07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, December 6, 2007

மேலும் சிலர் மற்றும் விடைபெறுதல்

'மறதி மறதி' என்பார்களே.... என்றாலும் இந்த அளவு மறதி இருக்கக்கூடாது என்று இன்று நினைத்துக்கொள்ளும்படியாக ஆகிவிட்டது. வேறொரு வேலையில் மூழ்கிக்கிடந்ததில் வலைச்சரத்தை மறந்துபோனேன். நல்லவேளையாக 'தயார்'ப்படுத்தி வைத்திருந்ததால் தப்பித்தேன்.

தமிழ்மணத்தில் எழுத வந்த ஆரம்ப நாட்களில் தமிழில் தட்டச்ச மட்டுமே தெரிந்திருந்தது. அதுவும் பத்திரிகை வேலை வலிந்து திணித்த 'அறிவு'. கணனி தொழில்நுட்பத்தில் நானறியாத சித்துவிளையாட்டுக்களை நிகழ்த்திக் காட்டிய பொன்சை வியப்போடு தொடர்ந்ததில் வாசிக்கக் கிடைத்தது நிறைய. ஆனால், புரிந்தது கொஞ்சம். இருந்தாலும், விட்டேனா பார் என்று இங்கே எல்லாம் போய் வாசித்துப் பார்ப்பேன். என் பெயரில் யாரோ பின்னூட்டமிட பொன்சிடம்தான் போய் ஒப்பாரி வைத்தேன். பொன்சின் சிறப்பம்சம் என்னவென்றால், நாம் பேயைப் பார்ப்பதுபோல (ஒருபோதும் பார்த்ததில்லை, கண்ணாடியில் தவிர) கண்முழி தள்ளிப் பார்க்கும் கடினமான விடயங்களைக் கூட, 'இதுக்குப் போயி அல்ட்டிக்கிறியே'என்பதாக தன் எழுத்து வழியாக எளிதாக்கிவிடுவார்.

நான் கவனித்த ஆட்கள் அதிகமென்றால், ஆரம்ப நாட்களில் என்னைக் 'கவனித்த' ஆட்களும் உண்டு. முன்னரெல்லாம் முத்துலட்சுமியின் பின்னூட்டம் இல்லாத எனது பதிவைக் காண்பது அரிதாக இருந்தது. என்னிடம் யாராவது வந்துபோனால் அவர்களைத் தொடர்ந்துசென்று 'யார்... என்ன..'என்று பார்த்துவிட்டு வரும் வழக்கத்தினால்
சிறு முயற்சி க்குச் சென்று பார்த்தேன். . எல்லோரோடும் தோழமை பாராட்டும் பண்பு அவர் இட்ட பதிவுகளிலும் இருக்கக் கண்டேன். மனிதநேயம் என்ற உயர்ந்த பண்பினால் ஈர்த்த பதிவுகள் சிறுமுயற்சியில் நிறையவே உண்டு.
பெண்களைப் பற்றி, பாரபட்சமுடைய இந்தச் சமுதாய அமைப்பில் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைப் பற்றி தமிழ்மணத்தில் எழுதுகிறவர்களில் பத்மா அர்விந்த் குறிப்பிடத்தக்கவர்.
சக்தி என்ற பெயரிலான வலைப்பூவில் மதி கந்தசாமி, செல்வநாயகி, பத்மா அர்விந்த் ஆகிய மூவரும் இணைந்து எழுதுகிறார்கள். பத்மா அர்விந்த்தின் கூண்டுக்கிளியும் சுதந்திரக்காற்றும் என்ற பதிவை உதாரணத்திற்குச் சொல்லிச் செல்கிறேன்.
'மலர்வனம்' லஷ்மியின் பதிவுகளில் உள்ள தார்மீக கோபம் எனக்கு மிகப்பிடித்தது. 'என்னங்க நீங்க இப்படிப் பண்றீங்க'என்று கேட்பது வேறு. 'நீ எப்பிடி இப்பிடில்லாம் பண்ணலாம்... இதுக்கெல்லாம் யார் உனக்கு உரிமை கொடுத்தது?'என்று நியாயமான காரணங்களை முன்வைத்து தர்க்கிப்பது வேறு. நியாயமற்றவர்களால் பதிலளிக்க முடியாத ஆணித்தரமான கேள்விகளைக் கொண்ட நீ எல்லாம் ஒரு பொம்பளையா? என்ற பதிவை வாசித்துப் பாருங்கள். நான் மேற்சொன்னதன் காரணம் புரியும்.
எனக்கென்னவோ பழைய பதிவுகளைப் போய் வாசிக்க வாசிக்க தமிழ்மணத்தில் பெண்கள்தான் அதிக சமூக அக்கறையோடு எழுதிக்கொண்டிருக்கிற மாதிரித் தோன்றுகிறது:) (யாராவது சண்டைக்கு வந்துவிடாதீர்கள். தெம்பிருந்தாலும் எனக்கு நேரமில்லை சாமீ) மங்கையின் வலைப்பூ பக்கம் சென்றதும் அந்த எண்ணம் உறுதிப்பட்டது. ஒரு சமூக ஆர்வலரின், சக மனிதரை நேசிக்கும் கண்ணோட்டமாகவே அனைத்துப் பதிவுகளையும் பார்க்க முடிந்தது. முதுமையில் நீளும் நாட்கள், தில்லி crime capital , தேவைகள் ஆசைகள் போன்ற பதிவுகளை உதாரணத்திற்குச் சொல்லிச் செல்கிறேன்.

மங்கை சொன்ன 'அல்சைமர்ஸ்'எனக்கும் வந்துவிட்டதோ என்னவோ.... நிறையப் பேருடைய பெயர்களின் பின்னால் 'பிஸ்கெட்'டின் பின்னால் வாலாட்டிப் போகும் நாய்க்குட்டியாக தொடர்ந்து போய் வாசிப்பேன். எழுதவென்று அமர்ந்தால் நினைவில் வராதாம். என்ன செய்ய...? 'சொன்னவரைக்கும் போதும் போங்க'என்று யாரோ சொல்வது கேட்கிறது:)


எழுத்தறியாதபோதிலும் எழுதிக்கொண்டிருப்பதுபோல, இசையறியாதபோதிலும் அதில் இழைந்து தொலைந்துபோவது எனது வழக்கம். அவ்வாறான பக்கங்களில் தமிழ்மணத்தின் 'பாட்டுக்காரரான' கானாபிரபாவின் இந்தப் பக்கம் போய்ப் பார்ப்பேன்... மன்னிக்கவும் கேட்பேன். அந்தக் காலத்து பி.யு.சின்னப்பாவிலிருந்து இந்தக் காலத்து பரத் வரைக்கும் 'படங்காட்டும்'பணியைச் சிறப்புறச் செய்துகொண்டிருப்பவர் சின்னக்குட்டி. இவருடைய இந்தப் பக்கத்திற்குப் போனால் திரைப்படங்களைப் பற்றி ஒரு ஆய்வுரை செய்து சமர்ப்பிக்கக்கூடிய அளவு விபரங்களுடன் வெளிவருவீர்கள் என்பது எனது கருத்து.

வலைச்சரத்தைப் பற்றி லக்கிலுக் ஒரு கருத்துச் சொல்லியிருந்தார். அதிலுள்ள உண்மையைப் பற்றி என்னை யோசிக்க வைத்திருக்கிறது இவ்வார வலைச்சரம். யோசித்துத் தெளிந்ததைச் சொன்னால் விவகாரமாகிவிடும் என்பதால் தவிர்க்கிறேன்.

வேறென்ன மக்களே! இதுவரை உங்களுக்கு நான் அளித்துவந்த 'வதை வாரம்' மன்னிக்கவும் 'வலை வாரம்'நிறைவுறுகிறது. சொல்லித் தேய்ந்த சொற்களைச் சொல்லி விடைபெறுகிறேன். ஒருவார காலம் வலைச்சர ஆசிரியராக இருக்கும்படி கேட்டுக்கொண்ட பொன்ஸ் மற்றும் சிந்தாநதிக்கும், வழிகாட்டி அறிவுறுத்தல் வழங்கிய முத்துலட்சுமிக்கும், வாசித்துப் பின்னூட்டமிட்ட - பின்னூட்டமிடாத நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.




12 comments:

  1. //தமிழ்மணத்தில் பெண்கள்தான் அதிக சமூக அக்கறையோடு எழுதிக்கொண்டிருக்கிற மாதிரித் தோன்றுகிறது:) (யாராவது சண்டைக்கு வந்துவிடாதீர்கள். தெம்பிருந்தாலும் எனக்கு நேரமில்லை சாமீ) //

    இதைக் கண்டிக்கிறேன்.

    எனக்கும் நேரமில்லாததால் இத்தோடு ஜூட்டு, ஆனால் எதிர்ப்பைப் பதிவு செய்தல் முக்கியம் என்பதால் இப்படி ஒன்று!. உண்மையில் ஸ்மைலி போடலைப்பா சொல்லிட்டன்.

    ReplyDelete
  2. //தமிழ்மணத்தில் பெண்கள்தான் அதிக சமூக அக்கறையோடு எழுதிக்கொண்டிருக்கிற மாதிரித் தோன்றுகிறது//

    அனைத்துப்பெண்கள் சார்பாக மிக்க நன்றிகள்...

    ReplyDelete
  3. அப்பா ஒரு வழியா முடிச்சிட்டோம்னு நிம்மதியா மூச்சுவிடுவது இங்கே கேக்குது.


    ஆனாலும் நல்லா தொகுத்திருக்கிறீர்கள்.

    நன்றி.

    ReplyDelete
  4. \\முன்னரெல்லாம் முத்துலட்சுமியின் பின்னூட்டம் இல்லாத எனது பதிவைக் காண்பது அரிதாக இருந்தது. //
    ஆமாம் தமிழ்நதி பதிவு போட்டதும் ஓடிவந்துருவேன் ... உங்க கவிதைக்கு பின்னூட்டம் போட்டே ஆகனும்ன்னு சிறுபிள்ளைத்தனமாகவெல்லாம் எழுதிவைப்பேன்.. அப்பறம் அப்பறம் கனத்துபோய் திரும்ப வேண்டிய கட்டயாம் வந்தது ... பின்னர் ஆகா இது பெரியவிசயமய்யா இதுக்கென்னா சொல்றது நாம்மல்ளாம்ன்னு திரும்புவேன்.. இப்ப கொஞ்சம் கூட நேரமில்லை நதி பதிவுஎழுதக்கூட ஓடலை பின்னூட்டம் போடவும் ஓடலை.. எதோ விட்டகுறை தொட்டகுறையா இன்னமும் பதிவுகள் வாசிப்பது மட்டும் தினப்படி வேலையில் ஒன்றாக இருக்கிறது... :)

    ReplyDelete
  5. நிறைவாகத் தொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  6. நிறைவாகத் தொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  7. //சின்னக்குட்டி. இவருடைய இந்தப் பக்கத்திற்குப் போனால் திரைப்படங்களைப் பற்றி ஒரு ஆய்வுரை செய்து சமர்ப்பிக்கக்கூடிய அளவு விபரங்களுடன் வெளிவருவீர்கள் என்பது எனது கருத்து.//

    யக்கோவ்.....சும்மா வெட்டி ஒட்டி போடும் உந்த அரைவேக்காடு சின்னக்குட்டியின்ரை பதிவை எல்லாம் கணக்கில் எடுத்து இணைப்பு கொடுக்கிறது உங்க ஸ்டாண்டட்டுக்கு துப்பரவாக சரியில்லைங்க....

    இப்படிக்கு

    SINNAKUDDY யின் பிறண்டு மதராசி

    ReplyDelete
  8. ரசிகர் மன்றத்துகாரர்களைப் பற்றி ஒருவரி எழுதியிருக்கலாம்...

    பரவாயில்லை...ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  9. "இதைக் கண்டிக்கிறேன்"

    கண்டிப்பாக கண்டிக்கலாம் மோகன்தாஸ்! நான் கண்டுக்கவே மாட்டேனே...!

    பாசமலருக்கு நன்றி:)

    மஞ்சூர் ராசா!நிதானமாகத் தொடங்கி கடைசியில் ஒரு சுடுமணல் நடையில் முடித்திருக்கிறேன். கவனித்தீர்களா?

    முத்துலட்சுமி!வந்து வாசித்துவிட்டாவது செல்கிறீர்களே என்று மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவே போதும். பின்னூட்டமெல்லாம் 'ஊட்டும் அளவுக்கு'ஊட்டியாயிற்று. மேலதிகமாக எதற்கு? எழுதும் விடயத்தை எவரோ வாசித்தால் போதுமல்லவா?

    மலைநாடன்!எனது வலைச்சரப் பதிவுகளை தயவுசெய்து ஒரு தடவை வாசியுங்கள். நிறையப் பிரச்சனைகள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்ததால் மனசுக்குள் குறித்துவைத்த பெயர்களிற் பல விடுபட்டுப் போய்விட்டன. சிறந்த ஒலிப் பதிவுகளுக்காக உங்களது பக்கத்தைக் குறிப்பிடவேண்டுமென்று நினைத்து நினைத்து எப்படியோ விடுபட்டுப் போயிற்று. 'இங்கே மலர்ந்திருக்கிறது என்று யாரும் கைபிடித்துக் கூட்டிக்கொண்டுபோய்க் காட்டாது போனாலும், அதன் வாசம் சொல்லிவிடும் அதனிருப்பை'. மறதிக்கு மன்னிப்பு உண்டல்லவா? நன்றி.

    சின்னக்குட்டியின் பிறண்டு 'மதராசி'க்கு! ஸ்டாண்டட்டு எங்கங்க இருக்கு? தமிழ்நதிக்கு அதொண்ணுங் கெடயாதுங்க. எதோ மனசில தோண்றத எழுதறாங்க. ஒங்க பிறண்டு நல்லாத்தாம் படங்காட்டுறதா அல்லாரும் சொல்லிக்கிறாங்க...புதுசாவா சொல்லிட்டாங்க அவங்க?

    இரண்டாம் சொக்கன்! நான் கண்டுபிடித்துவிட்டேன். பங்காளி யார் பகையாளி யார் என்று எனக்குத் தெரியாதா என்ன:)

    ReplyDelete
  10. //"இதைக் கண்டிக்கிறேன்"

    கண்டிப்பாக கண்டிக்கலாம் மோகன்தாஸ்! நான் கண்டுக்கவே மாட்டேனே...!//

    மேபி நீங்க கண்டுக்க மாட்டீங்கங்க என்பதைப் போல யாருமே கண்டுக்க மாட்டாங்கன்னு சைக்கிள் கேப்பில் இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு போனீங்க போலிருக்கு.

    இதைப் பத்தி பேச நிறைய இருக்குன்னாலும் sorry no time.

    ReplyDelete
  11. நேரமில்லை என்பது, 'சைக்கிள் கேப்', 'ஸ்டேட்மெண்ட்', 'மேபி',sorry no time.... புரிகிறது.

    ReplyDelete
  12. நன்றி தமிழ்நதி...நீங்க எல்லாம் நம்மள கண்டுக்குறது எனக்கு சந்தோஷமா இருக்கு...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது