வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - நான்காம் நாள்
➦➠ by:
மஞ்சு பாஷிணி
நேற்று என் மகன் இபானின் நண்பனுடைய அம்மா என்னை அலைபேசியில் அழைத்தார்கள். எப்போதாவது அழைத்தால் ஒரு மணி நேரத்துக்கு குறைவாக பேசுவதை நிறுத்துவதில்லை. பெண்கள் என்றாலே இப்படித்தான். ஒரு மணி நேரத்துக்கு பேச அப்படி என்ன தான் இருக்கோ என்று நினைக்கிறீர்கள் தானே? கண்டிப்பாக யார் தலையையும் உருட்டும் பேச்சு இல்லை. மிக மிக பொதுவான பேச்சு தான்.
பழைய காலத்தில் வீடு கட்டும்போதே திண்ணை வைத்து கட்டுவார்களாம். ஆமாம் எங்கள் வீடும் இரண்டு பக்கமும் விஸ்தாரமான திண்ணையோடு இருந்ததை பார்த்திருக்கிறேன். பாட்டி அதிகாலை எழுந்து வந்து வாசல் தெளித்து விட்டு திண்ணையில் யாராவது படுத்திருக்கிறார்களா என்று பார்ப்பார்கள். பழைய காலத்தில் அதாவது நம் தாத்தா பாட்டி காலத்தில் கூட்டுக்குடும்பம் வெகுவாக போற்றப்பட்டது.. எது செய்தாலும் வீட்டில் மூத்தோரின் அனுமதியை வேண்டியப்பின்னரே அதை நடைமுறை படுத்தும் நிலை இருந்தது.
எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவார்கள். வளரும் குழந்தைகள் பாட்டி சொல்லும் கதைகளை கேட்டுக்கொண்டே தாத்தாவுடன் விளையாடிக்கொண்டே அப்பாவின் ஆகிருதியை தானும் பெற சின்ன வயதிலிருந்தே அப்பாவை ஹீரோவாக நினைத்து அப்பாவை போலவே படித்து நன்றாக முன்னுக்கு வருவது போலவே அப்பா பெரியவர்களுக்கு தரும் மரியாதையை பார்த்து பிள்ளைகளும் கற்று, அம்மாவின் மென்மையை, தாய்மையை, பாசத்துடன் சமைத்து பரிமாறும் உணவை உண்டு மகிழ்ந்து, உற்றார் உறவினரோடு சந்தோஷமாய் விருந்து கொண்டாடி விளையாடி மகிழ்ந்து கல்வி கற்கும்போதே தாத்தா பாட்டி அம்மா அப்பா அத்தை மாமா சித்தப்பா சித்தி அக்கா தங்கை அண்ணா தம்பி என்று கூட்டுக்குடும்பத்தில் வளரும் பிள்ளை பிற்காலத்தில் நல்ல ஒரு குடிமகனாக நாட்டுக்கும் நல்ல ஒரு பிள்ளையாக வீட்டுக்கும் உருவாகும்.
இப்ப இருப்பது போல் முதியோர் இல்லங்கள் தென்படாது. டிவியில் சீரியல் ஓடிக்கொண்டிருந்தாலும் பார்ப்பதற்கு ஆள் இருக்காது. இதெல்லாம் பழைய காலம்.. இப்போது??? கூட்டுக்குடும்பமாக வாழ வீடும் பெரியதாய் வேண்டும், பரந்த மனசும் வேண்டும். வாடகைக்கு அவ்வளவு பெரிய வீடு கிடைக்காதே. ஒரு அறை, ஒரு சமையலறை காமன் பாத்ரூம் இப்படி தானே இருக்கிறது. அம்மா அப்பா பாரமாகிவிடுகிறார்கள். பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேலைக்கு ஆள் வைத்தால் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு போவோர் இருப்பாரோ என்ற அவநம்பிக்கையிலும் இவ்ளோ சம்பளம் கொடுத்து வேலைக்கு வேற ஆள் வைக்கணுமா? வயதான அம்மா அப்பா இதற்கு அவசியப்படுகிறார்கள்.
ந்யூக்ளியர் ஃபேமிலி, பிரவேசி வேண்டுவோர் எக்ஸ்ட்ரா சொந்தங்களை அவஸ்தையாக நினைக்கிறார்கள். வயதானோர் வீட்டில் இருந்தால் அவர்களுடன் உட்கார்ந்து பேச டைம் இருப்பதில்லை யாருக்கும்.. எல்லோரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடவும் நேரம் இருப்பதில்லை. அப்ப என்ன தான் செய்வாங்க?? தொலைக்காட்சி இவர்களின் சமயங்களை அழகாக ஆட்கொள்கிறது. சீரியல்கள் எல்லாம் இவர்களுடைய தோழமைகள் ஆகிவிடுகிறார்கள். வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும் ஆண்கள் உடலும் உள்ளமும் அயற்சியாக இருக்க அதை போக்கும் உத்வேகத்துடன் வலை, முகநூல் என்று மேய்வார்கள்.
வீட்டில் இருக்கும் வயதானோர், வேலைக்கு செல்லாத பெண்கள், தங்கள் பொழுதைப்போக்க தொலைக்காட்சியை நாடுகின்றனர். அம்மா அப்பா இப்படி அவர்கள் வேலையில் பிசியாக இருக்கும்போது பிள்ளைகள் சொல்ல நினைப்பதை, பள்ளிக்கூடத்தில் நடந்த விஷயங்களை, தோழமைகளைப்பற்றி எதுவும் சொல்ல ஆள் கிடைக்காமல் வீடியோ கேம்ஸில் மூழ்கி விடுகிறார்கள். அப்போது உடலுக்கு உடற்பயிற்சியைப்போல் விளையாட்டு இருந்தது. இப்போது வீடியோ கேம்ஸ் போதுமாக இருக்கிறது.
எல்லோர் வீட்டிலும் இப்படி நடப்பதாக நான் சொல்ல வரவில்லை. ஆனால் பொதுவாக இப்படி நடக்கிறது. உண்மை. விருந்தினர் வீட்டுக்கு வந்தால் டிவியில் சீரியல் ஓடிக்கொண்டே இருக்கும். சீரியலில் இருந்து கண்களை அகற்றாமல் வாங்க என்று சொல்வார்கள். இந்நிலை மாறுமா? எல்லோருக்கும் வேலை படிப்பு என்று அவசரமாய் பறந்துக்கொண்டு இருப்பதால் வாரத்துக்கு ஒரு முறை எல்லோரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்டு கதை பேசுவோம்.
வயதானோரிடம் அவர்கள் வாழ்க்கையை சொல்ல சொல்லி கேட்டு அந்த அனுபவத்தை நமக்கு பாடமாக எடுத்துக்கொண்டு பிள்ளைகளுடன் உட்கார்ந்து அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு, பிள்ளைகளை வீடியோ கேம்ஸ் விளையாடுவதை குறைக்கச்சொல்லி வெளியே விளையாட அனுப்பி சுறுசுறுப்பாக்கி, வயதில் மூத்தோரிடம் மரியாதையுடன் பிள்ளைகளை பழகவும் பேசவும் பிள்ளைகளை பழக்கி, நல்லதை சொல்லிக்கொடுப்போம். வலிமையுடன் தோல்வியை எதிர்க்கொள்ள சொல்லிக்கொடுப்போம், பிரச்சனைகளை கண்டு மிரண்டு பின் வாங்காமல் அதை சரி செய்யும் முயற்சியில் நம்பிக்கையுடன் முனையச்சொல்வோம்.. இப்படி பேச ஆரம்பித்து ஒரு மணி நேரம் போவதே தெரியாம பேசிக்கொண்டு இருந்தோம். அதை தான் இன்று இங்கு எழுதி இருக்கிறேன் நண்பர்களே..
போதும்மா தாயே.. வரும்போதெல்லாம் இவ்ளோ நீளத்துக்கு அறிவுரையா அடுக்கிக்கிட்டு போறியே.. நாங்க எவ்ளோ நல்ல பிள்ளைகள்.. நீ அட்வைஸ் பண்றதை நிறுத்திட்டு பதிவர்களை அறிமுகப்படுத்த தொடங்குமா என்று எல்லோரும் உரக்க சொல்வது கேட்கிறதுப்பா.. ரைட்டு போலாமா?
மனம் கவர் பதிவர்கள் – நான்காம் நாள்
1. சேட்டைக்காரன்
எழுத்துகளில் ஹாஸ்யத்தை கலந்து எழுதுவதில் வித்தகர் இவர். இவர் எழுத்தை வாசித்த பலர் இவரை சந்திக்கவேண்டும் எப்படியாவது என்று நினைத்திருக்கின்றனர். அனாயசமாக எழுதிவிடுவார் அற்புதமாய்.
கிட்டாமணியை வெட்டென மற
2. gmb writes
உள்ளத்து உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும் என்ற எழுத்துகளுக்கு சொந்தக்காரர். வாழ்க்கையை ரசனையுடன் வாழ்கிறார் என்பதற்கு சாட்சி இவர் எழுத்துகள்.
அடி மேல் அடி அடித்தால்
3. killergee
300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து , மரித்திருக்கவேண்டும் என்றும் இந்த சமூக மானிடனை காணும் அவா இல்லை என்னும் எழுத்துக்கு சொந்தமானவர். வித்தியாசமான எழுத்து, வித்தியாசமான சிந்தனைக்கு சொந்தக்காரர்.
காயல்பட்டிணம், கயல்விழி & காயாம்பு
4. கட்டபொம்மன்
ஜனரஞ்சகமான எழுத்துகளுக்கு சொந்தக்காரர். ரசனையுடன் எழுதுவார்.
அறிமுக நாயகன்
5. கற்றலும் கேட்டலும்
நிறைகுடம்... இலக்கியம், ஆன்மீகம், கதை, கவிதை எல்லாவற்றிலும் முதன்மை. இவர் எழுத்துகள் நிறைய நான் முன்பே வாசித்திருக்கிறேன். இவருடைய படைப்புகள் பல இணையங்களிலும் வந்திருக்கிறது. சிறப்பு பெற்றிருக்கிறது.
பிரமி
6. மாதவன்
இவரின் எழுத்துகள் நகைச்சுவையோடு அனுபவங்கள் பலதை எழுதி இருக்கிறார். சுவாரஸ்யமாக இருக்கிறது இவருடைய எழுத்துகள் வாசிக்க.
மன்னை மைந்தர்களில் ஒருவர்.
காலேஜு டேஸ்ல நடந்தது
7. தீராத விளையாட்டுப்பிள்ளை
இந்த தீராத விளையாட்டுப்பிள்ளையின் எழுத்துகள் மிக அற்புதமாக இருக்கிறது. பல திறமைகள் கொண்ட இவரின் தற்போதைய சாதனை என்று குறிப்பிடுவதே ப்ளாக் எழுதுவது தான். எழுத்துகள் வசப்படுகிறது இவர் கைக்கு. நாம் இவர் எழுத்துக்கு வசப்படுகிறோம்.
மன்னார்குடி டேஸ் : ஜீவா துரை
8. நோக்கும் இடமெல்லாம் நாமன்றி
துணிச்சலான சமூக சிந்தனை எழுத்துகளுக்கு சொந்தக்காரர். ஆசிரியர். இவரின் எழுத்துகள் நேர்மையாகவும் தவறை தைரியமாக தட்டிக்கேட்கும் விதமாகவும் இருக்கும்.
தேர்வல்ல மதிப்பீடே தேவை
9. வளரும் கவிதை
தமிழ் மீது தீரா பற்று கொண்டவர். இவர் எழுத்துகளில் இடம்பெறா தலைப்பே இருக்க முடியாது. பிறர் படைப்புகள் பிடித்ததை தன் பாணியில் விமர்சனம் எழுதி அழகாக தன் வலைப்பக்கம் போடுவார்.
முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா?
10. திடங்கொண்டு போராடு
இவர் உலகம் எழுத்துகளால் நிறைந்திருக்கிறது. எழுத்துகளாலேயே நிறைந்திருக்கட்டும் என்ற வள்ளல் எழுத்துக்கு சொந்தக்காரர்.
ரியல் எஸ்டேட் மிருகமும் - வண்டலூர் ஜூவும்
11. தூரிகையின் தூறல்
அட்டகாசமான எழுத்துக்கு சொந்தக்காரர். பலருக்கும் உதவிய எழுத்துகள் இவருடையது. நாவல்கள் எழுதி இருக்கிறார். குட்டி கவிதைகள் எழுதி இருக்கிறார். குறும்படமும் இயக்கி இருக்கிறார்.
திருமணத்தை தள்ளி வைத்துக்கொள்ளலாம்
12. ஸ்கூல் பையன்
இவரின் எழுத்துகள் எப்போதுமே ரசிக்கும்படியாக இருக்கும். இவர் எழுதும் எந்த ஒரு பதிவும் நகைச்சுவையும் ரசனையும் கலந்ததாக இருக்கும்.
டியர் எம்.டி.எஸ்
13. தளிர்
தளிர் நடையிடும் இவருடைய எண்ணங்கள் எழுத்தோவியங்கள் ஆகும் என்ற எழுத்துகள் நிறைந்த வலைக்கு சொந்தக்காரர்.
சிகரெட்டுக்கு தடையும் முதல் எச்சரிக்கையும்
14. ரூபனின் எழுத்துப்படைப்புகள்
இவரின் எழுத்துகள் கவிதைகள் சங்கமமாக, மிகப்பெரிய கவிதைப்போட்டி ஒன்றை நடத்தி அதை வெற்றிகரமாக முடித்தார். இவருடைய எழுத்துகள் சங்கமத்திலிருந்து ஒரு துளி பார்ப்போம்.
நேரில் பேசும் தெய்வங்கள்
15. இளையநிலா
தமிழ் மீது தீராப்பற்று கொண்ட எழுத்தர். சமீபத்தில் நடந்த ஒரு கவிதைப்போட்டியில் முதல் பரிசுப்பெற்ற கவிஞர்.
பூக்கூடை உள்ளே
16. சிவகுமாரன் கவிதைகள்
வெண்பாவும் எழுதுவார். தெம்மாங்கு தெள்ளுத்தமிழிலும் எழுதுவார். சமீபத்தில் நடந்த கவிதைப்போட்டியில் கலந்துக்கொண்டு பரிசும் பெற்றார்.
பூத்துக்குலுங்குதய்யா
17. கவிஞர் கி.பாரதிதாசன் கவிதைகள்
கவிதைகள் கடல் போல் பிரவாகமாய் இருக்கும் இவர் வலைதளத்தில். தமிழ்ப்பற்று மிக்கவர். இலக்கணமும் இலக்கியமும் இவர் எழுத்தின் வசீகரம்.
ஓங்கி அளந்த உத்தமன் பேர் பாடி
18. இதயம் பேசுகிறது
இவரின் எழுத்துகள் மிக ஆழ்ந்தவை. அழுத்தமானவை.. உருக்கமானவை. நகைச்சுவை மிக்கது.. கோபத்தில் கூட இவர் எழுத்துகள் பேசும்.
மஞ்சப்பை
19. eraeravi
இந்த எழுத்தரை அறியாதவர் இருந்திருக்கமுடியாது. தேன் மதுர தமிழ் கிரேஸ் எழுதிய துளிர் விடும் விதைகள் கதைக்கு இவர் எழுதிய விமர்சனம் மிக அருமை.
துளிர் விடும் விதைகள் விமர்சனம்
20. வரலாற்று சுவடுகள்
அழுத்தமான சுவடுகளை பதிக்கும் பல பதிவுகள் இவர் வலைதளத்தில் நான் வாசித்திருக்கிறேன்.
சுற்றுப்புற சூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்
ரோட்டில் நடந்து செல்லும்போது எதிர்ப்படுவோரைப்பார்த்து சின்ன புன்னகைத்தீற்றல் நம் முகத்தில் மலர்ந்தால் எதிர் வருவோர் ஒரு நொடி குழப்பமாகி பின்னர் தயக்கத்துடன் அவர் முகத்திலும் நம் புன்னகைத்தீற்றல் தொற்றிக்கொள்ளும். தெரிந்தவரை கண்டால் மட்டும் தான் நம் முகத்தில் புன்னகை மலருமா என்ன? அறியாதவர் என்றாலும் பஸ்ஸில் நம் அடுத்து உட்காருவோர், ட்ரெயினில் நம் அடுத்து உட்காருவோர், பஸ் ஸ்டாண்டில் நம் அடுத்து நிற்போர், இப்படி பலபேரை நாம் பார்க்கும் சந்தர்ப்பத்தில், ஒரு சின்ன புன்னகை நம் நாளை மட்டுமா? எதிர் வருவோர் நாளையும் அழகாய் மலரவைக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? இறைவன் நமக்கே நமக்கென்று கொடுத்த இந்த அழகான புன்னகையை தயக்கமின்றி பகிரலாமே.. சௌந்தர்யமாக விடியட்டும் இன்றைய நாள் எல்லோருக்கும்...
நாளை மீண்டும் மனம் கவர் பதிவர்களோடு சந்திக்கிறேன் நண்பர்களே.
அன்பு நன்றிகள் வணக்கம் !!!

|
|
வாழ்த்துக்கள் ...
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை...
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மது :)
Deleteத ம ஒன்று
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :)
Deleteஆலோசனைகள் சிறப்பு...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபாலன் சார் :)
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்னுடைய வலைப்பூவை அறிமும் செய்தமைக்கு நன்றிகள் பல...
எனது பக்கம்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பக...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரூபன் :)
Deleteவணக்கம் அக்கா !
ReplyDeleteமிகச் சிறப்பாகத் தங்கள் பணியை நடத்தி வருவது ஒவ்வொரு பகிர்விலும்
துல்லியமாக விளங்குகின்றது !வாழ்த்துக்கள் தங்கள் பணி மென்மேலும்
சிறக்கட்டும் .அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அம்பாளடியாள் :)
Deleteஅக்கா
ReplyDeleteஅட்டகாசமாக தொடங்கி இருகிறீர்கள்!! இப்படி சொல்லிக்கொண்டே இருந்தால் தான் நம் முன்னோரின் வாழ்கைமுறை நம் அடுத்த சந்ததிக்கு தெரியவாவது செய்யும்:(( இன்ற அறிமுகங்களில் என் சகோக்களுக்கும், தோழிகளுக்கும் பஞ்சமே இல்லை!!!!:) அவர்கள் சார்பாக என் நன்றிகள்:)
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மைதிலி :)
Deleteவழக்கம் போல நல்ல தளங்களின் சிறப்பான தொகுப்பு.. அருமை..
ReplyDelete//சௌந்தர்யமாக விடியட்டும் இன்றைய நாள் எல்லோருக்கும்!..//
நல்ல மனம் வாழ்க!...
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் துரை செல்வராஜூ :)
Deleteஅன்புச் சகோதரிக்கு வணக்கம். இன்றைய வலைச்சர அறிமுக வலைப்பக்கங்கள் தங்களின் பன்முக ரசனையின் ஆழத்தைக் காட்டுவதாக இருந்தன. அதில் என்னையும் சேர்த்திருப்பதற்கு என் இதய நன்றி முன்னொரு முறையும் நீங்கள் செய்த அறிமுகத்தின் பின் நிறையப் பார்வையாளர்கள் என் தளத்தைப் பார்வையிடடதை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். தங்களின் பணி தொடர வாழ்த்துகள் சகோதரி. தங்கள் வலைச்சரதத்தில் வந்த சக பதிவர்களுக்கும் வலைச்சர நிர்வாகிகளுக்கும் என் வாழ்த்துகளும் வணக்கங்களும். நன்றிம்மா.
ReplyDeleteதிண்ணை வைத்த வீடுகள் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு நினைவாக மட்டுமே ஆகிவிட்டது. என்னத்தச் சொல்ல...? வருங்கால தலைமுறையை உரமாக வளர்ப்பதே நமது பணி என்கிற மன்ச்சூவின் அறிவுரைக்கு யாரும் சலித்துக் கொள்ள மாட்டாங்க... நிறைவான அறிமுகங்கள்... அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteயாரும் சலிச்சுக்கமாட்டாங்கன்னு நீங்க சொன்னதால கொஞ்சம் பயமில்லாம இருக்கேன். நானே யோசிச்சேன். என்னடா இது.. நாம பாட்டுக்கு இப்படி எழுதறோமே.. என்ன நினைப்பார்களோன்னு பயம் இருந்தது. நாளை முதல் சுருக்க எழுதி அதிகமா பதிவர்களை அறிமுகப்படுத்திடலாம்னு யோசிச்சிருக்கேன் கணேஷா.. திண்ணை வீடுன்னு தான் எங்கள் வீட்டை முன்பு சொல்வாங்க. நான் திருச்சில காலேஜ்ல சேர்ந்து லீவ்ல வீட்டுக்கு வந்தால் வீட்டு முகப்பே மாறிவிட்டது.. திண்ணை காணோம். எவ்ளோ பெரிய தோட்டம்.. தண்ணீர் அடிக்கும் குழாய் அருகே பவளமல்லி கொட்டிக்கிடக்குமே எல்லாம் சட்டுனு 5 போர்ஷன் வீடு கட்டி இருக்கிறார் அப்பா :( மனசு வெறுமையாயிருச்சு.. மரம் செடி திண்ணை பூ என்று இருந்த எனக்கு இந்த வீடுகள் நிறைந்த நகரம் பிடிக்கல..
Deleteஹூக்கும்... இறைவன் எனக்கே எனக்கென்று தந்த அழகான புன்னகையை அனைவருக்கும் அள்ளி வழங்கிட்டுத்தான் இருக்கேன். ஆனா அதனாலயே என்னை ‘புன்னகை மன்னன்’னு பட்டம் சூட்டி பூவையும் அல்வாவையும் தந்துட்டு ஏமாளியாக்கிடறாங்க சிலர். அட்வைஸப் பாரேன்..... புன்னகையை நம்ம மனசுக்கு இதமானவங்களுக்கு மட்டும்னு இப்ப பிரிச்சு வெச்சுட்டனாக்கும்...
ReplyDeleteபுன்னகையை நான் ரிஷபன் சார் கிட்ட இருந்து தான் சுட்டேன் கணேஷா :)
Deleteஅப்டி எல்லாம் பிரிக்கலாமா? தப்பில்லையா?
மிகச் சிறப்பான கருத்துடன். அறிமுகப்பதிவர்களையும் வெகு சிறப்பாக தொகுத்திருக்கிங்க அக்கா. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் சசி. :)
Deleteதரமான பதிவர்களின் அழகான அறிமுகங்களுக்கு முன் உங்கள் உரையாடல் வாசிக்கும் போது நேரில் பேசிய உணர்வு..
ReplyDeleteநல்லவை எல்லாமே புன்னகை உள்பட உங்கக்கிட்ட இருந்து பெற்றது தான்பா ரிஷபா... நீங்க புன்னகைத் தொற்றல் என்ற ஒரு குறுங்கவிதை எழுதி இருந்தீர்கள் முன்பு. அதை தான் எடுத்து நான் எழுதினேன்பா.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரிஷபா...
Deleteதிண்ணை வைத்த வீடுகள் வரப்பிரசாதம்! இன்று அதை இழந்துவிட்டோம்! புன்னகை நட்பின் முகவரி! புன்னகைக்கலாமே! இன்றைய அறிமுகத்தில் என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் சுரேஷ்...
Deleteவணக்கம் இன்றைய அறிமுக அனைத்து எனது நண்பர்களுக்கும் எமது வாழ்த்துகள், எம்மையும் மதித்து எனது பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள் கோடி (எனது பதிவுகளுக்கு வராமலேயே நான் வித்தியாசமான எழுத்துக்காரன் என முத்திரை குத்தியது கண்டு எமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது அதற்காகவும் எமது நன்றிகள்)
ReplyDeleteதமிழ் மணம் - 5
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
வந்தேன் ஜீ :) உங்க எழுத்தை வாசித்தேன்.. :) வாசித்தப்பின் தான் உங்களை என் நட்பு பட்டியலில் இணைத்தேன். அதன் பின் வலைச்சரத்தில் உங்கள் தளத்தின் முகவரி தந்தேன் :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜீ...
Deleteநன்றி இனி வலைத்தொடர்பில் இருப்போம்.
Deleteமாலை வணக்கம் மஞ்சு. உங்கள்அனைவரும் எழுத்திற்கு முன்னால் நான் சாதா. வலைசரத்தில் நானும் இடம் பெற்றது மகிழ்ச்சியே.அனைவருக்கும் எனது வாழ்த்துகள்
ReplyDeleteசாதா எல்லாம் இல்லை மஹா.. உங்க எழுத்துகள் நச் நு இருக்கும்.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மஹா..
Deleteஅப்ப நானும் நன்றி சொல்லிக்கிறேன் மஞ்சு :)
DeleteElloorukkum vaalththuikal
ReplyDeleteVetha.Langathilakam.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வேதாம்மா.. :)
Delete//இவரின் எழுத்துகள் எப்போதுமே ரசிக்கும்படியாக இருக்கும். இவர் எழுதும் எந்த ஒரு பதிவும் நகைச்சுவையும் ரசனையும் கலந்ததாக இருக்கும்.//
ReplyDeleteஎன்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அக்கா.... நகைச்சுவையாக எழுதுவது மிகவும் குறைவுதான் என்றே நினைக்கிறேன்....
நான் வாசித்த பகிர்வில் நகைச்சுவை ரசித்தேன் சரவணா... அதான் எழுதினேன்... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.. :)
Deleteநல்ல ஆராய்ச்சி தெரிகிறது மஞ்சு உங்கள் எழுத்துகளில். இந்த உழைப்புக்கும் மேல் ஒன்றும் கிடையாது.இங்கு அறிமுகமாகியிருக்கும் அநேக பதிவுகள் ஓரிருதான் போய்ப் படித்திருப்பேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் எல்லோரின் ஆசிர்வாதம் தான் அம்மா.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வல்லிம்மா..
Deletearimukangkal arumai
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் நண்பரே... :)
Deleteபிரச்சனைகளை கண்டு மிரண்டு பின் வாங்காமல் அதை சரி செய்யும் முயற்சியில் நம்பிக்கையுடன் முனையச்சொல்வோம்.. //
ReplyDeleteமிகவும் அவசியமான செய்தி குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கும் தான்.
நான்காம் நாள் இடம்பெற்ற பதிவர்கள் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் எல்லோரும் தெரிந்தவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் பணி மிகவும் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் மஞ்சு.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.. :)
Delete
ReplyDelete//உள்ளத்து உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும் என்ற எழுத்துகளுக்கு சொந்தக்காரர்...... gmb writes//
தப்பு மஞ்சு தப்பு.
இந்த ஜொலிக்கும் எழுத்துகளுக்கு உண்மையில் சொந்தக்காரர் 'பூ வனம்' வலைத்தளப்பதிவர் திரு. ஜீவி அவர்கள் தானாம்.
அவரின் இந்த எழுத்துக்களை அப்படியே எடுத்து இவர் தன் வலைத்தள தலைக்குக் கிரீடமாக வைத்துக்கொண்டு மகிழ்ந்துள்ளார் என்பதே உண்மையாம்.
இதற்காக ஜீவி + ஜி.எம்.பி. இருவரும் நடத்தியுள்ள சர்ச்சைககள் இதோ இந்த என் பதிவின் பின்னூட்டப்பெட்டிகளில் ஆங்காங்கே கொஞ்சமாக ஆரம்பித்து உள்ளன.
http://gopu1949.blogspot.in/2014/10/blog-post_2.html
இன்றைய வலைச்சர செய்திகள் நாளைய வரலாறு ஆகலாம். அதுபோன்ற நாளைய வரலாறுகளில் தவறேதும் நடந்துவிடக்கூடாது என்பதால் மட்டுமே எனக்குத் தெரிந்துள்ள இந்த இரகசியத்தை இங்கு நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
அன்புடன் கோபு அண்ணா
நல்லது அண்ணா.... அந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது... அதனால் தான் அண்ணா எடுத்து பகிர்ந்தேன். தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் அண்ணா.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.. :)
Deleteஅறிமுகமான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் குமார்... :)
Deleteவாடாமலர்களால் ஆன இந்த நேற்றைய நான்காம் நாள் வலைச் சரத்தை இன்றுதான் பார்க்க முடிந்தது. ஒருசிலரைத் தவிர மற்ற பதிவர்கள் ஆக்கங்களைப் பார்த்துன் இருக்கிறேன்.
ReplyDeleteத.ம.6
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார்... :)
Deleteஎன்னை வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. அறிமுகப் படுத்திய பதிவினை இன்னும் நிறைய வாசகர்கள் படிக்கும் வாய்ப்பும் கூடுகிறது. நன்றி.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார்... :)
Delete