வட்டார வழக்கு பதிவுகள்.....
சென்ற இரண்டு நாளாக அலுவலகப் பணி அழுத்தம் காரணமாய் இங்கு பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். நம் தாய்மொழியான தமிழ் இடத்துக்கு இடம் பலவகையான மொழிவழக்கு பிரயேகப்படுத்தபடுகிறது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊர்களுக்கு செல்லும்போது அவர்கள் பேசும் மொழி நடையை வைத்து அவர்களின் சொந்த ஊரை அறியப்படும் பொழுது பிறக்கும் சந்தோஷம் அளப்பறியது அல்லவா?? பேசுவதில் இயல்பாக வரும் வட்டார வழக்கு மொழி எழுதும் பொழுது அவ்வளவு சுலபத்தில் வந்துவிடாது. நானும் பலமுறை முயன்று தோற்று இருக்கிறேன். அந்த வட்டார வழக்கை எழுத்துக்களில் கொண்டு வரும் முயற்சிகளில் சிலருக்கு கைவந்த கலையாக அமைகிறது.
இப்பதிவில் வட்டார வழக்கில் புகுந்து விளையாடும் சில பதிவர்களின் சுவராசிய பதிவுகளை பார்க்கலாம்.
நல்லா இருங்கடே'ன்னு எப்பவுமே சொல்லுற நம்ம அண்ணாச்சியோட தன்னோட படிப்பை பத்தி எழுதுன பதிவு.
திருநெல்வேலி பாணியே அப்பிடியே எழுத்திலே கொண்டு வந்துருப்பார்.
அந்த வட்டார வழக்கிலே எழுதும் மற்றுமொரு பதிவர் ஜியின் தொடர்கதை ஒன்று.
கதாப்பாத்திரங்களின் வசனபிரயோகங்கள் அனைத்தும் நெல்லை பாணி.
கோவை கொங்கு வட்டார வழக்கிலே அசத்துறது'க்கு வேறயார்... நம்ம கொங்கு ராசா'வின் அசத்தல் அழகு.
நம்முரு மதுரை வட்டார வழக்கில் எழுதும் வரவனையின் பதிவு
தருமி ஐயாவின் இப்பதிவு
ஈழத்து தமிழில் சமிபத்தில் நான் படித்த பதிவுகள்
கானாபிரபா'வின் மண்ணெண்ணையில் பார்த்த படங்கள். கடைசி வரியில் கண்கலங்க வைத்து விட்டார்.
சிநேகதியின் கானமும் கதையும் குரல் பதிவு.
சகோதரி தூயா'வின் நானும் என் ஈழமும் தொடர்
சயந்தனின் ஆராய்ச்சி பதிவான காதலுக்கும் கத்திரிக்காய்க்கும் என்ன தொடர்பு.
ஈழத்து தமிழ் பேச்சு வழக்கை மதுரையிலிருந்த அகதிகள் முகாமில் கேட்டப்பொழுது சில வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தமே புரியவில்லை. அவர்களிடமே அதுக்கு என்ன அர்த்தமின்னு கேட்டு நமது சொல்வழக்கு அவர்களுக்கு சரிவர தெரியாதனாலும் ஆங்கிலத்தில் எடுத்து சொல்லி புரிய வைத்தார்கள்.
இன்னமும் பல சுவாரசியமான பதிவுகளை நாளை பார்க்கலாம்.
|
|
தேறும்!
ReplyDeleteவணக்கம் இராம்
ReplyDeleteஎன்ர பதிவையும் வாசிச்சுக் கருத்துச் சொன்னதுக்கு நன்றி. எனக்கு ஒரே புழுகம் உங்கட பதிவைப் பாத்தேண்ணை.
மேலே என் வட்டார மொழியிலேயெ நன்றி சொல்லியிருக்கிறேன் ;-)
//என்ர பதிவையும் வாசிச்சுக் கருத்துச் சொன்னதுக்கு நன்றி. எனக்கு ஒரே புழுகம் உங்கட பதிவைப் பாத்தேண்ணை//
ReplyDeleteகானா பிரபா!
உங்க வட்டார மொழி வழக்கு எனக்கு பிடித்த ஒன்று! அதுக்காகவே அந்த மண்ணெண்ணெயில் பார்த்த படங்கள் பல முறை படித்திருக்கிறேன்.
:)
இராம்,
நன்றி!
வணக்கம் நாமக்கல் சிபி
ReplyDeleteஅந்தப் பதிவு முழுக்க முழுக்க வட்டாரச் சொல்லை உபயோகித்து எழுதப்படவில்லை, முன்னர் சில பதிவுகளை அப்படி எழுதியிருந்தேன். ஈழ நண்பர்கள் எல்லோருடைய கூட்டோடு எமது வட்டார மொழிப் பதிவைக் கொண்டுவர இருக்கின்றோம். மிக்க நன்றிகள்.
அனானி,
ReplyDeleteநன்றி.
வணக்கம் பிரபா'ண்ணே, நீங்க நன்றி சொன்னதுக்கு நானும் நன்றி சொல்லிக்கிறேண்ணே... :)
தள,
நன்றிக்கு நன்றி :)
ராம் அண்ணாச்சி.. என்னோட பதிவுக்கும் தட்டிக் கொடுத்ததுக்கு நன்றி...
ReplyDeleteராமண்ணா கலக்கல் பதிவு. [எங்கு சென்றாலும் தங்கை என்னையும் எதிலும் சேர்த்துக்கொள்ளும் அன்பை பற்றி என்ன சொல்ல]
ReplyDelete