07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 30, 2010

பதிவர்கள் இமேஜ்! டோட்டல் டேமேஜ் !!( வலைச்சரம் 2ம் நாள் )

மொ.வ : அமைச்சரே இன்றைய நிகழ்ச்சிகள் என்ன?

மங்குனி : அக்பர் இன்று சில பதிவர் நண்பர்களை அறிமுகப்படுத்துகிறார் அரசே.

மொ.வ : ம்... ஆரம்பியுங்கள்.

அக்பர் : மன்னா இதோ இந்த போட்டாவில் இருக்கும் இருவரில் ஒருவர் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் மற்றவர் யார் என்று சொல்லுங்க பார்ப்போம்.

மொ.வ : அடடே இது நம்ம பிரதாப் தம்பியாச்சே, ஆமா அவருகிட்ட ஏதோ கேடயம் கொடுக்கிறாரே அவர் யாரு.

அக்பர் : நாசமாப் போச்சு அவர்தாங்க பாரதப்பிரதமர். சிறந்த மொக்கை பதிவர்ங்கிற பட்டத்தை கொடுக்கிறாரு. ஆமா அவரை விட பிரதாப்பை எப்படி தெரியும்?

மொ.வ : இது என்ன கேள்வி அவர் வேர்ல்ட் பேமஸாச்சே, ( நாஞ்சிலார் பந்தாவாக வருகிறார்). தம்பி பிரதாப் சுகமா, பார்த்து எத்தனை நாளாச்சு.
இவர் எழுதும் பட விமர்சனங்களை பார்த்தால் அசந்து விடுவீர்கள். அது போக அவங்க ஊர் ஹீரோவைப்பற்றி எப்படி எழுதியிருக்கிறார் தெரியுமா?

அக்பர் : மன்னா இது டூ மச் நாந்தான் பதிவரை அறிமுகப்படுத்தனும். இவரை ஒரு பெண் தன் குரலால் மயக்கியிருக்காங்க அது தெரியுமா?

மங்குனி : (மன்னரின் காதில்) நாஞ்சில் எக்ஸ்பிரஸை இவர் வைத்துள்ளதாக ஒற்றர்கள் மூலம் தகவல் வந்துள்ளது அரசே. இது தேசத்துரோகம் அல்லவா.

மொ.வ : அட மங்குனி அது ரயில் இல்லையா இவரோட வலைப்பூ. ம் அடுத்து.

அக்பர் : இவர்தான் நாடோடி ஸ்டீபன் குழந்தைகள் மேல இவர் வச்சிருக்கிற அக்கறை ரொம்ப புல்லரிக்குது மன்னா, இவர் புதிர் போடுவதிலும் வல்லவர்.

ஸ்டீபன் : நான் நாடோடி சவுதி கடல் பாலத்தை கண்டுவந்தேன். நம் நாட்டில் அது போல் சிறந்த பாலம் ஏதும் இல்லையே.

மொ.வ : ஹி.ஹி..ஹி.. நம் நாட்டில் கடலே இல்லையே. உங்கள் இருக்கையில் போய் அமருங்கள்.ம் அடுத்து.

அக்பர் : மன்னா அடுத்து கண்ணா. இவர் சிறந்த கட்டிட நிபுணர் குறைந்த செலவில் கட்டிடம் கட்டுவதைப்பற்றி எழுதி வருகிறார். புர்ஜ் கட்டிடத்தையே கட்டியவர் அப்படின்னா பாருங்களேன்.

கண்ணா : வாஸ்து மூலைகளைப்பற்றி பதிவெழுதியும் உங்கள் மூளையேன் இப்படி போகிறது. வாஸ்துவினால் தானே அந்த சுவரை இடித்து வாசல் இடுகிறீர்கள்.

மொ.வ : கிழிஞ்சது போங்க.வயதாகிவிட்டதல்லவா அந்தபுரம் செல்ல சுற்றவேண்டியிருக்கிறது. அதனால் இந்த‌ குறுக்குவழி.

பிரதாப் : அப்போ இந்தபுறம் போக வேண்டியதுதானே. ஹிஹிஹி. யோவ் கண்ணா என் வீடு கட்ட நீதான்வே கொத்தனாரு சொல்லிட்டேன் ஆமா.

கண்ணா : அஞ்சு வருஷமா இதத்தான் சொல்லுதீரு அட்வான்ஸ் கொடுக்க காணோம்.

மொ.வ : சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது நிறுத்த சொல்லுங்கள்.

அக்பர் : மன்னா அதுக்குத்தான் அடுத்து நம்ம டாக்டர் தல சுரேஷ்(பழனியிலிருந்து) வாரார்.

தல சுரேஷ் : காதை பொத்திக்கொள்ளுங்கள் மன்னா.

மொ.வ : என்னது வயிற்று வலின்னா காதை பொத்த சொல்கிறார்?

அக்பர் : என்ன தல பின்னூட்டம் போடுறமாதிரியே புரியாம ஒத்த வரியில சொன்னா எப்படி. மன்னா இவர்கள் பேசுவதை கேட்டதால்தான் உங்களுக்கு சிரிப்பு வந்து வயிற்று வலி ஏற்படுகிறது. காதை பொத்தினால் கேட்டு சிரிக்கமுடியாதல்லவா அதைத்தான் சுருங்கச்சொன்னார்.

இவரை லேசாக நினைக்கவேண்டாம்.தலைவரோட புகழ் கொரியா வரை பரவியிருக்கிறது, அது போக வசிய மருந்து செய்யறதுக்கு விளக்கம் கொடுக்கிற அளவுக்கு மாந்திரீகமும் தெரியும்.

மங்குனி :மன்னா இவர் பதிவருக்கே அதிர்ச்சி கொடுத்த ஆளாச்சே. மக்களுக்கு உபயோகமாக பொது சுகாதாரமும் மருத்துவமும்னு கூட ஒரு பதிவு எழுதுகிறார். சரி அடுத்து சொல்லுங்கள் அக்பர்.

அக்பர் : அடுத்து நம்ம ஸ்டார்ஜன். இவர் செஞ்ச இறால் சாப்ஸை சாப்பிட்டேன் என்ன சுவை தெரியுமா, ரூமில் இருக்கும் போது வட்டார வழக்கில் பேசி அசத்துவார். இரு வார்த்தைகளில் கதையும் சொல்லி விடுவார்.

மொ.வ : அப்போ எனக்கும் இறால் சாப்ஸ் செய்து தாருங்கள் ஸ்டார்ஜன்.

ஸ்டார்ஜன் : செய்யலாம் மன்னா. ஆனா எனக்கு தொடர்ச்சியா பின்னூட்டம் போடனும் சரியா.

மங்குனி : மன்னரிடமே பின்னூட்டமா. அடுத்து யார்.

அக்பர் : அடுத்து சேட்டைக்காரன். இவரை கல்வியமைச்சராக்கினால் பிள்ளைகள் படிப்பில் பிச்சிக்கிட்டு போகும். சிறுவயசுல பட்ட அனுபவத்தை வச்சி பதிவர்களுக்கு ராசிபலன் சொல்றாருன்னா பாருங்களேன்.

மங்குனி : அப்போ இவரை ஆஸ்தான ஜோசியாராக்கவேண்டியதுதானே மன்னா. ம் அடுத்து.

சேட்டை :(மனதுக்குள்) ஆங்குங்க அப்புறம் இருக்குடி..

அக்பர் : இது நம்ம துபாய் ராஜா விமானத்துல இவருக்கு ஏற்பட்ட குளுகுளு அனுபவத்தை அருமையா சொல்லியிருக்கிறார்.பல நாடுகள் சுற்றியவர், குட்டிச்சாத்தனே இவரை கண்டு பயந்து விட்டுடுச்சுன்னா பாருங்களேன்.

மொ.வ : பலே பலே அவ்வளவு பெரிய ஆளா பெயரைக்கேட்டாலே தெரியுதே. ம் அடுத்து.

அக்பர் : இவர்தான் சைவகொத்து புரோட்டா இவரோட பதின்ம நினைவுகளை படிச்சா சிரிச்சி முடியாது. உள்ளங்கையில் உலகத்தை கொண்டுவந்த இவர் யார் ஞானி என்பதையும் அழகாக விளக்கியுள்ளார்.

மொ.வ : ரொம்ப சந்தோசம். ஆனா சீனா ஐயா உங்களுக்கு தந்தது ஒரு வாரம். நீங்க போற வேகத்துக்கு ஒரு மாசம் ஆகும் போல. நாளைக்கு இன்னும் நிறைய புதியவர்களை அறிமுகப்படுத்தனும் சரியா.

அக்பர் : சரி மன்னா.

நண்பர்களே மொக்கை வர்மன் தர்பாரிலே பதிவரை தொடர்ந்து அறிமுகப்படுத்தவா? இல்லை விறுவிறு சுறுசுறுன்னு வேகமாக முடித்து விடலாமா?

58 comments:

  1. நல்லாவே போய்க்கொண்டுள்ளது மன்னா!!!.ச்சே நானும் இதிலேயே ஒன்றி விட்டேன். தூள் கிளப்புங்க!!!!!!!!

    ReplyDelete
  2. அருமை அக்பர் மேனேஜ்....

    மொக்கைவர்மன்,மங்குனி அமைச்சர், அறிவாளி அக்பர் கூட்டணி கலக்கல். இயல்பான நகைச்சுவை உரையாடலில் உழைப்பு தெரிகிறது.

    அடடே, நண்பர்களோடு நம்மளையும் அறிமுகப்படுத்தியிருக்கீங்க...

    நன்றிகளும், வாழ்த்துக்களும் அக்பர்.

    ReplyDelete
  3. // ஆனா சீனா ஐயா உங்களுக்கு தந்தது ஒரு வாரம்.//

    சீனா அண்ணே... அண்ணன் அக்பருக்கு இன்னு ஒரு வாரம் நீடிப்பு கொடுப்பீங்களாம்..

    இதற்கு மன்னர் மொக்கைவர்மனே சிபாரிசு செய்வதாகச் சொல்லியிருக்கின்றார்.

    ReplyDelete
  4. அனைவரும் மிக நன்றாக எழுதுபவர்கள். அவர்களை நீங்கள் அறிமுகப் படுத்திய விதம் அழகு..

    என்ன இன்னிக்கு மீ த ஃபர்ஸ்ட் வடை போச்சு..

    ReplyDelete
  5. அப்ப அக்பர் மன்னன் இல்லையா? This பதிவர்ஸ் are crazy.

    ReplyDelete
  6. இவர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்துவதிலேயே முத்திரை பதித்து விட்டீர்களே.......

    ReplyDelete
  7. அறிமுக படுத்தலும், வித்தியாசமா
    இருக்கு.
    அறிமுகபடுத்தியதற்கும் நன்றி அக்பர்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அக்பர்.

    ReplyDelete
  9. ஆஹா! எனக்கு ஆஸ்தான ஜோசியர் பதவியா? ஒரு பி.எம்.டபுள்யூ வேணும்...ஆமா...சொல்லிட்டேன்! :-))

    ReplyDelete
  10. அறிமுகப்படுத்திய விதம் நல்லாருக்குங்க.... அந்த பேச்சு... நடை... தூள்....

    ReplyDelete
  11. மொக்கை வர்மன் ஸ்டைலில் எல்லா பதிவர்களையும் கலாய்த்திட்டீங்க அக்பர் அண்ணா..

    :-)))

    நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் மிக நல்ல பதிவர்கள். வாழ்த்துகள் அக்பர் அண்ணா.

    மேலும் கலக்குங்க உங்க ஸ்டைலில்

    ReplyDelete
  12. இவர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்துவதிலேயே முத்திரை பதித்து விட்டீர்களே.......

    ReplyDelete
  13. சரியான காமெடி. பேஸ்பேஸ் ரொம்ப நன்னாருக்கு..அசத்துறேள் அக்பர்..

    இதுல நானுமா.. இனி சரவெடிதான்.

    ///மொ.வ : அப்போ எனக்கும் இறால் சாப்ஸ் செய்து தாருங்கள் ஸ்டார்ஜன்.

    ஸ்டார்ஜன் : செய்யலாம் மன்னா. ஆனா எனக்கு தொடர்ச்சியா பின்னூட்டம் போடனும் சரியா.///

    ReplyDelete
  14. டோட்டல் டேமேஜ்.... பி கேர் புல்...என்னைச்சொன்னேன்...

    ReplyDelete
  15. அடிச்சி ஆடுறீங்க‌ அக்ப‌ர்... க‌ல‌க்குங்க‌.. ந‌ம்ம‌ளையும் ஒருத்த‌ர‌ அறிமுக‌ ப‌டுத்திய‌த‌ற்கு ந‌ன்றி..

    ReplyDelete
  16. அறிமுகத்திற்கு நன்றி அக்பர்

    ReplyDelete
  17. பிரதாப்பை பற்றி சொல்லி விட்டு பிலிபைனியை பற்றி சொல்லாத்தை வன்மையாக கண்டிக்கிறோம்

    இவண்
    உறுப்பினர்
    பிலிபைனி முன்னேற்ற சங்கம்
    துபாய்

    ReplyDelete
  18. //பிரதாப் : அப்போ இந்தபுறம் போக வேண்டியதுதானே. ஹிஹிஹி. யோவ் கண்ணா என் வீடு கட்ட நீதான்வே கொத்தனாரு சொல்லிட்டேன் ஆமா.

    கண்ணா : அஞ்சு வருஷமா இதத்தான் சொல்லுதீரு அட்வான்ஸ் கொடுக்க காணோம்.//

    நல்லா கேளு தல.... எவ்ளோ நாளுதான் வாய்லயே வடை சுடுறது...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  19. சார் பின்னூட்டதிற்கு ஒரு பதிவு போட்ருக்கேன் , வந்து பாருங்க

    பின்னூட்ட "குலசாமிக்கு" ஒரு படையல் (தொடர் பதிவு )...
    http://manguniamaicher.blogspot.com/2010/03/blog-post_14.html

    ReplyDelete
  20. //பிரதாப்பை பற்றி சொல்லி விட்டு பிலிபைனியை பற்றி சொல்லாத்தை வன்மையாக கண்டிக்கிறோம்//

    வே...கண்ணா... இப்பா இதை யாராச்சும் கேட்டாங்களா??? என் ஏரியாவுக்கு வந்து நாறடிக்கிறது பத்தாதுன்னு... ஏரியா தாண்டி வேறபண்ண ஆரம்பிச்சட்டிராக்கும்.....நல்லாருவே...

    ReplyDelete
  21. //கண்ணா : அஞ்சு வருஷமா இதத்தான் சொல்லுதீரு அட்வான்ஸ் கொடுக்க காணோம்.//

    முதல்ல வீட்டை ஓழுங்கா கட்டித்தாரும்வே.... மழை பெஞ்சு ஒழுகாம இருந்தாத்தான் காசுதருவேன்... நீரு கட்டுன புர்ஜ் கல்பாவே ஒழுக ஆரம்பிச்சுடுச்சு... நீரெல்லாம் ஒரு கொத்தனாரு....??? க்க்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  22. டேமேஜ் ஆக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்கள் பொருத்தம்!! பிரதாப் -கண்ணா, கவுண்டமணி - செந்தில் பாணிக்கும் பொருந்திவருவார்கள்.

    ReplyDelete
  23. நல்ல பகிர்வு

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  24. நல்லாயிருக்கு,தொடருங்கள்!!

    ReplyDelete
  25. வாங்க ஜெய்லானி

    //நல்லாவே போய்க்கொண்டுள்ளது மன்னா!!!.ச்சே நானும் இதிலேயே ஒன்றி விட்டேன். தூள் கிளப்புங்க!!!!!!!!//

    அப்படியா சொல்றீங்க. அப்ப தொடரவேண்டியதுதான்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  26. வாங்க துபாய் ராஜா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  27. வித்தியாசமான அறிமுகங்கள் அக்பர் தூள் கிளப்புங்க. சங்குனி ஸ்ஸ்ஸ் மங்குனிஅமைச்சரோட கூட்டனி கலக்கல்..

    ReplyDelete
  28. வாங்க இராகவன் அண்ணா

    //சீனா அண்ணே... அண்ணன் அக்பருக்கு இன்னு ஒரு வாரம் நீடிப்பு கொடுப்பீங்களாம்..இதற்கு மன்னர் மொக்கைவர்மனே சிபாரிசு செய்வதாகச் சொல்லியிருக்கின்றார்.//

    ஒரு வாரமே போதும்ணே.

    //என்ன இன்னிக்கு மீ த ஃபர்ஸ்ட் வடை போச்சு..//

    அதுனால என்னா நாளைக்கு கிடைச்சுடும் :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  29. வாங்க தல‌

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  30. வாங்க குலவுசனப்பிரியன்

    //அப்ப அக்பர் மன்னன் இல்லையா? This பதிவர்ஸ் are crazy.//

    இது என்ன புது குழப்பம். அது நான் இல்லீங்க.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  31. வாங்க Chitra

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  32. வாங்க

    T.V.ராதாகிருஷ்ணன்

    சைவகொத்துப்பரோட்டா

    செ.சரவணக்குமார்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  33. வாங்க சேட்டைக்காரன்.

    //ஆஹா! எனக்கு ஆஸ்தான ஜோசியர் பதவியா? ஒரு பி.எம்.டபுள்யூ வேணும்...ஆமா...சொல்லிட்டேன்! :‍))//

    கொடுத்துட்டாப் போச்சு.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  34. வாங்க

    க.பாலாசி

    மின்மினி

    சே.குமார்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  35. வாங்க Starjan ( ஸ்டார்ஜன் )

    //சரியான காமெடி. பேஸ்பேஸ் ரொம்ப நன்னாருக்கு..அசத்துறேள் அக்பர்..//

    இது எப்போதிலிருந்து.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  36. அக்பர் நீங்களும் ஸ்டார்ஜனும் எல்லாரையும் அறீமுகப் படுத்திடீங்கன்னா நாங்க யாரை அறிமுகப் படுத்துறது...:))

    ReplyDelete
  37. அக்பரு - தூள் கெளப்புறாப்ல இருக்கு -பலே பலே ! நடக்கட்டும் ராஜ்யம் - ஆமா இன்னும் ஒரு வாரம் நீட்டிக்கலாம்னு பாத்தா ஈரோட்ல இருந்து ஆட்டோ வருதாம் - பின்னாலே ஒரு வாரம் பாப்ப்போம் - ரெகமண்ட் பண்ற அண்ணன் எழுதறதுக்கு சிக்க மாட்டேங்குறாரே ! வட காத்துக்கிட்டு இருக்கு -

    நல்வாழ்த்துகள் அக்பர்

    ReplyDelete
  38. வித்யாசமான நடையில் கலக்கியிருக்கீங்க அக்பர்!, தொடருங்கள். எழுத்தாளர் பட்டம் உங்களுக்குக் கொடுத்துவிட வேண்டியதுதான் மன்னர் மன்னன்!

    ReplyDelete
  39. அறிமுகம் அருமை.

    ReplyDelete
  40. வாங்க நாஞ்சிலு,

    //டோட்டல் டேமேஜ்.... பி கேர் புல்...என்னைச்சொன்னேன்..//

    இது கம்மிதான் பாஸ்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  41. வாங்க நாடோடி

    //அடிச்சி ஆடுறீங்க‌ அக்ப‌ர்... க‌ல‌க்குங்க‌.. ந‌ம்ம‌ளையும் ஒருத்த‌ர‌ அறிமுக‌ ப‌டுத்திய‌த‌ற்கு ந‌ன்றி..//

    எதுக்கு நன்றியெல்லாம். இது கடமை :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  42. வாங்க கண்ணா

    //இவண்
    உறுப்பினர்
    பிலிபைனி முன்னேற்ற சங்கம்
    துபாய்//

    சங்கம் வச்சு பிலிபைனியை கவுக்கவா.

    //நல்லா கேளு தல.... எவ்ளோ நாளுதான் வாய்லயே வடை சுடுறது...//

    அதானே.எங்க சங்கத்து ஆளா அடிச்சவன் எவன்டா :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  43. வாங்க மங்குனி,

    உங்க பதிவு படிச்சேன் அருமை.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  44. வாங்க அபுஅப்ஸர்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  45. வாங்க நாஞ்சிலு,

    //முதல்ல வீட்டை ஓழுங்கா கட்டித்தாரும்வே.... மழை பெஞ்சு ஒழுகாம இருந்தாத்தான் காசுதருவேன்... நீரு கட்டுன புர்ஜ் கல்பாவே ஒழுக ஆரம்பிச்சுடுச்சு... நீரெல்லாம் ஒரு கொத்தனாரு....??? க்க்ர்ர்ர்ர்ர்ர்//

    இதுவேறயா, சொல்லவேயில்லை கண்ணா.

    ReplyDelete
  46. வாங்க ஹுசைனம்மா

    // டேமேஜ் ஆக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்கள் பொருத்தம்!! பிரதாப் -கண்ணா, கவுண்டமணி - செந்தில் பாணிக்கும் பொருந்திவருவார்கள்.//

    சரியா சொன்னீங்க. ரெண்டுபேருமே அடிக்கடி மாறிடுவாங்க. நமக்கு ஜாலி.
    (இதை படிச்சிட்டு நம்மள தாளிக்காம இருக்கணுமே)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  47. வாங்க

    விஜய்

    Mrs.Menagasathia

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  48. வாங்க மலிக்கா

    //வித்தியாசமான அறிமுகங்கள் அக்பர் தூள் கிளப்புங்க. சங்குனி ஸ்ஸ்ஸ் மங்குனிஅமைச்சரோட கூட்டனி கலக்கல்..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  49. வாங்க தேனம்மை அக்கா

    //அக்பர் நீங்களும் ஸ்டார்ஜனும் எல்லாரையும் அறீமுகப் படுத்திடீங்கன்னா நாங்க யாரை அறிமுகப் படுத்துறது...:))//

    எங்களை அறிமுகப்படுத்துங்க.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  50. வாங்க cheena (சீனா) ஐயா,

    //அக்பரு - தூள் கெளப்புறாப்ல இருக்கு -பலே பலே ! நடக்கட்டும் ராஜ்யம் - ஆமா இன்னும் ஒரு வாரம் நீட்டிக்கலாம்னு பாத்தா ஈரோட்ல இருந்து ஆட்டோ வருதாம் - பின்னாலே ஒரு வாரம் பாப்ப்போம் - ரெகமண்ட் பண்ற அண்ணன் எழுதறதுக்கு சிக்க மாட்டேங்குறாரே ! வட காத்துக்கிட்டு இருக்கு -
    நல்வாழ்த்துகள் அக்பர்//

    நன்றி ஐயா, எனக்கு ஒரு வாரமே போதும். இதுவரை எழுதாதவர்கள் எழுதினால்தான் இன்னும் நிறைய புதுமுகங்கள் தெரிய வருவார்கள். இராகவன் அண்ணன் எழுதினா அருமையாக இருக்கும். எழுதுவார்.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  51. வாங்க ஜெரி ஈசானந்தன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  52. வாங்க ஷங்கி

    //வித்யாசமான நடையில் கலக்கியிருக்கீங்க அக்பர்!, தொடருங்கள். எழுத்தாளர்
    பட்டம் உங்களுக்குக் கொடுத்துவிட வேண்டியதுதான் மன்னர் மன்னன்!//

    எழுத்தாளரா நீங்கவேற.. பதிவர்தான் பிடிச்சிருக்கு. ஆமா நம்ம மாம்ஸ் ஜெகாவையே ஆளைக்காணோம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  53. வாங்க அஹமது இர்ஷாத்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது