வணக்கம் கூறி ஆரம்பிப்பது உங்கள் ...
Photo Credit: Google |
இதற்கு முன்னர் இருந்த ஆசிரியர்கள் எல்லாம் கலக்கி சென்றிருக்க, அடிவயிற்றில் ஒரு பீதி வரத்தான் செய்கிறது. அவர்கள் செய்து சென்ற அதே சிறப்பான பணியைத் தொடரவும், மற்றும் உங்களோடு ஒரு வார காலம் உரையாடவும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திகொள்கிறேன். தங்கள் பேராதரவினை அடியேனுக்கும் வழங்குமாறு கேட்டு, எனது சுயதம்பட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் ஆசிரியப் பொறுப்பினை!
ஆரம்பத்தில் கவிதைகள் என்று எழுதி வந்ததெல்லாம் இன்று மீண்டும் வாசிக்கையில், அன்று என்னே ஒரு நகைச்சுவையுணர்வு நமக்கு என்று இன்று தோன்றியது :)) கவிதை கிறுக்கல் என்று சொல்லிக்கொள்வோம் :)
கதைகளும், கட்டுரைகளும், விரல்விட்டு எண்ணக்கூடிய சில இன்றைக்கு வாசிக்கையிலும் அன்றிருந்த அதே புத்துணர்வு மீண்டும் கிட்டியதில் மெத்த மகிழ்ச்சி.
இவற்றிலிருந்து சில சுட்டிகள் உங்கள் பார்வைக்கு ...
நெல்லி மரம் ! - ஒரு 'நச்' திருப்பம் கொண்ட கதைப் போட்டிக்கு எழுதி அனுப்பியது. 'நச்' இன்னும் இருக்கும் என்று நினைக்கிறேன்!
கட்டழகி ... - இதுலயும் ஒரு 'நச்' திருப்பம் வைத்து எழுத எண்ணினேன், இருக்கிறதா என்று தான் தெரியவில்லை!
மெட்ரோ ... - ஜி.யு.போப் அவர்கள் தான் இக்கதைக்குத் தூண்டுகோல்
வீராப்பு - காளைக்கும் மனிதனுக்கும் உள்ள பந்தம்
அடை மழை ! - அம்மாவும் பெண்ணும் ஒரு அரைப்பக்கக் கதையில்
யோகம் பயில் - சமீபகால Status வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகிப்போனது. வரவேற்கவேண்டியது!
பழமொழி 400 - நாம் இன்றைக்கும் பயன்படுத்தும் பல பழமொழிகள் எங்கிருந்து வந்தது என்ற தேடலில் கிடைத்தவற்றைப் பதிந்தது!
தமிழ்த் தாத்தா யார்? - யார் ? அப்படி என்ன அவர் தமிழுக்குச் செய்தார் ? என் சிற்றறிவுக்கு எட்டிய சில துளிகள்!
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை - தன்னை அறிதலின் தேடலில் விளைந்த சிறு துளிகள்!
தயிர்சாதம் (டே!) - பள்ளி கல்லூரி கால மதிய உணவு குறித்து யோசிக்கையில் விளைந்த பதிவு. இது அன்றைய நிலை. நல்ல வேளை, பீட்ஸா பர்கர் எல்லாம் அபோதில்லை :)
பாதயாத்திரைப் பயணம் - கண்டம் விட்டு கண்டம் கடந்த நம்முன்னோர் பயன்படுத்திய போக்குவரத்து மார்க்கம் நடராஜா சர்வீஸ் மட்டுமே. பின்னாளில் கலங்களும், சக்கர வாகனங்களும், ஊர்திகளும், விமானங்களும் என பரிணமித்தோம். இந்த அவசர யுகத்தில் நம்மால் எவ்வளவு தூரம் நடக்க முடியும் என்று செயல்பாட்டில் இறங்கியதில் இருந்து ...
போதுமென நினைக்கிறேன், இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க இந்த பக்கம் வரவேண்டுமல்லவா :)
இறுதியாக,
2008 ல் வலைச்சர ஆசிரியப் பணியின் போது இட்ட முதல் பதிவு
வலையும், வலைச்சரமும், நானும் !
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அன்பான நன்றி!
|
|
தங்களுக்கு அன்பின் நல்வரவு!..
ReplyDeleteவலைச்சரத்தில் தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்..
வலைச்சரத்தில் சிறக்க நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteதங்களின் ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசதங்கை துள்ளும் நடையில் அருமையான வலைச்சரத்தொகுப்பு.. வாழ்த்துகள்.!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் ஆசிரியப் பணிக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துகள் சதங்கா!
ReplyDeleteவரவேற்கிறோம்...
ReplyDeleteவாழ்த்துக்கள்!
நன்றி துரை செல்வராஜூ, KILLERGEE Devakottai, R.Umayal Gayathri, இராஜராஜேஸ்வரி, Thulasidharan V Thillaiakathu, ரூபன், கவிநயா, அ. முஹம்மது நிஜாமுத்தீன் !!!
ReplyDeleteசிறப்பான சுய அறிமுகம்...
ReplyDeleteதொடர்ந்து அசத்துங்க.... வாழ்த்துக்கள்....
சிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்
நன்றி திண்டுக்கல் தனபாலன், Yarlpavanan Kasirajalingam !!!
ReplyDeleteவாழ்த்துகள்.....
ReplyDeleteநன்றி வெங்கட் நாகராஜ்!
ReplyDeleteஅட, இப்ப தான் உங்க பதிவொன்றை எனது இன்றைய இடுகையில் பதிந்துள்ளேன்.
ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சமுத்ரா!!
ReplyDelete