07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 25, 2007

முத்துச்சரம்

எப்பவும் எந்த விஷயத்தையும் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி
பெரியவங்களுக்கு மரியாதை செலுத்தணும்னு சொல்வாங்க.
நானும் ரொம்ம்ப மரியாதையான பையன் அதனால வலைப்பூ
உலகத்துலயும் நிஜ உலகத்துலயும் கலந்து இங்கே இயங்கிக்
கொண்டிருக்கும் எழுத்தாளர்களை பார்க்கலாம்.


துளசிதளம் துளசிகோபால்


இவங்ககிட்ட இருக்கும் முக்கியமான விஷயமே உற்சாகம் என்ற
ஒரு வார்த்தைதான். இவர் பதிவை வாசிக்கும்போது அவங்க
நேர்லயே பேசற மாதிரி இருக்கும். எனக்கு தெரிஞ்சி வலைப்பதிவுல
இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கும் பூ இவருடையது.
நான் வலைப்பூ எழுத வந்த புதிதில் பின்னூட்டமிட்டு
ஊக்கப்படுத்தியவர் எனக்கு மட்டுமல்ல இன்றுவரை புதிதாக வந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் பின்னூட்டமிட்டு
உற்சாகப்படுத்துவார். வருங்காலத்துல குழந்தைகளுக்கு
பாட்டிகள் கதை சொல்லி சந்தோஷப்படுத்த மாட்டாங்க அந்த
குறையை துளசிதளம் தீர்க்கும். முயற்சி செய்தால் நியூசிலாந்து
பகுதி மற்றும் வீடு "வா வா"ங்குது தொடர்களை புத்தகமாக
வெளியிடலாம். பேதம் பார்க்காமல் அன்பு பாராட்டும்
இவரைப்போல இன்னொருத்தர் இருக்கார். அவரைத்தான் அடுத்து
நாம பாக்கபோறோம். I am very happy to welcome Mrs.வல்லிசிம்ஹன்.
(நேத்து காபி வித் அனுவ பத்தேன் அந்த எபெக்ட்)

வல்லிசிம்ஹன்

இவங்க பதிவை அதிகமா வாசிச்சது கிடையாது ஆனா என்னை
மாதிரியே எழுத்துலயும் வளர்ந்த குழந்தை. எப்படி தேடினாலும்
எழுத்தில் அன்பை மட்டுமே காணமுடியும். இவரை நேரில்
சந்தித்தபோது குழந்தையிடம் பேசியது போல அனைவரிடமும்
பேசியது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. பெரும்பாலும்
ஆன்மீக பதிவுகள் மட்டுமே எழுதுவார். நன்றாக புகைப்படம்
எடுப்பவர். எந்த பதிவுக்கு சுட்டி கொடுக்கறதுன்னு தெரில.
முழுவதும் அப்படியே படிக்கலாம் எல்லாமே சின்ன சின்ன
பதிவுகள்தான்.

கீதா சாம்பசிவம்

மற்ற இரு பதிவர்கள் மாதிரி இவங்க கிடையாது. கொஞ்சம்
இல்ல நிறையவே லூட்டி அடிப்பாங்க. எல்லாமே ரசிக்கிற
மாதிரி இருக்கும். திரும்பி பார்க்கிறேன் (கழுத்து வலியோடு)
இந்த தலைப்பை ரொம்பவே ரசித்தேன். தலைவின்னு சொல்லி
இவங்க படுத்துன பாடு மறக்கவே முடியாது. இவங்களுடைய
பதிவையும் நெடுநாளா வாசிக்கல. அதனால எந்த பதிவை
சிலாகிச்சு எழுதறதுன்னு குழப்பமா இருக்கு அதனால பூவின்
சுட்டிய சொடுக்கி பாருங்க பயங்கரமான சுவாரசியம் உள்ள
பதிவர். ஆன்மீக பதிவுகள் அதிகமா இவரும் எழுதுவார்.
ஏன் இந்த மாதிரி பெரியவங்க எல்லாம் ஆன்மீக பதிவுகள்
மட்டும் நிறைய எழுதறாங்கன்னு தெரில. :)

டோண்டு ராகவன்

வலைப்பூக்களில் மிகவும் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் இவர்
என்றாலும் மிகவும் பழுத்த அனுபவசாலி. இவரிடமிருந்து
கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. முதலில்
சொல்ல வேண்டியது மொழிப்புலமை இரண்டாவது அத்தொழிலில்
கொண்டிருக்கும் நேர்த்தி. CPWD அனுபவங்கள் மற்றும் IDPL
நினைவுகள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. மத்திய
அரசு ஊழியர், அரசியல் விமர்சகர், மொழிபெயர்ப்பாளர்,
மூத்த வலைப்பதிவர் இப்படி பன்முக புலமை பெற்றவர்
இவரின் பிடிவாதகுணம் வியப்பான விஷயங்களில் ஒன்று.

டாக்டர் டெல்பின்

முதலில் இவங்கள பத்தின பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை
ஆனால் எதேச்சையாக இவரின் அபாயத்து பாட்டி என்ற பதிவுதான்
என்னை மிகவும் கவர்ந்தது. வலைப்பூக்களில் மருத்துவ
விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியாக பதிவுகள் எழுதுவதை அனைவரும்
வரவேற்க வேண்டும். அடுத்ததாக இவர் வலைப்பூவின் தலைப்பு
"இலையிதிர்காலம்" கேட்கவே அழகான பல வடிவங்களை
மனதுக்குள் ஏற்படுத்தும் வார்த்தை.

தருமி

பேராசிரியர், நகைச்சுவை உணர்வு கொண்டவர், அனுபவசாலி,
அரசியல் விமர்சகர், மிகுந்த சமூக அக்கறை கொண்டவர்,
நல்லவர், வல்லவர், மதுரைக்காரர், கேள்வி கேட்பதில் வல்லவர்
(பதிலும் தெரிந்தே இருக்கும்) இப்படி நிறைய சொல்லலாம்.
புதிதாக வலைப்பதிய வருபவர்கள் காமா சோமா என்று பதிவு
எழுதாமல் மூத்த வலைப்பதிவர்களை பார்த்து உபயோகபூர்வமாக
எழுத வேண்டும். ஏன் சொல்றேன்னா இவருடை வலைப்பூ
பார்த்த பிறகுதான் பதிவு எழுதுனோம்னா அதுல பிரயோஜனமா
எழுதனும் அட்லீஸ்ட் சுவாரசியமாவாச்சும் எழுதனும். ரெண்டும்
இல்லாம நாலு பேர் மட்டும் ரசிக்கற மாதிரி கும்மிகள் அடிக்கறது
அந்த நேரத்துக்கு வேண்டுமானால் சுவாரசியமா இருக்கலாம்.
பின்னால நாம் என்ன எழுதிருக்கோம்னு பாக்கும்போது
"ஒண்ணுமில்லன்னு" தோணிட கூடாது. இந்த அனுபவம் இவர்ட்ட
கத்துகிட்டதுதான்.

இன்னும் அபிஅப்பா, கண்மணி டீச்சர், இலவசகொத்தனார்,
பெனாத்தல் மற்றும் அண்ணாச்சி அவர்கள் விடுபட்டுள்ளார்கள் அவர்களுக்கும் என் முதற்கண் மரியாதைகள். பதிவு ரொம்ப
பெருசா போச்சு அதனால அடுத்த பதிவுல எழுதறேன். :))

4 comments:

  1. ////தருமி

    பேராசிரியர், நகைச்சுவை உணர்வு கொண்டவர், அனுபவசாலி,
    அரசியல் விமர்சகர், மிகுந்த சமூக அக்கறை கொண்டவர்,
    நல்லவர், வல்லவர், மதுரைக்காரர், கேள்வி கேட்பதில் வல்லவர்
    (பதிலும் தெரிந்தே இருக்கும்) இப்படி நிறைய சொல்லலாம்.////


    தருமி சார் எம்புட்டு செலவாச்சு:))))

    தம்பி நன்றாக இருக்கு மூத்தபதிவர்களை பற்றிய வலைசரம் நான் அதிகமாக பெரியவங்க பக்கம் ஒதுங்குவது கிடையாது எங்க காதைபுடிச்சு திருகிடுவாங்களோன்னு ஒரு பயம் தான்:))))

    ReplyDelete
  2. //தருமி சார் எம்புட்டு செலவாச்சு:))))//

    ரிப்பீட்டேய்

    துளசி, வல்லிசிம்ஹன், கீதா - என்னாது ஒரே அல்லி ராஜ்யமா இருக்கு

    ReplyDelete
  3. பெரியவங்க சரம் அருமை ;))

    ReplyDelete
  4. தம்பி நல்லா சொன்னீங்க.முத்து முத்தான கருத்துக்களைச் சொல்லும் இவங்களைப் பற்றிய பதிவுக்கு 'முத்துச் சரம்' பேர் பொருத்தம்.
    டோண்டு சார் கொள்கையில் உடன்பாடு இல்லாவிட்டாலும் வயதான அனுபவம் மிக்கபதிவர் என்ற மரியாதை உண்டு.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது