சிநேகிதச் சரம்....
ரவிசங்கர் தினம் ஒரு பதிவு என்ற கணக்கில் இட்டு ஒரே வாரத்தில் ஆறேழு இடுகைகள் பதிந்து கலகலப்பாகி விட்டார். தற்போது அதிகம் எழுதாத பதிவர்கள், திரட்டிகளில் இல்லாத காரணத்தால் நாம் தவற விடும் பதிவர்கள், ஒரே விதமான பேசுபொருளுடன் எழுதும் பதிவர்கள் என 'பதிவர் எத்தனை பதிவரடி[டா;)]!' என்று வியக்க வைத்துவிட்டார். எனினும், பிற தளங்களில் நுட்ப மேம்பாடு, பதிவுலகம் குறித்த ஆலோசனைகள் அதிகம் பேசும் அவரது இடுகைகள் கணினி நுட்பங்கள் குறித்த இன்னும் பல்வேறு திசைகளிலிலும் நிறைந்த விவரங்களைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தோம். கடைசி நாளில் நுட்பமும் பேசி எங்கள் எதிர்பார்ப்பையும் ஈடுகட்டி விட்டார்.
எங்கள் அழைப்புக்காக, நேரம் ஒதுக்கிப் பதிவிட்டு வாரம் முழுமைக்கும் வலைச்சரத்தை சுறுசுறுப்பாக வைத்ததற்காக எங்களின் சிறப்பு நன்றிகள்...
அடுத்ததாக இந்த வாரம், தமது ஒலிப்பதிவுகள் மூலமும், வித்தியாசமான இடுகைகள் மூலமும் தொடர்ந்து இயங்கி வரும் 'இசைக்குயில்'(;)) சிநேகிதி வலைச்சர ஆசிரியராக இருந்து தமது ஆர்வங்களையும் பரிந்துரைகளையும் பகிர வருகிறார்.
|
|
No comments:
Post a Comment