வலைச்சரத்தில் (3) என் மூன்றாம் நாள்- ஆசிரியராக- தேவா.
யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் - காளி! - தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் - காளி! - பொறிகளனைத்தும் ஆனாய்,
போத மாகி நின்றாய்- காளி! - பொறியை விஞ்சி நின்றாய்!
என்னுடைய முதல் இரண்டு பதிவும் மிக நீளமாக இருந்ததாக நம் நண்பர்கள் சொன்னார்கள்! எனக்குப்பிடித்தபுதிய பதிவர் பட்டியல் இன்னும் மிக நீளமாக உள்ளது! நீங்கள் சொல்வதை வைத்துத்தான் அடுத்த பதிவின் அறிமுக எண்ணிக்கை அமையும்! ஆகவே பின்னூட்டத்தில் கருத்து சொல்லவும்!
சின்ன கதை
ஆஸ்துமா,டி.பி இரண்டு பற்றியும் சொன்னேன்! நான் செல்லும் அரசு ஆஸ்பத்திரிக்கு 5 மாதம் முன்னாடி ஒரு நோயாளியைக் கூட்டி வந்தனர்!
டி.பி. மாதிரி எலும்பும் தோலுமாக இருந்தார்! அவருக்கு மூன்று மனைவியர்(அப்பாடி).கடைசி மனைவிதான் கூட்டிவந்தது! டி.பி.மாதிரியேசளி,காய்ச்சல்,வேகமான எடை குறைவு எல்லாம் இருந்தது! ஆனால் பரிசோதனை செய்து பார்த்ததில் டி.பி.இல்லை என்று தெரிய வந்தது! அப்படியானால் என்ன?
உங்களுக்குத்தெரியும்! ஆம்! எச்.அய்.வி.என்று சொல்ற எயிட்ஸ் தான்! ஏற்கெனவே வேறு மருத்துவமனையில் செய்த சோதனைகளில் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளி.இவரும் மருந்துஒழுங்காகச் சாப்பிடலை.ஆனால் பாருங்க இந்தநோய்க்குஆயிரக்கணக்கான ரூபாய்க்கான மருந்து அரசு இலவசமா தருதுங்க! அதை ஒழுங்கா வாங்கி சாப்பிடவில்லை இவர்.
இந்தநோய்கட்டிப்பிடிப்பதால்,ஏன்முத்தமிடுவதலநோயா-ளியைக்கடித்த கொசு நம்மைக்கடித்தால்,ஒரே தட்டில் உணவு சாப்பிட்டால் கூட பரவாது!
கிருமியின் மீது 10 நிமிடம் வெய்யில் பட்டால்கூட கிருமி இறந்துவிடும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் நோயுடனேயே 10-15 வருடம் கூட வாழ்கிறார்கள்! உடலுறவு தவிர போதை மருந்து ஊசியை இரண்டு மூன்று பேர் கழுவாமல் போட்டுக்கிறதுனால கூட இது பரவிவிடும்!
மருத்துவமனை போனா தனி புதிய சிரிஞ் உபயோகிக்கிறார்களான்னு பாருங்க! ரொம்ப கிராமம்னா ஒரு புதிய சிரிஞ் வாங்கிக்கொண்டு போய் விடுங்கள்!!
எயிட்ஸுக்கு நல்ல மருத்துவம் தாம்பரம் டி.பி.சானிடோரியத்தில் கிடைக்கிறது!அது தவிர எல்லா தாலுகா அரசு மருத்துவ மனைகளிலும் கிடைக்கும்! என்ன இந்த வியாதியை குணப்படுத்த முடியாது! கட்டுப்படுத்தி கொஞ்ச நாள் வாழ்க்கையை தள்ளிப்போடலாம்!
இன்னும் இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கவில்லை! நீங்க கண்டுபிடிச்சீங்கன்னா அடுத்த நோபல் பரிசு உங்களுக்குத்தான்!
அப்புறம் அந்த நோயாளியை விட்டுவிட்டமே! அவர் 3 நாள் கழித்து உடல்நிலை ரொம்ப சீரியஸ் ஆகி கோமா நிலைக்குப்போய்விட்டார்! உற்வினர்கள் பாருங்க ஒருத்தன்கூட பக்கத்தில இல்லைங்க! சேர்த்துவிட்டு எல்லாரும் ஓடி விட்டனர்!போன் மூலம் கூப்பிட்டாலும் யாரும் வரவில்லை! இறக்கும் தருவாயில் எந்த நபரும் இன்றி அநாதையாய் இறந்தார்!பிணம் கூட எங்களுக்கு வேண்டாம் என்று ஒரு கடிதம் எழுதி தெரிந்த ஆள் மூலம் எங்களுக்கு கொடுத்து அனுப்பிவிட்டார்கள்!
கடைசியில் வேறு வழியில்லாமல் அநாதைப்பிணமாக நகராட்சியால் அவர் உடல் எரிக்கப்பட்டது!
-------------------------------------------------------------
சரி பதிவர் பற்றி பார்ப்போமா?
இவர் அவசியம் படிக்கவேண்டிய பதிவர்.இவரை இப்போதுதான் நான் பார்த்தேன்.இது அவரை கௌரவிக்கவே!
1.மங்கை http://manggai.blogspot.com/ நிறைய தெரிந்தவர்தான்! அவரின் அருமையான பதிவுகளை எல்லோரும் படிக்கட்டும் என்றே இங்கு எழுதுகிறேன்.விக்கிராய் குப்பையில் கிடைத்த மாணிக்கம்http://manggai.blogspot.com/2009/02/blog-post.htmlவீட்டை விட்டு ஓடி வந்த விக்கி எப்படி பெரிய புகைப்பட கலைஞரானார்?
சாதர் தாக்னா-ஹரியாணா மாநில சமுதாய வழக்கம் இது பற்றி http://manggai.blogspot.com/2009/01/blog-post_31.html ல் பார்க்கவும்!!
என் பேனாவிற்குப் பொதுநலம் தெரியாதுயாருமே அறியாத
என் இன்னொரு முகத்தின் இதழ்கள் அது!
அடுத்தவரிற்காய்க் கண்ணீர் விட நான் மட்டும்
நிஜங்கள்http://manggai.blogspot.com/2009/01/blog-post.htmlஎன்ற தலைப்பில்ஒவ்வொரு முறை தில்லி ரயில் நிறுத்தத்தில் ரயில் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்களை உறுத்தும் சில காட்சிகள். அங்கு குப்பை பொறுக்கும் குழந்தைகள் பற்றி வேதனைப்படுகிறார்! எல்லோரும் படிக்க வேண்டிய சிறந்த பதிவர்.
--------------------------------
2.எழுத்தோசையில் தமிழரசிகவிதைக்கலக்கல்! 2009ல் 75 பதிவுகள்!! (யப்பாடியோவ்)எப்போது வருவாய் கவிதையில் வசந்தத்தை கேள்வி கேட்கிறார்! பாருங்கள்:http://ezhuthoosai.blogspot.com/2009/02/blog-post_3949.html
நேசம் எனும் கவிதையில் இது கவிதை அல்ல காதல்னு சொல்றாங்கhttp://ezhuthoosai.blogspot.com/2009/02/blog-post_8373.html
இந்தக்கவிதையில் எல்லாமே நீதான் என்கிறார்http://ezhuthoosai.blogspot.com/2009/02/blog-post_5799.html
-------------------------------------------------------------
அன்புள்ளஅப்பாவில்http://mathukrishna.blogspot.com/2008/12/blog-post.htmlகண்டிப்பும், காத தூரத்தில் இருந்து அன்பும் காட்டும் சராசரித் தந்தை போலன்றி,
என்னைத் தோழியாகவும் பார்த்த என் தந்தைக்கு..என்று அப்பாவை நினைத்து ஏங்குகிறார்.
என் பேனாவிற்குப் பொதுநலம் தெரியாது
யாருமே அறியாத என் இன்னொரு முகத்தின் இதழ்கள் அது! அடுத்தவரிற்காய்க் கண்ணீர் விட நான் மட்டும் போதும் எனக்காக அழுவது என் பேனா மட்டும் தான் அதையும் கேட்காதீர்கள் என்றுஎன் கிறுக்கல்களிலில் எப்படி எழுதியுள்ளார் பாருங்கள்"http://mathukrishna.blogspot.com/2008/11/blog-post_27.html
------------------------- 4.இயற்கை இந்தக்கவிதையில் யாருக்கோ காத்திருப்பதை அழகாகக்கூறுகிறார்:http://iyarkai09.blogspot.com/2009/02/blog-post_10.html
நித்தி எங்க செல்லம் என்கிறார்! யார்னு போய் பாருங்க.http://iyarkai09.blogspot.com/2009/02/blog-post_10.html
அமெரிக்க கரண்சியைப்பத்தி ஒரு வித்தியாசமான பதிவுங்க:http://iyarkai09.blogspot.com/2009/01/20.html
---------------------------------------------------
5.ப்ளிஸ் எடுத்தவுடன் ஆங்கிலத்தில் மிரட்டுவார்! அசராதீங்க. உள்ளே போனா தமிழ்க் கவிதையும் கண்ணுல படும்!தெளிவு ன்னு காதல் பற்றி தெளிவா சொல்லி இருக்காங்க! http://bliss-live-ur-life.blogspot.com/2008/12/blog-post.html
சங்கமம் கவிதையில் மௌனமாய் பேசுறாங்க!http://bliss-live-ur-life.blogspot.com/2008/07/blog-post.html
பாரதியாரா மாறி புது உலகம் செய்யப்போறேங்கிறாங்கhttp://bliss-live-ur-life.blogspot.com/2008/05/blog-post_25.html உங்களுக்கு பிடிக்கும்! படித்துவிட்டு உங்கள் கருத்தை அவருக்கு சொல்லுங்க!!!
----------------------------------------------------------
சுதந்திரமானவனாய் இரு!எவரிடமிருந்தும் எதுவும் எதிர் பார்க்காதே!உன் கடந்த கடந்தகால வாழ்க்கையைத் திரும்பிப்பார்! உனக்குக் கிடைத்த பெரிய உதவியெல்லாம் உன்னிடமிருந்தே கிடைத்து இருக்கும்!
சுவாமி விவெகானந்தர்.
--------------------------------------------
அடுத்த பதிவில் பார்ப்போம்!
தேவா..
------------------------------------------------------------------
|
|
என்னுடைய முதல் இரண்டு பதிவும் மிக நீளமாக இருந்ததாக நம் நண்பர்கள் சொன்னார்கள்!
ReplyDeleteஆமா ஆமா
\\என் பேனாவிற்குப் பொதுநலம் தெரியாது
ReplyDeleteயாருமே அறியாத
என் இன்னொரு முகத்தின் இதழ்கள் அது!
அடுத்தவரிற்காய்க் கண்ணீர் விட நான் மட்டும்\\
அருமையான வரிகள்
வலைச்சர ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடருங்கள் பிறகு வருகிறேன்...
மங்கை பழையவர் தான் என்றாலும்
ReplyDeleteஅதிகம் பரிச்சியமில்லை.
இனி படிப்போம். நன்றி தேவா
உள்ளேன் சாரே !!!!
ReplyDelete\\தமிழரசிகவிதைக்கலக்கல்! 2009ல் 75 பதிவுகள்!! (யப்பாடியோவ்)\\
ReplyDeleteஉண்மையே
பார்த்து அரண்டுவிட்டேன்
Feb-03 தேதி மட்டும் 59 பதிவுகள்
ReplyDeleteஎன்ன சொல்ல
வெற்றிகரமான மூன்றாம் நாள் வாழ்த்துக்கள் தேவா !!!!
ReplyDeleteஊனம் பற்றி இவர் சொல்லியது
ReplyDelete\\ஒற்றை கால்
மனிதனை கண்டேன்
அவன் கட்டைகால் மேல்
நம்பிக்கையையும் கண்டேன்
ஊமை ஆனது மனம்
மௌனம் ஆனது மொழி
ஊனம் ஆனேன் நான்...\\
மிகவும் இரசித்தேன்.
\\குறைந்த
ReplyDeleteசெலவில் நிறைந்த
பலனை
எதிர்பார்த்தவர்களுக்கு
கிடைத்த
இலவச இணைப்பு...\\
எய்ட்ஸ்
முடிதான் வெட்டப்போனாரு மாமா
ReplyDeleteஇங்க பாருங்க
\\மாமா ....
நான்
தொட்டு கலைக்க
ஆசைப்பட்டதை
எவனோ கலைத்து
வெட்ட எப்படி அனுமதித்தாய்.......\\
\\அ.மு.செய்யது said...
ReplyDeleteஉள்ளேன் சாரே !!!!\\
எந்தானும் எலி பிடிக்கேள்
//இந்தநோய்கட்டிப்பிடிப்பதால்,ஏன்முத்தமிடுவதலநோயா-ளியைக்கடித்த கொசு நம்மைக்கடித்தால்,ஒரே தட்டில் உணவு சாப்பிட்டால் கூட பரவாது!
ReplyDeleteகிருமியின் மீது 10 நிமிடம் வெய்யில் பட்டால்கூட கிருமி இறந்துவிடும்.
//
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உங்களிடம் நிறையவே இருக்கிறது.
என்னுடைய முதல் இரண்டு பதிவும் மிக நீளமாக இருந்ததாக நம் நண்பர்கள் சொன்னார்கள்!
ReplyDeleteஆமா ஆமா
\என் பேனாவிற்குப் பொதுநலம் தெரியாது
ReplyDeleteயாருமே அறியாத
என் இன்னொரு முகத்தின் இதழ்கள் அது!
அடுத்தவரிற்காய்க் கண்ணீர் விட நான் மட்டும்\\
நல்ல வரிகள்
// நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\அ.மு.செய்யது said...
உள்ளேன் சாரே !!!!\\
எந்தானும் எலி பிடிக்கேள்
//
நேத்துலர்ந்து தான்...யதேச்சையா ஒரு சைட்டுல பாத்தேன்.பொறி வைச்சாச்சி !!!
வலைச்சர ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபிரேக் ஃபாஸ்ட்டுக்காக இங்க ஒரு பிரேக் போட்டுக்கறேன்.
ReplyDeleteபத்து நிமிடங்களில் இந்த சமூகம் மீண்டும் ஆஜராகும்.
ஊனம் பற்றி இவர் சொல்லியது
ReplyDelete\\ஒற்றை கால்
மனிதனை கண்டேன்
அவன் கட்டைகால் மேல்
நம்பிக்கையையும் கண்டேன்
ஊமை ஆனது மனம்
மௌனம் ஆனது மொழி
ஊனம் ஆனேன் நான்...\\
மிகவும் இரசித்தேன்./
ஆமாம்..
மங்கை பழையவர் தான் என்றாலும்
ReplyDeleteஅதிகம் பரிச்சியமில்லை.
இனி படிப்போம். நன்றி தேவா//
மிக அருமையானவர்
பிரேக் ஃபாஸ்ட்டுக்காக இங்க ஒரு பிரேக் போட்டுக்கறேன்.
ReplyDeleteபத்து நிமிடங்களில் இந்த சமூகம் மீண்டும் ஆஜராகும்.//
நல்லா சாப்பிடுங்க
அவன் கட்டைகால் மேல்
ReplyDeleteநம்பிக்கையையும் கண்டேன்//
சூப்பர்..
என்னுடைய முதல் இரண்டு பதிவும் மிக நீளமாக இருந்ததாக நம் நண்பர்கள் சொன்னார்கள்!
ReplyDeleteஆமா ஆமா///
யார் யார் யார்
\\அ.மு.செய்யது said...
ReplyDeleteபிரேக் ஃபாஸ்ட்டுக்காக இங்க ஒரு பிரேக் போட்டுக்கறேன்.
பத்து நிமிடங்களில் இந்த சமூகம் மீண்டும் ஆஜராகும்.\\
பத்து நிமிடம் என்பது ஜாஸ்தி
ஏன் காதலா என்று கேட்கிறார் பாருங்கள் எழுத்தோசை
ReplyDelete\\தேனாக இனிப்பாய் என்று
தேடி நான் வந்தால்
தேளாக கொட்டுகிறாயே!!!
விரும்பியதற்கு பலனாய்
விஷமாவது தந்தாயே
நன்றி நவிழ்கிறேன் நாதா!!!!
நட்சுப்பாய்ந்த என் உடலோடு......\\
அழகு -
ReplyDeleteஎத்தனையோ விளக்கங்கள்
விமர்சணங்கள்
இதையும் பார்த்தேன் இரசித்தேன்
\\அழகான
உன்பெயர் இருக்க
அன்பை சொல்ல
ஆயிரம்
வார்த்தைகள் ஏன்?\\
குடைக்கு ஒரு புதிய விளக்கம்
ReplyDelete\\தான் நனைந்து
பிறரை காக்குமாம்
குடை....\\
பெண்
ReplyDelete\\ற்ற இறக்கம்களை
எறிந்துவிட்டு
மாற்றம்களை கண்டு
மாறிவிட
மங்கையவள்
எண்ணி துணிந்து
விட்டால்
மாற்று கருத்துக்கள்
என எதுவந்தாலும்
தலை துணிந்து
விடுவாள்
பூமாதேவிக்கு
மட்டும் பெயர்
பொறுமை இல்லை
பெண்ணுக்கும் தான்\\
டாக்டர்! மங்கையின் சுட்டிகள் மற்ற சுட்டிகள் எல்லாம் அருமை!
ReplyDeleteநான், நான் மற்றும் நான்
ReplyDeleteIMEANDMYSELF
பெயரே வித்தியாசமாய் இருக்கு
\\தொலைபேசியைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டாள்.
ReplyDeleteயாருமில்லாமல் தனியே அழுத நாட்கள் நினைவுக்கு வந்தது.
இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவான்.
தொலைபேசியில் பாடல் ஒன்றை இசைக்க விட்டுவிட்டு வசதியாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.\\
அழகாய் தெரிகிறது காதல்
என்ன எழுதட்டும்ன்னு கேட்கிறார் பாருங்க
ReplyDelete\\நிலவு, வானம், நதி, மலை எல்லாம்
எழுதி முடிந்தவை!
ஒன்றும் சிக்கவில்லை,
நீங்கள் சொல்லுங்களேன்
என்ன எழுதட்டும்??? \\
அருமையான தேடல்
ReplyDeleteஇதுக்காகவவே தொலைக்கிறாங்க
\\தேடல் தொடர்ந்த போதும்
தொலைப்பதை நிறுத்தவில்லை
இன்னும் தொலைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்
சில வருடங்களின் பின் தேடுவதற்கு!\\
மூன்றாம் நாள் வாழ்த்துக்கள் தேவா.
ReplyDeleteஇயற்கை.
ReplyDelete\\என்ன சொல்வது என்று தெரியவில்லை..
அதை எப்படிச் சொல்வதென்றும் தெரியவில்லை..
அன்புத் தோழனாய் ..ஆசைச் சகோதரனாய்…
கண்டிக்கும் தந்தையாய்… கற்றுத்தரும் ஆசிரியனாய்
பரவசமாய்….அரவணைத்த….நீ பிரிவதை..\\
பிரிவை சொல்லும் வரிகள்
ஐவருமே எனக்கு புதிய பதிவர்கள்...படித்து விட்டு வருகிறேன்.
ReplyDeleteஉங்கள் சரத்தில் இந்த பூக்களை தொடுத்து மணம் வீசச் செய்தமைக்கு நன்றிகள்.
\\அன்பைப் பகிர்ந்தோம் ..மகிழ்ந்தேன்
ReplyDeleteஅரவணைப்பைப் பகிர்ந்தோம்....அதிசயித்தேன்
நட்பைப் பகிர்ந்தோம்..ஆரவாரித்தேன்
இப்பொழுது பிரிவை பகிரச் சொல்கிறாயே…என் செய்வேன்?\\
ஆஹா மிகவும் இரசித்தேன்.
இயற்கை ஏற்கனவே போயிருக்கேன் போல
ReplyDelete\\நம்ம எச்சில் அடுத்தவங்களுக்கு அருவெருப்பா இருக்கும்ன்னு யோசிக்கறதே இல்லை\\
அருமையா சொல்லி இருக்காங்க
பணம் படும் பாடு பற்றி
\\நீண்ட காத்திருப்பு
ReplyDeleteஉடையா மௌனம்
பொருள் புரியாப் பார்வை
ஒரு காதல் !\\
BLISS-வரம்.
வலைச்சர ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடருங்கள் பிறகு வருகிறேன்...
\\life shows me puzzles,
ReplyDeleteat times,quite a few.
that's when i realize
I'm hiding me and searching you! \\
ஆங்கிலத்தில் சொன்னாலும் அழகாக
வேறு என்ன இருக்கு ...
ReplyDelete"i love you sometimes foolishly and that those times i do not understand that i could not,would not,and should not be so absorbing a thought for you,as you are for me".
காதல் ...
ReplyDelete\\why do we feel that we never spoke what we intended to,even after talking more than hour,to few people?\\
மங்கை..இவர் வலைதள தோற்றமே வித்தியாசமாக இருக்கிறதே என்று
ReplyDeleteஆச்சரியப்படுவதற்குள், இவருடைய பதிவுகள் அனைத்துமே இன்னும்
ஒருவித பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
எல்லா பதிவுகளிலும் ஓர் சமூக அக்கறை மேலிடுகிறது.
நிச்சயமாக வலைச்சரம் என்ற ஒரு தளம் இல்லையென்றால் என்னைப் போன்ற புதிய பதிவர்கள்,இது போன்ற சான்றோர்களின் பதிவுகளைப் பார்த்திருக்க முடியாது.
\\நாவின் நுனியில்
ReplyDeleteநின்று அடம்பிடிக்கும்
சொல்ல நினைத்த எண்ணங்களை,
சொல்ல முடியா ஏக்கங்களை
எனக்குள் நானே விழுங்குவேன் !\\
ரொம்ப அருமை.
50 அடிக்க ஆள் வந்தாச்சா
ReplyDelete50 அடிக்க ஆள் வந்தாச்சா
ReplyDeleteயாரு யாரு
50 அடிக்க ஆள் வந்தாச்சா
ReplyDeleteசொல்லுங்கப்பா
ரெப்ஃரஷ் பன்றதுக்குள்ள 50 போட்டுடிங்களே !!!
ReplyDeleteநல்ல பாரத்துல இருக்கிங்க போங்க..
ஒரு நிம்மதி ...
ReplyDelete\\talk to me!
about you
about me
about us
show on me,
your anger,your helplessness,
your irritation,your impatience,
i may not be a cure
but surely a relief!\\
\\ அ.மு.செய்யது said...
ReplyDeleteரெப்ஃரஷ் பன்றதுக்குள்ள 50 போட்டுடிங்களே !!!
நல்ல பாரத்துல இருக்கிங்க போங்க..\\
ஹா ஹா ஹா
சரி பா மிச்சம் அப்பாலிக்கா
ReplyDelete//என்
ReplyDeleteஅவசர தேவைக்கு
எனக்கு ஆயுட்கால
சேமிப்பு அல்ல நீ
என்
அன்பின் தேவைக்கு
உன்னுள் சேர்க்கப்பட்ட
அவசர சிகிச்சை
பிரிவு நோயாளி நான்...//
ஹைய்........சூப்பர் தமிழரசி !!!!
//கண்ணீர் விட்ட போதெல்லாம் துடைத்து விடாத விரல்கள், இன்று புன்னகையைக் கண்டு கேலி செய்கின்றன. அழுதழுது தூங்கிய இரவுகளை எண்ணிக் கொண்டாள். கையில் இருந்த வரை புரியாது ரோஜாவின் வாசம், இதழ்கள் கருகிய பின் எடுத்தெறிந்துவிடலாம். வைத்திருப்பதில் பயனும் இல்லை, வைத்திருப்பது முறையும் இல்லை.//
ReplyDeleteகறைய வைக்கின்றன..மது கிருஷ்ணாவின் எழுத்துகள்..
அருமை தேவா,
ReplyDeleteஎல்லாமே எனக்கு புது அறிமுகம் தான்.
இனி போய் படிக்கிறேன்.
சொல்ல மறந்துட்டேனே நோய்கள் பற்றி தங்களின் பகிர்தல் சிம்பிளி சூப்பர்ப்.
அதுக்காக ஷ்பெஷல் நன்றிகள்
//இந்நிமிடம்.. நம் நட்பின் ஆழம் என்னை நடுங்க வைக்கிறது
ReplyDeleteமரணத்திலும் மேலான துக்கம் எனப் பறைசாற்றுகிறது
பிரிவின் கொடுமை உன்னைப் பிரியும் போதுதான் புரிகிறது..
சிரித்துப் பேசும் நிமிடங்களைப் பறித்துக் கொள்ளப் போகிறாயா?//
இயற்கை எழுதிய வரிகள்...எல்லாம் அழகு,,
எய்ட்ஸ் பற்றிய செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஎய்ட்ஸ் போலவே, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் குணப்படுத்த முடியாதவை தான், கட்டுபடுத்தவே முடியும்
ஆனால் மக்களிடயே அது ஒரு தொற்று என்ற எண்ணம் இருக்கிறது, விழிப்புணர்வு சரியாக இல்லை, அதனால் தான் அவர் அநாதையாக எரிக்கப்பட்டார்.
அறிமுகப்படுத்தியுள்ள பதிவுகளை பற்றி,
ReplyDeleteபொதுவாகவே எனக்கு கவிதை என்றாலே அலர்ஜி,
அதிலும் முக்கியமாக காதல் கவிதை என்றால் வன்முறை காட்சிகளை பார்ப்பது போல ஒரு எண்ணம்.
ஆனால் காதலிப்பவர்களுக்கு அப்படியில்லையே!
நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக தான் செய்திருக்கிறீர்கள்,
கவிதையினுடே சிறந்த கட்டுரை தொகுப்புகளை வழங்கினால் மகிழ்ச்சியடைவேன்.
அதற்காக நீங்கள் செய்தே ஆகவேண்டும் என கட்டாயமில்லை, பெரும்பான்மையினர் கவிதையை ரசிக்கும் போது நீங்கள் அதையே தொகுக்கலாம்.
ஆனால் என்ன! எனக்கு தான் கவிதையை படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு மண்டையில் மசாலா இல்லை.
//போன் மூலம் கூப்பிட்டாலும் யாரும் வரவில்லை! இறக்கும் தருவாயில் எந்த நபரும் இன்றி அநாதையாய் இறந்தார்!பிணம் கூட எங்களுக்கு வேண்டாம் என்று ஒரு கடிதம் எழுதி தெரிந்த ஆள் மூலம் எங்களுக்கு கொடுத்து அனுப்பிவிட்டார்கள்!
ReplyDeleteகடைசியில் வேறு வழியில்லாமல் அநாதைப்பிணமாக நகராட்சியால் அவர் உடல் எரிக்கப்பட்டது!//
இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்...
இப்படி ஒரு நிலமை வர்றமாதிரி யாரும் நடந்துக்காதீங்கோ!எச்சரிக்கையா இருக்கோ!
//பொதுவாகவே எனக்கு கவிதை என்றாலே அலர்ஜி,
ReplyDeleteஅதிலும் முக்கியமாக காதல் கவிதை என்றால் வன்முறை காட்சிகளை பார்ப்பது போல ஒரு எண்ணம்.//
வால்பையன் உங்க கருத்துக்கள் கண்டனத்திற்குரியது. நீங்க அந்தக் குறுப்பா...?
3ம் நாள் வாழ்த்துக்கள் தேவா
ReplyDeleteநல்லா எழுதுறீங்க
வாழ்த்துகள்...
ReplyDelete//வால்பையன் உங்க கருத்துக்கள் கண்டனத்திற்குரியது. நீங்க அந்தக் குறுப்பா...?//
ReplyDeleteகாதல் என்பது ஒருவகையான மயக்கநிலை!
அப்போது நீங்கள் எழுதும் கவிதை போதையில் உளறுவது,
உங்கள் போதைக்கு நான் ஊறுகாய் ஆகமுடியுமா?
அய்ய்ய் ஆசை, தோசை
மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteசுதந்திரமானவனாய் இரு!எவரிடமிருந்தும் எதுவும் எதிர் பார்க்காதே!உன் கடந்த கடந்தகால வாழ்க்கையைத் திரும்பிப்பார்! உனக்குக் கிடைத்த பெரிய உதவியெல்லாம் உன்னிடமிருந்தே கிடைத்து இருக்கும்!
//காதல் என்பது ஒருவகையான மயக்கநிலை!
ReplyDeleteஅப்போது நீங்கள் எழுதும் கவிதை போதையில் உளறுவது,
உங்கள் போதைக்கு நான் ஊறுகாய் ஆகமுடியுமா?
அய்ய்ய் ஆசை, தோசை//
மயக்கநிலை சிறிது காலத்திற்குத்தான் நண்பா! காதலில் முதிர்ச்சி பெற்றதால்தான் வாழ்க்கை இனிக்கும்.
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்... தேவா சார்...
ReplyDeleteஇப்போ,, ஓட்டு...
அடுத்து கமெண்ட்டு...
//மயக்கநிலை சிறிது காலத்திற்குத்தான் நண்பா! காதலில் முதிர்ச்சி பெற்றதால்தான் வாழ்க்கை இனிக்கும். //
ReplyDeleteஎன்னை போல் 13 லிருந்து 19 வயதுக்குள் இருப்பவர்களுக்கு மயக்கம் சகஜம் தான். ஆனால் கிழடு தட்டிய பழுத்த பழமெல்லாம் இன்னும் காதல் கவிதை எழுதுதே!
அதானே தாங்க முடியல!
வலைச்சர ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்...
ReplyDelete// ஆதவா said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள்... தேவா சார்...
இப்போ,, ஓட்டு...
அடுத்து கமெண்ட்டு...
//
இது மூன்றாம் நாள்...
ஐயோ! ஐயோ!
nandri deva
ReplyDeleteennudaiya ezhuthoosaiai pariselanai seithu intha paguthiel parinthu uraithadharku....nanum ungal padaipukkalai paditha udan karuthukalai therivikiren...natpudan.....thamil
நானும் வந்துட்டேன் தேவா...
ReplyDeleteஆசிரியருக்கு 3-ம் நாள் வாழ்த்துகள்...
இருங்க முதல் ரெண்டு நாள் பதிவையும் படிச்சுட்டு வரேன்....
எய்ட்ஸ் பத்தின தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி தேவா....
மங்கையின் பதிவுகளை ஏற்கனவே கண்டிருக்கிறேன்.
ReplyDeleteசமூக ஆர்வலர்... விக்கியின் பகிர்வு உத்வேகத்தைடத தருகிறது...
அன்பு நெஞ்சங்களுக்கும் புதியவர்நட்சத்ராவுக்கும் நல் வரவு!!
ReplyDeleteபடித்துவிட்டு கருத்துத்தரவும்
nandri deva
ReplyDeleteennudaiya ezhuthoosaiai pariselanai seithu intha paguthiel parinthu uraithadharku....nanum ungal padaipukkalai paditha udan karuthukalai therivikiren...natpudan.....thamil//
நன்றி
நீங்கள் தமிழ் மணத்தில் இணையவும்!
வருக வருக.
வணங்கா முடி அவர்களே...
ReplyDeleteமன்னிக்கவும்..
நேற்றுதான் வலைச்சரம் வந்தேன். அதனால்தான் இந்த குழப்பம்... எனிவே
மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்.
கருத்துதந்தால் தான்
ReplyDeleteதேவா நிறைய எழுதுவார்!
என்னதேவா உங்கள் சார்பாக நான் சொல்வது சரியா?
தவறு எனில் மன்னிக்க..
வணங்கா முடி அவர்களே...
ReplyDeleteமன்னிக்கவும்..
நேற்றுதான் வலைச்சரம் வந்தேன். அதனால்தான் இந்த குழப்பம்... எனிவே
மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்.//
ஆதவா உங்கள்
எழுத்து சூப்பர்..
// ஆதவா said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள்... தேவா சார்...
இப்போ,, ஓட்டு...
அடுத்து கமெண்ட்டு...
//
இது மூன்றாம் நாள்...
ஐயோ! ஐயோ///
அண்ணன் லொல்லு தாங்கலைப்பா!!
வலைச்சர ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்.///
ReplyDeleteரிப்பீட்டேய்.........
யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறைந்தாய்,
ReplyDeleteதீது நன்மை யெல்லாம் - காளி! - தெய்வ லீலை யன்றோ?//
காளியா? பயமா இருக்கு..
டி.பி.மாதிரியேசளி,காய்ச்சல்,வேகமான எடை குறைவு எல்லாம் இருந்தது! ஆனால் பரிசோதனை செய்து பார்த்ததில் டி.பி.இல்லை என்று தெரிய வந்தது! அப்படியானால் என்ன?///
ReplyDeleteஎன்ன என்ன!!!?
எழுத்தோசை, கவிதைகளைக் குவிக்கிறார்.... (முடியல..)
ReplyDeleteநல்ல நல்ல கவிதைகள் இருக்கின்றன..
அவர் தமிழ்மணத்தில் சேர்ந்தால் இன்னும் ரீச் ஆவார்..
உங்களுக்குத்தெரியும்! ஆம்! எச்.அய்.வி.என்று சொல்ற எயிட்ஸ் தான்! ஏற்கெனவே வேறு மருத்துவமனையில் செய்த சோதனைகளில் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறும்///
ReplyDeleteஅய்யோ எயிட்ஸ்னாலெ பயமா இருக்கு..
எழுத்தோசை, கவிதைகளைக் குவிக்கிறார்.... (முடியல..)
ReplyDeleteநல்ல நல்ல கவிதைகள் இருக்கின்றன..
அவர் தமிழ்மணத்தில் சேர்ந்தால் இன்னும் ரீச் ஆவார்..//
ஆமாம்..
//எச்.அய்.வி.என்று சொல்ற எயிட்ஸ் தான்! ஏற்கெனவே வேறு மருத்துவமனையில் செய்த சோதனைகளில் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளி.இவரும் மருந்துஒழுங்காகச் சாப்பிடலை.ஆனால் பாருங்க இந்தநோய்க்குஆயிரக்கணக்கான ரூபாய்க்கான மருந்து அரசு இலவசமா தருதுங்க! அதை ஒழுங்கா வாங்கி //
ReplyDeleteஇந்த தகவல் பலருக்கும் தெரிவதில்லை
அதே போல்
காச நோய் மருந்துகளும்
நாய்கடி தடுப்பு மருந்துக்களும்
அரசு மருத்துவமனைகளில் இலவசம்
//மயக்கநிலை சிறிது காலத்திற்குத்தான் நண்பா! காதலில் முதிர்ச்சி பெற்றதால்தான் வாழ்க்கை இனிக்கும். //
ReplyDeleteஎன்னை போல் 13 லிருந்து 19 வயதுக்குள் இருப்பவர்களுக்கு மயக்கம் சகஜம் தான். ஆனால் கிழடு தட்டிய பழுத்த பழமெல்லாம் இன்னும் காதல் கவிதை எழுதுதே!
அதானே தாங்க முடியல!//
காதல் என்பது பொதுவானது. அதுபோல் கவிதை எழுதவும் வயது ஒரு தடையல்ல நண்பரே! கணவனை மனைவியும், மனைவியும் காதலிக்கலாம். அவரையே கவிதையாக வடிக்கலாம்.
//காதல் என்பது பொதுவானது. அதுபோல் கவிதை எழுதவும் வயது ஒரு தடையல்ல நண்பரே! கணவனை மனைவியும், மனைவியும் காதலிக்கலாம். அவரையே கவிதையாக வடிக்கலாம். //
ReplyDeleteநீங்க சொல்ற காதலெல்லாம் சினிமாவுக்கும் எழுத்துக்கும் தான் சரி,
கணிணியில் கவிதையை அடிக்கும் போது மனைவி அவசரமாக கூப்பிட்டால் “சனியனே வேலையா இருக்கேன் தெரியல” என்பது தான் இன்று பெரும்பாலா கவிஞர்கள் உபயோகிக்கும் வார்த்தை.
கவிதை என்பது காதலின் வெளிப்பாடென்றால் அதை மனையிடம் தானே காட்ட வேண்டும்,
இங்கே எல்லாரும் என்ன பாவம் செய்தோம்?
அப்படியே ஆனாலும் வெறும் கவிதை வார்த்தைகள் காதை சொல்லிவிடுமா?
காதல் என்பது வாழ்க்கை அதை வாழ்ந்து நிறுபிக்கவேண்டும்!
அண்ணே நீங்க எதோ சீரியஸா வாதம் பண்றிங்கன்னு நினைக்கிறேன்!
காதலர்கள் வந்து என்னை மொத்த போறாங்க!
//மயக்கநிலை சிறிது காலத்திற்குத்தான் நண்பா! காதலில் முதிர்ச்சி பெற்றதால்தான் வாழ்க்கை இனிக்கும். //
ReplyDeleteஎன்னை போல் 13 லிருந்து 19 வயதுக்குள் இருப்பவர்களுக்கு மயக்கம் சகஜம் தான். ஆனால் கிழடு தட்டிய பழுத்த பழமெல்லாம் இன்னும் காதல் கவிதை எழுதுதே!
அதானே தாங்க முடியல!//
காதல் என்பது பொதுவானது. அதுபோல் கவிதை எழுதவும் வயது ஒரு தடையல்ல நண்பரே! கணவனை மனைவியும், மனைவியும் காதலிக்கலாம். அவரையே கவிதையாக வடிக்கலாம்.///
சரியாத்தான் தெரியுது..
அப்படியே ஆனாலும் வெறும் கவிதை வார்த்தைகள் காதை சொல்லிவிடுமா?
ReplyDeleteகாதல் என்பது வாழ்க்கை அதை வாழ்ந்து நிறுபிக்கவேண்டும்!
அண்ணே நீங்க எதோ சீரியஸா வாதம் பண்றிங்கன்னு நினைக்கிறேன்!
காதலர்கள் வந்து என்னை மொத்த போறாங்க!//
அப்படி செய்யமாட்டாங்க. நல்ல வாதம்..
//காதல் என்பது பொதுவானது. அதுபோல் கவிதை எழுதவும் வயது ஒரு தடையல்ல நண்பரே! கணவனை மனைவியும், மனைவியும் காதலிக்கலாம். அவரையே கவிதையாக வடிக்கலாம்//
ReplyDeleteசரிதான்
//நீங்க சொல்ற காதலெல்லாம் சினிமாவுக்கும் எழுத்துக்கும் தான் சரி,
ReplyDeleteகணிணியில் கவிதையை அடிக்கும் போது மனைவி அவசரமாக கூப்பிட்டால் “சனியனே வேலையா இருக்கேன் தெரியல” என்பது தான் இன்று பெரும்பாலா கவிஞர்கள் உபயோகிக்கும் வார்த்தை.
//
இதுகூட சரிதான், யதார்தம்
//நீங்க சொல்ற காதலெல்லாம் சினிமாவுக்கும் எழுத்துக்கும் தான் சரி,
ReplyDeleteகணிணியில் கவிதையை அடிக்கும் போது மனைவி அவசரமாக கூப்பிட்டால் “சனியனே வேலையா இருக்கேன் தெரியல” என்பது தான் இன்று பெரும்பாலா கவிஞர்கள் உபயோகிக்கும் வார்த்தை.
//
இதுகூட சரிதான், யதார்தம்
\\அபுஅஃப்ஸர் said...
ReplyDelete//நீங்க சொல்ற காதலெல்லாம் சினிமாவுக்கும் எழுத்துக்கும் தான் சரி,
கணிணியில் கவிதையை அடிக்கும் போது மனைவி அவசரமாக கூப்பிட்டால் “சனியனே வேலையா இருக்கேன் தெரியல” என்பது தான் இன்று பெரும்பாலா கவிஞர்கள் உபயோகிக்கும் வார்த்தை.
//
இதுகூட சரிதான், யதார்தம்\\
மிகச்சரியான எதார்த்தம்.
As a Doctor எய்ட்ஸ் பற்றி ஒரு புதிய பதிவை எதிர்பார்க்கிறோம்
ReplyDeleteஅறிமுக நண்பர்கள் புதியவர்கள், ஆம் நான் புதியவன் என்றால் எல்லோருமே புதியவர்கள்தானே, நன்றி தேவா என் பதிவுக்கு பின்னூட்டமிட்டதற்கு
ReplyDelete\\அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteAs a Doctor எய்ட்ஸ் பற்றி ஒரு புதிய பதிவை எதிர்பார்க்கிறோம்\\
தடுக்கறது எப்படின்னு யோசிப்போம்
அதுதான் முக்கியம்
ReplyDeleteவந்த பின் யோசிப்பதை விட
ReplyDelete99
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete\அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteAs a Doctor எய்ட்ஸ் பற்றி ஒரு புதிய பதிவை எதிர்பார்க்கிறோம்\\
தடுக்கறது எப்படின்னு யோசிப்போம்//
அப்படியே..
அதுக்கு மருந்து(?) கண்டுபிடிக்க யோசிப்போம்
ReplyDeleteஎன்னுடைய முதல் இரண்டு பதிவும் மிக நீளமாக இருந்ததாக நம் நண்பர்கள் சொன்னார்கள்!
ReplyDeleteஆமா ஆமா
\\என் பேனாவிற்குப் பொதுநலம் தெரியாது
ReplyDeleteயாருமே அறியாத
என் இன்னொரு முகத்தின் இதழ்கள் அது!
அடுத்தவரிற்காய்க் கண்ணீர் விட நான் மட்டும்\\
அருமையான வரிகள்
\\என் பேனாவிற்குப் பொதுநலம் தெரியாது
ReplyDeleteயாருமே அறியாத
என் இன்னொரு முகத்தின் இதழ்கள் அது!
அடுத்தவரிற்காய்க் கண்ணீர் விட நான் மட்டும்\\
அருமையான வரிகள்
தமிழரசிகவிதைக்கலக்கல்! 2009ல் 75 பதிவுகள்!! (யப்பாடியோவ்)\\
ReplyDeleteவெற்றிகரமான மூன்றாம் நாள் வாழ்த்துக்கள் தேவா !!!!
ReplyDeleteஅதுக்கு மருந்து(?) கண்டுபிடிக்க யோசிப்போம்///
ReplyDeleteநோபெல் பரிசுக்கா..
நான் 100 ...........
ReplyDelete/காதல் என்பது பொதுவானது. அதுபோல் கவிதை எழுதவும் வயது ஒரு தடையல்ல நண்பரே! கணவனை மனைவியும், மனைவியும் காதலிக்கலாம். அவரையே கவிதையாக வடிக்கலாம்//
ReplyDeleteசரிதான்
//iniya said...
ReplyDeleteஅதுக்கு மருந்து(?) கண்டுபிடிக்க யோசிப்போம்///
நோபெல் பரிசுக்கா..
//
அதற்காக சக்ஸஸ் பண்ணால் நோபல் பரிசைவிட சிறந்தது..
கலை அக்காவை 2 நாளா கனொம்
ReplyDeleteவணங்கா முடீ என்கே?
ReplyDelete\என் பேனாவிற்குப் பொதுநலம் தெரியாது
ReplyDeleteயாருமே அறியாத
என் இன்னொரு முகத்தின் இதழ்கள் அது!
அடுத்தவரிற்காய்க் கண்ணீர் விட நான் மட்டும்\\
அருமையான வரிகள் அழகு
//iniya said...
ReplyDeleteஅதுக்கு மருந்து(?) கண்டுபிடிக்க யோசிப்போம்///
நோபெல் பரிசுக்கா..
//
அதற்காக சக்ஸஸ் பண்ணால் நோபல் பரிசைவிட சிறந்தது..// உண்மை..
vaanga ....
ReplyDelete//iniya said...
ReplyDeleteஅதுக்கு மருந்து(?) கண்டுபிடிக்க யோசிப்போம்///
நோபெல் பரிசுக்கா..
//
அதற்காக சக்ஸஸ் பண்ணால் நோபல் பரிசைவிட சிறந்தது..// உண்மை..//
athu sarithaan
//iniya said...
ReplyDeleteஅதுக்கு மருந்து(?) கண்டுபிடிக்க யோசிப்போம்///
நோபெல் பரிசுக்கா..
//
அதற்காக சக்ஸஸ் பண்ணால் நோபல் பரிசைவிட சிறந்தது..// உண்மை..//
athu sarithaan///
வாங்க வாங்க
இந்தநோய்கட்டிப்பிடிப்பதால்,ஏன்முத்தமிடுவதலநோயா-ளியைக்கடித்த கொசு நம்மைக்கடித்தால்,ஒரே தட்டில் உணவு சாப்பிட்டால் கூட பரவாது!//
ReplyDeleteஅப்படியா..
இன்று சில நிமிடங்களில் உறக்கத்துடன் கண்ணாமூச்சியாடும் கனவுகளாய், நினைவுகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஓர் மாலைப்பொழுது... பட்டுவிடக்கூடாது என்று அஞ்சியபடி தூறிக்கொண்டிருந்தது மழை//
ReplyDeleteமது அருமை
தமிழரசிகவிதைக்கலக்கல்! 2009ல் 75 பதிவுகள்!! (யப்பாடியோவ்)எப்போது வருவாய் கவிதையில் வசந்தத்தை கேள்வி கேட்கிறார்! //
ReplyDelete75 ஆ///
மங்கை..இவர் வலைதள தோற்றமே வித்தியாசமாக இருக்கிறதே என்று
ReplyDeleteஆச்சரியப்படுவதற்குள், இவருடைய பதிவுகள் அனைத்துமே இன்னும்
ஒருவித பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
எல்லா பதிவுகளிலும் ஓர் சமூக அக்கறை மேலிடுகிறது.
நிச்சயமாக வலைச்சரம் என்ற ஒரு தளம் இல்லையென்றால் என்னைப் போன்ற புதிய பதிவர்கள்,இது போன்ற சான்றோர்களின் பதிவுகளைப் பார்த்திருக்க முடியாது.///
ஆமா நானும் சொல்லிக்கிறேன்
\\அன்பைப் பகிர்ந்தோம் ..மகிழ்ந்தேன்
ReplyDeleteஅரவணைப்பைப் பகிர்ந்தோம்....அதிசயித்தேன்
நட்பைப் பகிர்ந்தோம்..ஆரவாரித்தேன்
இப்பொழுது பிரிவை பகிரச் சொல்கிறாயே…என் செய்வேன்?\\
ஆஹா மிகவும் இரசித்தேன்.//
ஜமால் வழி நானும்
முடிதான் வெட்டப்போனாரு மாமா
ReplyDeleteஇங்க பாருங்க
\\மாமா ....
நான்
தொட்டு கலைக்க
ஆசைப்பட்டதை
எவனோ கலைத்து
வெட்ட எப்படி அனுமதித்தாய்.......\\///
ரசிக்கிறேன்
பண்ணையார் அண்ணன் வெளியூரா?
ReplyDeleteமருத்துவமனை போனா தனி புதிய சிரிஞ் உபயோகிக்கிறார்களான்னு பாருங்க! ரொம்ப கிராமம்னா ஒரு புதிய சிரிஞ் வாங்கிக்கொண்டு போய் விடுங்கள்!!//
ReplyDeletegood suggestion
எயிட்ஸுக்கு நல்ல மருத்துவம் தாம்பரம் டி.பி.சானிடோரியத்தில் கிடைக்கிறது!அது தவிர எல்லா தாலுகா அரசு மருத்துவ மனைகளிலும் கிடைக்கும்! என்ன இந்த வியாதியை குணப்படுத்த முடியாது! கட்டுப்படுத்தி கொஞ்ச நாள் வாழ்க்கையை தள்ளிப்போடலாம்!//
ReplyDeleteeverybody shoud know.
"அப்படியே என் வலைத்தளம் வந்து பார்" என்கிறது
ReplyDelete//நீங்க சொல்ற காதலெல்லாம் சினிமாவுக்கும் எழுத்துக்கும் தான் சரி,
ReplyDeleteகணிணியில் கவிதையை அடிக்கும் போது மனைவி அவசரமாக கூப்பிட்டால் “சனியனே வேலையா இருக்கேன் தெரியல” என்பது தான் இன்று பெரும்பாலா கவிஞர்கள் உபயோகிக்கும் வார்த்தை.
//
இதுகூட சரிதான், யதார்தம்\\
மிகச்சரியான எதார்த்தம்.//
எல்லாரையும் ஒரே கண்ணோட்டத்தோட பார்க்கக்கூடாது நண்பா! சீரயஸ் எல்லாம் கிடையாது. கருத்துப் பறிமாற்றம்தானே!
\\அபுஅஃப்ஸர் said...
ReplyDelete"அப்படியே என் வலைத்தளம் வந்து பார்" என்கிறது\\
இன்னா சொல்றபா
வாழ்த்துக்கள்!
ReplyDelete/என்னுடைய முதல் இரண்டு பதிவும் மிக நீளமாக இருந்ததாக நம் நண்பர்கள் சொன்னார்கள்! /
ReplyDeleteரொம்பவே நீளம்...:)
\\நிஜமா நல்லவன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்!\\
வந்துட்டாரு ...
/RAMYA said...
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்...
தொடருங்கள் பிறகு வருகிறேன்.../
இப்படித்தான் சொல்வாங்க...ஆனா வரமாட்டாங்க...:)
/ நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\நிஜமா நல்லவன் said...
வாழ்த்துக்கள்!\\
வந்துட்டாரு .../
அதான் கமெண்ட் பார்த்தாலே தெரியுதே....அப்புறம் என்ன வந்துட்டாரு...போய்ட்டாருன்னு அதுக்கு ஒரு கமெண்ட் ...:)
பண்ணையார் அண்ணன் இருக்காரா?
ReplyDelete\\நிஜமா நல்லவன் said...
ReplyDeleteபண்ணையார் அண்ணன் இருக்காரா?\\
அவரோட அண்ணன் வேறயா
\\நிஜமா நல்லவன் said...
ReplyDelete/ நட்புடன் ஜமால் said...
\\நிஜமா நல்லவன் said...
வாழ்த்துக்கள்!\\
வந்துட்டாரு .../
அதான் கமெண்ட் பார்த்தாலே தெரியுதே....அப்புறம் என்ன வந்துட்டாரு...போய்ட்டாருன்னு அதுக்கு ஒரு கமெண்ட் ...:)\\
இத சொல்லியே ஒரு கமெண்டா
நீங்க அறிமுகப்படுத்தின ஐந்து பேர்ல மது கிருஷ்ணா மட்டும் அறிமுகம் மற்றவர்கள் புதியவர்கள்...
ReplyDelete//வால்பையன் said...
ReplyDeleteஎன்னை போல் 13 லிருந்து 19 வயதுக்குள் இருப்பவர்களுக்கு மயக்கம் சகஜம் தான்//
டோண்டு "வால் சமீபத்தில் பிறந்தவர் தான்" என்று சொன்னதுக்கா இந்த அலப்பற...
இத யாரும் கவனிக்கலையா ??
இயற்கையின் பதிவில் நான் ரசித்த கவிதை
ReplyDelete//அன்பைப் பகிர்ந்தோம் ..மகிழ்ந்தேன்
அரவணைப்பைப் பகிர்ந்தோம்....அதிசயித்தேன்
நட்பைப் பகிர்ந்தோம்..ஆரவாரித்தேன்
இப்பொழுது பிரிவை பகிரச் சொல்கிறாயே…என் செய்வேன்?//
பிரிவின் உணர்வுகளை சொல்லும் அழகான கவிதை...
தமிழரசி உன் காதலைப் பெற்றவன் கொடு்தது வைத்தவன். வாழ்க உங்கள் காதல், வாழ்நாளையும் தாண்டி...
ReplyDeleteப்ளிஸ் - இவர் பதிவில் நான் ரசித்தது
ReplyDelete//நீண்ட காத்திருப்பு
உடையா மௌனம்
பொருள் புரியாப் பார்வை
ஒரு காதல் !//
காதலுக்கு புது விளக்கம் அருமை...
எழுத்தோசையில் தமிழரசி வரிகளில் ரசித்தது
ReplyDelete//சற்று வேறுபட்டு மாறு பட்டு காதலனை
எழுதும் ஒரு மரபு மீறிய
கவிதையின் கவிதை இது .......//
கவிதையின் வரிகள் வெகு அருமை...
//எனக்கு நீங்கள் அறிமுகப்படுத்தியவை எவ்வளவோ! புத்தகங்கள் , வாசிக்கும் பழக்கம், இந்த இரண்டிற்காகவும் என் வாழ்நாள் முழுதும் நான் நன்றி சொல்ல வேண்டும். வெறும் ஆடைகளையும் நகைகளையும் பெண்பிள்ளைக்காகச் சேமிக்காமல், எனக்கு நீங்கள் அளித்த சொத்து இவை. எங்கிருந்தோ எல்லாம் எனக்காகப் புத்தகம் தேடிவரும் போதெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்ட மகளாக உணர்ந்திருக்கிறேன்.//
ReplyDeleteஎத்தனை பேருக்கு வாய்க்கும் இத்தகைய வாய்ப்பு மது!
தேவா வாழ்த்துக்கள்.பதிவோடு வைத்தியமும் செய்கிறீகள்.
ReplyDeleteஅசத்தல்.சந்தோஷமாயும் இருக்கு.
தேவா,வேலைக்குப் புறப்படுகிறேன்.
வந்து ஆறுதலாகப் பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள் தேவா அண்ணா எங்கயோ போயிட்டீங்க....
ReplyDeleteப்ளிஸ்...கவிதை.
ReplyDeleteபுரிதலின் வெளிபாடாய்...அருமையான கவிதை என்றால் சாதாரணமாக இருக்கும். என்ன சொல்ல... எப்படி சொல்ல... வாழ்த்துக்கள்!
அட... 150 நாமதானா?
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தேவா...
ReplyDeleteரொம்ப லேட்டா வந்ததற்கு மன்னிக்கவும்...
இன்னிக்கு சரியான ஆணி.. அதனால்தான் ரொம்ப லேட்
என எதுவந்தாலும்
ReplyDeleteதலை துணிந்து
விடுவாள்
பூமாதேவிக்கு
மட்டும் பெயர்
பொறுமை இல்லை
பெண்ணுக்கும் தான்\\
அருமை..
ளிஸ்...கவிதை.
ReplyDeleteபுரிதலின் வெளிபாடாய்...அருமையான கவிதை என்றால் சாதாரணமாக இருக்கும். என்ன சொல்ல... எப்படி சொல்ல... வாழ்த்துக்கள்!
February 11, 2009 4:24:00 PM IST
Blogger அன்புமணி said...
அட... 150 நாமதானா?///
அன்புமணி
150 வாழ்த்துக்கள்..
http://kathalukai.blogspot.com/
ReplyDeleteஎன்னுடைய படைப்புகளை அனைவருக்கும் அறிமுகம் செய்ததற்கு நன்றி.
ReplyDeleteபடித்து விட்டு வாழ்த்தியவர்களுக்கும் மிக்க நன்றி.
அவ்வப்போது வந்து படியுங்கள் .!
www.bliss-live-ur-life.blogspot.com
ஒரு வரியுடன் போனால் எப்படி//
ReplyDeleteஹரிணி அம்மா(சகோதரி)நன்றி!காதலர் தினத்துக்கு முன்னோட்டம் விட்டுட்டாரு நம்ம ஜமால்! அப்ப நீங்க...!(நானும் ஸ்பெசலா தயார் பண்ணிக்கி்ட்ருக்கேன். நீங்க வெயிட் பண்ணுங்க!)
ReplyDeleteவார்த்தைகள் வரமருக்கின்றனவே.... தேவா அண்ணா.. என்ன சொல்ல....
ReplyDeleteஎன் பதிவுகளைப் பலருக்கும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி தேவா.படித்துப் பாராட்டிய
ReplyDeleteநட்பு நெஞ்சங்களுக்கும் நன்றி..நன்றி..
அப்பப்போ நேரம் கிடைக்கும்போது எல்லாரும் கண்டிப்பா மீண்டும் மீண்டும் வாங்க..
http://iyarkai09.blogspot.com/
ஹரிணி அம்மா(சகோதரி)நன்றி!காதலர் தினத்துக்கு முன்னோட்டம் விட்டுட்டாரு நம்ம ஜமால்! அப்ப நீங்க...!(நானும் ஸ்பெசலா தயார் பண்ணிக்கி்ட்ருக்கேன். நீங்க வெயிட் பண்ணுங்க!)//
ReplyDeleteஅப்படியா?
மக்களே
ReplyDeleteகாதலர் தினம் முன்னோட்டம் இல்லை.
அது Jan26 எழுதிய பதிவு.
என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் என் காதலை சொல்லி கொண்டே தான் இருக்கு, இதுல தனியா ஒரு நாளா.
இதுல நமக்கு நம்பிக்கையோ, விருப்பமோ இல்லை.
தேவா,இன்றைய பொழுது எப்படிப் போனது?சந்தோஷம்தானே!உற்சாகமாய் பலரை அறிமுகப்படுத்துகிறீர்கள்.நன்றி.
ReplyDeleteபதிவு ரொம்ப நல்லா இருந்தது தேவா
ReplyDeleteதாமதமாகத்தான் வர முடிகிறது
அவ்வளவு வேலை.
வரவே இல்லை என்று இல்லாமல் வந்தேனே என்ற அந்த எண்ணமே எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது தேவா!
மன்னிக்க தாமதத்திற்கு.
மங்கை, இயற்கை, தமிழரசி, மது, கிருஷ்ணா, ப்ளிஸ்.
ReplyDeleteஅறிமுகமான உங்கள் அனைவருக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்!!!
நீங்கள் மேன்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்!!!
கல்க்கிறிங்க்க தேவா>.....
ReplyDeleteவாழ்துக்கள்..
இருங்க அறிமுக படுத்தியவங்களை படிச்சிட்டு வந்துறன்
என்னுடைய முதல் இரண்டு பதிவும் மிக நீளமாக இருந்ததாக நம் நண்பர்கள் சொன்னார்கள்
ReplyDelete//////////////
அப்டியா?????????????
வலைச்சர ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்
ReplyDelete\\குறைந்த
ReplyDeleteசெலவில் நிறைந்த
பலனை
எதிர்பார்த்தவர்களுக்கு
கிடைத்த
இலவச இணைப்பு...\\
ஆஹா....
\என் பேனாவிற்குப் பொதுநலம் தெரியாது
ReplyDeleteயாருமே அறியாத
என் இன்னொரு முகத்தின் இதழ்கள் அது!
அடுத்தவரிற்காய்க் கண்ணீர் விட நான் மட்டும்\
சுட்டிகள் எல்லாம் அருமை!
ReplyDeleteஅதுக்கு மருந்து(?) கண்டுபிடிக்க யோசிப்போம்///
ReplyDeleteநோபெல் பரிசுக்கா??????????????????????????????????????????????
நடக்காட்டும்....
174
ReplyDelete175 அடிச்சாசு..
ReplyDelete\\என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் என் காதலை சொல்லி கொண்டே தான் இருக்கு, இதுல தனியா ஒரு நாளா.
ReplyDelete\\
எப்டிங்க பாஸ் இப்டி எல்லாம்......
\\Sinthu said...
ReplyDeleteவார்த்தைகள் வரமருக்கின்றனவே.... தேவா அண்ணா.. என்ன சொல்ல....
\\
எப்டிங்க சிந்து... இது உங்களாளை மட்டுமெ முடியும்
178
ReplyDelete179
ReplyDelete180
ReplyDelete/எனக்கு நீங்கள் அறிமுகப்படுத்தியவை எவ்வளவோ///
ReplyDeleteஅப்பா என்றால் அப்பாதான்
புத்தகங்கள் , வாசிக்கும் பழக்கம், இந்த இரண்டிற்காகவும் என் வாழ்நாள் முழுதும் நான் நன்றி சொல்ல வேண்டும்.///
ReplyDeleteநல்லா சொல்லனுங்க!!
தேனாக இனிப்பாய் என்று
ReplyDeleteதேடி நான் வந்தால்
தேளாக கொட்டுகிறாயே!!!
விரும்பியதற்கு பலனாய்
விஷமாவது தந்தாயே
நன்றி நவிழ்கிறேன் நாதா!!!!
நட்சுப்பாய்ந்த என் உடலோடு///
ஏன் காதலா?
ஊமை ஆனது மனம்
ReplyDeleteமௌனம் ஆனது மொழி
ஊனம் ஆனேன் நான்.///
ஆஹா என்ன அழகு.
வலை தளம் தந்த வசந்தம் நீ
ReplyDeleteவான் மழை பொழியும் மேகம் நீ
வருடி பேசும் தென்றல் நீ
வண்ணம் கொண்ட வானவில் நீ///
வர்ணனை பிரமாதம்..
மிக மிகத் தாமதமாக வந்ததற்கு மன்னிக்க வேண்டும்!!! (Late but latest - 186!!!)
ReplyDeleteஎன்னை இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் தேவா அண்ணா:)
எனது எழுத்துக்களைப் பற்றிப் பின்னூட்டமிட்டு, எனக்கு வாழ்த்துக்களும் தெரிவித்த நட்புடன் ஜமால்,ஹரிணி அம்மா,அ.மு.செய்யது, இனியா,அன்புமணி,ரம்யா,கவின் எல்லோருக்கும் என் அன்பு நன்றிகள்:)
-மது கிருஷ்ணா