ஏ வந்தனம் வந்தனம்
வந்த சனம் குந்தணும்
அடே தம்பி சந்தானம்
அள்ளிக் குடு சந்தனம்!
எல்லாருக்கும் வணக்கம் சொல்லி வந்தேனுங்க ‘மின்னல் வரிகள்’ வலைப்பூவின் பா.கணேஷ்.
உங்கள்ல சிலருக்கு என்னைத் தெரியும். நிறையப் பேருக்கு என்னைத் தெரியாது. அதனால... என்னை அறிமுகப்படுத்திக்கற மாதிரி என்னோட பதிவுகள் சிலவற்றை இங்கே குடுக்கலாம்னு நினைக்கிறேன். அதுககு முன்னால... ‘மாதா பிதா குரு தெய்வம்னு’ சொல்லுவாங்க. என்னோட மாதா, பிதா ஆசிகள் எப்பவும் என்னோட இருககு. அதனால குரு, தெய்வத்தை போற்றிட்டு என் பதிவுகளுக்கு வரலாம்னு நினைக்கிறேன்.
எனக்கு ஒவ்வொரு விஷயத்துலயும் நல்ல நல்ல குரு அமையற ராசி உண்டுங்க. வலைத்தளம் ஒண்ணைத் துவங்கி எழுதணும்னு நான் நினைச்சப்ப, வலைத்தளத்தை துவங்கிக் குடுத்ததோட மட்டுமில்லாம, என் பல ஆரம்பகாலப் பதிவுகளையும் திரட்டிகள்ல இணைச்சு, எப்படில்லாம் எழுதணும்(முக்கியமா எப்படி எழுதக்கூடாதுன்னு)கறது வரைக்கும் எல்லாத்துலயும் வழிகாட்டியா இருந்தவர்... சேட்டைக்காரன். அன்னா(ண்ணா)ரின் ஆசியோட துவங்கறேன்.
சரி, குரு வணக்கத்துக்கு அடுத்ததா... இப்ப இறை வணக்கம்! முழுமுதற் கடவுள் விநாயகர் கிட்டருந்து துவங்கலாம். உங்களையெல்லாம் ‘மாங்கனி விநாயகரை’ தரிசனம் பண்றதுககு இராஜராஜேஸ்வரி கூப்பிடறாங்க. போய் தரிசனம் பண்ணிட்டு வாங்க. ஆச்சா... இப்போ நான் உங்களை ‘தந்தைககு உபதேசித்த சுவாமிநாதனை’ தரிசனம் பண்ணக் கூட்டிட்டுப் போறேன். வாங்க... சரி, புள்ளைங்களை தரிசனம் பண்ணிட்டு அப்பனை தரிசிக்காட்டா அவர் நெற்றிக்கண்ணைத் திறந்துடுவாரே... அதனால ‘பித்தா! பிறைசூடி!’ன்னு ஷைலஜா அக்காவோட தளத்துக்குப் போய் தரிசனம் சிவனை பண்ணிடுங்க. அப்புறம்... புவனேஸ்வரி ராமநாதன் உங்களை மகரநெடுங்குழைக்காதரைத் தரிசிகக கூட்டிட்டுப் போறாங்க. போய் பெருமாள் தரிசனத்தையும் முடிச்சுககங்க.
இறை வணக்கம் முடிச்சாச்சா... அடுத்ததா இப்ப தமிழ்த் தாய் வாழ்த்து. முனைவர் இரா. குணசீலன் அவர்களும், புலவர் சா.இராமாநுசம் அவர்களும் தமிழ்த் தொகுப்பு-களும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அழைக்கறாங்க. நற்றமிழைப் பருகிட்டு வாங்க நண்பர்களே...
இப்ப... என் எழுத்தைப் பத்திச் சொல்றதுக்கு முன்னால... இணையத்துல எழுதணும்கற என்னோட ஆர்வத்துக்கு இன்ஸ்பிரேஷனா இருந்த ரெண்டு நண்பர்களுக்கு நன்றி சொல்லணும்.. ரெண்டு பேர் மேலயும் நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் அதைப் புறந்தள்ளிட்டு பிஸியா எழுதிட்டு வர்ற பிரபலங்கள். ஜாக்கிசேகர், சி.பி.செந்தில்குமார் - இந்த ரெண்டு பேருக்கும் என் நன்றி! அப்புறம்... வலைச்சரத்துல என் பதிவுகளை அறிமுகப்படுத்திய ராம்வி, ஷக்திப்ரபா, மதுமதி, துரை டேனியல், கீதமஞசரி, ஸாதிகா, வெங்கட் நாகராஜ்- இந்த நட்புகள் அனைவருக்கும் மனநெகிழ்வுடன் கூடிய என் நன்றிகள்!
இப்ப சென்னை வாசியா இருந்தாலும் என்னோட வேர் மதுரை. ‘மதுரை’ ங்கற ஊர் பேரைச் சொன்னாலே, ஊரை நினைச்சாலே மனசுக்குள்ள பூப் பூக்கும் எனக்கு. என்னோட ஊரைப் பத்தி நான் எழுதின என்னோட இந்த ஆரம்பகாலப் பதிவைப் படிச்சு நீங்களும் மதுரையைக் கொண்டாடுங்க.
எழுத்தார்கள் பேரைச் சொன்னா சில கேரக்டர்கள் நினைவுக்கு வரும். உதா: சங்கர்லால் - தமிழ்வாணன்! அப்படி கணேஷ்னா நினைவுக்கு வர்ற மாதிரி ஒரு தொடர் கதாபாத்திரத்தை அமைககணும்னு நான் நினைச்சப்ப வந்ததுதான் சரிதா கேரக்டர். சரிதா கேரக்டரை வெச்சு நான் முதன்முதலா எழுதின இந்தக் கதையை நிறையப் பேர் பார்த்திருகக வாய்ப்பில்லை. இப்ப படிச்சு சிரிங்க.
மலரும் நினைவுகளுக்குள்ள போய்ட்டு வர்றது எல்லாருக்கும் பிடித்தமானதுதான். நான் முதல் முறையா என் பள்ளி நாட்களை இந்தப் பதிவு மூலமா பின்னோக்கிப் பாத்தப்ப எல்லாத் தரப்பிலருந்தும் வரவேற்பு கிடைச்சது. அந்த ஆதரவுதான் இப்ப நடைவண்டிகள்-ன்னு நினைவுத் தொடரே எழுதற தைரியத்தைக் குடுத்திருக்குங்க.
800. 1000 பக்கங்கள் கொண்ட நாவலை படிக்கறதுக்குப் பொறுமையில்லாதவங்களுக்கும், படிக்க விருப்பமிருந்தும் அந்த மாதிரி புத்தகங்களோட உள்ளடக்கம் என்னன்னு தெரியாம இருககறவங்களுக்கும் பயன்படுமேன்னு கேப்ஸ்யூல் நாவல்-ங்கற பேர்ல நான்கைந்து பக்கஙகள்ல சுருக்கித் தந்தேன். நாவலோட பொருளும், சுவையும் கெடாம சுருக்கறது எவ்வளவு கஷ்டம்கறதை உணர்ந்து எல்லாரும் பாராட்டறப்ப மனசு லேசாயிடுது.
வழக்கமான முறையில எண்ணங்களைச் சொல்றதைவிட கொஞ்சம் வித்தியாசமாச் சொல்லலாமேன்னு நினைச்சு இந்தப் பதிவை எழுதினேன். எல்லாத் தரப்பிலருந்தும் பாராட்டுக்களை பெற்றுத் தந்து என்னை மகிழ்வு கொள்ள வைத்தது இது.
ஒன்பான் சுவைகள்ன்னு சொல்வாங்க. அதுல எனக்குப் பிடிச்சது நகைச்சுவை. நகைச்சுவையா எழுதணும்னு விருப்பப்பட்டு நான் எழுதிய இந்தப் பதிவும், இந்தப் பதிவும் அனைவராலும் வரவேற்கப்பட்டதில எனக்கு நிறைய சந்தோஷம்.
நகைச்சுவை தவிரவும் உணர்வுகளை மையப்படுத்தி நான் எழுதின இந்தச் சிறுகதையும், இந்தச் சிறுகதையும் நிறையப் பாராட்டுகளை பெற்றுத் தந்ததால அப்பப்ப இப்படியும் எழுதணும்கற ஆசையும் உள்ள ஓடிட்டிருக்கு.
இன்னும் நிறையப் பதிவுகளைப் பத்திச் சொல்லிட்டே இருப்பேன். ஆனா என்னோட தன்னடக்கம்(!) தடுக்குது. அதனால இன்னிக்கு இதோட நிறுத்திக்கிட்டு .உத்தரவு வாங்கிக்கறேன். நாளைலேர்ந்து பதிவுகளை அறிமுகப்படுத்தணும்.
என்னை மாதிரி ஒரு சாதாரண ஆள் அறிமுகப்படுத்தறதை விட, பிரபலங்கள் அறிமுகப்படுத்தினா நல்லா இருக்கும்னு தோணிச்சு எனக்கு. அதனால சில பிரபல ஜோடிகளுக்கு அழைப்பு விடுத்தேன். அவங்களும் தினம் ஒரு ஜோடியா வந்து தாங்கள் ரசிச்ச பதிவுகளை அறிமுகப்படுத்தறதா சொல்லியிரு்க்காங்க. நாளைக்கு வரப்போற பிரபல ஜோடியைப் பார்க்க... தவறாம வந்துடுங்க!