[G]கோவர்த்[DH]தன் பரிக்ரமா
➦➠ by:
வெங்கட் நாகராஜ்
படம்: இணையத்திலிருந்து....
சௌராசி பரிக்ரமா செய்ய முடியாதவர்கள்
விருந்தாவன், கோவர்த்தன கிரி ஆகியவற்றியனை பரிக்ரமா செய்வது பற்றி நேற்று சொல்லி
இருந்தேன். கோவர்த்தன கிரி பரிக்ரமா என்பது 7 கோஸ் தூரத்தினைக் கொண்டது – அதாவது
21 கிலோமீட்டர். இந்த பரிக்ரமாவில் கோவர்த்தன் மலை மற்றும் ராதா குண்ட்
ஆகியவற்றினைச் சுற்றி வருகிறார்கள்.
பரிக்ரமா செய்ய பல முறைகள் உண்டு – நடந்தே
பரிக்ரமா செய்பவர்கள் நான்கு மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை எடுத்துக்
கொள்கிறார்கள். கிருஷ்ண பரமாத்மா, ராதா ஆகியோரின் புகழ் சொல்லும் பாடல்களை
பாடியவாறோ, அல்லது பெயர்களை உச்சரித்தபடியோ செல்வார்கள்.
ஒரு சிலர் கைகளில் இரண்டு பானைகள் - ஒவ்வொரு கையிலும் ஒரு பானை பிடித்தவாறு செல்வதைப் பார்க்க
முடியும் – ஒரு பானையில் தண்ணீர் கலந்த பாலும், மற்ற பானையில் அகர்பத்திகளை
பற்றவைத்து சொருகியும் இருக்கும். பால் இருக்கும் பானையில் ஒரு சிறிய துளை போட்டு,
பரிக்ரமா செய்யும் பாதையில் சொட்டு சொட்டாக விழும்படியே வருவார்கள். கூடவே வரும் நபர் பால் பானையினை நிரப்பியபடியே
வருவார். இந்த முறை பரிக்ரமாவிற்கு “[dh]தூத்[dh] [dh]தாரா”
என்று
சொல்கிறார்கள். இதற்கு சாதாரணமாக நடப்பதை
விட கொஞ்சம் அதிக நேரம் பிடிக்கிறது.
ஒரு சிலர் நேற்று பார்த்த [DH]தண்டவத் பரிக்ரமா முறையை பின்பற்றுகிறார்கள். நடக்க முடியாதவர்களுக்காக இங்கே நிறைய ஆட்டோ ரிக்ஷாக்களும், சைக்கிள் ரிக்ஷாக்களும் உண்டு. ஒரு சிலர் தங்களது வாகனங்களில் பயணிக்கிறார்கள். இருந்தாலும், ராதா குண்ட் பகுதிகள் மிகவும் குறுகலான பாதைகள் கொண்டதால் நடைப்பயணம் மேற்கொள்வதே நல்லது.
வருடம் முழுவதுமே இந்த பரிக்ரமா செய்தாலும், பௌர்ணமி நாட்களிலும், கிருஷ்ண ஜெயந்தி, குரு பூர்ணிமா, அன்னக்கூட் உற்சவம் [தீபாவளிக்கு அடுத்த நாள்] போன்ற சமயங்களில் கோவர்த்தன் பரிக்ரமா செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விடுகிறது.
கோவர்த்தன கிரியை எவருமே அப்படி அழைப்பதே இல்லை – அவர்கள் அழைப்பது “கிரிராஜ்” என்ற பெயரில் தான்! இந்த கோவர்த்தன கிரியை தனது சுண்டுவிரலில் தூக்கி நிறுத்தி, குடையாகப் பிடித்து ஏழு நாட்கள் வரை விடாது பெய்த மழையிலிருந்து ப்ரஜ்வாசிகளை கிருஷ்ணர் காப்பாற்றினார் என்பதை உங்களுக்குச் சொல்லவும் வேண்டுமோ?
சரி நண்பர்களே வலைச்சரத்தில் இன்றைய அறிமுகங்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம்!
46. வலைப்பூ: தாளிக்கும் ஓசை
ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் – தனது வலைப்பூவில் தன்னைப் பற்றிய அறிமுகமாச் சொல்லி இருப்பது இது தான் – “உணவு தவிர்த்து கலாசாரம் எப்படி முழுமையடையும் என்றெல்லாம் படம்போட விரும்பவில்லை. அம்மா எழுதிக் கொடுத்த டயரிக் குறிப்புகள் கிழியத் தொடங்கிவிட்டதால் இங்கே சேமிக்கிறேன். இந்தக் குறிப்புகளில் மாற்றத் தக்க ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.”
அறிமுகப் பதிவு: அழகர் தோசை
சற்றேறக்குறைய ஏழு ஆண்டுகள் முன்னர் பதிந்ததாக இருந்தாலும் படியுங்கள் – நிச்சயம் ரசிக்க முடியும்!
இடதுபக்க ஓரமாக இருக்கும் ஷேத்ர பாலர் சன்னதி முன்பு வரும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் (அம்மா வழிப்) பாட்டி தன் மாமனாரை நினைவு கூறுவார். “அப்பல்லாம் தோசைப் பொடி முடிஞ்சு நடை சாத்தினதும் கங்காணித் தாத்தா(கண்காணிப்பு?) கோயிலைப் பூட்டி சாவியை உள்ள நீட்டுவார். ஷேத்ர பாலர் கை நீட்டி வாங்கி வெச்சுப்பார்” என்று சொல்வார். நம்பியும் நம்ப முடியாமலும் ஆனால் ஒவ்வொரு முறையும் சளைக்காமல் கேட்டுக் கொள்வோம். இப்போது தொடர்ந்து நானும் அடுத்த தலைமுறைக்கு அங்கே அதைச் சொல்லி வருகிறேன்.
47. வலைப்பூ: முனைவர் மு. இளங்கோவன்
2007-ஆம் ஆண்டு முதலே வலைப்பூவில் எழுதத் தொடங்கியவர் முனைவர் மு. இளங்கோவன். பல புத்தகங்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார். சுவையான பல பதிவுகளை இவரது பக்கத்தில் படித்து ரசிக்க முடியும்.
அறிமுகப் பதிவு: காவிரிக்கரையில் தொடங்கி காந்தள் மலர் வரை
தமிழர்களின் இசைக்கருவூலமான சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கானல்வரிப் பகுதியின் அரிய பாடலடிகளைக் காட்சிப்படுத்தித் தமிழ் இலக்கிய அறிமுகம் இல்லாதவர்களும் கண்டு மகிழச் செய்ய உள்ளோமே என்று நெஞ்சுக்குள் நினைவுகள் சுழன்றவண்ணம் இருந்தன. திங்கள் மாலை வெண்குடையான், மன்னு மாலை வெண்குடையான், உழவரோதை மதகோதை எனத் தொடங்கும் கானல்வரிப் பாடல்களுக்கு உரிய காட்சிகளைப் படத்தொகுப்பாக் எடுத்த அனுபவம் இங்கே!
48. வலைப்பூ: சிட்டுக்குருவி
காக்காச்சோறு, வேற்களற்று, பூப்பதெல்லாம், பந்தக்கால்
போன்ற சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் விமலன் அவர்கள். நிறைய கவிதைகளை இவரது பக்கத்தில் காண
முடிகிறது.
அறிமுகப் பதிவு: வயர்க்கூடை
சாப்பாடு டப்பா,தண்ணீர் பாட்டில்,
அது பொதிந்திருந்த
கலரான வயர் கூடை,
அது சுமந்திருந்த
சீருடை அணிந்திருந்த மகன்,
அவனது அருகில்
நின்றிருந்த சைக்கிள் என
அந்த காலை நேர அவசரத்திலும்,
பரபரப்பிலும் அழகுபட்ட
அந்த சூழலை பார்த்த
தாய் அவனிடமிருந்து
துண்டுச்சீட்டை வாங்குகிறாள்
வாஞ்சையுடன்/
49. வலைப்பூ: மனம்கொண்டபுரம்
ஊமைக்கனவுகள் என்ற பெயரில் வலைப்பூவில் எழுதுகிறார்
இவர். எழுத ஆரம்பித்தது மிக சமீபத்தில் தான்.
மொத்தமாக நான்கு பதிவுகள் மட்டுமே எழுதி இருக்கிறார். மேலும் எழுதுங்கள்
நண்பரே.
அறிமுகப் பதிவு: நீ இல்லா வீடு
நீ விட்டுவிட்டுப் போன
உன் கிராமத்துத் தெருமுனையில்,
அணைந்து எரிகின்ற
ஒற்றை விளக்கடியில்
குரைத்து,
பின் அடங்கிப்போன
அந்த நாயுடன்
நான் மட்டும்,
உன் வீடு பார்த்து......!
50. வலைப்பூ: அனிதா
அனிதா சிவா என்பவரின் வலைப்பூ – கவிதைகள் இங்கே உண்டு –
ரசிக்க நீங்களும் உண்டு.
அறிமுகப் பதிவு: தாய் பறவை
எந்த பறவையும் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதம் பார்ப்பதில்லை. அன்பாகவே இரை தேடி ஊட்டுகிறது. மனிதன்
மட்டும் இன்னும் திருந்தவில்லை. இந்த பறவைகளைப் பார்த்தாலாவது திருந்துங்கள்.
என்ன நண்பர்களே வலைச்சரத்தின் இன்றைய பதிவினை
ரசித்தீர்களா? உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
மீண்டும் நாளை சந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
|
|
அருமை! கோவர்தன் பரிக்ரமா, காரில் போனேன்.
ReplyDeleteதாளிக்கும் ஓசையில் அட்டகாசமான சமையல் குறிப்புகள் உள்ளன.
வலைச்சரத்தில் பதிந்தமைக்கு நன்றி. புதியவர்களுக்கும் பயன் படும்.
நானும் காரில் தான்..... நடந்து போக இன்னும் நேரம் வாய்க்கவில்லை!
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நானும் ஒரு முறையாவது காரில் சென்று பார்க்க வேண்டும்.
Deleteமுடிந்த போது சென்று வாருங்கள் சொக்கன் சுப்ரமணியன்.
Delete//எந்த பறவையும் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதம் பார்ப்பதில்லை.
ReplyDeleteஅன்பாகவே இரை தேடி ஊட்டுகிறது. மனிதன் மட்டும் இன்னும் திருந்தவில்லை.//
சிந்தனைக்குரிய சிறப்பான கருத்து..
நல்ல தளங்களுடன் இன்றைய தொகுப்பு அருமை..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
Deleteநன்றி வெங்கட் நாகராஜன் சார்,என்ன வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு/
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.
Deleteமுடிவில் சிறப்பான கருத்து...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteஅய்யா வணக்கம்.
ReplyDelete“மனம் கொண்ட புரம் “ எனும் தளத்தை நீங்கள்தான் முதன்முறையாக வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள்.
இன்னும் பல பதிவுகளை நான் இடத் தங்களின் இவ்வறிமுகம் பேரூக்கமாய் இருக்கும்.
ஒரு போதும் நன்றி மறவேன்.
தங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.
நன்றி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஊமைக்கனவுகள்.
Deleteஉங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்.
கோவர்தன பரிக்ரமா நாங்களும் காரில் போனோம். பக்தியும் , மன உறுதியும் உள்ள பக்தர்கள் ”ராதே சியாம் ராதே சியாம் ”என்று சொல்லி கீழே விழுந்தும் வணங்கி பரிகரமா செய்ததை கணடு மெய்சிலிர்த்தேன்.
ReplyDeleteவிமலன் அவர்கள், முனைவர் இளங்கோவன் அவர்களை தெரியும். முனைவர் இளங்கோவன் அவர்களையும், அவர் தாயார் அவர்களையும் டெல்லி தமிழ்சங்கத்தில் சந்தித்து புகைபடம் எடுத்துக் கொண்டோம். அவர் செம்மொழி விருது பெற்றமைக்கு தமிழ் சங்கத்தில் பாரட்டு விழா நடந்த போது.
இன்று இடம் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
சிறப்பாக ஆசிரியப்பணியை ஆற்றுவது மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....
Deleteஇன்றைக்கு அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
Deleteகோவர்த்தன பரிக்ரமா பற்றிய அரிய தகவல்களுக்கு மிக்க நன்றி! எத்தனை எத்தனை விஷயங்கள்?! அறிமுகங்க்ளில் இருவரைத் தெரியும், விமலன் அவர்களையும், ஊமைக்கனவுகள் விஜு ஜோசப் அவர்களையும். வலை வழிதான். அறிமுகங்கள் மற்றவர்களைச் சென்று பார்க்கின்றோம். அனைத்து அறிமுகங்களுக்கும் மிக்க நன்றி.
ReplyDelete//எந்த பறவையும் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதம் பார்ப்பதில்லை. அன்பாகவே இரை தேடி ஊட்டுகிறது. மனிதன் மட்டும் இன்னும் திருந்தவில்லை. இந்த பறவைகளைப் பார்த்தாலாவது திருந்துங்கள்.//
உண்மை. மிகவும் ரசித்த வரிகள். அருமை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
Delete1973 ஆம் ஆண்டு கோவர்த்தன் போயிருந்தேன். அப்போது இந்த கிரிவலம் இருந்ததாகத் தெரியவில்லை. கோவர்த்தன கிரி பரிக்ரமா பற்றிய புதிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி! இன்றைய அறிமுகப்பதிவர்களில் முனைவர் மு. இளங்கோவன் மற்றும் விமலன் அவர்களின் வலைப்பக்கதிற்கு செல்வதுண்டு. மற்றவர்கள் எனக்கு புதியவர்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
ReplyDeleteகோவர்த்தன் பரிக்ரமா பல வருடங்களாக நடந்து வரும் விஷயம் தான்.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
கோவர்த்தன பரிக்ரமா பற்றி அறிந்தேன்.
ReplyDeleteவலைச்சர அறிமுகங்கப் பதிவர்களுக்கு வாழ்த்துகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.
Deleteகோவர்தன் பரிக்கிரமா பற்றி அறிந்துகொண்டேன்! சிறந்த வலைப்பூக்களை இன்றும் அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள்! நன்றி!வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
Deleteஇன்றைய அறிமுகங்களுக்கும், நண்பர் ஊமைக்கனவுகள் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
Deleteகோவர்தன் பரிக்ரமா மிகவும் பயனான குறிப்பு. போகும் சூழல்கிடைத்தால் மகிழ்ச்சி .இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகோவர்தன் பரிக்ரமா..பற்றி அறிந்து கொண்டோம். ஒரு தடவையாவது செல்ல வேண்டும்.
முடிந்தபோது சென்று வாருங்கள்....
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.
சிட்டுக் குருவி விமலன் தவிர மற்றவர்கள் புதிதுதான் எனக்கு.
ReplyDeleteசென்று படிக்கிறேன் - நன்றி!
t.m 6.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.
Deleteகோவர்தன் பரிக்ரமாவை இத்தனை பேர் சிலாகிச்சு இருப்பதால் நம்ம பதிவுக்கு ஒரு 'இலவச' விளம்பரம் போட்டுக்கறேன், வெங்கட். அட்லீஸ்ட் சிலருக்குப் பயனா இருக்கட்டுமே!
ReplyDeletehttp://thulasidhalam.blogspot.co.nz/2010/12/b.html
நிச்சயம் பயன்படும். உங்கள் எழுத்தில் இன்னும் அதிக பலம் [ன்] உண்டு!
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
கோவர்த்தன பரிக்ரமா பற்றி தற்போதுதான் அறிந்தேன். மிகவும் சிறப்பான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
Deleteநல்ல அறிமுகங்கள் அண்ணா...
ReplyDeleteசிலர் புதியவர்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
ReplyDeleteஎன் வலைப்பக்கத்தையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.இப்படி நீங்கள் ஊக்குவிப்பதால் தான் நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteதங்களை அறிமுகம் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனிதா சிவா.