தார். பெண் சிசு கொலை பத்தி ஆர்டிகல் கட்டிங் தேடின போது தான் இதையும் படிச்சேன்...
சுஷீ: பணம் படுத்தும் பாடு பாரதி முதல் அவரோட தாசன் வரை யாரையும் விட்டு வெக்கலையாக்கும். எனக்கு ஷைலஜா வெங்காய மாலை பதிவு தான் நியாபகம் வரது.
ரேஷ்மா: ஷைலஜாவோடவோட ஹாஸ்யம் எனக்கு ரொம்ப புடிக்கும். அரிய தகவல் தர்ற பதிவுல கூட இயல்பான நகைச்சுவை உணர்வோட உபயோகமான விஷயங்கள் எழுதுவாங்க. மரபுக்கவிதை, கதை, ஒலிப்பதிவுகள் எதையும் அவங்க விட்டுவெக்கறதில்லை. சமீபத்து கவிதை அவங்க கற்பனை வளத்துக்கு சான்று. வாடும் பயிர் வாடியபோதெல்லாம் வாடும் மென்மை குணத்தோட அவங்க தசரா யானைக்கு வருந்தியது எனக்கே வலிச்சது. இந்த வருஷம் தசரா யானைகளுக்கு கொஞ்சமானும் மாற்றம் கொண்டு வந்தாங்களான்னு அவங்களையே கெட்டு தெரிஞ்சுக்கணும்.
ஸ்ரீ: I know...புத்தகம் எல்லாம் வெளியிட்டிருக்காங்க. எனக்கு அவங்களோட 'திரும்பத் திரும்ப' கதை திரும்பத் திரும்ப படிச்சாலும் அலுக்காது. ஷைலஜா ஹாஸ்யம் படிச்சும் உன் ப்ரச்சனை தீரலையா வவ்வால் குடுக்கற டிப்ஸ் தான் உனக்கு லாயக்கு. சூப்பர் சல்யூஷன்ஸ். ஐடியாஸ் work out ஆகலைன்ன அவருக்கு மெயில் பொட்டு கெக்கலாம்!
ரேஷ்மா: இவ்வளவு பேசற எத்தனை பேர் நகரத்துலையே குப்பை தொட்டி ரொம்பி வழியற மாதிரி அடைபட்டு கிடக்காம, கிராமங்களை நோக்கி போக ரெடி? பசங்க ஸ்கூல், தேவைக்கு ஹாஸ்பிடல் எதுவும் இல்லைன்னு ஏதோ காரணம் சொல்லி என்ன விலையானாலும் இங்க தானே வாழுறோம். விவசாயம் பண்ண யாரனும் ரெடியா? சினிமால தான் சாத்தியம். எதிர்காலத்துல விவசாயமே கேள்வி குறியா போய்டும் போல இருக்கு.
ஏஞ்செலா: நீங்க எல்லாரும் ப்ளாக் அது இதுன்னு பேசுறதை பார்த்து எனக்கே தமிழ் எழுத படிக்க ஆசை வந்துடுச்சு. நானும் என்னொட சொந்த website ஒண்ணு வெச்சிருக்கேன். என்னொட mother tongueல எழுதறேன். இவ்ளோ ரெஸ்பான்ஸ் இருக்கறதில்ல.
ஸ்ரீ: ஹையோ நீ ப்ளாகுக்கு சொல்றையே, நம்ம வீட்டுல சமைக்கற சமையலுக்கு பாராட்டு கிடைக்கலைன்னா கூட மனசு வாடி போய்டுது. பாராட்டுக்கு ஏங்கறது மனுஷங்க மனசு. யாருக்கு நேரம் இருக்கு நின்னு நிதானிச்சு ரசிக்க? rat race! இதையேத் தான் என்.உலகநாதன் தன்னுடைய கதை வெளிவந்த அனுபவத்தை ஹ்யூமர் கலந்து சொல்லியிருக்கார். On a serious note, தொடர்ந்து உழைச்சு தன்னோட பதிப்பகம் ஒண்ணை துவங்கியிருக்கார்.
சுஷீ: தினப்படி கவலையெல்லாம் மறக்க, சிரிக்கணும். நம்ம தமிழர்களுக்கே உரிய குணம் தானே ஹாஸ்யம். பழங்கால எழுத்தாளர்கள் முதல் நம்ம சினிமா நகைச்சுவை நாயகர்கள் வரை தமிழ் காமெடி கலக்கல். வாய் விட்டு சிரிச்சா நோய் கூட போய்டுமாம். நான் ஹுமர் க்ளப்ல சேர்ந்து காலைல 'ஹஹஹஹ' கும்பலா பார்கல போய் சிரிக்க போறேன்.
ரேஷ்மா: இதுக்கு ஏண்டி அங்கெல்லாம் போற, கடுகு அகஸ்தியன் சாரோட தோச்சு அங்கச்சி கதை படிச்சாலே கவலையெல்லாம் பஞ்சா பறந்து போய்டும். சின்ன வயசுலெர்ந்தே இவரோட பெரிய ஃபேன் நான். நான் என்ன தமிழ்நாட்டுல நிறைய பேர் இவருக்கு விசிறி. அவரோட பல கதைகள், ஜோக்ஸ் எல்லாமே பதிவு பண்ணுறார். ப்ளாகே களை கட்டுது.
ஏஞ்செலா: எல்லாத்தையும் விட சிம்பிள் வழி, நம்ம மதிய பேச சொல்லி கெக்கறது தான். (மதி பொய்க்கோபம் கொள்கிறாள்)
மதி: உங்களுக்கெல்லாம் கிண்டலா போச்சு. கொஞ்சம் யோசிச்சு பார்த்த நிதர்சனம் தெரியும். சுதந்திரமே போச்சு. பெண் சிசு கொலையை பத்தி படிச்சப்ப உனக்கு கண்ணு கலங்கிச்சா இல்லையா.... என்ன புண்ணாக்கு சொசைட்டி. பெண்களுக்கு சின்னச் சின்ன சந்தோஷம் கூட அனுபவிக்க பயப்பட வேண்டிருக்கறதை எவ்ளோ துல்லியமான கவிதை வடிச்சிருக்காங்க sounds of silence. இவங்களோட பல கவிதைகள் படிச்சேன். எனக்கு ரொம்ப புடிச்சுது. ப்ரில்லியண்டா எழுதறாங்க.
சுஷீ: ஆமாம் நானும் படிச்சேன். அதுல எழுதியிருக்கறது வலிக்கற உண்மை. நம்மூரு PTC பஸ்ல போனாலே பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு வேணும் ன்னு புரியும்.
மதி: எக்சாக்ட்லி! எங்க திரும்பினாலும் சாடிசம், வக்ரம், போட்டி, பொறாமை. சின்ன வயசு மகிழ்ச்சியெல்லாம் தொலைச்சுட்டமோன்னு தோணுது. முன்ன இருந்த மாதிரி பல பேருக்கு பொறுமை இல்லை. கணவன் மனைவி சண்டை கோர்ட் வரைபோகுது. டைவர்ஸ் கோர்ட் கேஸ்னு போகுறதுக்கு இது தான் காரணம்னு சொல்றார் ஷண்முகவேல். நாடுலெருந்து வீடு வரை எங்கையும் சண்டை பூசல். இந்த உலகம் நம்ம நிம்மதியாகவே இருக்க விடறதில்லை. பேசாம சின்ன குழந்தையாவே இருந்திருக்கலாம்.
ரேஷ்மா: மதி அது escapism. இது தான் நம்ம கண் முன்னாடி இருக்கற வாழ்க்கை. இப்படி தான் வாழணம் ன்னு ஏத்துகற மனப்பக்குவம் வளத்துகறது தான் வழி. எல்லாத்துலையும் பழுதை யோசிச்சு வாடுறதே உன் பிறவி குணம். தமிழுதயம் சொல்லுற மாதிரி ஆனந்தம் அழுகை எல்லாமும் ஒரு அனுபவம்னு புரிஞ்சிட்டாலே போதும்.
ஸ்ரீ: 'Take it easy policy' தான் உதவும். மனுஷங்கள அவங்க அவங்க நிறைகுறையோட ஏத்துகிட்டு போகணும். இதையெல்லாம் யோசிச்சு புலம்பாம வாழ்கையில முன்னேறும் ஆசை உள்ளவங்க ஆக்கபூர்வமா சிந்திச்சு செயல்படுத்திட்டு இருப்பாங்க. நட்பு வட்டமும் மனுஷங்களோட உறவும் தான் எந்தத் துறையிலும் முன்னேற உதவும். வாங்க முன்னேறிப் பார்க்கலாம்னு மோகன்குமார் புத்தகம் ஒண்ணு வெளியிடப்போறாராம். என் வீட்டுக்காரர் ஒரு காபி ஆர்டர் பண்ண நினைச்சுட்டு இருக்காங்க.
மதி: நானும் பாசிடிவ் ஆ யோசிக்காம இல்ல..உலகத்தை நினைச்சு கவல படுறேன். சமூக அக்கறை ன்னு கூட வெச்சுகலாம். அடடா! குட்டி பையன் ஸ்கூலேருந்து வர டைம். எனக்கு வடகம் காய வெக்கற வேலை பாதில இருக்கு. நாம நாளைக்கு பேசலாம். பால் வேற வாங்கணம். ஸ்கூட்டில பெட்ரொல் இல்ல...ஹ்ம்ம்... டாடா பை...
ஏஞ்செலா: நான் எல்லாம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் பால் குடிக்கறேன்.
மதி: அப்ப பெட்ரோல்? காய்கறி? பழம்? கரெண்ட் பில்?
ஸ்ரீ(பெரிய்தாக கும்பிடு போடுகிறாள்): அம்மா தாயே! கிளம்பு! எவன்டி உன்ன பெத்தான்...பெத்தான்... அப்டீங்கற இலக்கிய ரசனை சொட்டும் பாட்டு இவளுக்கு தான் எழுதிருக்கணும். how does Mr.Mathi manage her? ஓக்கே ஓக்கே நாமளும் போய் நம்ம வீட்டு வடகம் வேலைய பார்ப்போம். நான் children of heaven சிடி பாக்கலாம்னு என் பசங்களுக்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன்.
(அனைவரும் கலைந்து செல்கின்றனர்)
*****************
வாழும் பருவம் நீர் வீழ்ச்சியின் வேகம், உணர்ச்சி, திறன் எல்லாம் நிறைஞ்சது. இந்த ஆற்றலை நல்லா பயன்படுத்தி அற்புதமா அணைகட்டி ( ஆஹா! இது வேற அணை :( ) சீராக ஓடிவிட்டால் வாழும் பருவம் வெற்றிப் பருவம் தான்.
கூட்டுக்குடும்பம் கிட்டத்தட்ட ஒழிந்தேவிட்ட இந்நாட்களில் பண்டிகை விசேஷ நாட்களிலேனும் உறவினர்கள் நண்பர்களுடன் கூடிக் கொண்டாடுவதே வாழ்வின் இனிமைப் பொழுதுகள். தனி மரம் தோப்பாகாது. அபிப்ராய பேதங்களையும் தாண்டி மனிதர்களாக நட்பு கொள்வோம். சிரித்து வாழ்வோம்.
இன்றைய பாடல் குடும்பத்தின் இன்னிசை மீட்டுகிறது.
****************
நாளை முதிர்ச்சியை ஆராய்வோம்... அதுவரை டாட்டா..
|
|
வாங்க முன்னேறி பார்க்கலாம் (நட்பு ) மற்றும் Children of Heaven படம் குறித்த பதிவுகளை அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteவித்யாசமான முறையில் உள்ளது உங்கள் அறிமுகங்கள் அனைத்தும் !!
அட ரொம்பவே வித்தியாசமா இருக்கு உங்களின் இப் பதிவு... ரசித்துப் படித்தேன். இத்தனை விஷயங்களை அழகாக ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் கோர்வையாக கோர்த்துச் சென்றவிதம் மிக அருமை... அதில் என் பதிவும் இடம் பெற்றது குறித்து மிக மகிழ்ச்சி மற்றும் உங்களுக்கு என் நன்றியும் சக்திப்ரபா...
ReplyDeleteஎன் வலை தளம் வருகை தந்தமைக்கும், உங்களது ஊக்குவிக்கும் கருத்துகளுக்கும் நன்றி பல... நேரம் கிடைக்கும் போது வலை தளம் வந்து போங்கள்.
அட அட எங்க ஷக்தி ப்ரபாவுக்கு சக்தி மிக வந்து குஷிகுற்றால்மாய் உற்சாக நயாகராவாய் இப்படி வலைச்சரத்தில் உலா வருவது கண்டு மிக மகிழ்ச்சி. என் பதிவுகளை குறிப்பிட்டதில் அதுவும் வித்தியாசமான முறையில் கூறுவதற்குசிறப்பு நன்றி ஷக்தி!
ReplyDeleteஅழகான பதிவு. அருமையான பதிவுகள் அறிமுகம். வாழ்த்துக்கள் சக்திபிரபா.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் கிளி கொஞ்சுவதாக இருந்தன. ஏனென்று யோசித்ததில் ஷைலஜாவை அறிமுகப்படுத்தியதால் தான் என்ற முடிவுக்கு வர முடிந்தது.
ReplyDelete//எனக்கு வடகம் காய வெக்கற வேலை பாதில இருக்கு.//
எனக்கு காரசாரமான வடாத்து மாவு உடனே வேண்டும். படித்ததும் மசக்கை போல ஆவல் அதிகரித்து விட்டது.
வடாம் எங்கும் எப்போதும் கிடைக்கும். வடாத்து மாவு என்பது அப்படியில்லை.
வெய்யில் வீணாகப்போகிறதே என்ற கவலையில் சில மாமிகள் வடாத்து மாவு தயாரித்து, பிழிந்து கொண்டே இருப்பார்கள்.
சோலார் எனெர்ஜியைப்பற்றி என்றோ அறிந்து பயன்படுத்தியவர்கள் நம் முன்னோர்களான பாட்டிகளும், மாமிகளுமே!
வெற்றிகரமான இன்றைய அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.
நேற்றைய மகிழம்பூச்சர வாசனை
இன்று தான் சம்பந்தப்பட்டார்களால் நுகரப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.
பிரியமுள்ள vgk
வருகைக்கு நன்றி மோகன் குமார். உங்கள் பதிவுகள் இணைத்தது மகிழ்ச்சி :)
ReplyDeleteவாங்க sos, நான் உங்க கவிதைகளை ரொம்பவே ரசித்துப் படித்தேன். திறமையை வெளியெ கொணர தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுக்களும் வாழ்த்தும். மிக்க நன்றி வருகைக்கு :)
ReplyDeleteநன்றி ஷைலஜா :)
ReplyDeleteஉங்க நகைச்சுவை நிரம்பியோடும் உங்கள் பதிவுக்கு நான் ரசிகை. வருகைக்கு நன்றி :)
வாங்க சாகம்பரி, உங்க பின்னூட்டம் சந்தோஷம் தருது :) மிக்க நன்றி :)
ReplyDelete//சோலார் எனெர்ஜியைப்பற்றி என்றோ அறிந்து பயன்படுத்தியவர்கள் நம் முன்னோர்களான பாட்டிகளும், மாமிகளுமே! //
ReplyDelete:))) அழகா சொல்லிட்டிங்க!!
வாங்க vgk sir. உங்கள் தொடர் வருகை எனக்கு ஊக்கம் தருவதாய் இருக்கு. ரொம்ப ரொம்ப நன்றி :)
இன்றும் சுவையான அறிமுகங்கள்.
ReplyDeleteநிறைய புதிய அறிமுகங்கள்(எனக்கு). ஒன்றிரண்டு பதிவுகளை பார்வையிட்டேன். மிகவும் அருமை. விரைவில் மற்றத் தளங்களுக்கும் விரைகிறேன். பதிவர்களுக்கும் அழகாய்த் தொகுத்தளிக்கும் தங்களுக்கும் என் பாராட்டுகள்.
ReplyDeleteஎன் கட்டுரைகளுக்குப் பாராட்டு தெரிவித்திருக்கிறீர்கள். எனக்குத் திறமை எதுவும் கிடையாது. அமரர் கல்கி என் உந்து சக்தி. --கடுகு
ReplyDeleteஇங்கே நீங்கள் அறிமுகப்படுத்தி இருப்பவர்கள் சிலர்
ReplyDeleteஎனக்கு ஏற்கனவே அறிமுகம். அதில் நண்பர் சண்முகவேல்
அவர்களின் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
மற்றவர்களை சென்று பார்க்கிறேன் சகோதரி.
//இன்றும் சுவையான அறிமுகங்கள். //
ReplyDeleteவாருங்கள் nizamudeen. தினமும் செய்யும் அறிமுகங்கள் பிடிப்பது சந்தோஷம் :) தொடர்ந்து வருகைகு இன்னொரு நன்றியை பிடியுங்கள் :)
This comment has been removed by the author.
ReplyDelete//நிறைய புதிய அறிமுகங்கள்(எனக்கு). ஒன்றிரண்டு பதிவுகளை பார்வையிட்டேன். மிகவும் அருமை. விரைவில் மற்றத் தளங்களுக்கும் விரைகிறேன். பதிவர்களுக்கும் அழகாய்த் தொகுத்தளிக்கும் தங்களுக்கும் என் பாராட்டுகள்.
ReplyDelete//
நன்றி கீதா. உங்களுக்கும் பிடிக்குமென நினைக்கிறேன். தொடர்வருகைக்கும் பணிவான நன்றி :)
//என் கட்டுரைகளுக்குப் பாராட்டு தெரிவித்திருக்கிறீர்கள். எனக்குத் திறமை எதுவும் கிடையாது. அமரர் கல்கி என் உந்து சக்தி. --கடுகு
ReplyDelete//
வாருங்கள் கடுகு அவர்களே.
நீங்கள் வந்தது ரொம்ப மகிழ்ச்சி. உங்களின் பணிவு மேலும் உங்களின் சிறப்பு கூட்டுகிறது :)
வருகைக்கும் இங்கு வந்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி அய்யா :)
//மற்றவர்களை சென்று பார்க்கிறேன் சகோதரி.//
ReplyDeleteசென்று பாருங்கள், பிடித்திருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து வருகை தந்து என்னை மகிழ்ச்சியிலாழ்த்துகிறீர்கள். பணிவான நன்றி :)
அருமை. இன்றைய பாடல் சிம்பிளி சூப்பர்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல் :) பாட்டு கேட்டாலே பழைய கால கூட்டு குடும்ப கலாட்டா நினைவு வரும் :)
ReplyDeleteஉபயோகமான தகவல்களைப் பரிமாறிக் கொண்ட கலகலப்பான கிட்டி பார்ட்டி. அறிமுகமான பதிவர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதொடருங்கள் ஷக்தி.
ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி :) தொடர்கிறேன்.
ReplyDeleteகிட்டி பார்டி எனது கண்களுக்கு கிட்னி பார்டி என பட்டது அதிசயம்தான். மிகவும் உருப்படியாக பேசிய பெண்களை இன்றுதான் பார்த்தேன். ;)
ReplyDeleteநல்ல அறிமுகங்களுக்கு நன்றி சகோதரி.
வாங்க ராதாக்ருஷ்ணன்.
ReplyDelete//மிகவும் உருப்படியாக பேசிய பெண்களை இன்றுதான் பார்த்தேன். ;) //
என்ன அப்படி சொல்லிட்டீங்க!! :))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
//மிகவும் உருப்படியாக பேசிய பெண்களை இன்றுதான் பார்த்தேன். ;) //
ReplyDeleteஹி..ஹி ரா.கி. எங்கே போனாலும் பத்த வைக்கிறார்பா :-)) ஆனாலும் மனுஷன் அநியாத்துக்கு உண்மைய சொல்றார் :-))
------------
shakthiprabha, சக்திப்ரபா, ஷக்திப்ரபா,
மிக்க நன்றி,என் பதிவுகள் இரண்டையும் தங்கள் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி! கருவாட்டுக்கு கடைக்கு விளம்பரம் எதுக்கு, ஆனாலும் உங்க வலைச்சர அறிமுகத்தால் இன்னும் அதிகமாக "மணம்" பரப்புவேன் என நினைக்கிறேன்!(பெண்கள் அதிகம் விரும்பாத பதிவுகளா நான் போட்டாலும் பெண்களின் அரட்டையில் எப்படி இடம்பிடித்ததோ தெரியவில்லை)