07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 21, 2007

சித்திரம் பேசுகிறது

நேற்று ஒரு இடுகைகளும் போடமுடியவில்லை.அப்பிடியே போட்டிருந்தாலும் சிவாஜி பார்க்காம வலைச்சரத்தையா ஓடி வந்து பார்க்கப்போறீங்கிள் :-)இன்று ஓவியத்தோடு தொடர்கபுடையவர்களைப்பற்றியும் அவர்களின் இணையத்தளங்களைப்பற்றிச் சொல்றன் கேளுங்கோ.

ஆரதி ரவீந்திரன்

ஆரதி சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒரு இளம் ஓவியர்.இவருடைய "இளம் தூரிகையின் படர்வு!" என்ற வலைப்பதிவு ஒக்டோபர் 2006 உடன் புதுப்பிக்கப்படாமலிருப்பது ஏனென்று தெரியவில்லை.

சனாதனன்
யாழ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார் சனாதனன். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஓவியத் துறையில் முதுகலைப் பட்டத் தேர்வில் முதல் வகுப்பில் சித்தி பெற்றவர். இங்கிலாந்து, இலங்கை, பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் இவரது ஓவியக் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.



வாசுகி ஜெயசங்கரின் ஓவியங்கள்
தமிழியல் மாநாடு 2007 ,posters,post cards,brochure போன்றவற்றிலெல்லாம் இடம்பிடித்து யாரிந்த ஓவியர் என்று பலரையும் கேள்வியெழுப்ப வைத்த வாசுகியின் ஓவியங்கள் அனைத்துமே செம்மணி போன்ற புதைகுழிகளில் தம் குழந்தைகளைத் தேடித்தொலையும் பெண்களைப் பற்றியே பேசுகின்றன.



Kiko றுசாந்தனின் ஓவியங்கள்




வாசனின் ஓவியங்கள் புரியாத கவிதை போல புரியாத ஓவியங்களுமுண்டு :-)


சாத்தானின் பிறழ்வு
இந்த பிறழ்வு என்ற வலைப்பதிவில் வித்தியாசமான பல ஓவியங்களிருக்கின்றன.தன்னுடைய படைப்புகள் தவிர வேறு பல ஓவியர்களின் ஓவியங்களும் அவை பற்றிய சுவையான குறிப்புகளுக்கும் பஞ்சமில்லை.


மூனாவின் கிறுக்கல்
மூனாவின் துகிலிகை

கிறுக்கல் வலைப்பதிவில் அநேகமான ஓவியங்கள் (இவை எந்த வகையான ஓவியம் என்று சரியாகச் சொல்லத்தெரியவில்லை) ஈழம் ,போர் ,இலங்கை அரசியலோடு தொடர்புபட்டவை.

வலைப்பதிவர் கோபியின் ஓவியங்கள்


மோகன்தாஸின் ஓவியங்கள்

ஒவியர் விஜிதனின் நேர்காணல்


போராளி ஓவியர் நீதனின் 'விடிவின் நிறங்கள்'



ஓவியர் புகழேந்தியின் தூரிகைத்தளம்
மேலும் சில ஓவியங்கள்

15 comments:

  1. தங்கச்சி

    வலைச்சரத்தில் கலக்கிறீங்க, ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையா வருது.

    நல்ல தேர்ந்தெடுத்தல்கள்
    எனக்குப் படிப்பிச்ச மாற்கு மாஸ்டரின் ஓவியங்கள் இதோ

    http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=70&catid=12

    ReplyDelete
  2. பிரபாண்ணா மாற்கு பற்றி விஜே சொல்லி நான் கூகிலாண்டவரிட்ட கேட்டனான் ஆனால் 'மற்கு' என்று கேட்டதால ஆண்டவர் உதவி செய்யேலா எண்டிட்டார்.

    அப்புறம் கண்ணீரைச் சேர்த்து வையுங்கோ.சிட்னில தண்ணீர்ப்பஞ்சம் வரும்போது உதவியாயிருக்கும்.

    ReplyDelete
  3. சிநேகிதி!

    டாக்டர், இன்ஜினியர், மட்டுமே படிப்பு, மற்றெல்லாம் விடுப்பு என்றெண்ணிய யாழ்ப்பாண சமுகத்தில், ஒவியம் குறித்த பிரக்ஞையை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர், ஆசிரியர் மாற்கு அவர்கள். இவரது பயிற்றலில் உருவான பலரில், நிலாந்ததன் முக்கியமானவர்.

    மாற்குக்கு அடுத்ததாக சிவப்பிரகாசம் ஆசிரியரைக் குறிப்பிடலாம். இவர் ஓவியத்துடன் சிற்பமும் தெரிந்தவர்.

    இதுக்குமேலே போனா துரையப்பா ஆரு என்பீர்கள்? வேண்டாம் :)

    வித்தியாசமான தேர்வுகளைத்தரும், இசைஅரிசி..மன்னிக்கவும் இசைஅரசி சிநேகிதிக்கு பாராட்டுக்கள்.:)

    ReplyDelete
  4. தங்கச்சி

    மாற்கு மாஸ்டரின் சித்திர வகுப்பில் கடைசி வாங்கில் இருந்து ராணி காமிக்ஸ் சித்திரக்கதைகள் வாசித்து நாங்கள் மக்குகளாகப் போன பதிவு எழுதும் போது இன்னும் விபரமாச் சொல்றன். இப்போதைக்கு மலைநாடான் அண்ணை சொன்னதே காணும்.

    மலைநாடான் அண்ணை

    துரையப்பா ஆரு?

    ReplyDelete
  5. நன்றி மலைநாடான்.

    துரையப்பாவை நான் மறந்தாலும் நீங்களிரண்டுபேரும் விடமாட்டிங்கள் போல!

    ReplyDelete
  6. சிநேகிதி,

    I was fortunate enough to learn from both Mark master (not McMaster;-) &
    Sivaprahasam Sir.

    Mark master taught in St.John's College.

    You can check out couple of my old drawings here:

    http://www.flickr.com/photos/3rd-eye/page4/

    ReplyDelete
  7. இதென்ன கோதாரி?
    துரையப்பாவைத் தெரியாமலும் இருக்கினமோ?

    விட்டால் கொண்டோடி ஆரெண்டும் கேப்பியள் போல கிடக்கே?
    மலைநாடான், உவன் விதானை சின்னத்தம்பியைத் தெரியுமோ?

    ReplyDelete
  8. சினேகிதி எனக்குத் தெரிந்து தேசிகன் நன்றாக வரைவார். லிங்க் தேடிப் போடலை, சுஜாதா பல இடங்களில் உபயோகித்திருப்பார்.

    ReplyDelete
  9. இணைப்புகளுக்கு நன்றி நண்பர்களே!

    ReplyDelete
  10. You missed Tamil blogger Arutchelvan Kanthasamy.

    ReplyDelete
  11. ஐயையோ வசந்தனண்ணா ஆங்கிலத்தில பின்னோட்டம் போட்டிட்டாரு:-))))))))

    ReplyDelete
  12. சிநேகிதி!

    அதென்னவோ சிலர் நிக்கிற இடத்தில சனக்கூட்டத்துக்கு குறைவில்லத்தான். ஆரோ முந்திக் கோவிச்சது சரிதான்போல:)

    பிள்ளை!
    நான் அறிந்த வரைக்கும், வலைப்பதிவர்களில தேசிகனச் சொன்ன மோகன்தாசும் நல்ல ஓவியர். என்ன? தனியான பதிவுத்தளம் இல்லை.

    சுவிசில் ஆரதி நல்ல ஒரு இளம் படைப்பாளி என்பது உண்மையே. அண்மைக்காலமாக நளாயினி தாமரைச்செல்வன் கலக்கிறா .

    ReplyDelete
  13. mohandoss in oovinyagaluku inaipu kuduthirukirene malainadan..Nalayini akkada padangalum kavithayum ipa ooviyangalum enaenavo kathai ellam solluthu. links ellam indaiku night update panividuren.
    nanri
    vanakam

    ReplyDelete
  14. நன்றியோ நன்றி! :-) எழுதி ரொம்ப காலமாகிவிட்ட பிறகு ஆளாளுக்கு இலிங்கு கொடுக்கிறார்கள் :-(

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது