பொருளாதாரம் எனும் வித்தகன்
➦➠ by:
சதங்கா,
பொருளாதாரம்
Image Credit: Google |
அருள் தேடிச் செல்ல வழி செய்தார் நக்கீரர்.
இதுவே ஆற்றுப்படைவீடு, பின்னாளின் ஆறுபடைவீடானது என்று படித்து வியக்கிறோம்.
இன்றைய வாழ்வில் அருள் மட்டும் போதுமா ?
பொருளில்லாத சிவனுக்கே என்ன கதி என்று பாருங்கள் :)
தாண்டி ஒருத்தி தலையின் மேல் ஏறாளோ
பூண்ட செருப்பாலொருவன் போடானோ –
மீண்டொருவன் வையானோ வில்முறிய மாட்டானோ
தென் பாலியூர் ஐயா நீ ஏழையானால்.
தில்லை நாதனே, "நீ எழையானதால், உன் தலையில் கங்கை ஏறினாள். உன்னை செருப்பால் மிதித்தார் கண்ணப்பர். 'பித்தா பேயா' என்று திட்டினார் சுந்தரர். வில்லால் அடித்தார் அர்ச்சுனன்" என்கிறார் கவி காளமேகம்.
அன்றைய புலவரில் இருந்து இன்றைய ஆணிபுடுங்குவோர் வரை அநேக துறைகளும் சிந்திப்பது பொருளாதாரம் என்றால் மிகையாகாது. ஆனால், இந்தப் பொருளாதாரம் குறித்து நம் பதிவர்களின் பதிவுகளில் வியக்கத்தகுந்த, சுவாரசியமான செய்திகள் கொண்ட என்றெல்லாம் பார்த்தால் மன்னிக்கவும் பயம் தான் மிகுதியாகக் கிடைக்கிறது.
பொருளாதாரம் சார்ந்து நான் படித்த இங்கிலாந்து நாட்டின் சமீபத்திய அறிக்கை - Gurunatha Sundaram அவர்கள் தளத்தில் இருந்து. ஐரோப்பிய ஒன்றியம் இங்கிலாந்திற்கு வைக்கு ஒரு சுமையும், அதன் தாக்கத்தில் இங்கிலாந்துப் பிரதமர் தவிக்கும் தவிப்பும் தெரிக்கும் பதிவு.
கிரேக்க பொருளாதாரம் திவாலானது எப்படி? - Kalaiyarasan அவர்கள் தளத்தில் இருந்து. அந்நிய நாட்டு கடன் சுமையால், பொருளாதார நெருக்கடிக்கும் சிக்கித் தவிக்கும் கிரீசின் பிரச்சனைகளை ஆராயும் ஆவணப்படம்.
உலக பொருளாதாரம், அரசியல், சட்டம் இவற்றில் நிலவும் குழப்பங்கள்....
Lingeswaran அவர்கள் தளத்தில் இருந்து. "கொளுத்தும் வெயிலில் இடையில் சிறிது மழை பொழிந்து ஆசுவாசப்படுத்துவது போல, வாழ்கையில் ஆங்காங்கே சிலபல இன்பங்கள் உண்டென்றாலும், பொதுவாக பார்க்குமிடத்து வாழ்க்கையே துயரமாகத்தான் இருக்கிறது" என்பது போன்ற வாழ்வியல் பேசும் பதிவு.
அரசியல் பொருளாதார நெருக்கடியைப் பற்றிய மார்க்சின் கோட்பாடு - அ.கா.ஈஸ்வரன் அவர்கள் தளத்தில் இருந்து. மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பேசும் தளம்.
திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? பகுதி 1 - kailasasundaram Parameswaran அவர்கள் தளத்தில் இருந்து.
இந்தியப் பொருளாதாரம் குறித்து அலசிப் பிழித்திருக்கிறார். நான்கு பகுதிகளாகப் பதிந்திருக்கிறார்.
என்ன இந்த மோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்? - Vel Tharma அவர்கள் தளத்தில் இருந்து. சில ஒப்பீடுகள், சில குறியீடுகள், ஆவணப்படம் என்று பன்முகம் கொண்ட பதிவு.
பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - புத்தக விமர்சனம் - Dr. P Kanagasabapathi அவர்கள் தளத்தில் இருந்து. இவரது புத்தக விமரிசனத்திற்கான சுட்டி.
பொருளாதரத்தை மேம்படுத்தி வாழ்வில் சிறக்க வாழ்த்தி, நாளை பிரிதொரு பதிவினில் சந்திப்போம்!
|
|
நியாயம் தான்..
ReplyDeleteபொருளில்லார்க்குத் தான் இவ்வுலகில்லையே!..
பொருளாதாரம் மிகவும் முக்கியம் தான்.
ReplyDeleteநன்றி துரை செல்வராஜூ, தனிமரம் !!!
ReplyDelete