சிரிப்பு விருந்து
நகைச்சுவை பதிவுன்னு சொன்னாலே முதல்ல ஞாபகம் வர்றது நம்ம அருண் தான். அவரோட சில பதிவுகள் இங்க உங்களுக்காக
* பனிச்சறுக்கு விளையாட போயிட்டு கோச் சொல்லிக்குட்த்தத கவனிக்காம அங்க இருந்த பிகருங்கள பாத்து சைட் அடிச்சுட்டு கடைசில மாட்டின பூட்ஸ் காலோட உருண்டு புரண்டு வழுக்கி சறுக்கி ஒரு வழியான கதை.
* பொது விழாக்களுக்கு போகும் போது உங்கள் மனைவியை கூட்டிட்டு போகாதீங்கன்னு சொல்லி அதுக்கு காரணத்தையும் சொல்ற பதிவு
* திருவிளையாடல் ஆரம்பம் படத்த பாத்து நொந்து நூடுல்ஸ் ஆகி அவர் போட்ட புலம்பல் பதிவு (புலம்பும்போது கூட நக்கலா புலம்ப இவங்களாலத்தான் முடியும் போல :)) )
* நீங்க சமைக்கும் போது அது தீஞ்சு போயிட்டா என்ன பண்ணுவீங்க? தலைவிதியேன்னு கஷ்டப்பட்டு சாப்பிடுவீங்க இல்லாட்டி தூக்கி குப்பைல போடுவீங்க தானே. இங்க இவர பாருங்க. கத்திரிக்காய தீச்சது மட்டிமில்லாம, அதை பத்தி ஒரு பதிவு, கவுஜ, இது மூலமா தெரிஞ்சிக்கிட்ட தத்துவம்னு ஒரு கலக்கு கலக்கறாரு.
* இது எல்லாத்தையும் விட பெஸ்டுன்னு சொல்லனும்னா இவரு நண்பர வழியனுப்ப இவரு போட்ட இந்த பதிவு தான். என்ன ஸ்பெஷல்ன்னு நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க :)
அடுத்து நான் சொல்லப்போறது நம்ம சிங்கம் ஏஸோட பதிவுகள பத்தி. பாவம் அவரும் வந்ததுல இருந்து எல்லாரும் என்ன கொடுமை இதுன்னு அவர பாத்தே கேக்கறதால சரவணன்ற பேர ஏஸ்னு மாத்தினாரு. அப்பவும் விடாம என்ன கொடுமை இது ஏஸ்னு கேட்க அவரும் பேர ஐ ஆம் நாட் ஏஸ் னு மாத்தினாரு. அப்பவும் யாரும் விடலன்னு கடைசில சிங்கம்லே ஏஸ்னு பேர மாத்திட்டு சிங்கம் மாதிரியே அவர் ப்ளாக்கையும் இப்போ தூங்க விட்டுட்டாரு. அவரோட பதிவுகள்ல சிலது உங்களுக்காக
* திருவிளையாடல் படத்துல, சொக்கன் - நக்கீரர் விளையாட்டுல சொக்கனுக்கு ப்ராக்ஸியா போன தருமி பாட்டு தப்புன்னதும் புலம்பின புலம்பல எல்லாரும் பாத்திருப்பீங்க. அதே டேமேஜர் குடுத்த பக் (bug) இருக்கற சாப்ட்வேரோட கிளையண்ட் கிட்ட மாட்டிக்கிட்டு இவரு புலம்பறத பாருங்க.
* "உடம்புக்கு வந்தால் புலம்புவோம். சுஜாதா போன்ற சிலர் மருத்துவம்+அறிவியல் தகவல் கொடுத்து ஆன்ஜியோகிராம் எல்லாம் விளக்கலாம். இவரோ, கலக்கலாய் ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரை படித்த ஞாபகம், அமெரிக்க மருத்துவமனையின் எமர்ஜென்சி முறை, என்று அவரின் கஷ்டத்தை நகைச்சுவையாக சிரிக்க வைத்து பகிர்கிறார். என்னமா எழுதறார்…" - இது கில்லில இந்த பதிவ பத்தி வந்த விமர்சனம் :)
* இவரு கல்லூரில படிக்கும் போது நிஜமாவே சிங்கமா இருந்த கதைய இங்கன படிங்க. கடைசில கமெண்ட் போட சோம்பல் படறவங்களுக்காக இவரே 2 சாய்ஸ் குடுத்து ஏதாவது ஒன்ன காப்பி போஸ்ட் பண்ணிட்டு போங்கன்னு வேற சொல்றாரு :))
* திருவிளையாடல் ரீமிக்ஸ் பாத்தீங்க. பராசக்தி ரீமிக்ஸ் பாக்காம விடலாமா?? (இந்த பதிவ இவர் போட காரணம் அதுக்கு முன்னாடி யாஹூ காண்பரன்ஸ்ல அவரையும் சேத்து ஒரு 10 பேர் கும்மு கும்முனு கும்மினது தான் :) )
அடுத்து நாம பாக்க போறது திரு.கடல் கணேசன் அவர்களோட பதிவுகள. இவரோட சீரியஸ் பதிவுகள பத்தி நம்ம தங்கச்சிக்கா போன வாரம் சொல்லி இருந்தாங்க. ஆனா அவரோட நகைச்சுவை பதிவுகளும் ரொம்ப அருமையா இருக்கும். ஒரு காலத்துல புதன்கிழமைனா எங்கள ஏமாத்தற பதிவா போட்டு பல வாரங்கள் வாசகர்களை ஏமாற்றியவர்.
* ரோஸியும் என் திருமண நாளும்னு இவர் போட்ட பதிவு (ரோஸி அவருடைய கற்றது கடலளவு தொடரில் வரும் ஓர் உண்மை கதாபாத்திரம். அதனால அநியாயத்துக்கு நிறைய பேர் ஏமாற்றப்பட்டார்கள் இந்த பதிவில் :) )
* தமிழின் டாப் டென் வலைப்பதிவர்கள் பற்றி ஒரு பதிவு (இந்த பதிவில் பின்னூட்டங்களை மறக்காமல் படித்து பாருங்கள் :) )
* என் இனிய லாப்டாப் என்று அவர் லாப்டாப்பை பற்றி அவர் கண்ட கனவு
* கடைசியாக அவருடைய காதல் கோட்டை கதை
இந்த தலைப்புல இன்னும் நிறைய இடுகைகள் கைவசம் இருக்கு. முடிந்தால் இன்னொரு நாள் அதை எல்லாம் பதிவிடுகிறேன் :)
|
|
உள்ளென் அய்யா, பதிவு எல்லாம் பாத்துட்டு வரென்
ReplyDeleteஎன்னது இது கும்மி அடிக்க வசதியான பதிவா இருக்கும் போலகீது.
ReplyDeleteநாங்க எல்லாம் யாருன்னு இன்னும் தெரியல போலருக்கு...நாங்க ஆட ஆரம்பிச்சா 1000 அடிக்காம நிறுத்த மாட்டோம். இம்சையோட பேர காப்பாத்தனும் இல்ல.
ReplyDeleteஇப்போதைக்கு நிறுத்திக்கறென். பின்னாடி வரென்.
@பவன்
ReplyDeleteஅடடா, காலங்கார்தால வந்தாச்சா கும்மி அடிக்க? வாங்க வாங்க. இன்னிக்கு நீங்க தான் முதல் போனி :)
நகைச்சுவை இவ்வளவு பேர் தானா? ஆனாலும் நீங்க கஞ்சம் தான். சாப்பாடுல மட்டும் வஞ்சமில்லாம இருக்கீங்க. இருந்தாலும் பரவாயில்லை.
ReplyDeleteமன்னிப்பா? எங்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.
//Baby Pavan said...
ReplyDeleteஎன்னது இது கும்மி அடிக்க வசதியான பதிவா இருக்கும் போலகீது.**//
வாப்பா மின்னுலு! ஆரம்பமா?
ரொம்ப சின்ன பதிவா போட்ட G3 ஆன்ட்டிக்கு கணடனங்கள்.
ReplyDeleteகவுண்டிங் ஸ்டார்ட்ஸ் நவ்.
///திருவிளையாடல் ஆரம்பம் படத்த பாத்து நொந்து "நூடுல்ஸ்" ஆகி அவர் போட்ட புலம்பல் பதிவு (புலம்பும்போது கூட நக்கலா புலம்ப இவங்களாலத்தான் முடியும் போல :)) )///
ReplyDelete"நூடுல்ஸ்" ஞாபகம் வருதே ஆன்ட்டிக்கு
*/// நீங்க சமைக்கும் போது அது தீஞ்சு போயிட்டா என்ன பண்ணுவீங்க? தலைவிதியேன்னு கஷ்டப்பட்டு சாப்பிடுவீங்க//
ReplyDeleteநல்ல கவலை போங்க. அங்கயும் சாப்பாடு தானா
அக்கா என்ன சொல்லிட்டு நீங்க தான் கும்மிட்டு இருக்கிங்க
ReplyDelete\\வேதா said...
ReplyDeleteநகைச்சுவைல கலக்கற நம்ம மக்கள்ஸ் நிறைய பேர் இருக்காங்க அத்தனையும் போடனும்னா ஒரு வலைச்சரம் பத்தாது தான் :)
அட இன்னிக்கு போட்ருக்கற பதிவர்கள் எல்லாம் ஷார்ட் டேர்ம் லீவுல போயிருக்கற மக்கள்ஸாச்சே :)
\\
ரீப்பிட்டேய்ய்ய்ய்
கோபிநாத் said...
ReplyDelete\\வேதா said...
நகைச்சுவைல கலக்கற நம்ம மக்கள்ஸ் நிறைய பேர் இருக்காங்க அத்தனையும் போடனும்னா ஒரு வலைச்சரம் பத்தாது தான் :)
அட இன்னிக்கு போட்ருக்கற பதிவர்கள் எல்லாம் ஷார்ட் டேர்ம் லீவுல போயிருக்கற மக்கள்ஸாச்சே :)
\\
ரீப்பிட்டேய்ய்ய்ய்
நானும் ஒரு ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்....
post is good but u missed a lot.
ReplyDeletepavan & vidya akka kummiyaa???
ReplyDeleteavvvvvvv
என்ன நடக்குது இங்க?..யாராவது ஜொள்ளுங்களேன்..சாரி ..சாரி சொல்லுங்களேன்..
ReplyDeleteஅருணோட, தனுஷோட, திருவிளையாடலோட, ஆரம்பத்தோட, விமர்சனத்தோட பதிவோட பின்னூட்டங்களை பதிவோடு சேர்த்துப் படித்தேன்.
ReplyDeleteநல்ல நகைச்சுவை - சிரித்தேன்.
அருமையான சுட்டி - நக்கீரன் கிட்டெ மாட்டிக்கிற தருமி - சொக்கன் சொன்னான்னு - நிரலைக் கொண்டு போய் ......... = புலம்பல்ஸ்
ReplyDeleteநல்லாவே இருந்திச்சி
பொது விழாக்கள் - மனைவி சகிதம் ஆஜர் - விளையும் நன்மை தீமைகள் - அர்ண் இணைத்திருக்கும் புகைப் படங்கள் அருமை.
ReplyDelete@வேதா
ReplyDeleteஅதே. முடிஞ்சா இன்னொரு பதிவும் போடறேன் :)
@வித்யா
ReplyDeleteமன்னிப்பு வேணாம்னா அப்படியே பக்கத்துல இருக்கற குப்பைத்தொட்டில போட்டுடுங்க :)
// G3 ஆன்ட்டிக்கு கணடனங்கள். //
பதிவ நான் தானே போட்டேன். எதுக்கு எங்க ஆன்ட்டிக்கு கண்டனம்?
//"நூடுல்ஸ்" ஞாபகம் வருதே ஆன்ட்டிக்கு//
//நல்ல கவலை போங்க. அங்கயும் சாப்பாடு தானா//
ம்ம்ம்ம்ம்ம்ம் :)))
@பவன்
ReplyDeleteநல்லா கேளு ராசா :)
//நானும் ஒரு ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்....//
:)))
@கோபி
ReplyDelete// ரீப்பிட்டேய்ய்ய்ய்//
:))))
@சிவா
ReplyDeleteநான் நீங்க படிக்காத லிங்கா குடுக்கனும்னு ஆசைப்பட்டேன். அதான் :)
@ரசிகன்
ReplyDeleteஎதுவுமே நடக்கலையே. எல்லா எழுத்தும் அப்படியே தானே இருக்கு :)
@சீனா
ReplyDeleteபதிவின் நோக்கம் நிறைவேறியது :)) நன்றிங்க :)