வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள்
2
வலைச்சர ஆசிரியராக
வை. கோபாலகிருஷ்ணன்
ஆறாம் திருநாள்
06.06.2015
25. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்
வையகம் காக்கும் ஸ்ரீ வைத்தியனாதர்-13
செல்வ முத்துக்குமரர்-14
பஞ்சவர்ணக்கிளிப்பூ-15
26. திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
வலைத்தளங்கள்:
சும்மா
டைரிக்கிறுக்கல்கள்
THENU'S RECIPES
கோலங்கள்
CHUMMA!!!
சாதாரணப் பெண் அல்ல
சாதிக்கப்பிறந்தவர்
நம் ’ஹனி மேடம்’ !
இவரைப்பற்றி மேலும் அறிய
சமீபத்தில் இவர் எழுதி வெளியிட்டுள்ள பிரபல நூல்கள்:
கதை, கவிதை, கட்டுரை, அனுபவம்,
ஆன்மிகம், கலை, கட்டடங்கள்
மட்டுமின்றி
பங்குச்சந்தை முதலீடுகள் உள்பட
இவர் எழுதாத தலைப்புகளோ,
பங்கேற்காத நிகழ்ச்சிகளோ,
இவரின் ஆக்கங்கள் இடம் பெறாத
பத்திரிகைகளோ, மின்னூல்களோ,
முகநூல் பொன்ற சமூக வலைத்தளங்களோ ஏதும்
இல்லவே இல்லை என நாம் அடித்துச்சொல்லலாம்.
நான் சமீபத்தில் படித்து வியந்தது இவரின்
கூண்டுக்கிளி
அனைத்திலும் ஆர்வமுள்ள
அதி அற்புதமான
திறமைசாலியாவார் !
’சாட்டர் டே ஜாலி கார்னர்’
என்ற தலைப்பினில்
பல்வேறு நபர்களை பேட்டி எடுத்து இவர்
வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இதோ ஒருசில சாம்பிள் பேட்டிகள்
காணத்தவறாதீர்கள்
கடந்த ஏழு ஆண்டுகளாக இவர் தன் வலைத்தளங்களில்
எழுதிக்குவித்துள்ள பதிவுகளின் மொத்த எண்ணிக்கை
2000த்தை தொட்டுள்ளன. :)
அனைவருடனும் நட்புடன் பழகுவதில்
தேனினும் இனிமையானவர் !
-oOo-
27. திருமதி. மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்
வலைத்தளம்: மிடில் க்ளாஸ் மாதவி
சுண்டைக்காய்
நல்லதோர் வீணை
24.04.2012 அன்று ’நல்லதோர் வீணை’யை வாசித்துக்காட்டிய இவர்
ஏனோ தன் வலைப்பதிவினில் கடந்த மூன்று ஆண்டுகளாக
பதிவேதும் வெளியிடாமலேயே இருந்து வருகிறார்.
குறிப்பிட்ட சிலரின் பதிவுகளில் மட்டும் இவரின்
பின்னூட்டங்களை நாம் இன்றும் காணலாம்.
விரைவில் இவர் புதிய பதிவுகள் தருவார் என நம்புவோமாக !
28. திருமதி. சுஹராஜி [ரேவதி வெங்கட்] அவர்கள்
வலைத்தளம்: கற்றலும் கேட்டலும்
தொப்பை
வைரத் தோடு
சோளிங்கரும் கணுப்பிடியும்
’மைத்ரீம் பஜத’
நான் பதிவிட ஆரம்பித்த முதல் ஒரிரு ஆண்டுகள் வரை
என் பெரும்பாலான பதிவுகள் அனைத்துக்கும் வருகை தந்து
பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும்
அளித்த குறிப்பிட்ட சிலரில் இவரும் ஒருவர்.
ஒருமுறை என் கணினியில் ஏதோ சிக்கல் ஏற்பட்டு
என்னால் பதிவுகள் எதுவுமே வெளியிட முடியாத
சூழ்நிலை ஏற்பட்டபோது
இவர்கள் எனக்குக் காலத்தினால் செய்த உதவி மகத்தானதாகும்.
என்றும் மறக்கவே இயலாததாகும்.
இதில் உள்ள முதல் பின்னூட்டத்தைப் படிக்கவும்
29. திருமதி. ரமா ரவி (ராம்வி) அவர்கள்
சும்மா இருப்பது
ஹாஸ்டல் நினைவுகள்
அலமேலு அம்மா ... பகுதி 1 of 2
|
|
இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்
ReplyDelete-கில்லர்ஜி
@KILLERGEE Devakottai
Delete:) நன்றி :)
இன்றையை 06/06/2015 வலைச் சரம் மகளீர் சிறப்பிதழில்,
ReplyDeleteமகரந்த மணம் வீசிய மங்கையர் அனைவருக்கும்,
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அனைவருக்கும் அன்பின் ஆனந்த வாழ்த்துகள்!
த ம 2
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
@yathavan nambi
Delete:) மிக்க நன்றி :)
இன்றைய வலைசர அறிமுகம் மிக சிறப்பு.
ReplyDeleteநான் நீங்கள் குறிப்பிடும் பதிவுகளுக்கு சென்று ரசிக்கிறேன்.
நன்றி.
மிக நல்ல தேர்ந்த்தேடுப்பு
viji
Delete:) மிக்க நன்றி, விஜி. மிகவும் சந்தோஷம்மா. :)
ஓ1..மகளிர் மலரா!...
ReplyDeleteமிக்க நன்று.
எல்லோருக்கும் இனிய வாழ்த்து.
அதே போல ஆசிரியருக்கும் மகிழ்ந்த வாழ்த்து.
@kovaikkavi
Delete:) மிக்க நன்றி, மேடம் :)
Congratulations !
ReplyDelete@Chitra
Delete:) மிக்க நன்றி, சித்ரா :)
அறிமுகப் படுத்தியவர்கள் அனைவரும் நல்ல வலைத்தளம் வைத்திருக்கின்றனர். அவரகள் சேவைக்கு எனது பாராட்டுகள்.
ReplyDelete@பழனி. கந்தசாமி
Delete:) மிக்க நன்றி, ஐயா :)
இன்றைய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDelete@தனிமரம்
Delete:) மிக்க நன்றி :)
இன்றைய சரத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் நண்பர்களுக்கு பாராட்டுகள்.
ReplyDelete@ஸ்ரீராம்.
Deleteஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
:) மிக்க நன்றி ஸ்ரீராம் :)
இன்றைய அறிமுகங்களுக்கு பாராட்டுகள்.
ReplyDelete@ADHI VENKAT
Delete;) மிக்க நன்றி, மேடம் :)
திருமதி ராஜேஸ்வரி மற்றும் அறிமுகமானவர். மற்றவர்களைப் பற்றி தங்களது பதிவு மூலமாக அறிந்தேன். பதிவுகளைக் கண்டேன். பகிர்வுக்கு நன்றி. நாளை சந்திப்போம்.
ReplyDelete@Dr B Jambulingam
Delete;) மிக்க நன்றி, சார் :)
நான் ஒவ்வொரு முறையும் வியந்து பார்ப்பது தேனம்மை அவர்களைத்தான். எப்படி அவரால் எல்லா சப்ஜெக்டிலும் இவ்வளவு தகவல்களை கொடுக்க முடிகிறது என்று.. அவற்றை எழுதுவதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது? அதற்கான மூலங்களை எப்படி தேட முடிகிறது?
ReplyDeleteவியக்க வைக்கும் ஒரு சாதனை பெண்மணியை இன்றைய அறிமுகத்தில் பார்த்தது மகிழ்ச்சி!
மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
த ம 4
S.P. Senthil Kumar Sat Jun 06, 07:33:00 AM
Deleteவாங்கோ, வணக்கம். தங்களின் தினசரி தொடர் வருகையும், வலைச்சரதிற்காக தாங்கள் அளிக்கும் வாக்குகளும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
//நான் ஒவ்வொரு முறையும் வியந்து பார்ப்பது தேனம்மை அவர்களைத்தான். எப்படி அவரால் எல்லா சப்ஜெக்டிலும் இவ்வளவு தகவல்களை கொடுக்க முடிகிறது என்று.. அவற்றை எழுதுவதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது? அதற்கான மூலங்களை எப்படி தேட முடிகிறது? வியக்க வைக்கும் ஒரு சாதனை பெண்மணியை இன்றைய அறிமுகத்தில் பார்த்தது மகிழ்ச்சி!//
எனக்கும் அவர் ஓர் வியப்பளிக்கும் சாதனையாளர்தான். :) அவரின் இந்த சாதனைகளுக்கான மூல காரணங்களை அவரே இங்கு வந்து ஏதேனும் சொல்கிறார்களா என தங்களைப்போலவே நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
//மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!//
அனைவர் சார்பிலும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
//த ம 4//
அனைத்துக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
அஹா மிக்க நன்றி செந்தில்சார். முன்பு பத்ரிகையில் சுதந்திர எழுத்தாளராகப் பணியாற்றியது ஒரு காரணம். மேலும் என் ஆசிரியை சுசீலாம்மா அவர்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பது நானும் தொடர்ந்து செயல்பட மென்மேலும் ஊக்கமளிக்கிறது.
Deleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துகள்
ReplyDelete@Geetha M
Delete:) நன்றி :)
இன்றைய அறிமுக பதிவர்களில் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் பதிவைத் தவிர மற்றவர்களின் பதிவுகள் எனக்கு புதிது. அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் கதைகளை திரும்பப் படிக்கும் வாய்ப்பு தந்தமைக்கு நன்றி!
@வே.நடனசபாபதி
Delete:) மிக்க நன்றி, சார் :)
மிக்க நன்றி நடன சபாபதி சார் & கோபால்சார் !!!!!!!!
Deleteஅனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்! முக்கியமாய் உற்சாகமே உருவான, சுறுசுறுப்பிற்கு மறு பெயராய் விளங்குகின்ற, தினம் ஒரு அர்த்தமுள்ள பதிவாய் எழுதித்தள்ளும் தேனம்மைக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனோ சாமிநாதன் Sat Jun 06, 08:10:00 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்! முக்கியமாய் உற்சாகமே உருவான, சுறுசுறுப்பிற்கு மறு பெயராய் விளங்குகின்ற, தினம் ஒரு அர்த்தமுள்ள பதிவாய் எழுதித்தள்ளும் தேனம்மைக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!//
தங்களின் அன்பான வருகைக்கும், அனைவரையும் வாழ்த்தியதற்கும், குறிப்பாக நம் அன்பிற்குரிய சாதனை நாயகி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள் கூறியுள்ளதற்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
அஹா ! மிக்க நன்றி மனோ மேடம் :)
Deleteஇன்றைய வலைச்சரம் -
ReplyDeleteமங்கையர் மலர் என சிறப்பாக தொடுக்கப்பட்டிருக்கின்றது..
அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..
@துரை செல்வராஜூ
Delete;) மிக்க நன்றி, சார் :)
அறிமுகமாகிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கு நன்றிகள்.
ReplyDelete@mageswari balachandran
Delete:) மிக்க நன்றி, மேடம் :)
anai varukum vazthukai apurma varen
ReplyDeleteபூந்தளிர் Sat Jun 06, 08:42:00 AM
Delete//anaivarukum vazthukaL. apurma varen. அனைவருக்கும் வாழ்த்துகள். அப்புறமா வரேன்//
:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. அப்புறமா முடிந்தால் வாங்கோ :)
அன்புடன் கோபு
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete@R.Umayal Gayathri
Delete:) மிக்க நன்றி, மேடம் :)
இன்றைய பதிவர்களுள் ராம்வி அவர்கள் தவிர மற்றவர்கள் நானறிந்த மற்றும் தொடரும் பதிவர்களே... அனைவருக்கும் பாராட்டுகள். நான் எப்போதும் வியந்துபார்க்கும் பதிவர் சாதனையரசி தோழி தேனம்மை. அவரது பல்பரிமாண எழுத்தின் தீவிர ரசிகை நான். அவருக்கும் ஏனைய பதிவர்களுக்கும் தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteகீத மஞ்சரி Sat Jun 06, 10:40:00 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//இன்றைய பதிவர்களுள் ராம்வி அவர்கள் தவிர மற்றவர்கள் நானறிந்த மற்றும் தொடரும் பதிவர்களே... அனைவருக்கும் பாராட்டுகள். நான் எப்போதும் வியந்துபார்க்கும் பதிவர் சாதனையரசி தோழி தேனம்மை. அவரது பல்பரிமாண எழுத்தின் தீவிர ரசிகை நான். அவருக்கும் ஏனைய பதிவர்களுக்கும் தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.//
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், மிகவும் இனிமையான உற்சாகமூட்டிடும் வித்யாசமான கருத்துக்களுக்கும், அனைவரையும் பாராட்டி வாழ்த்தி மகிழ்விக்கும் நல்லதொரு தங்கமான குணத்திற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் மேடம்.
பிரியமுள்ள கோபு
நன்றி கீத்ஸ் :) நானும் உங்க எழுத்துக்கு அடிமைதான் . அடிக்கடி வர நேரம் கிடைப்பதில்லை மன்னிச்சுக்குங்கப்பா :)
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் தங்களுக்கும் என் இனியா வாழத்துக்கள் ...!
ReplyDelete@Iniya
Delete:) மிக்க நன்றி, மேடம் :)
தங்கள் வலைச்சர அறிமுகத்துக்கு மிக்க நன்றி. வாழ்த்தியவர்களுக்கும் அனேக நன்றிகள்.
ReplyDeleteசில சிக்கல்களினால் பதிவுகள் எழுதாமல் இருக்கிறேன்; கூடிய விரைவில் தொடரலாம், ஜஸ்ட் எ வார்னிங்!
//குறிப்பிட்ட சிலரின் பதிவுகளில் மட்டும் இவரின் பின்னூட்டங்களை நாம் இன்றும் காணலாம்.// - நான் பின்-தொடர்வர்களின் பதிவுகளில், நான் சொல்ல நினைக்கும் கருத்தை வேறு யாரேனும் முன்னமே சொல்லாமலிருந்தால், பின்னூட்டமிடுகிறேன் - இன்னும் நிறைய பேரை தொடரலாம் என்றால், அவர்கள் வலைப்பூவில் follow widget கண்ணில் தென்படவில்லை!! அவ்வளவே.
middleclassmadhavi Sat Jun 06, 12:08:00 PM
Deleteவாங்கோ, என் அன்பிற்குரிய MCM Madam, வணக்கம்.
//தங்கள் வலைச்சர அறிமுகத்துக்கு மிக்க நன்றி. //
தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
//வாழ்த்தியவர்களுக்கும் அனேக நன்றிகள்.//
அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் நன்றிகள்.
//சில சிக்கல்களினால் பதிவுகள் எழுதாமல் இருக்கிறேன்; கூடிய விரைவில் தொடரலாம்,//
தங்களின் சிக்கல்கள் சட்டென விலகி, மீண்டும் தாங்கள் வலைப்பதிவுகள் எழுதவேண்டி என் பிரார்த்தனைகள்.
// ஜஸ்ட் எ வார்னிங்! //
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹா ! :) தங்களின் எச்சரிக்கை சிரிப்பூட்டியது :) மிக்க மகிழ்ச்சி, மேடம்.
**குறிப்பிட்ட சிலரின் பதிவுகளில் மட்டும் இவரின் பின்னூட்டங்களை நாம் இன்றும் காணலாம்.**
//நான் பின்-தொடர்வர்களின் பதிவுகளில், நான் சொல்ல நினைக்கும் கருத்தை வேறு யாரேனும் முன்னமே சொல்லாமலிருந்தால், பின்னூட்டமிடுகிறேன் - இன்னும் நிறைய பேரை தொடரலாம் என்றால், அவர்கள் வலைப்பூவில் follow widget கண்ணில் தென்படவில்லை!! அவ்வளவே.//
நல்லது. தாங்கள் பின்னூட்டமிடச் செல்லும் அதுபோன்ற சில பதிவுகளை நானும் பார்க்க நேர்வதால், தங்களின் கருத்துக்களை அவ்விடம் நான் பார்க்கும் போது, தங்களை நேரிலேயே சந்தித்ததுபோல, எனக்குள் சற்றே மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
பிரியமுள்ள கோபு
அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்றைக்கு உங்கள் வலைச்சரத்தில் தோன்றும் வலைப்பதிவர்களுக்கு, எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்றைய பெண் வலைப்பதிவர்களில், அதிகம் எழுதியவர், அதிகம் எழுதுபவர் யார் என்றால், சகோதரி தேனம்மை லெஷ்மணன் அவர்களைச் சொல்லலாம். அவரது ”THENU'S RECIPES” என்ற வலைத்தளம் தவிர மற்றைய அவரது வலைத்தளங்கலில் வரும் கட்டுரைகளைப் படித்து இருக்கிறேன்.
அவரைப் பற்றி நீங்கள் சொன்ன அத்தனை பாராட்டுக்களும் அவருக்கு தகும். மிகையன்று.
மிடில் க்ளாஸ் மாதவி, ரேவதி வெங்கட் மற்றும் ரமாரவி ஆகியோரது தளங்கள் எனக்கு அவ்வளவு அறிமுகம் இல்லை. உங்கள் பதிவுகளின் பின்னூட்டங்களில் கேள்விப்பட்டது மட்டுமே. இனி இவர்களது வலைத் தளங்களையும் சென்று பார்க்கிறேன்.
உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு சுஹராஜி [ரேவதி வெங்கட்] அவர்கள் தானாகவே வலிய வந்து அந்த பிரச்சினையைத் தீர்த்து வைத்தார் என்பதனை அறிந்தபோது, வலையுலகின் வலிமையும் பெருமையும் புரிந்தது.
த.ம.6
தி.தமிழ் இளங்கோ Sat Jun 06, 01:17:00 PM
Deleteவாங்கோ என் அன்புக்குரிய திரு. தி. தமிழ் இளங்கோ சார், வணக்கம்.
//அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்றைக்கு உங்கள் வலைச்சரத்தில் தோன்றும் வலைப்பதிவர்களுக்கு, எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்! //
அனைவர் சார்பிலும் தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.
//இன்றைய பெண் வலைப்பதிவர்களில், அதிகம் எழுதியவர், அதிகம் எழுதுபவர் யார் என்றால், சகோதரி தேனம்மை லெஷ்மணன் அவர்களைச் சொல்லலாம். அவரது ”THENU'S RECIPES” என்ற வலைத்தளம் தவிர மற்றைய அவரது வலைத்தளங்கலில் வரும் கட்டுரைகளைப் படித்து இருக்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி.
//அவரைப் பற்றி நீங்கள் சொன்ன அத்தனை பாராட்டுக்களும் அவருக்கு தகும். மிகையன்று. //
:) உண்மையிலேயே மிகச்சிறந்த சாதனையாளர் அல்லவா! :)
//மிடில் க்ளாஸ் மாதவி, ரேவதி வெங்கட் மற்றும் ரமாரவி ஆகியோரது தளங்கள் எனக்கு அவ்வளவு அறிமுகம் இல்லை. உங்கள் பதிவுகளின் பின்னூட்டங்களில் கேள்விப்பட்டது மட்டுமே. இனி இவர்களது வலைத் தளங்களையும் சென்று பார்க்கிறேன்.//
அவர்களெல்லாம் இப்போது அதிகமாக பதிவுகள் தராமல் சற்றே ஒதுங்கியுள்ளார்கள். நானும்கூட அவர்கள் பாதையையே பின்பற்றி விரைவில் ஒதிங்கிக்கொள்ளவே நினைக்கிறேன்.
//உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு சுஹராஜி [ரேவதி வெங்கட்] அவர்கள் தானாகவே வலிய வந்து அந்த பிரச்சினையைத் தீர்த்து வைத்தார் என்பதனை அறிந்தபோது, வலையுலகின் வலிமையும் பெருமையும் புரிந்தது.//
ஆம். அன்று அவர் எனக்குச் செய்த உதவி மிகவும் பாராட்டத் தக்கது. வலையுலக அன்பின் ஆழமும், நட்பின் வலிமையும் பெருமையும் அன்று என்னால் மிக நன்கு உணரப்பட்டது.
//த.ம.6//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வலைச்சரத்திற்காக தாங்கள் அளித்துள்ள வாக்குக்கும் என் நன்றிகள்.
என்றும் அன்புடன் தங்கள்
VGK
தங்களின் அன்பான வாழ்த்துக்கும் தெரியப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி இளங்கோ சார் :)
Deleteசிறப்பான அறிமுகங்கள்
ReplyDelete@Muruganandan M.K.
Delete:) மிக்க நன்றி, சார் :)
ஐயா ,
ReplyDeleteஇந்தவாரப் பதிவுகள், பின்னூட்டங்கள், உங்கள் பதில்கள், எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நெட் இணைப்பு கிடைக்காததால், இந்தவாரம் ஒவ்வொரு நாளும் வலைச்சரம் வரஇயலவில்லை.
உங்கள் பதிவுகளுக்குப் பின்னால் உங்கள் அயராத உழைப்பு தெரிகின்றது. பின்னூட்டங்களைப் பார்க்கையில் மற்றவர்கள் உங்கள் மேல் வைத்துள்ள அன்பு தெரிகின்றது. அவர்களின் பின்னூட்டங்களுக்கு நீங்கள் அளிக்கின்ற பதில்கள் உங்கள் வெற்றியின் ரகசியத்தை வெளியிடுகின்றன.
உங்கள் வீட்டிற்கு வந்துவிட்டு, என்னுடைய சம்பந்தி வீட்டிற்கு நான் திரும்பியதும், 'நான் எங்கே சென்று வந்தேன்' என்று கேட்டார். நான் உங்கள் பெயரைக் கூறியதும், அவர், ' ஓ அவரா? புத்தகம் எல்லாம் எழுதுவாரே! நான் பார்த்திருக்கின்றேன். இங்கே எதிர்வீட்டில் கூட (பெரியார் நகர், ஸ்ரீரங்கம் ) ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தாரே!' என்று கூறினார். உங்கள் பெயரும் புகழும் எவ்வளவுதூரம் பரவி இருக்கின்றது என்ற விஷயம் என்னை அதிசயிக்க வைத்தது!
மீண்டும் வாழ்த்துகள்!
kg gouthaman Sat Jun 06, 04:49:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//ஐயா, இந்தவாரப் பதிவுகள், பின்னூட்டங்கள், உங்கள் பதில்கள், எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். //
அடாடா, மூச்சு முட்டித் தவித்திருப்பீர்களே ! :)
//நெட் இணைப்பு கிடைக்காததால், இந்தவாரம் ஒவ்வொரு நாளும் வலைச்சரம் வரஇயலவில்லை. //
தங்களைக் காணுமே என நானும் என் மனதில் நினைத்துக் கொண்டேன்.
‘உன்னைக் ....... காணாத கண்ணும் கண்ணல்ல .......’ என என் வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. :)
//உங்கள் பதிவுகளுக்குப் பின்னால் உங்கள் அயராத உழைப்பு தெரிகின்றது. பின்னூட்டங்களைப் பார்க்கையில் மற்றவர்கள் உங்கள் மேல் வைத்துள்ள அன்பு தெரிகின்றது. அவர்களின் பின்னூட்டங்களுக்கு நீங்கள் அளிக்கின்ற பதில்கள் உங்கள் வெற்றியின் ரகசியத்தை வெளியிடுகின்றன. //
ஆஹா ..... அழகாக ஆராய்ந்து சொல்லியுள்ளீர்கள்.
என் அயராத உழைப்பு.... பிறரின் அன்பு.... என் வெற்றியின் இரகசியம்.... என ஒரே கல்லில் மூன்று மாங்காய்களைப் பறித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.
//உங்கள் வீட்டிற்கு வந்துவிட்டு, என்னுடைய சம்பந்தி வீட்டிற்கு நான் திரும்பியதும், 'நான் எங்கே சென்று வந்தேன்' என்று கேட்டார். நான் உங்கள் பெயரைக் கூறியதும், அவர், ' ஓ அவரா? புத்தகம் எல்லாம் எழுதுவாரே! நான் பார்த்திருக்கின்றேன். இங்கே எதிர்வீட்டில் கூட (பெரியார் நகர், ஸ்ரீரங்கம் ) ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தாரே!' என்று கூறினார்.//
அப்படியா? மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.
’யாரோ அவர் யாரோ ? ஊர் பேர்தான் தெரியாதோ?’
தாங்களாவது இங்கு தெரிவிக்கக்கூடாதோ !
//உங்கள் பெயரும் புகழும் எவ்வளவுதூரம் பரவி இருக்கின்றது என்ற விஷயம் என்னை அதிசயிக்க வைத்தது! //
:) மிக்க மகிழ்ச்சி. இனிய இந்தத் தகவலுக்கு என் சந்தோஷங்கள். :)
//மீண்டும் வாழ்த்துகள்! //
தங்களின் அன்பான வருகைக்கும் ஆத்மார்த்தமான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
என்றும் அன்புடன் கோபு
பிரமாதம் பிரமாதம் கோபால் சாரைப்பற்றிய வாழ்த்து உண்மையும் அருமையும் கூட :)
Deleteஇன்றைய அறிமுகங்களில் சாதனை அரசி தேனம்மையை நன்கறிவேன். அவருடைய அன்னபட்சி வாசித்து என் தளத்தில் ஒரு பதிவு போட்டேன். என் எழுத்துக்கு மதிப்பு கொடுத்து அதனைத் தம் முகநூலிலும் பதிந்தார். அற்புதமான கவிஞர்! அவருடைய மற்ற புத்தகங்களையும் வாங்க நினைத்திருக்கிறேன். பெண் பதிவர்களில் மிகப் பிரபலமானவராயிருந்தும் நேரமொதுக்கி என் தளத்துக்கு வந்து பின்னூட்டமிடுபவர். அவருடைய கூண்டுக்கிளி கதையை இன்று வாசித்துப் பின்னூட்டமிட்டு விட்டேன். நீங்கள் அறிமுகப்படுத்திய மற்ற இருவர் பற்றியும் இன்று தான் தெரிந்து கொண்டேன். உங்கள் வாசகர் பட்டாளத்தின் மூலம் வலைச்சரத்தில் மறுபடியும் பழைய கலகலப்பைக் கொண்டு வந்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்! தொடருங்கள்!
ReplyDeleteKalayarassy G Sat Jun 06, 05:20:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//இன்றைய அறிமுகங்களில் சாதனை அரசி தேனம்மையை நன்கறிவேன்.//
அவர்களை அறியாதவர்கள் வலையுலகினில் யாருமே இருக்க முடியாதே ! :) மிக மிகப்பிரபலமானவர்கள் அல்லவா !! :)
//அவருடைய அன்னபட்சி வாசித்து என் தளத்தில் ஒரு பதிவு போட்டேன். என் எழுத்துக்கு மதிப்பு கொடுத்து அதனைத் தம் முகநூலிலும் பதிந்தார். அற்புதமான கவிஞர்! //
இதனைக் கேட்கவே எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
//அவருடைய மற்ற புத்தகங்களையும் வாங்க நினைத்திருக்கிறேன்.//
புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் அல்லவா தாங்கள் ! எனக்கு இதில் வியப்பேதும் இல்லைதான்.
//பெண் பதிவர்களில் மிகப் பிரபலமானவராயிருந்தும் நேரமொதுக்கி என் தளத்துக்கு வந்து பின்னூட்டமிடுபவர்.//
எல்லோரையும் அன்புடன் அரவணைத்துச் செல்வதுதான் அவர்களின் ஸ்பெஷாலிடி என நானும் அடிக்கடி நினைத்து மகிழ்வதுண்டு.
//அவருடைய கூண்டுக்கிளி கதையை இன்று வாசித்துப் பின்னூட்டமிட்டு விட்டேன்.//
நன்றி. அதனை மிகவும் நன்றாகவே எழுதியிருக்கிறார்கள். :)
வலைச்சரப் பதிவுகளுக்கான என் ஆராய்ச்சியில் அது என் கண்களில் அகஸ்மாத்தாகப் பட்டதால், அதனை நானும் படிக்க நேர்ந்தது.
//நீங்கள் அறிமுகப்படுத்திய மற்ற இருவர் பற்றியும் இன்று தான் தெரிந்து கொண்டேன். உங்கள் வாசகர் பட்டாளத்தின் மூலம் வலைச்சரத்தில் மறுபடியும் பழைய கலகலப்பைக் கொண்டு வந்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்! தொடருங்கள்!//
வலைச்சரத்தில் மறுபடியும் பழைய கலகலப்பைக் கொண்டு வந்துள்ளதற்கு மிக முக்கியமான காரணம் தங்களைப்போன்ற பலரும் ஆர்வத்துடன் இங்கு வருகை தந்து கருத்தளிப்பது மட்டுமே என நான் உறுதியாக நம்புகிறேன். இறுதிவரை இதுபோல தினசரி வாங்கோ .... எனக்கு அதுவே போதும்.
நன்றியுடன் கோபு
உண்மைதான் கலை. வலைச்சரம் மிளிர்கிறது. உங்க வாழ்த்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றிப்பா :)
Deleteவந்து விட்டேன். இன்று அறிமுகம் செய்திருக்கும் பதிவர்கள் பதிவுக்கெல்லாம் சென்று படித்து ரசித்து பின்னூட்டமும் போட்டுட்டு வர வேனாமா? கம்மி பதிவர்களை அறிமுகப்படுத்துவதால் அவர்களின் பக்கம் போய் பார்த்து படித்து ரசிக்க முடிகிறது.
ReplyDeleteபூந்தளிர் Sat Jun 06, 06:17:00 PM
Delete//வந்து விட்டேன். //
வாராய் என் தோழி ....... வாராயோ ! :)
வலைச்சரம் தொடுக்க வாராயோ !! :))
//இன்று அறிமுகம் செய்திருக்கும் பதிவர்கள் பதிவுக்கெல்லாம் சென்று படித்து ரசித்து பின்னூட்டமும் போட்டுட்டு வர வேண்டாமா?//
சமத்து குட்டி ....... எனக்குத்தெரிந்து நீங்க ஒருத்தர் தான் ! :)
//கம்மி பதிவர்களை அறிமுகப்படுத்துவதால் அவர்களின் பக்கம் போய் பார்த்து படித்து ரசிக்க முடிகிறது.//
அதனால் மட்டுமே, குறிப்பாக என் அன்புக்குரிய பூந்தளிருக்காக மட்டுமே, தினமும் குறைந்த எண்ணிக்கையிலான பதிவர்களை அடையாளம் காட்டி சிறப்பித்து வருகிறேன்.
மிக்க நன்றிம்மா. மிகவும் சந்தோஷம்மா.
பிரியமுள்ள கோபு
நன்றி தளிர் :) ஆம் தினம் 4 பதிவர்கள் என்றால் படித்துவிடலாம். :) நான் ஜூலை வந்ததும் கோபால் சாரின் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டமிடவேண்டும். அவ்வளவு பெண்டிங்க் ஆயிடுச்சு :)
Deleteஎன் பதிவுகளின் அறிமுகத்திற்கு மிக்க நன்றி வை.கோ சார்.
ReplyDeleteஅறிமுககப்படுத்தப்பட்டுள்ள மற்ற பதிவாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
RAMA RAVI (RAMVI) Sat Jun 06, 09:07:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//என் பதிவுகளின் அறிமுகத்திற்கு மிக்க நன்றி வை.கோ சார்.//
தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
//அறிமுககப்படுத்தப்பட்டுள்ள மற்ற பதிவாளர்களுக்கு வாழ்த்துக்கள்.//
அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
தினமும் வாங்கோ, ப்ளீஸ்.
:) மிக்க நன்றி :)
அன்புடன் VGK
இன்றும் சுவையான பதிவுகள்...
ReplyDeleteசில பதிவுகள் சென்று பார்த்துப் படித்து வந்தேன்.
அ. முஹம்மது நிஜாமுத்தீன் Sat Jun 06, 10:16:00 PM
ReplyDeleteவாங்கோ நண்பரே, வணக்கம்.
//இன்றும் சுவையான பதிவுகள்...//
மிக்க மகிழ்ச்சி. :) ஒவ்வொருநாளும் சுவை கூடலாம் .... தங்களின் நல்வரவினால் மட்டுமே.
//சில பதிவுகள் சென்று பார்த்துப் படித்து வந்தேன்.//
மிக்க நன்றி, நண்பரே. தினமும் வருகை தாருங்கள்.
அன்புடன் VGK
This comment has been removed by the author.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் எல்லாம் பதிவுலகின்
ReplyDeleteசாதனை அரசிகளே.பொருத்தமான பட்டம் கொடுத்து
அருமையாக அறிமுகம் செய்தமைக்கும்
அறிமுகங்கள் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
@Ramani S
Delete:) மிக்க நன்றி, சார் :)
அனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன்
Delete:) மிக்க நன்றி Mr. DD Sir :)
6ம் நாள் அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்றைய அறிமுகத்தில் பளீர் சிரிப்புக்காரி தேனம்மையை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். ஏதோ ரொம்ப நாள் பழகியவரை சந்தித்தது போல் இருந்தது. பேருக்கேற்றபடி இனிமையானவர். என் மனம் கவர்ந்தவர். தேனின் சிரிப்பு போல் அவரது எழுத்துக்கள் எல்லாமே அருமை. அவரது வலைத் தளத்தில் இருந்து தெரிந்து தான் நான் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசும், கடிதம் எழுதும் போட்டியில் சிறப்புப் பரிசும் பெற்றேன்.
அருமையான அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் கோபு அண்ணா
Jayanthi Jaya Sun Jun 07, 07:01:00 PM
Deleteவாங்கோ ஜெயா, வணக்கம்.
//6ம் நாள் அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
அனைவர் சார்பிலும் என் நன்றிகள், ஜெயா.
//இன்றைய அறிமுகத்தில் பளீர் சிரிப்புக்காரி தேனம்மையை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். //
அப்படியா, ஹைய்யா. எனக்குத்தான் அந்த சான்ஸ் மிஸ்ஸாகி விட்டது. 15.05.2011 அன்று சென்னை எக்மோர் கன்னிமாரா வாசக சாலையில் நடந்ததோர் எனக்கான பரிசளிப்பு விழாவினில் நாங்கள் சந்தித்திருக்க வேண்டும். ஏதோ தவிர்க்க இயலாத காரணங்களால் அவர் அந்த விழாவுக்கு கடைசி நிமிடத்தில் வர முடியாமல் போய்விட்டது :( அதைப்பற்றிய விபரங்கள் இதோ இந்த என் பதிவினில் http://gopu1949.blogspot.in/2015/02/2.html நான் நம் ஹனி மேடத்துக்கு அவரின் பின்னூட்டத்திற்குக் கொடுத்துள்ள பதிலில்கூட தெரிவித்துள்ளேன்.
//ஏதோ ரொம்ப நாள் பழகியவரை சந்தித்தது போல் இருந்தது.//
அவரைச் சந்தித்துள்ள தங்களை நான் நேரில் சந்தித்தபோதும் அதே அதே ஃபீலிங்க்ஸ் தான் ..... ஏதோ ரொம்ப நாள் பழகியவரை சந்தித்தது போல் இருந்தது ...... எனக்கும்கூட. :)
//பேருக்கேற்றபடி இனிமையானவர். என் மனம் கவர்ந்தவர். தேனின் சிரிப்பு போல் அவரது எழுத்துக்கள் எல்லாமே அருமை.//
//பளீர் சிரிப்புக்காரி//
மிகவும் பொருத்தமான பெயர். சிரித்தேன். ரஸித்தேன்.
//அவரது வலைத் தளத்தில் இருந்து தெரிந்து தான் நான் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசும், கடிதம் எழுதும் போட்டியில் சிறப்புப் பரிசும் பெற்றேன்.//
அப்படியா, மிகவும் சந்தோஷம் ஜெயா. மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
//அருமையான அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் கோபு அண்ணா//
தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள், ஜெயா.
பிரியமுள்ள கோபு அண்ணா
அஹா ஜெயந்தி அன்பால் அசர அடிக்கிறீர்கள் !!! :)
Deleteவாத்யாரே! வணக்கம்! வலிமையான மகளீரணிதான்! ஒருதடவை நாக்(கு) அவுட் ஆனது ஞாபகம் வருதே!! இதெல்லாம் உண்மை வலைத்தளம்! என்னுடைய வலையை யாராவது புடிச்சுத் த(ள்)ள(ணு)ம்! புதுச்சேரி அல்லவா? நான் சொல்லுறது 'புல்'லாப் புரியுதா?! விஜிகே வாத்தியார் புண்ணியத்துல என்னோட பரிசு பெற்ற விமர்சனங்களும் இன்னிக்கு அறிமுகம் ஆகியிருக்கு! நன்றி வாத்யாரே! 2000 இடுகைகள் அதுல ஒரு முட்டைய கட் பண்ணி ஆம்லெட் போட்ட மிச்சம் 200 கூட இன்னும் நான் தொடலயே! வல்லமை வாய்ந்த சகோதரி தேனம்மை அவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்! என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்!!!
ReplyDelete@RAVIJI RAVI
Deleteவாங்கோ வாத்யாரே, வணக்கம்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வேடிக்கையான நகைச்சுவைக்கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
ஒருநாள் விட்டு ஒருநாள் தான் இங்கு வருவீங்க போலிருக்கு :)
எப்படியோ, அப்படியாவது ஒரு கொள்கையுடன் வாங்கோ, வாத்யாரே ! :)))))
அன்புடன் VGK
நன்றி ராவ்ஜி ரவி :)
Deleteஇன்றைய அறிமுகங்கள் மூவரில் சகோதரி தேனம்மை மட்டுமெ நன்கு அறிமுகம். அவரது படைப்புகளை நாங்கள் வியந்து வாசிப்பதுண்டு. ஆல் ரவுண்டர்! மிக மிக அன்பானவர். உற்சாகமானவர். வெரி பாசிட்டிவானவர்.
ReplyDeleteமற்ற இருவரையும் இதுவரை அறிந்ததில்லை. தங்களின் மூலம் அறிந்தமைக்கு மிக்க நன்றி சார்!
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
@Thulasidharan V Thillaiakathu
Delete:) மிக்க நன்றி, சார் :)
உங்கள் & கீதாவின் அன்பிற்கும் தொடர்ந்த ஊக்கமளிப்புக்கும் நன்றி துளசி சகோ :)
Deleteசூப்பர். நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete@Asiya Omar
Delete:) மிக்க நன்றி, மேடம் :)
பழம் பெருமை வாய்ந்த பதிவர்களை இன்று அறிமுகம் செய்து அவர்களை புதுப்பயணம் செய்ய தூண்டி உள்ளீர்கள்! தொடர்ந்து இவர்கள் பதிவுகள் எழுதவேண்டும் என்பதே என் விருப்பம் மட்டும் அல்ல அனைவரின் விருப்பமும்! நேரம் கிடைக்கையில் இணைப்புக்களுக்குச் சென்று பார்க்கிறேன்! படித்து கருத்திடுகின்றேன்! நன்றி!
ReplyDelete@‘தளிர்’ சுரேஷ்
Delete:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
கோபால் சார் விரிவா பின்னூட்டம் இட முடியவில்லை. நேரமின்மை மன்னியுங்கள். பிரமிப்பில் வாயடைத்துப் போயிருக்கிறேன். !!!!!!
ReplyDeleteதொடர் பயணங்கள். அதனால் ஒரு மாசம் வலைத்தளத்துக்கு லீவ். நடுவுல இத்தனை நாள் விட்டுப் போச்சே நம்மள மறந்துருவாங்களோன்னு இன்னிக்கு ஏதாச்சும் போடலாம்னு வந்தா என் வலைத்தளத்தில் ஏகப்பட்ட ட்ராஃபிக் . என்னடான்னு பார்த்தா எல்லாம் வலைச்சரத்திலேருந்து. ஒரே பின்னூட்ட மழையும் கூட.
உங்க பேரன்புக்கு நன்றி சார்.
ஒன்று கூட விட்டுப் போயிடக் கூடாதுன்னு பார்த்துப் பார்த்து இணைச்சிருக்கீங்க. உங்களுக்கு ப்லாக் பேரரசர்னு கூட பட்டம் கொடுக்கலாம். நான் எல்லாம் அவசரமா படிச்சிட்டு ஓடுவேன். அதுல பாதிலதான் பின்னூட்டம் போடுவேன்.
உங்களைப் போல நல்லவங்க இருப்பதால்தான் நான் தொடர்ந்து எழுதுகிறேன் என்று தோணுது. அது உண்மைதான். உங்கள் மோதிரக் கையால் இன்று இங்கு குட்டுப்பட்டமைக்கு நன்றி சார்.:)
@Thenammai Lakshmanan
Deleteவாங்கோ .... வணக்கம்.
தங்களின் அன்பான வருகைக்கும், மிக விரிவான அவசரக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
என்றும் அன்புடன்
VGK
அறிமுகப் படுத்தப்பட்ட சக பதிவர்களுக்கு வாழ்த்துகள். வாழ்த்திய அன்பு நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்பெருமை கிட்டச் செய்த மதிப்பிற்குரிய கோபால் சார் அவர்களுக்கு அன்பு நமஸ்காரங்கள். :)
ReplyDeleteThenammai Lakshmanan Wed Jun 10, 08:17:00 PM
Delete//அறிமுகப் படுத்தப்பட்ட சக பதிவர்களுக்கு வாழ்த்துகள். வாழ்த்திய அன்பு நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்பெருமை கிட்டச் செய்த மதிப்பிற்குரிய கோபால் சார் அவர்களுக்கு அன்பு நமஸ்காரங்கள். :)//
தங்களின் வாழ்த்துகள் + நன்றிகளுக்கு அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.
என்றும் தாங்கள் செளக்யமாக, க்ஷேமமாக, சந்தோஷமாக இருக்க என் மனம் நிறைந்த நல்லாசிகள் ! :)
அன்புடன் VGK
உங்கள் அன்புக்கும் அறிமுகத்துக்கும் மிக்க நன்றிங்க, கோபு மாமா. உங்கள் மாறா அன்பு கண்டு நெகிழ்ந்தேன்.
ReplyDeleteஎன்றும் அன்புடன் சித்ரா