07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 11, 2007

கும்மிகள் மற்றும் கலாய்த்தல்கள்!

வலைப்பதிவுகளை வகைப்படுத்த முயன்றால் கும்மி, மொக்கை, கலாய்த்தல் என அழைக்கப்படும் நகைச்சுவைப் பதிவுகளே பெரும்பான்மை பெறக்கூடும். அந்த அளவிற்கு இணையத்தில் நகைச்சுவைப் பதிவுகள் நிரம்பி வழிகின்றன. சில பதிவுகளைப் படிக்கையில் கணினி முன்பாகவும், எப்போதாவது நினைவுக்கு வருகையில் பொது இடங்களிலும் கூட வாய்விட்டுச் சிரித்த அனுபவங்கள் உண்டு!!

கும்மி அல்லது கலாய்த்தல் என்றதும் நாமக்கல் சிபியும் அவரின் ' வலையுலக அமீரக வாரிசு' (??!!) குசும்பனும் தான் சட்டென நினைவுக்கு வருகிறார்கள்!

"ப்ரீத்திக்கு நான் கேரண்டி" என்பது போல் குசும்பனின் வலைப்பதிவு கண்டிப்பாய் சிரிப்புக்கு கேரண்டி! இவர் பதிவில் 'நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற" கொடுத்திருந்த டிப்ஸ் தான் நான் முதலில் படித்தது. 3 ரப்பர் ஐடியாவை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன்! இளா கவிதைக்கு இவர் எழுதிய உரை அசத்தல் காமெடி!!
துபாயில் ஒரு ஜாலி கவிதைத் திருவிழா, இளம் ஹீரோ பால பாரதி தலைவன் படத்திலிருந்து விலகினார். , ஒரு அப்பாவி நம் வலைப்பதிவர்களிடம் விலாசம் கேட்கிறார் ஆகியவை எனக்குப் பிடித்த பதிவுகள்!

கலாய்த்தலுக்கென கலாய்த்தல் திணை என்ற பெயரிலேயே பதிவெழுதும் சிபியின் அட்டகாசங்கள் தாங்க முடியாதவை! இவரின் வெள்ளை அறிக்கை உலகமகா மொக்கை! இதை மீள்பதிவாக வேறு போட்டு கொடுமைப்படுத்தினார்! இந்திய கிரிக்கெட் அணியைக் கலாய்க்கும் 'நாங்க என்ன பண்ணுறது', 'வீராச்சாமி சூப்பரா ஓடுதாம்' போன்ற பதிவுகளும் என் கவிதைக்கு இவரெழுதிய எதிர்கவுஜயும் வாய்விட்டு சிரிக்க வைத்தவை!

காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் மற்றொரு பதிவர் டுபுக்கு. நான் வந்த புதிதிலேயே இவரின் தீவிர ரசிகையாகி விட்டேன். கலக்கலான துள்ளல் நடை இவருடையது! இவர் பதிவுகளில் பெரும்பாலானவை எனக்குப் பிடித்தவை என்றாலும் டைப்பு டைப்பு , தாய்லாந்தில் தைப்பூசம், டிஷ்வாஷர், ஆகியவை நான் மிகவும் ரசித்த பதிவுகள்!


இவர்கள் தவிர கும்மி, மொக்கை என்ற வார்த்தைகளுக்கு தமிழ் அகராதியில் மற்றுமொரு பொருளும் உண்டு. அதன் பெயர் 'அபிஅப்பா'! சூனாபானா ரேஞ்சில் இவர் எழுதும் அலம்பல் பதிவுகள் தவிர்க்க முடியாமல் சிரிக்க வைப்பவை! இவரின் அஞ்சு ஜார்ஜும் அபிபாப்பாவும், குரங்கு ராதாவுக்கு ஒரு கடிதம் இரண்டும் எனக்குப் பிடித்தவை. சமீபத்தில் கோபியைக் கலாய்த்து எழுதிய நைனா சபை கோபிஅன்னனுக்கு ஒரு கடிதம் படித்து வாய்விட்டுச் சிரித்தேன்!


'கவுஜை' என்ற சொல்லையும் 'எதிர்கவுஜை' மரபையும் தோற்றுவித்த பெருமைக்குரியவர் ஆசீப்மீரான் அண்ணாச்சி தான் என்று வரலாறு சொல்கிறது. (நிஜமான்னு தெரியல!) அண்ணாச்சியின் நக்கலும் நையாண்டியுமான எழுத்து அவருக்கு மட்டுமே சாத்தியம். அய்யனாரின் ஆற்றின் உட்பரப்பு கவிதைக்கு குளத்தின் வெளிப்பரப்பு என்றும் போஓஓஓஓ என்ற கவிதைக்கு வாஆஆஆஆ என்றும் இவர் எழுதிய எதிர்கவுஜைகளுக்கு கண்ணீர் வரச்சிரித்திருக்கிறேன்! இவரால மட்டும் எப்பிடி முடியுது?


குட்டிப்பிசாசு என்ற பெயரில் சிரிக்கவும் சிந்திக்கவும் பதிவெழுதி வந்த பாசக்கார குடும்ப உறுப்பினரான அருண் திடீரென காணாமல் போய்விட்டார். அதாவது பிசியாக இருக்கிறார்! இவரின் 'ஆயிரம் பின்னூட்டமிட்ட அபூர்வ பாசக்கார குடும்பம்' ,
பாசக்கார படையே! ஆணி பிடுங்கியதுபோதும் அணி திரள்வீர்!!!, சந்தேகத்திற்குரிய சாமியாரும் சீடனும் காந்திசிலையருகே கைது ஆகியவை மிகச்சிறந்த மொக்கைப் பதிவுகள்!

கண்மணி அக்கா பற்றி சொல்லவே தேவையில்லை. நகைச்சுவையில் பட்டாசு கிளப்புகின்றன இவர் பதிவுகள்! ப்ளாக் தண்டரில் பாசக்கார குடும்பம், மற்றும் ச்சுப்பிரமணி பற்றிய பதிவுகள் எனக்கு பிடித்தவை!

இன்னும்ம்ம்

சிவிஆரின் 'தள' சிபியின் தேர்தல் பிரச்சாரம் - ஒரு சிறப்புக்கண்ணோட்டம்
செந்தழல் ரவியின் பின்னவீனத்துவவாதியின் பிறாண்டல்கள், மற்றும் தமிழ்ச்சியிடம் இருந்து தப்பிக்க ஓசை செல்லாவுக்கு 7 யோசனைகள்,
ஜியின் லொள்ளு சபா பல்லவன்
ராமின் வெட்டிகாரு செப்பண்டி
மை ஃப்ரண்ட்டின் சங்கத்து சிங்கங்களின் மலேசியா டூர்
சச்சின் கோப்ஸின் காபி வித் கோபி -ஜி3
இளாவின் டோண்டூ - வேணாமே

நினைவிலிருக்கின்றன!

ஸ்ஸ்ஸ்.. கண்ணக் கட்டிருச்சு.. எத்தனை இடுகையடா.. அதில் தான் எத்தனை மொக்கையடா!!

4 comments:

  1. அருமை அருமை...நாங்களும் வந்துட்டோம்....

    ReplyDelete
  2. கும்மி அல்லது கலாய்த்தல் என்றதும் நாமக்கல் சிபியும் அவரின் ' வலையுலக அமீரக வாரிசு' (??!!) குசும்பனும் தான் சட்டென நினைவுக்கு வருகிறார்கள்!

    குட்டீஸ் நோட் தி பாய்ண்ட்....

    ReplyDelete
  3. அக்கோவ்! கலக்குங்க! எக்ஸ்பிரஸ் ஓட்டம் தொடரட்டும்.

    ReplyDelete
  4. ஹாஹாஹா.. எங்கடா மொக்கைகள் காணோமேன்னு பார்த்தேன்.. கடைசி நாள் வரைக்கும் இழுத்துடீங்க. :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது