இறைவனுக்கும் தமிழ் அன்னைக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்
➦➠ by:
சொக்கன்
(காரைக்குடி கம்பன் கழகத்தில் இருக்கும் தமிழ் அன்னை சிலை)
அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,
இன்று என்னுடைய வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு கடைசித்
தினம். இறைவனின் அருளாலும், தமிழ் அன்னையின் ஆசியாலும் தான், என்னால் இந்த
பொறுப்பை நல்லவிதமாக முடிக்க முடிந்தது.
அதற்கு நன்றி செலுத்தும் விதமாக இன்றைக்கு ஆன்மிக பதிவர்களில் சிலரையும், நமக்கு கோவில்களை அறிமுகப்படுத்தியவர்களையும்,
தமிழை சொல்லிக்கொடுப்பவர்களையும் இன்றைக்கு பார்க்கலாம்.
முதலில் ஆன்மிக பதிவர்களை பார்க்கலாம்.
ஆன்மிக பதிவாளர்கள் என்றாலே எனக்கு முக்கியமாக நியாபகத்துக்கு
வருவது ராஜராஜேஸ்வரி அம்மாவும், வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களும் தான்.
ராஜராஜேஸ்வரி அம்மா அவர்கள் தினமும் ஒரு ஆன்மிக செய்தியை
பதிவிடுவார்கள். அதில் நிறைய தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த
பதிவில் அவர் நவக்ரஹ விநாயகரைப் பற்றி சொல்லியிருக்கிறார். நவக்கிரஹ விநாயகர்
கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் வலைப்பூவில் காஞ்சிப்
பெரியவர்கள் பற்றி நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள முடியும் - பக்தியே முக்திக்கு வழி
அடுத்து வெளி நாடுகளில் உள்ள தமிழ் கோவில்களை பற்றி எழுதிய
பதிவர்களைப் பார்ப்போம்.
சிங்கப்பூர்
சிங்கப்பூரில் வசிக்கும் திரு. கிருஷ்ணன் என்பவர் தன்னுடைய
வலைப்பூவில் சிங்கப்பூரில் உள்ள கோயில்களைப் பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார். - சிங்கப்பூரில் இருக்கும் கோவில்கள்
அமெரிக்கா
கோமதி அரசு என்பவர் திருமதி பக்கங்கள் என்ற தன்னுடைய
வலைப்பூவில் அமெரிக்காவில் இருக்கும் சில கோயில்களைப் பற்றி சொல்லியிருக்கிறார் - அமெரிக்காவில் இருக்கும் சில கோவில்கள்
மற்ற நாடுகளில் உள்ள கோவில்களின்
படங்கள்
டாக்டர். சாரதி என்பவர் தன்னுடைய வலைப்பூவான தமிழன் சுவடில், உலகத்திலுள்ள பல
கோயில்களின் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இதில் “அம்மன் கோவில் (Mother
temple of besakih) பாலி, இந்தோனிசியா”
இந்த வரிகளுக்கு மேல் உள்ள படம்
ஆஸ்திரேலியாவில் சிட்னி முருகன் கோவில் படமாகும். உலகெங்கும் இருக்கும் கோவிலின் படங்கள்
செந்தில் ராஜா என்பவர் தன்னுடைய வலைப்பூவில் மற்ற நாடுகளில்
உள்ள கோவில்களின் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் - வெளி நாடுகளில் உள்ள கோவில்களின் படங்கள்
அடுத்து இந்தியாவில் இருக்கும் கோவில்களை நமக்கு
அறிமுகப்படுத்திய சிலரை பார்க்கலாம்.
நண்பர் சுரேஷ், தன்னுடைய வலைப்பூவில் திருப்போரூர் முருகனைப் பற்றி சொல்லியிருக்கிறார் - திருப்போரூர் முருகன்
அடுத்து நம் சகோதரி ராஜீ அவர்கள் தன்னுடைய வலைப்பூவில்
“சொர்ணாகர்ஷண கிரிவலத்தைப்” பற்றி விளக்கமாக சொல்லியிருக்கிறார் - சொர்ணகர்ஷண கிரிவலம்
அடுத்து சகோதரி புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள், தன்னுடைய வலைப்பூவில்
நவத்திருப்பதி திருத்தலங்களை பற்றி சொல்லியிருக்கிறார் - நவத்திருப்பதி தலங்கள்
இனி, தமிழ் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக, தமிழை
சொல்லிக்கொடுப்பவர்களில் சிலரை பார்ப்போம்.
எதிர்நீச்சல்க்காரன் என்பவர் தன்னுடைய வலைப்பூவில் இணையத்தில்
தமிழ் கற்க வாங்க என்று கூறி, எந்தெந்த இணையத்தளங்களில் தமிழ் கற்க முடியும் என்று கூறியிருக்கிறார். தமிழ் கற்க வாங்க
தமிழ் இலக்கணங்களை இரண்டு பேர் தங்களுடைய வலைப்பூவில் சொல்லிக்கொடுக்கிறார்கள்.
நண்பர் சுரேஷ் அவர்கள் உங்களின் தமிழ் அறிவு எப்படி? என்று நமக்கு தமிழ் இலக்கணத்தை
சொல்லிக்கொடுத்து வருகிறார் உங்களின் தமிழ் அறிவு எப்படி?
அசோகன் என்பவர் தன்னுடைய வலைப்பூவில் எழுத்து இலக்கணம், அணியிலக்கணம் என்று தமிழ்
இலக்கணங்களை சொல்லிக்கொடுக்கிறார்.
புதிர்கள் மூலமாக தமிழை சொல்லிக்கொடுப்பவர்கள் இவர்கள்.
மணி மு.மணிவண்ணன் என்பவர் தன்னுடிய வலைப்பூவில் சொல்வளம் என்று
கேள்விகளைக் கேட்டு பதில்களை வழங்குகிறார்.
தமிழ்புதிர்கள் என்ற வலைப்பூவில் புதிர்கள் மூலமாக தமிழை சொல்லிக்கொடுக்கிறார்
- தமிழ் புதிர்கள்
இறுதியாக,
என் மீது அபார நம்பிக்கை வைத்து என்னிடம் இந்த மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்த சீனு ஐயா அவர்களுக்கு
என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் என்னுடைய வேலையை சரியாகத்தான்
செய்து முடித்துள்ளேன் என்று நம்புகிறேன். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு வேலையை நான்
செய்யவில்லை. அது என்னுடைய பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்காதது தான். உண்மையை
சொல்லப்போனால் அதை எப்படி இணைப்பது என்று எனக்குத் தெரியாது. நம்ம வலைச்சித்தர் டிடி
அவர்களின் பதிவை சென்று பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் முடியாமல்
போய்விட்டது. எனக்காக அந்த வேலையை செய்தவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
இந்த ஒரு வாரமும் என்னுடன் பயணித்து, என்னை ஊக்குவித்த சகோதர சாகாதரிகள் அனைவருக்கும் என்னுடைய உள்ளம் கனிந்த நன்றிகள்.
இனி வரும் அடுத்த வார வலையாசிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
|
|
வலைச்சரத்தில் தங்களின் புதுமையான பாணியில் தினம் ஒரு தலைப்பில் பதிவர்களையும் பதிவுகளையும் அறிமுகம் செய்த விதம் சிறப்பு! என்னுடைய இரண்டு பதிவுகளையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்! தமிழ்மணம் இணைத்தாயிற்று! நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ். தங்களுடைய தமிழ் அறிவுப் பகுதியில் தான் நான் இலக்கணம் கற்றுக்கொண்டு வருகிறேன். அதற்கு நன்றிகள்.
Deleteப்ளாகரில் எட்டிப் பார்க்க ஆரம்பித்து இருக்கும் எனக்கு நிறைய ஆச்சரியங்கள்...எத்தனை அற்புதமாக, விதவிதமாக மக்கள் எழுதுகிறார்கள்...! நல்ல விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.எல்லாருடைய அறிமுகங்களுக்கும், அறிமுகப் படுத்தியவர்களுக்கும் நன்றி.
ReplyDeleteதேடி,தேடி தெரியப்படுத்திய உங்கள் ஆர்வம் பாராட்டப் பட வேண்டியது.
உண்மை தான். இந்த ஒரு வாரத்தில் இணையத்தில் நான் பார்த்த பதிவுகள் ஏராளம்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி
ஆஸ்திரேலிய பதிவர்களில் ஆரம்பித்து ஆன்மீக பதிவர்களுடன் முடித்துள்ளீர்கள். வலைச்சர ஆசிரியப் பணியை வித்தியாசமாகவும் சிறப்புடனும் செய்து முடித்தமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.
Delete//ஆன்மிக பதிவாளர்கள் என்றாலே எனக்கு முக்கியமாக ஞாபகத்துக்கு வருவது ராஜராஜேஸ்வரி அம்மாவும், வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களும் தான்.//
ReplyDeleteகாலை எழுந்ததும் நான் தினமும் ஆவலுடன் சென்று தரிஸித்து மகிழும் பிரத்யக்ஷ அம்பாள் போன்ற திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளத்தினை முன்னிலைப் படுத்தித் தாங்கள் எழுதியுள்ளது என் மனதுக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.
பூவோடு சேர்ந்த நாராக அத்துடன் என் பெயரும் இருப்பதைப் பார்த்ததும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது.
தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
>>>>>
நானும் அலுவலகத்திற்கு சென்றவுடன், முதலில் அம்மா அவர்களின் வலைப்பூவை திறந்து படங்களை மட்டும் பார்த்துவிட்டு தான் அடுத்த வேலையே செய்ய ஆரம்பிப்பேன். பிறகு நீதானமாக அந்த பதிவை படிப்பேன்.
Delete//ராஜராஜேஸ்வரி அம்மா அவர்கள் தினமும் ஒரு ஆன்மிக செய்தியை பதிவிடுவார்கள். அதில் நிறைய தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த பதிவில் அவர் நவக்ரஹ விநாயகரைப் பற்றி சொல்லியிருக்கிறார். நவக்கிரஹ விநாயகர்//
ReplyDeleteதினமும் ஒரு பதிவு வீதம் இன்றுவரை 1299 பதிவுகள் கொடுத்து மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
21.01.2011 அன்று பதிவிடத் துவங்கி 1235 நாட்களுக்குள் 1299 பதிவுகள் கொடுத்துள்ளார்கள்.
நாளைக்கு அவர்களின் வெற்றிகரமான 1300வது பதிவு வெளியாக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் இங்கு கூறிக்கொள்கிறேன்.
இவர்களின் ஆயிரமாவது பதிவுக்காக என் வலைத்தளத்தினில் ஓர் சிறப்புப்பதிவு வெளியிடப்பட்டது என்பதையும் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதோ பின்னூட்ட எண்ணிக்கை 211 என்று காட்டிடும் அதன் இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html
>>>>>
அவர்கள் ஆன்மிக உலகத்திற்கு மிகப் பெரிய சேவையை செய்து வருகிறார்கள்.
Delete//கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் வலைப்பூவில் காஞ்சிப் பெரியவர்கள் பற்றி நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள முடியும் - பக்தியே முக்திக்கு வழி//
ReplyDeleteஅடியேனின் பதிவினையும் சிறப்பித்து இங்கு குறிப்பிட்டுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
>>>>>
ஐயா உங்களின் வலைப்பூவில் நான் காஞ்சிப் பெரியவர்கள் பற்றிய பதிவுகளை கொஞ்சம் கொஞ்சமாக படித்துக்கொண்டு வருகிறேன். என் தாயார், பத்திரிக்கைகளில் வரும் அவருடைய செய்திகளை எல்லாம் வெட்டி எடுத்து வைத்திருப்பார்கள். அந்த ஈர்ப்பு தான் தாங்கள் அவரைப் பற்றி எழுதிய பதிவுகள் எல்லாவற்றையும் படித்து விட வேண்டும் என்று படித்துக்கொண்டிருக்கிறேன்.
Delete//இறைவனுக்கும் தமிழ் அன்னைக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்//
ReplyDeleteஇந்தத்தங்களின் தலைப்பும், தங்களின் ஒரு வார வலைச்சர ஆசிரியர் பணியும், தங்களின் சுருக்கமான பெயர் போலவே [சொக்கன்] சொக்க வைப்பதாக உள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். மீண்டும் நன்றிகள்
அன்புடன் VGK
தங்களின் கனிவான வார்த்தைக்கும் பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteசூப்பர் சார், ஒருவாரமும் கலக்கிட்டீங்க... நிறைய தளங்கள் தெரியாதவை இருக்கின்றன.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்பை
Deleteநன்றி...
ReplyDeleteஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொகுப்பும் மிகவும் சிறப்பு... தங்களின் தேடலுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி டிடி
Deleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteதங்களின் வலைச்சர ஆசிரியர் பணியைச் செவ்வனே செய்து முடித்திருப்பதற்கு முதலில் வாழ்த்துகள். ஒவ்வொரு நாளும் முயன்று சிறப்பான தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு எனது நன்றிகளும் வாழ்த்துகளும் சகோ. அடுத்து வரும் ஆசிரியருக்கு எமது வாழ்த்துகள். நன்றி..
வணக்கம் சகோ.
Deleteதங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் நண்பரே ''செய்வன திருந்தச்செய்'' என்பதை தெரிவாக நிரூபித்து விட்டீர்கள், என்றோ நான் பதிவிட்ட எனது ''ஸ்வீட் டே இன் ஸ்விட்சர்லாண்ட்'' டையும் தேடிக்கண்டு பிடித்ததற்க்கு நான் நன்றி சொல்லமாட்டேன் என ஏற்கனவே சொல்லிவிட்டேன் நான் ஆச்சர்யப்படுகிறேன் அவ்வளவுதான்.
ReplyDeleteகுறிப்பு-
ஏதோ அட்ரஸ் கேட்டிருந்தீர்கள், அனுப்பியுள்ளேன். வணக்கம்.
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே
Deleteஒரு வாரம் செம்மையான, சிறப்பான பணி செய்தீர்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தமிழ்மணம் 3.
தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
Deleteவாழ்த்துக்கள், பாராட்டுக்கள் திரு. சொக்கன் அண்ணா..
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரா
Deleteசிறப்பான அறிமுகங்களும் நல்கி சிறப்பாக பணியை நடத்தியமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ அறிமுகங்களுக்கும் என் மனர்ந்த வாழ்த்துக்கள்.....!
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteவலைச்சரத்தில் ஆசிரியப் பணியை செம்மையாகவும் சிறப்பாகவும் செய்த - அன்பின் திரு. சொக்கன் அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteவணக்கம்
ReplyDeleteஒரு வார காலம் மிகச் சிறப்பாக பணியை செய்து முடித்த தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.. வித்தியாசமான தலைப்பில் எல்லா அறிமுகமும் அமைந்துள்ளது தங்களின் தேடலுக்கு எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
Deleteசிறப்பான பணி செய்தீர்கள் இவ்வாரம் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
Deleteமிகவும் சிறப்பாக எடுத்துச் சென்று முடித்துள்ளீர்கள். தாங்கள் அறிமுகப்படுத்திய பதிவுகளை இனிமேல்தான் பார்க்கவேண்டும். நன்றி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பக்கிரிசாமி
Deleteஎமது தளத்தை சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு இனிய நன்றிகள்..
ReplyDeleteஇடைவிடாத பயணங்களின் காரணமாக தாமதமான பின்னூட்டம் ..
தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்மா.
Deleteவணக்கம் ப்ரொ .... சொக்க வைத்த உங்கள் பதிவுகளுக்கு நன்றிகள்
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி புத்தன்
Deleteவாழ்த்துக்கள் சொக்கன்
ReplyDeleteதங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மது.
Deleteகுழந்தைகள் விடுமுறைக்கு வந்து இருப்பதால் இணையம் பக்கம் வர முடியவில்லை.
ReplyDeleteரூபன் அவர்கள் இன்று என் பதிவு வலைச்சரத்தில் இடம் பெற்று இருப்பதை வந்து சொன்னார்கள். அவர்களுக்கு நன்றி.
என் பதிவை குறிப்பிட்டமைக்கு நன்றி.
ஒரு மாதமாய் பயணங்கள், குழந்தைகள் வரவு காரணமாய் படிக்க முடியவில்லை. பின்பு படிக்கிறேன்.
இன்று இடம் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
ஒவ்வொரு நாளும் வித்தியாசமான தலைப்புகளில் பதிவர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்..
ReplyDeleteஉங்களால் அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.