நுட்பம் பேசும் பதிவர்கள்
1. சங்கர் கணேஷ் - ஆங்கிலத்திலும் தமிழிலும் பெரும்பாலும் கணினி, நுட்பம் குறித்து எழுதி சக்கை போடு போடுகிறார். இவர் பள்ளி மாணவர் தான் என்பது ஆச்சர்யப்படுத்தும் செய்தி. பதிவுகள் தவிர தமிழ்க் கணிமை களங்கள் சிலவற்றிலும் இயங்கி வருகிறார்.
2. Techintamil.org -கணினி, மென்பொருள்கள் குறித்து மேலாளர் என்ற பெயரில் எழுதுகிறார். கூடிய சீக்கிரம் அவரே தம் உண்மைப் பெயரை வெளிப்படுத்துவதாய் சொல்லி இருக்கிறார் :)
3. ஆமாச்சு - தமிழ் உபுண்டு குழுமத்தில் தீவிரமாக இயங்குபவர். உபுண்டு, கட்டற்ற மென்பொருள்கள் குறித்து எழுதத் தொடங்கி இருக்கிறார்.
4. மயூரன் - லினக்ஸ் / உபுண்டு பயன்படுத்துபவர்கள் அடிக்கடி எட்டிப் பார்க்கும் இவரது குறிப்பேடு இங்கே.
5. பகீ - யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதும் அறிவிக்கப்படாத கூகுள் முகவர் :) (நெதர்லாந்து முகவர் யாமே :)) கணினி, இணையம், மென்பொருள், புதிய gadgetகள் பற்றி குறிப்புகள் தந்து தொடர்ந்து எழுதி வருகிறார்.
6. தமிழ்பித்தன் - இணையத்தில் கிடைக்கும் மென்பொருள்கள், சேவைத் தளங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.
7. தமிழூற்று தந்த மாஹிர் தரும் நிரலாக்கம், வலையுலகம் தொடர்பான நுட்பக்குறிப்புகள்.
8. தமிழ் வலைப்பதிவுலகில் நுட்பம் என்றாலே பெரும்பாலும் கணினி, இணையம், நிரலாக்கம் சுற்றி வரும் நிலையில் electronics குறித்து தொடர்ந்த எழுத விழையும் கீர்த்தனாவின் முதல் இடுகை இங்கு.
9. தமிழ்மண நட்சத்திர வாரத்தில், நிகழ்நேர இயக்குதளம் குறித்து சத்தியா எழுதிய எழுதி இருந்தார். பதினறும எண் முறை குறித்து முன்னரே எழுதத் தொடங்கி உள்ளார். அவருடைய துறை குறித்துத் தொடர்ந்து எழுதுவார் என்று எதிர்ப்பார்க்கலாம்.
10. கணனி உலகம் - கணினி குறித்து மயூரேசன் தரும் குறிப்புகள்.
11. இலங்கையில் இருந்து எழுதும் உமாபதி, அவ்வப்போத்து கணினி, லினக்ஸ் குறித்த குறிப்புகள் தந்து வருகிறார். தமிழ் விண்டோஸ் களங்களில் நன்கு அறியப்பட்ட ஆர்வலர்.
12. நிரலாக்கம் குறித்து க்ருபாஷங்கர் எழுதும் புள்ளிவலை.
13. லினக்ஸ் குறித்து குமார் எழுதும் பதிவு.
நுட்பம் குறித்து அடிக்கடி எழுதும் பதிவர்களின் பெயர் ஏதும் விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
--
முந்தைய இடுகைகளில் குறைவான தொடுப்புகளே தரப்பட்டிருந்தது என்ற குறையை நானும் உணர்ந்தேன். இந்த இடுகை கொஞ்சம் பரவாயில்லைன்னு நினைக்கிறேன். இத்துடன் என் வலைச்சர வாரத்தை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். வாய்ப்பு அளித்த வலைச்சர நிர்வாகிகளுக்கு நன்றி.
அன்புடன்,
ரவி
|
|
loaded வாரம். நன்றி!
ReplyDelete---முந்தைய இடுகைகளில் குறைவான தொடுப்புகளே தரப்பட்டிருந்தது---
ஓவர்டோஸ் ஆகாமல் கொடுத்ததற்கும் வாழ்த்துகள் :))
நன்றி பாலா
ReplyDeleteHey,
ReplyDeleteநன்றி ரவிசங்கர். :)
http://electricalintamil.blogspot.com/
ReplyDeleteBasic Electrical in மின்னியல் தமிழில்...!