கடவுள் வாழ்த்து============== பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கக் தமிழ்மூன்றும் தாமற்றவர்கள் கேலி செய்தால்
ஒரு நாட்டின் தலை நகரத்தில் குப்பன் என்பவன் இருந்தான். அவன் எது செய்தாலும் அவனை எல்லோரும் கேலி செய்வார்கள். அதனால் குப்பன் மனது புண் பட்டது. அவமானம் தாங்க முடியாமல் ஒரு நாள் குப்பன் அரசவைக்கு வந்து அரசரை வணங்கினான்.
குப்பன்: அரசே! வணக்கம் எல்லோரும் என்னை கேலி செய்கிறார்கள் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தாங்க முடியாத கோபம் வருகிறது. நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் தான் அறிவுரை சொல்ல வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொண்டான்.
இந்த வேண்டுகோளைக் கேட்டு அவையில் இருந்தவர்கள் திகைத்து நின்றார்கள். மற்றவர்கள் இவனைக் கேலி செய்வது சரிதான். முட்டாளாக இருப்பதால் தான் அரசனிடமே இப்படிக் கேட்கிறான் என்று அவர்கள் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டார்கள்.
அரசன்: நான் இதற்கு ஒரு நல்ல வழி சொல்கிறேன். பதிலுக்கு நான் எதைக் கேட்டலும் தருவாயா ? என்று கேட்டான் அரசன்.
குப்பன்: பிறர் என்னை கேலி செய்யக் கூடாது; அதற்காக என் உயிரையே கேட்டாலும் தருவேன்.
அரசன்: நான் விரும்பியதும் அதுதான். நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே நீ செய்ய வேண்டும். சிறு தவறு நடந்தாலும் உன் உடலில் உயிர் இருக்காது.
குப்பன்: உணர்ச்சி வேகத்தில் என்ன பேசி விட்டோம் என்று வருந்தினான். அரசே!! நான் என்ன செய்ய வேண்டும் ??
அரசன்: வீரா! ஒரு கிண்ணத்தில் வழிய வழிய எண்ணெய் நிரப்பி குப்பனிடம் கொண்டுவந்து கொடு.
வீரா : இந்தா குப்பா, எண்ணை கிண்ணத்தை கச்சிதமாக வாங்கிக் கொள் அரசர் சொன்னவைகளை நினைவில் வைத்து, இந்த காரியத்தை கச்சிதமாக செய்து முடி.
அரசன்: குப்பா, நீ இந்தக் கிண்ணத்தை எடுத்திக் கொண்டு நகர வீதிகளின் வழியே சென்றுவர வேண்டும். இந்தக் கிண்ணத்தில் இருந்து ஒரு துளி எண்ணெயும் தரையில் சிந்தக் கூடாது. அப்படிச் சிந்தினால் உன் உடலில் உயிர் இருக்காது, போய் வா.
வழிய வழிய எண்ணெய் இருந்த அந்தக் கிண்ணத்தைக் கையில் ஏந்தியபடி கவனமாக நடந்தான் குப்பன். அவன் அப்படிச் செல்வதை பார்த்த பலரும் கேலியும் கிண்டலும் செய்தனர். எதையும் அவன் காதில் வாங்கிக் கொள்ள வில்லை. உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் மனது புண் பட்டது இருந்தது.
அரண்மனை திரும்பிய குப்பன்...
குப்பன்: அரசே! நீங்கள் கட்டளை இட்டபடியே செய்து முடித்து விட்டேன். கிண்ணத்தில் இருந்து ஒரு துளி எண்ணெயும் சிந்தவில்லை.
அரசர்: நீ நகர வீதிகளின் வழியாகச் சென்றபோது சிலர் உன்னைப் பார்த்துக்கேலி செய்தார்களாமே உண்மையா?
குப்பன்: எண்ணைய் சிந்தக் கூடாது என்பதிலேயே கவனமாக இருந்தேன், அதனால் அவர்கள் பேசியது என் காதில் விழவில்லை அரசே!
அரசர்: நீ கவனத்துடன் ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும் போது பிறர் என்ன சொன்னாலும் நீ பொருட்படுத்துவது இல்லையே. அப்படி இருக்கும் போது பிறர் கேலி செய்கிறார்கள் என்று எதற்காக என்னிடம் வந்தாய்?
குப்பன்: அரசே! உங்களால் இன்று நான் நல்ல பாடம் கற்றுக்கொண்டேன். இனி யாரும் என்னைக் கேலி செய்யும்படி நடந்து கொள்ள மாட்டேன். அப்படியே கேலி செய்தாலும் அதைப் பொருட்ப்படுத்த மாட்டேன்.
இதை மிகவும் மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு குப்பன் அங்கிருந்து புறப்பட்டான்.
எப்போதும் நாம் நமது செயல்களை செவ்வனே செய்யவேண்டுமே அல்லாமல் அவங்க என்ன கூறுவார்கள், இவங்க என்ன கூறுவார்கள், அப்படின்னு நினைக்கக் கூடாது. யார் மனதிலே காயங்கள் இல்லை, காயத்துக்கு மருந்து காலம்தான், என்று நினைத்தாலே போதுமே!!
நம்மை வெல்ல இவ்வுலகத்தில் யார் இருக்கிறார்கள் ?
இந்த நாளில் நான் ரசித்த சில புதியவர்கள்
ஹரிணி அம்மா
==============
கணவனா? காதலனா?...
நிலாவும் அம்மாவும்
=================
கிருஷ்ணா! கிருஷ்ணா! உங்க எல்லாருக்கும் நீங்க எப்டி பிறந்தீங்கன்னு உங்க அம்மா சொல்லிருப்பாங்க...ஆனா கிருஷ்ணர் சாமி எப்டி பிறந்தார்னு உங்கம்மா சொன்னாங்களா? எங்க அம்மா சொன்ன கதை நான் சொல்லட்டுமா, நிலா வீட்டு சின்ன குட்டி சொல்லராங்கலாம், கிரிஷ்ணர் வேஷம் எல்லாம் போட்டிருங்கங்க.
அந்த அழகை போய் பாருங்களேன். பொங்கல் தெரு விழா. என்ன செஞ்சீங்க அத்தை மாமா பொங்கலுக்கு.....கரும்பு, அந்த குட்டி பாப்பா பொங்கல் வாழ்த்து சொல்லறாங்க, அந்த அழகையும் பாருங்களேன் மாறு வேடப் போட்டியில்
பரிசு எல்லாம் வாங்கினாங்களாம் ரெக்கை கட்டி பறக்குதய்யா அம்மாவோட சைக்கிள். அப்படின்னு அழகா பாடிகிட்டு சூப்பர்ஆ சைக்கிள் ஓட்டறாங்க பாருங்க அந்த குட்டி பாப்பா. நான் பாத்துட்டேன்
அந்த அழகை நீங்களும் பாருங்களேன்.
இந்த நாளில் நான் ரசித்த சில நகைச்சுவை நாயகர்கள்
இவர்கள் எல்லாம் என் பார்வையில் நகைச்சுவை அரசர்கள். இவங்க எல்லாம் ரொம்ப நல்லா எழுதறவங்க. இவங்களை எல்லாம் நான் அறிமுகப் படுத்துவதாக நினைக்காதீங்க. ரொம்ப அருமையா சிரிக்க வைப்பாங்க. எப்படித்தான் கற்பனை பண்ணுவாங்களோ??.
நசரேயன்
========
இவரு இருக்காறே ரொம்ப கில்லாடிங்க. நல்லா வயறு முட்ட சாப்பிட்டிட்டு இன்னைக்கு என்னா பதிவு எழுதலாம்னு மோட்டுவளைய பாத்துகிட்டே இருப்பாராம், அப்படியே தூங்கிடுவாராம். ஆனா இவரு அதிருஷ்டம் முழிச்சிகிட்டு இருக்கறபோது வராத கற்பனைகள், கனவில் தலை விரிச்சி ஆடுமாம். உடனே இவர் அதை அப்படியே மனசுலே படம் பிடிச்சி, அப்புறமா அதை பதிவா போடுவாராம். இதுதான் நான் நசரேயனைப் பற்றி இதுவரை அறிந்த நிலவரம். என்ன ஒரே கலவரமா இருக்கா??
என் முதல் நேர்முகத் தேர்வு
=========================
வழக்கம் போல படிச்சிட்டு வேலை தேடி அலையற அவலத்தை, அவர் கண்ணோட்டத்தில் ஒரு சிரிப்பா சொல்லி இருக்காரு. ஆனா இது கனவு இல்லையாம் அனுபவமாம். நம்புங்க ப்ளீஸ். ஆனா, மேனேஜர் கேட்ட கேள்விக்கு சரியாதான் பதில் சொல்லி இருக்காரு. சரியா? இல்லையான்னு? கொஞ்சம் போயி பாத்து எனக்கும் சொல்லுங்களேன். எதுக்கும் கொஞ்சம் உஷாரு.
வேர் ஆர் யு புட் ஆப்? ன்னு ஒரு கேள்வியை கேட்டு புட்டாரு. என்னடா இது புட் ஆப்.. படிச்சா மாதிரி ஞாபகம் இல்லையேன்னு, அந்த "வேரை" ஆணிவேரா வச்சி சொல்லவும் ஒரு தயக்கம், அதனாலே முதல் கேள்வியை விட்டு பிடிக்கலாம்னு. நீங்க கேட்டது எனக்கு புரியலை சார் ன்னு சொன்னேன்.மறுபடியும் திருப்பி சொன்னாரு, நானும் அதே பதில் சொன்னேன். என் முதல் நேர்முகத் தேர்வு..
சங்கம் திவால்
=============
சங்கத்திலே கடன் வாங்கிகிட்டு வெளி நாட்டுக்கு போய்ட்டாங்களாம். அது யாருன்னு இப்போ லிஸ்ட் எடுக்கச் சொல்லி காவல் நிலையத்திற்கு சம்பந்தப் பட்டவங்க எல்லாம் கம்ப்ளைண்ட் கொடுத்து இருக்காங்களாம். என்ன செய்ய? இவங்களுக்கு பணம் கடன் கொடுத்தவங்க மஞ்ச கடுதாசி எல்லாம் கொடுத்துட்டாங்களாம். யோசிங்க! என்ன பண்ண போறாருன்னு போயி அங்கே தான் பாருங்களேன், ஏன்னா நானும் அந்த சங்கத்திலே பணம் போட்டு இருக்கேன். எனக்கும் வந்து சொல்லுங்க திவாலா நிஜம்மா இல்லே ஹவாலாவா ?? பேச்சு வார்த்தை நடக்குது. என்ன நடந்து என்ன பண்ண??
சங்க தலைவர் : என்ன பொருளாளரே நம்ம சங்கத்தோட நிதி நிலைமை எப்படி இருக்கு போட்ட பணம் கிடைக்குமா?? சங்கம் திவால்
இது கள்ளக்காதல்?
================
ஏதோ புதிர் போடற மாதிரி ஆரம்பம். எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருப்போம். மறுபடியும் இங்க வச்சி மொக்கை போடுறதுக்குள்ள சாந்தி மின்சார ரயில் நிலையம் போய்விட்டாள்.
அவளை ஓடிபோய் பிடிக்கிறதுக்குள்ள மூச்சு 300 மைல் வேகத்துல வாங்குது. இதெல்லாம் வேறே நடக்குது. போயி பாருங்க என்ன அட்டகாசம் பண்ணராருன்னு. இது கள்ளக்காதல்?
உருப்புடாதது_அணிமா
====================
திரு. அணிமா அவர்கள் பழகுவதற்கு இனிமையான நண்பர்ங்க என்ன கோவமா பேசினாலும் உங்களை சிரிக்க வச்சிடுவாரு நல்ல நகைச்சுவை மிகுந்த நண்பர். இந்த அணிமாவை நான் வன்மையா கண்டிகிறேனுங்க, இந்தியா போறேன்னு சொன்னாரு, அதுக்கு நம்ப எல்லாம் வேண்டாம்னு போறதா? அதுக்குதான் இந்த கண்டிப்பு. நானும் நிறைய முயற்சி பண்ணி அணிமா அவர்களை தேடி பாத்துட்டேனுங்க, நம்ப தம்பி S.K. கிட்டே கூட சொன்னேன், யப்பா தம்பி நம்ப அணிமா அங்கிட்டு எங்கிட்டாவது கண்ணுலே பட்டா உடனே பதிவு உலகத்துக்கு அனுப்புன்னு. தம்பி S.K.யும் ஆளுங்க, வேண்டியவங்க, வேண்டாதவங்க (என்ன வேண்டாதவங்க?? ), மற்றும் போலீஸ், CID எல்லாம் வச்சி தேடினாராம், ஆனா அணிமா சிக்கலையாம். இதுதான் இதுவரை நிலவரம்.
பாருங்க
நைஜீரியாவில் நடந்த பயங்கரம்
(பதிவர்-வாசகர் சந்திப்பு) போட்டு ஒரே அலம்பல் பண்னறாரு. படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க இதெல்லாம்
கொஞ்சம் ஓவரு இல்லே???? இவரு அப்பப்போ
எஸ் ஆய்டுவாறு. அப்பப்போ வந்து
எஸ் ஆனதுக்கும் சேர்த்து எல்லார் கிட்டேயும்
மல்லு கட்டுவாரு. இப்ப இங்கே போய் பாருங்களேன் என்ன அலம்பல் பண்றாருன்னு ( மீண்டு வந்த) அணிமா is back
( இது அந்த back இல்லீங்க )
நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.., இனி மேலும் பொது இடத்தில் புகைபிடிக்கும் முன் யோசியுங்கள், அப்படீன்னு சமுதாயச் சிந்தனையுடன்,
அணிமாவோட சொந்த கருத்தையும் சேர்த்து சொல்லி இருக்காரு, இந்த பழக்கம் வேண்டாம்னா நல்லது தானுங்களே. நல்லது யாரு சொன்னாலும் ஏத்துக்கணும் இல்லையா? இங்கே பாருங்க என்ன அழகா
படங்கள் போட்டு விவரத்தோட சொல்லி இருக்காருன்னு.
விஜய்
=====
வெட்டி வம்புன்னு சொல்லுவாங்க ஆனா விஜய்....
காணக் கண்கள் கோடி வேண்டும்
=============================
காலை 5.00 மணி. பெங்களூர் மார்கழிக் குளிரில் ஜாகிங் வாக்கிங் போகும் கடமை கண்ணாயிரங்கள் கூட இழுத்துப் போர்த்தி உரங்கும் நேரத்தில் நான் என்ன செய்கிறேன். மார்கழி மாசத்தில் அதிகாலையில் கோவிலுக்கு வரச் சொன்ன்னாள் அம்மா. அதிகாலையில் எழுந்து குளிரை எதிர்கொண்டு,
ஸ்வெட்டர் மஃப்ளர் ஏதும் இல்லாமல் சில்லென்று அடிக்கும் காற்றில் நடந்து பெருமாளை சேவித்து வந்தோம். இதெல்லாம் நடந்தது ஒரு வாரம். ஒரே வாரம். அடுத்த வாரத்திலிருந்து,
“அம்மா, நேற்று ஆஃபீஸிலிருந்து 12 மணிக்குத் தான் மா வந்தேன்” என்று இழுக்க, பிள்ளைக்காக பெருமாளைத் துரந்தது, மார்கழி மாதத்துக் குளிருக்கு தனி மகத்துவம் உண்டுங்க. அதுவும் பெங்களூர்லே நம்ம விஜய் பாவம்ங்க. என்ன பாடு படராருன்னு பாருங்க.
பித்து மனம் கொண்ட தாய் மனது.
ஹம் ஹோங்கே காம்யாப்
=======================
ச்சேசே விஜய் ரொம்ப நல்லவரு. வெட்டி வம்பும் பண்ண மாட்டாரு, திட்டவும் மாட்டாரு. இந்த பாட்டு நம்ப நண்பருக்கு ரொம்ப பிடிக்குமாம். கொஞ்சம் அமைதியா இருந்து பாருங்க. உங்க காதுலே விழலையா?? ஹையோ ஹையோ, விஜய் இங்கே பாடலைங்கோ, பெங்களூர்லே பாடறாரு.
இந்த வருடத்தில் எப்படியாவது என் உடம்பு எடையைக் குறைப்பது என்ற தீர்மானத்தை, என்ன தான் காயத்ரி(தங்க்ஸ் தங்க்ஸ்), என் சம்மதமேயில்லாமல் அவளாக நிறைவேற்றிக் கொண்டாலும், நானே கோதாவில் இறங்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.
ரொம்ப குண்டா இருக்காராமா!!! பாவம் ரொம்ப குண்டக்க மண்டக்க கஷ்டப் பட்டிருக்காரு.
ரொம்ப யத்தினப் பட்டு தலை கீழாக சிரசாசனம் செய்கையில், கைக்கடியில் ஏதோ கடித்துத் தொலைக்க அப்படியே, மாட்டு வண்டி குடை சாய்வது போல் கட்டிலுக்கும் சுவருக்கும் இடையே இருக்கும் இடுக்கில் விழுந்து தொலைக்க, சிரசாசனம், குண்டக்கா மண்டக்காசனம் ஆனது. விஜய் என்னா ஆனாறுன்னு தெரியுனுமா. உடனே விரைந்து செல்லுங்கள், இதோ உங்கள் விஜய் விஜய் விஜய்...
ரயில் பயணங்களில்
==================
அடுத்த நீண்ட பயணம், சென்னையிலிருந்து கொல்கத்தா. இப்போதும், கூட வந்தவர்களில் பெறும் பாலும் ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர்கள் தான். ஆங்கிலத்தில் பேச்சையெடுத்தாலும், “கீ ஆஷ்சே”, “எந்துக்கு, ஆய்ப்பெயந்தி” என்று அவர்கள் பாஷையிலேயே பதிலளிக்க, நம்மால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கொல்கத்தா வரை மௌன விரதம் தான்.
இப்படி எல்லாம் பாஷை தெரியாமல் கஷ்டப் பட்டதை அருமையா சொல்லி இருக்காரு. உங்களுக்கும் இது பிடித்திருக்கும்ன்னு நினைக்கிறேன். கொஞ்சம் போயி அவரை எட்டிப் பாத்துட்டு வந்திடுங்களேன்.
ரயில் பயணங்களில்.
எனக்குப் பிடித்த உலக நீதி இயற்றிவர்: உலகனாதனார் ========================குற்றமொன்றும் பாராட்டித் திரியா வேண்டாம்
கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோ டெதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரிற்குடி யிருக்க வேண்டாம்
மற்றுநிக ரில்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
இன்று என் முடிவுரை
===================
நல்லதையே நினைப்போம்
நல்லவைகளே செய்வோம்
இந்த நாள் இனிய நாளாக
எல்லோருக்கும் அமையட்டும்
மீண்டும் வருவேன்....
உங்கள் ரம்யா
நான்காம்நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅயித்தான் ஊருக்கு போயிருக்காருன்னு நான் சோகமா இருக்கற நேரம் பார்த்து கணவனா? காதலனா? சுட்டிக் கொடுத்திருக்கீங்க.
ReplyDeleteபடிக்க படிக்க அழுகாச்சியா வருது.
வலைச்சரத்தின் ஆசிரியருக்கு நான்காம் நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள். அத்துடன் நான் முதல் முதல் கற்ற கடவுள் வாழ்த்து. குப்பன் கதை. உலக நீதி. எல்லாமே பிடித்திருக்கு ரம்யா.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அட என்னைப் பற்றி கூட எழுதியிருக்கீங்களே. ரொம்ப ரொம்ப நன்றி. இப்படி வலைச்சரத்துல போடுற அளவுக்கு நம்ம எழுத்து அவ்வளவு நல்லாவா இருக்கு.
ReplyDeleteAnyway Thanks a lot :-)
நான்காம் நாள் வலைச்சர ஆசிரியர் ரம்யாவிற்கு
ReplyDeleteஎனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
நான்காம் நாள் ஆரம்பமே கலக்கல்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
இப்போதைக்கு பிரசண்ட் போட்டுகிறேன், அப்பால வந்து பாக்கி கச்சேரி ...
வரட்டா
வாங்க வாங்க!!
ReplyDeleteவந்து வாழ்த்தியவர்கள் அனைவருக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள் !!
வெற்றிகரமான நான்காம் நாள்! வாழ்த்துக்கள் ரம்யா! வலைத்தளம் அனைத்திற்கும் ஒரு ரவுண்டு போய்வந்தாச்சு. கமெண்டும் போட்டாச்சு!
ReplyDelete// யார் மனதிலே காயங்கள் இல்லை, காயத்துக்கு மருந்து காலம்தான், என்று நினைத்தாலே போதுமே!! //
ReplyDeleteசரியான வார்த்தைகள் ..
உப்பும், தண்ணியும் சேர சேர, எல்லாம் மறந்து போகும் என்பார்கள்..
மறதி என்பது ஆண்டவன் கொடுத்த வரம்... மறதி இல்லை என்றால் நாட்டில் பாதிப் பேர் மனநிலை சரியில்லாமல் தான் சுற்றிக் கொண்டு இருப்பார்கள்
ஹரிணி அம்மா...
ReplyDelete// ஒரு நொடி தாமதமானாலும்
கண்கள் பூத்துப்போகின்றன!!
ஒரு நாள் பார்க்காவிட்டாலும்
கண்கள் கனத்துவிடுகின்றன!
ஒரு நாள் முழுக்க
எங்கேயிருக்கிறாய்
என்ன செய்கிறாய்
என்று கேட்டே
என் ஏர்செல் பில் எங்கோ
போய்விட்டது!!! //
காதலின் உச்சத்தை சொல்லிய வார்த்தைகள்...
இத்துனை நாட்கள் பார்க்காமல் விட்டு விட்டேனே என்று நெகிழ்ந்தேன்
ஹரிணி அம்மா...
ReplyDeleteஆடிக்கு ஒன்னு அம்மாவாசைக்கு ஒன்னு அப்படின்னு பதிவு போடறாங்க..
இந்த இடவெளி குறைய வேண்டும் என கும்மி சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்.
நசரேயன்..
ReplyDeleteமிகச் சிறந்த படைப்பாளி...
எனக்கு இவரது படைப்புகள் மிகவும் பிடிக்கும்
நேர்முகத்தேர்வு... சிரித்து சிரித்து வயிற்று வலி வந்ததுதான் மிச்சம்..
இவருடைய பின்னூட்டங்களிலும், பின்னி பெடல் எடுப்பவர்..
உருப்புடாது அணிமா...
ReplyDeleteஅவ்வப்போது காணாமல் போகும் சக நைஜிரியா பதிவர்.
தற்போதைய நிலவரப்படி... நைஜிரியாவில் இருந்து இந்தியா சென்றுள்ளார்...
அங்கு போயும் காணாமல் போய்விட்டார்...
கண்டு பிடித்து கொடுப்பவர்கள், தங்களுக்கு தாங்களே, ஒரு ஷிவாஸ் ரீகலோ, வேறு எதாவதோ பரிசளித்துக் கொள்ளலாம்.
மிக்க இரக்க குணம் உள்ளவர்...ஒரு பெண்ணிற்காக மனமிரங்கிய இவரின் பதிவைப் படித்து பாருங்கள் தெரியும்
பாலும் தெளிதேனும் பாகும்
ReplyDeleteபருப்புமிவை நாலுங் கலந்துனக்கு
நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கக் தமிழ்மூன்றும் தா
///
எங்களுக்கும் சேர்த்து
வாங்கிடுங்க...
வழிய வழிய எண்ணெய் இருந்த அந்தக் கிண்ணத்தைக் கையில் ஏந்தியபடி கவனமாக நடந்தான் குப்பன். அவன் அப்படிச் செல்வதை பார்த்த பலரும் கேலியும் கிண்டலும் செய்தனர். எதையும் அவன் காதில் வாங்கிக் கொள்ள வில்லை. உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் மனது புண் பட்டது இருந்தது.
ReplyDelete///
அருமை!
கதை எல்லாம் எங்கே
புடிக்கிறிங்க?
நீ கவனத்துடன் ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும் போது பிறர் என்ன சொன்னாலும் நீ பொருட்படுத்துவது இல்லையே. அப்படி இருக்கும் போது பிறர் கேலி செய்கிறார்கள் என்று எதற்காக என்னிடம் வந்தாய்?
ReplyDelete//
டாப்பான கதை!!
ரம்யா கலக்குறீங்க..
உங்களால் இன்று நான் நல்ல பாடம் கற்றுக்கொண்டேன். இனி யாரும் என்னைக் கேலி செய்யும்படி நடந்து கொள்ள மாட்டேன். அப்படியே கேலி செய்தாலும் அதைப் பொருட்ப்படுத்த மாட்டேன்.
ReplyDelete///
கேலியைப்
பொருட்படுத்தக்கூடாது!!
பிரமாதம்..
எப்போதும் நாம் நமது செயல்களை செவ்வனே செய்யவேண்டுமே அல்லாமல் அவங்க என்ன கூறுவார்கள், இவங்க என்ன கூறுவார்கள், அப்படின்னு நினைக்கக் கூடாது. யார் மனதிலே காயங்கள் இல்லை, காயத்துக்கு மருந்து காலம்தான், என்று நினைத்தாலே போதுமே!!///
ReplyDeleteபோதும் போதும்!!!
தத்துவ நாயகி ரம்யா! வாழ்க..
என்னை அறிமுகப்படுத்தியதற்கு ரம்யாவுக்கு ஒரு ஓ போடுங்கப்பா!!!
ReplyDeleteநான்காம்நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஹரிணி அம்மா...
ReplyDeleteஆடிக்கு ஒன்னு அம்மாவாசைக்கு ஒன்னு அப்படின்னு பதிவு போடறாங்க..
இந்த இடவெளி குறைய வேண்டும் என கும்மி சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்.///
நல்லாக்கேட்டீங்க!!
அப்புறம் வருத்தப்படக்கூடாது!!
/ஹரிணி அம்மா said...
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியதற்கு ரம்யாவுக்கு ஒரு ஓ போடுங்கப்பா!!!
/
ஓ
//பாலும் தெளிதேனும் பாகும்
ReplyDeleteபருப்புமிவை நாலுங் கலந்துனக்கு
நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கக் தமிழ்மூன்றும் தா
//
பீரும், ரம்மும், வொஇனும், கல்லும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
நீ எனக்கு டாஸ்மார்க் மொத்தமும்தா தா...
சாப்பிட்டு சாயங்காலம் வருகிறேன்..
ReplyDelete/ஹரிணி அம்மா said...
ReplyDeleteஎப்போதும் நாம் நமது செயல்களை செவ்வனே செய்யவேண்டுமே அல்லாமல் அவங்க என்ன கூறுவார்கள், இவங்க என்ன கூறுவார்கள், அப்படின்னு நினைக்கக் கூடாது. யார் மனதிலே காயங்கள் இல்லை, காயத்துக்கு மருந்து காலம்தான், என்று நினைத்தாலே போதுமே!!///
போதும் போதும்!!!
தத்துவ நாயகி ரம்யா! வாழ்க..
/
ரிப்பீட்டு...!
/ஹரிணி அம்மா said...
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியதற்கு ரம்யாவுக்கு ஒரு ஓ போடுங்கப்பா!!!
/
ஓ//
என்ன ஒரு கஞ்சத்தனம்
//ஹரிணி அம்மா said...
ReplyDeleteசாப்பிட்டு சாயங்காலம் வருகிறேன்..//
இது உங்க முழு நேர வேலையா?
/அண்ணன் வணங்காமுடி said...
ReplyDelete/ஹரிணி அம்மா said...
என்னை அறிமுகப்படுத்தியதற்கு ரம்யாவுக்கு ஒரு ஓ போடுங்கப்பா!!!
/
ஓ//
என்ன ஒரு கஞ்சத்தனம்
/
அண்ணே....அக்கா ஒரு ஓ தானே போட சொன்னாங்க...:)
/அண்ணன் வணங்காமுடி said...
ReplyDelete//பாலும் தெளிதேனும் பாகும்
பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு
நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கக் தமிழ்மூன்றும் தா
//
பீரும், ரம்மும், வொஇனும், கல்லும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
நீ எனக்கு டாஸ்மார்க் மொத்தமும்தா தா...
/
ஹா...ஹா...ஹா...சூப்பர்!
\\எப்போதும் நாம் நமது செயல்களை செவ்வனே செய்யவேண்டுமே அல்லாமல் அவங்க என்ன கூறுவார்கள், இவங்க என்ன கூறுவார்கள், அப்படின்னு நினைக்கக் கூடாது. யார் மனதிலே காயங்கள் இல்லை, காயத்துக்கு மருந்து காலம்தான், என்று நினைத்தாலே போதுமே!!\\
ReplyDeleteகலக்கிட்டேள் ...
\\ஹரிணி அம்மா \\
ReplyDeleteஆரம்ப காலங்களில் பார்த்த ஞாபகம்.
அதிகம் எழுதாததாலோ என்னவோ...
இனி போய்டுவோம் ...
\\நிலாவும் அம்மாவும் \\
ReplyDeleteஅட நம்ம நிலா-வை தெரியாமலா.
அவங்க புகைப்படத்துக்கே பேரவை வைத்தவன் நான்.
\\நசரேயன்\\
ReplyDeleteஅண்ணேன் சமீபத்தில் எழுதிய - நேர்முகம்
அப்ப அப்ப அப்பா
இரவு 1 மணிக்கு படித்துட்டு சிரித்து கொண்டே இருந்தேன்
இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருது.
\\உருப்புடாதது_அணிமா\\
ReplyDeleteபேற கேட்டாலே சும்மா அதிருதுல்ல ...
டைப்புல
பேற கேட்டாலே சிரிப்பு பொங்குதுல்ல
(அட சந்தோஷ சிரிப்புங்க)
\\விஜய் \\
ReplyDeleteஅதிகம் பரிச்சியமில்லை
இனி பழகிடுவோம்.
இங்க ஒருத்தன் தனியா இளநீர் வெட்டுறேன் ...
ReplyDeleteயாரையும் கானோமே ...
பின்னூட்ட சுனாமியில்
ReplyDelete'ஹ' மட்டும் தான் வந்திருக்காங்க
எங்கப்பா நம்ம ‘தே'
\\நிஜமா நல்லவன் said...
ReplyDelete/ஹரிணி அம்மா said...
என்னை அறிமுகப்படுத்தியதற்கு ரம்யாவுக்கு ஒரு ஓ போடுங்கப்பா!!!
/
ஓ\\
நானும் கூவிக்கிறேன்
ஓ!
\\ஹரிணி அம்மா said...
ReplyDeleteசாப்பிட்டு சாயங்காலம் வருகிறேன்..\\
அட வருவியளா
வாங்க வாங்க ...
\\புதுகைத் தென்றல் said...
ReplyDeleteஅயித்தான் ஊருக்கு போயிருக்காருன்னு நான் சோகமா இருக்கற நேரம் பார்த்து கணவனா? காதலனா? சுட்டிக் கொடுத்திருக்கீங்க.
படிக்க படிக்க அழுகாச்சியா வருது.\\
அக்கா - எனக்கும் தான் அழுகாச்சியா வருது.
என்ன செய்றது அழைபேசி இப்போது அழும்பேசி ஆகிவிட்டது.
\\இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteநான்காம் நாள் ஆரம்பமே கலக்கல்.
வாழ்த்துக்கள்.
இப்போதைக்கு பிரசண்ட் போட்டுகிறேன், அப்பால வந்து பாக்கி கச்சேரி ...
வரட்டா\\
இன்னாதிது - கேள்வியா?
\\இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஉருப்புடாது அணிமா...
அவ்வப்போது காணாமல் போகும் சக நைஜிரியா பதிவர்.
தற்போதைய நிலவரப்படி... நைஜிரியாவில் இருந்து இந்தியா சென்றுள்ளார்...
அங்கு போயும் காணாமல் போய்விட்டார்...
மிக்க இரக்க குணம் உள்ளவர்...ஒரு பெண்ணிற்காக மனமிரங்கிய இவரின் பதிவைப் படித்து பாருங்கள் தெரியும்\\
ஹா ஹா ஹா
அண்ணேன் நானும் இதத்தான் சொல்லனும்ன்னு நினைத்தேன்
ஆனாலும் இவ்வளவு அழகா சொல்ல முடியாது
\\அண்ணன் வணங்காமுடி said...
ReplyDelete//பாலும் தெளிதேனும் பாகும்
பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு
நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கக் தமிழ்மூன்றும் தா
//
பீரும், ரம்மும், வொஇனும், கல்லும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
நீ எனக்கு டாஸ்மார்க் மொத்தமும்தா தா...\\
நீங்க அண்ணனா அல்லது
வணங்கா முடிக்கே
அண்ணனா !
\\நிஜமா நல்லவன் said...
ReplyDelete/அண்ணன் வணங்காமுடி said...
/ஹரிணி அம்மா said...
என்னை அறிமுகப்படுத்தியதற்கு ரம்யாவுக்கு ஒரு ஓ போடுங்கப்பா!!!
/
ஓ//
என்ன ஒரு கஞ்சத்தனம்
/
அண்ணே....அக்கா ஒரு ஓ தானே போட சொன்னாங்க...:)\\
மருக்கா -
ஒரக்க
நானும் கூவிக்கிறேன்
\\இது உங்க முழு நேர வேலையா?\\
ReplyDeleteஎன்னை போன்று பல பேர் இங்கு இருக்காங்க போல ...
நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\இது உங்க முழு நேர வேலையா?\\
என்னை போன்று பல பேர் இங்கு இருக்காங்க போல ...
//
வாங்க ஜமால் தம்பி உங்க உடல் நலமா ?
ஆமா எங்கே படை, அம்பு, சேனை எல்லாம் தனியா இருக்கீங்க ??
அண்ணன் வணங்கா மூடி கூட இங்கேதான் இருந்தாரு இப்போ காணோமே !!
ReplyDelete50
ReplyDelete50
ReplyDeleteஎங்கப்பா அந்த wipro புலி செய்யது
ReplyDeleteயப்பா நல்லவரா நீயி.
ReplyDeleteதனியா இருந்து இளநீர் வெட்னா
மட்டைய எனக்கு கொடுத்துட்டியே
/கலை அக்கா said...
ReplyDeleteஅண்ணன் வணங்கா மூடி கூட இங்கேதான் இருந்தாரு இப்போ காணோமே !!
/
என்னது வணங்கா மூடியா?
\\கலை அக்கா said...
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
\\இது உங்க முழு நேர வேலையா?\\
என்னை போன்று பல பேர் இங்கு இருக்காங்க போல ...
//
வாங்க ஜமால் தம்பி உங்க உடல் நலமா ?
ஆமா எங்கே படை, அம்பு, சேனை எல்லாம் தனியா இருக்கீங்க ??\\
கொஞ்சம் பரவாயில்லைக்கா.
சிங்கிள் சிங்கமா சிக்ஸர் அடிப்பேன் நான்
\\நிஜமா நல்லவன் said...
ReplyDelete/கலை அக்கா said...
அண்ணன் வணங்கா மூடி கூட இங்கேதான் இருந்தாரு இப்போ காணோமே !!
/
என்னது வணங்கா மூடியா?\\
ஹா ஹா ஹா
தட்டச்சு பிழைப்பா -
இது ஒரு பிழை-ப்பா
/நட்புடன் ஜமால் said...
ReplyDeleteயப்பா நல்லவரா நீயி.
தனியா இருந்து இளநீர் வெட்னா
மட்டைய எனக்கு கொடுத்துட்டியே/
:)
இன்னைக்கு நீங்க 50 வது பின்னுட்டமா
ReplyDeleteவாழ்த்துக்கள் நிஜமா நல்லவன் !!
/நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\நிஜமா நல்லவன் said...
/கலை அக்கா said...
அண்ணன் வணங்கா மூடி கூட இங்கேதான் இருந்தாரு இப்போ காணோமே !!
/
என்னது வணங்கா மூடியா?\\
ஹா ஹா ஹா
தட்டச்சு பிழைப்பா -
இது ஒரு பிழை-ப்பா/
அண்ணே இது டாப்பு...:)
\\கலை அக்கா said...
ReplyDeleteஇன்னைக்கு நீங்க 50 வது பின்னுட்டமா
வாழ்த்துக்கள் நிஜமா நல்லவன் !!\\
இது போங்கு ஆட்டம்.
இதுக்காக வெளிநடப்புலாம் செய்ய முடியாது.
ReplyDeleteஇருந்து ஆடுவோம்
//
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
/கலை அக்கா said...
அண்ணன் வணங்கா மூடி கூட இங்கேதான் இருந்தாரு இப்போ காணோமே !!
/
என்னது வணங்கா மூடியா?
//
அதான் தம்பி ஜமால் சொல்லுது இல்லே
தட்டச்சு பிழை என்று அப்புறம் என்ன
சரி சரி விடுங்கக்கா
ReplyDeleteதம்பி சொல்லிடிச்சில
\\அண்ணே இது டாப்பு...:)\\
என்னப்பு - கண்ணசந்த நேரத்தில 50 அடிச்சிபுட்டு 100க்காக மீண்டும் பதுங்குறியளோ
ReplyDelete100க்குன்னே வருவாறு பின்னூட்ட தல (சின்ன வட்டம்)
ReplyDeleteசெய்யது
இப்ப இன்னா ஒரு 65 போட்டுக்குறேன்
ReplyDeleteஅப்பாலிக்கா வாரேன்.
/கலை அக்கா said...
ReplyDeleteஇன்னைக்கு நீங்க 50 வது பின்னுட்டமா
வாழ்த்துக்கள் நிஜமா நல்லவன் !!
/
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிக்கா!
//
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
/கலை அக்கா said...
இன்னைக்கு நீங்க 50 வது பின்னுட்டமா
வாழ்த்துக்கள் நிஜமா நல்லவன் !!
/
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிக்கா!
//
நன்றி எல்லாம் எதுக்கு தம்பி ??
\\கலை அக்கா said...
ReplyDelete//
நிஜமா நல்லவன் said...
/கலை அக்கா said...
இன்னைக்கு நீங்க 50 வது பின்னுட்டமா
வாழ்த்துக்கள் நிஜமா நல்லவன் !!
/
வாழ்த்துக்கு ரொம்ப நன்றிக்கா!
//
நன்றி எல்லாம் எதுக்கு தம்பி ??\\
சொல்ல சொல்ல
இன்னும் அடிக்களாம்.
// Blogger நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஎன்னப்பு - கண்ணசந்த நேரத்தில 50 அடிச்சிபுட்டு 100க்காக மீண்டும் பதுங்குறியளோ //
அதானே...
சைக்கிள் கேப்ல ஆட்டோ ஒட்டறது யாருப்பா
யாரவது இருகீங்களா?
ReplyDeleteநான் இப்பத்தான் வர முடிஞ்சுது...
71
ReplyDelete72
ReplyDelete73
ReplyDelete74
ReplyDelete74
ReplyDeleteஅப்பாடா...
ReplyDelete75 நாந்தாம்பா...
யாரும் இல்லாத நேரத்தில வந்து...
வேற வழி... நமக்கு 50... 100 எல்லாம் கிடைக்காததால், 75 போட்டுகிறேன்.
ஆல் கும்மீஸ் எங்க போனீங்க??????
ReplyDeleteஎன்ன இப்படி புலம்ப உட்டது ரொம்ப தப்பு ...
ReplyDeleteஅவ்...அவ்....அவ்...அவ்...அவ்.....
என்ன இப்படி புலம்ப உட்டது ரொம்ப தப்பு ...
ReplyDeleteஅவ்...அவ்....அவ்...அவ்...அவ்.....//
:)))))))))
ஆல் கும்மீஸ் எங்க போனீங்க??????//
ReplyDeleteஅல்லாரும் சாப்பிட போயிட்டாக போல
//மற்றவர்கள் கேலி செய்தால்//
ReplyDeleteஅருமையான கதை...
/இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteயாரவது இருகீங்களா?
நான் இப்பத்தான் வர முடிஞ்சுது...
/
வாங்க..வாங்க...
ஹரிணி அம்மா - இவங்க வலைப்பூ அறிமுகம் சமீபத்தில தான் கிடைச்சது...இவங்க வரிகளில் நான் ரசித்த சில வரிகள்
ReplyDelete//உன் உதடுகளின்
ஸ்பரிசம்
கேட்டு
என் இதயமும்
துடிதுடிக்கிறது!!//
கவிதை முழுவதும் காதல் ததும்பி வழிகிறது...
//உன்னை
ஒரு முறையாவது
உரசிவிடும் நோக்கில்
என் வேலைகள்
எல்லாம்
உன் அருகேயே நடக்கிறது!!//
அருமை...
நிலாவும் அம்மாவும் - இவங்க எனக்கு புதியவங்க இவங்க வலைப்பூ போய் படிக்க வேண்டும்...
ReplyDelete/இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஆல் கும்மீஸ் எங்க போனீங்க??????
/
முளை கட்டிய பயிறு ல செஞ்ச சுண்டல் சாப்பிட போனேன்...:)
/புதுகைத் தென்றல் said...
ReplyDeleteஆல் கும்மீஸ் எங்க போனீங்க??????//
அல்லாரும் சாப்பிட போயிட்டாக போல
/
அட...நீங்க எங்க இந்த பக்கம்...?
நசரேயன் - இவருக்கு கற்பனைவளம் அதிகம் இவருடைய பதிவை படித்து சிரிக்காதவர் குறைவே...
ReplyDelete// Blogger நிஜமா நல்லவன் said...
ReplyDelete/இராகவன் நைஜிரியா said...
ஆல் கும்மீஸ் எங்க போனீங்க??????
/
முளை கட்டிய பயிறு ல செஞ்ச சுண்டல் சாப்பிட போனேன்...:)//
எனக்கு...
இதெல்லாம் ரொம்ப தப்பு
எனக்கு கொடுக்காம சாப்பிடக்கூடாது...ஆமாம் சொல்லிபுட்டேன்
// Blogger புதியவன் said...
ReplyDeleteநசரேயன் - இவருக்கு கற்பனைவளம் அதிகம் இவருடைய பதிவை படித்து சிரிக்காதவர் குறைவே...//
ஆமாம் நான் இதை ஆமோதிக்கின்றேன்
உருப்புடாதது_அணிமா - இவருடைய பின்னூட்டங்கள் எனக்குப் பரிச்சயம் உண்டு...பதிவுகளை படித்ததில்லை இனி படித்துப் பார்க்கிறேன்...
ReplyDelete// Blogger நிஜமா நல்லவன் said...
ReplyDelete/புதுகைத் தென்றல் said...
ஆல் கும்மீஸ் எங்க போனீங்க??????//
அல்லாரும் சாப்பிட போயிட்டாக போல
/
அட...நீங்க எங்க இந்த பக்கம்...?//
இதென்ன கேள்வி...
நாங்கெல்லாம் சாப்பாடு பக்கம்தான்
// Blogger புதியவன் said...
ReplyDeleteஉருப்புடாதது_அணிமா - இவருடைய பின்னூட்டங்கள் எனக்குப் பரிச்சயம் உண்டு...பதிவுகளை படித்ததில்லை இனி படித்துப் பார்க்கிறேன்... //
படிச்சு பாருங்க...
அரண்டு போயிடுவீங்க...
(சும்மா நானும் அதுல ஒரு பதிவு எழுதியிருக்கேன் இல்ல...)
விஜய் - இவருடைய பதிவுகளில் யதார்த்தமான விசயங்கள் நகைச்சுவையோடு இருக்கும்...
ReplyDeleteயார் நூறடிக்க போறது?
ReplyDelete97
ReplyDelete98
ReplyDelete100
ReplyDelete100
ReplyDeleteஹையா...நான் தான் 100...:)
ReplyDelete// Blogger புதியவன் said...
ReplyDeleteநிலாவும் அம்மாவும் - இவங்க எனக்கு புதியவங்க இவங்க வலைப்பூ போய் படிக்க வேண்டும்... //
என்னங்க சொல்ல வர்றீங்க...
நீங்கதான் புதியவன் என்று நினைச்சேன்... உங்களுக்கு நிலாவும் அம்மாவும் கூட புதியவங்களா?
ரொம்ப குழப்பமா இருக்குங்க
இன்னைக்கு என்ன 50 , 100 எல்லாம் நம்ம பக்கமே வருது...:)
ReplyDelete// Blogger நிஜமா நல்லவன் said...
ReplyDeleteஹையா...நான் தான் 100...:)//
ஆமாங்க...
பின்னூட்டம் போட்டு பேர் வாங்குபவர்களும் இருக்கின்றார்கள்,
நம்பர மட்டும் போட்டு பேர் வாங்குபவர்களும் இருக்கின்றார்கள்...
இதில் நீங்க எந்த வகை என்று நான் சொல்லாமலே உங்களுக்கு தெரியும்...
டிஸ்கி :
நீங்க நிஜமா நல்லவர் அப்படின்னு நம்பி இந்த பின்னூட்டம்... ஆட்டோ எல்லாம் அனுப்பிடாதீங்க
//இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// Blogger புதியவன் said...
உருப்புடாதது_அணிமா - இவருடைய பின்னூட்டங்கள் எனக்குப் பரிச்சயம் உண்டு...பதிவுகளை படித்ததில்லை இனி படித்துப் பார்க்கிறேன்... //
படிச்சு பாருங்க...
அரண்டு போயிடுவீங்க...
(சும்மா நானும் அதுல ஒரு பதிவு எழுதியிருக்கேன் இல்ல...)//
உங்க பதிவர் சந்திப்பு தானே ராகவன் அண்ணா ...படித்துவிட்டேன்...நல்லா காமெடியா இருக்கு பதிவு...உங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் தொடருங்கள்...
//இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// Blogger புதியவன் said...
நிலாவும் அம்மாவும் - இவங்க எனக்கு புதியவங்க இவங்க வலைப்பூ போய் படிக்க வேண்டும்... //
என்னங்க சொல்ல வர்றீங்க...
நீங்கதான் புதியவன் என்று நினைச்சேன்... உங்களுக்கு நிலாவும் அம்மாவும் கூட புதியவங்களா?
ரொம்ப குழப்பமா இருக்குங்க//
அண்ணா ஒன்னும் குழப்பமில்லை நான் புதியவன்...அவர் எனக்கு புதியவர் (அறிமுகமில்லாத பதிவர்)...
// Blogger நிஜமா நல்லவன் said...
ReplyDeleteஇன்னைக்கு என்ன 50 , 100 எல்லாம் நம்ம பக்கமே வருது...:) //
ஆமாம் வருது...
108
ReplyDelete109
ReplyDelete110
ReplyDeleteகதை பூராம் கேலியும், சுண்டளும்மலா
ReplyDeleteமன்னிக்கவும் கிண்டளுமலா இருக்கு...
வாழ்த்துக்கள்
ReplyDelete1oo அடிக்கலாம்ன்னு வந்தா
ReplyDeleteஎனக்கும் சேர்த்து போட்டாங்க
111
ஆடு கலத்தில் வேறு யாருக்கீறா
ReplyDeleteநீங்க புதியவர்
ReplyDeleteஅவங்க உங்களுக்கு புதியவர்
ஆனா நீங்க எங்களுக்கு ...
உளேன் அய்யா
ReplyDeleteஅண்ணேன் வாங்க வாங்க
ReplyDeleteபிறர் என்னை கேலி செய்யக் கூடாது; அதற்காக என் உயிரையே கேட்டாலும் தருவேன்.
ReplyDelete//
க்ண்டுக்காதீங்க..
சிறு தவறு நடந்தாலும் உன் உடலில் உயிர் இருக்காது.
ReplyDeleteஇதுக்கெல்லாமா உயிரை...
யார் மனதிலே காயங்கள் இல்லை, காயத்துக்கு மருந்து காலம்தான், என்று நினைத்தாலே போதுமே!!///
ReplyDeleteஓஹோ மனக்காயமா!!!
நம்மை வெல்ல இவ்வுலகத்தில் யார் இருக்கிறார்கள் ?//
ReplyDeleteபக்கத்துல நெருங்கினா//
உங்க எல்லாருக்கும் நீங்க எப்டி பிறந்தீங்கன்னு உங்க அம்மா சொல்லிருப்பாங்க...ஆனா கிருஷ்ணர் சாமி எப்டி பிறந்தார்னு உங்கம்மா சொன்னாங்களா?///
ReplyDeleteமானத்துல இருந்து குதிச்சாரா?
நிலா வீட்டு சின்ன குட்டி சொல்லராங்கலாம், கிரிஷ்ணர் வேஷம் எல்லாம் போட்டிருங்கங்க. ///
ReplyDeleteஉண்மயிலேயே அழகு
சுத்தி போடுங்க!
வலயில நிறைய
நொள்ளைக்கண்ணர்கள்
ரெக்கை கட்டி பறக்குதய்யா அம்மாவோட சைக்கிள். அப்படின்னு அழகா பாடிகிட்டு சூப்பர்ஆ சைக்கிள் ஓட்டறாங்க பாருங்க அந்த குட்டி பாப்பா./
ReplyDeleteபாப்பா!!சாக்லேட் தரவா?
இவர்கள் எல்லாம் என் பார்வையில் நகைச்சுவை அரசர்கள்.///
ReplyDeleteவாங்க...படிச்சுப்பார்க்கலாம்
சுனாமியின் இரண்டாம் பாகம் வந்தாச்சி
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
ReplyDeleteஅண்ணேன் வாங்க வாங்க//
சொல்லுங்க தம்பி
சுனாமியின் இரண்டாம் பாகம் வந்தாச்சி///
ReplyDeleteயார் முதல் பாகம்/
ஜமால் உடல் நலமா
ReplyDeleteவாங்க
ReplyDeleteவண்ங்காமுடி
நான் அறிமுகப் படுத்துவதாக நினைக்காதீங்க. ரொம்ப அருமையா சிரிக்க வைப்பாங்க. எப்படித்தான் கற்பனை பண்ணுவாங்களோ??.///
ReplyDeleteபடுத்துக்கிட்டா
உக்காந்துக்கிட்டா?
கற்பனைகள், கனவில் தலை விரிச்சி ஆடுமாம். உடனே இவர் அதை அப்படியே மனசுலே படம் பிடிச்சி, அப்புறமா அதை பதிவா போடுவாராம். ///
ReplyDeleteதூக்கத்தில் கூட சிந்தனை...
வேர் ஆர் யு புட் ஆப்? ன்னு ஒரு கேள்வியை கேட்டு புட்டாரு. என்னடா இது புட் ஆப்.. படிச்சா மாதிரி ஞாபகம் இல்லையேன்னு, அந்த "வேரை" ஆணிவேரா வச்சி சொல்லவும் ஒரு தயக்கம், அதனாலே முதல் கேள்வியை விட்டு பிடிக்கலாம்னு. நீங்க கேட்டது எனக்கு புரியலை சார் ன்னு சொன்னேன்.மறுபடியும் திருப்பி சொன்னாரு, நானும் அதே பதில் சொன்னேன்///
ReplyDeleteபுட்ட வாயிலதான் அப்பனும்
(சாப்பிடுற புட்டுதானே?)
\\ thevanmayam said...
ReplyDeleteசுனாமியின் இரண்டாம் பாகம் வந்தாச்சி///
யார் முதல் பாகம்/\\
’ஹ’ தான்.
இப்போதுதான் நேரம் கிடைத்தது, 4ம் நாள் வாழ்த்துக்கள் ரம்யா
ReplyDeleteஜமால்
ReplyDeleteஉடம்பு
சரியாகி
விட்டதா?
கேளிசெய்வது.. ம்ம் கதை நல்லாதான் இருக்கு
ReplyDeleteஒரே கேளியா போச்சு
சங்கத்திலே கடன் வாங்கிகிட்டு வெளி நாட்டுக்கு போய்ட்டாங்களாம். அது யாருன்னு இப்போ லிஸ்ட் எடுக்கச் சொல்லி காவல் நிலையத்திற்கு சம்பந்தப் பட்டவங்க எல்லாம் கம்ப்ளைண்ட் கொடுத்து இருக்காங்களாம்.//
ReplyDeleteஎன்ன ஜமால் இதெல்லாம்..
அப்ஸர் வாங்க!!!
ReplyDeleteசொல்லுங்க தேவா
ReplyDeleteஎப்படிப்போய்ட்டு இருக்கு கும்மியெல்லாம்
நா இன்னிக்கு லேட்டோ
இன்னாச்சிப்பா எல்லாம் எஸ்கேப்பா
ReplyDeleteசரி நாமளும் உட்ரான் ஜூட்டு வர்ட்டா
எங்கே கிளம்பீட்டீங்களா/
ReplyDelete\\thevanmayam said...
ReplyDeleteஜமால்
உடம்பு
சரியாகி
விட்டதா?\\
75% ok.
thala enga?
ReplyDelete♫ அழவுட்டாங்களே! யாரும் வெங்காயத்தை திட்டாதீங்க ...
ReplyDeleteவெங்காயம் வெட்டினேன்
ReplyDeleteஅதான்
ஹி ஹி ஹி
அட இங்கன போடத்தான் கேட்டியளோ
ReplyDeleteநீங்களே முடிவு பண்ணிக்கோங்க.., இனி மேலும் பொது இடத்தில் புகைபிடிக்கும் முன் யோசியுங்கள், அப்படீன்னு சமுதாயச் சிந்தனையுடன், அணிமாவோட சொந்த கருத்தையும் சேர்த்து சொல்லி இருக்காரு, இந்த பழக்கம் வேண்டாம்னா நல்லது தானுங்களே. ///
ReplyDeleteபொதுவா புகைபிடிக்கக்கூடாதுங்கிறீங்களா?
மார்கழி மாதத்துக் குளிருக்கு தனி மகத்துவம் உண்டுங்க.//
ReplyDeleteஅது என்னப்பா அது?
ரொம்ப யத்தினப் பட்டு தலை கீழாக சிரசாசனம் செய்கையில், கைக்கடியில் ஏதோ கடித்துத் தொலைக்க அப்படியே, மாட்டு வண்டி குடை சாய்வது போல் கட்டிலுக்கும் சுவருக்கும் இடையே இருக்கும் இடுக்கில் விழுந்து தொலைக்க, சிரசாசனம், குண்டக்கா மண்டக்காசனம் ஆனது.//
ReplyDeleteநல்ல ஆசனம்!!
இப்படி எல்லாம் பாஷை தெரியாமல் கஷ்டப் பட்டதை அருமையா சொல்லி இருக்காரு. உங்களுக்கும் இது பிடித்திருக்கும்ன்னு நினைக்கிறேன். ///
ReplyDeleteபிடிச்சிருக்கு
ரொம்ப
பிடிச்சிருக்கு...
குற்றமொன்றும் பாராட்டித் திரியா வேண்டாம்
ReplyDeleteகொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோ டெதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரிற்குடி யிருக்க வேண்டாம்
மற்றுநிக ரில்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
சரி உலகநாதனார் யாருங்க?
அடுத்தவர் நம்மை பற்றி செய்கின்ற விமர்சனங்களை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதால். ஒரு நிம்மதி இருக்கின்ற அதே வேளையில், பிறர் செய்யும் கேலி,கிண்டல்கள் சமயத்தில் நம் வளர்ச்சிக்கும் உதவியாய் இருக்க கூடும்.
ReplyDeleteஅடுத்தவர் நம்மை பற்றி செய்கின்ற விமர்சனங்களை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதால். ஒரு நிம்மதி இருக்கின்ற அதே வேளையில், பிறர் செய்யும் கேலி,கிண்டல்கள் சமயத்தில் நம் வளர்ச்சிக்கும் உதவியாய் இருக்க கூடும்.//
ReplyDeleteசரிதான் ஜீவன்...
வாழ்த்துக்கள் ரம்யா!!
ReplyDeleteஅவன் எது செய்தாலும் அவனை எல்லோரும் கேலி செய்வார்கள்.///
ReplyDeleteகேலியெல்லாம் செய்யக்கூடாது
குற்றமொன்றும் பாராட்டித் திரியா வேண்டாம்
ReplyDeleteகொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம்///
ரம்யாவோட மட்டும் சேருங்கப்பா!
பணிகள் இனிதே தொடரட்டும்:)
ReplyDeleteஆனால் காயத்ரி போட்டுக் கொடுக்கும் ஓட்ஸ் கஞ்சி, கஞ்சியாக இல்லாமல் ஓட்ஸ் பாயாசமாக இருப்பதால், ஒரு டம்ளரோடு எப்படி நிறுத்திக் கொள்ள? காயத்ரி ஒரு இருபத்தியோறாம் நூற்றாண்டு “சுடிதாரணிந்த சாவித்ரி”; பதி பக்தி ஜாஸ்தி. போனால் போகட்டும் என்று பரிதாபப் பட்டு, இன்னொரு டம்ளரும் கொடுப்பாள். அதிலே இரண்டு மூன்று பாதாமும் முந்திரியும் சேர்த்துப் போட்டுக் கொடுப்பதால் இன்னொரு டம்ளர் ஓட்ஸ் கஞ்சி, சாரி பாயாசம் உள்ளே ஸ்வாஹா.
ReplyDelete//
இதுக்கு பேர் டயட்டா?
மதியம் டிஃபன் பாக்ஸைத் திறந்தால், இரண்டுக்குப் பதிலாக நாலு சப்பாத்தி, சாம்பார் சாதம், மோருக்குப் பதிலாக தயிர் விட்டு குழையக் குழைய தயிர் சாதமும் இருக்கும். இந்த பாழாப் போற ஆஃபீஸ் கேண்டீன்ல அன்னிக்குன்னு பார்த்து பன்னீர் பட்டர் மசாலாவும் செய்திருப்பார்கள். இந்த நாக்கு, தவளை நாக்கு போல் நீண்டு போய் விடும். லன்ச் diet program'உம் அவுட்.
ReplyDeleteசூப்பர்........
துவக்கத்திலேயே ஏதாவது பின்னூட்டம் போடலாம்னுதான் பாக்குறேன். கூட்டம் அம்முது. ஆசிரியர்ன உடனே ஏதோ நிஜ ஸ்கூல் வாத்தியார் மாதிரி கலக்குறீங்க.. வலைச்சரம் சமீபத்தில் பார்த்திராத பின்னூட்டபுயலே அடித்துக்கொண்டிருக்கிறது. வாழ்த்துகள் ரம்யா.!
ReplyDeleteபெரியவா எப்ப வந்து வாழ்த்தினாலும் தகும்.
ReplyDeleteஇது இப்போதைக்கு "உள்ளேன் அய்யா "
ReplyDeleteஅப்பாலைக்கு வந்து பாடம் படிக்குறேன்
***என்னை அறிமுகபடுத்திய ரம்யா அத்தைக்கு ஒரு கிச்சா ****
குப்பன் கதை அருமை. கடை பிடிக்க வேண்டிய அவசியம்
ReplyDeleteஎனக்கு கொடுத்த அறிமுகம் எல்லாம் கொஞ்சம் அதிகம் தான்
ReplyDeleteகுப்பன்: பிறர் என்னை கேலி செய்யக் கூடாது; அதற்காக என் உயிரையே கேட்டாலும் தருவேன்
ReplyDeleteஅரசன் :உயிர் வேண்டாம் உன் கிட்னியை கொடு, அதுக்கு தான் விலை அதிகம்
வெற்றிகரமான நான்காவது நாளைத் தொடர்கிறீர்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள் !!!!!
இன்றி அறிமுகம் செய்தவர்களில் நசரேயன் நமக்கு நல்ல பரிச்சயம்...
ReplyDeleteமற்றவர்கள் பதிவுகளைப் பார்த்ததுண்டு..பின்னூட்டியதில்லை.
கால தாமதமாக வந்தாலும் 150ஐ தாண்டியது குறித்து மிக்க மகிழ்ச்சி...
ReplyDeleteஅதெல்லாம் உடுவமா நாங்க..
ReplyDeleteசெய்யது நலமா?
வாழ்த்துகள் ரம்யா கலக்கறீங்க சூப்பர்
ReplyDeleteTharani priya
உள்ளேன் டீச்சர்.
ReplyDeleteகுப்பன் மாதிரி எனக்கு வேலை அதிகமா இருக்கு அப்புரம் வரேன்
தினம் தினம் நீ தொடுக்கும் கடவுள்
ReplyDeleteவாழ்த்தில் உன் பக்தியை கண்டேன்!!
// ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள். அத்துடன் நான் முதல் முதல் கற்ற கடவுள் வாழ்த்து. குப்பன் கதை. உலக நீதி. எல்லாமே பிடித்திருக்கு ரம்யா.
//
ராமலக்ஷ்மி ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க.
ரம்யாவின் எழுத்துக்கு இதெல்லாம் ஒரு ஊக்க மருந்து!!
மற்றவர்கள் கேலி செய்தால்
ReplyDeleteஅதில் தான் நம் வாழ்வின் வெற்றி அடங்கி இருக்கிறது.
என்று நினைத்து நம் காரியத்தை மட்டும் சாதித்துக் கொண்டால்!!
அங்கே எந்த வித மன உளைச்சலும் நம்மை நெருங்கா !!
அருமையான அர்த்தம் நிறைந்த எடுத்துக்காட்டு
//
ReplyDeleteஎப்போதும் நாம் நமது செயல்களை செவ்வனே செய்யவேண்டுமே அல்லாமல் அவங்க என்ன கூறுவார்கள், இவங்க என்ன கூறுவார்கள், அப்படின்னு நினைக்கக் கூடாது. யார் மனதிலே காயங்கள் இல்லை, காயத்துக்கு மருந்து காலம்தான், என்று நினைத்தாலே போதுமே!!
//
இந்த உன் கருத்தும் மிகவும் அருமையா இருக்கு ரம்யா !!
//
ReplyDeleteநம்மை வெல்ல இவ்வுலகத்தில் யார் இருக்கிறார்கள் ?
//
யாருமில்லை சகோதரி.
ஹரிணி அம்மைவோடது எல்லாம் படிக்கணும்.
ReplyDeleteபடிக்கறேன் ஹரிணி அம்மா
நிலாவும் அம்மாவும் இந்த அறிமுகம்.
ReplyDeleteரொம்ப நல்ல இருந்தது, குழந்தை
மிகவும் அழகு, சுத்தி போடுங்கள்
நிலா அம்மா!!
நசரேயன் நான் படித்து இருக்கிறேன்
ReplyDeleteநல்ல நகைச்சுவை எழுத்தாளர்.
எதையும் சுலபமா சிரிப்பா மாதிடறார்.
எழுத்திலேயே எல்லா ஜாலமும் காட்டறாரு
தேர்வு என்ற தலைப்பிலும் சரி
ReplyDeleteசங்கம் திவால் என்ற தலைப்பிலும் சரி
கள்ளக் காதல் என்ற கதையிலும் சரி
நல்ல நகைச்சுவை எழுத்து நடை
அற்புதம் தம்பி நசரேயன் !!
தம்பி உருப்படாதது அணிமா
ReplyDeleteஇவரு ரொம்ப குறும்பா எழுதுவாரு
போல இருக்கே, நான் படிச்சேனே!!
அணிமா தம்பி எழுதின எல்லாமே
ReplyDeleteஇன்னைக்கு படிச்சேன், ரொம்ப
நல்ல எழுதி இருக்கீங்க
நிறைய எழுதுங்க தம்பி
நல்ல ரசிச்சு படிச்சேன்.
அணிமா தம்பியின் பின்னூட்டங்களும்
ReplyDeleteஎல்லாவற்றிலும் குறும்பு கொப்பளிக்கிறது.
இனிமேல் உங்களோடது எல்லாம் நான்
தவறாம படிக்கறேன்
நசரேயன் தம்பி பின்னூட்டங்களும் ரொம்ப நகைச்சுவையா எழுதறீங்க.
ReplyDeleteநகைச்சுவைக்கு எப்பவுமே
நல்ல வரவேற்ப்பு இருக்கும்
வாழ்த்துக்கள் நசரேயன் !!
ஜமால் தம்பியோட ப்லோக் இன்னக்கி
ReplyDeleteபடிச்சேன் எனக்கு எல்லாமே பிடிச்சது
அதுலே மருத்துவம் சீரகத்தொட
மகிமையை நல்லா சொல்லி இருக்கீங்க
வாழ்த்துக்கள் ஜமால் தம்பி.
//
ReplyDeleteபுதியவன் said...
வலைச்சரத்தின் ஆசிரியருக்கு நான்காம் நாள் வாழ்த்துக்கள்...
//
புதியவன் தம்பிக்கு நல்லா ரசனை.
எல்லாவற்றையும் அருமையா ரசிக்கராறு
வாழ்த்துக்கள் புதியவன் தம்பி !!
//
ReplyDeleteவிஜய் said...
அட என்னைப் பற்றி கூட எழுதியிருக்கீங்களே. ரொம்ப ரொம்ப நன்றி. இப்படி வலைச்சரத்துல போடுற அளவுக்கு நம்ம எழுத்து அவ்வளவு நல்லாவா இருக்கு.
Anyway Thanks a lot :-)
//
நல்லா இருந்தாவா ??
ரொம்ப நல்லா இருந்தது விஜய்!!
விஜய நீங்க நிஜமாவே
ReplyDeleteநகைச்சுவை அரசர் தான்
உங்களோடது எல்லாமே
படிச்சு நல்லா சிரிச்சேன்
சிரிப்புத்தாங்க எல்லாருக்கும்
கடவுள் கொடுத்த சொத்து !!!
விஜய்யின் உடற் பயிற்ச்சி
ReplyDeleteரொம்ப நல்லா இருந்திச்சி
அட ஓட்ஸ் கஞ்சியும் தான்...
//
ReplyDeleteஹரிணி அம்மா said...
நீ கவனத்துடன் ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும் போது பிறர் என்ன சொன்னாலும் நீ பொருட்படுத்துவது இல்லையே. அப்படி இருக்கும் போது பிறர் கேலி செய்கிறார்கள் என்று எதற்காக என்னிடம் வந்தாய்?
//
டாப்பான கதை!!
ரம்யா கலக்குறீங்க..
//
நானும் இதை வழிமொழிகிறேன்!!
// ஹரிணி அம்மா said...
ReplyDeleteகேலியைப்
பொருட்படுத்தக்கூடாது!!
பிரமாதம்..
//
இது மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று
ஹரிணி அம்மா இவை எல்லாம் நமக்கு
ஏணிப்படியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
//எப்போதும் நாம் நமது செயல்களை செவ்வனே செய்யவேண்டுமே அல்லாமல் அவங்க என்ன கூறுவார்கள், இவங்க என்ன கூறுவார்கள், அப்படின்னு நினைக்கக் கூடாது. யார் மனதிலே காயங்கள் இல்லை, காயத்துக்கு மருந்து காலம்தான், என்று நினைத்தாலே போதுமே!!
ReplyDelete//
நல்ல கருத்து ரம்யா யார் மனதில் காயம் இல்லை -- கடந்து வந்து விட்டால் காயம் காணாமல் போகும்...
//
ReplyDeleteஅண்ணன் வணங்காமுடி said...
/ஹரிணி அம்மா said...
என்னை அறிமுகப்படுத்தியதற்கு ரம்யாவுக்கு ஒரு ஓ போடுங்கப்பா!!!
/
ஓ//
என்ன ஒரு கஞ்சத்தனம்
//
அண்ணன் வணங்காமுடி சொல்லறது
கூட நல்லாத்தான் இருக்கு
வாழ்த்துக்கள் வணங்காமுடி.......
அண்ணன் வணங்காமுடி
ReplyDeleteரொம்ப நல்லா எழுதறாரு,
படிச்சேன் குறும்புக்கார
பிள்ளையா இருக்கே!!
//
ReplyDeleteதாமிரா said...
துவக்கத்திலேயே ஏதாவது பின்னூட்டம் போடலாம்னுதான் பாக்குறேன். கூட்டம் அம்முது. ஆசிரியர்ன உடனே ஏதோ நிஜ ஸ்கூல் வாத்தியார் மாதிரி கலக்குறீங்க.. வலைச்சரம் சமீபத்தில் பார்த்திராத பின்னூட்டபுயலே அடித்துக்கொண்டிருக்கிறது. வாழ்த்துகள் ரம்யா.!
//
தமிரா தம்பி நல்லா நகைச்சுவையா
எழுதி இருக்காரு, இன்னும் தாமிரா
தம்பியோட ப்லாக் படிக்கணும்
நிறைய அறிமுகம் எனக்கு
கிடைச்சு இருக்கு.
வாழ்த்துக்கள் தாமிரா தம்பி
ராகவன் நீங்க ரொம்ப நகைச்சுவையாகவும் கிண்டல் கேலியுடனும்,
ReplyDeleteநல்லா இங்கே எழுதறவங்களுக்கு ஈடு கொடுக்கறீங்க படிச்சு நல்லா ரசிச்சேன் -எல்லாரும் சந்தோஷமா இருக்கறதே பார்க்கும்போது..
எனக்கும் எல்லை இல்லா சந்தோசம்
//
ReplyDeleteஅ.மு.செய்யது said...
வெற்றிகரமான நான்காவது நாளைத் தொடர்கிறீர்கள்..
வாழ்த்துக்கள் !!!!!
//
இந்த தம்பியும் ரொம்ப குறும்பு
முதல் நாள் அடித்த பின்னூட்டங்களை
படிச்சு சிரிச்சிகிட்டே இருந்தேன்
//
ReplyDeletethevanmayam said...
சிறு தவறு நடந்தாலும் உன் உடலில் உயிர் இருக்காது.
இதுக்கெல்லாமா உயிரை
//
தேவனும் ரொம்ப குறும்பாதான் எழுதறாரு.
ரசனை மிக்க பின்னூட்டங்கள்
நீங்க எல்லாம் நிறைய எழுதுங்க.
உங்களுக்கு எல்லோருக்கும்
நல்லா எழுத வருது
// நசரேயன் said...
ReplyDeleteகுப்பன்: பிறர் என்னை கேலி செய்யக் கூடாது; அதற்காக என் உயிரையே கேட்டாலும் தருவேன்
அரசன் :உயிர் வேண்டாம் உன் கிட்னியை கொடு, அதுக்கு தான் விலை அதிகம்
//
நசரேயன் தம்பி கிட்டே
இந்த குறும்புதான் ரொம்ப
பிடிக்கும், நல்லா இருக்கு
இந்த பின்னூட்டம் தம்பி !!!
//
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
/ஹரிணி அம்மா said...
என்னை அறிமுகப்படுத்தியதற்கு ரம்யாவுக்கு ஒரு ஓ போடுங்கப்பா!!!
/
ஓ
//
இவரை எல்லாரும் நல்லவரா
அப்படின்னும் கேக்கறாங்களே
ஏன் தம்பி அப்படி கேக்கறாங்க??
//
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
இங்க ஒருத்தன் தனியா இளநீர் வெட்டுறேன் ...
யாரையும் கானோமே ...
//
ஜமால் தம்பி நேரத்துக்கு
தகுந்த மாதிரி ஒரு தமாஷ்
பண்ணிடும்.
அதுக்கேல்லாம் நல்ல ரசனை
வேணும் தம்பி - உங்க எல்லார்
கிட்டேயும் அது நிறைய இருக்கு..