07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 16, 2007

சீரியஸாய் ஒரு பதிவு

கதை காமெடின்னு மட்டும் இருந்தால் போதாது. நம்மை சுற்றி என்ன நடக்குது என்றும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். நாளிதழ் படிக்கும் பழக்கமே எனக்கு குறைவுதான். திறந்தாலே கொலை, கொள்ளை, கட்சிக்கும் கட்சிக்கும் சண்டை, etc etcன்னுதான் செய்தியாய் வருகின்றன. மீறி வரும் ஒன்றிரண்டு நல்ல செய்திகளும் விருவிருப்பாக எழுதப்படாததால் இரண்டே வரிகள் படித்ததும் தூக்கம் கண்களை சொக்கி நாளிதழை கையில் பிடித்தபடியே தூங்கிவிடுவேன்.

அப்படிப்பட்ட நான் நண்பர்கள் எழுதும் சில சமூதாய சிந்தனை தகவல்கள் விருவிருப்பாக அமைந்ததால் ஈர்க்கப்பட்டும் இருக்கிறேன்.

ஏதோ கொஞ்சம் டைம் பாஸ் அவ்வளவுதானுங்க என்று கோவை ஸ்டைலில் பேசும் அனுசுயா ஒரு நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். ஆனால், அவருடைய பதிவுகளில் சமூக சிந்தனைகள் நிறைந்ததாகவே இருக்கும். கோவை சுற்று வட்டாரத்தில் நடக்கும் விஷயங்களையும் தனது ஆதங்கத்தையும் வெளிக்காட்டுகிறார் இவர். நான்கு வருடத்துக்கு முன்பு ஆரம்பித்த பாலம் இன்னும் இணையாத பாலமாகவே இருப்பதையும், போராட்டங்களும் அதில் இருக்கும் நன்மை தீமைகளையும் எழுதியிருக்கிறார்.

இன்றைய தலைமுறையினர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வேண்டுமா? நாம் செல்ல வேண்டியது ராஜப்பாட்டைக்குத்தான்.

நாம் சென்று கொண்டிருக்கிற பேருந்தை சரியாக இயங்க வைக்க கூட நாம் முன் வராத போது நம்முடைய சமுதாயம் நல்ல முறையில் நடக்க நாம் என்ன செய்ய போகிறோம்.”

நாம் ஏன் இப்படி? என்ற பதிவில் வெங்கட்ராமன் கேட்கும் கேள்வி. பதில் சொல்ல முடியுமா நம்மால்? நாளிதழில் வரும் செய்திகள்.. தினம் தினம் வெளிவரும் செய்திகள்.. ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் பின்னப்பட்டவை போலவே ஒரே மாதிரி செய்திகள். இந்த கருமங்களைத்தானா தினமும் படிக்கிறீங்க?

பேருந்தில் பல சம்பவங்கள் நடக்கின்றன இப்பொழுது. அதில் ஒன்று எப்போதும் கோபமாகவே இருப்பாங்க போல என்று முத்துலட்சுமி அக்கா எழுதியிருக்காங்க. பேருந்து, ரயில் டிக்கேட் எடுக்கும்போது நாம் டிக்கேட்டில் எழுதியுள்ள தேதியை பார்ப்பதே இல்லை. எல்லாம் சரியாத்தான் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கை. டிக்கெட்டை பார்த்து வாங்குங்கப்பா படிக்க மறவதீங்க. Kitar Semula என்று மலாயில் சொல்வார்கள். தமிழில் மறுசுழற்ச்சி முறை என்று சொல்வாங்க. இங்கே மலேசியாவில் அது அமலில் இருந்தும் மாற்றங்கள் பெரியளவில் நிகழவில்லை. விளம்பரங்களும் அதற்கான நடவடிக்கைகளும் குறைவு என்று சொல்லலாம். தலையை சுற்றி ஒளிவட்டம் என்ற பதிவில் இந்த முறையை விளக்கியுள்ளார். ஞாபக மறதி என்னைப்போல உள்ளவங்க படிக்க வேண்டியது இன்று என்ன கிழமை?

விஞ்ஞானியை பற்றி இந்த பதிவில் சொல்லவில்லையென்றால் இந்த பதிவுக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். யாரந்த விஞ்ஞானின்னு நீங்க கேட்கலாமா? அவர்தான் சி.வி.ஆர்-ன்னு நான் சொல்லியா உங்களுக்கு தெரியவேண்டும்? இவர் எழுதும் அனைத்துமே நட்சத்திர தகுதியுடையவை. காதலைப்பற்றி இவர் செய்த ஆரய்ச்சி, வானுக்குள் விரியும் அதிசயங்கள் என்று விண்வெளி சம்பந்தப்பட தகவல்கள், படம் புடிக்கலாம் வாங்க, சினிமா காரம் காப்பி என்று பல விஷயங்களிலும் தன் அறிவை வளர்த்து நமக்கும் சொல்லிக்கொடுக்கிறார் விஞ்ஞானி.

தூக்கத்தைப் பற்றி அறிய வேண்டுமா? தூக்கம் கண்களை தழுவட்டுமே என ஆய்வு செய்கிறார் சினேகிதி. ஆரம்பத்தில் சொந்த கதை, கற்பனை கதைன்னு எழுதிக்கொண்டிருந்த சினேகிதி, பிறகு ஆய்வியல் கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வம் காட்டினார். அவருடைய சைக்கோலோஜி படிப்பும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மல்டிபள் பெர்சனலாட்டி டிஸோர்டர், உன்னை எனக்கு பிடிக்கும் என்னை உனக்கு பிடிக்கும் இவ்வகையை சேர்ந்ததுதான்.

இந்த வார நட்சத்திரம் சந்தோஷ் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களிலும் நல்ல அக்கறை காட்ட கூடியவர். உலக அதிசயங்கள் ஓட்டு நடக்கும்போது எல்லாரும் ஓட்டு போட்டோம். ஆனால், அதில் ஏமாற்றம் அடைந்தது நாம்.. சம்பாதிக்கிறது அவர்கள் என்று அவர் கருத்தை உலக புதிய அதிசயங்களும் ஏமாளி இந்தியர்களும் என்று எழுதியிருப்பார்.

ஈழத்து மக்கள் அவர்களின் அனுபவத்தைப் பற்றி எழுதினால் அதில் சோகங்களும் துயரங்களுமே மிஞ்சி இருக்கும். தூயாவின் நானும் என் ஈழமும் என்ற தொடரில் தன்னுடைய அனுபவத்தையும் தாண்டி உணர்வு சம்பந்தப்பட்டதை எழுதுகிறார்.

இணையத்துல விவசாயம் பண்ற இவர் பல சமயம் வித்தியாசமாக ஏதாவது பண்ணனும்ன்னு நினைப்பவர். எல்லாரும் நக்கலா பதிவெழுதும்போது இவர் மொக்கையா பதிவெழுதுவார். எல்லாரும் மொக்கை போடும்போது இவர் சீரியஸா பதிவெழுதுவார்.. ஆனால் அந்த சீரியஸ் பதிவையும் சீரியஸாய் காட்டாத மாதிரி நகைச்சுவையும் கலந்தெழுதுவார். வவா சங்கத்தின் முக்கிய முதுகெலும்பு இளாதான் இவர். ஆண் - பெண் நட்பு சரியா தவறா என்று கொசுவர்த்தி சுற்றிய பதிவு, Acquisition & Merger, பலி கெடா - சைவமா? அசைவமா?, வேட்டையாடு விளையாடு - My Take போன்றவைகள் இவர் எழுத்துக்களுக்கு ஒரு சான்று.

தம்பியை பற்றி எழுதவேண்டும் என நினைக்கும்போது எந்த பிரிவில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. கதையும் எழுதுகிறார், நகைச்சுவையிலும் பிண்ணுகிறார். அதே வேளையில் அவருடைய பதிவுகளில் நமக்கு சேர வேண்டிய கருத்துக்களும் திணித்திருப்பார். எனக்கு இவருடைய எழுத்து நடை மிகவும் பிடிக்கும். நாமெல்லாம் ஏதோ ஒரு பிராணியின் மேல் பிரியம் வைத்திருந்தாலும் இந்த அளவுக்கு எழுத முடியுமா என்று தெரியவில்லை. பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் அனுபவம் எவரையும் வெளித்தோற்றத்தை வைத்து எடை போடாதே என்று அருமையாக சொல்லியிருப்பார். முடிந்தால் எல்லா பதிவுகளை ஆராய்ந்து பாருங்களேன்...

புதுசா வருது நாளைய சரம். காண மறவாதீர்கள். ;-)

12 comments:

  1. ஆஹா என்ன சீரியஸ் எழுத்தாளர்னு சொல்லிட்டயே. சே எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிட்டயேமா இனி அது ஒரு சீரியஸ் பதிவாவது பாடாம விடாதே :)

    ReplyDelete
  2. அக்கா வந்தாச்சு. ஆமா தமிழ்மணத்தில வருவதற்கு முன்னாலயே பின்னூட்டம் இருக்கு. மற்றபடி அக்காவை நிறைய ஹோம் வொர்க் செய்ய வைக்கும் வலைச்சரத்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. நன்றி மை பிரண்ட்.
    நம்ம பதிவையும் ஞாபகம் வச்சிருந்து லிஸ்ட்ல சேர்த்ததுக்கு.

    ReplyDelete
  4. எப்படியோ எல்லா blogger நண்பர்கள் பத்தியும் ஒரு நல்ல introduction கிடைச்சது.
    மிக்க நன்றி.....

    ReplyDelete
  5. @Baby Pavan:

    //Thanks akka//

    நன்றி தம்பி :-)

    ReplyDelete
  6. @அனுசுயா:

    //ஆஹா என்ன சீரியஸ் எழுத்தாளர்னு சொல்லிட்டயே. சே எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிட்டயேமா இனி அது ஒரு சீரியஸ் பதிவாவது பாடாம விடாதே :)//

    சிங்கக்குட்டியே, அடுத்த சீரியஸ் பதிவை போடுங்க. :-))

    ReplyDelete
  7. @மங்களூர் சிவா:

    //repeaaat
    //


    எதுக்கு ரிப்பீட்டேன்னு தெரியாமல் போட்டுட்டீங்களோ சிவா?? ;-)

    ReplyDelete
  8. @வித்யா கலைவாணி:

    //அக்கா வந்தாச்சு. ஆமா தமிழ்மணத்தில வருவதற்கு முன்னாலயே பின்னூட்டம் இருக்கு. மற்றபடி அக்காவை நிறைய ஹோம் வொர்க் செய்ய வைக்கும் வலைச்சரத்திற்கு நன்றி.
    //

    அது ஒன்னுமில்லைக்கா.. பிஜியா இருக்கும்போட்Hஏ போஸ்ட் ரிலீஸ் பண்ணீட்டேண். தமிழ்மணத்துல இணைக்க டைம் கிடைக்கல. அதான். ;-)

    ReplyDelete
  9. @வெங்கட்ராமன்:

    //நன்றி மை பிரண்ட்.
    நம்ம பதிவையும் ஞாபகம் வச்சிருந்து லிஸ்ட்ல சேர்த்ததுக்கு.//

    நல்ல பதிவுகள் எப்போதும் மறக்காது வெங்கட். :-)

    ReplyDelete
  10. @ரங்கன்:

    //எப்படியோ எல்லா blogger நண்பர்கள் பத்தியும் ஒரு நல்ல introduction கிடைச்சது.
    மிக்க நன்றி.....
    /

    ஹீஹீஹீ.. :-)))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது