Monday, December 31, 2012

அறிமுகம் - ஜோதிஜி திருப்பூர்


எனக்கு சீனா அய்யா கடிதம் அனுப்பியதும் இரண்டு நிமிடம் வரிகளை படித்து முடித்து விட்டு யோசித்துக் கொண்டே இருந்தேன்.  ஏற்கனவே இதே வலைச்சரத்தில் நாம் ஆசிரியராக இருந்துள்ளோம். பலரும் நம்மை இதே வலைச்சரத்தில் அறிமுகமும் செய்துள்ளார்கள். மீண்டும் நாம் வருவதை விட வேறு எவரையாவது பரிந்துரைக்கலாமா? என்று யோசித்தபோது அப்போது வேறு சில நினைவுகளும் வந்தது. நான் பரிந்துரைத்தவர்கள் நேரமில்லை என்று அப்போது மறுத்து விட்டார்கள்.

சின்ன வயதில் முயல் ஆமை ஓட்டப்பந்தயம் கதை படித்து இருப்பீர்கள் தானே?

என் வலைதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டுரையை வெளியிட்டுக் கொண்டேயிருப்பேன். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு என்று மாற்றுவேன். திடீரென்று ஒரு மாதம் முழுக்க அந்த பக்கமே செல்வதில்லை. காரணம் தொழில், குடும்பம் என்ற இரண்டு தண்டவாளத்தில் மேல் ஓடினால் தான் இந்த எழுத்து என்ற பயணம் சுகமாக இருக்கும். தண்டவாளங்கள் சரியில்லை என்றால் வண்டி எப்போதும் கடமுடா தான்.

குறிப்பிட்ட சில பதிவுகளை தவிர்த்து மற்ற அத்தனை ஒவ்வொரு பதிவுகளும் 20 நாளைக்கு முன் திட்டமிடப்படுகின்றது 15 நாட்களுக்கு முன் எழுத்தாக மாறுகின்றது. அடுத்த 10 நாளில் அதை மற்நது விடுவேன். அதன் பிறகே சமயம் பார்த்து வெளியிடப்படுகின்றது. .பத்து நாளைக்கு முன்பாக என் எழுத்துப் பயணம் இருந்து கொண்டேயிருப்பதால் எந்த எழுத்துப் பயணம் இனிதாக இன்று வரையிலும் இருக்கின்றது.

இதே போல் தினந்தோறும் கிடைக்கும் ஒய்வு நேரத்தில் ஏதோவொன்றைப் பற்றி அறியத் தொடங்கும் போது அது குறித்த புரிதலுடன் என் பயணம் தொடங்குகின்றது. புரியாத விசயங்களுடன் சண்டை போட்டு அதனை எப்படி மற்றவர்களுக்கு புரிய வைக்கலாம் என்பதில் கவனம் செலுத்த நானும் இந்த சமயத்தில் பலவற்றையும் கற்றுக் கொள்ள முடிகின்றது. 

பத்திரிக்கைகள் கட்டுரையில் பக்கம் முக்கியம். அதை விட அவர்களின் கொள்கை முக்கியம். எனக்கோ வலையுலக வாசிப்பில் வந்த விமர்சனங்கள் முக்கியம். எவர் என் தளத்தில் படிக்கின்றார்கள். அவர்கள் விமர்சனம் எப்படி இருக்கின்றது என்பதை வைத்து என்னை நானே ஒவ்வொரு முறையும் மாற்றிக் கொண்டே வருகின்றேன்.  ஆனால் உண்மைகளை முடிந்த வரைக்கும் புடம் போட்டுப் பார்கின்றேன். முழுமையாக இல்லாவிட்டாலும் கூட என் அனுபவ அறிவுக்கு எட்டியவரைக்கும் முயற்சி செய்து கொண்டேயிருக்கின்றேன். என் குடும்ப, தொழில், எழுத்து வாழ்க்கையில் முயலாமை, இயலாமை என்ற வார்த்தைகளுக்கு இடமே இருந்ததில்லை.

தேடல் தான் நம்மை மனிதராக வைத்து இருக்கின்றது. 

உண்மையான மனிதராகவும் மாற்ற முயற்சிக்கின்றது.

சீனா அவர்களை முதன் முதலாக டீச்சர் துளசி கோபால் அவர்களின் மணிவிழா நிகழ்ச்சியில் சந்தித்தேன். உள்ளே நுழைந்த நான் முன்னால் அமர்ந்திருந்த அவர் இருந்த இருக்கைக்கு அருகே சென்று அமர்ந்தேன். என்னை அவருக்குத் தெரியாது. ஆனால் அவரை நன்றாக எனக்குத் தெரியும். என்னுடன் நண்பரும் வந்திருந்தார். 

நண்பரிடம் சீனா அவர்கள் காதில் கேட்கும்படி வலையுகில் நீங்கள் பார்த்தவரைக்கும் நேர்முறை எண்ணங்கள், அமைதியான ஆர்ப்பபாட்டம் இல்லாத நதி போல ஒரே நேர்கோட்டில் அடுத்தவருக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருந்து எவரையாவது பார்த்து இருக்கின்றீர்களா? என்று கேட்டு விட்டு அவர் தான் இவர் என்று சீனா அவர்களிடம் கைகுலுக்கி நான் தான் ஜோதிஜி என்றேன். ஒரு கணம் திகைத்து நெகிழ்ந்து விட்டார்.

அப்போது தான் என் முகம் அவருக்குத் தெரிந்தது.

பொறுமை, விடாமுயற்சி, ஆழ்கடல் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை என்றால் அது எப்படி இருக்கும் என்பதை சீனா அவர்களிடம் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவரின் வயதில் நாம் இப்படி ஆரோக்கியமாக இருக்க முடியுமா? என்று பலமுறை யோசித்துள்ளேன். 

அவரிடம் அவருக்குத் தெரியாமலேயே நான் நிறைய கற்றுக் கொண்டிருப்பதால் அவருக்கு கொடுக்க வேண்டிய பாக்கிகளை தீர்த்து விடும் பொருட்டு இந்த வாய்பை எடுத்துக் கொண்டுள்ளேன்.

இந்த வலைச்சரத்தில் அறிமுகமான, அறிமுகமாகப் போகும் பலருக்கும் என்னை அறிமுகம் செய்து கொள்வதை விட என்னை இந்த வலைச்சரத்தின் வாயிலாக அறிமுகம் செய்துவைத்த திரு. அப்பாத்துரை அவர்களின் வரிகளை இந்த இடத்தில் இணைத்து விட்டுச் செல்கின்றேன். 

கடந்த நான்கு வருடங்களாக வலைபதிவில் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு கிடைத்த பல அங்கீகாரத்தில் இந்த இடத்தில் இதைத் தவிர வேறு எதையும் சுட்டிக்காட்ட தெரியவில்லை. இந்த சமயத்தில் தேவியர் இல்லம் திருப்பூர் என்ற வலைபதிவிற்கு கோடை விடுமுறை. சீனா அவர்கள் கடிதம் அனுப்பிய நாள் முதல் எழுதி வைத்து விட்டேன்.  

இந்த வாரம் முழுக்க இங்கே இரவு நேரத்தில் மட்டுமே இங்கே வர முடியும். ஒவ்வொரு நாளும் என் பதிவில் உள்ள சிலவற்றை ஒவ்வொரு நாளும் தரும் எண்ணமும் உண்டு. என் வலைபதிவு அனுபவங்களையும் தினந்தோறும் எழுதி வைத்து விடுகின்றேன். தினந்தோறும் நான் அறிமுகம் செய்யப் போவது இரண்டு பதிவுகள் மட்டுமே. ஆனால் அதனை என் விமர்சனப் பார்வையில் வைக்கப் போகின்றேன். பஞ்சாயத்தை கூட்ட விரும்பவர்கள் திருப்பூரில் காந்தி நகரில் உள்ள காந்தி வஸ்திராலயம் அலுவலகத்தில் உள்ள ஆலமரத்தடிக்கு அருகே வந்து விடவும்.

உணர்ந்தவர்கள் பெறுவீர்களாக.

வலை என்றால் இணையம். அதென்ன பதிவுகள் என்றொரு வார்த்தை வருகின்றதே என்று யோசித்து இருக்கின்றீர்களா

ஒரு தகவல் நம் மனதில் ஆழ்மனத்தில் பதிவாக படிந்து போய் இருந்தால் அதை எந்த காலத்திலும் அழித்து விட முடியாது.  நவீன விஞ்ஞானம் இதை மனநல மருத்துவத்தில் வைத்து பிரித்து மேய்ந்து கொண்டிருக்கின்றது. நம் விருப்பங்களை, ஆசைகளை, எண்ணங்களை, நோக்கத்தினை நம்மால் எழுத்துப் பதிவுகளாக மாற்ற முடியும். 

காகிதம் எதிர்காலத்தில் அழிந்தாலும் இந்த வலைபதிவுகள் இன்னும் பல தலைமுறைகள் கழித்தும் பலரின் கண்களில் பட்டுக் கொண்டேயிருக்கும். இந்த அரிய வசதியை கண்டு பிடித்து தந்தவர்களுக்கும் இதை இன்று பரவலாக்கிய கூகுள் என்ற அமைப்பை உருவாக்கித்தந்தவர்களுக்கும், இந்த வலைபதிவுகளை அதன் பரிணாம வளர்ச்சியை தந்தவர்களுக்கும்முதலில் நாம் வணக்கத்தை வைத்து விடுவோம்.  

ஆனால் இந்த தமிழை உலகமெங்கும் கொண்டு சேர்ந்த ஈழத் தமிழர்களை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

வலைபதிவுகளில் யார் எழுதுகின்றார்கள்? யாருக்குப் போய்க் சேர்கின்றது? யாருக்கு முக்கியமானது? என்ன பலன்? எப்படி மாறும்?

1. அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாமல் பாதி நேரம் பயத்தோடு, பல நேரம் உழைக்க அக்கறையின்றி இருக்கும்  புத்திசாலிகளுக்கு .....

2. என் எழுத்தை அங்கீகரிக்க பத்திரிக்ககை உலகம் மறுக்கின்றது. நானே எனக்கு ராஜா. என் திறமையை இந்த உலகத்திற்கே கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்று நம்பி எழுதுபவர்களுக்கு...........

3. உண்மையான விசயங்களை பத்திரிக்கை உலகம் பொருட்படுத்துவதே இல்லை. அவரவர் சுயநலம் தான் முக்கியமாக இருக்கின்றது. போட்டு உடைத்து கிழித்து மேய்ந்து எழுத கற்றுக் கொண்டவர்களுக்கு.........

4. என் ரசனைகளுக்கு பத்திரிக்கைகள் தீனி போடுவதில்லை. ஒவ்வொருவர் அனுபவங்களையும் அவர்கள் எழுத்தின் மூலமாக நான் அதிகம் வாசிக்க விரும்புகின்றேன்..........

5. உலகம் முழுக்க பரவியுள்ள தமிழர்களைப் பற்றி நான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அறிந்து கொள்ள....

6. எனக்கு வயதாகி விட்டது. ஓய்வு பெற்று விட்டேன். பரபரப்பான உலகில் பேச பழக ஆட்கள் கிடைப்பதில்லை. நான் வாசிக்கும் புத்தகங்களையும் மீறி எனக்கு ஒரு ஆறுதல் வேண்டும் என்பவர்களுக்கு...

7. பதிவுகள் என்பதெல்லாம் ஒன்றுமில்லை.  எனக்கு எப்போதுமே ஜாலியோ ஜிம்கானாதான்.  நானும் நல்ல விசயங்களை தேடிப்போக மாட்டேன். தேடிவருபவர்களையும் முழு நேரமாக கலாய்த்துக் கொண்டிருப்பதே எனது முழு நேர தொழில் என்பவர்களுக்கு................

8. எனக்கு தினந்தோறும் அலுவலகம் முடியும் போது முடிந்த பிறகு ஒரு மணி நேரம் தான் கிடைக்கும். அந்த சமயத்தில் எவன் சொல்லும் அறிவுரையும் எனக்குத் தேவையில்லை.  நான் எப்போதுமே கும்மி ஆதரவாளன். மொக்கை சங்கத்தின் பொதுச் செயலாளர். அந்த சமயத்தில் தூள் கிளப்பிட்டு தூங்க போயிடுவேன் என்பவர்களுக்கு.....

9. பெற்ற அம்மா ஒரு பெண் என்ற போதிலும் உடன் வாழும் மனைவி, கூடப்பிறந்த சகோதரி, பெற்ற மகள்கள் இருந்த போதிலும் பெண்களை ரசிக்க, ரசித்ததை வார்த்தைகளில் கூச்சமின்றி எழுத அதை பீற்றிக் கொள்ள கூடவே ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு.....

10. ஆழமான கருத்துக்கள் அடங்கிய கட்டுரைகளைத் தேடுவேன். அற்புதமான தொழில் நுட்ப வசதிகளை அறிந்து கொள்ள விரும்புவேன். ரசனையான படங்களை பார்க்க விரும்புவேன். அரசியல், ஆன்மீகம், சமூகம் குறித்த அக்கறையை எழுத்துக்களின் மூலம் உள்வாங்க விரும்புகின்றேன் என்பவர்களுக்கு......

11. அலுவலகத்தில் வீட்டில் இணையம் வசதி படைத்தவர்களுக்கு .................. தமிழ்நாட்டில் யூபிஎஸ் வசதி பெறற புண்ணிய ஆத்மாக்களுக்கு...........

12. பொழைக்கின்ற பொழைப்பை பார்ப்பதை விட்டு விட்டு கம்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துகிட்டு கண்டதை பார்த்துகிட்டு இருக்கானே(ளே) என்று திட்டு வாங்கிக் கொண்டும் இந்த உலகில் பயணிக்க ஆசைப்படுவர்களுக்கு..................

13. தற்போது இணையத்தில் அரசாங்கத்திற்கு பிடிக்காத கருத்துக்களை(?) எழுதுபவர்களை அடக்க 66 ஏ என்ற சட்டம் தற்போதைய புனித தலைவியின் ஆட்சியில் குண்டா சட்டமாகவும் மாறியுள்ளது. அய்யோ நாம் எழுதினால் களி திங்க வைத்து விடுவார்களோ என்று மனதளவில் பயந்து கொண்டே வேடிக்கை பார்க்க மட்டும் நினைப்பவர்களுக்கு ......

14. யாருக்கு ஓட்டுப் போட்டால் நமக்கு வந்து போடுவார்கள். யாருக்கு பகிர்வுக்கு நன்றி எழுதி வைத்தால் நம் பதிவுக்கு வருவார்கள் என்ற பிழைப்புவாதிகளுக்கு................

எதிர்கால உலகம் இந்த வலையின் பின்னால் மட்டும் அணிவகுத்து நிற்கும் போது பலருக்கும் பலவிதமான வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவும்.

தகுதியிருப்பவர்கள் பிழைப்பீர்களாக.

அடுத்த வருடம் சந்திப்போம்.
ஜோதிஜி திருப்பூர்.
படங்கள் 4 தமிழ்மீடியா.காம்


Sunday, December 30, 2012

வேலூரில் இருந்து திருப்பூர்

உஷா அன்பரசு - வேலூர் -  ஆசிரியப் பொறுப்பினை ஜோதிஜி திருப்பூரிடம் ஒப்படைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற, வேலூரினைச் சார்ந்த உஷா அன்பரசு, தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் இட்ட பதிவுகள்                                    : 7
அறிமுகப் படுத்திய பதிவர்கள்               : 60
அறிமுகப் படுத்திய பதிவுகள்                  : 132
பெற்ற மறுமொழிகள்                                   : 391

உஷா அன்பரசினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் ஜோதிஜி திருப்பூர்.  இவர் ஏற்கனவே 18.07.2010ல் துவங்கிய வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்.  அன்று இவரைப் பற்றிய அறிமுகப் பதிவு இடப்பட்டிருக்கிறது. 

இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு பரிமானங்கள் மாறி இருந்தாலும் அவர் இன்றும் பதிவர்கள் வட்டத்தில அனைவராலும் அறியப்பட்டவர் - மதிக்கப் படுபவர்.  அவரை வருக வருக ! என்று வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் உஷா அன்பரசு வேலூர்

நல்வாழ்த்துகள் ஜோதிஜி திருப்பூர் 

நட்புடன் சீனா 

ஏழாம் வகுப்பு- ப்ரீ....!

ப்ரீ பீரியடு




அனைவர்க்கும் காலை வணக்கம்!

என்ன வகுப்பை காணோம் ...ன்னு பார்க்கிறீங்களா?  நாளைக்கு ஆசிரியர் வந்துட போறாரு. இன்னிக்கு ஒரு நாளாவது உங்களை ப்ரீயா அரட்டை அடிக்க விட்டுடலாம்னுதான்  வை.கோ ஐயா கிட்ட " ஐயா.. நாங்க இன்னிக்கு பூரா கதை பேசி சிரிச்சிட்டிருக்கோம் நீங்க சீனா ஐயா கிட்ட அடுத்த ஆசிரியர் யாருன்னு கேட்டுகிட்டு ஒரு அரை மணி நேரத்துக்கு  பேசிகிட்டே அந்த பக்கமா கூட்டிகிட்டு போயிடுங்க. அதுக்குள்ள கதையெல்லாம் முடிஞ்சி நல்லா புள்ளையா அமைதியா  பாடம் படிக்க ஆரம்பிச்சிடறோம்னு சொன்னேன். வை.கோ ஐயாவும் சரின்னு போனவர், அடுத்த பத்து செகண்டுல இரண்டு பேருமே திரும்பி வந்துட்டாங்க. சீனா ஐயா பெரிய மனசு பண்ணி " போங்க.. போங்க.. எப்படியோ இன்னிக்கு ஒரு நாள் விட்டுடறேன்.. புது வருஷம் வேற பொறக்க போகுது சந்தோஷமா கதை பேசிக்கங்க. நானும் இப்படி உட்கார்ந்து கேட்டுக்கிறேன். ஆனா உங்களை மாதிரியே எல்லாரும்   நாளைக்கு  இப்படி கேட்டுகிட்டு வரக்கூடாது. அதுக்கு இந்த ஸ்கூல் சட்டத்தில இடமில்ல... என்றார்.

அப்பாடா... ஒரு வழியா தலைமை ஆசிரியர் கண்டிஷனை தளர்த்திட்டார்.
சைலண்ட்ஸ்.... அதுக்குள்ள  இப்படி சத்தம் போட்டா எப்படி? என்ன இன்னிக்கு வகுப்பு  இப்படி நிரம்பி வழியுது? ஓ.. புரிஞ்சிடுச்சி... புரிஞ்சிடுச்சி...  அப்பாடா இந்த புள்ள தொல்லை தீர்ந்துடுச்சின்னு  வழியனுப்ப வந்த கூட்டம்தான்னு!  எப்படியோ புது வருஷத்தில நீங்க சந்தோஷமாயிருக்கனும். இன்னும் ஒரு நாள்தான் இருக்கு  நியூ இயர் பிறக்க அதனால சீரியஸா உங்களுக்கு பாடம் எதுவுமில்ல!  உங்களை அழகு படுத்தி பார்க்கனும்னு,இன்னிக்கு மொத்தம் நகைக்கடைங்களுக்கும் அழைச்சிட்டு போறேன்.....  எவ்வளவு வேணும்னாலும்  நகை (எடுத்து)க்கலாம்...!

இவங்க எல்லாம் பெரிய 'நகை' கடைக்கு சொந்தக்காரங்க...இந்த மொத்த ' நகை' களையும் அணிந்து அழகா சிரிங்க! அழகா இருங்க!!

1)  வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக எழுதுவது ஒரு வரம். பதிவுலகில் நகைச்சுவைக்கு ஒரு இலக்கணமா இருப்பவர் நம்ம வை.கோபால கிருஷ்ணன் ஐயா அவர்கள்.
 
உனக்கே உனக்காக [நகைச்சுவைக் கவிதை]

”பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?” பகுதி-1 / 2

‘எலி’ஸபத் டவர்ஸ் [பகுதி 1 / 8]

வாய்விட்டுச்சிரித்தால்

அமுதைப்பொழியும் நிலவே !
சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]

இவை ஒரு சாம்பிளுக்குதான்  வை.கோ சார் வலைப்பக்கம் போனிங்கன்னா தாராளமாய் சிரிக்க ஏராளமாய் கொட்டி கிடக்கு!


2)மின்னல் வரிகள் பால கணேஷ் என்று சொன்னாலே சரிதா நினைவுக்கு வந்திடுவாங்க. சரிதாவோட அவங்க பண்ற காமெடி இருக்கே விழுந்து விழுந்து சிரிக்கலாம். பார்த்துங்க அடி படாம சிரிங்க.

சரிதாவின் சங்கீதம்!
சரிதாவும், செம்மொழியும்
பொருட்காட்சியில் சரிதா!
சரிதாவோட மொத்த லூட்டியையும்  காண தவறாதீங்க!

3)சேட்டைக்காரன்

கொழுக்கட்டையும் செய்வாள் பத்தினி.

வீ.ஆர்.எஸ். வெங்கடசாமி

மாப்பிள்ளை வந்தார் ..... மாப்பிள்ளை வந்தார்

கடுக்கண் வருங்கால் நகுக


4) ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி

கோவில் இல்லா ஊரில்

ஜட்ஜ்மெண்ட் டே

டேய் சீனாப்பயலே


5)அப்பாவி தங்கமணி

வரும் ஆனால் வராது

டிட் யூ மிஸ் மீ [த்ங்கமணி ரங்கமணி சீரியல்ஸ்]

தக்குடு கல்யாண வைபோவமே

6) கற்றலும் கேட்டலும் “ராஜி”

நான் என்ன சாதுவா ? சாதா தானா

உதயம் தியேட்டரும் தேவர் மகனும்

7) ஆச்சி ஆச்சி

கொன்று குவித்திடுவோம் [நகைச்சுவைக் கவிதை]


8)அருணா செல்வம் கதம்ப வலையில்
“சோ“வ்வைத் தெரியுமா...? (நகைச்சுவை நிகழ்வு)


9)தமிழா...தமிழா..

 வாய் விட்டு சிரிங்க...

10) நிஜாமுதீன்

நகைச்சுவை; இரசித்தவை 13 
 எங்க ஊரு தேவதை! (4-ஆம் ஆண்டு துவக்கம்)


 இந்த ஒரு வாரம் உங்களோட வகுப்பில கலந்துகிட்டது  என் வாழ்க்கையில் என்றும்  மறக்க முடியாத அனுபவம். என் அப்பா பள்ளிக்கூட ஆசிரியர். எனக்கு பள்ளி ஆசிரியரா ஆகறதை விட பத்திரிக்கை ஆசிரியரா விருப்பமா இருந்துச்சி..எத்தனையோ கனவுகளை சுமந்தாலும் வாழ்க்கையின் எல்லைக்குள் சில கனவுகளையும் சுருக்கி கொண்டுதான் வாழ முடிகிறது என்னை போல் சில பெண்களால்..!  இருந்தாலும் வருத்தமில்லை. இந்த எல்லைக்குள்ளும் என் சின்ன கனவுகளையாவது வெளிப்படுத்தி எழுத்துலகில் எட்டி பார்த்துக்கொண்டிருக்கிறேன்!  வெறும் லட்சியத்தை மட்டுமே வாழ்க்கையாக நினைக்காமல்,  வாழ்க்கையோடு லட்சியத்திற்கும் சிந்திப்பதும் இன்னும் அருமை!

பத்திரிக்கை ஆசிரியர் அளவிற்கு நான் வளரவில்லை என்றாலும் வலைச்சர பக்க ஆசிரியராகவாவது  ஒரு வார காலத்திற்கு கிடைத்த இந்த வாய்ப்பு எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு!  இன்னும் நிறைய நல்லா பண்ணியிருக்கனும்னுதான் என் உள் மனசு சொன்னது... இருந்தாலும் அலுவலகம், குடும்பம் இரண்டுக்குமிடையே சமாளித்து  ஒரளவு ஆவது செய்ய முடிந்ததே  என்று சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். பிரபல பதிவர்கள் எல்லாருக்குமே நல்லா  தெரியும். ஆனா நல்லா எழுதர புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தனும்னுதான்  சில பதிவுகளை தேடிப்பிடித்தேன்.  நிறைய பிரபல பதிவர்களும், நல்ல பதிவுகளும் விடுபட்டிருக்கலாம்.. நேரமில்லாத காரணத்தினால். அவர்களெல்லாம் தவறாக எண்ண வேண்டாம்.

இந்த வகுப்பை விட்டு கிளம்பறது மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு.  நீங்க யாரும் என்னை மறக்க மாட்டிங்கன்னு  நம்பிக்கையோடு  விடை பெறுகிறேன் ! மிக்க நன்றி! அனைவர்க்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!
                                 ****************
வை.கோபால கிருஷ்ணன் ஐயா, அன்பின் சீனா ஐயா உங்களுக்கு என் பணிவான வணக்கங்களும் , நன்றியும்!
                                  ***************

நேத்து ஒரு சர்ப்ரைஸ்னு சொன்னேன் அல்லவா அதுக்கு வர்றேன்!

 
 ஒரு நாள் கூட லீவ் எடுக்காம தொடர்ந்து வகுப்புக்கு வந்து சிறப்பித்த இவங்களுக்கு
  PUNCTUALITY  AWARD

1) வை.கோபால கிருஷ்ணன்
2)பால கணேஷ்
3)லஷ்மி
4)ஆகாஷ்
 *****************
பின்னூட்டத்தில் போட்டி போட்டுக்கொண்டு பேசிய இவர்களுக்கு
சிறந்த விமர்சகர் அவார்டு

1) வை.கோபால கிருஷ்ணன்
2) ஜெயந்தி ரமணி

*******************
ஸ்பெஷல் அவார்டு
முரளிதரன்

( வலை உலகுக்கு என்னை அறிமுகம் செய்தவர் என் வலைப்பூவை முதலில் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தியவர்)

 வை.கோ ஐயா, அன்பின் சீனா ஐயா! அவர்களுக்கு மீண்டும் மிகப்பெரிய நன்றி


 
 விடை பெறுகிறேன்.....
எப்போதும் உங்கள் உள்ளங்களில்!  சந்திப்போம்!!

Saturday, December 29, 2012

வகுப்பு- ஆறாம் நாள்

குப்பு-6  பாடம்-5



அனைவர்க்கும் காலை வணக்கம்!



அந்தப் புகழ் பெற்ற எழுத்தாளரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று அந்த இளைஞன் வந்திருந்தான். வந்தவன் ரொம்ப நேரம் எதுவும் பேசாமல் மவுனமாக உட்கார்ந்திருந்தான். எழுத்தாளர் என்ன விஷயம் என்று வற்புறுத்திக் கேட்கவே, ""அய்யா! நான் உங்களிடம் யாசகம் கேட்டு வரவில்லை. உழைத்து முன்னேறவே விரும்புகிறேன். அதற்குத் தொழில் துவங்க கொஞ்சம் மூலதனம் தேவைப்படுகிறது. நீங்களோ புகழ் பெற்ற எழுத்தாளர். உங்கள் எழுத்தின் மூலம் நிறையச் சம்பாதித்தும் இருக்கிறீர்கள். கொஞ்சம் பணத்தைக் கடனாக எனக்குக் கொடுத்தால் அதன் மூலம் தொழில் செய்து உங்கள் கடனையும் அடைத்துவிடுவேன்'' என்றான்.
எழுத்தாளர் சிரித்தபடி, ""உழைத்து முன்னேற நினைக்கிறாய் என்பது மிகப்பெரிய விஷயம்தான். ஆனால் உனக்குக் கடன் தர வேண்டுமானால் ஏதாவது நீ அடமானம் வைத்தால்தான் அது முடியும். உன்னிடம் அடமானம் வைக்க என்ன இருக்கிறது?'' என்று கேட்டார்.
""அது இருந்தால் உங்களிடம் கடன் கேட்டே வந்திருக்க மாட்டேனே'' என்றான் அந்த இளைஞன்.
""சரி உன்னிடம் இருப்பதையே கேட்கிறேன். அதைக் கொடு. பணத்தைப் பெற்றுக்கொண்டு செல். உதாரணத்திற்கு உன் சுண்டு விரலைக் கொடு'' என்றார் எழுத்தாளர்.
""சுண்டு விரலா?'' என்று திகைத்தான் இளைஞன்.
""சரி. சுண்டு விரலைக் கொடுக்க இஷ்டப்படாவிட்டால் ஒரு கண்ணைக் கொடு'' என்றார் எழுத்தாளர்.
எழுத்தாளர் நம்மைக் கிண்டல் செய்கிறார். இவரிடம் பணம் பெயராது என்று எண்ணிய அந்த இளைஞன் கிளம்பினான்.
""தம்பி பொறு. உன் உறுப்புகளைப் பெற்றுக்கொண்டு உன்னை ஓர் ஊனமுள்ளவனாக ஆக்க வேண்டும் என்பது என் ஆசையில்லை. உனக்குப் புரிய வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிக் கேட்டேன். உன்னிடம் விலை மதிக்க முடியாத எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. அவைதான் உனக்கு மூலதனம்! அவற்றைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற நீ முயற்சிக்க வேண்டும். கண், காது, கை, கால், அறிவு என்று எத்தனையோ மூலதனம் உன்னிடமிருந்தும் அதன் அருமை தெரியாமல் பணம் என்ற மூலதனத்தைத் தேடி அலைகிறாய். நம் மூதாதையர்கள் அத்தனை வெற்றிகளையும் பணத்தைக் கொண்டு அடையவில்லை. அதை நீ புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் அந்த எழுத்தாளர்.
உண்மையான மூலதனம் எது என்று புரிந்துகொண்ட அந்த இளைஞன் பிரகாசமான முகத்துடன் அவருக்கு நன்றி கூறி விடை பெற்றான். அந்த எழுத்தாளர் புகழ்வாய்ந்த டால்ஸ்டாய்! 

                                                     *****
 நம் அனைவரிடம் சிந்தனை என்ற மூலதனம் இருக்கிறது. அதன் அருமையை உணர்ந்து நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களையே எழுத்தாக படைப்போம்.  நல்ல எழுத்துக்களை படைக்கும் போதும், படிக்கும் போதும் நல்ல சமுதாயம் உருவாகும்! நாமும் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
                                                     *****

இப்ப  சுவாரஸ்யமான பதிவுகளை பார்ப்போமா?

   1) என்.கணேசன்
ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளார். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் . நிலாச்சாரல் இணைய சஞ்சிகையில் நீ நான் தாமிரபரணி, மனிதரில் எத்தனை நிறங்கள்!,அமானுஷ்யன் என்ற மூன்று நாவல்கள் , யூத்ஃபுல் விகடனில் ”ஆழ்மனதின் அற்புத சக்திகள்” என்று பல படைப்புக்களை தந்துள்ளார்.

நாணயம்

சுடும் உண்மை; சுடாத அன்பு!


2) சிட்டுக்குருவி      விமலனின் இந்த சிறுகதை மறந்து போன கிராமத்து மண் வாசனையை நம்மிடம் வீசிவிட்டுத்தான் போகிறது.
வண்டிப்பைதா,,,,,

பூனையின் இலக்குஇலக்கு,,,,,,,,                                       

3) வீடு திரும்பல்  மோகன் குமார் அரசியல், சுற்றுப்புறம், நதிகள் உள்ளிட்ட பல்வேறு  சமூக  விஷயங்களை  பற்றி எழுதி வருபவர். 


4) சாமியின் மனஅலைகள் -ல்
கரை ஒதுங்கிய சில  பதிவுகள்
ஸ்ரீலட்சுமி தேவி பிரசன்னமானாள்

உங்களுக்குப் பேசத் தெரியுமா?

5) செயற்கையா ஓடிட்டிருக்கோம்.. கொஞ்சம் நின்னு இந்த இயற்கைய ரசிப்போமா? கல்பட்டார் பக்கங்கள்
இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (13) இருவாட்சி

6)சின்ன சின்ன சிதறல்கள்  அகிலாவின் இந்த பக்கங்கள் அருமை!
எனக்கு...

பெற்றோர்கள் படிக்க வேண்டிய இந்த செய்தியையும்...  நேற்றிரவு ஒரு திரௌபதி....


7) என் அப்பாதுரை
விபரீத சிறு கதையும் கனவு பலி...க்கும்
கவிதை மாயம்

8) வினவு   
சொல்லும் இந்த உண்மை சம்பவங்களை படிங்க
உண்மைச் சம்பவம் : மண்ணுள்ளிப் பாம்பிடம் மயக்கம் !

 கருணையா, கொலையா? வரமா, சாபமா? – உண்மைச் சம்பவம்!

9)குருவிகள்
கிறீச்சிட்ட கவிதை
கனவாகி.. கணிதமாகி.. கண்ணீரானது… என்ன..?!

 10) வல்வையூரான்

முகுந்தன் ராஜதுரையின்  ஹைக்கூ
ஹைக்கூக்கள் 5

சிறுகதை
இளநீர்.

11) கரந்தை ஜெயக்குமார்  

கணித மேதை ராமானுஜரை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய விரிவான
தகவல்கள் அனைத்து  அத்தியாயங்களையும்  நிச்சயம் படிக்க வேண்டிய பதிவு.

கணிதமேதை அத்தியாயம் 12


 
மீண்டும் நாளைய வகுப்பில் பார்ப்போம்!

Friday, December 28, 2012

வகுப்பு- ஐந்தாம் நாள்

வகுப்பு-5  பாடம்-4



அனைவர்க்கும் காலை வணக்கம்!

வகுப்புக்குள்ள நுழைஞ்சவுடனே பாடமா? நீங்க எதாவது கதை பேசிட்டு அப்புறமா பார்க்கலாமில்லன்னு நீங்க கேட்கிறது புரியுது. என்ன பண்றது தலைமை ஆசிரியர் வகுப்புல சும்மா கதை எல்லாம் பேச கூடாதுன்னு கண்டிஷன் போட்டுட்டாரு. அதனால கிளம்பறப்ப அவர்கிட்ட பனிஷ்மெண்ட் வாங்கினாலும் பரவாயில்லைன்னு கதை பேசலாம் சரியா...?

இப்ப  சுவாரஸ்யமான பதிவுகளை பார்ப்போமா?

1)  புலவர் ராமானுசம் ஐயா

சொல்லவே வேண்டாம். அனைவரும் அறிந்த மூத்த பதிவர்.
சமூக அவலங்களை சொல்லிய இந்த இரு பதிவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.

கற்சிலையும் கண்ணீரை வடிக்குமன்றோ –அட காமுகரே உணர்வீரா ? திருந்தலென்றோ

உண்ணுகின்ற உணவுதனை தந்தோ னின்றே – நஞ்சு உண்ணுகின்றான் சாவதற்கே கொடுமை யன்றே!


2) அவர்கள் உண்மை யில் மதுரை தமிழன் அவங்க பல்சுவை பதிவுகள் அட்டகாசமாயிருக்கும்! உலகம் இன்னும் ஏன் அழியலைன்னு இவர்  சொல்லியிருக்கற காரணம் என்னன்னா...
உலகம் ஏண்டா அழியலை.....

நட்புன்னா இப்படிதான் இருக்கனும்....
இப்படி ஒரு நட்பா?உறவா ?ஆண் பெண் இருவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு


3) சும்மா   தேனம்மை லஷ்மணன் அவர்களின் இந்த கவிதை மனதை கனக்க செய்தது.
கிளம்பவேண்டிய நேரம்

குண்டா இருக்கிறவங்களுக்கு...
அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்

4)தமிழ் ராஜாவின்  தமிழ்த்தொட்டில்  
கண்ணாடியின் கேள்வி

காதலிக்க பழகலாம் என்றேன்


5)  குறையொன்றுமில்லை   
லக்ஷ்மி அம்மா அவங்க சிறுகதைங்க நல்லா இருக்கு. ஒரு  நாள்  நான் என் குடும்பத்துடன் சரவண பவனில் சாப்பிட்டு கொண்டிருந்த போது அங்கே வந்த ஹோட்டல் சர்வரிடம் என் குட்டீஸ்  ஒரு கேள்வியை கேட்டது  . " அங்கிள் இது மாதிரி டேஸ்ட்டா சமைக்க எங்க மம்மிக்கு சொல்லி தர முடியுமா?ன்னு. அவ்வளவுதான் எங்க வீட்ல அவருக்கு ஓரே சிரிப்பு. ஆனா சர்வர் மட்டும் சிரிக்காம, " அப்படி எல்லாம் சொல்ல கூடாதும்மா.. அம்மா கையில் சாப்பிடறப்ப அது தண்ணி சாதமா இருந்தாலும் அந்த ருசிக்கு ஈடு இணை இந்த உலகத்துல எதுவுமில்ல.. நான் எங்கோ ஊரை விட்டு பிழைக்க தூர வந்திருக்கேன். அம்மா கையால சாப்பிட முடியலை என்று உருக்கமாக சொன்னார். இந்த கதையிலும்.....
ருசி


6)   பத்து பதிவாவது பகிரனும்னு படிக்க  ஒரு நாளெல்லாம் ஓடிவிடுகிறது. ஆனால்  செந்தில்குமார் 
சொல்கிற இந்த புத்தகத்தை படிக்க  ஆரம்பிச்சா...   
இந்த தகவலையும் தெரிஞ்சுக்கலாம் உலகின் மிகப்பெரிய புத்தகம்

7) இவள் இவள் பாரதியின்
மக்கள் மனதின் புலம்பலாக..
மறக்க முடியுமா?

விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரையில்...
கிளறிய குப்பையில் கிளம்பிய பூதம்!

8) சே.குமாரின்  மனசு  - க்குள் இருந்த கதையை..
விசாலம் அக்கா - அதீதத்தில்...

கவிதையை...
காதல் நெஞ்சம்

9) கடுகு தாளிப்பு         தாளித்து   கொட்டியதில் இந்த செய்தி
ஒரு மனிதர்:16000 புத்தகங்கள்!

10) தென்றல்  
சசிகலா எதை விருப்பமில்லை என்று சொல்கிறார்...
விருப்பமில்லை எனக்கு




மீண்டும் நாளைய வகுப்பில் பார்ப்போம்!

Wednesday, December 26, 2012

வகுப்பு- நான்காம் நாள்

வகுப்பு-4 பாடம்-3



அனைவர்க்கும் காலை வணக்கம்!

  நீங்க தனியா எதாவது க்ளாஸ் எடுத்து  எங்களை மொக்கை போடாதீங்கன்னு நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் நேரா விஷயத்துக்கு வந்துடறேன். ஆனாலும் வகுப்பு விட்டு கிளம்பறதுக்கு முன்னாடி பேசிவிட்டுதான் கிளம்புவேன்.


இப்ப  சுவாரஸ்யமான பதிவுகளை பார்ப்போமா?

1) கற்றலும் கேட்டலும் என்ன கத்துகிட்டாங்க... கேட்கலாம்னு சென்று கேட்டதில்... ராஜி நிறைய சொன்னாங்க.

கடிகார முள்ளில் பூவாய்.....

விஷுக்கனி


2)  மெல்லியல். (வீழ்வேனென்று நினைத்தாயோ!!! )
 
தினம் தொலைக்காட்சிகளில் விவசாயியின் தற்கொலை செய்தியாய் வந்து விட்டு போகிறது. மனம் வருந்திய உணர்வுகளை சொல்லியிருக்கிறார் ராபர்ட்

செத்துப் போ விவசாயியே ...
செத்துப் போ விவசாயியே 2

மனம் கவர்ந்த கவிதையும்
 குழலினிது யாழினிது!!!

பாச உணர்வுகளையும்
அக்காவை அதிகம் பிடித்த நாட்கள் "


3) தளிர்! எண்ணங்கள் இங்கு எழுத்தோவியமாகும்!  சுரேஷ் வரைந்த

ஹைக்கூ கவிதைகள்
தளிர் ஹைக்கூ கவிதைகள்!

பிகரை மெயின்டைன் பண்ணுறது அவ்வளவு சுலபமல்ல.. இவர் +2 முடிச்சவுடனே எப்படி மெயின்டைன் பண்ணியிருக்காருன்னு மலரும் நினைவுகளா சொல்லியிருக்காரு..

நான் “பிகரை மெயிண்டெய்ன்” பண்ணிண கதை!


4) ஆச்சி ஆச்சி     ஒரு குற்றவாளி கிட்ட கேட்ட

மரண வாக்குமூலம்

பேருந்து பயணங்களை அசைப் போட்டால் நிறைய விஷயங்கள் கிடைக்கும். இவரின்
என்றும் மறக்க முடியாத பேருந்து நினைவுகள்-4


5) அக்கம் பக்கம்  பார்த்து போகும் போது அமுதா கிருஷ்ணா இப்படி எல்லாம் தமிழ் எழுத்தை ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க... என்னத்த சொல்ல..
இந்த “க” படும் பாடு

அந்த காலத்து பெண்கள் இப்படி எல்லாம் இருந்திருக்காங்க என்று நினைக்கும் போதே ஆச்சரியமாத்தானிருக்கு... 
தமிழ்நாட்டு அம்மாக்கள் (1950,60களில்)

6) இனியவை கூறல் கலா குமாரனால்
செல்போன் டவர்களால் காணாமல் போன  பறவையை இந்த கதையிலாவது காண முடிந்தது.
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி

இதையும் படிக்கலாம்...
நம்மை நாமே ஏன் கிச்சுக்கிச்சு மூட்டி கொள்ள முடிவதில்லை ?


7) காக்கை சிறகினிலே அகல் ஓளியில் பிரகாசித்த
குறுங்கவிதைகள்
எனது குருங்கவிதைகளில் சில ... பாகம் 8

சில நல்ல விஷயங்கள் செய்யும் போது கேலியும், கிண்டல்களும் வந்தாலும், அந்த நல்ல விஷயத்தை நோக்கி தொடர்ந்து  இவர் செய்யும் பயணம் பாராட்டத்தக்கது.

சமூக விழிப்புணர்விற்காக நான் செய்த செயலும் அதற்காக பட்ட பாடும்


 8) வேர்களைத்தேடி       முனைவர் குணசீலன் உங்க எல்லாருக்குமே தெரியும். அவரின் எல்லா பதிவுகளும் சிறப்பு வாய்ந்தவை.
காதல்னா சும்மாவா..?
துன்பத்தில் இன்பம் காண........ 
 காலத்தை வெல்ல சகுனம் ஒரு தடையல்ல.

9)      கடவுளை நாம் எங்கெங்கோ தேடிக்கொண்டிருக்கிறோம் அவர் எங்கு உள்ளார் என்று சொல்கிறது      குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்   
- யின் பெரியோர் சொன்ன சின்னக் கதைகள்!-2
குசும்பா ஒரு கதையும் குசும்பு அதிகம்தான்! 
 
10)  ரவிஉதயன்     

சின்ன சின்ன கவிதைகள் அத்தனையும்  ரசனை மிக்கதாய்...
நிலவொளியில் காய்கின்றன 
அம்மாவின் இசை 
ஆனந்தவிகடனில் வெளியான கவிதை  
புழுநகர்கிறது




 
மீண்டும் நாளைய வகுப்பில் பார்ப்போம்!

வகுப்பு-மூன்றாம் நாள்

வகுப்பு:3 பாடம்-2


அனைவர்க்கும் காலை வணக்கம்! வகுப்பு சுவாரஸ்யமாக உள்ளதா? உங்கள் கருத்துக்கள் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும். வகுப்பை சற்று கலகலப்பாக்குங்கள்..!  இனி மனம் கவரும் பதிவுகளை படித்து மகிழ்வோம்!

          1)     நிகழ்காலம் எழில் அவர்கள் நல்ல சமூக சிந்தனையாளர். விவசாயம்,  விவசாயி பற்றிய அவரின் சமூக சிந்தனை என்னை பெரிதும் யோசிக்க வைத்தது.
     ரூபாய் நோட்டையா தின்னப் போறீங்க?
  
     நான் - http://nigalkalam.blogspot.in/2012/09/blog-post.html
   

 ரமணி ஐயா அவர்களோட கவிதை ஒவ்வொன்றுமே சிறப்பு.
    அனுபவமே விலை

      மனமூடை

3)முத்துச்சிதறல்
   மனோ சுவாமிநாதன் இவரின் முத்தான எழுத்துக்களை படியுங்களேன்
 ஒரு நாள் நீங்களும் மூப்படைவீர்கள்!!
நம் உயிர் நமக்குச் சொந்தமா?



4) எனது எண்ணங்கள்    
 என்று தமிழ் இளங்கோ ஐயாவின் இரண்டு,
 
  பதிவை ஆராய்ச்சி செய்து  பட்டம் வாங்கியிருக்கிறார். பாராட்டு பட்டத்தை!

திருச்சியும் பதிவர் வை.கோபால கிருஷ்ணனும்

கோளாறு எங்கிருந்து வருகிறது ...
யாரிடம் கோளாறு?

5) திருவரங்கத்திலிருந்து...........

   ரஞ்சனி நாரயணன்  நகைச்சுவையாய்..
'...............லாம்..... தலாம்......எழுதலாம்..........ப்ளாக் எழுதலாம்.......'

சிறுகதை

அத்தையும் ராகி முத்தையும்!

6) நினைவில் சில...கனவுகள்!

 செம்மலை ஆகாஷ் எழுதின இந்த தொடர்கதை இன்னமும் என் மனசை விட்டு நீங்கவில்லை. அழுத்தமான உணர்வுகளின் சங்கமம். (முழு பாகத்தையும் தொடர்ந்து படிக்கலாம்)
" என்ன வாழ்க்கைடா இது!" பாகம் 1

குடும்பத் தலைவி  நல்லாருந்தாதான் குடும்பம் சந்தோஷமாய் இருக்க முடியும் இதை புரிந்து சொல்லி இருக்கிறார்.
உணர்வுகள்!


7) ஜெயதேவ்

 விஷயத்தை ஆராய்ந்து விறு விறுப்பாக எழுதுபவர்.ஜோதிடம், வாஸ்து, ராசிக்கல், நியூமரலாஜி- கோடீஸ்வரனாவதற்கு 100% நிச்சயமான வழி எது?

எதோ சீரியஸா சொல்றாருன்னு நினைச்சி இந்த பக்கம் போனிங்க அவ்வளவுதான் ...  கலப்புத் திருமணங்களால் மிகவும் பாதிக்கப் படுவது குழந்தைகளே- படத்துடன் நிஜக் கதை.



8)   Ideas of ஹாரி டாப் ஹிட்ஸ் பற்றி எழுதி கலக்கிட்டு இருக்காரு. இவர் எழுதின பொய் ஒன்று உண்மையா மனசை கனக்க வச்சிடுச்சி.
பதிவர் விரும்பி சொன்ன பொய்கள்

9) கவிதை வீதி சௌந்தரின்  நந்தவனத்தில் மலர்ந்த கவிதைப்பூக்களில் இரண்டு

இப்படியும் இருக்கிறார்கள் மனிதர்கள்...!

எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் இணைந்திருப்போம்...

10) என் ராஜபாட்டை ராஜா இப்படி எல்லாம் கூட வகுப்பு எடுப்பாரா? அது சரி. சீரியஸா க்ளாஸ் எடுத்தா குறட்டை சத்தம் கேட்கும்தானே..!
கேட்டான் பார் ஒரு கேள்வி…! நான் அழுவதா ? சிரிப்பதா?

குழந்தை வளர்ப்பை பற்றி சீரியஸா சொல்லிவிட்டு கடைசியில் ?!

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?








மீண்டும் நாளைய வகுப்பில் பார்ப்போம்!

Tuesday, December 25, 2012

வகுப்பு- இரண்டாம் நாள்

வகுப்பு-2 பாடம்-1

அனைவர்க்கும் காலை வணக்கம்! இன்று இடும் பதிவு வலைச்சரத்தின் 2500 வது பதிவு என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

இன்றைய சிந்தனை:


பள்ளி மாணவிகள் சிலரை ஒரு முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்றேன்.ஒவ்வொரு மாணவிகளிடம் 10 கேள்விகள் அடங்கிய தாளை கொடுத்து அங்குள்ள முதியோர்களிடம் அக்கேள்விகளுக்கான பதிலை கேட்டு எழுதுங்கள் என்றேன்.அங்குள்ள முதியோர்கள் பெயர், ஊர், எந்த சூழ் நிலையில் வந்தார்கள், மீண்டும் பிள்ளைகள் அழைத்தால் வீட்டிற்கு செல்ல விருப்பமா?  உங்களுக்கு தேவை பணமா, பாசமா?, திடீரென்று நிறைய பணம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?  இங்கு பிடித்திருக்கிறதா என்பன போன்ற கேள்விகள்.எல்லோரையும் தமிழில்தான் எழுத வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.அம்மாணவிகளுள் ஒரே ஒரு மாணவி மட்டும் தமிழில் எந்த பிழையும் இல்லாமல் எழுதி இருந்தார்.மற்றவர்கள் எல்லாம் என்னவென்று படிக்க முடியாத படி தமிழ் எழுத்துக்களை தப்பு தப்பாய் எழுதி வைத்திருந்தார்கள்.இத்தனைக்கும் 7, 8 & 9 வகுப்பு மாணவிகள்.காரணம் நாம் தமிழ் படிப்பதில் அக்கறை காட்டுவதில்லை.எல்லா பாடங்களிலும் நூற்றுக்கு குறையாமல் வாங்க வேண்டும்.தமிழில் மட்டும் பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்று நினைக்கும் பெற்றோர்கள்தான் இங்கு அதிகம்.தாய்மொழியையே தவறு இல்லாமல் எழுத பழக தெரியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. இதில் நிறைய பெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளுக்கு மொழிப் பாடமாக இந்தி, பிரெஞ்சு போன்ற அந்நிய மொழிகளைகளையே விரும்புகின்றனர்.  தமிழ் நாட்டில் சில பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் கூட போடுகிறார்கள்.காரணம் அவங்க பள்ளியில் படிக்கிற பிள்ளைங்க ஸ்போக்கன் லாங்குவேஜ் நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்லனுமாம்.அது சரி தமிழ் ஒரு லாங்குவேஜ் ஆக தெரியலையா?குயில்  கூக்குவென்று கூவுமே தவிர ஒரு நாளும் மயில் போல் அகவுவதில்லை. காகம் கரைவதை  விட்டு குயிலின் பாஷை தேடுவதில்லை மனிதன் மட்டும் தாய்மொழியை விட்டு வேறு மொழியில் பேசுவதை பெருமையாக நினைக்கிறான்?”-என்று தமிழ் மொழி பற்றுள்ள என் தோழி ஒருவர் என்னிடம் கோபப்பட்டார். மனிதனால் எத்தனை மொழிகள்  வேண்டுமானால் கற்றுக் கொள்ள முடியும். கற்றுக்கொள்ளட்டும்.மொழிப்பற்று என்று மற்ற மொழிகளை கற்காமல் அறிவை சுருக்கி கொள்வதை   நான் மொழிப்பற்றாக ஒப்புக்கொள்ள மாட்டேன். பரந்து விரிந்த உலகத்தின் எந்த மூலைக்கும் மனிதன் செல்லும்படியான கால கட்டத்தில்  வாழ்க்கை தொடர்புக்கு அந்தந்த மொழிகள் பற்றி தெரிந்திருக்க அவசியமாக இருக்கிறது. கற்றுக்கொள்ளட்டும்.அத்தனையும் கற்று கொண்டு தமிழ் மொழியில் பேசுவதை குறைவாகவோ, தாழ்வாகவோ நினைப்பவர்களைதான்  நான் மொழிப் பற்றில்லாதவர்களாக சொல்கிறேன். முன்பெல்லாம் அத்தை, சித்தி, பெரியம்மா, மாமி என்று பெண்களையும், மாமா, சித்தப்பா,பெரியப்பா.. என்று ஆண்களையும் உறவு முறைகள் சொல்லி நிறைய வார்த்தைகள்.இன்று பெண் உறவுமுறைகள் மொத்தமும் ஒரே வார்த்தையில் ஆன்ட்டி,ஆண் உறவு முறைகள் ஒரு வார்த்தையில் அங்கிள்இப்படி ஆகிவிட்டது.முன்பிருந்த அந்த உறவு முறைகளுக்கான அர்த்தங்கள் நம் குழந்தைகளுக்கு வருங்காலத்தில் தெரிய போவதில்லை.தாய்மொழி தமிழை புறக்கணிப்பது நம் தாயையே புறக்கணிப்பது போல்.  தமிழில்  பேச , எழுத பிழையின்றி  நம் பிள்ளைகளுக்கு கற்று கொடுப்போம்.!
          முதியோர் இல்லத்திற்கு  பிள்ளைகளை அழைத்து சென்றது பிற்காலங்களில் அவர்கள் பெற்றோர்களை பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணம் வளர வேண்டும் என்ற காரணத்திற்காகதான்.  நாங்கள் சென்ற முதியோர் இல்லத்தில் இருந்த யாருமே தானாக வரவில்லை.பிள்ளைகளால் கைவிடப்பட்டு, மருமகள்களால் உதாசீனப்படுத்தப்பட்டு வந்தவர்கள்தாம்.அவர்கள் யாரும் மீண்டும் பிள்ளைகள் அழைத்தால் கூட செல்ல விருப்பமில்லை என்று சொன்னார்கள்.அவர்களுக்கு நிறைய பணம் கிடைத்தால் முதியோர் இல்லங்களை கட்டுவார்களாம். நான் அவர்களிடம் சொன்னேன், “ வேண்டாம்மா  இன்னும் முதியோர் இல்லங்கள் வளரனும்னு நினைக்காதீங்க.. வாழ்க்கை பாடத்தையும் சொல்லித்தர பள்ளிகளை உருவாக்கி நல்ல பிள்ளைகள் வளரனும்னு  நினைச்சு பாருங்க..” என்றேன். தேவைகள் இருக்கும் வரைதான் அப்பா, அம்மா உறவுகள்..!  பிறகு வேண்டாத ஒரு பொருளாய்த்தான் பிள்ளைகள் நினைக்கும் அளவிற்குதான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.நாளை நமக்கும் அப்படி ஒரு காலம் வரலாம்.
   **********************************************************************

   நானும் ... நீயும் ...!

வா.. வா.. மெல்லடா செல்லம் ..
கால் முளைத்த உனக்கு
கை பிடித்து .. நடை பழக்கினேன் ..
சளைக்காமல்..!
காலங்கள் ஓடியதில் ..
கால் தடுமாறும் எனக்கு
உன் தோள் தர அவகாசமில்லை ..
மூன்றாவது காலாய் .. கைத்தடியை
தந்துவிட்டு
பார்த்து போய் தொலை ..
வயசானா.. ஒரு எடமா ..
முடங்கி கிடக்கனும் - நீ
சலித்து கொண்டதில் தடியும் கூட தடுக்குது ..! 
மொழி பேசாத -
உன் ஒற்றை வார்த்தைக்காக
காது கொடுத்து
நாளெல்லாம் பேசி பார்த்தேன்..
இந்த கிழத்தோடு கத்த முடியலை ..
செவிட்டு காதும் கூட
உன் நொடிப்பில் வலித்தது..
இது நிலா..அது நட்சத்ரம் ..
திரும்ப திரும்ப சொல்லி தந்தேன் ..
உனக்கு -
இதெல்லாம் தெரியாது
ஆவலோடு எட்டி பார்த்ததும்
அவசரமாய் லேப்- டாப்பை
மூடி கொண்ட பரிகாசத்தில்
முட்டாளாய் தவிக்கிறேன்..!
என் தேவை எதுவுமில்லை
எல்லாமாய்
உனக்கு இருந்தேன்..
உனக்கு
தேவையில்லா மொத்தத்திற்கும்

நானாய் இருக்கிறேன்.. !
*********************************

    இனி இவர்களின் சுவாரஸ்யமான பதிவுகளை பார்ப்போமா?
            
    
1) இராஜராஜேஸ்வரி
      
      வலைத்தளம்: “மணிராஜ்தினம் ஒரு பதிவுக்குக் குறையாமல்
மிகச்சிறந்த படங்களுடன் ஆன்மிக விஷயங்களை அள்ளித்தரும் பதிவர் 705 நாட்களுக்குள் 768 பதிவுகளுக்கு மேல் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.


      இவரின் பெரும்பாலான பதிவுகளில்  நம் பதிவுலகின் பின்னூட்டப்புயலான வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் ஏராளமான கருத்துக்களை தாராளமாகக் காணமுடிகிறது.  ஏற்கனவே தங்கமாக ஜொலிக்கும் இந்தப் பதிவரின் பதிவுகள்,   வை.கோ ஐயாவின்  பல்வேறு கருத்துக்களால் வைரமாக ஜொலிக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது.
      அன்பென்ற மழையிலே

      கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்


2) தூரிகையின் தூறல் மதுமதி அவர்களை பற்றி உங்க எல்லாருக்குமே தெரியும் அவர் கவிதைகள் அனைத்துமே எனக்கு பிடிக்கும்.

வேட்கை வேகம் எடுக்கிறது

வேற்றுகிரகவாசிகள்

 பதிவர் சந்திப்பு காணொளி புகைப்படங்கள் போன்றவற்றை ஒரே இடத்தில் பார்க்கும் வண்ணம் http://chennaibloggersmeet2012.blogspot.in
என்ற வலைதளம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.பார்வையிடுங்கள்
 3)  பவித்ரா நந்தகுமார் 
     
        என் தோழியும், பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதி வரும் பவித்ராவின் பக்கங்கள் எப்படி இருக்கிறது படித்து பார்த்து சொல்லுங்கள்.

       பெண் என்பவள்.....

       செவிடன் மனைவி
    

   4)   ரிஷபன்
         
  இவருக்கு அறிமுகமே தேவையில்லை. இவரை அறியாத பதிவர்களே யாரும் இருக்க முடியாது.
பொதுவாக நாம் படைப்புகளைத்தான் உருவாக்குவோம். ஆனால் திரு ரிஷபன் அவர்கள்  தன் பல படைப்புகளுடன் மட்டுமல்லாமல், பல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளவர்"என தனது பதிவு ஒன்றில் திரு கோபாலகிருஷ்ணன் ஐயா, இவரை மிகவும் பாராட்டிப்பேசியுள்ளார். இவரின் ஒரு சில பதிவு

              கூட்டுக்குள் ஒரு வெண்புறா
              சூர்யா 
                            


 5) ஜெயந்தி ரமணி
    இவரின் கதை, கவிதை மணம் வீசி மனம் கவர்ந்தது.
அன்னை நான் அழலாமா?
முதல் பரிசு

 6) டி.என்.முரளிதரன்
           இவரை பற்றி உங்க எல்லோருக்குமே தெரியும். புஷ்பா மாமியின் புலம்பல்கள் என்று சமூக சிந்தனைகளை சுவாரஸ்யமாக சொல்வார்.
.( வடிவேலு கழுதை வாங்கின கதை  நினைக்கும் போதே சிரிப்பாக வரும்)
பளளி நாட்கள்லயே அவர் எப்படி கலக்கி இருக்கிறார் பாருங்க.

அஞ்சிலே ஒன்றை வைத்தான்! அஞ்சிலே ஒன்றை விட்டான்!

பாரதிக்கு சகோதரர் நினைவு கூர்ந்தது.. படிக்காமல் விட்டவர்கள் கவனத்திற்காக.!
மகாகவி பாரதி நிலையாய் நிற்பவன்

 7)  மஞ்சுபாஷிணி
தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவரின் பதிவுகள்
“கதம்ப உணர்வுகள்”.


8)காமாக்ஷி
 சொல்லுகிறேன்

இவருக்கு வயது 78.  இந்த வயதினிலும் மிக ஆர்வமாக எழுதிவருவது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.(அவரை பற்றி அவர் பதிவில் படியுங்கள் நிச்சயமாய் நீங்களும் அவரை பாராட்டுவீர்கள்
எப்படியிருக்கு.?

மீனா மாமியா பாட்டியா?

9) கவியாழி கண்ணதாசன்

இவரின் கவிதைகள் யாவுமே நேர்த்தியாய் இருக்கும்.

நீ மனிதனாய் யோசி

அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு


10) மறக்க முடியாத நினைவுகள்
 என்று சொல்லும் கவிப்ரியன்
கடிதங்களை சுவாரஸ்யமாக திரைக்கதைப் போல் நகர்த்துகிறார்.
வரதட்சனை - எப்போது ஆரம்பித்தது இந்தப் பழக்கம்?

போர்க்களமான வீடு!



 

 
மீண்டும் நாளைய வகுப்பில் பார்ப்போம்!