செங்கீரைப் பருவம்!!!
"ஏலே! மருதமுத்து என்னலே வாய திறந்தா கொட கொடன்னு மடத்தண்ணி பாஞ்சாப்புல தகரக் குரல் ல பாடுவயே. எங்கவே போச்சி அந்த குரலு?"
"அட போய்யா சின்னக்காளை, விளைஞ்சிருக்கிற வெள்ளாமைய பார்த்தா தொண்டையில எச்சில் கூட ஊறல, இதில எங்கிட்டு பாட்டு பாட"...........
உழவுத் தொழிலு
உசிரப்பா!
உழவன் எமக்கு
சிரசப்பா!!
ஏனப்பா! தேனப்பா!
இடக்குமடக்கு உனக்கேம்பா!!
என் வழியில நான்போக
விடுவதில்லை நாடப்பா!!
விதைச்ச காசு
விளைஞ்சிடுமா!
வேரிலே அழுகி
பிறந்த இடம் புதைஞ்சிடுமோ!!
விவசாயத்தின் இன்றைய நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. விவசாயத் தொழிலில் கட்டுண்டு செங்கழுநீர் பூசிய முகத்துடன் பூமித்தாய் பச்சைப்பட்டு மேனியுடன் சிரித்திருப்பதை உழவன் உடல் களைப்புடன் இருந்தாலும் மனம் இனிக்க பார்த்திருந்த காலம் கனவாகிப் போனது.
நமக்கெல்லாம் வரமாகக் கிடைத்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். கரிம விவசாயமுறையில் சிறந்த மகசூல் கிடைக்க கணக்கில் அடங்காத ஆராய்ச்சிகளைச் செய்தவர். அவரின் மறைவும் நமது விவசாயத்திற்கு பேரிழப்பே.
" கட்டு களம் காணும்
கதிர் உலக்கு நெல் காணும்..."
"மாடுகட்டி போரடித்தால் மாளாதென்று
யானைகட்டி போரடித்த மரபில்
வந்தவனல்லவா நீ.........."
யானைகட்டி போரடித்த மரபில்
வந்தவனல்லவா நீ.........."
இப்படி விவசாயம் செழித்தோங்கி இருந்த காலமும் உண்டு.
பின்னர்
கூட்டுறவு விவசாயம் என்ற பெயரில் ஏழைகளின் நிலத்தை வஞ்சகமாக அபகரித்து
அதோடு நில்லாது உழவர்களை அடிமையாக்கி தட்சனாட்சி செய்த முதலாளி
பண்ணையார்கள் இருந்தது ஒரு காலம். அப்போதுதான் பட்டுக்கோட்டை கல்யாண
சுந்தரனாரின் பாடல்கள் செவியில் தேன் பாயத்தது மட்டுமில்லாது நம்மை
உசுப்பியும் விட்டது...
" மாடா உழைச்சவன் வாழக்கையில
பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?!!"........
"அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்தினில்
சேர்வதனால் வரும் தொல்லையடி..."""
==============================
இன்றைய
வலைச்சரத்தில் பிள்ளைத்தமிழ் செங்கீரைப்பருவம், தனது பொக்கைவாய் திறந்து
வித்தியாசமாக ஒலிகள் பல எழுப்பி ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டி..
இருகைகளையும் ஊன்றி கீரை கடைவதுபோல ஆடும் பருவம்.... அந்த பொன்னான
பருவத்தில் நம் பொன்னான தொழிலாம் விவசாயம் பற்றி சொல்லும் பதிவர்கள் பற்றிய
அறிமுகம்.
============================== =======
==============================
அன்பிற்குரிய நண்பர் ரகுபதி. இவரின் இயற்கை விவசாயம் எனும் வலைத்தளம் முழுக்க முழுக்க விவசாய செய்திகளை தாங்கி நிற்கின்றன.
இதோ பாருங்கள் மண்ணை வளர்த்த மாமனிதர்கள் எனும் தலைப்பில் மண்புழுக்கள் பற்றிய செய்திகளைத் தருகிறார்.
தந்தான தாளம்போட்டேன்
தலைகீழா நடந்துவந்தேன்!
தவத்தொழிலு விவசாயத்தை
தரமாய் உயர்த்திடவே
தங்கமான பதிவு தந்த
ரகுபதி ராசாவுக்கு
தலைப்பாகை கொண்டுவந்தேன்!!!==========================================================
இயற்கை உரங்களும் இயற்கை மருந்துகளும் தான் பயிர்களை செழுமையாக
வளமையாக வளர்ந்திட முழுமூச்சாய் செயல்படுகிறது. அதனை நாமும் பின்பற்ற
அருமையான இயற்கை மருந்து கலவைகள் பற்றி இங்கே சொல்கிறார்கள் இயற்கை மருந்துகள் பயிர்களைக் காக்கும் என்று.
மேலுரம் கீழுரம்
அடியுரமென
ஆயிரம் நீ போட்டாலும்
அத்தனையும்
மண்ணுக்கும் பயிருக்கும்
கேடு தானய்யா!
இயற்கையை நம்பிடு
இனியிங்கு நோயில்லை என
இனிதாய் வளர்த்திடு!!===================================================
இவரது தளத்தின் முதல் வரவேற்பு வரிகளே நெஞ்சைத் தாலாட்டுகிறது.
நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம் ..இதுவே அந்த வரவேற்பு வரிகள். பல
பரிமாணங்களில் பதிவுகள் நிறைத்திருக்கும் நண்பர் மு.சரவணக்குமார் அவர்கள்
2400 சதுர அடியில் ஒருங்கிணைந்த விவசாயம் பற்றி எடுத்துரைக்கிறார்.
வாருங்கள் நாமும் அந்த ஒருங்கிணைந்த விவசாயத்தை கண்டு இன்புற்று வருவோம்.
மாடக்குள செல்லையா
தலையில் என்ன புல்லா அய்யா!
இறக்கிவைச்சி வாருமய்யா
இங்கினக்குள்ள சேதியுண்டு!
கூட்டுறவு என்பதெல்லாம்
கூறு கூறாய் பிரிந்தபின்னே...
நமக்கான இடத்துக்குள்ளே
ஒருங்கிணைந்த விவசாயமாம்
வாருமய்யா போய்வருவோம்
கம்பங்கஞ்சி குடிச்சி வருவோம்!!====================================================
இந்த வலைப்பூ பக்கம் போனால் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்
அவர்களின் கிராமப்புற படப்பிடிப்பு பக்கம் போனதுபோல ஒரு உணர்வு....
அருமையான தகவல்கள், அசத்தலான நடையில் எழுதியிருக்கிறார் பண்ணையார் என்ற
பெயருடன் ஒரு நண்பர். ஒரு காலத்தில் கிணற்றில் இருந்து நீர் இறைக்க பயன்படுத்தப்பட்ட பறி என்னும் ஒரு வகையான பொருளை நமக்கு அடையாளம்
காட்டுகிறார் பார்த்து வருவோம் வாருங்கள்.
தீர்ப்பு சொல்ல வந்தவரே
தெற்குசீமை மன்னவரே!
காலம்போன காலமதில்
காஞ்சி கிடக்கும் நிலங்களிலே
சிறுதுளி நீரேனும்
உம் பதிவு தெளித்துவிட்டால்
மகிழ்ச்சி கொள்வேனய்யா!!=================================================================
பொதுவாகவே சர்க்கரை நோய் வந்தால் தான் கோதுமை கேழ்வரகு என்ற
தானியங்களை நாடிச் செல்கிறோம். இதில் கோதுமை இன்று அன்றாட தானியங்களில்
ஒன்றாகிவிட்டது. ஆயினும் கேழ்வரகு மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.
சிறந்த ஊட்டச்சத்து மிக்க இந்த தானியத்தை பற்றி வறட்சியிலும் வாரிக்கொடுக்கும் வரகு என்று இங்கே பதிவினைக் கண்டேன். அறிந்திராத
தகவல்களைப் பெற்றேன்.
கொல்லிமலை திரவியமே
ஆழ்கடலின் நித்திலமே!
உமக்கெல்லாம் மிஞ்சிய
மதிப்பிட இயலாத
மங்காத பொன்மணியாம்
வரகு காண்பீரோ?
அதன் புகழ் கேளீரோ!!========================================================
தேசத்துக்கு முதுகெலும்பு போல விளங்கும் விவசாயம் பற்றி எத்தனை
எத்தனயோ பதிவர்கள் நிறைய எழுதி இருப்பார்கள். சிலரை இங்கே அறிமுகப்படுத்தி
இருக்கிறேன்.
வானம் பொய்ச்சிதுன்னா
மானம் போச்சுதடி!
வாழ்வே இருள்தானா - தங்கமே கட்டழகி
நான் வாழும் நாள் ஏதோ
குங்கும பொட்டழகி!!
கடல் போல் கரைபுரண்டு
வானம் இடியிடிக்கும்!
கீழ்வானம் கருத்துருச்சி - ஆச மச்சானே
உன் வாழ்வில் வெண்ணிலவு
நேச மச்சானே!!
உழவே எம்பொழப்பு
செங்கழனி என் வீடு!
வேறு சோலி தெரியாது - தங்கமே கட்டழகி
வெள்ளாம விளைஞ்சிடுமா
குங்கும பொட்டழகி!!
போட்ட விதை வீறுகொண்டு
விருட்சமாகும் நாளும் வரும்
அன்னைக்கு நானும் வாரேன் - ஆச மச்சானே
அதுவரை நெல்லுக்கு நீர் விடய்யா
நேச மச்சானே!!!
அன்பன்
மகேந்திரன்
|
|
விவசாயம் பற்றிய பதிவர்களை அறிமுகம் செய்து சிறப்பித்தமைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.. நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteஇனிய வணக்கம் துரை செல்வராஜூ ஐயா..
Deleteமுதன்முதலாய் உங்களின் இனிய .கருத்து..
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
தேசத்துக்கு முதுகெலும்பு போல விளங்கும் விவசாயம் பற்றி வலைச்சரம் தொடுத்தமைக்கு இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
உழவின் பெருமை பேசும் அற்புத தளங்களின் அறிமுகத்துக்கு மிக்க நன்றி மகேந்திரன். அவற்றை உங்கள் பாணியில் அழகிய கிராமியப் பாடல்வழியே அறிமுகப்படுத்தியமையும் சிறப்பு. அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய வணக்கம் சகோதரி கீதமஞ்சரி...
Deleteபூம்பொழில் கருத்துக்களால் எமை ஊக்குவிக்கும் சோதரியே..
ஆழ்ந்துணர்ந்து உங்கள் விரல் வரையும் கருத்துக்கள் எமக்கான
கிரியா ஊக்கி..
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
உழவுத்தொழிலின் சிறப்பைச்சொல்லும் மிகச்சிறப்பான அறிமுகங்களுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய வணக்கம் வை.கோ ஐயா..
Deleteஉங்களைப்போன்ற பெரியோரின் ஆசீர்வாதம் ஐயா...
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
வணக்கம் !
ReplyDeleteபல பயனுள்ள அருமையான தளங்களை அறிமுகம் செய்து வைத்த
அன்புச் சகோதரனுக்கும் இங்கு அறிமுகமான அனைவருக்கும் என்
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் !தொடர்க தங்கள் பணி மேலும் சிறப்பாக .
இனிய வணக்கம் அன்புச் சகோதரி அம்பாளடியாள் ..
Deleteஆழ்ந்துணர்ந்து தெரிவித்த அன்பான கருத்து..
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
தொடக்கத்தில் நானும் ஒரு விவசாயி என்பதில் பெருமைப் படுகிறேன்! அறிமுகம் நன்று! தொடரட்டும் தங்கள் பணி! வாழ்த்துகள் மகி!
ReplyDeleteஇனிய வணக்கம் புலவர் பெருந்தகையே..
Deleteநின் பாதகமலங்களுக்கு வணக்கங்கள் ஐயா..
உங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகள்
என் எழுத்துக்களை பட்டைதீட்டும் ஐயா..
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
வித்தியாசமான அனுகுமுறை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய வணக்கம் நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்...
Deleteதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
வணக்கம் சகோதரரே!
ReplyDeleteஇசைத்தொரு பாடலால் ஈர்த்தீரே யெம்மை!
விசையாய் வயல்விதைக்க வென்று!
அற்புதமான பாடலொடு அருமையான பதிவர்கள் அறிமுகம்!
மிகச் சிறப்பு! அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!
இனிய வணக்கம் அன்புச் சகோதரி இளமதி.. ..
Deleteஎனக்கும் ஒரு குறள் வெண்பாவா!!!!!
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஆகா...!
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இனிய வணக்கம் நண்பர் தனபாலன்..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
வணக்கம் நண்பரே! நலிவடையும் விவசாயத் தொழிலை வந்தனை செய்து பல அறிமுகங்கள் செய்த தங்களுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய வணக்கம் துளசிதரன் ஐயா...
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
வாழ்த்துக்கள்...
ReplyDeleteFrom Devakottai
Meet to Madurai
இனிய வணக்கம் நண்பர் கில்லர்ஜீ..
Deleteஅபுதாபியில் இருந்து வந்தாச்சா..???
மதுரைக்கு வருகிறீர்களா????
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
மண் வாசம் கமழும் அறிமுகங்கள். சில வலைப்பக்கங்களுக்கு இதுவரை சென்றதில்லை. நிச்சயம் அவற்றை சென்று படிக்கிறேன்.
ReplyDeleteஇனிய வணக்கம் நண்பர் முரளிதரன்..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
பாடல்களும் பதிவர்களும் அருமை..வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய வணக்கம் சகோதரி கீதா..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
முதுகெலும்பான விவசாயம் பற்றிய பதிவுகளை சிறப்பாகத் தொகுத்தளித்தீர்கள் நண்பரே!
ReplyDeleteமிக்க நன்றி!
இனிய வணக்கம் நண்பர் நிஜாமுதீன்..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அழகான பாடல்களுடன் அருமையான விவசாயப் பதிவு.
ReplyDeleteபோய் படிக்க வேண்டும்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகி அண்ணா.
இனிய வணக்கம் தங்கை அருணா செல்வம்..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
விவசாய பூமியை இனவாத ஆக்கிரமிப்பால் மறந்து வெளிநாடு வந்த பின் நினைவு மட்டுமே வாழ்கின்ற நிலையில் வலையில் விவ்சாய அறிமுகம் புதுமை.இனித்தான் அவர்களின் பக்கம் நேரம் ஒதுக்கி போகின்றேன்!
ReplyDeleteஇனிய வணக்கம் சகோதரர் நேசன்...
Deleteபுலம்பெயர்ந்தோர் வாழ்விலென்றும் நினைவில் உறுத்திக்கொண்டே
இருக்கும் விடயமிது.... பசுமைகள்..வயல்வெளிகள்.. இன்னும் பல..
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
Deleteநெஞ்சார்ந்த நன்றிகள்.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய வணக்கம் சகோதரி உமையாள் காயத்ரி..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அருமையான அறிமுகங்கள். பாராட்டுகள்.
ReplyDeleteஒவ்வொரு பதிவருக்கும் ஒரு பாடல் - சிறப்பு.
இனிய வணக்கம் நண்பர் வெங்கட் நாகராஜ்..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
பிள்ளைத்தமிழின் பருவங்களை இடுகைகளின் தலைப்பாக தேர்ந்தெடுத்தமைக்கு முதலில் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பரே.
ReplyDeleteதங்களுக்கே உரிய நடையில் அறிமுகங்கள் அருமை.
இனிய வணக்கம் முனைவரே...
Deleteஉங்கள் மகிழ்ச்சி என் பாக்கியம்...
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா...
ReplyDelete