Tuesday, October 30, 2007

திராவிட எக்ஸ்பிரஸ்

தமிழ்மணத்தில் திராவிடப் பதிவுகளுக்கு பஞ்சம் இல்லை. ஆனால் அதற்க்கான தேவை இருக்கிறதா என்றால் இருக்கிறது என்பேன். காரணம் திராவிடத்தை முழுதாக தெரியாதவர்கள் அவரை தவறாக புரிந்துகொள்ளக் கூடும் அதேபோல் திராவிடத்துக்கு எதிரான கருத்து சொல்பவர்கள் பெரியாரையும் தவராகவே விமர்சிக்கின்றனர் .. மொத்தத்தில் பெரியாரையும் திராவிடத்தையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை.

அந்த வகையில் தமிழ் வலைப் பூவில் திராவிட பெரியாரிய சிந்தனைகளை பரப்புவோர் என்ற வகையில் பெரியார் தளம் ஒரு மிகச்சிறந்த பணியாற்றுகிறது, தமிழச்சியின் வலைப்பூவில் இப்போது நடக்கும் சில ஜாலி சண்டைகளை தவிர்த்துப் பார்த்தால் பெரியார் எழுத்துக்களை வலையில் தொகுக்கும் சிறந்த பணியைச் செய்கிறார்

திராவிட தமிழர்கள் வலைத்தளம் திராவிடம் பற்றிய புரிதலை வலைப்பூவில் பரப்ப முயல்கிறது ஆனால் சில காலமாக அது ஏன் செயல்பட வில்லை என்பதும் தெரியவில்லை. ஆரம்பத்தில் சில காலம் ஒன்னுமே தெரியாது என்பதுபோல் இருந்துவிட்டு இப்போது அடித்து அதகளம் செய்யும் சம்பந்தி
அவரது வலைப்பூ ஒரு திராவிடக் கதம்பம்.

ஆவேச கருத்துக்கள் அதை மிகக் கோபமான வார்த்தைகளில் சொல்லும் இவரை அந்த கோபமே தமிழ் மணத்தில் இருந்து வெளியேற்றியது ஆனாலும் வலையுலகில் என்றும் நினைவில் இருப்பார்.

மற்றும் லக்கிலுக், வரவணையான், போன்றவர்களும் திராவிடப் பதிவர்களே

Monday, October 29, 2007

வெள்ளோட்ட எக்ஸ்பிரஸ்

எல்லா எக்ஸ்பிரஸ்களையும் போல இந்த ரயிலும் தாமதமாய் வருவதற்கு மன்னிக்கவும் !!

இந்த பதிவுலகத்திற்கு நான் வந்ததே ஒரு விபத்து, அதிலும் இங்கே இருக்கும் அரசியலும் அதன் கோமாளித்தனமும் எனக்கும் பிடித்த விசயமாய் இருந்ததில் எப்போதும் கலகம் விரும்பும் எனக்கு மிகவும் பிடித்த விசயமாகவும், தாயகத்தில் இருந்து கொஞ்சம் தூரத்தில் இருப்பதால் இயல்பாகவே தமிழில் எனது கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகவும் கிடைத்தது தமிழ்மணம் பதிவுகள்.

வழக்கமாய் கும்மிகளை, மொக்கைகளை எழுதிவந்த நான் எப்படி ஒரு சீரியல் கலகப் பதிவனாய் ஆனேன் என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் சட்டமன்ற சண்டியர்கள் என நான் எழுதிய ஒரு பதிவு எனது முதல் பிரபல இடுகையாக இருந்தது அப்போதைய ஆளுங்கட்சியான் தி.மு.க வுக்கும் அ.தி.மு.கவுக்கும் சட்டமன்றத்தில் நடைபெற்ற அடிதடி கூத்துக்கள் கொஞ்சம் ஆவேசப் பட வைத்தன ஆனால் அந்த பதிவின் தாக்கம் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸை படிப்பவர்கள் மத்தியில் கொஞ்சம் என்னை பிரபலப் படுத்தியது.

அதற்கடுத்து எழுதிய கலைஞர் ஜெயலலிதா நேரடி வாக்குவாதம் செய்தியும் கற்பனையும் கலந்த நகைச்சுவைப் பதிவு , ஆனால் இதற்கெல்லாம் மகுடம் வைத்ததாக ரஜினி பற்றிய அந்த பதிவு என்னை ஒரு முழு முதல் கலகக் காரனாக இணையத்தில் இருக்கும் கட்டற்ற சுதந்திரத்தின் வெளிப்பாடாக இருந்தது அதன் பின் நிறைய கட்டு பேஸ்ட்டுப் பகுதிகள்: பதிவுகள் ஆனால் அதன் தலைப்புக்களை தேர்ந்தெடுக்க நான் காட்டிய காட்டும் சிரத்தை பதிவுகளை எழுதுவதில் காட்டுவதில்லை. ஆனால் அந்த தலைப்புக்களை நான் சொல்லவந்த கருத்தாக எடுத்துக் கொண்டு பப்ளிஷ் செய்துவிட்டு போய்விடுவேன்.

திராவிடமும் ஆரியமும் அடித்துக்கொள்ளும் இந்த பதிவுலகம் என்னை முற்றாய் சிலகாலம் ஆக்கிரமித்திருந்தது அப்போதுதான் பின்னூட்ட கும்மிகள் எங்களால் ஆரம்பிக்கப் பட்டு அனானிகளின் அருமை முகத்தை வெளிக்கொண்டு வந்த அற்புத நகைச்சுவை பின்னூட்டங்கள் அனானி ஆட்டம் என அடித்து நொறுக்கப் பட்டன, கலகம் மட்டுமே எனது பதிவாகவும் தலைப்பாகவும் இருந்த எனக்கு மற்றவர்கள் அல்லது மற்ற இதழ்கள் வெளியிடும் பதிவுகளை மறு பதிவாக்க வென்றே உண்டாக்கப் பட்ட கதம்பம் கிழுமத்தூரின் இன்னொரு அங்கமானது அங்கே கட் பேஸ்டு தவிற வேறெதற்கும் இடமில்லை :)

அங்கேயும் எனது குணம் மாற வில்லை எப்போதும் போல கட்டு பேஸ்டிலும் கலக தலைப்புக்களை வைத்து வழக்கம் போல ஆட்டம் போட்டதில் ஒருமுறை தமிழ்மண நிர்வாகத்தால் என் பதிவு தூக்கப் பட்டது. அதன்பின் பின்னூட்டங்கள் கொஞ்சம் கவனமாக பரிசீலிக்கப் பட்டு வெளியிடப் பட்டாலும் எனைப் பொருத்த வரை எந்த பதிவிலும் எந்த பின்னூட்டத்தையும் வெளியிடாமல் இருந்ததில்லை அந்த வகையில் நான் வழக்கம் போல ஒரு கருத்துக் களவானி :)

எது கருத்து என எல்லா வேளையும் புலம்பாமல் இருக்கும் எல்லாருக்கும் பிடித்த கவிதைகள் கொஞ்ச காலம் என் எழுத்திலும் வந்தன பின் பெண்கவிகளுக்காக மட்டுமே அது இடஒதுக்கீடு செய்யப் பட்டது அங்கேயும் சுகிர்தராணி, குட்டிரேவதியின் கவிதைகள் அதிகம் ஆக்கிரமிக்க நான் முற்றாய் கவிதை எழுதுவதை நிறுத்தி படிப்பவர் வயிற்றில் பால் பாயாசம் வார்த்தேன் .

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் வேகம்பெற்ற எனது பதிவுகளும் நானும் முற்றாய் திராவிடத்தில் மூழ்கிப் போனோம். அமுக, குமுக, என வளர்ந்த எனது வழிகள் இன்று கொலைவெறிக் கவுஜைகள் வரை வந்து நிற்கிரது ஆனால் இந்த 400 சொச்சம் பதிவுகளில் உறுப்படியாக நான் எதும் எழுதினேனா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது.

நாளை வரை எக்ஸ்பிரஸ் இந்த ப்ளாட்பாரத்தில் நிற்கும்.

எக்ஸ்பிரஸ் வலைச்சரம்

நம் வலைப்பதியும் நண்பர்களின் பலவிதமான பதிவுகளை மிக சிரத்தையுடனும்
தொடர்ச்சியாகவும் அதிக பதிவுகளைக்கொண்ட சரமாகவும் தொகுத்தளித்திருக்கிறார், மாசிவக்குமார். ஓவ்வோரு இடுகையையும் அறிமுகப்படுத்தும் போது அந்த பதிவரின் சிறப்பை மிக அழகாகச் சொல்லி
பதிவரைப்பற்றியும் சின்ன அறிமுகத்தை தந்திருக்கிறார். பதிவர்களுக்கு
இந்த வாரம் நல்ல ஒரு வலைஅனுபவத்தை பகிர்ந்த அவருக்கு நன்றிகள்.

----------------------***********--------------------

இந்த வார வலைச்சரம் அதிரடி தலைப்புக்காரர் , பத்துக்குமேற்பட்ட பதிவுகளில்
அடித்து ஆடிக்கொண்டிருக்கும் அனானிகளின் கும்மிஅடிப்பவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் பதிவர் மகேந்திரன் பெ அவர்களின் எக்ஸ்பபிரஸில் காலை முதலாம் எண் ப்ளாட்பாரத்தில் வருகிறது.

Friday, October 26, 2007

அனுபவ முத்துக்கள்

உருப்படாதது நாராயணனின் வடசென்னை தாதாக்கள் குறித்த பதிவு மறக்க முடியாதது.

பாலபாரதியின் சாந்தியக்கா இங்கே

'ரொம்ப பாதுகாப்பா வளர்ந்துட்டீங்க',
'இப்படியெல்லாம் நடக்குமா' என்று ஆதங்கப்பட்ட ஒரு பதிவருக்கு லிவிங்ஸ்மைலின் பதில்.

பல துறை மன்னர்கள்

ஒரு கட்டத்துக்குள் அடங்கி விடாத பலதுறை மன்னர்களின் பதிவுக்குப் போனால், படிக்கத் தீனி உறுதியாகக் கிடைக்கும். எதிர்கால உலகைப் படைக்கும் கதையாகட்டும், நிகழ்கால அரசியலை சாத்தும் துணிச்சலாகட்டும், கட்டுப்பெட்டித்தனம் என்று அவர் நினைக்கும் மனப்போக்குகளை உடைக்கும் அடாவடியாகட்டும் செல்லாவுக்கு நிகர் அவரேதான்.

சர்ச்சைக்குள்ளானாலும், பரபரப்பு ஏற்படுத்துவதில் சளைக்காத பதிவர்(கள்) இட்லிவடையினர். சமீப காலமாக அடக்கி வாசித்தாலும் தமிழ் வலைப்பதிவு உலகில் நடமாடும் யாரும் தப்பி விட முடியாத தாக்கம் இட்லிவடை பதிவுகள்.

யோசிப்பவரின் அறிவியல் புனைகதைகள் ஒரு புறமிருக்க அவரது புதிர்கள் வலைப்பதிவுகளின் தனி பரிமாணத்தைக் காட்டுகின்றன.

Thursday, October 25, 2007

அள்ள அள்ளக் குறைவதில்லை

தனக்குத் தெரிந்த நடைமுறைகளை, தனது துறையின் சிறப்பியல்புகளைப் பற்றி எழுத சில பண்புகள் வேண்டும்.
  • ஒன்று, ஆழ்ந்த அறிவும் அனுபவமும். தான் எழுதுவது கிட்டத்தட்ட சரியாகத்தான் இருக்கும், அதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க மாட்டார்கள் என்ற புலமை வேண்டும்.
  • இரண்டு. தன்னம்பிக்கை. தொழில் ரகசியங்களை எல்லாம் எழுதி விட்டால் மற்றவர்கள் அதை நகல் செய்து நமக்கு போட்டியாக வந்து விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை வேண்டும்.
  • மூன்று. சொல்வதை சுவையாக படிப்பதற்கு புரியும் படி எழுதும் திறமை வேண்டும்.
இந்த மூன்றும் ஒரே சேர இருப்பவர்களில், நான் படித்ததில் முதல் இடம் டிபிஆர் ஜோசப் சார். வங்கித் துறையின் நடைமுறைகளைப் பற்றி எழுதும் திரும்பிப் பார்க்கிறேன் தொடரிலும் சரி, வங்கிகளின் உயர்மட்ட அரசியலைப் பற்றி எழுதிய சூரியன் புனைகதையிலும் சரி வெளியார் யாரும் எளிதில் தெரிந்து கொள்ள முடியாத விபரங்களை தனது எழுத்து என்னும் தேனில் குழைத்து கொடுக்கிறார்.

இரண்டாவதாக என்னைக் கவர்ந்தவர் ஜோயல் ஸ்பால்ஸ்கி என்ற மென்பொருள் வல்லுனர். பெரிய நிறுவனங்களில் வேலை செய்வதை விட்டதிலிருந்து ஆரம்பித்து, சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்து நடத்தி வரும் கடந்த 8 ஆண்டுகளாக மென்பொருள் துறை குறித்து, மென் பொருள் உருவாக்கம் குறித்து, வேலைக்கு ஆள் தேடுவது குறித்து உள்ளது உள்ளபடி எழுதியுள்ள இடுகைகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு லட்சக்கணக்கான வாசகர்களால் படிக்கப்பட்டு வருகின்றன.

மொழிபெயர்ப்பை பகுதி நேர தொழிலாக ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வரும் தனது அனுபவங்களை் தனது பதிவுகளில் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறார் டோண்டு ராகவன். கால் இடறாமல் கவனமாகப் போய்ப் படித்து விட்டு வரலாம்.

Wednesday, October 24, 2007

என்னதான் நடக்குது?

செய்திகளின் நிகழ்வுகளின் பின்னணியைப் புரிந்து கொள்ள சிலரிடம் போக வேண்டியிருக்கும். 1990களில் இந்தியா டுடே பத்திரிகையில் ஒரு செய்தியை எடுத்தால் நாலா கோணங்களிலிருந்தும் அதை அலசி விபரமாக கட்டுரைகள் கொடுத்திருப்பார்கள். இப்போது அந்த அணுகுமுறையை அந்தப் பத்திரிகையிலும் பார்க்க முடிவதில்லை.

நிகழ்வுகளை நடுநிலையோடு, தனது புரிதல்களையும் படித்துத் தெரிந்து கொண்ட விபரங்களையும் சேர்த்து தரும் இடுகைகள் பத்ரியின் எண்ணங்கள். ஞானி கலைஞர் குறித்து எழுதிய விவாதத்துக்குரிய கட்டுரை பற்றிய இடுகை இங்கே. இந்தப் பதிவில் எந்த இடுகையையும் சுட்ட,ி உள்ளே போனால் திரும்பும் போது அதைப் பற்றிய அதிகரித்த தெளிவோடு வெளியே வரலாம்.

தமிழ் சசி எடுத்துக் கொண்ட பொருளில் இறுதி ஆளுமையோடு எழுதுவார். ஈழத்து நிகழ்வுகள் ஆகட்டும், தமிழக அரசியல் ஆகட்டும் இவரது கருத்துக்களில் இருக்கும் உறுதியும் தெளிவும் மறுபக்கத்துக்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விடும். மாதிரிக்கு ஒன்று

அசுரன். வெளுத்து உடை உடுத்து, வசதியான நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, முன்னிருக்கும் கணினியில் வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருக்கும் நமக்கெல்லாம் உண்மை நிலை உரை கல் ஒன்று வேண்டும். கல்லில் உரைப்பது போல தேய்த்துத் தேய்த்து சொன்னாலும், எல்லோரும் நின்று போக வேண்டிய அவசியமான இடுகைகள் அசுரனின் கட்டுரைகள். முடிந்தால் ஒரு விவாதத்தில் இறங்கி அவருக்கு தீனி போடுங்கள்.

சமீபத்திய இடுகையின் சுட்டியைத் தவிர்த்து (;-)) அதற்கு முந்தையதை இங்கே பாருங்கள்

சிரிக்கத் தெரியணும்

மற்றவர்களைச் சிரிக்க வைப்பது ஒரு வரம். அப்படி நகைச்சுவை மன்னர்களாக இருப்பவர்களை நேரில் பார்த்து பேசினால்் அப்படிச் சிரிக்க வைக்க எவ்வளவு ஆழம் தேவை என்பது புரியும்.

தமிழ் வலைப்பதிவுகளைப் படிக்க ஆரம்பிக்கும் போது தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் கைப்புள்ள மோகன்ராஜ். அவரது எழுத்துக்களில் இருக்கும் கவர்ச்சியும் எளிமையும் என்னைப் போலவே பலரைக் கட்டிப் போடுகின்றன.

அவரது தடிப்பசங்க என்ற தொடரை படிக்காதவர்கள் உடனே ஒரு நடை போய் முழுசும் படிச்சுடுங்க. எட்டாவது பகுதியின் சுட்டி இங்கே. (அப்படியே நூல் பிடிச்சுக்கிட்டே போயிடலாம், இவரும் இடுகைகளுக்கு லேபல் கொடுத்து வகைப்படுத்திக்கலை இன்னும்).

சாத்தான் குளத்து வேதங்கள் பதிவுக்குள் போய் விட்டால், பழைய இடுகைகளைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டால், அப்புறம் வலைச்சரத்துக்கு இடுகை முடிப்பது அவ்வளவுதான். எதைத் தொட்டாலும் துள்ளல் நடையில் தலைப்பில் ஆரம்பித்து கடைசி வாக்கியம் வரை மூச்சைப் பிடித்துக் கொண்டு படிக்க வைத்து விடும் இடுகைகள்.
மாதிரிக்கு மட்டும் ஒன்று

சும்மா டைம் பாஸ் மச்சி என்று ஆரம்பித்து இடுகைகளிலும் சரி, அவரது சிறப்புப் பின்னூட்டங்களிலும் சரி, தனி முத்திரை பதித்தவர் நம்ம லக்கிலுக். கலைஞரைப் பற்றிய இடுகைகளைக் (;-)) கூட விரும்பிப் படிக்க வைத்து விடக் கூடிய எழுத்து நடை. சிரிப்பாக எழுதுவது போலவே சீரியசான விஷயங்களை சொல்லி விட்டுப் போய் விடுவார். ஹாப் பாயிலின் புகைப்படத்தோடு ஒரு இடுகை

சொல்லவும் வேண்டுமா!

Tuesday, October 23, 2007

தொழில் நுட்ப வல்லுனர்கள்

தகவல் தொழில் நுட்பம் குறித்த பதிவுகளைப் பற்றிப் பேச வேண்டுமானால் ஒரு ஆங்கிலப் பதிவைக் குறிப்பிடாமல் முடியாது.

வலைப்பதிவுகள் blog என்ற வடிவில் உருவாகும் முன்பே, 1997ல் ஒரு கணினியியல் மாணவன் தனது கருத்துக்களை எழுத ஆரம்பித்த தளம் பத்து ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள், லட்சக் கணக்கான பதிவு செய்த வாசகர்கள், கோடிக் கணக்கைத் தாண்டி விட்ட பின்னூட்டங்கள் என்று வணிக முறையில் பணம் ஈட்டும் தளமாக விளங்குகிறது.
தளம்
உருவான கதை

தலைகீழாக வகுத்தாலும் தமிழில் பல்வேறு நுட்பங்களை பொறுமையாக விளக்கும் வவ்வாலின் பதிவுகள் தமிழ் பதிவுலகுக்கு ஒரு நல் முத்து.
சமீபத்திய இடுகை

ஏதாவது பாலத்தில் போகும் போது, கட்டிடங்களைப் பார்க்கும் போது சாதாரணமாகக் கடந்து விடுகிறோம். மனித வரலாற்றின் ஆரம்பங்களிலிருந்தே மலர்ந்து இன்று முதிர்ந்து நிற்கும் கட்டிடக் கலையின் நுணுக்கங்களையும் அனுபவங்களையும் கொடுத்து வரும் வடுவூர் குமாரின் இடுகைகள் தவற விடக் கூடாதவை.

திறவூற்று மென்பொருள் பாவிப்பவர்களுக்கு ஒரு உதவிக் கருவூலம் மயூரனின் பதிவு

Monday, October 22, 2007

எனக்குப் பிடித்த எனது இடுகைகள்

சிலவற்றை எழுதும் போதே 'இதை யார் படிக்கப் போகிறார்கள், படித்தாலும் உதைக்காமல் விட்டால் சரிதான் என்று பயந்து கொண்டே வெளியிடுவோம்.' எதிர்பாராமல் பல பின்னூட்டங்களும் ஊக்கப்படுத்தல்களும் வந்து சேரும்.

சிலவற்றை எழுதி முடித்ததும் 'ஆகா ஏதோ சாதித்து விட்டோம்' என்று பெருமையாக இருக்கும். ஆனால் வெளியிட்ட பிறகு யாருமே சீண்டியிருக்க மாட்டார்கள். 'ஓரு வேளை நாம் வெளியிட்ட வேளை வார இறுதியாக இருந்திருக்கலாம், யாரும் படித்திருக்க மாட்டார்கள்.' என்று நினைத்துக் கொண்டு, சாகா வரம் படைத்த அத்தகைய படைப்புகளை இந்த உலகம் கண்டு கொள்ள இன்னொரு வாய்ப்பு என்று இங்கே விளம்புகிறேன்.

பேருந்தில் அருகில் உட்கார்ந்த, பார்வை இல்லாவிட்டாலும் வயதான காலத்திலும் வேலைக்குப் போய் வரும் பெரியவருடன் பேசிய அனுபவம்.

கலப்புத் திருமணம் கூடாதா?

சாதி அமைப்பின் ஆதாரங்களை உடைத்து விட்டால்

பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்

நாட்குறிப்பு எழுதி படுத்துதல

தமிழ் மணக்க

ஆட்ட விதிகளை அமைப்போம்

வறுமை கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குதாம்

கம்யூனிசம் எப்படி வரும் ?

வாழ்க்கை

தொடர்ந்து, நான் படித்து என்னைப் பாதித்த இடுகைகளைக் குறித்து எழுதுகிறேன்.

பூமிப்பந்தை புரட்டிபோடனுமாம்

நான் பொறுப்பு(?) எடுத்துக்குமுன்னேயே முடிவு செய்திருந்த போனவாரத்து வலைச்சர ஆசிரியர் ஜாலி ஜம்பருக்கு அறிமுகப்பதிவு இடுவதற்காக அவருடைய பதிவுக்குள்ளே போனால் ஒரு மாதத்துக்கு ஒன்று இரண்டு பதிவு போட்டிருந்தார் அதிலிருந்து என்ன தலைப்பு குடுத்து அறிமுகப்பதிவு போடுவது என்று தெரியவில்லை. அதனால் ஜாலியா சீரியஸா என்று தலைப்பு குடுத்திருந்தேன். ஆனால் உண்மையிலேயே அவர் சீரியஸாவே நல்ல தா 6 பதிவு போட்டுட்டார். அதுல வேற நான் குழம்பினதுக்காக ஒரு ஜாலி பதிவு போட்டாராம் எனக்கென்னமோ அது கூட சீரியஸ் பதிவாட்டமே இருந்தது :)




அவருடைய பதிவில் கொஞ்சமே கொஞ்சம் எழுதி இருந்தாலும் இங்க நிறைய எழுதி தன் பொறுப்பை நிறைவாக செய்திருந்தார் நன்றி ஜாலிஜம்பர்.
-------------------------------********---------------------------------------

அடுத்ததாக இந்த வாரம் வருபவர் மா.சிவக்குமார்.இந்தப் பூமிப்பந்தைப் புரட்டிப் போடும் அடுத்த நெம்புகோல் தமிழ் மூளைகளிலிருந்து உருவாக வேண்டும் என்ற கனவுகளோடு வருகிறார். என்ன என்ன தொடுக்கிறார் பார்ப்போம். வாங்க மா.சிவக்குமார்.

Saturday, October 20, 2007

சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா.

ஜாலியா,சீரியஸா என்று வலைச்சர பொறுப்பாளர் முத்துலெட்சுமி அவர்கள் குழம்பாமல் இருந்திருந்தால் சீரியஸ் பதிவுகளை
மட்டுமே சுட்டிவிட்டு இருந்திருப்பேன்.
பெயரில் ஜாலியை வைத்துக்கொண்டு இவ்வளவு சீரியஸான ஆளாக இருக்கிறானே என்று
உலகம் பழித்து விடக் கூடாது என்பதற்காக இந்த காமெடிப்பதிவு.

முதலில் ஆழியூரானின் இந்தப்பதிவு.
http://nadaivandi.blogspot.com/2007/08/blog-post_18.html

கவுண்டமணி,வடிவேலு காமெடி தான் காமெடியா?இது அதைவிட டக்கரான காமெடி.லக்கி,வரவனை,சுகுணா,செந்தழல்,
அய்யனார்,பாலபாரதி போன்றவர்களை அவர்களின் பாணியிலேயே கலாய்த்திருப்பதும்,பதிவின் உத்தியும்,சொல்லாடல்களும் மிகவும்
அருமையான ஒன்று.

அடுத்து,அரசியல் கருத்துக்களை நேரடியாக சொல்லி சண்டை போடுவதை விட அங்கதமாக சொல்வது மிகுந்த
சிரிப்பை வரவழைக்கும்.பாரி.அரசின் இந்தப்பதிவு
http://pktpariarasu.blogspot.com/2007/08/blog-post_01.html

இந்தித்திணிப்பை கிண்டல்
செய்யும் விதம் அட்டகாசம்.

அடுத்தது,தமிழ் வலையுலகை துவம்சம் செய்து கொண்டிருக்கும் கட்டிளங்காளையான டோண்டு அய்யா அவர்களை வெளுத்து
வாங்கும் இந்தப்பதிவு
http://aiyan-kali.blogspot.com/2007_02_01_archive.html

இதை அடிக்கடி திறந்து வாசித்துக்கொள்வேன்.இது மிகவும் சீரியஸாக எழுதப்பட்டிருந்தாலும் எனக்கு மிகுந்த சிரிப்பையே வரவழைக்கும்.
தமிழ் துள்ளி விளையாடும் இந்தப்பதிவை தயவு செய்து தவற விடாதீர்கள்.

இத்துடன் நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.வலைச்சரம் தொடுக்க வாய்ப்பளித்த பொறுப்பாளர்கள் அனைவருக்கும்,தொடர்ந்து வாசித்து
ஊக்கமளித்த நண்பர்களுக்கும் என் நன்றி.

Friday, October 19, 2007

அப்பாவாகப் போகும் ஆண் சிங்கங்காள்

இந்த உலகில் பிறக்கும் உயிர்களுக்கு எல்லாம் பொதுவான ஓர் இலட்சியம் இருக்கிறது.தன் சந்ததிகளை உருவாக்குவதே
அந்த இலட்சியம்.எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் வரை குழந்தை இல்லாமலிருந்து அதன் பிறகே பிறந்தது.

அந்த இரண்டாண்டுகளில் நானும் என் மனைவியும் பட்ட மனவேதனை சொல்லிமாளாது.குழந்தை பிறந்தவுடன் அளவில்லா
மகிழ்ச்சியை அது அள்ளித்தந்தது.முதல் நான்கு மாதங்களுக்கு மட்டுமே அது நீடித்தது.அடுத்த ஒரு வருட காலம் மாபெரும் சோதனைக்
காலமாக அமைந்து விட்டது.குழந்தை பிறந்தது எவ்வளவு மகிழ்ச்சியை தந்ததோ அதைவிட இரண்டு மடங்கு துயரத்தை அனுபவிக்க
ஆரம்பித்து விட்டோம்.

என்ன சோதனையடா சாமி என்று வெறுத்துப் போய் நாட்கள் கடந்து கொண்டிருந்த போது தான் செல்வநாயகி
அவர்களின் இந்தப்பதிவை படித்தேன்.எங்களுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணம் என்ன என்பதை அந்தப் பதிவின் மூலம்
தான் தெரிந்து கொண்டேன்.

"POST NATAL DEPRESSION" எனப்படும் பிரசவத்துக்குப் பின் பெண்களுக்கு ஏற்படும் மனவழுத்தம் தான் அதற்கெல்லாம் காரணம்.அதைப் பற்றிய
தெளிவான விளக்கத்தை இந்தக் கட்டுரை

http://selvanayaki.blogspot.com/2006/08/blog-post_03.html

தருகிறது.
பிரசவத்துக்குப் பின் பெண்ணுக்கு ஏற்படும் உளவியல் மாற்றங்களை ஆண்கள் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட முறையில் இந்தக் கட்டுரை எனக்குப் பேருதவி செய்துள்ளது.செல்வநாயகி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, October 18, 2007

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு.

எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு,கெட்டதும் உண்டு.அல்லவை விடுத்து நல்லதை மட்டும் எடுத்து போய்க்கொண்டு இருந்தால்
பிரச்சினையே இல்லை.ஒருவர் நமக்கு மாற்றுக்கருத்து உள்ளவராய் இருப்பதாலேயே அவர் சொல்லும் நல்ல விஷயங்களையும்
ஏற்க மறுப்பது மடமை.

இராமாயணம்,மகாபாரதம்,பகவத்கீதை போன்ற இதிகாசங்களில் இலக்கியச் சுவையும் , உயர்ந்த தத்துவங்களும் நிரம்பியுள்ளன.
அதைக் கடைப்பிடிக்காமல் தங்கள் சுயநலத்திற்காக அதில் இடைச்செருகப்பட்ட மனுதர்மம் போன்றவற்றை மட்டும் கெட்டியாகப்
பிடித்துக்கொண்டு அதை வைத்து மக்களை அடக்கி,ஒடுக்கும் மனநிலையே இப்போதும் இருக்கிறது.

இந்து மதத்தில் உள்ள இந்த இழிநிலையை பெரியார் போன்றவர்கள் நேரடியாகவே எதிர்த்து போராடினார்கள்.
ஆனால் இந்து மதத்திற்குள்ளேயே இருந்து போராடி,அதிலுள்ள குறைகளைப் போக்க முடியும் என்று நம்புகிற நேர்மையாளர் பலர்
இருக்கின்றனர்.அவர்களில் ஒருவர் அரவிந்தன் நீலகண்டன்."RIGHT MAN IN THE WRONG PLACE" என்று கலைஞர் ஒருமுறை வாஜ்பாயைப்
பற்றி குறிப்பிட்டிருந்தார்.அது இவருக்கும் அப்படியே பொருந்தும்.
இவரது
http://arvindneela.blogspot.com/2007/02/blog-post_06.html

இந்தப்பதிவு அப்படியே மனதில் ஆணி அடித்து நின்று விட்டது.ராமர் பாலம் பற்றிய ஒரு நேர்மையான
ஆத்திகரின் எண்ணங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்து தன்னை வலதுசாரி என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பதிவர் அதியமான்.பொருளாதாரம் பற்றிய இந்தக்கட்டுரை

http://athiyaman.blogspot.com/2005/05/to-communists-socialists-of-india.html

மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.தமிழில் அதிகமாக தொடர்ந்து எழுத வேண்டும் என்று அவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

Wednesday, October 17, 2007

சிந்தனை செய் மனமே

முற்போக்கு என்றால் என்ன?பிற்போக்கு என்றால் என்ன என்று கேட்டால், வாந்தி என்பது முற்போக்கு,வயிற்றுப்போக்கு தான்
பிற்போக்கு என்று யாராவது சொன்னால் பின்நவீனப்போக்கின் படி அது சரி தான்.

ஆனால் உண்மையான முற்போக்கு என்பது மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு,வளர்ச்சிக்கு உதவும் சிந்தனைகள்.பிற்போக்கு
என்பது வளர்ச்சிக்கு தடைக்கல்லாகவும்,பின்னோக்கிய பாதையிலும் சிந்திப்பது.

எனக்குத் தெரிந்த அருமையான பிற்போக்காளர் முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி அவர்கள்.ஜோதிடத்தை
ஒரு பாடமாக பல்கலைக்கழகங்களிலே கற்றுத்தர அவர் முனைந்த போது இந்தியாவின் நிலையை எண்ணி மிகவும் வருந்தினேன்.

பிற்பட்டவர்கள் எல்லாம் முற்போக்கர்களாகவும் ,முற்பட்டவர்கள் எல்லாம் பிற்போக்கர்களாகவும் இருப்பது ஒரு முரண்சோகம்.இதில்
விதிவிலக்குகள் உண்டு.

மனிதநேயம்,சாதிமறுப்பு,கடவுள் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்துவது போன்றவை முற்போக்கு எண்ணங்கள்.
தமிழ் வலையுலகில் முற்போக்காக சிந்தித்து எழுதும் நிறைய பேர் இருக்கின்றனர்.எனக்கு பிடித்த இருவர் தருமி,கல்வெட்டு.

உடல் தூய்மை என்று பார்த்தோமானால் பெண்கள் ஆண்களை விட ஒருபடி கீழ் தான் என்று பிரபல டாக்டர் கமலா செல்வராஜ்
அவர்களே , விஜய் டிவியின் நீயா,நானா? நிகழ்ச்சியில் ஒருமுறை திருவாய் மலர்ந்தார்.

எவ்வளவு அபத்தமான கருத்து இது என்பதை கல்வெட்டின்
http://kalvetu.blogspot.com/2006/07/blog-post.html
இந்தப் பதிவிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

"உலகத்தை இறைவன் படைத்தான்.நாமெல்லாம் சிறு பொம்மைகள்.உலகம் மிகவும் பெரியது.நாம் அனைவரும் சிறு துரும்பே.
இறைவன் காணும் கனவு தான் இந்த வாழ்க்கை" என்றெல்லாம் மனிதன் தான் உணர்ந்ததை ,அறிந்ததை வரலாறு முழுவதும்
பதிவு செய்து வருகிறான்.மனிதனின் அறிவு வளர்ச்சி அபரிமிதமான வேகத்தில் பெருகிக் கொண்டிருக்கிறது.
50 வருடங்களுக்கு முன்னால் இருந்த அறிவு வளர்ச்சியை விட இப்போது உள்ள அறிவு மேம்பட்டிருக்கிறது.
ஆனால் கடவுள் விசயத்தில் மட்டும் 1000 வருடங்களுக்கு முந்தைய அறிவையே இப்போதும் பின்பற்றுகிறோம்.
இதையும் காலத்திற்கு ஏற்றவாறு மனிதன் மேம்படுத்திக்கொள்ள வேண்டாமா என்று கேட்டால் வேண்டாம் என்று ஒரு
கூட்டம் எப்போதுமே சொல்லிக்கொண்டு வருகிறது.

வலைப்பதிவுகளில் இறைநம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியவர்களில் முதன்மையானவர் தருமி அய்யா.அவரின் இந்தத் தொடரை
http://dharumi.blogspot.com/2005/09/49-1.html
படித்துப் பாருங்கள்.கடவுள்,மதம் போன்றவை பற்றிய புதிய எண்ணங்கள் மண்டைக்குள் வெள்ளமாகப் பாய்ந்தோடும்,
உங்கள் அறிவுக்கு அணை போடாமலிருந்தால்.

நாளை சந்திப்போம்.

Tuesday, October 16, 2007

எனக்குப் பிடித்த எழுத்துச் சண்டைகள்

வலைப்பதிவுகளின் சிறப்பம்சம் பின்னூட்டங்கள்.எழுத்தாளர் தமது படைப்பை வெளியிட்டவுடன் வரும் வாசகரின் கருத்துக்கள்
மிகவும் சுவையாரமானவை.ஒரு பொருளுக்கு பலவிதமான கோணங்களில் கருத்துக்கள் வெளிப்படுவதை படிப்பதே ஒரு பேரின்பம்.
அதுவும் அந்த மாற்பட்ட கருத்துக்கள் தீவிரமடைந்து விவாதமாகி,சண்டையில் போய் முடிவதுண்டு.அது சமயங்களில் மிகவும்
இரசிக்கத்தக்க ஒன்றாகி விடுவதும் உண்டு.
வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்த பின்னர் ,நண்பர்களிடத்தில் பேசும் போது என்னுடைய வாதம் செய்யும் திறன் அதிகரித்திருப்பதை
நானே நன்றாக உணர்கிறேன்.வலைப்பதிவுகள் தான் நிச்சயம் அதற்குக் காரணம்.
எத்தனையோ விவாதங்களை விரும்பிப் படித்திருக்கிறேன்.
அதில் நம் சிந்தையைக் கவரும் ஒரு விவாதமாக தங்கமணிக்கும்,பிரபல எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் இடையிலே நடந்த
இவ்விவாதங்கள்

http://thatstamil.oneindia.in/art-culture/essays/thangamani2.html

http://thatstamil.oneindia.in/art-culture/essays/jayamohan.html

தங்கமணி ,தமிழ் வலைபதிவர்களில் ஒரு முன்னோடி.அவரைப் போன்றவர்கள் போட்டுக் கொடுத்த பாதையில் தான் இன்று பெரும்பாலான
பதிவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.புதிதாய் வந்திருக்கும் பதிவர்கள் அவருடைய அனைத்து பதிவுகளையும்
வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த சண்டை ஹெவி வெயிட் சாம்பியன்கள் கலந்து கொள்ளும் மாபெரும் சண்டை.சன்னாசி,செல்வன் ஆகியோருக்கு இடையிலான
இந்த விவாதம்.இதை முழுவதும் படித்து முடிக்க எனக்கு இரண்டு நாள் ஆனது.சண்டையைக் காண இங்கே

http://satrumun.com/?p=1993 செல்லவும்.

நாளை சந்திப்போமா!

Monday, October 15, 2007

அறிமுகம்

இவ்வார வலைச்சரத்தை தொகுத்தளிக்கும் பொறுப்பு மலைக்க வைக்கிறது.இருந்தாலும் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?உங்களுக்குப் பிடித்த நிறம் என்ன?
என்ற கேள்விகளுக்கு எளிதாக பதில் சொல்வது போல் உங்களுக்கு பிடித்த வலைப்பதிவர் யார் என்று என்னை நானே கேட்டுக்கொண்டு இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழ்வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்த போழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கும்,ஆச்சரியத்துக்கும் அளவேயில்லை.உலகெங்கும்
பரவியுள்ள தமிழர்கள் தங்கள் தணியாத தமிழார்வத்திற்கு வடிகாலாக வலைப் பதிவுகளை பயன்படுத்துகிறார்கள்.
தமிழ் விருந்து படைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வலைச்சரத்தின் முதல் பதிவில் என்னுடைய இடுகைகளை அறிமுகப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் இரு இடுகைகள் உங்கள் பார்வைக்கு.

ஒன்று ,ஓரளவிற்காவது நல்ல இடுகை என்று சக பதிவர்களால் பாராட்டப் பட்ட இந்த இடுகை.
http://jaallyjumper.blogspot.com/2007/09/blog-post_17.html

இரண்டு,ஒருத்தர் கூட கண்டு கொள்ளாத , ஆனால் நல்ல இடுகை என்று நானே நினைத்துக் கொண்ட இந்த இடுகை.
http://jaallyjumper.blogspot.com/2007/10/blog-post.html

மீண்டும் சந்திப்போம்.

இந்த வாரம் ஜாலியா? சீரியஸா?

கவிஞரே வாங்கன்னு சொன்னதும் கவிஞர் கென் வரிசையா கவிஞர்களையும் கதை எழுதுபவர்களையும் பற்றீயே பதிவுகளாகப் போட்டுவிட்டார்.எனக்கும் அதிகம் படிக்காத சில பதிவுகள் கிடைத்திருக்கிறது.நீங்களும் புதிய புதிய பதிவுகளை அடையாளம் கண்டிருப்பீர்கள் இந்த வாரத்தில்.ஆனால் கென் தன்னுடைய இரண்டாவது பதிவான கவிதைகளும் நாவலும் நானும் பதிவில் எதுவுமே லிங்க் தரவில்லை. ஒன்று க்கு மேற்பட்ட சுட்டிகளை தரவேண்டும் ஒரு பதிவு என்ற விதியினை கவனிக்க தவறிவிட்டார் போலும் இருந்தாலும் மிக சுருக்கமான அவரின் அறிமுகப்பதிவாகிவிட்ட முதல் பதிவுக்கு பதில் இதை அவரைப்பற்றிய அறிமுக இடுகையின் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம்.கவிதை வாரம் இனிதாக முடிவடைந்தது.நன்றி கென்.
---------------------********--------------------

மதுரைமாநாகரம் மற்றும் டாக்டர்கலைஞர் கூட்டுப்பதிவுகளில் இயங்குபவர். நமக்கு இவ்வாரச்சரத்தை தொடுப்பவர் ஜாலி ஜம்பர் அவர்கள்.

Saturday, October 13, 2007

ப்ரியங்களுடன் - கென்

காதலும் அதன் வலியுமான வாழ்வில் வெறும் புலம்பல்களும் , கூச்சல்களுமான அதன் நகர்வில்,
கட்டற்ற அன்பை , இனி எவராலும் எப்போதும் தந்திடா இயலா பாசத்தை,
அக்கறையை , கவனத்தை, தோழமையை , நேசத்தை

எப்படி சொன்னாலும் சரியாய் பொருந்திடா உணர்வைத்தரும் தோழமைக்கு என் வணக்கங்கள்.

(எனக்கே நன்றி சொல்ற அளவுக்கு அவ்ளோ பெரிய ஆள் ஆகிட்டியாடா எனத்திட்டுவாய் இருந்தும் சொல்றேன்)

நன்றிகள் திரு.பொன்ஸ்,திரு.ப்ரியன்,திரு.முத்துலெட்சுமி,வாசித்த உங்கள் அனைவருக்கும்?

இத்துடன் விடைப்பெற்றுக்கொள்கிறேன்.

ப்ரியங்களுடன்
கென்

Wednesday, October 10, 2007

குழந்தைகளின் உலகம் - கென்

குழந்தைகளின் உலகம் எத்தனை புதிரானது, ஆழமானது, வண்ணங்களாலானது, அழகானது என்று அவர்களை அருகிலிருந்து ரசிக்கும்போதுதான் புரிகிறது. குழந்தையாகவே இருந்துவிட்டிருக்கலாமோ என்று சின்ன பொறாமை கூட தொற்றிக் கொள்கிறது.

நேற்று கடைத்தெருவில் பார்த்த ஒரு குழந்தையின் விரல் ஸ்பரிசம் இன்னும் அகலாத நிலையில், குழந்தைகளை பற்றி பதித்திருக்கும் வலைப்பூக்களைப்பற்றி இங்கு எழுதுகிறேன்.

குழந்தைகளை பற்றி மட்டுமே எழுதும் நோக்கத்தோடு வீணாப்போனவன் என்ற பெயரில் வலைப்பதியும் முகுந்த் நாகராஜன், குழந்தை கவிதை எழுதுவதில் தேர்ந்தவர். இவரது இரண்டு கவிதை தொகுப்புகள் "அகி" மற்றும் "ஒரு இரவில் 21 செ.மீ மழை பெய்தது" பெரும் கவனம் ஈர்த்தன. குறிப்பாய் பெண் குழந்தைகளின் உணர்வுகளை மிக ந‌யத்தோடு இவரால் கவிதையாய் வடிக்க முடிகிறது. உரைநடை வடிவத்தில் சற்றே மற்ற கவிதைகளிலிருந்து வேறுபட்டு இருந்தாலும் காட்சிகளை கண்முன் நிறுத்தும் விதமும் குட்டிப்பெண்களின் அழுகையும் சிரிப்பும் உணர முடிவதால் ரசிக்க வைக்கிறது.

இவரது கவிதை ஒன்று இங்கே :

நீர் தெளித்து விளையாடுதல்

முன்பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவு விடுதியில்
சாப்பிட்டு விட்டு
கை கழுவப் போனேன்.
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ்பேசின்-களும்
மிகக் குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன.
கை கழுவும் போது
காரணம் தெரிந்து விட்டது.
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடி விட்டு
விரைவாக வெளியே வந்து விட்டேன்.

(c) veenaapponavan@yahoo.com

###############################


ராஜா சந்திரசேகர் , கவிதை , குறும்படம், வசனம் , விளம்பரப் பட உலகம் என விரிந்த தளத்தில் இயங்கி வரும் படைப்பாளி. இதுவரை மூன்று கவிதைத் தொகுதிகள்

(கைக்குள் பிரபஞ்சம் , என்னோடு நான் , ஒற்றைக் கனவும் அதை விடாத நானும் ) வெளிவந்துள்ளன.

இவரது வலைப்பூவில் எழுத்தின் எளிமையும் கவிதை முடிகையில் பரவும் அதிர்வையும் உணர முடிகிறது. குழந்தையாகவே மாறி இயற்கையோடு பேசும் ராஜாவின் கவிதைகளை படித்து பாருங்கள்.

சந்தோஷ் சிவன் இயக்கிய 'டெரரிஸ்ட்' (Terrorist) 'மல்லி','நவரசா' ஆகிய மூன்று படங்களுக்கும் இவர்தான் வசனம்.

எண்களின் வலை


கணித பாடத்தின்
விடை கேட்டு வந்த குழந்தை
உம்மென்று
முகத்தை வைத்திருந்தாள்

எண்களுக்குள்
சிக்கிக் கிடந்த அவளை
வெளியில் எடுக்க
பெரும் சிரமமாயிற்று

பென்சிலைக் கடித்தபடி
சொல்லித்தரச் சொன்னாள்

என் பால்ய பூஜ்யத்தை
மறைத்துப் போட
கிடைத்தது
சரியான விடை

சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து
முத்தம் கொடுத்துப் போனாள்
பிரம்பின் பயம் நீங்கி

அவள் மேல்
விளையாடிய எண்கள்
காலடியில் கிடந்தன
சத்தங்கள் அற்று

Tuesday, October 9, 2007

க‌விதைக‌ளும்,நாவலும் நானும் - கென்

க‌விஞ‌ர்ன்னு என்னை ம‌தித்து அழைப்பு ( என்னையும்) கொடுத்த‌மைக்காய் இது வ‌ரை வ‌லைப்பூ, குழும‌ம் என்று எங்கேயும் ப‌தியாத‌ என் சில‌ க‌விதைக‌ள் உங்க‌ளின் பார்வைக்காய்


1.சுவடுகள் படிந்தழிந்தபடி ஈரம் கசியும் நீள்வெளியில்
வலைப்புகும் நண்டினை ரசித்து அமர்ந்திருக்கிறேன்

எங்கிருந்தோ வந்துப்போகும் வலசைப்பறவையின் இயல்பாய்
துறைமுகம் நுழைய நங்கூரமிட்டு மிதக்கும் கப்பல்கள்
மினுக்கத்துவங்குகின்றன இரவின் வெளிச்சப்பூச்சிகளாய்
வெட்கப்பூச்சு மல்லிகை மணத்தோடு விரல் கோலமிட்டு
வருகிறாள் கருமைப்பெண்

ஏதோ ஒரு நாளின் வேட்கை வெறியேறி
உற்று நோக்க சைகையால் அழைக்கிறாள்
கரையுடைக்கத்துவங்குகிறது அலை இப்போதும்

விலைகொள்ள முடியா பொருளை
தொட்டுக்கொள்ளும் இயல்பில்
பேரம் இயலாமல் போக
மணல் தட்டி எழுகிறேன் என் தடய‌ங்களையும்


2.வெள்ளை உடல் நிறமும் கருமை வாலுமான
குட்டிப்பூனை ஒன்று
பளிங்கு விழிகள் உருட்டி மெல்ல
பாதம் நகர்த்தி
என் காலோடு நேசம் கொண்டாடுகிறது
நாவால் நக்கி

அதன் நாவின் வெம்மை என் மூளைச்சேருமுன்
ஏதோவென எட்டி உதைத்திட
வலிதாளாமல் கதறி தெரித்து விழுந்தோடி
மறைகிறது

இனி எப்படி சொல்ல எனக்கு அதன்
நாவின் வெம்மை மிகப்பிடித்தமானதாய் இருந்ததென்பதை


3.சோம்பலில் குடை மறந்துப்போன
ஒரு நாளில் வானம் உடைகிறது
முகம் அறையும் மழை ரசிக்க இயலாமல்
உள்ளுணர்வு தன்னைத்தானே திட்டிக்கொள்கிறது

உடலோடு ஆடை ஒட்டிக்கொண்ட பெண்
முகம் சுழித்தப்படி வானம் வெறிக்கிறாள்
பக்கம் நிற்பவனின் கழுகுப்பார்வையில்
இருந்து தப்பிட வழியேதுமில்லாமல்

இனி சலித்துக்கொள்ள ஏதுமில்லை
மழையோடு ரசிக்கலாம்

குடை மறந்ததையும்

4.மொழி புரியா அண்டை மாநிலத்தின்
பேர்த்தெரியா உணவுண்கையில்
கடிபட்ட மிளகாய்க்காய் அழுகும் கண்களோடு
தண்ணீர் தேடி அமர்ந்திருக்கையில்

உணவை உருண்டை பிடித்து கதை சொன்ன‌ அம்மாவிடம்
இல்லாத மிளகாய் கடித்ததாய் பொய் சொல்ல
பதறி எழுந்து தண்ணீர் உப்பு எனத்தேடி
ஊட்டி விட்ட ஞாபகம் வர

காரம் குறைந்த பின்னும் கண்ணீர் நிற்பதாயில்லை



5.பூங்காக்கள் பொருத்தமற்றவைதான்
நெடுங்கதை சீரியல்களின் மருமகளைப்பற்றி பேசி
பெருமிதம் கொண்டு நடைப்பயிலும் மாமியார்கள்

அங்க‌ங்க‌ள் குலுங்க ஓரக்கண்ணில்
உற்று நோக்கி அலட்சியத்துடன்
ஓட்டமாய் நகரும் நாகரீக சிறுசுகள்
அப்பனின் சிபாரிசில் ஆடும் ஊஞ்சலில்
இடம்பிடிக்க நிற்கும் மழலைகள்
பார்வைக்கணைகள் மறந்து இருவரும்
ஒருவராய் சிணுங்கிடும் காதல்கள்
மறைவுகளே இல்லாதபோதும் இயங்கும்
உலக தொடர்பற்று
அவனும் அவளுக்குமான‌ காமம்

எல்லாம் மீறி முகம் ஏறும் எறும்பை
மெல்ல ஊதிட முயல
பக்கத்து இருக்கை பெருசு தன் வயது
செய்த அரசு வேலை உலக இயல்பு
சேதுசமுத்திரம் ராமர்பாலம் என
எல்லாவற்றுக்கும் என்னை சாட்சியாய்க்கொள்கிறார்

கிளம்பும்தன் கடைசி நிமிடத்தில் யார் நீங்கள்
என என்னை வினவ
வேறொரு எறும்பை தேடிக்கொண்டிருக்கிறேன்


##############################################################################


வாசிக்கையில் சில நாவல்கள் மட்டுமே உள்ளுக்குள் புகுந்து ஏதோ செய்யும். சில நாட்களுக்கேனும் மனம் அரிக்கும்.

வெகு சமீபத்தில் வாசித்த " காடு " நாவலும் அத்தகைய ஒன்றுதான்.

காடு ‍ ஜெயமோகன்

சிறு அறிமுகம் :

ரப்பர் நாவலின் எழுத்து நடையில் சற்றுக்கடினமான வார்த்தைப்பிரயோகங்களுடன் மலையாள நெடியடிக்கும் காடு நாவலை சற்று மெல்ல வாசிக்க வாசிக்க

கண்முன் விரிகிறது குறிஞ்சி நிலமும் அது திரிவதால் உண்டாகும் பாலையும்

சிறு வயதில் பெருமழைப்பொழுதில் தேக்குக்காட்டினுள் நுழைந்து மழைப்பார்க்க உச்சிக்கிளையேறி மழைப்பார்த்தது ஞாபகத்திற்கு வருகிறது ஜெயமோகனின் காட்டுப்பெருமழை வர்ணிப்பை வாசிக்கையில்

காதல் சுமந்தலையும் கிரிதரன் நாமாகி நாவல் முழுதும் காட்டில் சுற்றியலைகிறோம் ஜெயமோகன் கரம்பற்றி,

தீராக்காமமும் மாறான பாலுறுவுகள் நிறைந்த பெருங்காம மனம் நிறைந்த மனிதர்களை குறிஞ்சி நில அழகோடு வெகு அழுத்தமாய் தம் தனித்துவ எழுத்து நடையில் கட்டுண்டுளார் ஜெயமோகன்.

நகரமயமாக்களால் காடுகள் தொலைத்து கான்கிரீட் சிறைகளுக்குள் சிக்குண்டுட்டோம், விலங்குகளை சிறையடைத்து நாமும் சிறைகளுக்குள் இருந்தபடி வாழப்பழகிக்கொண்டோம்.

நவீனத்துவ நாகரீக சமுக கட்டுப்பாடுகளால் அவர்வரும் தம் நீலியைத்தொலைத்து விட்டு தேடி அலைந்த படிதான் இருக்கிறார்கள்.


காமமற்ற மனிதர்கள் என்று எவருமேயில்லாத உலகம் இது. எல்லா ஆண்களுக்குமான பெண் குறித்தான வேட்கையில் காமம் கண்மறைக்கையில் தோன்றும் உணர்வுகளை அப்பட்டமான விலங்கின் மனநிலையை, முதல் காதலை அதன் வலியை வாழ்வின் முடிவின் வரை தொடர்ந்த படி இருக்கும் மனம் பிறழ்நிலையை வெகுத்தெளிவாய் தம் காடு நாவலில் பதிவு செய்திருக்கிறார்.

வாசிக்க சற்றுக்கடின நடைதான் என்றாலும் மெல்ல வாசித்துப்பாருங்கள் கிரிதரன் , நீலி, குட்டப்பன் , சினேகம்மை, ரெசாலம் என்று நாமும் அவர்களோடு காட்டில் பயணிக்கலாம் .

Monday, October 8, 2007

இந்த வாரம் ‍ - கென் -

வணக்கம்,

இந்த வாரம் வலைப்பதிவுக்காய் கடந்த மாதமே பொன்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். பணிச்சுமை என்னை இட்லிக்குக்கராய் அவிப்பதால் ( சூரியப்பனி எல்லாம் வேற ஆளுங்க உபயோகிப்பதால்) இப்போது வலைப்பதிய நேரம் கிடைத்திருப்பதால் இனி என் பார்வையில் படித்தது பிடித்தது என்று ஒரு வாரம் நானும் பதிய வருகிறேன்.
என் இடுகைக்கான சில சுட்டிகளை த‌ருவ‌தை விட‌ நீங்க‌ளே ப‌டித்து பார்த்து உங்க‌ள் விம‌ர்ச‌ன‌ங்க‌ளைத்தாருங்க‌ள்.

இனி நான் ரசித்த சில வலைப்பதிவுகள் பற்றி:

மற்றபடி அறிமுக இடுகை போதும் இனி எனக்கு தெரிந்த சில வலைப்பதிவுகள் பற்றி
குறிப்பிடத்தகுந்த சில எழுத்தாளர்கள் எழுதி காணக்கிடைக்காத கவிதைகள் மற்றும் கதைகள் அடங்கிய வலைப்பூக்கள் பற்றி இன்று பதிக்கிறேன்.

புள்ளி :

எழுதி வரும் ரகு, சித்திரன் என்ற பெயரில் சிறுகதைகள் எழுதுகிறார். இவரது கதைகள் "மனதில் உந்தன் ஆதிக்கம்" என்ற பெயரில் சிறுகதை தொகுப்பாய் வெளிவந்திருக்கிறன. சின்ன சின்ன சம்பவங்களும் சம்பாஷணைகளுமாக கதைகள் சுவாரஸ்யமாக நகர்கின்றன.
சிறுகதைகள் மட்டும் இல்லாமல் திரைப்பட விமர்சனங்களும் நிகழ்வுகளும் மிக எளிமையாகவும் நகைசுவையுடனும் பதித்திருக்கிறார்.
மரத்தடி.காமி லும் நிறைய கதைகள் எழுதி இருக்கிறார்.

************************************************************
நாதாரி :


நாதாரி என்பது ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெயர் என்றும் அதை நாம் திட்டுவதற்காக கட்டமைத்துக்கொண்டோம் என்றும் மிக அழுத்தமாக கூறி, நாதாரி என்ற பெயரிலேயே பதிக்கிறார் இந்த நண்பர். இவரது சமூக பார்வையும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் பழகிய அனுபவங்களும் கூரிய வார்த்தைகளாக வந்து விழுகின்றன.

கவிதைகளும் கட்டுரைகளும் நிறைந்திருக்கும் இவர் வலைப்பூவில் நாம் பார்க்க தவறுகிற அல்லது மறுக்கிற நுணுக்கமான நிகழ்வுகளின் ஆழங்கள் தெரிகின்றன.

இவரது கவிதை ஒன்று :

மீன் அரித்து
மிச்சமிருந்த
நிலவின் மேல்
பொத்தென்று குதித்து
தின்றது
தவளை

***************************************************************
உயிர்மை :

உயிர்மை எல்லோருக்கும் பரிச்சயமான தரமான சிறுபத்திரிக்கை. துவங்கிய நான்காண்டுகாளில் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தை பெற்றிருக்கும் இந்த பத்திரிக்கையின் வலைப்பூ இது. மனுஷ்யபுத்திரன் அவர்களின் கவித்துவமான நடையிலேயே கட்டுரைகளும் அமைந்திருக்கின்றன. அவரது கவிதைகளில் சிலவும், அவர் ரசித்த கவிதைகளும் இங்கே படிக்க கிடைக்கும். அவர் கவிதைகளில் எனக்கு பிடித்த ஒன்று :

மீன் தொட்டியில்
எல்லா நீரையும் வடித்த பிறகு
மீன்கள்
தம் பனித்த
உறைந்த கண்களால்
வெறுமனே
ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருகின்றன

ஒரு மீன்
துள்ளுகிறது.

சும்மா
துள்ளுகிறது.

யாரும் பதட்டமடையத்
தேவையில்லை.

எனக்கு உறுதியாகத் தெரியும்

ஒரே ஒரு மீன்தான்
துள்ளுகிறது.

இல‌க்கிய‌த்துறையில் ஆற்றிய‌ ப‌ணிக்காக‌ "க‌ரிச‌ல் விருதும் " த‌ம் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்ப‌த‌ற்காக‌வும் வாழ்த்துங்க‌ள் உயிர்மை ம‌னுஸ்ய‌ப்புத்திர‌னை

****************************************************************
ஸ்ரீபதி பத்மநாபா :

தமிழிலும் மலையாள‌த்திலும் எழுதி வரும் எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபா அவர்களும் இப்போது வலைப்பூ துவங்கி இருக்கிறார். திரைப்பட விமர்சனங்களும் கவிதைகளுமாய் சுவையோடு எழுதும் ஸ்ரீபதியின் கவிதைகளில் ஒன்று :

ஆறுதல் பரிசு

எறும்பு தின்னிகள் மிகவும் சாதுவானவை.
ரொம்ப நல்லவை.

பசிக்கிற நேரம்
கொஞ்சம் எறும்புகளை மட்டும் விழுங்கி
அவை பாட்டுக்கு ஊர்ந்து கொண்டிருக்கும்.

எப்பொழுதாவது முட்டையும்
கொஞ்சம் பாலும்
கிடைத்தால் மிக உசிதம்.

முகத்தின் அருகே மெதுவாய் நகரும்
நிலமே உலகம்.
அவ்வப்போது மூக்கில் கொஞ்சம் மண்
ஒட்டிக்கொள்ளும்.

அதனாலென்ன, பரவாயில்லை.
பதிக்கிற சிறு காற்சுவடுகளை
திரும்பிப் பார்ப்பது இல்லை.
அடுத்து வைக்கப் போகும் சுவட்டை
எண்ணிப் பார்ப்பதும் இல்லை.

எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது
என்றவளே,
என்னைப் போலவே ஒரு எறும்பு தின்னியைப்
பரிசாய்த் தருகிறேன்.
படுக்கைக்கருகில் வைத்துக்கொள்.


ந‌ன்றி : திரு.ரகு, திரு.ம‌னுஸ்ய‌ப்புத்திர‌ன், திரு.நாதாரி,திரு. ஸ்ரீபதி பத்மநாபா ம‌ற்றும்

வாசிக்கும் உங்க‌ள் அனைவ‌ருக்கும்...

சரம் தொடுக்கும் கவிஞர்

இந்த வாரம் நாந்தனுங்கன்னு ஆரவாரமா கொண்டாட்டம் ஸ்டைலில் வந்து லக்ஷ்மி ஸ்பெஷ்ல்களாப்
போட்டுத்தாக்கிட்டாங்க....இனிப்பா நகைச்சுவையில் ஆரம்பிச்சு ஆண்களுக்கு 50% குடுத்ததாகட்டும்.. இளைஞர்களுன்னு ஸ்பெஷல் விட்டதாகட்டும்.. நல்லா செய்துட்டாங்க.
அதுவும் கடைசியில் தன்னுடைய ஆசைன்னு இன்னும் நிறைய பேரை எழுத அழைச்சு, விட்டுட்டு போனவங்களையும் அழைச்சு முடிச்சிருக்காங்க நன்றி பதிவு . என்ன பாடச்சொல்லாதே கண்டபடி பாடிடுவேன்னு மிரட்டிட்டு நல்லா ஆலாபனையே பண்ணி அசத்திட்டாங்க..
-----------------------------------------------------------
அடுத்தது யாரா ?
அடுத்தது ஒரு கவிஞர் வருகிறார் .
நான் நானாகவே இருக்கிறேன் என்று நம்பிக்கையோடு கவி பாடும்
கவிஞர் என்ன எல்லாம் தொடுக்கறாருன்னு பாருங்க இந்த வாரத்து வலைச்சரத்தில். வாங்க கென் . ..

Sunday, October 7, 2007

நன்றி அறிவிப்பு

ஒரு வாரமா என் தொல்லைகளைப் பொறுத்தருளிய வலையுலக மக்களுக்கு என் நன்றி. வலைச்சரத்தில் இதுவே என் கடைசி இடுகை. கடைசி இடுகைன்றதால கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, கொஞ்ச நாளா பதிவுகள் பொடுவதை அறிவித்துவிட்டோ அறிவிக்காமலோ நிறுத்தி வைத்திருக்கும் பதிவர்களைத் தொகுக்க எண்ணம். இவங்க எல்லாம் மறுபடியும் எழுத ஆரம்பிக்கணும்ன்றதுதான் என்னோட ஆசை.

முதலில் ஒரு கூட்டு வலைப்பதிவான சக்தி/ - இதை மதி, பத்மா, செல்வநாயகி ஆகிய மூவரும் இணைந்து ஆரம்பித்து நடத்தி வந்தனர். இந்த வருடத் துவக்கத்தில் செல்வா எழுதிய கற்றதனால் ஆய பயனென்ன தொடரின் இறுதிப் பதிவோடு நிற்கிறது இவ்வலைப் பதிவு. தொடர்ந்தால் மகிழ்வோம்.

அடுத்த பதிவு எழுத்தாளர் இரா.முருகனின் வேம்பநாட்டுக் காயல். முருகன் அவர்கள் தனது லண்டன் அனுபவத்தை எடின்பரோக் குறிப்புகள் என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்தார். இத்தொடர் 19 பாகங்கள் வந்த நிலையில் மேற்கொண்டு ஏதும் பதிவுகள் இல்லை.

அடுத்தது எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் - சிங்கப்பூரிலிருக்கும் இவர் பற்றிய குறிப்புகள் இங்கே. இவரும் சென்ற வருடம் முதலே அதிகம் பதிவெதுவும் போடவில்லை.

இருவருமே வலைப்பூவில் மட்டும் எழுதுபவர்கள் அல்ல. அச்சு ஊடகத்திலும் பெயர் பெற்ற எழுத்தாளர்கள். - தங்களுடைய மற்ற பணிகளுக்கு நடுவே வலைக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் வலையில் மட்டுமே தமிழ் படிக்கக் கிடைக்கும் வெளிநாட்டில்/ஊரில் வாழ்பவர்களுக்கு மிகப் பயனுள்ளதாய் இருக்கும்.

இன்னும் பலர் புதிதாய் வலைப்பதிவெழுத வரவேண்டும். வலையுலகிலிருக்கும் சில்லறைத்தனங்கள் ஒழிந்து ஆரோக்கியமான விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நடக்க (இவை மட்டுமே நடக்க) வேண்டும் என்பது போன்ற பேராசைகள் நிறைய உண்டு எனக்கு. பார்ப்போம், எவையெல்லாம் கைகூடுகிறதென.

மீண்டும் ஒரு முறை வந்து படித்த, படித்துக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்பை வழங்கிய பொன்ஸ், சிந்தாநதி ஆகியோருக்கும் என் நன்றி.

இளைஞர் ஸ்பெஷல்

அடுத்தது இளைஞர் ஸ்பெஷல். அப்போ இது வரை குறிப்பிட்டவங்க எல்லாம் இளைஞர்கள் இல்லையான்னெல்லாம் யாரும் சிண்டு முடிய பாக்கக் கூடாது. நான் இளைஞர்கள் என்று சொல்ல வருவது - வயதினால் இளையவர்களைப் பற்றி அல்ல. நம் வலையுலகைப் பொறுத்தவரை முதியோர் என்று தன் மேல் முத்திரை குத்திக் கொண்டு பழமை வாதம் பேசுபவர் மிகக் குறைவு. எனவே வயதை வைத்து ஒருவரை எடை போடுவது இங்கு செல்லாது. அதனால், பதிவெழுத ஆரம்பித்து குறைந்த நாட்களே ஆனவர்களை பற்றியதே இந்தச் சரம்.

நான் எழுத வந்தே ஒரு வருடம் கூட முழுமையாக ஆகாத நிலையில் இதை நான் எழுதுவது சரிவருமா என்று யோசித்திருந்தேன். மதியும் பொன்ஸும் போலாம் ரைட்னு சிக்னல் கொடுத்த தைரியத்தில் இந்த வகைப்படுத்துதலைத் தொடர்கிறேன். :)

வள்ளி - கேலியும் கிண்டலும் விரவிய இவரது எழுத்து நடை நன்றாக இருக்கிறது. கொஞ்சம் ஆங்கில வார்த்தைகளின் உபயோகம் அதிகமாய் இருக்கிறது இவரது எழுத்துக்களில் - போகப் போகக் குறைத்துக்கொள்வார் என்று நம்புகிறேன்.

1. இவர் தனது வலைப்பூ ஆரம்பித்த கதையைச் சொல்கிறார் இங்கே.
2. ப்லாகுக்கே வாஸ்து பார்க்கிறார் இவர் - இப்பதிவில்.

இன்னொரு வள்ளி - இவர் இ.கா. வள்ளி. பெரும்பான்மையான பதிவர்களைப் போலவே இவரும் மென்பொருள் துறைக்காரர்தான். தனித்துவமாய் இருப்பதில் ஆர்வம் கொண்ட இவர் தன் அனுபவங்களை பதிவுகளாய் இடுகிறார்.

1. தனக்குப் பிடித்தவர்களைப் பட்டியலிடுகிறார் இப்பதிவில்.
2. மென்பொருள் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா என்ற கேள்விக்கான தன் பதில்களைத் தருகிறார் இங்கே. (இதில் எனக்குச் சற்றே மாறுபட்ட கருத்திருப்பினும் அப்போது நேரமின்மை காரணமாக விரிவாகப் பின்னூட்டமிட முடியாது போனது)
3. இவர் அடிப்படையில் விளையாட்டில் ஈடுபாடுடையவர். இவரது பார்வையில் கிரிக்கெட் என்கிற விளையாட்டை விமர்சிக்கிறார்.

பொற்கொடி - பெங்களூருவிலிருந்து வலைப் பதியும் இவர் முதலில் கவிதைகளை தொகுப்பது மட்டுமே செய்து வந்தார். பிறகு சொந்தமாய்ப் பதிவுகளும் எழுத ஆரம்பித்தார். ரொம்ப எளிய எழுத்து நடையில் சொல்ல வருவதை அழகாய்ச் சொல்கிறார். ஒரு மாதத்திற்கும் மேலாக இவரிடமிருந்து இடுகைகளே இல்லை. விரைவில் மீண்டும் எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

1. பெண்ணியம் பற்றி இவர் முன்வைக்கும் வாதம் இப்பதிவில் காணக் கிடைக்கிறது. எனக்கு உடன்பாடில்லாத வாதமெனினும், அவரது ஒரு முக்கியமான இடுகையென இதைக் கருதுவதால் இங்கே.
2. ஒரு அழகிய மலரும் நினைவுப் பதிவு.
3. ஒரு முனை காத்திருத்தலின் வலியைச் சொல்லும் கவிதை.

இது என்னுடைய வெளி. நம்ப வைத்துள்ள எல்லா மதிப்பீடுகளையும் கட்டுக்களையும் விரும்பாத வெளி. எது குறித்தும் விவாதிக்கலாம் முழுமையாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பற்று சாதாரணமான உரையாடல்கள் தொடரும் - என்று தன்னுடைய தளத்தை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்தாரா.

1. சில்லுனு ஒரு காதல் திரைப்படம் குறித்த தன்னுடைய பார்வையை முன்வைக்கிறார்.
2. பாலியல் ரீதியிலான வசவு வார்த்தைகள் குழந்தைகளை எப்போது வசீகரிக்கவே செய்யும் - அர்த்தம் புரியாத காரணத்தினால். அதைப் பற்றிப் பேசுகிறது இப்பதிவு.
3. அடர்த்தியான சொற்களாலான இவரது ஒரு கவிதை.
4. மெனோபாஸ் காலகட்ட பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறார் இப்பதிவில்.

எல்லோருமே நம்பிக்கையூட்டும் வண்ணம் எழுதுகிறார்கள். ஆனால் பதிவர் பட்டறையின் காரணமாய் நாம் எதிர்பார்த்த அளவு புது ஆட்கள் வந்திருப்பது போல் தெரியவில்லை. அன்று அத்தனை ஆர்வத்தோடு வந்து கற்றுப் போனவர்கள் அனைவரும் விரைவில் நம்முடன் வந்து இணைந்தால் சூழல் இன்னமும் களை கட்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஜென்டில்மென் ஸ்பெஷல்

இன்னிக்கு ஜென்டில்மென் ஸ்பெஷல். அவங்கதான் 33% தரத்துக்கே மூக்கால அழறாங்க. நாம பெருந்தன்மையா 50% அவங்களுக்கு கொடுத்துடுவோம்னு முடிவு செஞ்சாச்சு. இன்னா செய்தாரை ஒறுத்தல் எப்படின்னுதான் நம்ம பாட்டன் பாடம் சொல்லி கொடுத்திருக்காரில்லையா?

மண்டபத்தில் தனியே நின்று புலம்பிக் கொண்டிருக்கும் ஒய்வு பெற்ற பேராசிரியர் - தருமி அவர்கள். கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே என்று பெருந்தன்மையோடு உண்மையை ஒப்புக்கொள்ளும் :) இவரது பதிவுகளின் ஆதாரத்தொனி சமூக அக்கறையும் மனித நேயமும்.

1. நாம் யாருக்கும் வெட்கம் / சுய ஒழுக்கம் / நியாய உணர்வு / தார்மீகக் கோபம் / தைரியம் / பொறுப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் சில விஷயங்களை பட்டியலிடுகிறார்.
2. பக்கத்து வீட்டுக்காரன் சிரித்து மகிழ்ந்திருக்கும்போது நானும் சிரித்து அவனோடு சந்தோஷமாக இருப்பதுதான் மனித நேயம் என்பது. அப்படியிருக்கையில் பொங்கலை ஜாதி/மத வேறுபாடு கடந்து ஏன் தமிழர் அனைவரும் கொண்டாடக் கூடாதென்று கேள்வி எழுப்புகிறார் இப்பதிவில்.
3. நம்பிக்கையாளர்கள் கடவுள் பெயரால் எதைச்சொன்னாலும் எப்படி நம்பி விடுகிறார்கள் என்பதைப் பற்றியும் (gullibility), அவர்களால் எப்படி இது பற்றிய காரியங்களில் objectivity - யோடு பார்க்க முடிவதில்லை என்றும் ஒரே மாதிரியான இரு சம்பவங்களைக் கொண்டு விளக்குகிறார் இப்பதிவில்.

இந்தப் பூமிப்பந்தைப் புரட்டிப் போடும் அடுத்த நெம்புகோல் தமிழ் மூளைகளிலிருந்து உருவாக வேண்டும் என்ற கனவுகளோடு பதிவெழுதும் மா.சிவகுமார். பொருளாதாரம், தோல் பதனிடும் துறைசார்ந்த மென்பொருள் நிர்வாகம் என்று பல வகைப்பட்ட விஷயங்களைத் தன் எழுத்தில் பகிர்ந்து கொள்கிறார். வலைப்பதிவர் பட்டறையின் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கியப் பங்காற்றியவர்.

1. தோல் பதனிடும் தொழில் அதற்கான மேலாண்மை மென்பொருள் போன்றவற்றைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார் இந்த இழையில்.
2. வளத்தைச் சேர்க்கும் பாதையில் நடக்கும் அனுபவங்களைப் பிறருக்கும் உதவியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் இந்த இழையில் பதிகிறார்.
3. தனக்குப் பிடித்த புத்தகங்களையும் திரைப்படங்களையும் பற்றி இவர் எழுதும் குறிப்புகள் இங்கே.(இவர் மட்டும் எழுதும்னு நான் போடலை. உடனே அது ஒரு கூட்டுப் பதிவுன்னு வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் யாரும் கிளம்பிடாதீங்கப்பா)
4. தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கத்திலும் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.

நண்பர் நந்தா - இப்போது தனித் தளத்திலிருந்து எழுதுகிறார். கவிதைகள், கதைகள் என எல்லா வடிவத்திலும் எழுதி வரும் இவர் அவ்வப்போது மொக்கை வகைப் பதிவுகளிலும் கலக்குவார்.

1. நமக்கு ரொம்ப பிடிச்சவங்க, நம்ம மேல வெக்கிற அளவுக்கதிகமான நம்பிக்கையையும், அன்பையும் தவிர நமக்கு சந்தோஷத்தை தரக் கூடியது வேற எதுவும் இல்லை. என்ன பாக்கறீங்க? இது விக்ரமன் பட டயலாக் ஒன்னுமில்லை. நந்தா சாரோட கண்டுபிடிப்புத்தான். இதுபோன்ற பல காதல் தத்து(பித்து)வங்களை இவரது கதைகளில் காணலாம்.
2. இந்திய வரலாற்றைப் பற்றி எழுதப்போவதாக ரொம்ப நாட்களாகவே பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்துவிட்டு ஒருவழியாக இப்போது ஆரம்பித்திருக்கிறார்.
3. பெண்களின் சமத்துவத்திற்கான முதற்படி தன்னையே தான் உணர்ந்து கொள்ளலே என்று அழகாய்ச் சொல்லும் ஒரு கவிதை.
4. தான் ரசித்துப் படித்த புத்தகங்களைப் பகிர்கிறார் இந்தக் கட்டுரையில். (இவர் எழுதியிருக்கிற புத்தகங்களை தேடி கிடைக்கலியே நந்தான்னு சொன்னா, உடனே இவரே கொண்டு வந்து கொடுத்து படிக்கச்சொல்லுவதும் உண்டு சமயங்களில் - ரொம்ப நல்லவருப்பா இவரு)


வவ்வால் - தலைகீழ்விகிதங்கள் எனும் பதிவில் இவர் பல அறிவியல் கருத்துக்களை - குறிப்பாக விவசாயம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்கிறார். இவரது பெரும்பான்மையான பதிவுகள் முக்கியமானவையென நான் கருதுவதால் தனி இடுகைக்களுக்கான சுட்டி தராமல் இவரது வலைப்பூவின் சுட்டியையே இங்கு இடுகிறேன்.

இந்த வரிசைல இன்னும் பலரைப் பற்றி எழுத நினைத்திருந்தேன். சரம் தொடுக்கும் வாய்ப்பு இன்றே கடைசின்றதால அவசர அவசரமாய் சுருக்கிட்டேன். இன்னொரு முறை வேற எங்கயாவது வாய்ப்புக் கிடைச்சா பாக்கலாம். :)

Thursday, October 4, 2007

லேடீஸ் ஸ்பெஷல்

வலைப்பதிவுகளுக்கு வரும் முன்னரே மரத்தடி குழுமத்தின் இணையதளத்தில் நான் படித்து ரசிக்க ஆரம்பித்தவர்கள் துளசி டீச்சரும், ராமச்சந்திரன் உஷாவும். துளசியின் எழுத்தில் ஒரு அந்நியோன்னியம் இருக்கும். முதல் முறை படிக்கும் போதே நம் வீட்டிலிருக்கும் உறவுப் பெண்மணி ஒருவரிடம் பேசுவது போன்ற உணர்வு வரும். இவங்களோட ஸ்பெஷல் பயணக்கட்டுரைகள்தான். சாப்பாட்டு ஐட்டங்கள், வளர்ப்புப் பிராணிகள், தோட்டத்துல பூ பூத்தது, குளிரில் உறைந்து போன நீர்னு இவங்க பதிவுகளுக்கான பேசு பொருள் சூரியனுக்கடியிலிருக்கும் எதுவா வேணும்னாலும் இருக்கும். ஆனா சுவாரசியமா இருக்கும். அதான் இவங்க ஸ்பெஷல்.


1. இவரது சமீபத்திய பயணத்தொடர் - நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்

2. தினசரி வாழ்வில் தான் சந்தித்த சக மனிதர்களைப் பற்றிய இவரின் எழுத்தோவியம்

3. நியூசியின் வரலாற்றை எளிமையான தொடராக்கித் தருகிறார்.

உஷா வலைப்பூக்களில் மட்டுமல்ல அச்சு ஊடகங்களிலும் வெற்றிகளைப் பெற்றுவரும் எழுத்தாளர். நல்ல கதைகள், சமூக அக்கறை உள்ள பதிவுகள், அப்பப்ப நடுவுல காமெடி கலந்த பதிவுகள்னு எல்லாவிதமாவும் அடிச்சு ஆடுவாங்க. நல்ல தெளிவான சிந்தனைக்குச் சொந்தக்காரர்.

1. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிற அருமையான படிப்பினையைத் தன் சொந்த அனுபவத்தின் மூலம் விளக்கும் விழிப்புணர்வுப் பதிவு.
2. பெரும்பாலான வலைப்பதிவர்களின் வாழ்க்கையை வ.ப.மு , வ.ப.பி என்றே பிரித்துவிடலாம் என்பதுதான் யதார்த்தம். இதை அருமையாகப் பகடி செய்கிறார் இந்தப் பதிவில்.
3. இது என்னோட நேயர் விருப்பமா அவர் போட்ட கவிதைப் பதிவு.

மதி என்று சுருக்கமாய் அறியப்படும் சந்திரமதி கந்தசாமி - அநேகமாய் வலைப்பதிவு ஆரம்பித்த எல்லோருமே ஏதேனும் ஒரு தொழில்நுட்ப உதவியை இவரிடமிருந்து பெற்றிருக்கக்கூடும். அவ்வளவுக்குப் பிறருக்கு உதவும் இயல்பும், வலைத் தமிழ் பற்றிய தொழில்நுட்பக் கூர்மையும் உடையவர். மிகப் பரந்த வாசிப்பனுபவம் கொண்டவர். உலக சினிமாக்கள், ஜாஸ் இசை என்று பல்வேறு விஷயங்களைப் பதிந்து வரும் இவர் இயற்கை விரும்பியும் கூட.

1. வோர்ட்பிரஸ் மற்றும் தனி இணையதளம் நிறுவுதல் தொடர்பாக இவர் அண்மையில் எழுதியுள்ள பதிவு.
2. ஈழத்து இலக்கியம் என்ற தலைப்பின் கீழ் ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பற்றிய ஒரு சாளரத்தைத் திறக்கிறார்.
3. அவ்வப்போது சமீபத்தில் தன்னைக் கவர்ந்த பதிவர்களின் பட்டியலையும் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்புகளையும் வெளியிடுகிறார்.
4. தன்னைச் சுற்றி நடக்கும் தமிழிலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை அக்கறையோடு பதிந்து வைக்கிறார் இந்த இழையில்.
5. உலக சினிமா பற்றிய இவரது பார்வை.
6. தன்னைக் கவர்ந்த இசை நிகழ்வுகளை ஒலி-ஒளிப் பதிவுகளாக்குகிறார் இந்த இழையில்.

செல்வநாயகி - கவித்துவமான எழுத்து நடை கொண்ட இவர் பேசுவது பெண்ணியம் உள்ளிட்ட அனைத்து வகையான ஒடுக்கப் பட்டவர்களின் உரிமைப் போராட்டங்களைப் பற்றியும். தொழில் முறையில் ஒரு வழக்கறிஞரான இவர் இப்போது வசிப்பது வெளியூரிலென்றாலும் தன் உணர்வுகளை வலைப்பதிவு மூலம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

1. உலகம் இருக்கும் கிரகத்தைவிட்டு இன்னொரு கிரகத்திற்கு இடம்பெயர்ந்தாலும் அங்கும் மதங்களையும் அதன் சண்டைகளையும் அப்படியேதான் எடுத்துச்செல்வானா மனிதன் என்கிற இவரது கேள்விக்கான அபாயகரமான பதில் ஆமென்பதுதானே?
2. ஒரு கவிதையில் தொடங்கி ஆணித்தரமான வாதங்களுடன் விரியும் இவரது வாதம் - பெண்கள் மூடிக்கொள்ள வேண்டும் என்கிற சர்வமத தத்துவத்தின் மீதானது.
3. ஜிகினாக் கவிஞரென்று அறிவுஜீவிகளால் அறியப்படும், சினிமாப் பாடல் எழுதுவதான கீழான தொழில் செய்வதற்காய் சற்றே தரம் தாழ்ந்ததென்று முத்திரை குத்தப்படும் வைரமுத்துவின் ஒரு அருமையான கவிதையை இங்கே பகிர்கிறார்.
4. மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு பக்குவமிக்க தம்பதியினரின் பேட்டியை தன் குறிப்புகளோடு இப்பதிவில் கொடுத்திருக்கிறார்.

பத்மா அரவிந்த், இவரும் அமெரிக்காவிலிருந்து வலைப்பதிபவர். மருத்துவத் துறையில் பணிபுரிந்து வரும் பத்மா உடல் நலக் கல்வி குறித்த ஒரு வித்தியாசமான பார்வையை முன்வைக்கிறார். மனிதநேயமும் சமுதாய நலன் குறித்த அக்கறையும் விரவிய இவரது எழுத்து ஆடம்பரமில்லாத எளிய மனதைத் தொடும் எழுத்து.

1. மணமுறிவுக்கான காரணங்களை அலசுகிறார் இத்தொடரில்.
2. தன் வாழ்க்கைத் துணையை சந்தித்த இனிய் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் இப்பதிவில்.
3. மதங்கள், நாடுகள் என்ற எல்லை கடந்து நிற்பது ஆதிக்க உணர்வு. அதன் பல்வேறு வடிவங்களைப் பற்றிய தனது கருத்தை தொடராக்கித் தருகிறார்.
4. நம் சமூகத்தில் அறிவுரை வழங்காத/வாங்கியிராத மனிதர்களே இருக்க முடியாது. மிகச் சுலபமாய்க் கிடைக்கும் பொருளிது. ஆனால் தவிர்க்க இயலாததும் கூட. ஆனால் அறிவுரை எரிச்சலூட்டுவதாய் இருந்து விடக்கூடாது. எப்படி இருக்கலாம் என்று சில எடுத்துக்காட்டுகள் மூலம் சொல்கிறார் இங்கே.

இன்னமும் எனக்குப் பிடித்த பதிவர்களின் பட்டியல் பெரிது. இருக்கும் நேரமும் என் பொறுமையும் சிறிதென்பதால் இப்பட்டியலை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இங்கே போனால் நீங்களே விடுபட்டுப் போன நன்முத்துக்களை கண்டெடுக்கலாம்.

நகைச்சுவைச் சரம்

எப்பவுமே விருந்துன்னா இனிப்புதான் முதல்ல பரிமாறணும்னுவாங்க. அதன்படி அறிமுகத்தைத் தொடர்ந்து முதல் சரம் நகைச்சுவைச் சரமா இருக்கட்டுமேன்னு நினைக்கிறேன். அது மட்டுமில்லைங்க, தமிழ் வலைப்பதிவுகளிலேயே முதன் முதலில் எனக்கு அறிமுகமான பதிவும் ஒரு நகைச்சுவைப் பதிவரோடதுதான். அது நெல்லை மாவட்டத்துக்காரரான டுபுக்கு அவர்களின் பதிவுதான்.

நான் ஆன்சைட்டில் இருந்தபோது என் நண்பர் திரு. நட்ராஜ் அவர்கள் இந்தப் பதிவை அறிமுகம் செய்து வைத்தார். நிஜமாவே வெளியூரிலிருக்கும் போது தமிழ் கேட்டாலே காதில் தேன் வந்து பாய்வது போல்தான் இருக்கும். அதிலும் படிக்க புத்தகங்கள் கிடைத்தால் பரம சந்தோஷமாகவும் இருக்கும். மிஞ்சிப் போனால் ஆளுக்கு நான்கு புத்தகங்கள் வைத்திருப்போம். அதையே மாத்தி மாத்தி ரொட்டேஷனில் விட்டுப் படித்து படித்து எல்லா வரிகளும் அனேகமாய் மனப்பாடமாகி விட்டிருக்கும். ஏதேனும் ஒரு தமிழ்ப்படத்தை தரவிறக்கம் செய்யும் பணி வெள்ளி மதியமே ஆரம்பித்து விடும். ஆளுக்கொரு பகுதியாக இறக்கிக்கொள்வோம். மொத்தமாய் ஒருவர் வீட்டில் கூடி மடிக்கணிணியை தொலைக்காட்சியோடு இணைத்து அந்த நாளில் படத்துக்கும் முன்னால் தியேட்டரில் போடப்படும் நியூஸ் ரீலை ஒத்த குவாலிட்டியில் தெரியும் தமிழ்ப்படத்தை பார்த்து எங்கள் தமிழார்வத்தைப் போக்கிக் கொள்ளுவோம். இந்நிலையில்தான் நண்பர் இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தினார். அப்புறமென்ன, அங்கிருந்து தேசி பண்டிட்லாம் போயி அப்புறம் எப்படியோ தமிழ்மணத்தைக் கண்டுபிடித்து ஜன்ம சாபல்யமடைந்தேன். அது வேறு கதை.

இப்போது நான் சொல்ல வந்தது டுபுக்குவின் நகைச்சுவை எழுத்துக்களைப் பற்றி. இவரது ஜொள்ளித்திரிந்த காலம் என்ற மலரும் நினைவுத் தொடரானாலும் சரி சாதாரணமாய் ஒரு கல்யாணத்துக்குப் போய் வந்த நிகழ்வைப் பற்றிய பதிவானாலும் படிக்கும் போது அதிலிருக்கும் நேட்டிவிட்டி - நம்மால் அட நம்ம கதை போலவேயிருக்கே என்று எண்ணத்தோன்றும். அப்புறம் அப்படியே இதையெல்லாம் கூட இந்த மனுஷனால மட்டும் எப்படி இவ்வளவு நகைச்சுவையோடு எழுத முடியுது என லேசான பொறாமையையும் தரும்.

1. ஜொள்ளித்திரிந்த காலம்
2. இன்ன பிற கொசுவத்தி தொடர்கள்
3. கல்யாணம் - நேரடி ஒலிபரப்பு
4. அப்பாவி அம்பியின் அறிவுப்பசி

அடுத்தது நம்ப வெட்டிப்பயல் பாலாஜி. பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது என்கிற அருமையான கொள்கையோடு பதிவு எழுதி வரும் இவர் வெறும் நகைச்சுவை எழுத்தாளர் மட்டுமில்லை ஒரு ஆம்பிளை ரமணிச்சந்திரன் அப்படின்னும் சொல்லலாம். அந்த அளவு உணர்ச்சிகரமான காதல் கதைகளும் எழுதுவார்.

1. பிட் அடிச்சா தப்பாங்க என்று கேட்கிறார் இந்த அ(ட)ப்பாவி
2. இவரையெல்லாம் கட்டி மேய்க்க இவங்க வார்டன் பட்ட பாடு
3. கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு, விஜய், பேரரசு, S.J. சூர்யா என்று பலரையும் கவுண்டமணியின் பாணியில் காலை வாருகிறார்.

அடுத்தது நம்ம கண்மணி டீச்சர். நானும்,என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா - இதுதான் இவங்களோட குறிக்கோள். இவங்களை வெறுமனே நகைச்சுவைப் பதிவர்ன்ற சின்ன வட்டத்துக்குள்ள் அடைச்சுட முடியாது. குழந்தைகளுக்குன்னு ஒரு தனி வலைப்பதிவு நடத்தறாங்க. பல விழிப்புணர்வு பதிவுகளும் போட்டு கலக்குவாங்க. தன்னோட செல்ல நாய் ச்சுப்பிரமணி, ஆனந்தம் காலனியிலிருக்கும் அம்புஜம் மாமி ஆகியோரின் கொட்டங்களை இவர் வர்ணிக்கும் அழகே தனி.

1. இப்படியும் ஒரு இனிஷியல் பிரச்சனை!
2. மடிசார் மாமியும் பைக்கில் வந்த மர்ம ஆசாமியும்
3. சன் டிவியின் திருவாளர் - திருமதி நிகழ்ச்சியில் பதிவர்கள்

அடுத்தது அபி அப்பா. சூரியனுக்கே டார்ச் லைட்டா(இது கொஞ்சம் ஓவர்தான்) அப்படின்றா மாதிரி போன வாரம்தான் நட்சத்திரமா ஜொலிச்சுட்டு கீழ இறங்கினவருக்கு நான் ஒன்னும் அறிமுகம் கொடுக்கத் தேவையில்லை. அதுனால எனக்குப் பிடிச்ச சில இடுகைகளோட சுட்டி மட்டும் இங்க தர்ரேன்.

1. அந்த ட்ரஸ்ஸைப் பத்தி மட்டும் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் அப்படின்னு படையப்பாவில் ஒரு டயலாக் வருமே அதுதான் நினைவுக்கு வருது இவரோட இந்தப் பதிவைப் பார்க்கும்போது.
2. சரி, இந்தப் பதிவு நல்லா இருக்குதான். இல்லைங்கல. அதுக்காக எத்தனை தடவை போடுவீங்க சார்? இன்னொரு தபா போட்டால் அமீரகத்துக்கு ஆட்டோ அனுப்பப் படும். ஜாக்கிரதை.
3. ஆனாலும் இவரோட இலக்கிய ஆர்வம் இருக்கே, படிக்கறவங்களுக்கு அப்படியே புல்லரிக்கும்....


இன்னும் நிறைய எனக்குப் பிடித்த நகைச்சுவைப் பதிவர்கள் உண்டு. எனக்கு தட்டச்ச இருக்கும் சோம்பலால்தான் லிஸ்ட் ரொம்பச் சின்னதா இருக்கு. மத்தவங்களுக்கு எல்லாம் என் இதயத்துல இருக்கற லிஸ்டல இடம் கொடுத்துட்டேன். நம்புங்கப்பா.... நம்பி மன்னிச்சு விட்டுருங்க. நன்றி.

Wednesday, October 3, 2007

இந்த வாஆஆ.......ரம் , என் வாஆ.......ரம்.

வணக்கம். இந்த வாரம் என்னை வலைச்சரம் தொடுக்கச் சொல்லியிருக்காங்க பொன்ஸ். சொந்தமா பதிவெழுதணும்னாத்தான் நமக்கு கொஞ்சம் சுணக்கம். ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள்னு எழுத உட்காரும் ஆள் நான். ஆனா இது வெறுமே கைகாட்டும் வேலைதானே, நம்ம கற்பனைக் குதிரைக்கு ஒரு வேலையும் தர வேண்டியிருக்காதுன்ற துணிச்சலில் நல்லா மண்டைய ஆட்டிட்டேன். இப்ப உட்கார்ந்து யோசிக்கையிலதான் தோணுது இதுவும் கஷ்டமான வேலைதான்னு தோணுது(சாப்புடறது, தூங்குறது, புஸ்தகம் படிக்கிறது இது மூன்றையும் தவிர இந்த உலகத்துல எல்லாமே கஷ்டமாத்தானப்பா இருக்கு. :) ) இருந்தாலும் வாக்குக் கொடுத்துட்டதால (நாங்கல்லாம் நாட்டம பரம்பர இல்ல?), முடிந்தவரை எழுதப்பார்க்கிறேன். என்னமோ போங்க. என்னைப் பாடச் சொல்லாதே, நான் கண்டபடி பாடிப்புடுவேன் அப்படின்னு ஒரு பாண்டியராஜன் படப்பாடல் ஞாபகம் வருது. ஆகையால் தமிழ் கூறும் நல்லுலகாகிய வலையுலகமே, இந்த ஒரு வாரம் மட்டும் பெரிய மனசு பண்ணி என்னோட தொல்லைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

முதலில் பொன்ஸ்கிட்ட நான் மன்னிப்புக் கேட்டேயாகணும். இத்தனைக்கும் ஒரு மாசத்துக்கு முன்னாடியே அவங்க மின்னஞ்சல் அனுப்பி உறுதிப்படுத்தியிருந்தாங்க. அதான் இன்னும் நாள் நிறைய இருக்கே, அப்பால பாத்துக்கலாம்னு அலட்சியமா இருந்ததுல மறந்தே போயிட்டேன். அதும் மறந்ததோட மட்டுமில்லாம் 4 நாள் சேந்தாமாதிரி விடுமுறை வேறயா, ஊருக்கு மூட்டை கட்டிட்டேன். அதுக்கப்புறம் எப்படியோ என்னைத் தொடர்பு கொண்டு கண்டிப்பா இந்த வாரம் மக்களை நாந்தான் படுத்துவேன்றதை உறுதிப் படுத்திக்கிட்டாங்க. ரொம்ப டென்ஷனாக்கினதுக்கு மன்னிச்சுக்குங்க பொன்ஸ்.

அப்புறம் வலைச்சர வழிகாட்டியின் படி முதல் இடுகை என்னுடைய பதிவுகளைப் பற்றி இருக்கணுமாம். நான் எழுதிய முக்கியமான பழைய பதிவுகளுக்குச் சுட்டி தரலாமாம். நான் எழுதின எல்லாமே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைதானே, இதுல நான் எதுக்குன்னு தனியா சுட்டி தர? :) அதுனால இதோ என்னோட வலைப்பதிவின் சுட்டி. அனைவரும் படித்துப் பயனடைய வேண்டுகிறேன்.

அப்புறம், ஒரு முக்கியமான டிஸ்கி. நான் எழுதின கவிதைகள் தாங்க எனக்குப் பிடிச்ச பதிவுகள்னு சொல்ல முடியும். பாக்கி எல்லாமே, குறிப்பா விவாதங்கள் எல்லாம் காலத்தின் கட்டாயம். :(

சரி, அறிமுக இடுகை இதுக்கு மேல போனா நல்லா இருக்காதுன்னு நினைக்கிறேன். அதுனால இத்தோட நிப்பாட்டிக்கறேன்.




அதிமுக்கியப் பின்குறிப்பு : தலைப்பை கே.டிவியின் கொண்டாட்டம் ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்.

இந்த வாரம் யாரு? வலைச்சரம் தொடுப்பவர் பேரு?

கோவி.கண்ணன் அவர்களுக்கு கண்டனம் என்று குசும்புத் தனத்தோடு தொடங்கி சீரியஸ் பதிவர்கள் & கும்மி பதிவர்கள் என்று நகைச்சுவைப்பதிவுகளைப் பட்டியலிட்ட குசும்பன், கதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று கதைகளையும் பட்டியலிட்டுத் தந்த இடுகையில் கடைசிவரியில் இருக்குது இவரது குசும்பு.

கவிதைகள் பற்றி ஒரு தொகுப்பு, உபயோகமான சுட்டிகள் என்று தொடர்பதிவுகளின் சுட்டிகள் தந்துள்ளார். ஒவ்வொரு இடுகையிலும் எங்காவது அவரது குறும்பு எட்டிப் பார்க்கத் தவறவில்லை. ஐந்து இடுகைகளுடன் தனது இன்னிங்சை முடித்துக் கொண்ட குசும்பன் தந்த சுட்டிகளும் அருமை.

-oOo-

இந்த வாரம் வலைச்சரம் தொடுப்பவர் மலர்வனம் லக்ஷ்மி. தனது வலைப்பதிவில் கதைகள் கவிதைகளோடு தான் வாசித்த புத்தக விமர்சனங்களும் விரிவாக ரசித்து எழுதியியிருக்கிறார் . சமூக அக்கறை மிளிரும் கட்டுரைகளும் வரைந்திருக்கிறார்

லக்ஷ்மி தரப்போகும் எழுத்துச் சரமும் இலக்கியவாசனை மிளிரும் என்ற நம்பிக்கையோடு வலைச்சர வாரத்தை எதிர்நோக்குகிறோம்.