வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 3-ம் நாள்
➦➠ by:
3-ம் நாள்,
gmb writes
வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 3-ம் நாள்
-----------------------------------------------------------
மூன்றாம் நாள்
இன்றும் சில பதிவர்களை வகைப் படுத்தி அறிமுகப்படுத்துகிறேன்
முதலில் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டு வலைப்பூவில்
தமிழில் எழுதிக் கொண்டு வரும் துளசிதரன் மற்றும் கீதா அவர்கள். இருவரும் கல்லூரி
நண்பர்களாம் ஒருவர் சென்னையிலும் மற்றொருவர் பாலக் காட்டிலும் வசிக்கின்றனர்.
இருவருக்கும் ஒரே வலைத் தளம் துளசிதரன் தில்லையகத்து என்னும் பெயரில் இருவருக்கும்
நல்ல கோ ஆர்டினேஷன் ஓரோர் சமயம் இது யாருடைய கருத்து என்னும் ஐயம்
எழுவதுண்டு,.மின் அஞ்சலானாலும் ஒருவரை ஒருவர் உடனுக்குடன் தொடர்பு கொண்டு
கருத்துப் பரிமாறி எழுத்துக்கள் வந்துவிடும். இவர்களுக்கு எழுதுவது மட்டும் போதாது
என்று குறும் படமும் தயாரிக்கிறார்கள். பதிவுலகில் எனக்குப் பின் வந்தாலும் என்னைவிட
அதிகம் அறியப் பட்டவர்கள் என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றைச்
சிறிதும் வெளிக்காட்டாமல் அனைவரையும் ஊக்குவித்துக் கருத்திடுவார்கள் இதற்கு பல ஆதங்கப் பதிவுகள் எழுதி இருந்தாலும்
எல்லோருக்கும் கருத்து வேறுபாடு இருக்காத ஒருபதிவு.
.தமிழ் தொலைக்காட்சி பற்றியது
தமிழ் தமிழ் அதிலும் பண்டையத் தமிழையே அனுபவித்து ஒருவர்
பதிவிடுவதென்றால் அவரது திறமையிலும் எழுத்திலும் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை
காட்டுவதாகும் ஊமைக் கனவுகள் என்னும் தளம் படித்தால் தமிழன் தலை நிமிர்ந்து
நிற்கலாம் கவிதை எழுதக் கற்கலாம் பண்டைய இலக்கியங்களில் மூழ்கி முத்தெடுக்க
உதவுவார் மரபுக் கவியின் இலக்கணங்களையும் கற்பிப்பார் ஜோசப் விஜு இவரது பெயரை
அறியவே எனக்கு நாளாயிற்று. , நான்
நீதிகேட்கிறேன் என்னும் ஒரு பதிவை எழுதி இருந்தேன்.அதற்கு பின்னூட்டமாக இக்குரல்
பழங்காலத்திலேயே ஒலித்திருக்கிறது என்று எழுதி இருந்தார்.அதுவே ஒருவேளை அவரை
இப்பதிவை வெளியிடச் செய்ததோ என்னவோ தெரியவில்லை உலகாயுதம்-கடவுளைக்கொன்றவனின் குரல் படித்துப்
பாருங்கள் ரசிப்பீர்கள்.
வலையுலகில் நான் சந்தித்த முதல் பதிவர். அவரை என்
வீட்டுக்கும் அழைத்து வந்திருக்கிறேன். செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பவராக
எனக்குத் தோன்றினார். இளம் பருவத்தினரை விழிப்புணர்வோடு இருக்கக்
களப்பணிகளுக்கெல்லாம் கூட்டிச் செல்வார். அண்மையில் மந்திரியிடம் பாராட்டு
வாங்கியவர் கதை எழுதுவார் கவிதையும் எழுதுவார். ஆனால் சில நேரங்களில் இந்த
பெங்களூர் தந்தையையும் மறந்து விடுவார்
போலும்....! இவர் எழுதிய ஒரு கவிதை. படித்துப்பாருங்கள்மதுரை சரவணன் கை வண்ணத்தை. கடவுள் காஞ்சனா வாகிவிடுகிறார்
அடுத்ததாக செழுங்காரிகை என்னும் தளத்தின் உரிமையாளர். ஒரு
விதத்தில் என் ஆசான் எனக்கு மரபு வழிக்கவிதை எழுத விருப்பம் இருந்தது. ஆனால்
விதிமுறைகள் தெரியாதே. கணினியில் மேய்ந்தபோது இவரது சில பதிவுகள் தென்பட்டன.
அவரைத் தொடர்பு கொண்டு நான் அறிந்தது எழுதுவதைச்சரிபார்க்கக் கேட்டுக் கொண்டேன்
எனக்கு மரபுக் கவிதை வசம் நாட்டம் செல்லவில்லை. முயற்சியை நிறுத்திவிட்டேன்
இவருக்கும் திருமணம் நிகழ்ந்தது அதன் பின் வலைப் பதிவில் தென்படுவதே இல்லை.
இருந்தாலும் என் ஆசானையும் அறிமுகப் படுத்துகிறேன் பெண்கள் பற்றி அவர் எழுதிய ஒரு
கவிதை நிச்சயம் ரசிப்பீர்கள் ரஜனிப்ரதாப் சிங் கேள்விப்பட்டிருக்க வேண்டுமே ‘” கேட்கலாமா கேர்ல்ஸ் சின்னதாசில டௌட்ஸ்.
இன்றைய அறிமுகங்களுள்
இறுதியாக கரந்தை ஜெயக்குமார். நான் அவரை கரந்தையில் ஒருமுறையும்
மதுரைப்பதிவர்விழாவில் ஒரு முறையும் சந்தித்து இருக்கிறேன் எனக்குப் பயணங்கள்
என்றால் பிடிக்கும் அவருக்கும் பிடிக்கும் என்று தெரிகிறது. பதிவர்களுள் நட்பை
விரும்பும் ஒரு அதிசய மனிதர். பதிவுலகில் அவருக்கு என்று ஒரு பாணி உண்டு பெய்ர்
போன மனிதர்களின் கதைகளை அவர் சொல்லிப் போகும் விதமே அலாதி. இவரைப்பற்றி நான்
கூறுவதை விட நம் பதிவர்கள் அறிவார்கள் இருந்தாலும் அறிமுகத்தில் நான் ஒரு
பதிவையாவது சுட்டிக் காண்பிக்க வேண்டுமே. அதுதான் எனக்கு சிரமம் தருகிறது எதைச்
சொல்ல எதை விட. அவரது தள முகவரி தருகிறேன் எந்தப் பதிவை வேண்டுமானாலும் படிக்கலாம்
அல்லது எல்லாமே நீங்கள் படித்ததாயிருக்கும் இன்று இத்துடன் முடிக்கிறேன் மீண்டும் நாளை சந்திப்போம்.
இவர்களை எந்த முறையில் வகைப்படுத்தி இருக்கிறேன் தெரிகிறதா?
இவர்களை எந்த முறையில் வகைப்படுத்தி இருக்கிறேன் தெரிகிறதா?
|
|
இன்றைய அறிமுகங்களில் சிலர் எனக்கு புதியவர்கள்.....
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
@ வெங்கட்நாகராஜ்
Deleteஇப்போது அடையாளப் படுத்தப் பட்டுள்ளவரை அறிமுகப் படுத்திக் கொள்ள அவர்களது சுட்டிகளில் கொடுக்கப்பட்ட பதிவுகளைப்பார்க்கலாமே. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
இன்றைக்கு தங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட எனது நண்பர்கள் உள்பட அனைவருக்கும் வாழ்த்துகள், ஐயாவிற்க்கு நன்றி.
ReplyDeleteதமிழ் மணம் இணைப்புடன் 1
@ கில்லர்ஜி
Deleteஉங்களுக்கு அனைவரும் நண்பர்கள்தானே. தமிழ்மண இணைப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜி.
பதிவர்களைத் தொகுக்கும் விதமும்
ReplyDeleteஅறிமுகம்செய்து போகும் விதமும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
@ ரமணி
Deleteதேர்ந்த ப்திவரிடமிருந்து வரும் பாராட்டுக்கள் மகிழ்வைத் தருகிறது நன்றி சார்
அய்யா G.M.B அவர்களின் மூன்றாம் நாள் அறிமுகப் பதிவு தேர்ந்தெடுத்த நல்முத்தான பதிவு!
ReplyDeleteஅனைவருக்கும் அன்பு நல் வாழ்த்துகள்
த ம 2
நட்புடன்,
புதுவை வேலு
@ யாதவன் நம்பி
Deleteவலைச்சர ஆசிரியர் பொறுப்பில் என்னை அமர்த்திய உங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா
எதைச் சொல்ல...? எதை விட...? அனைத்து நண்பர்களுக்கும் (ஆசான்களுக்கும்) வாழ்த்துகள்...
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
Deleteவலைச் சித்தரின் வாழ்த்துக்களுக்கு நன்றி டிடி
இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! இவர்களில் திரு ஜோசப் விஜு மற்றும் திரு கரந்தை ஜெயக்குமார் ஆகியோர் எனக்கு பதிவுகள் மூலம் பரிச்சயம் ஆனவர்கள்.
ReplyDelete@ வே.நடனசபாபதி.
Deleteஇன்று நான் அடையாளம் காட்டிய அனைவரும் என் மனம் கவர்ந்தவர்கள் சுவாரசியமாக எழுதுபவர்கள் அவர்களைவாழ்த்தியமைக்கு என் நன்றி ஐயா
வலைச்சர ஆசிரியரே வணக்கம்,
ReplyDeleteதாங்கள் இன்று அறிமுகப்படுத்தியவர்கள், தாங்கள் பகுத்த விதம் இவர்கள் அனைவரும் ஆசிரியப் பெருமக்கள் அப்படிதானே,தில்லையகத்தார் பதிவுகள் சமீபகாலமாக படிக்கிறேன். ஊமைக்கனவுகள் என் கிரீடங்களைத் தகர்த்தவர், கரந்தையார் தான் எனக்கு வலைதளம் அமைத்த ஆசான், மற்ற இரு பதிவர்கள் இனி தான் படிக்கனும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கு நன்றி.
@ மகேஸ்வரி பாலசந்திரன்,
Deleteசரிதான் மேடம் இவர்கள் அனைவரும் ஆசிரியப் பெருந்தகைகள்.இந்தப் பதிவில் இவர்களைப்பற்றி எழுதி இருக்கிறேன் இவர்களில் ரஜ்னி பிரதாப் சிங் இப்போதெல்லாம் பதிவுகளில் காண்பதில்லை தமிழ் ஆர்வலர். இவர் எழுதிய பதிவுகளைப் பாருங்கள் புரியும் வருகைக்கு நன்றி மேம்
இன்றைய பதிவர்கள் அனைவரும் நான் அறிந்தவர்களே! அறிமுகம் செய்யும் முறையும் நன்று! வாழ்த்துகள்!
ReplyDelete@ புலவர் இராமாநுசம்
Deleteஇதனால்தான் அறிமுகம் என்பதற்குப் பதில் அடையாளம் என்னும் சொல் இன்னும் பொருந்தும் என்று தோன்றுகிறதுவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா
நல்ல அறிமுகங்கள். பாராட்டுகள்.
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
Deleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்
This comment has been removed by the author.
ReplyDeleteஅன்புள்ள G.M.B அவர்களுக்கு வணக்கம்! இன்றைய வலைச்சரத்தில், நீஙகள் அறிமுகம் செய்த வலைப்பதிவர்கள் அனைவருமே ஆசிரியர் பணியில் இருப்பவர்கள். வலையுலகில் எனது வாசிப்பில் உள்ளவர்கள்.
ReplyDeletehttp://thillaiakathuchronicles.blogspot.com – வலைப்பதிவு ஆசிரியர்கள் இருவருமே நல்ல ஆசிரியர்கள்; நல்ல நண்பர்கள். நீங்கள் குறிப்பிடுவது போல,
//இவர்களது கட்டுரைகளைப் படித்தவுடன்ஓரோர் சமயம் இது யாருடைய கருத்து என்னும் ஐயம் எழுவதுண்டு //
என்ற கருத்து எனக்குள்ளும் அடிக்கடி எழும். என்னைக் கேட்டால் இருவரும் இரண்டு வலைத்தளங்களில் எழுதினால் நல்லது. காரணம் பல தருணங்களில் பல நண்பர்கள் இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பது தெரியாமல் தம்பதிகளாகவே நினைத்து விடுகின்றனர். ( நான் சொல்வதில் பிழை ஏதும் இருப்பின், வலைத்தள அன்பர்கள் மன்னிக்கவும்)
http://oomaikkanavugal.blogspot.com - ஊமைக்கனவுகள் வலைத்தளத்தின் ஆசிரியர் ஜோசப்விஜு அவர்களை புதுக்கோட்டையில் சந்தித்து இருக்கிறேன். “குட்டுவதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை” – என்ற குறையைப் போக்க வந்த தமிழார்வம் மிக்க ஒரு ஆங்கில ஆசிரியர்.
http://veeluthukal.blogspot.in ஆசிரியர் சரவணன் அவர்களது கல்வியியல் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கட்டுரைகளை ஆர்வமாக படிப்பதுண்டு.
http://sezhunkaarikai.blogspot.in ரஜனிப்ரதாப் சிங் – இவரது பதிவுகளை முன்பு தமிழ்மணத்தில் பார்த்ததுதான். நீங்கள் குறிப்பிட்ட சுட்டியைப் படித்தேன். இவரது வலைத்தளம் மீண்டும் சென்று பார்க்கிறேன்.
http://karanthaijayakumar.blogspot.com ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார். சொன்னால் நம்பமாட்டீர்கள். இவர் அருகிலிருந்தும் (தஞ்சாவூர்), தொலைவில் (பெங்களூரு) இருக்கும் உங்கள் வழியேதான் இவர் எனக்கு அறிமுகம். உங்கள் வலைப்பதிவின் பின்னூட்டம் ஒன்றிற்கு வந்த இவரை கண்டு கொண்டேன். இவரது கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.
நீங்கள் குறிப்பிட்ட வலைப்பதிவர்களின் சுட்டிகள் (செழுங்காரிகை தவிர) அனைத்தும் நான் ஏற்கனவே படித்ததுதான். இன்று அறிமுகமான வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
(எனது கருத்துரை நீண்டுவிட்டது என்று நினைக்கிறேன். மன்னிக்கவும்.)
த.ம.5
@ தி.தமிழ் இளங்கோ
Deleteநீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா..நான் வேண்டுமென்றேதான் பதிவர்களின் வலைத்தள முகவரியைத் தரவில்லை. குறிப்பிட்ட சுட்டிகளைப் பார்க்கும் போது முகவரி தெரிந்து விடும் மேலும் அந்தச் சுட்டிகளில் உள்ள பதிவுகளும் படிக்கப் படும் . நானும் செழுங்காரிகை வலைத்தளத்தில் இப்போதெல்லாம் இடுகைகளைக் காண்பதில்லை. அவருக்குத் திருமணம் என்று அழைப்பு இருந்தது. அதன் பின் இடுகைகள் குறைந்து பின் மறைந்தும்விட்டன. தமிழார்வம் கொண்டவர்நேரில் சந்தித்தது இல்லை குமாரபாளையம் ஊர் என்று நினைவு. மீண்டும் நன்றியுடன்
மன்னிக்கணும் ஐயா. இப்போதான் மூன்று பதிவுகளையும் படித்தேன்.
ReplyDeleteஉங்கள் அறிமுகத்தில் வந்த பதிவர்களுக்கு இனிய வாழ்த்து(க்)கள். ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் அறிமுகமானவர்களே!
@ துளசி கோபால்
Deleteஅறிமுகமில்லாத பதிவர்களின் இடுகைகளைப் பார்த்தீர்களா? வருகைக்கு நன்றி மேம்
மதுரை சரவணன் பெயரைத் தெரியும். பதிவுகள் படித்தது இல்லை. மற்றபடி கரந்தை ஜெயக்குமாரைத் தவிர மற்றவர்கள் புதியவர்களே. அறிமுகத்துக்கு மிக்க நன்றி
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
Deleteமதுரை சரவணன் ஒரு பொறுப்பு மிக்க ஆசிரியர் அவரது இடுகை ஒன்றுக்கு சுட்டி கொடுத்திருக்கிறேன் புதியவர்களைத் தெரிந்து படித்துப்பார்க்க வலைச்சரம் ஒரு வழிகாட்டி என்றே நினைக்கிறேன் புதியவர்களது சுட்டிகளில் காணும் பதிவுகளையும் படித்துப்பாருங்கள் ரசிப்பீர்கள் வருகைக்கு நன்றி மேம்
அன்பின் ஐயா..
ReplyDeleteவண்ண வண்ணப் பூக்களால் தொடுக்கப்பட்ட
மாலையைப் போல இன்றைய தொகுப்பு!..
அழகு.. அருமை..
வாழ்க நலம்..
@ துரை செல்வராஜு
Deleteவருகைக்கும் இன்றைய வலைச்சரத்தொகுப்பினைப் பாராட்டியதற்கும் நன்றி ஐயா
வணக்கம் ஐயா! செழுங்காரிகை தளம் சென்றதில்லை! மற்ற தளங்களை பின் தொடர்ந்து வாசிக்கின்றேன்! இவரின் தளத்திற்கும் இனி செல்லுவேன்! ஆசிரிய வலைப்பதிவர்களை இன்று சிறப்பித்து வலைச்சரத்தில் அவர்களின் சீரிய பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDelete@ தளிர் சுரேஷ்
Deleteஇப்போது என்னவோ செழுங்காரிகைத் தளத்தில் புதிய இடுகைகள் காண்பதில்லை. திருமணமானதிலிருந்து எழுதுவதை நிறுத்தி விட்டர்ர்போலும் . இருந்தால் என்னமாதிரிப் பதிவைப் பாருங்களேன்.வருகைக்கு நன்றி ஐயா. .
தில்லைஅகம் பலமுறை சென்று படித்து ரசித்த தளம். நீங்கள் சொல்வது போல அது யார் கருத்து என்று சில சமயம் புரிபடாது. அவ்வளவு ஒற்றுமையான எண்ணங்கள். :) வாழ்க கீத்ஸ் & துளசி சகோ :)
ReplyDeleteஜோசப் விஜூ தளம் புதிது.
மதுரை சரவணன் நன்கு அறிந்த பதிவர். :)
ரஜனி ப்ரதாப் சிங் கேள்விப்பட்டிருக்கிறேன்.
கரந்தை ஜெயகுமார் பற்றி சொல்லவும் வேண்டுமா. மிக அருமையான அறிமுகங்கள் கொடுப்பார். அதுவும் மிகச் சரளமான மொழியில். அதை எல்லாம் தொகுத்து புத்தகமாக்கம் செய்யலாம் . அற்புதம் ஜெயகுமார்.
அறிமுகங்கமானவர்களுக்கு வாழ்த்துகள். சிறப்பான பகிர்வுக்கு நன்றி பாலா சார் :)
@ தேனம்மை லக்ஷ்மணன்
Deleteபண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி அழகாக எழுதுகிறார் ஊமைக்கனவுகள் ஜோசப் விஜு ரஜனி பிரதாப்பின் இடுகைகள் அண்மையில் வருவதில்லை. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம் பதிவர் ஒற்றுமை ஓங்குக.
அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள் :)
ReplyDelete@ தேனம்மை லக்ஷ்மணன்
Deleteஅறிமுகமானோரை வாழ்த்தியதற்கு நன்றி மேம் .
This comment has been removed by the author.
ReplyDeleteஐயா வணக்கம்.
Deleteவலைச்சரத்தில், தங்களால் அறிமுகப் படுத்தப் பட்டேன் என்பதில் மிகவும் மகிழ்கிறேன்.
கல்லூரிக்காலத்தில், எனதாசிரியர் ஒருவர் என் கட்டுரையொன்றினைப் பாராட்டி வகுப்பறையில் சிலாகித்த போது நான் அடைந்த அதே உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்னுள் மீண்டும் ஒரு முறை!
படிப்பதை விடுத்து, எழுதுவதற்காகச் செலவிடும் நேரத்திற்குக் கிடைத்த பயனுள்ள அங்கீகாரமாக இதனைக் கருதுகிறேன்.
நீங்கள் அளித்த இவ்வூக்கம் பெரிது.
உடன் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவர்க்கும் வாழ்த்துகள்!!
நன்றி
தொடர்கிறேன்.
@ ஊமைக்கனவுகள்,
Deleteஉங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியதைப் பேறாகவே நினைக்கிறேன் வலைச் சரமே நாம் அறியாத வலைப் பதிவர்களை அறிந்து கொள்ள இருக்கும் ஒரு தளம் அங்கீகாரம் யாரும் தருவதன்று, நாமாகப் பெறுவது.
நீங்கள் அறியாத பதிவர்களின் தளங்களுக்குச் செல்ல இது ஒரு வாய்ப்பு. சில பதிவுகள் ஒரு மாதிரிக்காக கொடுக்கப் பட்டதே. தொடர்ந்து வாருங்கள் வருகைக்கு நன்றி
தெரிந்த முகங்கள்.ரஜனிபிரதாப் சிங் முன்பு படித்திருக்கிறேன்.சிறப்பான அறிமுகங்கள்
ReplyDelete@ சென்னை பித்தன்
Deleteரஜனி பிரதாப் நானும் படித்திருக்கிறேன் என்றுதான் இப்போது சொல்ல முடிகிறது. வருகைக்கு நன்றி ஐயா.
நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete@ ஸ்ரீராம்
ReplyDeleteவந்து நண்பர்களை வாழ்த்தியதற்கு நன்றி ஸ்ரீ
இந்த எளியேனையும் நினைவில் கொண்டு
ReplyDeleteஅறிமுகப் படுத்தியமைக்கு மனமார்ந்த
நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன் ஐயா
என்றும் வேண்டும் இந்த அன்பு
நன்றி
தம+1
@ கரந்தை ஜெயக்குமார்,
Deleteவலைச்சரத்தில் ஆசிரியர்களை அடையாளம் காட்டும்போது உங்களை மறக்க இயலாது வருகைக்கு நன்றி ஐயா
செழுங்காரிகை தவிர மற்ற அனைத்துத் தளங்களையும் தொடர்ந்து படித்து வருகிறேன். இன்று அத்தளத்திற்கு உங்களால் சென்றேன். நன்றி. நாளை சந்திப்போம்.
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
Deleteசெழுங்காரிகை தளம் இப்போது மும்முரமாய் செயல் படுவதில்லை. இருந்தாலும் அவர் பதிவுகள் சுவாரசியம் வருகைக்கு நன்றி ஐயா.
வலைச்சர ஆசிரியருக்கு வணக்கம் !
ReplyDeleteஇருக்கும் நேரத்தில் இடைக்கிடை வலைப்பூக்கள் வரும் எனக்கும் இன்றைய அறிமுகத்தில் சில அறியா முகங்கள் எல்லோர் வலைகளையும் பார்க்கிறேன் ..;; ஊமைக்கனவுகள்'' வலைத்தளம் ஓர் அமுத சுரபி அங்கெ தமிழின் தொன்மை தாராளமாய்க் கிடைக்கும் நயம்படத் தந்திருக்கிறார் .
நன்றி வாழ்க தமிழ்
தமிழ்மணம் +1
@ சீராளன்
Deleteவலைச்சர ஆசிரியரான பின் எனக்கும் பல புதிய பதிவர்களின் அறிமுகம் கிடைத்திருக்கிறது வருகைக்கு நன்றி ஐயா. இந்த ஆசிரியரின் தளத்துக்கும் வரலாமே
ஓரிருவரைத் தவிர அனைவரும் என் அன்புக்கும் நட்புக்கும் உரியவர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி! அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...! மேலும் தங்கள் பணிசிறக்கவும் வாழ்த்துக்கள் ..!
ReplyDelete@ இனியா
ReplyDeleteவருகைக்கும் அன்பான வாழ்த்ஹுக்களுக்கும் நன்றி மேடம்
முதலில் எங்கள் முதற்கண் நன்றி சார்! எங்களையும் விசு ஆசான் போன்ற அறிவார்ந்தவர்களுடன் அறிமுகம் செய்தமைக்கு. எதிர்பாராத ஒரு ஆச்சரியம், மகிழ்வு!
ReplyDeleteரஜனிபிரதாப் சிங் புதிய அறிமுகம். அடையாளப்படுத்தப்பட்ட அனைவரும் எங்கள் நண்பர்களே..அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!
நாங்கள் இருவரும் பல சமயங்களில் கருத்து ஒன்றாவதால் தான் சேர்ந்து கருத்திடும் வழக்கம். சில சமயம் துளசி க்கு கீதா வலைத்தளப் பதிவுகளைக் குறித்து அறிவித்து கருதத்து கேட்க முடியாமல் போனால் கீதா என்று கருத்திடுவதும் உண்டு.
சில சமயம் இருவருமே அவரவர் கருத்தை அவரவர் பெயரைக் கொடுத்து இடுவதுண்டு. இனியும் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்கின்றோம். பெரும்பாலும் நாங்கள் உரையாடிவிட்டுத்தான் கருத்திடுவதுண்டு. அதனால் தான் பல சமயங்களில் எங்கள் பின்னூட்டங்கள் தாமதமாகும்....நீங்கள் சொல்லுவது போல் எங்களுக்குள் இருக்கும் இந்த கோஆர்டினேஷன், கருத்து ஒற்றுமையும், புரிதலும் தான் கருத்திட உதவுகின்றது...
மிக்க நன்றி சார்..
துளசிதரன், கீதா
@ துளசிதரன் கீதா, விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. ரஜனி பிரதாப் சிங் இப்போது வலைப்பக்கம் வருவதில்லை. திருமணம் முடிந்தபின் வருவது நின்று விட்டது.
ReplyDelete