Saturday, June 30, 2012

ஹாரி பாட்டரும் கம்பியூட்டரும்

இது வரை வலைச்சரம் மூலம் பதிவுகளை பார்த்தவர்களுக்கும் , கமன்ட் பண்ணிய ஒவ்வொருவருக்கும் நன்றிகள்..

உலகம் இப்போது கண்டிப்பாக தொழில்நுட்பம் என்ற பெரிய ஜாம்பவானின் பிடியில் மிக மிக வசமாக பிடிபட்டு விட்டதை நாம் மறுக்க இயலாத உண்மை. நன்மைகள் எந்த அளவு உள்ளதோ அந்த அளவுக்கு நம்முடைய சிறிய அறியாமை அதை தீமையினை அணுக வைத்து விடும்.


ஹாரி பாட்டரும் கம்பியூட்டரும்




ஹாரி - ரோன் என் டவல பார்த்தியா?

ரோன் - ஆஹ்.. கூகுள்குடு.. தேடி தந்துருவாங்க.. அட போடா.. அவசரமா போகணும் என்ற வெளிய வாடா..

ஹாரிக்கு புது கம்பியூட்டர் வாங்குவதற்காக இன்று ஹாரி, ரோன், ஹர்மொயினி, ஜெனி (ரோனின் தங்கை) என்று நால்வரும் போவதற்காக ஆயத்தம் ஆகிறார்கள்.

ஹாரி - ஓகே.. தேடி தா.. இல்லாட்டி நான் அப்பிடியே வெளிய வந்துடுவன்..

ரோன் - உன்னை யாரு பார்க்க போரா.. என் கம்பியூட்டருக்கு என்ன நடந்ததோ தெரியல.. அத பார்த்துகிட்டு இருக்கன்..

ஹாரி - உனக்கு வேணும் டா.. எப்ப பார்த்தாலும் அதையே நோண்டி கிட்டு இருந்தா? இன்னைக்கு தானே கம்பியூட்டர் கடைக்கு போக போறம்.
அங்க பார்த்துக்கலாம்.



இப்படி சொல்லி கொண்டே ஹாரி நடந்து வந்தான் தனது டவலை எடுக்க.. கட்டிலில் இருந்த டவலை எடுத்து அப்போது தான் வந்த ஜெனியை கவனிக்காமல் முகத்தை துடைத்து கொண்டே மறுபடி பாத் ரூமிற்குள் சென்றான்.

இதை எதிர் பாராத ஜெனி கண்டும் காணாதது போல கொஞ்சம் வெட்கப்பட்டு தலை குனிந்து ஹாரி, ரோனின் அறைக்குள் வந்தாள்.

ஜெனி - என்ன டா? பெரிய சத்தம் வாசல் வரை கேட்குது.

திடுக்கிட்டு ஹாரியை திரும்பி பார்த்து அவன் உள்ளே போய் விட்டான் என்பதை உறுதி செய்து

ரோன் - ஏன் திடீர் என்று வாற? கதவை கிதவை தட்டிட்டு வார தானே..

ஜெனி - சொரி மன்னிச்சுக்கோ அப்ப நான் போறன்..

ரோன் - இல்ல நில்லு..

ஜெனி - அது.. இந்தா உன் சாப்ட்வேர் லெக்சரர் தந்து விட்டாங்க.. அம்மா உன்னை கால் பண்ணுனா ஆன்சர் பண்ண சொல்லிச்சு..

ரோன் - ஓகே டி..

ஜெனி - ஆமா என்ன பிரைச்சினை உன் கம்பியூட்டர்ல..

ரோன் - தெரியல டி.. இப்ப தான் டொமைன் வாங்கிணன்.. ஆனா ஒண்ணுமே வொர்க் பண்ண மாட்டேங்குது..

ஜெனி - கொஞ்சம் பொறுத்து இருந்து பாரு.. ஏனென்றால் சில வேளை ஏதும் தாமதமாக இருக்கலாம். சில தளங்கள் மூலமா டொமைன் வாங்கினா லேட் ஆகும் அண்ணா..

ரோன் - ம்ம் பார்க்குறேன்..

ஜெனி - ஆமா உன் கேர்ள் பிரெண்ட் எங்கே அவளும் வாராள் தானே..

ரோன் - ஆமா டி ஆமா ஐயோ மறந்தே போய்டன் .. என்னை ஏத்த வர சொன்னா..

ஜெனி - என்னது ?

ரோன் - இல்ல டி.. சும்மா.. அவ பைக் பழுதாம் பார்க்க வர சொன்னா..

ஜெனி - அது சரி..



ஓடி போனவன்.. ஹாரியும் ஜெனியும் தனிய விட்டு போகுறோம் என்று நினைப்பு வந்து .. அவர்கள் இருவரும் லவ் பண்ணுவது தெரிந்தும் அண்ணன் என்கிற கடமை உணர்வு தான்..

ரோன் - ஜெனி நீயும் வா

ஜெனி - உன் பைக்ல ஒரு சீட் தான் இருக்கு.. உன் அண்ணன் பாசம் என்னை வியக்க வைக்குது.. நான் வாசலிலே இருக்கன்.. நீ போய் வா

ரோன் - ஏதும் கேள்வி பட்டன் அம்மாகிட்ட சொல்ல வேண்டி வரும்..

ஜெனி - ஏது மெக்கானிக் வேலையையா? இல்ல டிரைவர் வேலையையா?

ரோன் - ?..?..?


அவன் வெளியே செல்ல தயார் ஆனான்.. அவள் உள்ளே செல்ல தயார் ஆனாள்..


Thursday, June 28, 2012

ஹாரி பாட்டரும் போர்க்கவிதையும்

மறுபடியும் வலைச்சரம் மூலமாக சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதுவரை வலைச்சரதிற்கு வந்த பிறகு 5 புது நண்பர்கள் 2 நாட்களுக்குள் கிடைத்துள்ளார்கள். நம்பி ஏற்று கொண்டதற்கு நன்றிகள்.

இன்று என்ன தலைப்பை எடுக்கலாம் என்று யோசித்த போது இந்த தலைப்பை எடுக்கலாம் என்று முடிவெடுத்தேன்.  என்ன தான் போர் முடிந்தாலும் சில இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது.

இதை எழுதும் போது சிறு சம்பவம் ஞாபகம் வருகிறது. ஆரம்பத்தில் எங்கள் பகுதியில் யுத்தம் நடந்த போது எனக்கு மிக சிறு வயது. 

துப்பாக்கி வேட்டுக்கள், குண்டு சத்தம் கேட்கையில் நாங்கள் பயப்பட கூடாது என்பதற்காக எங்கள் அம்மா சொல்லுவார் "பக்கத்துக்கு வீட்டில் யாரோ கதவை தட்டுகிறார்கள் என்று"

அப்போது நானும் அண்ணாவும் கேட்போம் "அதுக்காக நாங்க ஏன் அம்மா கட்டிலுக்கு கீழ் ஒளிந்து இருக்கிறோம்" என்று..



இன்னும் சில அனுபவங்கள் உண்டு. ஆனால் யுத்தம் நடக்கையிலும் நடந்த பின்னும் வேண்டாத எழுத்துக்கள் ஈழப்போரை பற்றி கூறியும், வேண்டாத பேச்சுக்கள் அரசியல் லாபத்தோடு மேடைகளில் கூறப்பட்டும் தங்களை தனித்துவ படுத்தி ஈழ அனுதாபத்தை மக்கள் மத்தியில் விதைத்து வளர்ந்தவர்களை (மிக சிலரை தவிர) போல நானும் வளர விருப்பமில்லை.

கூர்வாளும் குடைசாய்ந்தது 
சில தமிழ் இரத்தமும் சிந்தியது 
மேடைகளில், எழுத்துகளில் நடிக்காதீர்கள் 
எங்கள் வலி உங்களுக்கு தெரியாது 

ஹாரி பாட்டரும் போர்க்கவிதையும்






ஒரு யுத்தம் நடக்கிறது

அதற்கு அநேகம் காரணமும் சொல்ல படுகிறது 

அதில் அநேகம் இழப்பும் இருக்கின்றது

ஆனால் ஆழமாக சிந்திக்கையில்

புதைந்து இருப்பது

ஒரு தனி மனிதனின் எண்ணங்கள்-

   ஒரு தனி மனித வஞ்சம்

ஒரு தனி மனித போட்டி குணம் 

ஒரு தனி மனித மன வலிமை

 
 
ஆனால் அதற்கு போடும் வேலி-

ஒரு மண்,

ஒரு நிலம்,

ஒரு குடி,

ஒரு காதல்,

ஒரு ஜனம்,

----------

----------

---------

---------

----------

----------

இன்னும் இருக்கு
 
வெடித்து சிதறி
களையிழந்து கிடந்த  
வீட்டு வாசலில் இருந்து ஒரு பத்து வயது 
சிறுமி படுத்து கிடந்த  
தன் தாயை 
பார்த்து நினைத்து கொண்டது-
ஒரு வீடு,
ஒரு அப்பா,
ஒரு தம்பி,
ஒரு மர பொம்மை,
எல்லாம் என்னிடம் இருந்தது-
ஆனால் விடிந்து பார்க்கையில் 
ஒன்றையும் காணவில்லை  
 
அம்மாவிடம் கேட்டேன்  
இடி வந்த போது 
எல்லாம் மறைந்ததாக என் தாய் 
சொன்னாள்- சற்று முன் 

ஆனால் நான் நம்பவில்லை 
கொல்லைக்கு   
தேடி பார்க்க சென்றேன் 


தேடி பார்த்து திரும்பும் போது-
ஒரு துணி,
ஒரு மார்பு,
இல்லாமல் என் தாய் படுத்து கிடந்தாள் - இரத்தத்தோடு 

அப்போது நான் திரும்பி 
பார்க்கையில் 
சடுதியாய்- ஒன்று
என் நெற்றியை உறுத்தி நுழைந்தது..
 
ஒரு காலடி சத்தம்.. 
ஒரு வெறி சிரிப்பு..
 
பின் 
மெதுவாக 
 
எல்லாம் அடங்கியது  
 
ஒரு அமைதி..
ஒரு அடக்கம்..
 
என் குடும்பத்தோடும்..
என் மர பொம்மையோடும்..
என் பயணத்தை தொடர்ந்தேன்..

-----------------ஹாரி



Tuesday, June 26, 2012

ஹாரிபாட்டரும் பதிவர் ரகசியமும்

நேற்று வலைச்சரத்தின் மூலம் என் பதிவுகளை கண்ட ஒவ்வொருவருக்கும் நன்றிகள்..

சரி இன்றைய நாளில் என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் அகப்பட்டது தான் இந்த பதிவர் ரகசியம். நிஜ ஹாரி பாட்டரில் (புத்தகம் மற்றும் திரைப்படம்) கூட ரெண்டாவது பாகத்தில் ஏதோ ரகசியத்தை தான் தேடி போவார்கள். இங்கு 10 க்கும் அதிகமான பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. கண்டுபிடிக்க கூடியவர்கள் கண்டு பிடித்து வாசித்து கொள்ளுங்கள்.

 ஹாரிபாட்டரும் பதிவர் ரகசியமும்



ஹாரி - ஹாய் ரோன்.. என்ன பண்ணிக்கிட்டு இருக்கிற?

ரோன் - நானா.. ப்ளாக்கர் எழுதிகிட்டு இருக்கன்..

ஹாரி - நான் கூட இப்ப தான் எழுதிட்டு அப்டேட் பண்ணிட்டு வந்தன்.. நைட் தான் போய் ரெஸ்போன்ஸ் எப்படி இருக்குது என்று பார்க்கணும்..

ரோன் - நான் கூட தான் தெனோம் 2 அப்டேட் ஆவது பண்றன்.. டெய்லி 500 ஹிட்ஸ் கூட தாண்ட முடியலியே மச்சி..

ஹாரி - ஒரு ஐடியா மச்சி.. மக்களுக்கு ஏற்ற போல புதுசா எழுது  இல்லாட்டி அவங்களுக்கு பிடிச்ச ஒரு விஷயத்த அது உனக்கு பிடிச்சு இருந்தா அத பற்றி தகவல் சேகரிச்சு சேமிச்சு அழகா எழுதி சரியா அவங்களுக்கு கொண்டு போய் சேரு..

ரோன் - எனக்கு ஒரு ஐடியா மச்சி.. 

ஹாரி - என்ன அது?

ரோன் - நாம ரெண்டு பெரும் சண்டை பிடிப்பம்..

ஹாரி - ஏன்டா? ஹெர்மாயினி உன்னை தானே லவ் பண்ணுது.. (ஹி.. ஹி..)

ரோன் - அது இல்ல மண்டு.. ப்ளாக்கில நாம ரெண்டு பேரும் சண்டை பிடிப்பம்.. ஹிட் ஆகிரலாம் ..




ஹாரி - அட போடா இவர் பெரிய புரட்சிக்காரன்.. சண்டை பிடிப்பம் என்கிறாரு..

ரோன் - இல்லாட்டிக்கு ஏதாவது  பிரபல பதிவர்கள கலாய்ச்சு, அவங்க நேம யூஸ் பண்ணி ஹிட் ஆகுவோம்.. 

ஹாரி - நீ இப்பிடி சொல்றத பார்க்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நண்பா.. சினிமா போல பதிவுலகமும், பதிவுகளும், பதிவர்களும் மக்கள் மத்தியில் ஆழமா போய் சென்றடைஞ்சு இருக்குற படியா தான் நீ அவங்கள கலாய்ச்சு ஜெயிக்கலாம் என்று சொல்ற.. 

ஆனா இன்னொன்று அவங்கள கலாய்.. SPOOF பண்ணு.. அவங்க எழுத்த மட்டும்.. அவங்க தனி வாழ்க்கையையோ குடும்பத்தையோ இல்ல.. அவர் பிரபல பதிவரா இருந்து பிழை விட்டா தனிய விஷயத்த தெரியபடுத்து.. இல்ல நீயும் போட்டிக்கு போட்டி கிளம்பினா ரெண்டு பேருக்கும் வித்தியாசம் இருக்காது.

ரோன் - காணுண்டா உன் மெசேஜு.. இத நான் பண்ணாம காப்பி பேஸ்ட் பண்ணி பிரபல பதிவர் ஆகவா?

ஹாரி - எங்க இந்த விஷயம் உன்ட ஆள் சிந்தனையில இருந்து இன்னும் வரலையே என்று நினைச்சன்..

ரோன் - ஹி ஹி 

ஹாரி - ஏதோ மற்றவன் கஷ்டப்பட்டு ஒரு பதிவை தயாரிச்சு வைச்சா அத நீ திருடி உன் பதிவாக்குற.. நன்றினு அவன் பெயராவது போடுவியா? இல்லை முழு நாமமா? 

எந்த ஒரு படைப்புக்கும் மூலம் ஒன்று வேணும்.. ஒரு சிலை என்றா கண்டிப்பா பாறை என்ற மூல பொருள் முக்கியம். அந்த மூலத்தை செதுக்கி ஒருவன் சிலை ஆக்கினா அத நீ உன்டது என்று போட்ற.. அடுக்குமா நியாயமா?

சிலை எப்பிடி செதுக்கிறது என்று தெரிஞ்சுகிட்டு அந்த மூலத்தை நீ யூஸ் பண்ணு.. அப்போ மக்களுக்கு ஒரு விஷயத்துக்கு 2, 3 ஏன் 4, 5 பரிமாணம் கூட கிடைக்கும்..

இல்லாட்டி அயல் மொழிகள்ல இருக்குற நல்ல விஷ்யங்கள தமிழுக்கு ரான்சிலேட் பண்ணு.. அவங்களுக்கு நன்றி போட்டு.. மக்களும் இன்னொரு மொழியில இருக்குற முக்கிய விடயங்கள அறிஞ்சு கொள்ளுவாங்க..

அத விட்டுட்டு..

ரோன் - கண்ணா.. ராசா.. யப்பா.. டேய்.. காணும் டா.. முடியல.. விட்டுரு நான் ஓடிர்ரன்..



ஹாரி - டேய்.. டேய்.. ஓடாத.. சூப்பர் ஐடியா கவிதை எழுது மாமா..

ரோன் - வேணாம் டா.. அந்த ஆணிய புடுங்கவே வேணாம்.. கவிதையா அத நான் ஹெர்மாயினி கிட்டேயே போய் சொல்லிரன்.. BYE 

ஹாரி - ஹி .. ஹி .. BYE மச்சி 

Monday, June 25, 2012

ஹாரிபாட்டரும் சுயபுராணமும்


முதலில் வலைச்சர ஆசிரியராக இந்த ஒரு வாரத்திற்கு அனுமதி  தந்த குழுமத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குருவி தலையில் பனங்காய் போல இருந்தாலும் என்னால் முடிந்ததை இந்த வாரம் முழுக்க முயற்சிக்கிறேன். பதிவுலக ஜாம்பவான்கள் எழுதிய இந்த பகுதியை ஹாரி பாட்டரை போல 40 நாள் குழந்தைக்கு நம்பி அளித்து இருக்கிறார்கள் நன்றி.

அதே போல பதிவுலகதிற்கு வந்ததில்  மிக குறுகியதாய் இருந்தாலும் நல்லதொரு நண்பர் வட்டம், சில பழைய பதிவர்களின் அறிமுகம் ,5 வாரத்தில் 50000 ஹிட்ஸ் என தொடர்ச்சியாக இந்த வலைச்சர ஒரு வார ஆசிரியர் பதவி என ஒரு அழகிய சம்பவங்கள் சரங்களாகி போகின்றன என் வலையுலக வாழ்வில்.. ஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும் நன்றிகள்..

சரி விடயத்துக்கு வருவோம்..
 சீனா ஐயாவின் அறிவித்தலுக்கு அமைய எனது முதல் பதிவாக என்னுடைய பிளாக்கினை அறிமுக படுத்துகின்றேன். (ஹி.. ஹி.. காரணம் என்னை யாரும் இதற்கு முதல் இந்த இடத்தில அறிமுக படுத்தவில்லை. ஆகவே நானாகவே என்னை அறிமுக படுத்தி கொள்கிறேன்)

ஹாரி பாட்டரும் சுயபுராணமும்


 
நள்ளிரவு நேரம் திடிரென தூக்கம் கலைய விழித்து கொண்டேன். நேற்று தான் ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் முக்கிய எக்ஸாம் எல்லாம் முடிந்தது. இதனால்  எனது புதிய நண்பன்  ரோன் உடன் 2 நாட்கள் தொடர்ச்சியான தூக்கம் இல்லாத படிப்பு.

"யப்பா சாமி முடியல டா.. எவன் தான் இந்த எக்ஸாம கண்டு பிடிச்சானோ.."

எக்ஸாம் தான் முடிஞ்சே ஒரு படம் பார்த்தா தான் ஜென்ம சாபத்த கழிக்கலாம் என்று சொல்லி அஞ்சு DVD எடுத்து வந்தன். அடிங் கொக்க மக்கா 2 DVD படங்கள் ஒரே கதை , ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ்.. நமக்கு படிப்புல லாஜிக் மண்டைல ஏறாடியும் படத்துல இல்லாட்டி டென்ஷன் ஆகிடுவேன்.. ஆமா..

 
சரி மூணாவதா ஒரு DVD செம படங்க A WALK TO REMEMBER என்று.. ஐயோ.. சூப்பருங்க.. ஒரு அழகான காதல் தாலாட்டுங்க.. அந்த படத்துல தூங்குனவன் தான்.. இப்ப தூக்கம் கலைஞ்சு எழும்பினன். சரி மிச்சம் இருக்கிற DVD ய போய் பார்க்கலாம் என்று போனன் அங்க இருந்தது டைட்டானிக்கும், TWILLIGHT உம்..

நைட்டுல இனி காதல் படம் பார்த்தா நான் இன்னும் டென்ஷன் ஆயிடுவன் என்ற சுய பயத்துல வீட்டுக்கு பின்னுக்கு இருக்குற கால எந்திரத்த பார்க்க போனன்.

 
சரி அதுல ஏறி  இன்னிக்கு யார பார்க்க போகலாம் என்று யோசிச்சுட்டு இருக்ககுல யாராவது உலக தலைவர்களை பார்க்க போவம் என்று நினைச்சன்.  உலக தலவரிங்க எல்லாரையும் பத்திரிகைகாரங்க பாத்துக்குவாங்க ஸோ நாம ஏதும் கட்டிடம் பார்க்கலாம் என்று நினைச்சன். (அட நீ என்ன கொத்தனாரா..) அப்ப இப்படி உள்ளே ஒரு குரல் கேட்டதால அந்த பிளானும் கான்சல் பண்ணிட்டு யாரும் நம்ம நடிகர்கள பார்க்கலாம் என்று நினைச்சன்.. ரஜினி, விஜய், அஜித் எல்லாருமே ஷூட்டிங்ல பிஸி.. ஸோ அவங்களும் வேணாம்.. கடைசி விஜய், அஜித் சண்டைய போய் FACEBOOKலயாவது பார்க்கலாம் என்று நினைச்சன்..

அசால்டா எடுக்க வேண்டிய முடிவ அரை மணி நேரமாகியும் எடுக்காததால கடுப்பான கால எந்திரம் என்னை அப்பிடியே அள்ளி தூக்கி கொண்டு தண்ட பாட்டுக்கே கொண்டு போனது.

பழைய காலத்துக்கு போகும் போது ஜன்னலால எட்டி பார்த்தன் நம்ம சே குவாரா மோட்டார் சைக்கிள்ல போய்கிட்டு இருந்தாரு.. அவருக்கு கைய காட்ட கைய தூக்கினன் அதுகிடையில இந்த நாசமாப்போன வண்டி 2 ஆம் உலக போருக்கே போய்ற்று.. வண்டி கொஞ்சம் மெதுவாகி இருந்தாலும் ஹிட்லர் போட்ட 2 குண்டுகள் எங்கள் வண்டியை பஞ்சர் ஆக்கி இருக்கும்.

அட என்னடா இது.. என்று கையை கொஞ்சம் விலக்கினேன் பக்கத்துல இருந்த டாவின்சி கோட் புத்தகம் தவறி விழுந்து எதோ சுவிட்ச்ல பட்டு மாயன் காலத்துக்கே போய்ட்டு..

இந்த ஆட்டமே சரி இல்ல.. நடக்குற சம்பவங்கள் எல்லாம் பார்த்தா நம்ம உசிருக்கு உத்தரவாதம் இல்ல.. நம்ம ஹாக்வார்ட்ஸ்கே போய்டலாம் என்று விசையை அழுத்தினேன் (என்னா தமிழு)..

எனக்கு நடந்த கொடுமை பாதி வழியிலே வண்டி பழுதாகி போனது. வெடித்து சிதறும் எலார்ம் ஒன் ஆகியது . இதற்குள் இருந்தால் சாவு கன்பர்ம் என்று இயந்திரத்தில் இருந்து பாய்ந்தேன்.


எங்கு இருக்கிறேன்..

எங்கு இருக்கிறேன்..

என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை..

முழுவதும் கல்லறைகள்..

ஒரு மனிதனும் இல்லை..

ஒரே ஒரு அறை..

மிகுதி எல்லாம் வெட்ட வெளி..

சூரியன் கூட அந்தகார பட்டு இருந்தது..

அந்த அறைக்குள் சென்று நிலத்தில் அமர்ந்தேன்..

எனக்குள் ஒரு உறுதி நான் தான் உலகத்தின் கடைசி மனிதன்..

கொஞ்சம் தலை சாய்த்து படுக்க எண்ணினேன்..

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது..


(புரிந்தவர்கள் ரசித்து இருப்பீர்கள்)


( குறிப்பு - மேலுள்ள எனது சில பதிவுகள் ஆங்கில இணையங்களில் இருந்து எடுத்து வெல்டிங், டிங்கரிங் பண்ண பட்டவைகள்  - HOLLYWOOD MISTAKES போன்றன)


Sunday, June 24, 2012

சென்று வருக நுண்மதி ; வருக ! வருக ! ஹாரிபாட்டர்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி நுண்மதி அவர்கள் தான் ஏற்ற பொறுப்பினை ஆர்வத்துடன் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு இருபத்தி இரண்டு பதிவர்களையும் சுய பதிவுகள் உள்ளிட்ட முப்பத்தி இரண்டு பதிவுகளையும் அறிமுகப்படுத்தி இது வரை தொண்ணூற்றி இரண்டு மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.

சகோதரி நுண்மதி அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைப்பதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் ஹாரிபாட்டர். இவர் பெயர் ஜோஷ் பென்ஸ். வயது 20. இலங்கை. இரு தனியார் கல்லூரிகளில் இளமானி பட்டங்களுக்கான பாடநெறியை பயின்று வருகின்றார். மற்றபடி வலையுலகத்தை பற்றி சொல்வது என்றால் எல்லாவற்றையும் ரசிப்பார். அதில் சிலதை ஏற்றுகொள்வார். அதில் தேவையானவற்றை பகிர்வார்.

ஹாரி பாட்டரை வருக வருக -அறிமுகங்களை அள்ளித் தருக என வரவேற்கிறேன்.

நல்வாழ்த்துகள் நுண்மதி

நல்வாழ்த்துகள் ஹாரி பாட்டர்

நட்புடன் சீனா


காதல் செய்வோம்...

எனக்குப் பிடித்த இரண்டே இரண்டு காதல் பதிவுகளுடன் விடைபெறுகிறேன்.

முதலாவது, திரு விஜயன் அவர்கள் எழுதிய பிரபஞ்சத்திலேயே சிறந்த கவிதை. காதல் சொட்டும் இவரது வலைக்குள் நுழைந்தால் காதலின் விருந்துண்ட ஒரு திருப்தி வந்து விடுகிறது. இவர் எழுதிய அதிசய ராகம் என்கிற பதிவும் எனக்கு மிகப் பிடித்த ஒன்று.

இரண்டாவதாய், என் உயிர் கவிதை என்கிற காதல் வழிக் கல்வி . இதற்குச் சொந்தக்காரர் திரு. சஞ்சய் அவர்கள். அ, ஆ,... ஔ என உயிரெழுத்துக்களில் உயிர் கவிதை சொல்லித் தருகிறார்.

இனிய நண்பர்களை அளித்த வலைச்சரத்திற்கும், வலைச்சர நண்பர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றிகளுடன்
-நுண்மதி.



தெரி(ளி)ந்து கொள்வோம் வாரீர்...

இன்று நான் அறிமுகப்படுத்தப்போகும் மூன்று பதிவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை ஆனால் பயன் தருபவை.

இரத்ததானம் செய்வது பற்றிப் பல ஐயப்பாடுகள் நமக்குள் விரவிக் கிடக்கின்றன. செய்யலாமா வேண்டாமா என்று யோசித்து, ஒரு அடி முன் வைத்தால் எங்கே இரத்த தானம் செய்வதென்ற கேள்வி நமக்கும் ஒரு அடி முன்னால் சென்று நிற்கும். தொண்டு நோக்கோடு இரத்த தானம் செய்வோம் என நம்மை அழைக்கிறார் திரு.அல்போன்ஸ் சேவியர்.

கட்டடம் கட்டுவதால், மண்வளம் குறைகிறதாம். மண்வளத்தைக் குறைத்துவிட்டு, இயற்கையை அழித்துவிட்டு நாமெல்லாம் எங்கே வாழ்வது? புதிதாய் பூமியொன்று கண்டறிய அப்படியொன்று இருப்பதாய் அறியப்படவிலையே. இருக்கிற பூமியில், மண்வளத்திற்கு ஊறு இல்லாமல் கட்டிடம் கட்டுவது எப்படி என இங்கே தெளிவிக்கிறார் திரு.அப்துல் ஜப்பார் ஆசிப் மீரான் அவர்கள்.


நம் காலடியில் என்ன இருக்கிறது? கொஞ்சம் மண்ணும் நிறையத் தண்ணீரும் என்றுதான் இன்றுவரை எண்ணியிருந்தேன். ஓரளவு மின்சாரமும் நம் காலடியில் இருக்கிறதாம். இந்த அறிவியல் தகவலை இங்கே தான் தெரிந்துகொண்டேன்.

 உங்களிடமிருந்து விடைபெறும் அடுத்த பதிவுடன் விரைவில் சந்திக்கிறேன்
- நுண்மதி.

கொஞ்சம் தமிழும், கொஞ்சும் விளக்கங்களும்...

தமிழும், இலக்கிய இலக்கணங்களும் எந்தவொரு தருணத்திலும் பிரிக்க இயலாதவை. தமிழ் இலக்கியங்களுக்காக வகுக்கப்பட்டவை இலக்கணங்கள். நாம் வழமையாக உரையாடுவது பேச்சுத் தமிழிலேயே. எது சரி எனத் தெரியாமல் நாம் பேசிக்கொண்டிருக்கும் தமிழை ஒரு புறம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறான ஆராய்ச்சியில் ஒன்று ( இந்த வம்புக்கு நான் வரலை, நீங்க ஒண்ணு அல்லது ஒன்னு என்று கூட சொல்லிக்கலாம்)  திரு. இராம.கி அவர்கள் வளவு தளத்தில் எழுதிய இடுகையான ஒண்ணா, ஒன்னா? . நாம் படித்தறிய வேண்டியதான இடுகைகளில் ஒன்று.

இரண்டாவதாய், திணை பற்றிய விளக்கத்தை முன்வைக்கிறார் திரு. அருள்மொழிவர்மன் அவர்கள். ஐந்து நிலம், ஐந்து ஒழுக்கம், ஐந்து திணைகள் இவற்றை இவரின் பார்வையில் நாம் காண்பது புரிந்து கொள்ள ஏதுவாகவே இருக்கிறது.

அடுத்ததாய் பகிரப்போவது தொல்காப்பியம் கூறும் அகத்திணை பற்றி. தலைவி, தலைவன் இவர்களை நாம் இனங்கண்டு கொள்வது எளிதே. நற்றாயையும் செவித்தாயையும் ஒன்று என்றே பலர் எண்ணிக்கொண்டுள்ளனர். இவர்கள் இருவரையும் வேறுபடுத்திக் காட்டி, தலைவியின் வாழ்வில் செவிலியின் பங்கு என்ன என்பதை தோழி ஜோஸ்பின் புனிதா அவர்கள் தமிழ் தொகுப்புகள் தளத்தில் உணர வைத்திருக்கிறார்.


நான்காமவர், திரு. ஜடாயு அவர்கள். பள்ளிக் காலத்தில் சீவக சிந்தாமணியைப் படிக்கும்போது இவருக்குத் தோன்றிய அதே எண்ணம் எனக்கும் தோன்றியதுண்டு. இவர் எழுதிய அமானுஷ்யமான காந்தர்வ இலக்கணம் கற்க இங்கே சொடுக்குங்கள்.

தித்திக்கும் தமிழ் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒல்காப்புகழ் பெற்ற தொல்காப்பியம் கூட தித்திக்கும் தொல்காப்பியமாய்  மாறி விடுகிறது, இவரின் எழுத்துக்களில். இதனோடு சேர்த்து தொன்மைத் தன்மையையும் விளக்கியிருக்கிறார் திரு.தமிழ்மாறன். படித்துப் பார்த்தால் விழிகள் சுவையுணர்கின்றன என்றால் அது மிகையாகாது.

அடுத்த பதிவில் அனைவரையும் சந்திக்கிறேன்.

இந்த நாள் இனிய நாளாகட்டும்.
நுண்மதி.

கவிதைக்கதம்பம்...

வலைச்சர நண்பர்களுக்கு
வணக்கம் சொல்லி
இன்றொரு கவிதைக் கதம்பம்
கொணர்ந்திருக்கிறேன்...

அம்மா என்றொரு தேவதைக்கு
பிரிய(யா)த் தோழி
அளித்த அன்புப் பரிசு...

நேற்றைய நள்ளிரவில்
அக்கடிகாரம் விதைத்த
சுந்தரமான வற்றாயிறுப்பு...

இருட்டைப் பேசவைக்கும்
உரந்தையின்
புகாரி...

திருடுவதற்கல்லாப்
பூக்கள் வளர்த்த
பிரபாகரன்...

ஞாபகத் தூறல்கள்
தெளிக்கும் சுஜாவின்
அழகுக் கவிதைகள்...

இவ்வாறாய் ஐந்துப் பூக்கள்
கொண்டு தொடுத்த
அழகுச் சரம்
உங்கள் பார்வைக்காய்...

- நுண்மதி.

Thursday, June 21, 2012

அறிவோம் அமானுஷ்யம்...

வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்...
சில விடயங்கள் நம் கண்முன் நிகழ்ந்து மறைந்தாலும் கூட, ஆச்சரியமூட்டுவதாகவே இருக்கும். இவை மனித அறிவுக்கோ, அல்லது விஞ்ஞானத்துக்கோ எட்டாதவை. தோண்டத் தோண்ட அதிசயக் கிணறுபோல் அகன்று கொண்டே செல்பவை. இந்த மாதிரி விடயங்களுக்குப் பொதுவாக காரணம் எதுவும் இருப்பதில்லை அல்லது அந்தக் காரணம் நமக்குப் புலப்படுவதில்லை. அமானுஷ்யங்கள் பற்றிய அனுமானங்கள் தான் உலவுகின்றனவே தவிர ஆதாரங்கள் மிகக்குறைவு.
அவ்வாறான அமானுஷ்யம் பற்றிய இரண்டு பதிவுகளை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்ளக் கொணர்ந்திருக்கிறேன்.
முதலாவதாய் திரு. என்.கணேசன் அவர்கள். பகுத்தறிவுக்கு எட்டாத, தான் படித்த அல்லது தெரிந்து கொண்ட விடயங்களை அதிசயம் ஆனால் உண்மை! என்ற இடுகையில் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். சுவாரசியமான அதே நேரத்தில் ஆச்சரியமூட்டும் பதிவு இது.
அடுத்ததாய் , திரு. ரமணன் அவர்களின் வலைத்தளத்தில் கண்டெடுத்த பூனை. இதுவொன்றும் சாதாரணப் பூனை அல்ல. அமானுஷ்யப் பூனை. ஒரு பூனைக்கு இருக்கும் அசாத்தியமான திறமையைப் பற்றிய பதிவு இது. இதுவும் ஆதாரங்களைக் கொண்டு திரட்டப்பட்ட பதிவே.
அடுத்த சில பதிவர்களுடன் அடுத்த முறை சந்திக்கிறேன்.
இந்த நாள் இனிய நாளாகட்டும்.
நுண்மதி.

Wednesday, June 20, 2012

பஞ்ச பூதங்களும் முக வடிவாகும்...

வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,

இன்றைய நமது அறிமுகமாக பஞ்ச பூதங்கள் போல் ஐவரைக்  கொணர்ந்திருக்கிறேன்.

முதலாவது வலைப் பதிவர் கவிதா அவர்கள். இவர் 2006 மார்ச் முதல் வலையுலகில் வலம் வருகிறார். இவர் எழுதிய கொலை செய்யப் போகிறேன் நான் ரசித்துப் படித்த பதிவு. மிகவும் சுவாரசியமாகவும் முடிவைக் கணிக்க முடியாதபடியும் இருந்தது.

இரண்டாமவர் பாச மலர் அவர்கள். இவர் எழுதிய நிச்சலனமற்ற பொழுதுகளில் என்கிற பதிவினைப் படிக்கும் போது புரியவில்லை எனினும், புரிந்தவுடன் ஆம் என அனைவரும் அங்கீகரிக்கும்படிக்கு இருந்தது.

மூன்றாவதாக, திரு.நேச மித்திரன் அவர்கள். பெண்ணாகப் பிறந்ததினாலோ என்னவோ, பெண்மையைப் போற்றினாலோ அல்லது பெண்மைக்கு ஆதரவாய்ப் பேசினாலோ மனம் அவர்களை நாடுகிறது. பெண்மை போற்றும் மத்தகம் இதோ.

அடுத்த வலையுலக நண்பர், சிவகுமாரன் அவர்கள். 'குடி'மகனைக் கணவனாகக் கொண்டால் நம் பெண்கள் வேண்டுமானால் அனுசரித்துப் போகலாம். ஆனால், இவரின் கவிதை நாயகி பாரதி கண்ட... இல்லையில்லை... இளங்கோ கண்ட புதுமைப்பெண். இவரின் புலம்பல் சிலம்பின் புலம்பலாய்.

ஐந்தாமவர், திரு. வை.கோபால கிருஷ்ணன் அவர்கள். இவ்வளவு நேரமும் எந்தப் பதிவைக் குறிப்பிடுவது எனத் தெரியாமல், அவரது பதிவிற்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். இவரது பதிவுகள் பலவற்றை ( நூற்றுக்கும் மேல் ) ஒரே இரவில் படித்து முடித்திருக்கிறேன்.

அடுத்த சில பதிவர்களுடன், அடுத்த முறை சந்திக்கிறேன்.

இன்றைய நாள் இனிய நாளாகட்டும்,
நுண்மதி.

Monday, June 18, 2012

முதல் அறிமுகம்

வலைச்சர ஆசிரியர் குழுவிற்கும்,  வலைச்சர நண்பர்களுக்கும் வணக்கம். என்ன படிக்கலாம் எனத் தேடி அலையும் வாசகர்களுக்கு இதைப் படித்தால் இனிக்கும் என அறிமுகம் செய்வது எவ்வளவு பெரிய விடயம். இவ்வாறு அழகுப்பணி ஆற்றிய ஆசிரியரிடையே பணியாற்ற எனக்கும் அழைப்பு அனுப்பிய சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

இங்கிருக்கும் பலருக்கும், வலைப் பூவிற்கும்கூட நான் புதியவள். என் முதல் அறிமுகமாய் என்னுடைய இடுகைகளைப் பற்றிச் சொன்னால் காதலையும், தாய்ப்பாசத்தையும் தவிர நான் எழுதியவை மிக மிகக் குறைவே. திரு. வை. கோபால கிருஷ்ணன் ஐயா அவர்கள் பல நேரங்களில் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி " உங்களுடைய அனுபவங்கள் பற்றியும், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என நிறைய எழுதுங்கள் " எனத் தெரிவிப்பதுண்டு. எனினும் என்னவோ காதலைப் பற்றியே வலம் வருகிறேன்.

என்னுடைய இடுகைகளைப் பற்றிய அறிமுகம் இதோ :

என்னால் எழுதப்பட்ட முதல் கவிதை காதலைப் பற்றியதே.

காதலனுக்கும் காதலிக்குமான உரையாடல் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் ஒன்று, இரண்டு என இப்போது மூன்று பகுதிகள் எழுதியிருக்கிறேன்.

அன்பெனும் விருந்து எப்படி இருக்கும் ஆதரவற்றவர்களின் பார்வையில் என்ற ஒரு கற்பனை.

மரத்தோடு நான் கொண்ட காதல் மண்ணியம் பேசுவோம் என்கிற இடுகையில்.

நீதிமன்றங்களின் மூலம் மணங்கள்தான் ரத்தாகிறதே தவிர மனங்கள் ரத்தாவதில்லை என உணர்த்தும் ஒரு இடுகை.

முதுமைக் காதல் முத்தானக் காதல் என நான் உணர்ந்தபோது எழுதிய இடுகை இது.

பழைமை போற்றும் ஒரு ஆண்மகனின் எதிர்பார்ப்பு எப்படி பூர்த்தியாகிறது என எழுதியதுதான் அண்மைய இடுகை.

எனக்குப் பிடித்த சில பதிவுகளையும், பதிவர்களையும் அறிமுகப்படுத்தும் அடுத்த இடுகையோடு அனைவரையும் சந்திக்கிறேன்.

இந்நாள் இனிய நாளாகட்டும்.
நுண்மதி.

Sunday, June 17, 2012

விடை பெறுக மயிலன் : பொறுப்பேற்றுக் கொள்க நுண்மதி

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் மருத்துவர் மயிலன், தான் ஏற்ற பொறுப்பினை ஆர்வத்துடனும் கடமை உணர்வுடனும் நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

பொதுவாக வலைச்சர ஆசிரியர்கள் தினந்தினம் பல பதிவர்களை அறிமுகப் படுத்துவார்கள். விதி முறைகளின் படி ஒன்றுக்கு மேற்பட்ட பதிவர்களை அறிமுகப் படுத்த வேண்டும். மரு.சி.மயிலனோ வித்தியாசமாக, ஒன்றுக்கு மேற்பட்டதென தினந்தினம் இரண்டு பதிவர்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். அறிமுகப் படுத்தப்பட்ட பதிவுகளோ சுய அறிமுகப் ப்திவுகள் உட்பட 65. பெறப்பட்ட மறுமொழிகளோ தற்போதைய நிலவரப்படி 207.

நண்பர் மரு.சி.மயிலன் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் வருகிறார் சகோதரி நுண்மதி அவர்கள். இவர் இயற்பெயர் திருமதி ராணி கிருஷ்ணன். பொறியியலில் ECE துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தகவல் தொழில் நுட்பத் துறையில் சென்னையில் பணிபுரிகிறார். படிப்பது, எழுதுவது, கைவேலைகள் செய்வது மற்றும் பயணம் செய்வதில் ஆர்வமுடையவர்.

சகோதரி நுண்மதி அவர்களை வருக வருக என வரவேற்று ஆசிரியப் பொறுப்பினை ஏற்றுக்கொள்க என வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் மரு.சி.மயிலன்

நல்வாழ்த்துகள் சகோதரி நுண்மதி

நட்புடன் சீனா

இதெல்லாம் என்ன பெருமையா?... கடம....


அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களே,


எப்படி ஒரு வாரம் ஓடியதென்று தெரியவில்லை...ஏழு பதிவுகள், பதிமூன்று பதிவர்கள் என்று எனக்கு நானே வரையறுத்துக்கொண்ட எல்லைக்குள்ளேயே லாவகமாக பயணித்து முடித்துவிட்டேன்...சீனா ஐயா, "பொறுப்பை ஏற்கிறீர்களா?" என்று மின்னஞ்சல் அனுப்பிய நாளிலேயே, எத்தனை பதிவு, யார் யாரெல்லாம் அறிமுகம் செய்ய வேண்டும், அவர்கள் தளத்தில் இருந்து என்னென்ன பதிவுகளை முன்நிறுத்தவேண்டும் அனைத்தையும் shortlist செய்துவிட்டேன்... இந்த ஏழு பதிவுகளுக்கான rough draftஉம் சென்ற வாரமே எழுதிவைத்தாகிவிட்டது...தினமும் கொஞ்சம் edit செய்தால் பிரசுரம்...


"தினமும் இரண்டுதானா?" என்று சீனா ஐயா முதல் நாளே வருத்தப்பட்டார்..முன்னவர்கள் போலவே நிறைய அறிமுகங்கள் செய்யுமாறும் அறிவுறுத்தினார்..தீர்க்கமாய் 'இதுதான்,இப்படிதான்' என்று முடிவு செய்து வந்ததால் மாற்றி கொள்ள இயலவில்லை..ஐயா அவர்கள் மன்னிக்கவும்.. இருந்தும் வலைச்சரத்தின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்ட ஆத்மதிருப்தி இருக்கிறது எனக்கு..அறிமுகம் செய்யப்பட்ட ஒவ்வொருவரும் அங்கீகரிக்க பட்டார்கள்..சும்மாவெல்லாம் சொல்லவில்லை...இன்று காலை அறிமுகம் செய்யப்பட்டவர்களைத் தவிர அனைவருமே குறைந்தது பத்து புதிய followerகளைப் பெற்றுள்ளார்கள்...இதைவிட எனக்கு என்ன பெரிய பேரானந்தம் இருக்கபோகிறது?


நண்பர் ஒருவர் இன்றைய என் வலைச்சர பதிவில் இவ்வாறாக கமெண்ட் போட்டிருந்தார்...


//இப்படித் தங்களுக்குப் பழக்கமான வலகளை மட்டும் அறிமுகப் படுத்துவதானால் பிரிவு பிரிவாக, குழு குழுவாகத்தான் வலையுலகம் இருக்கும். இது என் கருத்து//


அதற்கு அங்கே பதில் எழுதியிருந்தாலும், அதே ஐயம் மற்றவர் சிலருக்கும் இருக்குமாயின்...அந்த பதிலை இங்கேயும் எழுதுகிறேன்...


//எனக்கு பழக்கமான வலைகளை மட்டும்தான் அறிமுகபடுத்தி இருக்கிறேன் என்று குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்.. பதிவுலக பிரிவினைக்கு இது வித்து என்றும் கூறியுள்ளீர்கள்.. இது என்ன வேடிக்கை..? எனக்கு தெரிந்தவர்களைதான் நான் அறிமுகபடுத்த முடியும்...கிட்டத்தட்ட ஒரு வருடமாக நான் படித்ததை,இரசித்ததை,வியந்ததைதான் இங்கே அறிமுகம் செய்துள்ளேன்.. ஓரிரண்டு பதிவுகளைத் தவிர எல்லாமே நான் ஏற்கனவே வாசித்தவை..அவர்கள் தளத்தில் அவற்றைத் தேடி எடுப்பதில் தான் எனக்கு சிரமம் இருந்தது...அவ்வாறாக அனைத்தும் மனதில் அறையப்பட்ட பதிவுகள்..வலைச்சரத்தில் ஆசிரியராய் இருக்கும் காரணத்திற்கு, ஆங்கங்கே நுனிப்புல் மேய்ந்து வந்தெல்லாம் என்னால் அறிமுகம் செய்ய முடியாது..தவிர, இது குழுவிற்குள் முடியும் கூத்து என்று எப்படி சொல்ல முடியும்..? நானே இங்கே அறிமுகம்தான்..எனக்கு தெரிந்தவர்களை தெரியாதவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்..//


இந்த வாரம் வலைச்சரம் எனக்கும் ஒரு சில நல்ல அறிமுகங்களை காட்டி கொடுத்துள்ளது...பின்னூட்டங்களில் இருந்து...குறிப்பாக ஜீ, வரலாற்று சுவடுகள், தென்றல்-சசிகலா, அவர்களின் சில பதிவுகள் வாசித்தேன்..நல்லா இருந்தது... பின்தொடரவும் ஆரம்பித்துள்ளேன்...இன்னும் சிலரது வலைத்தளங்களை புக்மார்க் செய்துவைத்துள்ளேன்..வாசிக்கணும்...


குழுமம் தாண்டிய அறிமுகங்கள், புது நண்பர்கள் என்று என்னவெல்லாம் setpoint ஆக வைத்து உள்ளே வந்தேனோ..அத்தனையும் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் வெளியேறுகிறேன்.. பதிவர்கள் அனைவருக்கும் அவ்வபோது சில breakpoint கிடைக்கும்...அதிலிருந்து ஒரு புது உத்வேகம் பெறப்படும்.. எனக்கும் அப்படியான நிகழ்வுகள் இருந்தன...

  • பிலாசபி பிரபாகரன் என் தளத்தில் முதல் பதிவுலக நண்பராய் இணைந்தது..
  • 2011 ஆண்டு இறுதியில் ராஜபாட்டை-ராஜா சார் ஒரு தொடர் பதிவு எழுத அழைத்தது
  • நிரூபனின் நாற்று தளத்தில் அம்பலத்தார் செய்து வைத்த அறிமுகம்/விமர்சனம்
  • என் விகடனில் எனது வலைத்தளம் பிரசுரமானது
  • இந்த வரிசையில் வந்துள்ள இப்போதைய வலைச்சர ஆசிரியர் பணி...

இப்படி ஒவ்வொன்றும் அப்போதைக்கான ஒரு தூண்டுகோலாய் அமைந்தது...அதே போலத்தான் நான் அறிமுகபடுத்தியிருக்கும் பதிவர்களுக்கு இந்த அறிமுகம் அப்படியான ஒரு breakpoint ஆக இருக்கவேண்டுமென விரும்பினேன்...இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பொறுப்பளித்த சீனா ஐயாவிற்கும், தமிழ்வாசிக்கும் மற்றும் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து விடைபெறுகிறேன்..






ஒரு சுகமான அனுபவம்...அதனால் இங்கே ஒரு பெருமூச்சு...


என்றும் நன்றியுடன்...சி.மயிலன்




இது என் மண்ணுடா..மண்ணு...

அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களே...

இன்று வலைச்சரத்தில் பணிநிறைவு நாள்...so சாயுங்காலம் ஒரு செண்டிமென்ட் பதிவு இருக்குங்குற முன்னறிவிப்போடு என் கடைசி இரு அறிமுகங்களை இங்கே நிறுத்துகிறேன்...கவனிக்கப்படவேண்டிய மேலும் இருவர்...

வலையுலகில் அரசியல் சினிமா என்ற கவர்சிகளுக்கு மத்தியில் கவனிக்கபடாமலோ மறக்கப்பட்டோ விடுவது நம் மண்ணின் பெருமை,வீரம்,அழகு,சோகம்... வெகு சிலரே அவற்றை அவ்வபோது நேர்த்தியாய் பதிவு செய்கிறார்கள்.. குறிப்பாக நண்பன் "கோகுல் மனதில்" கோகுல் பொங்கல் சமயங்களில் எழுதியிருந்த அந்த கிராமத்து பதிவுகள் என் ஆல்டைம் ஃபேவரைட்..காரணம் என் பால்யவயது பொங்கல் நினைவுகளை அது அப்படியே மீட்டெடுத்தது...

அவரவர் ஊர், வாழ்ந்த நிலை, சோகம் போன்ற பதிவுகளை பிரதான படுத்தும் இருவர்தான் இன்றைய அறிமுகங்கள்...அதோடுமட்டும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வில்லை...இன்னமும் நிறைய இருக்கிறது...



கடைசி நாளும் அதுவுமாக நிறைய பேசாமல் வேலையை கவனிக்கிறேன்...

அறிமுகம் # 12

பதிவர்: எஸ்தர் சபி (என் இதயம் பேசுகிறது)
இணைப்பு: http://petoli.blogspot.in/ 

"டீனேஜ்ஜின் கடைசியில் இருக்கும் ஒருவளின் தளமா?" இது என்று நான் வியப்பதுண்டு.. ஃபிரான்சில் வரலாறு மற்றும் பாப் இசை பற்றி படித்துக்கொண்டிருக்கும் இலங்கையை சேர்ந்தவள் எஸ்தர்.. இலங்கை, போர், வன்னி மக்கள், ஆமைக்கறி..என தன் மண்ணைப் பற்றி அதிகம் எழுதும் இடம் குறிப்பிடத்தக்கது...

இலங்கை தமிழர் பற்றிய வரலாறு எதுவுமே தெரியாமல் ஈழம் பற்றி ஏதேதோ பிதற்றும் இந்திய தமிழர்கள் பலர் அதனைப் பற்றி அறிய ஏதுவாய்,நண்பரொருவர் கொடுத்த ஒரு சி.டி யின் காட்சிகளைக் கொண்டு ஒரு பதிவு எழுதி வருகிறேன்.. விரைவில் பிரசுரிக்க முயற்சிக்கிறேன்..மரித்து பிழைத்தவள்...எஸ்தரின் தொடர் இடுகை இது..தன்னுடைய போர்கால அனுபவங்களின் தொகுப்பை எழுதிக்கொண்டிருக்கிறாள்...முக்கியமாய் இந்த குறிப்பிட்ட இடுகையில் அவளுடைய மூன்று வயதில் நடந்த ஒரு பகுதியை அம்மாவின் உதவியுடன் எழுதியிருப்பாள்...இரணமான பதிவு...

தமிழ் பெயர் இருந்தாலா தமிழ் வளர்க்க முடியும்?..ஒரு அசத்தல் கட்டுரை..."ஜி"ல்லுனு ஒரு காதலை "சி"ல்லுனு ஒரு காதலாக மாற்றிய தமிழீயவாதிகள் கவனத்திற்கு கொடுக்கவேண்டிய பதிவு..

கவிதைகளும் எழுதுவார்...ரொம்பவும் நேர்த்தியான கவிநடையெல்லாம் இருக்காது...ஆனாலும் கருப்பொருள் எல்லாம் செறிவாய் இருக்கும்..மிக முக்கியமா பூவாய் இருந்தோம் புலியானோம்..எனும் பதிவு..புலிகளைப் பொறுத்தவரை பலருக்கு பல மாதிரியான கருத்துக்கள் இருக்கும்.. எவராயினும் இந்த பதிவில் உள்ள வலியை மறுக்கமுடியாது..
இயற்கை மருத்துவம்..பிரியாணியில் ஏலக்காயை பார்த்தாலே கடுப்பாகும் நம்மில் பலருக்கு ஏலக்காய் பற்றிய மருத்துவ குறிப்பு பதிவு இது.. என்னாதான் மருந்தா இருந்தாலும் நிச்சயம் என்னால முடியாது.. நீங்க வேணும்னா முயற்சி பண்ணி பாருங்க...

சினிமா இடுகைகளும் எழுதுகிறார்..பெண்ணியம், திருநங்கைகள்,நாக இரத்தின ஆராய்ச்சி என்று பெரிய ரவுண்டு வரும் எஸ்தர் சபியின் வலைத்தளம் இதோ உங்கள் வருகைக்கு..

அறிமுகம் # 13

பதிவர்: அரசன் (கரைசேரா அலை)
இணைப்பு: http://karaiseraaalai.blogspot.in/

இவரின் தளத்திற்கு சென்று முதலில் இவரது சுயஅறிமுகத்தை வாசித்து பார்த்தாலே புரியும்..இவருக்கும் இவரின் ஊருக்குமான பற்றுக்கோடு..சென்னையில் பணியிலிருக்கிறார்..எப்போதெல்லாம் சொந்த ஊருக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் தவறாமல் வந்துவிடும் ஒரு மண்வாசனை பதிவு..

கிராமத்து அழகு...இந்த தொடர்தான் இவரது தளத்தின் ஸ்பெஷாலிடி..ஊரில் இருக்கும் கள்ளி செடியில் இருந்து தெருநாய் வரை ஒன்றுவிடாமல் பதிவேற்றிவிடுவார்..ஏதோ அவரது ஊருக்குள்ளே சென்று வந்ததை போல தோன்றும் நமக்கு...அவ்வபோது ஊரில் படித்து நல்ல மார்க் வாங்கும் வாண்டுகளையும் கெளரவிப்பார்...

அதேபோல நகரத்தின் இயந்திர வாழ்வில் நாம் தொலைத்துவிட்ட கிராமத்து அற்புதங்களை வரலாறாகும் வாழ்வு..எனும் பதிவில் ஒரு கிராமிய கவிதையாய் சொல்லியிருக்கிறார்.. ஏற்கனவே மயிலிறகிலும் இதை நான் பகிர்ந்திருந்தேன்..

நுட்ப வளர்ச்சி..எதற்கெடுத்தாலும் வினைல் பேனர் வைக்கும் கலாசாரத்தை விவாதிக்கும் ஒரு குறுங்கட்டுரை..மனிதர் ரொம்ப நொந்து போயிருப்பார் போல...என் பங்கிற்கு நான் இதுவரை வைத்த பேனர்களை காண இங்கே சொடுக்கவும்...

சரி சார் ரொம்ப சீரியசான ஆசாமி போல...அப்டின்னு யாரும் இவர நல்லவர்ர்ன்னு நெனச்சுடாதிங்க...காதல் கவிதைகள் எல்லாம் சும்மா அள்ளிவிடுவார்...நான் மிகவும் சொக்கி போன கவிதை அப்படியே உன்னையும்...வாசிச்சு பாருங்க...

ஹ்ம்ம்.. சென்று பாருங்கள்...

இப்படியாக நிறைவடைகிறது என் இன்றைய/ இந்த வாரத்திற்கான அறிமுகங்கள்....இன்னதென்று இனம் பிரித்து சொல்ல முடியாத எத்தனையோ சிறப்பம்சங்கள் உள்ள பதிவர்களை, அவர்களை பற்றி இதுவரை அறியாதிருந்த நண்பர்களுக்கு அறிமுகம் செய்திட்ட திருப்தியுடன் இங்கே நிறுத்துகிறேன்...

மிக்க நன்றி நண்பர்களே..

மாலை சந்திப்போம்...

என்றும் நன்றியுடன்...சி.மயிலன்

Saturday, June 16, 2012

சின்னஞ்சிறுசுக...so நல்லா கவனிங்க...


அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களே

"காலைல ஏதும் பதிவ காணுமே.. பயபுள்ள abscond ஆயிட்டானா?", என்று சீனா ஐயா தொலைபேசியேவிட்டார்... ஒன்றரை நாள் தொடர் பணி...அதனால் கொஞ்சம் தாமதம்.. நேற்றைய இருவரை வாசித்திருப்பீர்கள்.. நம்பிக்கையுடன் அடுத்த இருவரை அறிமுகம் செய்கிறேன்..சொல்லப்போனால், இன்றையவர்களை அறிமுகம் செய்வது என் கடமையும்கூட..


காரணம் அவர்கள் பதிவுலகில் பாதம் பதிக்க நேரடியாகவோ, மறைமுகமாகவோ நானும் ஓர் காரணம்.. இருவரும் என் கல்லூரி இளையவர்கள்.. ஒருவர் அரசியல்,ஈழம்,போராட்டம்,சினிமா என ஆல் இன் ஆல் அழகுராஜா..இன்னொருவர் கவிதாயினி...இந்த துறையில் இருந்துகொண்டு எழுத்திற்கு நேரம் ஒதுக்கும் கடினத்தை நான் உணர்ந்தவன்..அதையும் மீறிய தொடர் எழுத்துக்களான நன்றிகள் நண்பர்களின் உந்துதலுக்கே சமர்ப்பணம்.. ஒரு வேளை கொஞ்சம் கவனிக்கபடாமல் போயிருந்தால் ஒரு முப்பது பதிவுகளுடன் நான் விலகியிருக்கலாம்...("நாங்க தப்பிச்சிருப்போம்" என்ற உங்களின் mind voice நான் catch பண்ணிட்டேன்..)

இவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்ற என் சிறிய ஆசைக்கான வித்துதான் இன்றைய இவர்களின் வலைச்சர அறிமுகம்..

அறிமுகம் # 10
                                                                                                                                                                                                                                    
பதிவர்: மு.சுந்தரபாண்டியன் (ஆழ்கடல்)
இணைப்பு: http://aazhkadal.blogspot.in/

வலைத்தளம் ஆரம்பித்திருக்கிறார் என்று தெரிந்ததும் ஈழம் சார்ந்த பதிவுகள்தான் நிறைய எழுதுவார் என்று எதிர்பார்த்தேன்..சார் அப்படி ஒரு தமிழ் வெறியர்..ஆனால் அதை தாண்டி அரசியல், சமுதாயம், கதை, கவிதை என நீண்டு சினிமா வரை எல்லாமும் எழுதி வருகிறார்.. ஆரம்பங்களில், வார்த்தை கத்தரிப்பு தேவையோ என்று அவ்வபோது தோன்றியது...கொஞ்சம் கொஞ்சமாய் அதுவும் சரியானது..

2011க்கான அரசியல் விருதுகள்...ஒரு அட்டகாச பதிவு...கொஞ்சம் விகடன் விருதுகள் சாயல்தான்..ஆனால் கும்மியடித்திருப்பார்...நிச்சயம் வாசிக்க வேண்டிய நகைச்சுவை தொகுப்பு இது..

அரைகுறை..எனும் கவிதையில் ஒரு கட்டுரையில் சொல்ல வேண்டிய செய்தியை சுருங்க சொல்லியிருக்கும் விதம் அட்டகாசம்..அதுக்கு உபயோக படுத்தபட்டிருக்கும் ஸ்ருதிஹாசன் ஸ்டில் ஜிவ்வ்வ்...

அரசியல் எதிர்காலம்..கட்டுரையில் திமுக அதிமுக விற்கு உதிர்க்கும் அரசியல் ஆரூடம் அரசியல் கட்டுரை விரும்போவுருக்கு நிச்சயம் தேவையானதைக் கொடுக்கும்..

சென்னையில் முதன்முதலில் உலாவரும் ஒரு வெளியூரானின் பார்வையில் எழுதபட்டிருக்கும் வணக்கம் வாழ வைக்கும் சென்னை..சென்னைவாசிகளுக்கு விநோதமாய் தோன்றும்.. ஆனால் தான் பார்த்ததை உணர்ந்ததை அப்படியே உரைத்திருக்கும் இந்த கட்டுரையும் இவருக்கான அடையாளம்தான்...

சமீபத்தில் எழுவதை நிறுத்திஇருக்கிறார்...உங்களின் சிலரது அவர் வலைதளதிற்கான பிரவேசம் அவரை மீண்டும் எழுத வைக்கலாம்...தொடருங்கள்.. தொடர செய்யுங்கள்...:)

அறிமுகம் #11

பதிவர்: திவ்யா @ தேன்மொழி (தேன்சிட்டு)

கிட்டத்தட்ட ஆறுமாத காலம் மயிலிறகில் வாசகியாய் மட்டும் இருந்து தன்னுடைய கவன ஈர்ப்பு பின்னூட்டங்களின் மூலம் கொஞ்சம் பலரைக் கவர்ந்த இவர் யார் என்ற அடையாளம் தெரிய எனக்கு மூன்று மாதம் ஆனது.. சிம்புவின் அடுத்த படத்திற்கு அந்த பெயரை வைக்கவில்லை என்றால் இவரை "வாலு" என்று குறிப்பிட்டிருப்பேன்..

முகநூலில் ஆங்காங்கே கவிதை வரைந்த இவரை எப்படியோ பதிவுலகில் சேர்த்துவிட்டாச்சு...இந்த வலைச்சர மேடையை பயன்படுத்தி அவளுக்கு ஒரு அறிமுகத்தையும் அளித்துவிடுகிறேன்...ஒன்லி கவிதை.. மற்ற விவாதங்களும்,கட்டுரைகளும் எழுதும் ஆளுமை இவரது எழுத்தில் இருந்தும் இதுவரை அது நடக்காதது ஏமாற்றமே..

தன்னுடைய அப்பா பணி நிறைவு பெரும் நாளில் இவள் எழுதியிருந்த என்ன தவம் செய்தேன்..என்னுடைய ஃபேவரைட்..காரணம் என் அப்பாவும் மொழியாசிரியர்..சரியாக ஆங்கிலம்..எனவே பெரும்பாலான வரிகளில் என்னை இணைத்துக்கொள்ள முடிந்தது..

எனக்கும் சற்று நேரம் ஒதுக்கு..யதார்த்தம் சொல்லும் ஒரு மென்கவிதை..அழகை மட்டும் ஆராதிக்கும் நம்மை போன்றவர்களுக்கு சிறுசு எழுதியிருக்கும் ஒரு பஞ்ச் கவிதை இது...

அவளால் முடிந்தது..ஆர்ப்பாட்டமில்லாமல் எளிமையான வார்த்தைகளில் அழகாய் புனையப்பட்ட ஒரு நிதர்சனம் இந்த வரிகள்..ஏற்கனவே நான் மயிலிறகிலும், விச்சு அவர்கள் வலைச்சரத்திலும் பகிர்ந்திருந்த கவிதை இது.. இன்னைக்கு மிஸ் பண்ணிடாதிங்க...

என் நண்பர்கள் என்பதனால் மட்டும் இவர்களை நான் பரிந்துரைக்கவில்லை.. பெரும்பான்மையானோர் எதிர்பார்ப்பவை இவர்கள் தளத்தில் இருக்கிறது...நம்பி தொடருங்கள்...இருவருமே நிச்சயம் நல்ல பதிவுகளை தருவார்கள் என்று அவர்கள் சார்பில் நான் உத்திரவாதம் தருகிறேன்..:)

ரெண்டே ரெண்டு...நாளை பார்ப்போம்...

நன்றியுடன்...சி.மயிலன்






Friday, June 15, 2012

சாம்பாரும்,மட்டன் சுக்காவும்...அப்புடியே கொஞ்சம் ஊறுகா...


அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களே,

"என்னப்பா நீ...? சுஜாதான்னு ஆரம்பிச்சே...நேத்து பாரதிக்கு போயிட்டே?இன்னிக்கு யாரு வள்ளுவரா?" என்ற உங்கள் குரல் கேட்கிறது.. அப்படியெல்லாம் இல்லை.. நான் ஏதோ பெரிய இலக்கிய அப்பாட்டக்கரும் இல்லை...இவர்களை முன் நிறுத்துவதின் நோக்கம் ப்ளாகிங் உலகத்தில் இவையும் நிறைய நண்பர்களால் வாசிக்கப்படவேண்டும் என்ற ஆசை..அவ்வளவே...

கமர்ஷியல் எழுத்தாளர்கள்..இந்த வார்த்தை பிரயோகம் சரியா? தெரியவில்லை.. பேரரசு போன்றோர் புண்ணியத்தில் அந்த வார்த்தையே கெட்டவார்தையாகி போய்விட்டது...எல்லாமே கிடைக்கும் பதிவுத்தளம் அல்லது 'பல்சுவை' என்றும் மாமூலாய் சொல்லலாம்...இவ்வாறான முயற்சி நிறைய பேர் செய்தாலும் மனதில் நிற்பவர்கள் வெகு சிலரே... என்னுடைய favourites பிலாசபி பிரபாகரன், வீடு சுரேஸ்குமார், ராஜன் லீக்ஸ், வீடு திரும்பல் மோகன்குமார்... என்றான லிஸ்ட் இங்கு அநேகமாக எல்லோரும் அறிந்த பிரபலங்கள்...



இதைத் தவிர நான் இரசிக்கும் இரு "பல்சுவை" (வேற வார்த்தையே கிடைக்கல..) பதிவர்களை இன்று அவர்களை அறியாத உங்களில் சிலருக்கு அறிமுகம் செய்கிறேன்..

அறிமுகம் # 8

பதிவர்: ரெவெரி (மெல்ல தமிழ் இனி வாழும்..)
இணைப்பு :http://reverienreality.blogspot.in/

மீசைக்காரனின் கூற்றை மாற்றிய தலைப்பே கவன ஈர்ப்பு.. அதுதான் அவரது வலைக்கு என்னை அழைத்து சென்றது.. என்னுடைய தளத்தை ஆரம்ப காலங்களில் இருந்து தொடரும் நண்பர்...என் அத்தனை மொக்கை கவிதைகளுக்குமான வாழ்நாள் சந்தாதாரர்.. சார் கல்யாணத்திற்கு பிறகு காதல் கவிதையெல்லாம் எழுதும் பலே கவிஞர், ஆங்கில பட விமர்சகர், கொஞ்சம் காரசாரமான பதிவுலக போராளி (கூடங்குளத்திற்கு சென்று அம்மக்களை சந்தித்து நேரடி ரிபோர்ட் எழுதினார்..) ...அப்புறம்,அரசியலும் பேசுவார்..(நடுவுல கொஞ்சம் ஓவரா பேசி,அதாவது உண்மைய பேசி,கபில் சிபல் புண்ணியத்தில் இவரது வலைத்தளம் முடக்கப்பட்டது தனிக்கதை...) விளையாட்டு பற்றியும் எழுதுவார்..இவர் நடால் இரசிகர் என்பது என் கடுப்பு.. சமீபத்தில் ஸ்பானிஷ் கிளாஸ்..வேறு எடுக்க ஆரம்பித்துள்ளார்.. நான் அங்கு வரும் டீச்சர்களை சைட் அடிப்பதோடு சரி..கிளாஸ் கவனிக்கவில்லை இதுவரை.. வழக்கம் போல பரீட்சைக்கு மொத்தமா படிச்சுக்கலாம்...

கதை அவ்வளவாக எழுதுவது இல்லை..ஆனால் ஒன்னே ஒன்னு 'நச்'சுன்னு எழுதினர் மூன்று நான்கு பத்திகளில்.. தலைப்பு என்ன தெரியுமா? பதிவுலகம்..வாசிச்சு பாருங்க..ரொம்ப சாதரணமா ஒரு உண்மைய சொல்லும்..

சாருவின் எக்சைல்-விமர்சனம்...இவர் இந்த பதிவு எழுதிய தினம் நான் அந்த நாவலை பாதிகூட வாசித்திருக்கவில்லை.. வாசித்து முடித்த பின்னாளில் தேடி சென்று இந்த பதிவினை படித்தேன்..மைனஸ்கள் அனைத்துடனும் ஒத்துபோனேன்.. பிளஸ் என்று அவர் சொல்லியிருக்கும் சிலவும் மைனஸ்களே..நல்ல விமர்சனம்.. வாசித்து பாருங்கள்..

கில்மா எதிர்பார்த்துவந்த பலருக்கு ஒரு ஷாக் விழிப்புணர்வு கொடுத்த பதிவு எனது மார்பகம்.. இந்த sequence எப்படி அவருக்குள் கருவுற்றது என்று சற்றுநேரம் வியந்துகொண்டிருந்தேன் வாசித்த நாளில்...

ஸ்பெக்ட்ரம்...பற்றி பதிவுலகமே குட்டிகரணம் அடித்த நாளில்..ஒரு ஏழெட்டு படங்கள் போட்டு கலாய்கதை சொன்ன பதிவு இவரது ஸ்டைல்..இதே போல "படம் பார்த்து கதை சொல்" என்ற தொகுப்பு கட்டுரையும் அவ்வபோது வெளிவரும் சுவாரஸ்யம்

இதுவரை அறியாதவர்கள் இனியும் தவறவிடாதீர்கள்..

அறிமுகம் # 9

பதிவர்: அனந்து (வாங்க பிளாக்கலாம்)
இணைப்பு http://pesalamblogalam.blogspot.in/

சாருக்கு comfort zone சினிமாதான்... விமர்சனம் நிறைய எழுதுவார்...நகையுணர்வுடன் எழுதி கலாய்க்காவிடினும் இரசிக்கும்படியான நேர்த்தியான விமர்சனம் எழுதுவார்..சுஜாதா,இளையராஜா,கமல் என்று கிளாசிக்ஸ் விரும்பும் இரசிகர்.. குறிஞ்சி மலர் போல எப்போதாவது இவர் எழுதும் கவிதைகள்,கதைகள் எல்லாமே ஆழமான வரிகளையும்,கருக்களையும் உள்ளடிக்கியவை..அரசியல்,விளையாட்டு, அவ்வபோது இலக்கியம் என சார் ஒரு ரவுண்டு வருவார்..

இவரும் எனக்கு இன்ட்லியில் அறிமுகமானவர்தான்...அன்று அங்கு கண்ட இணைப்பு வெறிநாய்-சிறுகதைக்கானது... படித்து முடித்ததும் follower ஆயிட்டேன்..அதனை தொடர்ந்து வந்த "மூட்டைப்பூச்சி" எனும் சிறுகதையும் நல்ல திருப்பத்துடன் எழுதப்பட்ட ஒன்று..

ரொம்ப சாதாரண வரிகளில்தான் கவிதை எழுதுவார்..ஆனா மனசுல நின்னுடும்..அதுதான் ரம்மியம்..உதாரணத்துக்கு நட்பிர்க்கினியவளே..ஆண் பெண் நட்பை நம்பாதவர்களுக்கு பிடிக்காது..தவிர்த்துவிடுங்கள்..

இசைஞானி வெறியர்.. சூன் 12 இசை பிறந்தநாள்..பதிவில் இளையராஜாவின் வாழ்க்கையையே படம்பிடித்துவிடுவார்..எனக்கு தெரிந்து இவரது நீளமான பதிவு இதுதான்..படிக்கும் போதே அதனை நான் உணர்ந்த வேளை,கடைசி வரியில் அதற்கு வைத்த விளக்கம் என்னை புன்னைகக்கவைத்தது...

அரசியல் கட்டுரைகள் நிறைய எழுதினாலும், கலைஞர், ஜெ, விஜயகாந்த், மன்மோகன் என்று யாரையும் கேலி செய்யாமல்,உள்ளதை உள்ளபடி எழுதுவது இவரது ஸ்டைல்.. compilation of facts போல இருப்பதால் அரசியல் செய்திகளில் சுவாரஸ்யம் மட்டும் தேடுபவர்களுக்கு இவரது கட்டுரைகள் ஒத்து வராது..

இணைப்புகளை சொடுக்கி வாசிச்சு பாருங்க.. நிச்சயம் புடிக்கும்..

இன்னும் நாலுபேர் தானா? ஹ்ம்ம்...யார் யார்ன்னு பாப்போம்...

நாளை வருகிறேன்..

என்றும் நன்றியுடன்..சி.மயிலன்