குட்டீஸ் வோர்ல்ட்!
நம்ம எல்லோருக்குமே இருக்குற பொதுவான பிரச்சினைகள்! டென்ஷன்!
வேலைல டென்ஷன்! ஃபேமில டென்ஷன்! உள்ளே டென்ஷன்! வெளியே டென்ஷன்! இப்படி பல்வேறு டென்ஷன்!
இப்படி 1008 (அதென்ன 1008ன்னே எல்லாரும் சொல்றாங்கன்னு எதிர் கேள்வி வரக் கூடாது. சொல்லுறப்போ அனுபவிக்கணும், ஆராயக் கூடாது) டென்ஷன் இருந்தாலும் ஒரே ஒரு புன்னகை! அதுவும் அந்த பொக்கை வாய்ப்புன்னகை! போதும்! 1008 = -1008 ஆ மாறிடும்! அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான அந்த புன்னகை எங்கே இருக்கும்ங்குறீங்க? அடுத்த நிமிஷம் உற்சாகம் தொத்திக்கும்! மனசு இலேசாகிடும்!
காதலியின் புன்னகைதான்னு நினைச்சீங்கன்னா ரொம்ப தப்பு! ஏன்னா காதலியின் புன்னகைக்கு பின்னால எவ்ளவு செலவு இருக்கோன்னு மனசுக்குள்ளே பக்குன்னு ஒரு திகில் வந்து குந்திக்கும்!
அப்பேர்ப்பட்ட பொக்கை வாய்ப் புன்னகையை சிந்துற பொக்கிஷங்கள்தான் குழந்தைகள்! என்னோட முதல் தொகுப்பு குழந்தைப் பதிவர்கள் பத்தினது! அந்தக் குழந்தைகளோட உலகத்துல நாம நுழையணும்னா முதல்ல நாமும் குழந்தையா மாறிடணும்!
நான் இந்த வலையுலகத்துல சந்திச்ச முதல் குட்டிப்பையன்(சத்தியமா தல பாலபாரதி இல்லைங்க) மழலைச் சொல். "நா ஒரு சின்னப் பையன். குட்ட்ட்டிப் பையன். பெரியவங்க வருசக் கணக்குல 2002ல பிறந்தேன். எனக்குச் சிரிக்கப் பிடிக்கும்." இப்படித்தான் தன்னை அறிமுகப் படுத்திக்கிறார். இந்த வலைப்பூவுல ஒவ்வொரு பதிவும் படிக்கும்போது நேரடியா அந்தப் பொடிப் பயலோடவே இண்ட்ராக்ட் பண்ணுற மாதிரி ஒரு ஃபீலிங்க் வரும்!
அவரு என்னை சிபி சகா ன்னுதான் கூப்பிடுவார்! அவரோட பேச்சு நடைலயே அவரோட பதிவுகளும் இருக்கும்! பின்னூட்டங்களுக்கு அவர் போடுற பதில் நம்மகிட்டே பேசுற மாதிரியே இருக்கும்! இத்தனைக்கும் அந்தப் பயலோட புகைப்படமோ, நிஜப்பெயரோ இதுவரை அவனுடைய பெற்றோர்கள் வெளியிட்டதில்லை! தமிழ்மணத்துல லிட்டில் சூப்பர் ஸ்டாராக்கூட இந்த ஜாலித் தம்பி வலம் வந்திருக்காரு!
எல்லா பதிவுகளுமே அனுபவிக்கக் கூடியவைதான் என்றாலும் குறிப்பிட்ட பதிவுகளை இங்க தரேன்.
எனக்குக் கோவமா வருது (தோடா, இவருக்குக் கோவம் கூட வருதாம்)
என் கேள்விக்கென்ன பதில்? (ஹே, கேள்வியெல்லாம் கேக்குறாரு)
வாழைப் பழத் தோல் (இவரு கேக்குற கேள்வியைப் பாருங்க, குரங்கெல்லாம் தோலை எங்கே போடுமாம்?)
பொழுதொரு பேண்டேஜ் (விசனப் பட வைத்த பதிவு, பையனுக்கு கால்ல காயம் ஆகிடுச்சாம்)
சோர்வம் (புதுசு புதுசா தமிழ் வார்த்தை கண்டு பிடிப்பாரு)
கொழுக்கட்டைப் பாட்டு
தூக்கத்துலயும் கேள்வி கேப்பேன் (பார்ரா)
அடுத்த படியா வலையுலகில் நான் வாசிச்ச குழந்தைப் பதிவர் அஞ்சலி - ஒரு குட்டித் தோட்டம்.
நல்ல கதை எழுத்தாளர். தன்னோட மழலை எழுத்துக்களால் எழுதின "ஒரு காசில்லாத பிள்ளை" என்ற கதை ரொம்பவே ரசிக்க வைத்த ஒன்று!
தலைப்பு பிழையா இருக்கேன்னு அங்கயே ஒரு விவாதம் கூட நடந்தது! ஆனா குழந்தைகள் மொழியில பிழைகள் கூட ஒரு கவிதைன்னு முடிவுக்கு வந்தோம்!
அஞ்சலி கலந்துகொண்ட ஒரு பதிவர் சந்திப்பு(!?)
அஞ்சலியின் திரை விமர்சனம்
விடுமுறையில் பார்த்த வேறு இடங்கள்
அஞ்சலியின் குரல் பதிவுகள்
சிரிப்புப் பதிவுகள்
நெக்ஸ்ட் நாம பாக்கப் போறது குவைத் மழலைகள் என்ற பட்டாளம்! இவங்களைப் பத்தி நமக்கு அவ்வளவா அறிமுகம் இல்லை. பிரவீணா, விஷாலி, கிரித்திகான்னு மூணு பேரு சேர்ந்து அவங்க வரைஞ்ச படமெல்லாம் ஷோகேஷ் பண்ணி வெச்சிருக்காங்க! எதனாலயோ கொஞ்சம் பதிவுகளோட அப்படியே நிறுத்திட்டாங்க. (ஸ்கூல் போற டென்ஷனோ!?)
இவ்ளோ நேரமா மூத்த பதிவர்களைப் பத்தி பார்த்துட்டோம்! இனிமே நம்ம சமகால பதிவர்களைப் பார்ப்போமா...!
சபரி
ஆங்கிலத்துல எழுதினாலும் இவரோட கருத்துக்களை படிச்சி ரசிக்க முடியுது! இவரோட பதிவுகள் எல்லாமே இவரோட அம்மாவின் பார்வையில எழுதப் பட்டிருக்கு! இவரோட அம்மா யாருன்னா நம்ம வலையுலகத்துல பிரசித்தி பெற்ற கயல்விழி முத்துல்ட்சுமி! இவரோட விளையாட்டுக்கள், குறும்புகள், ஆர்வங்கள் பத்தி நல்லா எழுதி இருக்காங்க!
அடுத்த படியா "இது எங்க ஏரியா" ன்னு ஒரு டெரரா கெளம்பின குரூப்தான் குட்டீஸ் கார்னர், இந்த குரூப்லே அப்படி இப்படின்னு ஒரு சில பெரிசுகளும் கலந்துட்டு இருக்காங்க! இருந்தாலும் அந்த குரூப் அடிக்குற லூட்டி இருக்கே! பெரிசுகளுக்கெல்லாம் சரியான காம்படீஷன்னு சொன்னா அது இந்த குரூப்தான்!
இந்த குரூப்பைப் பத்தி தனித்தனியாச் சொல்லணும்னா எனக்கு ஒரு வாரம் பத்தாது! ஒவ்வொரு பதிவுமே கலக்கலா இருக்கும்! படிச்சிப் பார்த்து அனுபவிங்க!
இவங்களுக்கெல்லாம் ஒரு லீடர் இருக்காங்க! அவங்க டீம்க்கு அவங்கதான் சொர்ணாக்கா!
நல்லா கதை சொல்லுவாங்க
நிலா மொழி கற்க
என்னவெல்லாம் பேருன்னு பாருங்க இவங்களுக்கு
என்னாடா இந்த குரூப்லே உன் பிளாக்லே இருந்து மட்டும் ஸ்பெஷலா பதிவுகளை எடுத்துத் தரேன்னு பார்க்கிறியா?
ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்செல்லாம் ஐ லவ் யூ!
(தலைப்பைப் பார்த்துட்டு யாராச்சும் ஏடாகூடாம எதிர்பார்த்து வந்திருந்தீங்கன்னா பிச்சிப்புடுவேன் பிச்சி!)
|
|
வணக்கம் அத்திரி!
ReplyDeleteஇன்னொரு பதிவா? அட கடவுளே
ReplyDeleteஒரு பதிவு எழுதவே முடியலை.
இருந்தாலும் வாழுத்துக்கள்!!!
படிச்சிட்டு அப்புறம் வாரேன் !!
அதுக்குள்ள 3 பின்னூட்டமா...ஆஆஆஆஆஆஆஆஆ
ReplyDelete// நம்ம எல்லோருக்குமே இருக்குற பொதுவான பிரச்சினைகள்! டென்ஷன்!
ReplyDeleteவேலைல டென்ஷன்! ஃபேமில டென்ஷன்! உள்ளே டென்ஷன்! வெளியே டென்ஷன்! இப்படி பல்வேறு டென்ஷன்! //
ஆமாம்.. பயங்கர டென்ஷனாகீதுப்பா ... இந்த டென்ஷன நினைச்சாலே
// இப்படி 1008 (அதென்ன 1008ன்னே எல்லாரும் சொல்றாங்கன்னு எதிர் கேள்வி வரக் கூடாது. சொல்லுறப்போ அனுபவிக்கணும், ஆராயக் கூடாது) //
ReplyDeleteஆமா அனுபவிக்கணும்... எதிர் கேள்வின்னா என்னங்க... 8001 அப்படின்னு சொல்லனுமா
// டென்ஷன் இருந்தாலும் ஒரே ஒரு புன்னகை! அதுவும் அந்த பொக்கை வாய்ப்புன்னகை! போதும்! 1008 = -1008 ஆ மாறிடும்! //
ReplyDeleteபொக்கை வாய் புன்னகை... காந்தி தாத்தா புன்னகை மாதிரிங்களா/
// காதலியின் புன்னகைதான்னு நினைச்சீங்கன்னா ரொம்ப தப்பு! ஏன்னா காதலியின் புன்னகைக்கு பின்னால எவ்ளவு செலவு இருக்கோன்னு மனசுக்குள்ளே பக்குன்னு ஒரு திகில் வந்து குந்திக்கும்! //
ReplyDeleteஅனுபவம் பேசுகிறது
பதிவா போட்டு தள்ளுவீங்க போல இருக்கே படிக்க நேரம் இருக்கமா?
ReplyDelete//
ReplyDeleteஅம்மாட்ட எனக்குத் தொலைக்காட்சி போடச் சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தென். அம்மா, "உங்க படம் வர்றப்ப போடுறென்" அப்படின்னு சொல்லிக்கொண்டே இருந்தாங்க. இப்ப வருமா, இப்ப வருமான்னு நா கேட்டுக்கொண்டே இருந்தென். அப்போ அம்மா சொன்னாங்க, "12 மணிக்குத்தா வரும்" எண்டு. நா சொன்னென், "அம்மா, எனக்குக் கோவமா வருது". அம்மா கேட்டாங்க, "கோவம் வர்றதுன்னா என்ன குட்டி?" நா சொன்னென், "எனக்கு இதயம் வேகமா அடிக்குது."//
படிக்க எவ்வளவு அழகா இருக்கு
இப்படியே இருந்திருக்க
மாட்டோமான்னு ஏக்கமா இருக்கு.
பிரபலம் பிரபலம்தான்யா...
ReplyDeleteகலக்குங்க தள...
//
ReplyDeleteகொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல
மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்
புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்
மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.
பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.
பால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.
அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.
பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.
எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?//
SUPER O SUPER!!!
//
ReplyDeleteநா தூக்கத்தில பிரண்டு படுத்தென்.
"தம்பி, எந்திருச்சு ஒன்னுக்கிருந்துட்டு வந்து படுத்துக்கங்க," அப்படின்னு அப்பா கூப்பிட்டாங்க.
நா "ஏன்?" அப்படின்னு கேட்டேன்.
நான் தூக்கத்துல உளருறென்னு அப்பா நெனச்சுக் கொண்டு, மறுபடியும்
"தம்பி, எந்திருச்சு ஒன்னுக்கிருந்துட்டு வந்து படுத்துக்கங்க"ன்னு சொன்னாங்க.
நா விளக்கமா "ஏன் ஒன்னுக்கிருந்துட்டு வந்து படுத்துக்கனும்?"னு கேட்டென்.
அப்பா சொன்னாங்க, "அப்பதான் படுக்கை நனஞ்சு போவாது."
நா, "சரி," ன்னு சொல்லிட்டுப் போய் ஒன்னுக்கிருந்துட்டு வந்து தூங்கிட்டென்.
நா கேட்ட கேள்வில நட்டநடு ராவையில அப்பாவுக்கு வெடுக்கெண்டு முழிப்பு வந்துடுச்சாம் - விடிஞ்சு பேசிக்கொண்டாங்க.
//
சும்மா கையிலே ஒரு கேமரா வைச்சிகிட்டு சுத்தினா போதாது
எப்படியாவது அந்த குழந்தையை ஒரு photo பிடிச்சிருக்கனும்.
நாங்க நல்லா பார்த்து ரசிசிசுருப்போம் இல்லே?
//சும்மா கையிலே ஒரு கேமரா வைச்சிகிட்டு சுத்தினா போதாது
ReplyDeleteஎப்படியாவது அந்த குழந்தையை ஒரு photo பிடிச்சிருக்கனும்.//
எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன?
அந்தப் பையன் இருக்குறது நார்வேல!
வணக்கம் சிபி
ReplyDeleteவணக்கம் அபி அப்பா!
ReplyDeleteவணக்கம் சிபி
ReplyDeleteகுசும்பன் said...
ReplyDeleteவணக்கம் சிபி
//
வணக்கம்
குசும்பன்
:)
வணக்கம் அபி அப்பா மற்றும் சிபி!
ReplyDeleteவாழ்த்துக்கள் சிபி!
ReplyDeleteஅருமையான தொகுப்பு!
வணக்கம் தள!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்க பதிவில் கும்முவது கடலில் கரைத்த பெருங்காயம் மாதிரி.....நான் வேற எங்கயாவது போய் கும்மிக்கிறேன்...:)
ReplyDeleteஉங்க பதிவில் கும்முவது கடலில் கரைத்த பெருங்காயம் மாதிரி.....நான் வேற எங்கயாவது போய் கும்மிக்கிறேன்...:)
ReplyDeleteஉங்க பதிவில் கும்முவது கடலில் கரைத்த பெருங்காயம் மாதிரி.....நான் வேற எங்கயாவது போய் கும்மிக்கிறேன்...:)
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteசிபி அண்ணே
\\நிஜமா நல்லவன் said...
ReplyDeleteஉங்க பதிவில் கும்முவது கடலில் கரைத்த பெருங்காயம் மாதிரி.....நான் வேற எங்கயாவது போய் கும்மிக்கிறேன்...:)\\
நானும் மறுக்கா கூவிக்கிறேன் ...
தலைப்பப்பார்த்து நான் நெஜம்மா இசகுபிசகாதான் நினச்சி திட்டவந்தேன் சிபி !!!!!ஆனா குழந்தை சமத்தா விவரமாவே எழுதி இருக்கு!!!
ReplyDelete//தலைப்பப்பார்த்து நான் நெஜம்மா இசகுபிசகாதான் நினச்சி திட்டவந்தேன் சிபி !!!!!ஆனா குழந்தை சமத்தா விவரமாவே எழுதி இருக்கு!!!//
ReplyDeleteஹிஹி! என் ஃபோட்டோவை வேற பார்த்துட்டீங்களா!
//நானும் மறுக்கா கூவிக்கிறேன் ..//
ReplyDeleteநான் வழிமொழிகிறேன்!
யார் இங்கே நான்?
ReplyDeleteநான் யார் இங்கே?
இங்கே நான் யார்?
இங்கே யார் நான்?
நான் கடலா? அலல்து பெருங்காயமா? அல்லது கும்மியா?
ஹைய்.....
ReplyDeleteகொயிந்தய்ங்கனாலே மனசுக்கு ஒரு இந்தஸ்துதாம்பா....
ReplyDeleteசோக்கா இஸ்டார்ட் பண்ணிருக்கீங்கோ...
நீங்க கெGலிக்கணும்னு சவுண்ட் வுட்றேன்.
//// நம்ம எல்லோருக்குமே இருக்குற பொதுவான பிரச்சினைகள்! டென்ஷன்!
ReplyDeleteவேலைல டென்ஷன்! ஃபேமில டென்ஷன்! உள்ளே டென்ஷன்! வெளியே டென்ஷன்! இப்படி பல்வேறு டென்ஷன்! ////
ஒரே குஸ்டமப்பா...
//நான் said...
ReplyDeleteயார் இங்கே நான்?
நான் யார் இங்கே?
இங்கே நான் யார்?
இங்கே யார் நான்?
//
அல்லாம் ஒன்னுதாம்பா...என்னாத்துக்கு இத்தினி தபா ?
//இப்படி 1008 (அதென்ன 1008ன்னே எல்லாரும் சொல்றாங்கன்னு எதிர் கேள்வி வரக் கூடாது. சொல்லுறப்போ அனுபவிக்கணும், ஆராயக் கூடாது) டென்ஷன் இருந்தாலும் ஒரே ஒரு புன்னகை! அதுவும் அந்த பொக்கை வாய்ப்புன்னகை! போதும்! 1008 = -1008 ஆ மாறிடும்! அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான அந்த புன்னகை எங்கே இருக்கும்ங்குறீங்க? அடுத்த நிமிஷம் உற்சாகம் தொத்திக்கும்! மனசு இலேசாகிடும்!//
ReplyDeleteஅக்மார்க் வரிகள் தான்...
//காதலியின் புன்னகைதான்னு நினைச்சீங்கன்னா ரொம்ப தப்பு! ஏன்னா காதலியின் புன்னகைக்கு பின்னால எவ்ளவு செலவு இருக்கோன்னு மனசுக்குள்ளே பக்குன்னு ஒரு திகில் வந்து குந்திக்கும்!//
ReplyDeleteவாஸ்தவமான பேச்சு....
//அந்தக் குழந்தைகளோட உலகத்துல நாம நுழையணும்னா முதல்ல நாமும் குழந்தையா மாறிடணும்!
ReplyDelete//
நான் ஆல்ரெடி கொயிந்த தான..இன்னா பண்றத்த ?
ஒரு வாழைப்பழ லெதர் அ ( அதாம்பா தோல் ) வச்சே ஒரு நன்னெறி கதை சொல்லிய
ReplyDeleteஅந்த குட்டிப் பையன் மழலை வாழ்க....
குவைத் குட்டீஸோட அட்டகாசங்கள்...
ReplyDeleteஅந்த பிஞ்சி கைகள் வரைந்த படங்கள் அழகு....
பாருங்க..சோர்வடையும் பார்த்தா மைண்ட் ரிலாக்ஸ் ஆகுமென நினைக்கிறேன்.
//சிங்கம் யானையின் தும்பிக்கையை பிடித்து இழுத்து “இந்தக் காட்டுக்கு யார் ராஜா?” என்று கேட்டதாம். யானைக்கு நல்ல கோபம் வந்துதாம், சிங்கத்தை தும்பிக்கையால் தூக்கி வீசி விட்டுதாம். சிங்கம் தூரத்துல போய் விழுந்து காயமெல்லாம் வந்துதாம். வாயிலிருந்து ரத்தமும் வந்துதாம். சிங்கம் யானையைப் பார்த்து “தெரியாட்டி தெரியாது என்று சொல்லுறதுக்கு என்னை ஏன் தூக்கி வீசுவான்” என்று சொல்லிச்சுதாம். //
ReplyDeleteஅஞ்சலியின் சிரிப்பு பதிவிலிருந்து லவுட்டியது.
//வாங்க வாங்க, நான் பூனெல இருக்கென், எனக்கு ஊர் சுத்த பிடிக்கும், தண்ணில விளையாட பிடிக்கும்.//
ReplyDeleteபேபி பவன்.....தலைப்புல இப்படி ஒரு ரவுசு...
//எங்களை அம்மா-அப்பா டாம் & ஜெர்ரின்னு சொல்வாங்க.//
ஆஷிஷ் அம்ருதா சொல்லிகிறாக..அவுகள பத்தி...
//நானும் எங்கண்ணாவும்
நானும் அண்ணாவும் சிலநேரம் இப்படியும்
//
அம்முவாகிய நிலா சொல்றாங்க...
ஒரு குரூப்பா தான்ய்யா கிளம்பிருக்காய்ங்க..நமக்கு தெரியாம போச்சே !!!
இதுவரை பலபேர் கண்ணிலும் படாத மழலை செல்வங்களை அறிமுகம்
ReplyDeleteசெய்து வைத்து, வலையில் ஒரு தன்னிகரற்ற நிகழ்வை நடாத்தியிருக்கும் அண்ணன் நாமக்கல் சிபி வாழ்க !!!!
அப்பால..கடையில நம்ம மட்டும் தான் கீறமா..??
ReplyDeleteஒரே ஜிலோனு கிது....Ba..
ReplyDeleteநாம்போய் நாஷ்டா துன்ட்டு வரேன்.
ReplyDelete50 அடிக்க யார்னா பம்முறீங்கனா முன்னாடியே சொல்லிடுங்க...
ReplyDeleteசரி வேணாம் ரைட்டு விடுங்க...நானே போட்டுக்கறேன்.
ReplyDeleteநாப்பத்தினொன்பதாவது..........
ReplyDelete50 அம்பதாவது....
ReplyDeleteநான் தாம்பா 50..பின்னால வர்ற சந்ததிகள் இத பார்த்து படிச்சி தெளிவா
ReplyDeleteநடந்து கிடுங்க...
very good thing u have done>>.this type writer will help to type in Tamil.kindly ask all blogger to add type writers enable others to make/type comments easily--vimalavidya
ReplyDeleteஇத்தனை குழந்தைகள் பதிவு இருக்கா? அது அம்புட்டையும் நீங்க படிச்சிருக்கீங்களா?
ReplyDeleteயூ ஆர் க்ரேட்
எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு அறிமுகம் கொடுப்பீங்கனு... சூப்பர்
ReplyDelete//இத்தனை குழந்தைகள் பதிவு இருக்கா? அது அம்புட்டையும் நீங்க படிச்சிருக்கீங்களா?
ReplyDeleteயூ ஆர் க்ரேட்//
ஹிஹி@ சேம் ஏஜ் குரூப்ல தல!
மீ த 51.....
ReplyDelete::::))))
சிபி..... எல்லா குட்டீஸ்'ஸையும் விடாம அழகாக கம்பைன் செய்து இருக்கீங்க...
ReplyDelete:)
// டென்ஷன் இருந்தாலும் ஒரே ஒரு புன்னகை! அதுவும் அந்த பொக்கை வாய்ப்புன்னகை! //
ஸ்ப்பா.. இப்பத்தான் நிம்மதியா இருக்கு..நீங்களே உங்களை பொக்கை வாயின்னு சொன்னதுக்கு..!! :))
//ஸ்ப்பா.. இப்பத்தான் நிம்மதியா இருக்கு..நீங்களே உங்களை பொக்கை வாயின்னு சொன்னதுக்கு..!! :))//
ReplyDeleteஹெஹெ!
வேணும்னா பல் செட்டையே கூட கழட்டி காட்டுவேன்! இதுல என்ன இருக்கு!
நம்ம வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம்தானே!
attendance :))))
ReplyDeleteNila paapa blog mattum theriyum indha listla :D
தாங்கள் இட்ட இந்த குழந்தைகள் பதிவிலெ abiappa.blogspot.com என்கிற ஒரு குழந்தையிம் லிங் கொடுக்காமைக்கு என் கண்டனங்கள்! நான் இதனால் உள்ளிருப்பு செய்கிறேன்!:-))
ReplyDeleteஅட! குழந்தைகளும் வலையுலகில் கலக்கிறாங்களே! இதுவரை கண்ணில் சிக்காமல் இருந்தது. நாமக்கல் சிபி உங்களுக்கு நன்றிகள் பல!
ReplyDeleteநல்ல அறிமுகம் சிபி..
ReplyDeleteஅருமைங்கோ
ReplyDeleteஊய்ய்ய்ய்ய்ய் யாரு சொன்ணாக்கா? ஊர் பக்கம் வாங்க பேசிக்கிறேன்.
ReplyDeleteஅத்திரி புத்தியாக்கிட்டுதான் மறுவேலை
//காதலியின் புன்னகைதான்னு நினைச்சீங்கன்னா ரொம்ப தப்பு! ஏன்னா காதலியின் புன்னகைக்கு பின்னால எவ்ளவு செலவு இருக்கோன்னு மனசுக்குள்ளே பக்குன்னு ஒரு திகில் வந்து குந்திக்கும்!//
ReplyDeleteபோடு பிட்ட
உங்க காதலிக்கு பொக்கை வாயா
ReplyDeleteவாழ்த்துக்கள் நாமக்கல் சிபி
ReplyDeleteகுழந்தைகளில் ஆரம்பிச்சி குதூகலப்படுத்திக்கிடுருக்கீங்க
ReplyDelete//அதென்ன 1008ன்னே எல்லாரும் சொல்றாங்கன்னு /
ReplyDeleteஅதாங்க எனக்கும் புரியலே, அதை அடுத்த பதிவுளெ விளக்குவீங்கனு நினைக்கிறேன்
//ஏன்னா காதலியின் புன்னகைக்கு பின்னால எவ்ளவு செலவு இருக்கோன்னு மனசுக்குள்ளே பக்குன்னு ஒரு திகில் வந்து குந்திக்கும்!
ReplyDelete//
ஆஹா என்னா தல அனுபவம் பேசுதோ
அடுத்த நிமிஷம் உற்சாகம் தொத்திக்கும்! மனசு இலேசாகிடும்!//
ReplyDelete100% உண்மைங்க
//முதல்ல நாமும் குழந்தையா மாறிடணும்!
ReplyDelete//
நானும் குழந்தைதாங்க அப்போ என்னாவா மாறனும்
என்ன தள பதிவு காத்து வாங்குது?
ReplyDeleteமக்கா யாரும் இருக்கீங்களா?
ReplyDeleteநான் நூறு அடிக்கலாம்னு வந்து இருக்கேன்...
ReplyDeleteபோட்டிக்கு யாராவது வாங்கப்பா...
ReplyDeleteதள ஆசிரியரா இருக்காரு.....கைங்க எல்லாம் எங்க போச்சுங்க???
ReplyDeleteஒரு ஆயிரம் கமண்ட்டு இருக்கும்னு வந்து பார்த்தா இப்படி இருக்கே...:(
ReplyDeleteஅதர் ஆப்ஷன் தொறந்தும் ஏன் ? ஏன்? ஏன்? யாரையுமே காணும்?
ReplyDeleteதள எல்லோரையும் இங்க வரக்கூடாதுன்னு நீங்களே மிரட்டிட்டீங்களா?
ReplyDelete/RAMYA said...
ReplyDeleteஇன்னொரு பதிவா? அட கடவுளே
ஒரு பதிவு எழுதவே முடியலை.
இருந்தாலும் வாழுத்துக்கள்!!!
படிச்சிட்டு அப்புறம் வாரேன் !!/
டெம்ப்ளேட் கமென்ட் போடும் ரம்யா அக்கா வாழ்க!
/இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஅதுக்குள்ள 3 பின்னூட்டமா...ஆஆஆஆஆஆஆஆஆ/
முதல் பின்னூட்டம் போடா வந்தீங்களாக்கும்...:)
/இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஅதுக்குள்ள 3 பின்னூட்டமா...ஆஆஆஆஆஆஆஆஆ/
முதல் பின்னூட்டம் போட வந்தீங்களாக்கும்...:)
/நம்ம எல்லோருக்குமே இருக்குற பொதுவான பிரச்சினைகள்! டென்ஷன்!
ReplyDeleteவேலைல டென்ஷன்! ஃபேமில டென்ஷன்! உள்ளே டென்ஷன்! வெளியே டென்ஷன்! இப்படி பல்வேறு டென்ஷன்!/
அட ஆமா...இப்ப கூட நான் டென்ஷன் ல தான் இருக்கேன்... எழுவதுல இருந்து நூறு அடிக்க ட்ரை பண்ணி கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்கேன்....ஊடால புகுந்து யாராவது நூறு அடிச்சிடுவாங்கலோன்னு ஒரே ரென்ஷன்....ரென்ஷன்...:)
/ RAMYA said...
ReplyDeleteபதிவா போட்டு தள்ளுவீங்க போல இருக்கே படிக்க நேரம் இருக்கமா?/
அவரு பதிவு போடுவாரு...படிக்க மாட்டாரு...:P
/ RAMYA said...
ReplyDeleteSUPER O SUPER!!!/
இந்த டெம்ப்ளேட் கூட SUPER O SUPER!
ஹையா!
ReplyDeleteஎங்களைப் பத்தி பதிவு போட்டிருக்கீங்களா சிபி அங்கிள்!
(கவனிக்க நான் பேபி ஷாலினிதான்)
/நான் said...
ReplyDeleteயார் இங்கே நான்?
நான் யார் இங்கே?
இங்கே நான் யார்?
இங்கே யார் நான்?
நான் கடலா? அலல்து பெருங்காயமா? அல்லது கும்மியா?/
இந்த கமெண்ட் போட்டது யாருன்னு எனக்கு இப்ப தெரிஞ்சி ஆகணும்???
நல்லவன் அங்கிள் நான் இங்க இருக்கேன்!
ReplyDeleteஇங்கே
ReplyDeleteஇங்கே
ReplyDeleteகிகிகி!
பாப்பா பாடும் பாட்டு!
ReplyDeleteகேட்டு தலையை ஆட்டு!
ஐயோ நூறு போய்டும் போல இருக்கே...
ReplyDeleteஅஞ்சலி அஞ்சலி அஞ்ச்லி
ReplyDeleteஅஞ்சலி அஞ்சலி அஞ்ச்லி!
அங்கிள் கவலைப் படாதீங்க!
ReplyDeleteநீங்களே 100 அடிங்க!
/பேபி ஷாலினி said...
ReplyDeleteநல்லவன் அங்கிள் நான் இங்க இருக்கேன்!/
பேபி ஷாலினி க்கே பேபி இருக்கு ....நீ யாரும்மா?
எனக்கு சிபி அங்கிளை ரொம்ப பிடிக்கும்!
ReplyDelete(அன்புள்ள ரஜினிகாந்த் மீனா)
/பேபி நீனா said...
ReplyDeleteஅங்கிள் கவலைப் படாதீங்க!
நீங்களே 100 அடிங்க!/
யார் மொழி பாஸ்கர் ரேஞ்சுல இருக்காங்க....இன்னும் பேபி நினைப்புல இருக்காங்க...:)
நான் சிவமயம் சீரியல்ல வந்த பொண்ணு!
ReplyDeleteநூறு
ReplyDelete100
ReplyDeleteநிஜமா 100 அடிச்ச நிஜமா நல்லவனுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஹையா நான் தான் நூறு...
ReplyDeleteநேத்து முன்னூறு அடிச்சிட்டு தூங்க போனேன்....இன்னைக்கு நூறு அடிச்சதுமே தூக்கம் வருது....:)
ReplyDeleteமண்டு மண்டு!
ReplyDeleteநான் வேலன் சீரியல்ல வருவேன்!
தூங்காதே தம்பி தூங்காதே!
ReplyDelete/Namakkal Shibi said...
ReplyDeleteநிஜமா 100 அடிச்ச நிஜமா நல்லவனுக்கு வாழ்த்துக்கள்!/
அட தள தரிசனம் கொடுக்கிறாரு....வுழுந்து கும்புட்டுக்கிறேன் தள...:)
//அத்திரி புத்தியாக்கிட்டுதான் மறுவேலை//
ReplyDeleteபாவம் அத்திரி அங்கிள்! அவரு பாட்டுக்கு சிவனேன்னு வணக்கம் சொல்லிட்டு போயிருக்காரு!
/ கமல் said...
ReplyDeleteதூங்காதே தம்பி தூங்காதே!/
பின்னால ஏங்க ஒன்னும் இல்லை....சோ நான் தூங்க போறேன்..:)
//சோ//
ReplyDeleteஆஹா! நோ அரசியல்!
/Namakkal Shibi said...
ReplyDelete//அத்திரி புத்தியாக்கிட்டுதான் மறுவேலை//
பாவம் அத்திரி அங்கிள்! அவரு பாட்டுக்கு சிவனேன்னு வணக்கம் சொல்லிட்டு போயிருக்காரு!/
அடங்கொக்கமக்கா...இப்படி எல்லாம் கூட கோர்த்து விடலாமா தள...:)
/Namakkal Shibi said...
ReplyDelete//சோ//
ஆஹா! நோ அரசியல்!/
நெனைச்சேன்...இப்படி ஒரு கமெண்ட் வரும்னு....வந்துடுச்சே....:)
//இப்படி எல்லாம் கூட கோர்த்து விடலாமா தள..//
ReplyDeleteகோத்துவிட்டாத்தான்யா நாம பொழைக்க முடியும்!
//நேத்து முன்னூறு அடிச்சிட்டு தூங்க போனேன்....இன்னைக்கு நூறு அடிச்சதுமே தூக்கம் வருது....:)//
ReplyDeleteமிக்ஸிங்க் சரியில்லையோ!
வணக்கம் அத்திரி!
ReplyDeleteவருகைக்கு நன்றி!
//இன்னொரு பதிவா? அட கடவுளே
ReplyDeleteஒரு பதிவு எழுதவே முடியலை//
அப்படியா! ஏங்க?
//
ReplyDeleteஇருந்தாலும் வாழுத்துக்கள்!!!
படிச்சிட்டு அப்புறம் வாரேன் !!//
நன்றி! வாங்க!
/Namakkal Shibi said...
ReplyDelete//இப்படி எல்லாம் கூட கோர்த்து விடலாமா தள..//
கோத்துவிட்டாத்தான்யா நாம பொழைக்க முடியும்!/
இதுக்கு நான் போட வேண்டிய பின்னூட்டத்தை தள தன்னுடைய முதல் பதிவில் அவரின் வாயாலேயே சாரி கையாலேயே டைப்பு பண்ணி இருக்கிறார் என்பதை மிக தாழ்மையுடன் தள மனசு நோகாம தெரிவிச்சுக்கிறேன்...:)
//அதுக்குள்ள 3 பின்னூட்டமா...ஆஆஆஆஆஆஆஆஆ//
ReplyDeleteஆமாங்க! வருகைக்கு நன்றி!
/Namakkal Shibi said...
ReplyDelete//நேத்து முன்னூறு அடிச்சிட்டு தூங்க போனேன்....இன்னைக்கு நூறு அடிச்சதுமே தூக்கம் வருது....:)//
மிக்ஸிங்க் சரியில்லையோ!/
உங்க அளவுக்கு பக்குவம் வரலை தள...:)
//கோத்துவிட்டாத்தான்யா நாம பொழைக்க முடியும்!//
ReplyDelete//இதுக்கு நான் போட வேண்டிய பின்னூட்டத்தை தள தன்னுடைய முதல் பதிவில் அவரின் வாயாலேயே சாரி கையாலேயே டைப்பு பண்ணி இருக்கிறார் என்பதை மிக தாழ்மையுடன் தள மனசு நோகாம தெரிவிச்சுக்கிறேன்...:)//
அங்கே நான் என்று சொல்லாமல்
நாம என்று (நல்லவன் அவர்களையும் சே(கோ!?)ர்த்தே சொல்லி இருக்கிறேன் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!
//ஆமாம்.. பயங்கர டென்ஷனாகீதுப்பா ... இந்த டென்ஷன நினைச்சாலே//
ReplyDeleteஆமாங்க! இந்த டென்ஷனை நினைச்சாலே பெரிய டென்ஷன் ஆகிடும்!
/Namakkal Shibi said...
ReplyDelete//ஆமாம்.. பயங்கர டென்ஷனாகீதுப்பா ... இந்த டென்ஷன நினைச்சாலே//
ஆமாங்க! இந்த டென்ஷனை நினைச்சாலே பெரிய டென்ஷன் ஆகிடும்!/
டென்ஷனை நினைச்சாலே பெரிய டென்ஷன் ஆகும்னா பெரிய டென்ஷனை நினைச்சா பெரிய பெரிய டென்ஷன் ஆகுமா???
பொடியன் பதிவை இங்கு இணைக்காததற்கு காலம் தாழ்த்தி( கொடுக்க வேண்டியதை இப்ப தான் கொடுத்தாங்க) கடுமையா கண்டிக்கிறேன்...:)
ReplyDeleteஎன்னடா இது! வலைப்பதிவுக்கு வந்த சோதனை!
ReplyDelete125 அடிக்க ஆக்களைக் காணோமே!
ஆளக் காணோமா - இதோ 125 ப்ளஸ் 1
ReplyDelete127
ReplyDelete128
ReplyDelete129
ReplyDelete130
ReplyDelete:-))
ReplyDeleteஎன்னப்பா ஆச்சி
ReplyDeleteஅடுத்த பதிவு எப்போ ...